Monday, 20 October 2014

சொட்டுமருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள் !

By: ram On: 22:50
  • Share The Gag
  • நம் வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் ஒரு பெரிய அட்டவணை வைத்துக்கொண்டு அதற்கு இதற்க்கு என்று ஆயிரத்தெட்டு தடுப்பூசிகள் போடுகிறோம், போதாத குறைக்கு இடை இடையே சொட்டுமருந்துகள் வேறு கொடுக்கிறோம். இதெல்லாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா ?

    எல்லாம் குழந்தைகளின் நல்லதுக்கு தானே அவர்களை உயிர்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்க தான் என்று நாம் நினைத்தால் நம்மை விட ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது.

    உலகத்தில் உள்ள உயிர்கொல்லி நோய்கள் அனைத்திற்கும் சேர்த்து நம் குழந்தைக்கு தடுப்பூசி போட்டாச்சு ஆனாலும் மாதம் மாதம் மருத்துவமனைகளுக்கு ஜுரம், வைரஸ் ஜுரம் ,வாந்தி,பேதி, மலேரியா என்று பிள்ளைகளை கூட்டிகொண்டு நடையா நடக்கிறீர்களே உயிர்கொல்லி நோயை எதிர்க்கும் அளவிற்கு தயார்படுத்தபட்ட உங்கள் குழந்தையின் உடம்பினால் ஜுஜுபி ஜுரத்தை கட்டுப்படுத்த முடியவில்லையே ஏன் ? என்று என்றாவது யோசித்ததுண்டா …?

    அது வேற ஒண்ணுமில்ல சொல்ல சொல்ல கேட்காம ஐஸ் வாட்டர் குடுச்சான்,பச்ச தண்ணிகுடுச்சா என்று உங்கள் பிள்ளைகளை தான் குறைகூறுவீர்கள். ஆனால் உண்மை என்னவோ அதுவல்ல ..

    நீங்கள் எதை உங்கள் பிள்ளைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்று கூறி தடுப்பூசியாகவோ, சொட்டு மருந்தாகவோ போட்டீர்களோ அதன் பக்கவிளைவுகள் என்றால் உங்களால் நம்ப முடியாது ஆனால் அதைவிட அதிர்ச்சியூட்டும் விஷயம் என்ன தெரியுமா ?

    நீங்கள் எந்த நோய் வரக்கூடாது என்று நினைத்துகொண்டு தடுப்பூசி போடுகிறீர்களோ அந்த தடுப்பூசியில் இருப்பது அதே நோய் கிருமி தான்… நோயிற்க்கான மருந்து அல்ல…. மண்டை குலம்புகிறதா..? தொடர்ந்து படியுங்கள் நீண்ட கட்டுரை இது மிக முக்கிய செய்திகளை உள்ளடக்கியது.

    போலியோ சொட்டு மருந்து :
    போலியோ சொட்டு மருந்தால்தான் போலியோ உள்பட பல நோய்கள் ஏற்படுகின்றன என்றால் நம்ப முடிகிறதா..? இந்த உண்மையை சொல்பவர் யாரோ, எவரோ அல்ல. போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவரே தான். ”1961ம் ஆண்டுக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் போலியோ சொட்டு மருந்துதான்!” என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜோனல் சால்க். இவர்தான் போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவர். ”போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும், இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதும் ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது…” இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கியவர்தான். அவர், சாபின்.அம்மை நோய்க்கான மருந்தை 1796ல் எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்தார். தன்னுடைய மகனுக்கு முதன்முதலில் இந்த மருந்தை கொடுத்து தன் கண்டுபிடிப்பை நிரூபித்தார். அனைத்து மருத்துவர்களாலும் இந்த மருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு அந்த வேதனையான சம்பவம் நிகழ்ந்தது. ஆமாம், சிலவருடங்களில் அம்மை தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு போடப்பட்டதோ, அந்த ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர். இதனால் எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய 2வது மகனுக்கு அம்மைத் தடுப்பூசியை போடவில்லை. ஆனால், அதற்குள் உலகம் முழுவதும் அம்மைத் தடுப்பூசி புழக்கத்துக்கு வந்துவிட்டது.

    மேலே சொன்ன சம்பவங்கள் முதலாளித்துவத்தின் கோர பசிக்கு மனிதர்கள் தடுப்பூசிகள் என்ற பெயரில் இரையாகும் கொடூரத்தின் சில மாதிரிகள்தான். இப்படி உலகையே குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளையே சுடுகாடாக மாற்றும் போக்கு முதலாளித்துவ சமூகம் எப்போது பிறந்ததோ அப்போது முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது. முதலாளித்துவத்தின் அடுத்தகட்டமான ஏகாதிபத்தியத்தில் இந்தப் போக்கு உச்சநிலையை எட்டியிருக்கிறது.

    தடுப்பூசிகளின் விபரீதம் குறித்து பார்ப்போம்.

    கி.பி.1796ல் எட்வர்ட் ஜென்னர் அம்மை தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதற்கு Vaccination என்று பெயர் சூட்டினார். பசுவைக் குறிக்கும் லத்தீன் சொல்லான Vacceinus-லிருந்து உருவான சொல் இது. இந்த மருந்து எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

    மனிதர்களுக்கு ஏற்படும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து வரும் சீழை எடுத்து பாதுகாத்து, பசுக்களுக்கு செயற்கையான காயங்களை ஏற்படுத்தி அந்த புண்களுக்குள் செலுத்துவார்கள். இதனால் இப்புண்கள் வழியே அதிகமான சீழ் வெளியேறத் தொடங்கும். இந்த சீழை எடுத்து அதோடு சில இருப்பு ரசாயனங்களைக் கலந்து அம்மை தடுப்பு மருந்தை தயாரிக்கிறார்கள்.

