Wednesday, 1 October 2014

கொழுப்புக்கு குட்பை.... உடல் கொழுப்பு அதிகமானால் ??

By: ram On: 22:33
  • Share The Gag
  • நாம் உண்ணும் உணவில் தினமும் கிடைக்கக்கூடிய கலோரியில் ஏழு சதவிகிதத்திற்கும் அதிக அளவில் கொழுப்பு இருக்கக்கூடாது.

    வாய்க்கொழுப்பு அதிகமானால் செல்போனில் நாள் முழுவதும் அரட்டை கச்சேரி செய்யத் தோன்றும். உடல் கொழுப்பு அதிகமானால் யாரையாவது அடிக்கத் தோன்றும்.

    ஆனால் இரத்தத்தில் கொழுப்பு அதிகமாகிவிட்டால் இதயநோய்கள் தாக்க ஆரம்பித்துவிடும். எனவே நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு நாளைக்கு நமக்கு 1200 கலோரி உணவு போதும். இந்த அளவுடைய உணவை தினமும் உண்டால் நம இரத்தத்தில் கொழுப்பு சேராது.

    காலையில் காபியோ அல்லது தேனீரோ அருந்தலாம். ஆனால் அதில் ஆடை நீக்கிய பாலும், சர்க்கரையும் குறைவாக இருக்கவேண்டும்.

    நினத்தபோதெல்லாம் காபி அல்ல தேநீரை அருந்துவது, நண்பர்களுக்கு கம்பெனி தருவதாக நொண்டிச்சாக்குச் சொல்லிச் சொல்லி அடிக்கடி தேநீர் குடிப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

    ‘வேறு வழியில்லாமல் குடித்து விட்டேன் இப்போ நெஞ்செரிச்சல் ஆரம்பித்து விட்டது’ என்று சிலர் சொல்வதைக் கேட்கலாம். கொழுப்பக் குறைப்பது என்பது மற்றவர்களின் ஆரோக்கியத்திற்காக அல்ல என்பதை மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் உங்கள் குடும்ப நன்மைக்காகவும்தான்.

    சாப்பிடத்தெரிந்து கொள்ளுங்கள்

    என்னங்க இது கூடவா தெரியாது? ரொம்பத்தான் ... என்று சிலர் முணுமுணுப்பது காதில் கேட்கிறது. காலை டிபனுக்கு எல்லாவற்றயும் வளைத்துக்கட்ட வேண்டாம். மூன்று இட்லி அல்லது இரண்டு தோசை போதும். போதுமா என்கிறீர்களா? போதும்தான். உழைப்புக்கு ஏற்ற ஊதியம்தான் கிடக்கும் என்பதைப்போல உழைப்பிற்கு ஏற்ற உணவுதான் உண்ணவேண்டும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

    தோசைக்கு எண்ணெய் விடாமல் இருப்பது நல்லது. சட்னிக்கு தேங்காய் வேண்டாம். காரம், புளி, உப்பு இவை குறைவாக வைத்துச் செய்த ஏதாவது ஒரு சட்னியைத் தொட்டுக் கொள்ளுங்கள். தோசைக்கு சொத சொதவென்று எண்ணெய் விட்டுக் கொண்டும் மிளகாய்ப்பொடியை ஏராளமாக எண்ணெய் விட்டு குழைத்துக் கொண்டும் இதுவரையில் சாப்பிட்டவர்களுக்கு நான் மேலே குறிப்பிட்டபடி சாப்பிடப் பிடிக்காது.

    உண்மைதான் ஆனாலும் என்ன செய்வது? நீங்கள் இதுவரையில் உங்கள் விருப்பப்படி சாப்பிட்டுவிட்டீர்கள். அது போதும். இனிமேல் உங்கள் ஆரோக்கியத்திற்காக நாக்கை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். காலை டிபனோடு ஒரு டம்பளர் தண்ணீரில் பாதி மூடி எலுமிச்சை பழத்தைப் பிழிந்து, சிறிது உப்பு சேர்த்து ஜூஸாக குடியுங்கள்.

    எனக்கு டிபன் சாப்பிட்டால் சூடாக ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் திருப்தி என்ற கதையெல்லாம் வேண்டாம். காலை ஒன்பது மணிக்குள் டிபனை முடித்துக் கொண்டு சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபடுங்கள்.

    பகல் உணவை வெந்த காய்கறிகள், கீரை, ஒரு சப்பாத்தி, இவற்றோடு குறைவான அளவு சாதத்துடன் முடித்துக் கொள்ளுங்கள். ஒரு கப் சாம்பார், ஒரு கப் ரசம், இரண்டு கப் காய்கறிகள், ஒரு கப் மோர் இவற்றோடு ஒரு கப் சாதம் என்று சாப்பிடுவ மிகவும் நல்லது.

    இவ்வாறு சாப்பிட்டால் எளிதாக செரிமானம் ஆகும். மூன்று மணிநேரத்திற்கு பசி இல்லாமலும் இருக்கும். நன்றாகக் கடைந்த மோர் ஒரு தம்ளர் குடியுங்கள். இதற்குப் பிறகு எதுவும் வேண்டாம். மாலை டிபன் வேண்டும் என்றால் காய்கறிகள பச்சையாக நறுக்கி அவற்றுடன் ஒன்று அல்லது இரண்டு பிரட் துண்டுகளச் சாப்பிடுங்கள். அவசியமானால் பால் குறைவான தேநீர் அல்ல காபி அருந்தலாம். சர்க்கரையை குறைவாக உபயோகிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டும் அல்ல எல்லோருக்குமே அவசியம்தான்.

