Monday, 11 August 2014

Tagged Under: ,

சிவகார்த்தி பற்றி நான் சொன்னதை போடாதீங்க ! -பின்னாலேயே போன் செய்த தனுஷ்

By: ram On: 23:21
  • Share The Gag

  • ‘பற்றியெறியுது ஊரு, பச்சத் தண்ணி இருக்குதா பாரு… ’ என்று பற்றி எரிகிற தீயை அணைக்கிற வேலைகளில் இறங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஒவ்வொரு முறையும் இவருக்கும் தனுஷுக்கும் பிரச்சனை என்று என்று செய்திகள் வரும்போதெல்லாம், அப்படியெல்லாம் எதுவும் இல்ல. எப்பவும் அவர் எனக்கு மரியாதைக்குரியவர்தான் என்று சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார். சில நேரங்களில் ட்விட்டரில் வந்து கூட பதில் சொல்கிறார். அப்படியிருந்தும், ரெண்டு பேருக்கும் நடுவில் டயரை கொளுத்திப் போட்டு பந்த் எபெஃக்ட் காட்டாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது.

    சிவாவை பார்த்தாலும் அதே கேள்விதான். தனுஷை பார்த்தாலும் அதே கேள்விதான். நீங்க ரெண்டு பேரும் முன்ன மாதிரி நெருக்கமா இருக்கறதில்லையாமே? இந்த கேள்விக்கு கேஷுவலாக பதிலளித்தாலும், ஏதும் வில்லங்கம் வந்துடக் கூடாதே என்று அடி மனசு படபடப்போடுதான் பேசவே ஆரம்பிக்கிறார்கள் இருவரும். இதற்கிடையில்தான் அந்த முக்கியமான சம்பவம் நடந்தேறியிருக்கிறது.

    கடந்த வாரம் தனுஷை பேட்டியெடுத்தார் ஒரு நிருபர். வழக்கம் போல இந்த கேள்வியும் ஒட்டிக் கொண்டது. ‘உங்களுக்கும் சிவ கார்த்திகேயனுக்கும்…?’ என்று கேள்வியை ஆரம்பிக்கும் போதே, ‘அதானே கேட்க வர்றீங்க. தெளிவாவே சொல்லிடுறேன்’ என்று ஒரு சில கருத்துக்களை கூறினாராம். நிருபர் பேட்டியை முடித்துவிட்டு ஆபிஸ் வருவதற்குள் தனுஷிடமிருந்து போன். ‘சார்… நான் சிவா பற்றி சொன்னேன்ல? அந்த பதிலை போட வேண்டாம். பேசாமல் அந்த கேள்வியையும் தவிர்த்துருங்களேன்’ என்று கேட்டுக் கொள்ள, நிருபர் தரப்பு ‘யெஸ்…’.

    ஆமாம்… என்னதான் நடக்குது நட்புக்குள்ளே?

    0 comments:

    Post a Comment