    போலியோ சொட்டு மருந்து தயாரிப்பும் கிட்டத்தட்ட இதுமாதிரிதான். போலியோவை ஏற்படுத்துவதாக நம்பப்படும் கிருமிகளை குரங்குகளின் சிறுநீரகத்தில் ஊசி வழியே செலுத்துகிறார்கள். சிறுநீரக சூழலிலேயே இந்தக் கிருமிகள் வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் போலியோ சொட்டு மருந்தாக தயாரிக்கப்படுகிறது.

    இப்படி மருந்து தயாரிக்கப் பயன்படும் குரங்குகள், உரிய சோதனைக்கு பிறகுதான் தேர்வு செய்யப்படுகின்றன. என்றாலும், பரிசோதனைகளின் மூலமே வரப்போகிற அல்லது வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நோய்கள் அனைத்தையும் கண்டுபிடித்துவிட முடியாது. இப்படி 1950களில் பரிசோதிக்கப்பட்ட குரங்குகளில் சிமியன் வைரஸ் 40 (SV40) என்ற கிருமி பாதித்திருந்த விஷயம், மருந்துகள் தயாரிக்கப்பட்ட பிறகுதான் தெரிய வந்தது.

    இதனால்தான் ‘இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைத் தடை செய்யவேண்டும்’ என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர் சத்யமாலா வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது..! அதேபோல், 2006ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 27,000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் இருப்பதாகவும் ஜூலை 11, 2008ம் ஆண்டு தேதியிட்ட ‘தி இந்து’ நாளிதழில் கட்டுரை எழுதினார் இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவரான டாக்டர் ஜேக்கப் புலியேல் (Politics of Polio, July 11/2008).

    இந்தக் கட்டுரையின் விவரத்தையும் உண்மையையும் ஆளும் வர்க்கங்கள் கண்டுகொள்ளவேயில்லை… 1853ம் ஆண்டு இங்கிலாந்தில் அம்மை தடுப்பு ஊசியை குத்தும் சட்டம் கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளுக்கும் தடுப்பு மருந்துகள் பரவின. கட்டாயச் சட்டங்களும் அமலுக்கு வந்தன. ஆனால், அம்மை நோய்த் தாக்கத்தில் இம்மருந்துகள் இந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பதிலாக பல புதிய எதிர் விளைவுகளே ஏற்பட்டன. இதனால் 1889ம் ஆண்டு இங்கிலாந்தில் ராயல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. 7 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு இக்கமிஷன் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இங்கிலாந்தில் கட்டாயத் தடுப்பூசி சட்டம் நீக்கப்பட்டது.

    1870 – 71களில் அம்மை நோய் ஜெர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் 10 லட்சம் பேருக்கு அம்மை நோய் தோன்றியது. இவர்களில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் நூற்றுக்கு 96 பேர் அம்மை நோய் தடுப்பூசியை குத்திக் கொண்டவர்கள். அதுமட்டுமல்ல, அம்மைத் தடுப்பூசி குத்திக் கொண்ட சிறுமிகள், வளர்ந்து தாயானதும் அவர்களுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. இந்த உண்மை வெளிப்பட்டதும் 1880ம் ஆண்டு உலக தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம் (International Anti-Vaccination League) உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டின் இறுதியில் பாரீசில் நடைபெற்ற முதல் மாநாட்டில் பல நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். தடுப்பூசிகளை எதிர்க்கும், முறைப்படுத்தக் கோரும் 10 தீர்மானங்கள் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. ஆனால்… அது நடைமுறைக்கு வர பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கவில்லை…

    இந்த புள்ளிவிபரத்தை பாருங்கள். 1980களில் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10. அதுவே 2008ல் 36 ஆக உயர்ந்தது. அத்துடன் 1983ல் மூளை வளர்ச்சி குறைவுள்ள அமெரிக்க குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர்தான். ஆனால், 2008ல் அமெரிக்க குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவு விகிதம் நூற்றைம்பதில் ஒருவராக மாறியிருந்தது. அதாவது 3000 மடங்கு அதிகரித்திருந்தது. இதற்கு காரணம் தடுப்பூசிகள்தான்.

    மூன்றாம் உலக நாடுகள் அமெரிக்கா செல்லும் பாதையைத்தான் பின்பற்றுகின்றன என்பதால் ஆசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள புதிய புதிய நோய் பாதிப்புக்குகளுக்கு காரணம் தடுப்பூசிகள்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

    மஞ்சள் காமாலைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட தடுப்பூசியின் கதையைக் கேட்டால் வயிறு எரியும். ஹெர்படைட்டிஸ் ஏ, ஹெர்படைட்டிஸ் பி என மஞ்சள் காமாலையில் இருவகை உண்டு.
    இதில் ஹெர்படைட்டிஸ் பி ஆட்கொல்லி நோய். ஆனால், தொற்று நோயல்ல. அதேபோல் பரவலாக வரக் கூடியதும் அல்ல. அபூர்வமாகவே மனிதர்களை தாக்கும் இந்த ஹெர்படைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி வீரியமிக்கது. இதை ஹெர்படைட்டிஸ் ஏ தாக்கியவர்களுக்கு போடக் கூடாது. உண்மை இப்படியிருக்க, 1990களில் பூதாகரமாக மஞ்சள் காமாலைத் தடுப்பூசி குறித்து (ஹெர்படைட்டிஸ் ஏ) பிரசாரம் செய்யப்பட்டது.