    இரவு நேரத்தில் நெய் விடாத சப்பாத்தி, முளைகட்டிய கடலையில் மிளகும் உப்பும் தூவி செய்த டிஷ் செய் சாப்பிடுங்கள். இது வேண்டாம் என்றால் கோதுமை ரவையுடன் பாசிப்பயறு கலந்து மிளகுத்தூள் சேர்த்து பொங்கலாக்கிச் சாப்பிடுங்கள். இது என்ன ஏக கெடுபிடியாக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம். இவ்வாறு திட்டமிட்டுச் சாப்பிட்டால் உடம்பில் அதிக எடை சேராது. கொழுப்பும் ஏறாது. இதயநோய்களுக்கு டாடா சொல்லிவிட்டு ஆனந்தமாக வாழலாம்.

    கொழுப்பு என்ன செய்யும்?

    இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாகிவிட்டால் இரத்தக்குழாய்களின் உட்புறச் சுவர்களில் கொழுப்பு படிந்து, இரத்த ஓட்டத்தைத் தடைசெய்கிறது. எனவே இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதயத்தசைகள் ஓவர்டைம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் இதயம் பலம் குறைந்து நோய்களுக்கு ஆளாகிறது.

    இரத்தத்தில் கலந்த கொழுப்பு இரத்தக்குழாய்களில் அங்கங்கே சிறுசிறு கட்டிகளாகத் தேங்கிவிடும். இதனால் இதயம் மற்றும் மூளக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து விடும் அல்லது முழுவமாக தடைபட்டுவிடும். அதுபோன்ற நேரங்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படுகின்றன. இந்த அடைப்புகள் பெரிய அளவில் இருக்கும்போது திடீர் இறப்பும் நேரிடுவதுண்டு.

    கொலஸ்டிரால் மற்றும் உடல் எடையக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலமாக இதன் நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். புகை பிடிப்பவராக இருந்தால் அந்தப் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுங்கள். இப்போது எல்லாவற்றையும் ஒருகை பார்ப்பது என்று இறங்கி கண்டபடி சாப்பிட்டு விட்டால் இதய நோய்களுக்கு ஆளாகிவிடுவது உறுதி.

    இதய அறுவ சிகிச்சை என்று போய்விட்டால் வலியும், வேதனையும், பணச்செலவும், உயிர்ப்பயமும் ஒருபக்கம் இருக்க, உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் வேளைக்கு வேளை வாய்க்கு பூட்டு போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படும். வாழ்க்கையே வெறுதுத்ப்போய்விடும். இவைகளை மனதில் கொண்டு ருசிக்கு மட்டுமே சாப்பிடாமல் பசிக்கு சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்.

    இளசுகளுக்கான எச்சரிக்கை

    நம நாட்டில் நாகரிக மோகத்தின் தாக்கத்தினால் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவது இளம் வயதினரிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அதிக எடை கூடுவதோடு, இரத்தத்தில் கொழுப்பின் அளவும் அதிகரிக்கும் அபாயம் உண்டு. மேலும் தற்போது கணிப்பொறியின் சந்நிதியிலேயே காலத்தக் கழிப்பதை ஆண்களும் பெண்களும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

    உடல் உழைப்பே இல்லாத நிலையில் இந்த உணவு வகைகள் உடல் எடையக் கூட்டுவதற்கும், ஊளைச்சதை போடுவதற்கும் அடிப்படையாக அமைகின்றன. இது மட்டும் அல்லாமல் இந்த உணவு வகைகள் இவர்கள கொலஸ்டிராலின் அளவை கணிசமான அளவிற்கு உயர்த்தி இதயநோய் தாக்கும் அபாயத்தை உண்டாக்குகின்றன.

    எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவை இன்றைய இளசுகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். கணிப்பொறி வேலையப் பற்றியும், கைநிறையப் பெறும் வருமானத்தைப் பற்றியுமே கவலைப்படும் இவர்கள், தங்கள் ஆரோக்கியத்தை கவனிக்கத் தவறிவிடுகின்றனர். மிதமிஞ்சிய இத்தனை உணவினால் எதிர்காலம் இவர்களுக்கு இருண்டுவிடும் அபாயம் இருக்கிறது. எனவே ஃபேஷனுக்கு அடிமையாகி மோசம் போகாமல் இளைய தலைமுறயினர் தவறான உணவு முறையைத் தவிர்ப்பது நல்லது.

    ஃபாஸ்ட் ஃபுட்டுக்குப் பதிலாக இவர்கள் பழங்களைச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். தினமும் திராட்சைச் சாறு குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இது பல் சொத்தயைத் தடுக்கிறது. மேலும் இது நன்மை செய்யும் கொழுப்பான எச்.டி. எல்லின் அளவை ஏழு சதவீதம் வரையில் உயர்த்துகிறது. ஆகவே தினமும் திராட்சையை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.

    மேலும் இரத்த சோகைஉள்ள பெண்கள் தினமும் 500 கிராம் அளவிற்கு திராட்சப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் இரண்டு வாரங்களில் அவர்களின் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும். எனவே ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்திற்கு விடைகொடுத்து பழங்களை உண்ணும் பழைய வழக்கத்திற்குத் திரும்புவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

    மூக்கு விஷயத்துக்காக மூக்குக்கு மேல் கோபப்பட்ட சமந்தா

    By: ram On: 21:34
  • Share The Gag
  • சமந்தா சருமம் மீது பல பேருக்கு கண் உண்டு ,அவர் என்ன ஷினிங்க் மெட்டிரியல் போல் பல பல வென்று மின்னுகிறார் என்று கோடம்பாக்கமே வியத்தது . ஆனால் யார் கண் பட்டதோ என்று தெரியவில்லை அவர் சருமம் நாலே பல பிரச்சனைகளை சந்தித்து மீண்டு வந்தார் .தற்போது அவரை கோபபடுத்தும் விதத்தில் ஒரு செய்தி.