    இது ஏதோ ஆட்கொல்லி நோய் போலவும், அந்நோய் வந்தவர்கள் எளிதில் மரணமடைவார்கள் என்பது போலவும் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த ஏகாதிபத்திய வெறிக்கு இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளும் பலியாகின. மஞ்சள் காமாலைக்கு மருந்துகள் எதுவும் இல்லாமல் உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குணமாக்கலாம் என்ற பழம்பெரும் உண்மை மறைக்கப்பட்டது.

    இதன்விளைவாக 1990களில் அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், 1997ல் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் ஆய்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியும், அம்மைத் தடுப்பூசி போன்றே 13 விதமான புதிய நோய்களை ஏற்படுத்தும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. வலிப்பு, ஜன்னி, கண்பார்வை பாதிப்பு, மூளைக் காய்ச்சல் போன்றவை இதில் அடங்கும். உடனே அமெரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத்தை அவசரமாக நீக்கியது. இதனால் ஏராளமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வைத்திருந்த அமெரிக்க மருந்துக் கம்பெனிகள் அதிர்ந்தன.

    இந்த மருந்தை என்ன செய்வது?

    அவர்களின் துயர் தீர்க்க முன்வந்தார் பில்கேட்ஸ்….

    தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார். இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடைசெய்யப்பட்டவை…!!!!

    தடுப்பூசிகளை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘முன்பெல்லாம் கொள்ளை நோய்கள் மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியதே… தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை நோய்கள் கட்டுக்குள் வந்தன?’ நம் மனதில் இப்படித்தான் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை இதுமட்டுமே அல்ல. பல தீவிரமான கொள்ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியதை காட்டிலும் தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வணிகமும், இதனையடுத்து தோன்றியுள்ள புதுப்புது நோய்களும் மிக அதிகம். 2009ம் ஆண்டு சீனாவிலிருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பறவைக்காய்ச்சல்) பரவுவதாக பிரசாரம் செய்தார்கள். இந்த சளிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவோ, பரவாமல் தடுக்கவோ எந்த மருந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்பே அக்காய்ச்சல் படிப்படியாக குறைந்தது. இதேநிலைதான் இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன்குனியா காய்ச்சலுக்கும் ஏற்பட்டது. பன்றிக்காய்ச்சலையே எடுத்துக் கொள்வோம். ஏதோ கொள்ளை நோய் போல உலகம் முழுவதும் பேசப்பட்ட இந்நோய்க்கான தடுப்பு மருந்து தாமிஃப்ளூ விற்பனைக்கு வரும் முன்பே இந்நோய் குறைந்துவிட்டது. எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக காரணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையும்.

    இந்த அறிவியல் உண்மை மறைக்கப்பட்டு, ஆனால், இதன் சாராம்சத்தை – அதாவது தானாகவே மறையும் தன்மை – மட்டும் எடுத்துக் கொண்டு ஆளும் வர்க்கங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் ஏதோ தங்களால்தான் – தாங்கள் அறிமுகப்படுத்திய தடுப்பூசியால்தான் – நோய்களை கட்டுப்படுத்த முயன்றது போல் பிரசாரம் செய்கின்றன. சில பழைய பக்கங்களை பார்ப்போம்.

    1950களில் போலியோ நோயின் தாக்கம் உலகெங்கும் 40 மில்லியனாக இருந்தது. அப்போது போலியோவிற்கான எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. 1952ல் 19 மில்லியனாகவும், 1954ல் 8 மில்லியனாகவும் தன்னால் இது குறைந்த பிறகு 1956ல் போலியோ தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இப்போது என்ன சொல்கிறார்கள்? இந்த தடுப்பு மருந்தால்தான் போலியோ கட்டுக்குள் இருப்பதாக… தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத டைபாய்டு காய்ச்சல் 1910ல் 500 மில்லியனுக்கு மேல் உலகெங்கும் பாதிப்பு ஏற்படுத்தியது. தடுப்பூசி பயன்படுத்தாத நிலையில் 1920ல் அதுவே 200 மில்லியனாகவும், 1930ல் 100 மில்லியனாகவும் குறைந்துவிட்டது.
    .
    இப்படி இயற்கையாகக் குறைந்த பல நோய்களைத் தங்கள் வரைபடத்தில் ஏற்றி வருமானமாக மாற்றும் தந்திரத்தைத்தான் தடுப்பூசி தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்கின்றன. இப்போது தடுப்பூசி மருந்துகள் குறித்த ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு பதிலாக – இந்த மருந்துகளை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

    அதாவது ‘புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு…’ என்று அச்சிடுகிறார்கள் இல்லையா?

    அதேபோல் தடுப்பூசி மருந்துடனும் சில எச்சரிக்கைகளை பன்னாட்டு நிறுவனங்கள் அச்சிடுகின்றன. அவை என்ன தெரியுமா?