    என் மூக்குக்கு என்ன குறைச்சல்? ஆபரேஷன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றார் சமந்தா.‘தற்போது மூக்கு ஆபரேஷன் செய்வதற்காக லண்டன் செல்லஇருக்கிறார் என தகவல் பரவ உடனே இதை பற்றி பதில் அளித்துள்ளார் சமந்தா.

    மூக்கு ஆபரேஷன் என்ற கிசுகிசு வெளியானதும் அவருக்கு மூக்கிற்கு மேல் கோபம் வந்தது. இதற்கு கோபமா அவர் பதில் அளித்துள்ளார். இதுபற்றி சமந்தா கூறும்போது, ‘அழகான மூக்கு அமையாதவர்களுக்குத்தான் ஆபரேஷன் தேவைப்படும். என் மூக்கு மிகவும் அழகாக இருக்கிறது.

    அதை சீர்செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. என்னுடைய கணிப்புப்படி எனக்கு கச்சிதமான மூக்கு அமைந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது நான் ஏன் ஆபரேஷன் செய்ய வேண்டும். என்னைப்பற்றி வரும் பலவதந்திகளில் இதையும் ஒன்றாகவே நான் ஏத்து கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

    பதக்கத்தை அணிய மறுத்து கண்ணீர் விட்டு கதறிய இந்திய வீராங்கனை

    By: ram On: 21:16
  • Share The Gag
  • தென்கொரிய ஆசிய விளையாட்டுப் போட்டி குத்துச் சண்டையில், இந்திய வீராங்கனை சரிதா தேவிக்கு வெண்கல பதக்கம் அறிவிக்கப்பட்டது

    அவர் சிறப்பாக விளையாடியும், நடுவர்களின் தீர்ப்பினால் தோல்வி அடைந்ததாக சர்ச்சை வெடித்தது.  இதுபற்றி  இந்திய குழுவினர் மேல்முறையீடு செய்தும், நிராகரிக்கப்பட்டது.

    இதனால், பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கம் மாட்டப்பட்டபோது  கழுத்தில் அணிந்து கொள்ள சரிதா தேவி மறுத்துவிட்டு  கதறி அழுதார். பிறகு பதக்கத்தை அவர் கண்ணீர் மல்க கைகளில் வாங்கிக்கொண்டார்

    மருக்களை மறைய செய்யும் கை வைத்தியங்கள்...Warts to disappear

    By: ram On: 20:55
  • Share The Gag
  • * ஆளி விதையை அரைத்து, அதனுடன் ஆளி விதை எண்ணெய் மற்றும் சுத்தமான தேன் சிறிதளவு சேர்த்து கலக்கவும். இந்த பத்தை மருவின் மீது தடவி, அதன் மேல் பான்டேஜ் ஒட்டவும். இந்த பத்தை தினமும் புதிதாக தயாரித்து உபயோகிப்பது நல்லது. இதை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

    பூண்டு பல் ஒன்றை நசுக்கி, பாதிக்கப்பட்ட பாகத்தின் மேல் தடவுவது மற்றுமொரு மிகச்சிறந்த வைத்தியமாகும். அவ்வாறு தடவி, அதன் மேல் பான்டேஜ் ஒன்றை ஒட்டி விடுங்கள்.

    * அன்னாசிப்பழத்தை அவ்வப்போது வெட்டி, பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவி வருவது மருக்களை குணமாக்குவதற்கான சக்தி வாய்ந்த மருத்துவ முறையாகும்.

    * அத்திப்பழத் தண்டுகளில் இருந்து சாறு எடுத்து, அதனை ஒரு நாளில் பலமுறை, பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவி வருவது மருக்களைப் போக்குவதற்கான சிறந்த மருத்துவ முறைகளுள் ஒன்றாகும்.

    * கற்பூர எண்ணெய், மருக்களை போக்குவதில் தன் ஆற்றலை பலமுறை நிரூபித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதியின் மீது கற்பூர எண்ணெயை ஒரு நாளில் பலமுறை தடவி வர வேண்டும்.

    ஹிரித்திக் ரோஷன் விட்ட சர்ச்சையான சவாலை முறியடித்தார் அமீர் கான்!

    By: ram On: 19:50
  • Share The Gag
  • பாலிவுட் திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் கிங்ஸ் என்றால் ஹிரித்திக் ரோஷன் மற்றும் அமீர் கான். சமீபத்தில் ஹிரித்திக் தன் டுவிட்டர் பக்கத்தில், அமீர் கானிடம் ‘ நீங்கள் பி.கே படத்தில் வைத்திருக்கும் ட்ரான்ஸ்சிஸ்ட்ரை கீழே வைப்பீர்களா? என்று கேட்டுள்ளார்.

    அதற்கு அவரும் 'ஏன் முடியாது இதோ செய்கிறேன்' என்று செய்து முடித்து விட்டார். யாரும் பயப்பட வேண்டாம். இந்த முறை ஆடைகள் அணிந்திருந்தார் அமீர் கான்.

    இந்த ஜாலி வீடியோ பேஸ்புக், டுவிட்டர், யு-டியுப் என வைரலாக பரவி வருகிறது.

    தர்ப்பைப் புல்லும் சர்க்கரை நோயும்!

    By: ram On: 19:24
  • Share The Gag
  • தர்ப்பைப்புல் சுவையில் இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடையது. குளிர்ச்சியான வீரியமுடையது. சீரணத்தின் இறுதியில் இனிப்புச் சுவையாக நிற்கக் கூடியது. மூவகை தோஷங்களாகிய வாத பித்த கபங்களை அவற்றின் சீற்றத்திலிருந்து கீழிறக்கி சமநிலைப் படுத்துவதனால் தர்ப்பையை ஓர் அருமருந்தாக நாம் குறிப்பிடலாம்.