    1. அதிகப்படியான காய்ச்சல் (105 டிகிரி அல்லது அதற்கு மேல்)

    2. மந்தமாக இருத்தல்; நீடித்த அசதி

    3. மூளை வளர்ச்சி குறைபாடு; மூளை பாதிப்பு

    4. எப்போதாவது வலிப்பு; மயக்கம்

    5. கண் நரம்புக் கோளாறுகள்; நரம்பு தொடர்பான நிரந்தக் கோளாறுகள் … ஆகியவை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் ஏற்படலாம் என எச்சரிப்பது அந்த தடுப்பூசி தயாரித்த நிறுவனங்கள்தான்.

    ஆனால், எந்த மருத்துவரும் இதைக் குறித்து நோயாளிகளிடம் சொல்வதில்லை…?

    அதுமட்டுமல்ல, உச்சபட்ச விளைவாக SIDS (Sudden Infant Death Syndrom) ஏற்படுத்துவதாக தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனங்கள் சொல்கின்றன.

    இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

    குழந்தை திடீரென இறந்து போகும்…

    ஆனால், இந்த உண்மையை – அதாவது தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் சொல்லும் எச்சரிக்கையை – எந்த மருத்துவரும் நோயாளிகளிடம் சொல்வதில்லை. பதிலாக சிரஞ்சியில் ஏற்பட்ட மருந்தையே கண்ணுக்கு காட்டுகிறார்கள்….

    இந்த நிலை இனிமேலும் தொடற நீங்கள் அனுமதிக்க போகிறீர்களா ?

    சர்க்கரை நோய் - ஒரு ஆய்வு தெரியாதவர்களுக்கு...!

    By: ram On: 22:34
  • Share The Gag

  •     நாம் சாப்பிடும் உணவில் உள்ள சர்க்கரை நம் செயல்பாட்டுக்குத் தேவைப்படும் சக்தியாக முறையாக நம் உடல் மாற்றாத நிலையில் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

        சர்க்கரை மற்றும் பயறு வகைகளை உட்கொள்ளும் போது அதை நம் உடல் குளுக்கோசாக மாற்றுகிறது. உடனடித் தேவைக்காக குளுக்கோசானது நம் இரத்த நாளத்தில் சேருகிறது அல்லது கல்லீரலில் கிளைகோஜினாக எதிர்காலத் தேவைக்காக சேமித்து வைக்கப்படுகிறது. இந்த முறைப்படுத்தும் முறை அதாவது குளுக்கோசாக மாற்றும் தன்மை ரத்தத்தின் போதுமான அளவு இல்லாதபோது சர்க்கரை நோய் என்று கூறப்படுகிறது. எனவே குளுக்கோஸ் கொஞ்சமாகச் சேர்ந்து அபாய அளவை எட்டுகிறது. மன அழுத்த கோளாறு அறிகுறிகள் அதைத் தொடர்ந்து உடலில் முக்கிய பாகங்கள் அழிக்கப்படுகின்றன.

        நம் உடலில் போதுமான இன்சுலின் (உடலில் உள்ள கணையத்தில் ரகசியமான ஹார்மோனான இது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை முறைப்படுத்துகிறது.) சுரக்காதபோது இது ஏற்படுகிறது அல்லது உடலில் உள்ள திசுக்களால் இன்சுலின் முழு சக்தியோடு திகழாமை.

        சர்க்கரை நோய் குடும்பத்தில் வருகிறது. ஆனால் பாரம்பரிய காரணிகளை விட நம் சொந்த பொறுப்புகளே காரணம். உதாரணமாக முதியோருக்கு அதிக எடை காரணமாக எளிதில் சர்க்கரை நோய் உருவாகும்.

        இரண்டு வகையான சர்க்கரை நோய் பொதுவாகக் காணப்படுகிறது. டைப் 1 சர்க்கரை நோயானது இன்சுலினைச் சார்ந்திருக்கும் சர்க்கரை நோயாளிகள். இது குறிப்பாகக் குழந்தைப் பருவத்திலேயே அல்லது இளமை பருவத்திலேயே உருவாகும். இது மிகவும் அதிக கருக்கொண்ட நோயாகும். உடற்பயிற்சியுடன் வாழ்க்கை முழுவதும் இன்சுலின் தேவைப்படும். மேலும் கட்டுப்பாடான உணவு முறைகளும் அவசியம்.

        எனினும் பொதுவான சர்கரை நோய் என்பது முதியவர்களைத் தாக்கும் டைப் 2 சர்க்ரை நோயாகும் அல்லது இன்சுலினை சார்ந்திராத சர்க்கரை நோயாகும்.

        ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் முதிய வயதில் முறையாக அதிகரிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

        பெரும்பாலான டைப் 2 சர்க்கரை நோயாளிளுக்கு இன்சுலின் ஊசி தேவைப்படாது. உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு, சர்க்கரை நோயை எதிர்க்கும் மருந்துகள் ஆகியவற்றுடன் அவர்கள் தங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதன் மூலம் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளலாம்.