    சில சர்க்கரை உபாதை நோயாளிகளுக்கு உடலில் எரிச்சலுடன் மஞ்சள் நிறம் கலந்த சிறுநீர் காணப்படும். இதற்கு ஹாரித்ரமேஹம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் சிலருக்கு துர்நாற்றமுள்ளதாகவும், மஞ்சிட்டை (மஞ்சள்நிறம்) கலக்கிய நீர் போன்றதுமாக சிறுநீர் வெளியேறும் நிலையில் அதற்கு மாஞ்சிஷ்டமேஹம் என்றும் துர்நாற்றம், சூடு, இரத்தம் போன்றும் சிறுநீர் வெளியேறுவதும் இரக்தமேஹமென்றும் கூறப்படுகிறது. இந்த மூன்று வகையான சிறுநீர் உபாதைகள் அனைத்தும் பித்ததோஷத்தினுடைய சீற்றத்தின் விளைவாக ஏற்படுவதால் அதுபோன்ற நிலைகளில் தர்ப்பைக் குடிநீர் அருந்துவது பித்தத்தினால் ஏற்படக் கூடிய சர்க்கரை உபாதையைக் குறைப்பதுடன் சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று உபாதைகளையும் குணப்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு குடிநீர் ஆகும்.

    சுமார் 15 கிராம் தர்ப்பைப் புல்லை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை லிட்டர் ஆகும்வரை சுண்டக் காய்ச்சி குளிர்ந்த பிறகு வடிகட்டி அந்தத் தண்ணீரை ஒரு நாளில் பலதடவை சிறிது சிறிதாகப் பருகி வர மேற்குறிப்பிட்ட உபாதைகள் நீங்கிவிடும். சிலருக்கு தர்ப்பை நீரைக் காய்ச்சுவதற்கான நேரம் இல்லாமல் இருப்பதால் தர்ப்பைப் புல்லை நன்றாக இடித்து இரவு முழுவதும் பானைத் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அதைப் பருகுவதன் மூலம் அந்த நீருக்கான மருத்துவகுணங்களை நம்மால் பெற இயலும். இதற்கு ஹிமகஷாயம் என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. சர்க்கரை உபாதையின் தாக்கத்தையும் நாம் குறைத்துக்கொள்ள முடியும். தர்ப்பைப் புல்லுக்கு மேலும் சில நல்ல மருத்துவகுணங்கள் இருக்கின்றன.

    தர்ப்பைப் புல் உடலுக்குக் குளுமையை ஏற்படுத்துவதால் தர்ப்பைப் புல் குடிநீர் வெயில் காலத்தில் அருந்தவேண்டிய ஓர் அற்புதமான பானமாகும்.

    தர்ப்பையிலுள்ள நெய்ப்பு, இனிப்பு மற்றும் குளிர்ச்சியின் காரணமாக தாய்ப்பாலையும், சிறுநீரையும் அதிக அளவில் சுரக்கச் செய்கிறது.

    சிறுநீரகத்தில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை சீராக்கக் கூடிய தர்ப்பைக் குடிநீரின் உபயோகத்தின் மூலம் இரத்தத்தில் தேங்கும் யூரியா, க்ரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றுகிறது.

    சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மை தர்ப்பைப் புல்லுக்கு இருக்கிறது.

    தண்ணீர் தாகத்தைப் போக்கும். சிறுநீரகப் பையில் ஏற்படும் வலி மற்றும் அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்குள்ள பெண்களுக்கும் தர்ப்பைக் குடிநீர் மிகவும் நல்லது என்று பாவப்ரகாசர் எனும் ஆயுர்வேதமுனிவர் குறிப்பிடுகிறார்.

    மஞ்சள் காமாலை உபாதையில் கல்லீரலில் உள்ள கிருமித்தொற்று மற்றும் அதிகமான பித்த ஊறல் ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது. இரத்தத்தில் ஏற்படும் காந்தல் மற்றும் அதன் மூலமாக ஏற்படும் இரத்த மூலம், இரத்தக் கசிவு, வாய்ப்புண் சிறுநீரக எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும்.

    நாவிற்கு நல்ல ருசியை ஏற்படுத்தித் தரும். ஏங்ழ்ல்ங்ள் க்ஷ்ர்ள்ற்ங்ழ் எனப்படும் நரம்பு தொடர்தோல் எழுச்சிக்கு தர்ப்பைப் புல் தண்ணீரை வெளிப்புறம் மற்றும் உட்புற உபயோகத்தால் அதில் ஏற்படும் எரிச்சல் மற்றும் குத்தல் வலியை நம்மால் போக்கிக் கொள்ள முடியும் என்று நிகண்டுரத்னாகரம் மற்றும் ராஜநிகண்டு எனும் ஆயுர்வேத புத்தகங்களில் குறிப்புகளாகக் காணப்படுகின்றன.

    அஞ்சான் ஒளிபரப்பு தள்ளி வைப்பு! காரணம்?

    By: ram On: 19:07
  • Share The Gag
  • விஜயதசமியை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் புதுபுது படங்கள் ஒளிபரப்புவது சகஜம் தான். ஆனால் படம் வந்து 50 நாள் கூட ஆகாத நிலையில் ஒரு முன்னணி நடிகரின் படத்தை இதுவரை எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது இல்லை.

    தமிழகத்தில் முன்னணி தொலைக்காட்சி ஒன்று சென்ற மாதம் திரைக்கு வந்த அஞ்சான் படத்தை விஜயதசமி அன்று ஒளிபரப்புவதாக அறிவித்திருந்தது. தற்போது திடீரென்று அஞ்சானுக்கு பதிலாக வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்தை ஒளிப்பரப்பயிருப்பதாக விளம்பரங்களில் காட்டப்படுகிறது.

    ஏன் இந்த மாற்றம் என்றால், சூர்யா ரசிகர்கள் பலர் அந்த தொலைக்காட்சிக்கு, படத்தை ஒளிபரப்ப வேண்டாம் என்று கேட்டு கொண்டதுக்கு இனங்க இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    அஞ்சான் திரைப்படம் தற்போது வரை அந்த தொலைக்காட்சிகளிக் நம்பர் 1 இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது

    குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு சில உணவு டிப்ஸ்…

    By: ram On: 18:01
  • Share The Gag

  • ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள்.

    குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்:

    1. தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

    2. உணவுக்குப் பிறகான இடைவேளைகளில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.

    3. கொழுப்பு நீக்கப்படாத பால், எண்ணெய் போன்றவற்றை அதிகம் மையலில் பயன்படுத்துங்கள்.

    4. சாப்பிடுவதற்கு முன்பாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள். அது உங்களை முழு வயிற்றுக்குசாப்பிட விடாமல் செய்து விடும். வயிறு நிரம்பிய உணர்வையும் ஏற்படுத்தி விடும்.

    5. கலோரி குறைவான உணவுகளை உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். எந்தெந்த உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதிக கலோரியுள்ளவற்றை சாப்பிடவும்.

    6. சாப்பிடும் போது கூடவே குளிர்பானங்கள் குடிப்பது, அடிக்கடி டீ, காபி குடிப்பது போன்றவற்றைத் தவிருங்கள்.

    7. நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டால் இரண்டு மணி நேரம் கழித்து சாப்பாடு சாப்பிடுங்கள். அப்போது தான் பசி எடுக்கும். படுக்கச் செல்வதற்கு முன்பாக அவற்றை சாப்பிடுவது கட்டாயம் எடையைக் கூட்டும்.

    8. நீங்கள் குறைவாகவே சாப்பிட்டுப் பழகியவரா? அப்படியானால் சாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி ஆறு முறைகள் என்று பழக்கிக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் முழுச்சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக, அடிக்கடி குறைவாக சாப்பிடலாம்.

    9. உடற்பயிற்சி செய்தால் உள்ள எடையும் போய் விடுமே என்று நினைத்துக் கொண்டு அதைத் தவிர்க்காதீர்கள். உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். உடல் உறுதி பெற இது இன்றியமையாதது.

    10. குண்டானவர்களுக்குத் தான் உடற்பயிற்சி என்றில்லை. ஒல்லியானவர்களும் செய்யலாம். அது அவர்களது உடல் சரியான ஷேப்பில் இருக்க உதவும்.

    11. ஆனால் அளவுக் கதிகமாக, அதாவது உடல்களைப் படைகிற வரை உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வெதுவெதுப்பான பாலில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.

    12. காலையிலும், மாலையிலும் ஐந்தைந்து பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, போரிச்சம் பழம், பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதை வழக்க மாக்கிக் கொள்ளுங்கள். முந்திரி, பாதாம் போன்ற பருப்புகள் சாப்பிட வேண்டும். அதே சமயம் வேண்டாத கொழுப்புகள் உடலில் தங்காமல் இருக்க உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

    13. பத்து மணி நேரம் தூங்கவும். பகலில் நேரம் கிடைக்கிறபோது தூங்குவது இன்னும் நல்லது.

    14. தசைகள் நன்கு வளர்ச்சி அடைந்தால் தான் உறுதியான உடல் கட்டைப் பெற முடியும். இதற்கு காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து ஆகியவை அடங்கிய உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்.

    15. பிட்சா, உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவை உடல் எடையை அதிகரிக்கும். ஆனால் பலத்தைக் கூட்டாது. எனவே அவற்றைச் சாப்பிட வேண்டாம்.
    கார்போஹைடிரேட் மற்றும் புரோட்டீன் அடங்கிய உணவு வகைகள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.

    16. சிறிது சிறிதாகச் சாப்பிட வேண்டும். நிறைய உணவை ஒரே நேரத்தில் சாப்பிடுவதை விட, சிறிது சிறிதாகச் சாப்பிட்டு “ஹெவிநெஸ்’ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்

    17. சிக்கன், மீன், முட்டை, சோயா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    18. பச்சை வாழைப்பழம், வேக வைத்த உருளைக்கிழங்கு, ஓட்ஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    19. இரும்புச் சத்து அதிகம் உள்ள பழங்களையும் நிறைய சாப்பிட வேண்டும்.

    20. மாதுளை, முழு நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    21. முளை கட்டிய ஏதாவது ஒரு பயறு வகையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    22. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    மேலே சொன்னபடி உணவு வகைகளை முழு திருப்தியுடன் சாப்பிட்டால் உடல் எடையும் கூடும். சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்.

    விக்ரம் பிரபுவை கிண்டல் செய்த அஜித்!

    By: ram On: 17:33
  • Share The Gag
  • நடித்த அனைத்து படங்களும் ஹிட் கொடுத்த மகிழ்ச்சியில் உள்ளார் விக்ரம் பிரபு. இவர், மகா கலைஞன் சிவாஜி அவர்களின் பேரன் என்பது அனைவருக்கும் தெரியும். சிவாஜி என்றவுடன் நடிப்பு என்பதை தாண்டி, அவர்கள் வீட்டு விருந்து திரையுலத்தினர் மத்தியில் செம்ம ஃபேமஸ்.

    அப்படியிருக்க சிகரம் தொடு படத்தை சமீபத்தில் பார்த்த அஜித், விக்ரம் பிரபுவிற்கு போன் செய்து படம் மிகவும் நன்றாக உள்ளதாகவும் மேலும் உங்கள் வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டு எப்படி இத்தனை பிஃட்டாக இருக்கிறீர்கள் என்று ஜாலியாக கேட்டுள்ளார்.