        சர்க்கரை நோய் உள்ள சிலர் மயக்கமாக உணர்தல், தாகம் அதிகரித்தல், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, விவரிக்க முடியாத எடைக்குறைவு, களைப்பு, தெளிவற்ற பார்வை, தோல் அலர்ஜி அல்லது அரிப்பு, குணப்படுத்தும் தன்மை மெதுவாக குறைதல் மற்றும் காயங்கள் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். இந்தப் பிரச்னைகள் டாக்டரிடம் தெரிவிக்கப்பட வேண்டும். இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்களிடம் இருந்து ரத்தம் அல்லது சிறுநீர் பரிசோதனையின் மூலம் சர்க்கரை நோய் இருப்பதை தெரிந்து கொள்ளலாம். சில நேரங்களில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். உதாரணமாக சர்க்கரை நோய்க்கு சம்பந்தம் இல்லாத அறுவை சிகிச்சையின்போது நடத்தப்படும் பரிசோதனைகளின்போது சர்க்கரை நோய் கண்டுபிடிக்கப்படலாம்.

        நீண்டகால சர்க்கரை நோய் காரணமாக ஸ்டிரோக், கண்கள் குருடாதல், இதய நோய், கிட்னி கோளாறு, நரம்பு கோளாறு ஆகியவை ஏற்படுகின்றன. ரத்தத்தில் குளோக்கோஸ் அளவை கட்டுப்பாடுடன் வைத்துக்கொண்டால் இந்தப் பிரச்னைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என்று பெரும்பாலான நிபுணர்கள் கூறுகின்றனர்.

        ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு மிக அதிகமாக இருப்பது அல்லது மிகக் குறைவாக இருப்பதும் அவசர மருத்துவத்தை நாட வேண்டிய பிரச்னையாகும். ரத்தத்தின் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்தாலோ அல்லது மிகக் குறைவாக இருந்தாலோ சர்க்கரை நோயாளிகள் கோமா நிலைக்கு செல்லக்கூடிய நிலை ஏற்படும். சர்க்ரை நோயுடன் இருப்பவர்கள் இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டுமோ செய்ய வேண்டும்.

        சர்க்கரை நோய் என்பது குணப்படுத்த முடியாதது. ஆனால், இதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தேவைப்படின் இன்சுலின் அல்லது மாத்திரைகள் உதவியுடன் நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

        ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும் பட்சத்தில் உணவுக்கட்டுப்பாடு திட்டம் மிக முக்கியமானதாகும். ஒரு சர்க்கரை நோயாளியின் அன்றாட நடவடிக்கை அவரின் உடல் எடை ஆகியவற்றைக் கொண்டு உணவுக் கட்டுப்பாடு குறித்து டாக்டர் தீர்மானிப்பார். எடை அதிகம் உள்ள நோயாளிகளுக்கு எடைக் குறைவு உணவு கட்டுப்பாட்டு திட்டம் அவசியமாகும். இதன் மூலம் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
       
    ரத்தத்தில் அதிக அளவு இருக்கும் குளுக்கோஸ் சக்தியாக மாறுவதற்கு உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியமானதாகும். நோயாளியின் பொதுவான உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஏற்ற உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி திட்டத்தை வகுத்து டாக்டர் உதவுவார். ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வது முக்கியமானதாகும்.
       
    உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியாவிட்டால் மருந்துகள் (இன்சுலின் ஊசி அல்லது மாத்திரைகள்) மூலம் சர்க்கரை நோயை நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். சில நேரங்களில் மருந்துகள் இல்லாமலேயே சில நோயாளிகள் நல்ல நிலையில் இருப்பர். ஆனால் சில குறுகிய கால உடல் நலக் குறைவு அல்லது தொற்று ஏற்படும்போது மருந்துகள் தேவைப்படுகிறது.
       
    சர்க்கரை நோயாளிகள் பாதத்தை பராமரிப்பது மிக முக்கியமாகும். சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டால் பாதத்துக்கு செல்லும் ரத்தம் நிறுத்தப்படலாம் அல்லது குறையும் உணர்வு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகள் வலி அல்லது கொப்புளம், வெடிப்பு ஏற்படுகிறதா என்றும், தொற்றுக்கள் அல்லது தோலில் காய்ப்பு ஏற்படுகிறதா என்றும் பாதத்தின் தோல் பகுதியை தினமும் கவனிக்க வேண்டும். இந்த அறிகுறிகள் தோன்றினால் உனடியாக உங்களின் குடும்ப மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
       
    இதர நபர்களிடம் இருந்து தொற்றுப் பரவுவதை தடுக்கும் குறைவான சக்தி பெற்றவர்களாக சர்க்கரை நோயாளிகள் இருப்பர். சர்க்கரை நோயாளிகள் தங்கள் உடலின் தோல் பகுதியில் சிறு காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். தோல் வறட்சி ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். தோலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். காயங்கள் ஏற்படுவதிலிருந்து தோலைப் பாதுகாக்க வேண்டும்.
       
    சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரம்ப கட்டங்களில் கண்பார்வை குறைவாடு ஏற்படுவது பொதுவான பிரச்னையாகும். ஒவ்வொரு ஆண்டும் கண்பார்வை குறித்து கண் மருத்துவரிடம் பரிசோனை செய்வதன் மூலம் இதைத் தடுக்க முடியும்.

    உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா.?

    By: ram On: 22:27
  • Share The Gag
  • உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா….? அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்…!!! எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன.

    நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது.

    எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள். பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள்.

    அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும்.

    வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும். அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்.

    டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்?

    By: ram On: 22:17
  • Share The Gag
  • திருமணம் ஆனப்பின் நடக்கக்கூடாத ஒன்று தான் டைவர்ஸ். திருமணத்திற்குப்
    பின் ஏற்படக்கூடிய ஒரு சில சண்டைகளும், நன்கு புரிந்து கொள்ளாமல்
    இருப்பதுமே, இந்த
    செயலுக்கு பெரிதும் காரணமாகின்றன. இவ்வாறு இந்த
    காரணத்திற்கு டைவர்ஸ் ஆகக் கூடாது தான், ஆனால் தவிர்க்க முடியாத ஒரு
    சூழ்நிலையினாலே இந்த முடிவு அவர்களால் எடுக்கப்படுகிறது.

    மேலும் இத்தகைய பிரிவு இருவருக்குமே பெரும் வழியை ஏற்படுத்தும். அப்படி
    அவர்கள் டைவர்ஸ் ஆனப் பின் ஆண்களின் மனநிலை எப்படி இருக்கும், அவர்கள் என்ன
    நினைப்பார்கள், எதற்கு கவலைப்படுவார்கள் என்று உளவியல் நிபுணர்கள்
    கூறுகின்றனர் என்பதை கொஞ்சம் படித்துப் பாருங்களேன்...

    டைவர்ஸிற்குப் பின் ஆண்களின் மனநிலை...

    1. முதலில் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு எந்த ஒரு
    பொறுப்பும் இருக்காது, ஒருவித சுதந்திரமாக இருப்பதாக நினைப்பார்கள்.
    அவர்கள் ஒரு சுதந்திரப் பறவை போல் உணர்வார்கள். மேலும் ஆண்களுக்கு பொதுவாக
    எந்த ஒரு பிடிக்காத வாழ்க்கையும் விரும்ப மாட்டார்கள். இருப்பினும்,
    பொறுத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அப்படி இருக்கும் போது மனைவி நிறைய
    கண்டிசன் போட்டால் அவர்களுக்கு அது நரகமாகிவிடும். இப்போது அந்த வாழ்க்கை
    இல்லையென்று நினைக்கும் போது அவர்களைப் போல் சுதந்திரப் பறவை யாராகவும்
    இருக்க முடியாது என்பது போல் இருப்பார்கள்.

    2. சமைக்கும்
    நேரத்தில் மிகவும் வருந்துவர். ஏனெனில் சமைத்து சாப்பிடவேண்டுமென்றால்
    அவர்களுக்கு பிடிக்காத விஷயம். அந்த நேரத்தில் அவர்கள் மனைவியை நினைத்து
    மிகவும் வருந்துவர். மேலும் சாப்பிட வேண்டுமென்றால் அருகில் இருக்கும்
    ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்ட் போய் நண்பர்களோடு சாப்பிடுவது என்று இருக்கும்.
    இப்படி சாப்பிடுவது கொஞ்ச நாட்களுக்கு நன்றாக இருக்கும். ஆனால் போக போக
    அழுத்துவிடும். இதுவே டைவர்ஸ் ஆன ஆண்களின் பெரும் கவலை ஆக இருக்கும்.

    3. டைவர்ஸ் ஆகியதும், முதலில் ஆண்களின் மனதில் தோன்றுவது என்றால் அது "என்
    துணியை யார் துவைப்பர்? முதலில் ஒரு வேலைக்காரி வேண்டும்" என்பது தான்.
    அப்போது அவர்கள் இதுவரை நம்மை பார்த்துக் கொண்ட, வீட்டை எல்லாம் சுத்தமாக
    வைத்துக் கொண்ட அவர்களது மனைவியை நினைப்பர். ஆனால் இப்போது... என்ற
    கேள்விக் குறி மனதில் வரும். மேலும் அந்த சமயத்தில் அவர்களுக்கு அவருடைய
    மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கை அடிக்கடி நினைவுக்கு வரும். பிறகு பழைய கால
    காலேஜ் வாழ்க்கை எல்லாம் நினைவுக்கு வந்து, அவர்கள் தங்களது லைப் ஸ்டைலையே
    மறுபடியும் மாற்ற வேண்டும் என்றெல்லாம் நினைப்பர்.

    4. டைவர்ஸ்
    ஆனப் பின் மறுபடியும் 'பேச்சுலர்'. அப்போது அவர்கள் யாருடன் வேண்டுமானாலும்
    பழகலாம். யாரும் அவர்களை கேள்வி கேட்கமாட்டார்கள். மேலும் இப்படியே
    தனியாகவே வாழ்க்கை முழுவதும் இருக்கவும் போவதில்லை. ஆகவே தனக்கு ஒரு துணை
    இருந்தால் நன்றாக இருக்கும் என்று எந்த பெண்ணைப் பார்த்து தோன்றுகிறதோ,
    அவர்களிடம் அவர்கள் போய் பேசி பழகுவது என்றெல்லாம் நினைப்பர். அது
    தவறில்லையே!!!

    5. சுதந்திரப் பறவை ஆனப் பின், இனிமேல் மனைவி
    தொல்லை இருக்காது. ஆகவே இனிமேல் "நான் என்ன செய்கிறேன்?", "எங்கு
    இருக்கிறேன்?", "எதற்கு? ஏன் தாமதம்?", "எங்கு சாப்பிட்டேன்?" என்று எந்த
    ஒரு கேள்வியும் வராது, யாரிடமும் சொல்லவும் தேவையில்லை என்றும் சந்தோஷமாக
    இருப்பர்.