    ஏனெனில் சிவாஜி குடும்பத்தினர் அசல் படத்தை தயாரித்த போது அஜித்தை அப்படி கவனித்தார்களாம்.

    இருமலை கட்டுப்படுத்தும் நல்லெண்ணெய்

    By: ram On: 16:58
  • Share The Gag
  • அனைவருக்கும் இருமல், தும்மல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கெல்லாம் நல்லெண்ணெய் எப்படி உதவுகிறது? என்பதை பார்க்கலாம்.

    * இதற்கு உபயோகப்படுத்தும் நல்லெண்ணெய் சுத்தமாகவும், தூய்மையாகவும் மற்றும் கலப்படமின்றியும் இருக்க வேண்டும்.

    * இருமல், தும்மல், காய்ச்சல் உள்ளவர்கள் ஆரம்பமானவுடனே 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் சளி கரையும். மேலும் தும்மல் நின்று, மூக்கில் தண்ணீர் வடிவதும் நின்று விடும். இப்படி செய்வதால் இருமலைக் கட்டுப்படுத்த முடியும்.

    * கடுமையான இருமலாக இருந்தால் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் போதும் இருமல் நிற்கும். எளிய முறையில் இருமலை விரட்டிவிடலாம்.

    * பெரும்பாலும் சிறு குழந்தைகளுக்கு மூக்கில் சளி வந்து கொண்டிருக்கும். அப்போது ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு, அதை தொட்டு எடுத்து மூக்கின் துவாரத்தில் அடிக்கடி தடவ வேண்டும். மூக்கை துடைத்து துடைத்து புண்ணாக்காமல் சுலபமான இந்த முறையின் மூலம் மூக்கிலிருந்து சளியை எளிதாக வரச்செய்து விடலாம்.

    வீட்டில் இருக்கும் நல்லெண்ணெய் கொண்டு மிகவும் சுலபமான முறையில் அனைவரையும் அவதிப்படுத்தும் இருமலில் இருந்து விடுபடலாம்.

    ஐ டீசர் குறித்து பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்த ஷங்கர்!

    By: ram On: 16:51
  • Share The Gag
  • ஐ டீசர் சமீபத்தில் வெளிவந்து 70 லட்சம் ஹிட்ஸை தாண்டி இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது. இந்த டீசர் வெளிவந்த போது பல திரைப்பிரபலங்கள் விக்ரம் மற்றும் ஷங்கரை வாழ்த்தி தங்கள் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தனர்.

    இதுநாள் வரை ஐ படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் பிஸியாக இருந்த ஷங்கர், தற்போது அவர்களுக்கு தன்னுடைய சமூக வலைத்தளங்களில் நன்றியை தெரிவித்துள்ளார்.

    இதில் ‘இயக்குநர் ராஜமெளலி, தனுஷ், சிவகார்த்திகேயன், சித்தார்த், கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி மோகன், செளந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட 'ஐ' டீஸரை குறிப்பிட்டு பாராட்டிய அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்

    பல்கேரியா பறக்கும் மாஸ்!

    By: ram On: 12:16
  • Share The Gag
  • வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் மாஸ். இப்படத்தில் நயன்தாரா, எமி ஜாக்ஸன், ப்ரேம் ஜி, கருணாஸ், ஸ்ரீமன் என நட்சத்திர பட்டாளங்களே நடித்து வருகிறது.

    இதுநாள் வரை சென்னையின் புற நகர் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக பல்கேரியா பறக்கவுள்ளது.

    அங்கு ஷுட்டிங் முடிந்தவுடன் படக்குழு காரைக்குடியில் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐயோ… பாவம்… ஆண்கள்: அலற வைக்குது புகார்கள்

    By: ram On: 12:03
  • Share The Gag
  • தற்போது, திருமணங்கள் வெறும் சடங்குகளாக மாறி வருகின்றன. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரம் மாறி வருகிறது.

    குடும்ப வாழ்க்கையில், எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகா விட்டால், அங்கு பிரச்னைகளும், சிக்கல்களுமே உண்டாகின்றன. குடும்பத்தில் சிறு பிரச்னை என்றாலும், போலீஸ், கோர்ட் என்று, நிவாரணம் தேடி வெளி உலகுக்கு வருவது, அதிகரித்து வருகிறது. தற்போது உள்ள சட்டங்கள் பெரும்பாலும் பெண்களுக்கு சாதகமாகவே உள்ளதால், ஆண்களின் நிலை பரிதாபமாக உள்ளது.சமூகத்தில் ஆண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. குடும்ப வன்முறைச் சட்டத்தினால், 2003 முதல் 2006 வரை ஒன்றரை லட்சம் ஆண்கள், நாடு முழுவதும் தற்கொலை செய்துள்ளனர். பெண்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இச்சட்டம், தற்போது ஆண்களின் உயிருக்கு பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதாக குமுறுகின்றனர், ஆண்கள் நல அமைப்புகள்.ஆண்டு தோறும், இப்புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

    பெண் தரப்பில் வரதட்சணை புகார் கொடுத்தவுடன், அக்குடும்பத்தில் உள்ளவர்களை, விசாரணை ஏதுமின்றி அனைவரும் கைதாகும் நிலை உள்ளது. ஆனால், ஆண்கள் தங்களின் நியாயமான புகார்களை கூட பதிவு செய்ய திண்டாட வேண்டியுள்ளது. சின்ன, சின்ன மோதல்கள் கூட, கோர்ட் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழல் பெருகி வருகிறது. இப்பிரச்னைகளுக்கு மூல காரணமே, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாதது தான். வழக்குகளாலும், பல்வேறு பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களுக்கென அமைப்புகளை உருவாக்கி உரிமைக்கு குரல் கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் உச்சகட்டமாக தற்போது, “ஆண்கள் பாதுகாப்புச் சங்கம்’ அமைக்கும் அளவிற்கு நிலைமை தீவிரமாகியுள்ளது.

    ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, சென்னையில் உள்ள, “ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின்’ மாநிலத் தலைவர்  கூறியதாவது: பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களின் சமூக பாதுகாப்பிற்காக, இந்த சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண் அடிமைத்தனம், பெண்களின் முன்னேற்றம் என்று, பெண்களுக்கே சமூகம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது; ஆண்கள் பெருமளவில் புறக்கணிக்கப்படுகின்றனர். சமூகத்தில் ஆண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை அவர்கள் வெளிப்படையாக சொல்வது கிடையாது. சில ஆண்கள் முன்வந்து கூறினாலும், அவர்களுக்கு உரிய நிவாரணம், சட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு என்று எதுவும் கிடைப்பது இல்லை. எனவே, பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு, இச்சங்கத்தின் மூலம், பாதுகாப்பும், சட்ட உதவியும் தருகிறோம். ஆண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இந்த அமைப்பின் நோக்கம்.தற்போது குடும்ப வன்முறைச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் ஆண்களுக்கு எதிராக திருப்பப்பட்டுள்ளன. இந்த சட்டங்களை, பெண்கள், ஆண்களைத் தாக்கும் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். இதனால், பராம்பரியமான குடும்ப அமைப்புகள் சீர்குலைந்து விடுகின்றன. குறிப்பாக, குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

    தல-55 படத்தின் பாடல் வரிகளை வெளியிட்ட கௌதம் மேனன்!

    By: ram On: 11:27
  • Share The Gag

  • தமிழ் திரையுலகில் மணிரத்னத்திற்கு பிறகு மிக அழகான பாடல்களை தன் படத்தில் வைப்பதில் கௌதம் மேனன் தான் பெஸ்ட். இவர் தற்போது அஜித்தை வைத்து ஒரு படத்தை எடுத்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

    சில நாட்களுக்கு முன் தான் இப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை ராஜஸ்தானில் படமாக்கியது படக்குழு. இப்பாடலின் வரிகளை நேற்று கௌதம் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிந்துள்ளார்.

    இதில் ’ஒரு வெள்ளிக் கொலுசு போல இந்தப் பூமி சிணுங்கும் கீழ,அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல’ என்று மிகவும் கவித்துவமான இந்த பாடல் வரியை டுவிட் செய்தார்.

    விளாம்பழம், அல்சரைப் போக்கும் அருமருந்து

    By: ram On: 11:14
  • Share The Gag
  •  தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம் விளாம்பழம், இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது.

    * விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச் செய்கிறது.

    * தயிருடன் விளாம் காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், அல்சர் குணமடையும்.

    * வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டுவர... நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.

    * விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைச் சுற்றல் நீங்கும்.

    * தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்துவர நினைவாற்றல் அதிகரிக்கும்.

    * விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்.

    * விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க, நாள்பட்ட பேதி சரியாகும்.

    * விளாம்பழ மரத்தின் பிசினை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

    * விளாம் மரப் பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.

    * சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்.

    சமந்தாவுடன் நடிக்க ஆசைப்படும் புதுமுக ஹீரோ ஜிதேஷ்!

    By: ram On: 10:12
  • Share The Gag
  • சிக்கிமுக்கி, தலக்கோணம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் ஜிதேஷ். இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்தவராம். அதோடு சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளாராம். நார்வேயில் இவர் நடித்த ஒரு நாடகத்தை பார்த்து விட்டுதான் இவரை சிக்கி முக்கி படத்திற்கு புக் பண்ணினார்களாம்.

    அந்த படத்தையடுத்து தலக்கோணம் படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் தற்போது திரைக்கு வந்திருக்கிறது. இந்த படத்தில் ஜிதேஷின் நடிப்பைப் பார்த்து விட்டு எதிர்பார்த்ததை விட நன்றாக நடித்திருப்பதாக அப்பட டைரக்டர் பாராட்டினாராம். அதனால் இதையடுத்து முன்னணி டைரக்டர்களின் படங்களில நடித்து முன்னணி ஹீரோ பட்டியலில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார் ஜிதேஷ்.


    அதுகுறித்து அவர் கூறுகையில், முதல் இரண்டு படங்களிலும் புதுமுக டைரக்டர்களின் படங்களில் நடித்து எனது நடிப்பு திறமையை ஓரளவு வளர்த்துக்கொண்டேன். அதனால் அடுத்து பெரிய பேனர், பெரிய டைரக்டர்களின் படங்களில் நடித்தால்தான் ரீச் ஆக முடியும் என்பதால் பெரிய படங்களாக எதிர்பார்க்கிறேன்


    மேலும், எனக்கு பிடித்த நடிகையாக 2 மாதத்துக்கு முன்பு வரை நஸ்ரியா இருந்தார். ஆனால் இப்போது சமந்தாதான் எனக்கு பிடித்தமான நடிகை என்று சொல்லும ஜிதேஷ், அவரது அழகும், நடிப்பும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் சமந்தா மாதிரி நடிகைகளுடன் நடித்து நானும் முன்னணி நடிகராக வளர வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்படுகிறேன் என்கிறார்.

    இடுப்பு கொஞ்சம் எடுப்பா இருக்கணுமாம்

    By: ram On: 09:56
  • Share The Gag
  • தங்கள் உடல் அமைப்பு ஒரே அளவாக ஒல்லியாக இருந்தால்தான் ஆண்களை கவர முடியும் என பெரும்பாலான பெண்கள் நினைக்கின்றனர். இது தவறு. ஆம், வயிறு பகுதியைவிட இடுப்பு பகுதி சற்று பருமனாக உள்ள பெண்களைத்தான் பெரும்பாலான ஆண்களுக்கு பிடிக்கும் என ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அமெரிக்க மருத்துவ உளவியல் நிபுணர் லவினியா ராட்ரிகெஸ் இது தொடர்பாக ஓர் ஆய்வை மேற்கொண்டார்.