    ஆகவே மேற்கூரியவாறே ஆண்கள் டைவர்ஸிற்குப் பிறகு நினைப்பர் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    கத்தி வரவில்லையா? அதிர்ச்சி தகவல்

    By: ram On: 21:41
  • Share The Gag
  • கத்தி படம் தீபாவளிக்கு வரும் என அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர். ஆனால் இன்று கத்திக்கு நாங்கள் பாதுகாப்பு தரமாட்டோம் என்று சென்னை காவல்துறை அறிவித்திருந்தது.

    இந்நிலையில் லைகாவை நீக்குகிறோம் என்று வாக்குறுதி அளித்தனர். பின் சுமுகமாக படம் ரிலிஸ் ஆகும் என்று நினைத்தால் மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது.

    தமிழகத்தில் பல திரையரங்குகளில் புக் செய்த பணத்தை தற்போது ரிட்டர்ன் செய்து வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    15 வயது குழந்தைக்கு 60 வயது தாயாக இருக்க மாட்டேன் - சமந்தா அதிரடி!

    By: ram On: 20:50
  • Share The Gag
  • தொடர்ச்சியா ஜீவா, சூர்யா, விக்ரம், விஜய், என முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த சமந்தா தற்போது ‘கத்தி’ ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

    ஏற்கனவே சினிமாவை விட்டு விலக நினைக்கிறேன் என அதிர வைத்த சமந்தா அடுத்த அதிரடியாக தனது திருமணம் குறித்து பதில் கூறியுள்ளார்.

    சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் சமந்தா சீக்கிரமே திருமணம் செய்து கொண்டு, குழந்தையும் பெற்றுக் கொள்வேன் எனக் கூறி அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.

    “இன்னும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நான் சினிமாவில் நடிப்பேன். அநேகமாக அடுத்த சில ஆண்டுகளுக்குள் திருமணம் செய்து கொள்வேன்.

    அதன் பின் சீக்கிரமாகவே குழந்தையும் பெற்றுக் கொள்வேன். அதிகபட்சமாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் குழந்தை பெற விரும்புகிறேன்.

    எனக்கு 60 வயது ஆகும் போது என்னுடைய குழந்தைக்கு 15 வயது ஆக இருப்பதை நான் விரும்பவில்லை. சீக்கிரமே சினிமாவில் நடிப்பதை விட்டுவிடுவேன், ” என்றும் சொல்லியிருக்கிறார்.

    108 காயகல்ப மூலிகைகளின் தளபதி வல்லாரை

    By: ram On: 17:18
  • Share The Gag
  • நினைவாற்றலை பெருக்கும் கிழட்டு தன்மையை தடுக்கும்

    நினைவாற்றலை பெருக்க வேண்டும் என்றால் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது ‘வல்லாரை’ தான். ஆனால் வல்லாரைக்கு இதை தவிர வேறு சில  நோய்களை குணப்படுத்தும் சக்தியும் இருக்கிறது. வல்லாரைக்கு ‘சரஸ்வதி’ என்ற பெயரும் உண்டு. ஒருவரை புத்திமானாக்கும் அற்புத சக்தி  இருப்பதால் அந்த பெயர் ஏற்பட்டது. தென்மாவட்டங்களில் வல்லாரையை கீரையாகவோ, துவையலாகவோ சமைத்து சாப்பிடுகிறார்கள். இது மிக  நல்லது. வல்லாரையை அப்படியே உலர்த்தி பொடி செய்து மாத்திரையாகவும் தருகிறார்கள். இதன் தாவரவியல் பெயர் Centelle asiatia (linn) Urban.  மண்டூகபரணி, ஆரை, சிங்கி, சண்டகி, குடகம், விக்கிராத்தா, குளக்குறத்தி, குணச்சாலி குணத்தி என்ற பெயர்களும் உண்டு.

    மலை வல்லாரை, கருவல்லாரை என்ற இருவகைகள் உள்ளன. இது கணுக்களில் வேர்விட்டு தரையோடு படரும் சிறு செடி இனம். இதன் இலைகள்  கரும்பச்சை நிறமாக இருக்கும். வட்ட, அரைவட்ட வெட்டு பற்களுடன் கூடிய கை வடிவ நரம்பு அமைப்புகளுடன் நீண்ட காம்புடைய ஆழமான இதய  வடிவ இலைகளை கொண்டது. இதன் பூ ரோஸ் நிறத்திலும், பழங்கள் சிறிய முட்டை வடிவிலும் இருக்கும். கசப்புடன் கூடிய துவர்ப்பு சுவை  உடையது. இதன் மகத்துவம் மிகப்பெரியது என்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த மாவட்ட மனநல நிபுணர் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் சிதம்பர  நடராஜன்.

    இந்த மூலிகையில் asiaticoside, resins  போன்ற ரசாயன பொருட்கள் உள்ளன. இது நினைவாற்றல், அறிவு, மனதை ஒருமுகப்படுத்துவது,  துடிப்போடு இருக்க செய்வது ஆகிய செயல்களை தூண்டி, மூளையின் திசுக்களை புதுப்பிக்கவும் செய்கிறது. வல்லாரையில் இருக்கும் antiascorbic  acid  தோலில் ஏற்படும் பலவித நோய்களையும் குணப்படுத்தும். இது தொழுநோயை கூட குணப்படுத்தும் சக்தி படைத்தது. இதில் இருக்கும்  ஹைட்ரோகாட்டிலின் நம் மூளையின் செயல்களை முடுக்கி விடுகின்றன. வல்லாரையில் இருக்கும் வல்லாரின் என்கிற அல்கலாய்டு நரம்புகளுக்கு  மிகப்பெரிய சக்தியை தருகிறது.

    நோயை நீக்கவும், உடலை பலப்படுத்தவும், வியர்வையை அதிகப்படுத்தவும், தாதுபலத்தை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது.

    மூலாதார நரம்புகள் புதுப்பிக்கப்பட்டு கபால நரம்புகள் செயல்பட்டு நல்ல நினைவாற்றலை தருகிறது.

    வல்லாரையுடன் வெங்காயம், பூண்டு, மிளகாய், புளி, சிறு பருப்பு சேர்த்து வேகவைத்து பின்னர் கடைந்து தக்காளி, சிறிது கடுகு சேர்த்து தாளித்து  வைத்துக்கொண்டு வெயில் நேரத்தில் உண்டு வந்தால் நரம்புகள் நல்ல வலுப்பெற்று சுருக்கத்தை போக்கி சீராக வைத்துக்கொள்கிறது.

    வல்லாரை இலையை உலர்த்தி பொடி செய்து சிறிது நெய் சேர்த்து உணவில் பிசைந்து ஒரு பிடி அளவு சாப்பிட்டால் வாதம், வாயு, அண்டவீக்கம்,  யானைக் கால், குஷ்டம், நெறிகட்டி, கண்ட மாலை, மேகரணம் குணமாகும்.

    வல்லாரை சூரணத்தை ஒரு சிட்டிகை தினமும் காலையில் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் வீக்கம், தோல் வியாதிகள், மூளை நரம்பு சம்பந்தமான  நோய்கள், இளநரை, கல்லீரல் மண்ணீரல் வீக்கம் குணமாகும். உடல் கிழட்டுதன்மை அடைவதை தடுக்கும். தோலுக்கு நிறத்தையும் மினு மினுப்பையும்  தரும்.

    வல்லாரை இலையுடன் தூதுவளை இலையை சம அளவு எடுத்து அரைத்து சாறு பிழிந்து 20 துளியை மட்டும் ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் கலந்து  2 வேளை குடித்து வர தொண்டை கரகரப்பு, சுவாச உறுப்புகளில் சளித்தேக்கம் குணமாகும்.

    பல மருத்துவ குணங்கள் வல்லாரைக்கு உண்டு. மூலிகைகள் பல இருந்தாலும் அவற்றில் வல்லாரைக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. 108  காயகல்ப மூலிகைகளில் வல்லாரை ஒரு தளபதி நிலையில் உள்ளது.

    உயர் ரத்த அழுத்த நோயை குணமாக்குவதில் வல்லாரைக்கு முக்கிய பங்கு உண்டு. இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதிலும்  வல்லாரை தனி இடம் வகிக்கிறது.

    சிலருக்கு வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லையே என்ற தவிப்பான மனநிலை (anxiety) இருக்கும். இதை செய்யலாமா, அதை செய்தால்  சரியாகிவிடுமா என்ற மன உளைச்சலால் பாதிக்கப்படுவார்கள். இதனால் அவர்களது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்கும்  வல்லாரையில் தீர்வு இருக்கிறது.

    சமீபகாலமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. அங்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த Scleroderma     (ஸ்கிளீரோடெர்மா) என்ற இணைப்பு திசுக்கள் கடினமாதல் மற்றும் தண்டுவட பிரச்னைக்கு பெரிதும் பயன்பட்டுள்ளது. வல்லாரை குளம், குட்டை  போன்ற சிறிய நீர் நிலைகளில் அமோகமாக வளரும். இது குறிப்பாக மலைபாங்கான இடங்களில் தானாகவே வளர்கிறது.

    விஷத்தை நீக்க வேண்டும்

    வல்லாரையை பச்சையாக உபயோகிக்க கூடாது. இதில் ஒருவித விஷத்தன்மை உள்ளது. எனவே சுத்தம் செய்து உபயோகிக்க வேண்டும். புதிய மண்  சட்டியில் பசும்பால் முழுவதும் ஊற்றி ஒரு வெள்ளை துணியை கட்டி அதில் வல்லாரை இலைகளை போட்டு மூடி வைத்து சிறு தீயில் எரிக்க  வேண்டும். பால் ஆவியாகி வல்லாரையிலுள்ள விஷத்தன்மையை முறித்து கீழே தள்ளிவிடும். பின்னர் இலையை உலர்த்தி இடித்து பொடியாக்கி  பயன்படுத்தவேண்டும்.

    வல்லாரை கேப்சூல் ஆபத்து

    வல்லாரையின் மொத்த செடியும் மருந்துதான். ஆனால் சிலர் வல்லாரையிலுள்ள அல்கலாய்டுகளை சிந்தெடிக் முறையில் பிரித்து கேப்சூல்களாக  விற்கிறார்கள். இது தவறு. காரணம் இயற்கை எப்போதும் தன் படைப்புகளில் ஒரு சமநிலையை வைத்திருக்கிறது. அதை பிரிப்பதால் நிச்சயம் பக்க  விளைவுகளை ஏற்படுத்தும். எனவே கூடுமானவரை கேப்சூல்களை தவிர்த்து நேரடியாக தயாரிக்கப்பட்ட மாத்திரை அல்லது சமைத்து சாப்பிடலாம்.

    நல்லாரை காண்பதும் நன்றே!  வல்லாரை உண்பதும் நன்றே!