    அதன் விவரம்: பெண்களின் உடல் அமைப்பைப் பொருத்தவரை வளைவாக இருக்க வேண்டும் என பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர். அதாவது, வயிறு பகுதியைவிட இடுப்பு பகுதி சற்று பருமனாக இருக்க வேண்டுமாம். உதாரணமாக, வயிறு 70 செ.மீ. அளவும், இடுப்பு 100 செ.மீ. அளவும் இருக்கலாம். இந்த அளவில் சற்று ஏற்ற இறக்கம் இருந்தாலும் பரவாயில்லை. கண் பார்வை இல்லாத ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.

    மேட் மென் என்ற தொலைக்காட்சித் தொடர் நடிகை கிறிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ் போல உடல் அமைப்பு இருந்தால் ஆண்களை கவரலாம். கிறிஸ்டினாவில் உடல் அமைப்பு கவர்ச்சியாக இருப்பதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறியுள்ளனர்.

    இந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டு: ஜிப்ரான்

    By: ram On: 09:46
  • Share The Gag
  • ‘வாகை சூடவா’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். இப்படத்தின் இசை ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரையும் கவர்ந்தது. குறிப்பாக ‘சர சர காற்று...’ பாடல் அந்த வருடத்தின் சிறந்த பாடலாக அறிவிக்கப்பட்டு பல விருதுகளையும் தட்டிச் சென்றது.

    அப்படத்திற்குப் பிறகு ‘வத்திக்குச்சி’, ‘குட்டிபுலி’, ‘நய்யாண்டி’ போன்ற படங்களுக்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இப்பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கனிசமான வரவேற்பை பெற்றது. இந்த வருடம் ஜிப்ரான் இசையில் ‘திருமணம் என்னும் நிக்ஹா’, ‘அமரகாவியம்’ ஆகிய படங்கள் வெளியாகியது. இப்படத்தின் பாடல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் முணுமுணுக்கும் ரகமாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது.

    மேலும் கமல் நடித்து வரும் ‘விஸ்வரூபம் 2’, ‘உத்தமவில்லன்’, ‘பாபநாசம்’ ஆகிய படங்களுக்கும் ‘சென்னை சிங்கப்பூர்’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இதைப்பற்றி அவர் கூறும்போது, இந்த ஆண்டு என்னால் மறக்க முடியாத ஆண்டு என்று கூறினார்.

    குழந்தை மலச்சிக்கலை போக்கும் கைவைத்தியம்!

    By: ram On: 09:35
  • Share The Gag
  • குழந்தைகள் ஆரோக்யமில்லாத உணவுப் பொருட்களின் மீது ஆசைப்படுகின்றனர். அதனை பெற்றோர்களும் வாங்கிக் கொடுப்பதால் அவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது.அதுமட்டுமின்றி, போதிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தண்ணீர் இல்லாவிட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும்.

    இவ்வாறு மலச்சிக்கல் ஏற்படும் போது குழந்தைகள் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாவார்கள். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளின் பிரச்சனையை புரிந்து கொண்டு அவர்களை அந்த மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து மீட்க வேண்டும்.

    குழந்தை மலச்சிக்கலை போக்கும் கைவைத்தியம்!
    மேலும் இந்த மலச்சிக்கல் பிரச்சனையை போக்க பல்வேறு உணவுப் பொருட்கள் மற்றும் இயற்கை வைத்தியங்கள் உள்ளன.

    தற்போது குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்யும் சில கைவைத்தியங்கள் உள்ளன. அந்த கைவைத்தியங்களை படித்து உங்கள் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் அதன் படி செய்து பாருங்கள்.

    தேன்

    ஒரு டம்ளர் பாலில் 1-2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் உள்ள குழந்தைக்கு கொடுத்தால் மலச்சிக்கல் குணமாகும்.

    நார்ச்சத்துள்ள உணவுகள்

    நார்ச்சத்து அதிகம் இருப்பதால் காய்கறிகள் மலச்சிக்கலை சரிசெய்யும் குணம் கொண்டவை. குறிப்பாக பச்சை இலைக் காய்கறிகளில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருக்கும்.

    ஆகவே முட்டைக்கோஸ், பீட்ரூட், பூசணிக்காய், பசலைக் கீரை, கேரட் போன்றவற்றை குழந்தைகளின் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதோடு மலச்சிக்கல் இருந்தால் அது சரியாகிவிடும்.

    ஆளிவிதை

    குழந்தைகளுக்கு உள்ள மலச்சிக்கலை ஆளிவிதை சரிசெய்துவிடும். அதற்கு ஆளிவிதையை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.

    விளக்கெண்ணெய்

    பெரிய குழந்தையாக இருந்தால், அவர்களுக்கு ஒரு டம்ளர் பாலில் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து குடிக்க கொத்தால் மலச்சிக்கல் உடனே குணமாகும்.

    தண்ணீர்

    சில சமயங்களில் குழந்தைகளுக்கு உடல் வறட்சி இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே அத்தகைய குழந்தைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும்.

    வாழைப்பழம்

    குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலும் ஒரு சிறந்த நிவாரணியாக இருப்பது தான் வாழைப்பழம். அதிலும் வாழைப்பழத்தை, ஒரு டம்ளர் சூடான பாலுடன் கொடுக்க வேண்டும்.

    ஓமம்

    ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் 1 ஸ்பூன் ஓமம் மற்றும் சர்க்கரை கலந்து மலச்சிக்கல் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தால் இந்த பிரச்சனை உடனே குணமாகும்.