Tuesday, 17 December 2013

குழந்தைகளுக்கு என்ன பொம்மை வாங்கிக் கொடுக்கலாம்?

By: ram On: 23:53
  • Share The Gag



  • குழந்தைகளுக்கு விலை உயர்ந்த விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது நமக்கு வேண்டுமானால் பிறரிடம் பெருமை அடித்துக்கொள்ளப் பயன் படலாம் ஆனால் குழந்தைகளுக்கு அது தேவை இல்லை.அதன் மதிப்பு அதற்கு தெரியாது. ரிமோட் கண்ட்ரோல் காரை விட ஒரு சிறிய பந்து அதைப் பொறுத்தவரை மதிப்பு மிக்கது.


    கைக்குழந்தைக்கு ஏதாவது பொம்மை வாங்கவேண்டுமென்றால் தொட்டிலுக்கு மேலே தொங்கும் குடை ராட்டினத்தை வாங்குவார்கள். சாவி கொடுத்தால் இது சுற்றும். கூடவே ஒலியும் எழுப்பலாம். குழந்தை கண் விரித்து இதைப் பார்த்து ரசிக்கும் அழகே அழகு. அல்லது இருக்கவே இருக்கிறது கிலுகிலுப்பைகள். குழந்தையின் உறவினர் இதைக் கையில் பிடித்துக்கொண்டு ஆட்டி ஒலியெழுப்ப, குழந்தை சத்தம் வரும் திசையில் எல்லாம் தலையைத் திருப்புவது தனி அழகுதான்.


    சுமார் நான்கு மாதமாகும்போது குழந்தையால் தன் கையில் சிறு பொருள்களைப் பிடித்துக்கொள்ள முடிகிறது. அதற்காகப் பாசம்பொங்க பலவித பொம்மைகளை வீட்டில் வாங்கிக் குவிக்க வேண்டாம். ஏனென்றால் அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கண்டு உணரும் சக்தி குழந்தைக்கு முழுவதுமாக ஏற்படுவதில்லை. எனவே மிருதுவான பந்து போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம்.


    ஆறு மாதத்தைத் தாண்டிவிட்டால் கையில் கிடைக்கும் பொம்மையை வாயில் வைத்துக்கொள்ளும் வேண்டாத பழக்கம் வந்து தொலைக்கிறது. எனவே கூர்மையான பொம்மையோ, சாயம் போகும் பொம்மையோ கொடுக்க வேண்டாம். அதன் கைகளுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் பொம்மைகள் வாங்கிக் கொடுக்கலாம். ஒரு கூடையில் நிறையப் பொருள்களை (அவை பாதுகாப்பானவையாகவும், எடை குறைந்தவையாகவும் இருக்கட்டும்) நிரப்பிக் குழந்தையிடம் கொடுத்துவிடுங்கள். அதுபாட்டுக்கு அவற்றைக் கீழே கொட்டும். பின் அவற்றைக் கூடையில் எடுத்துப் போடும். அப்போது குழந்தையின் முகத்தில் தோன்றும் உற்சாகம் சுற்றியிருப்பவர்களிடம் வேகமாகப் பரவும்.


    பந்தைக் கீழே தட்டி விளையாடுவது என்பதில் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன தெரியுமா? கைகளையும் கண்களையும் ஒருங்கிணைக்கும் அற்புதமான பயிற்சி இது.


    ஒரு வயதாகும்போது பொம்மைக்கார்கள் அளிப்பதில் தவறில்லை. டெடி பியர் போன்ற பொம்மைகளை இன்னும் வளர்ந்தபிறகு கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இதுபோன்ற புசுபுசு பொம்மைகளில் அழுக்கு சேர சான்ஸ் அதிகம். அந்த அழுக்கு குழந்தையின் உடலுக்குள் சென்று ‘‘வீசிங்’’ எனப்படும் இழுப்பில் கொண்டு சென்றுவிட்டால்? ஐயோ வேண்டாமே.


    பொம்மைத் துப்பாக்கியால் சுடுவது, பேட்டரியில் இயங்கும் பொம்மைகள் ஆகியவை இயந்திரத்தனமானவை. அதாவது அவற்றினால் குழந்தைகளின் அறிவுத்திறன் அதிகமாவதில்லை. அதேசமயம் நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுகளும், கற்பனை சக்தியைத் தூண்டும் பொம்மைகளும் மிகவும் தேவை.


    வாங்கிக்கொடுக்கும் பொம்மைகள் ஒருபக்கம் இருக்கட்டும். குழந்தையோடு உட்கார்ந்து கொண்டு விளையாடுங்கள். இரு கைகளையும் விரித்து அதற்குள் குழந்தையைக் குத்தவையுங்கள். பிடித்துவிட்டால் அது அவுட். பிடிக்காவிட்டால் நீங்கள் அவுட். அடிக்கடி நீங்களே அவுட்டாகி குழந்தைக்கு சந்தோஷத்தைக் கொடுங்கள். குழந்தையின் உள்ளங்கையில் தோசை வார்ப்பது போன்ற விளையாட்டெல்லாம்கூட உணர்வுபூர்வமான பாலத்தை ஏற்படுத்தும்.

    ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? உப்பை வெச்சு துவைங்க....!

    By: ram On: 23:40
  • Share The Gag



  • நீங்க ஜீன்ஸ் வாங்கி எத்தனை நாள் ஆச்சு? எத்தனை தடவை துவைத்து இருக்கிறீர்கள்? என்று கேட்டால் அனைவரும் யோசிப்பார்கள். ஏனெனில் அதைத் துவைத்து பல மாதங்கள் ஆகியிருக்கும். மேலும் அடிக்கடி துவைத்தால், ஜீன்ஸ் அதன் தன்மை, நிறம் போன்றவற்றை இழந்துவிடும் என்றும் நினைத்து, அடிக்கடி வீட்டில் துவைப்பதையும் நிறுத்திவிட்டனர். அதிலும் சிலர் ஜீன்ஸ் துவைப்பதற்கு லாண்டரி தான் சிறந்த வழி என்று எண்ணி அங்கு கொடுத்து துவைக்கின்றனர். ஆனால் ஜீன்ஸை சூப்பராக வீட்டிலேயே ஈஸியான முறையில் நிறம் போகாமலும், அதன் தன்மை மாறாமலும் இருக்க அழகாக துவைக்கலாம். அதற்கு உப்பு தான் சிறந்த பொருள். எப்படியெனில் உப்பை வைத்து ஜீன்ஸை துவைத்தால், ஜீன்ஸில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, துணியின் தன்மையும் அப்படியே இருக்கும். இப்போது உப்பை வைத்து எப்படி துவைப்பது என்று பார்ப்போமா!!!

    உப்பை வைத்து எப்படி துவைக்க வேண்டும்?


    முதலில் பக்கெட்டில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு டீஸ்பூன் உப்பை சேர்த்து, ஜீன்ஸை போட்டு 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.பின் அந்த ஜீன்ஸை எடுத்து, வாஷிங் மிசினிலோ அல்லது கையிலோ லேசாக சோப்பு போட்டு துவைத்து, நீரில் அலச வேண்டும். அதிகமாக தேய்த்து விட வேண்டாம். ஏனெனில் பின் அதில் உள்ள துணியின் தன்மை குறைந்துவிடும்.

    பின்பு மற்றொரு பக்கெட்டில் நீரை ஊற்றி, அதில் உள்ள நுரை போகும் வரை நன்கு அலச வேண்டும். பின் அதனை காய வைக்க வேண்டும்.

    முக்கியமாக ஜீன்ஸ் துவைக்கும் போது, உட்பகுதி வெளியே இருக்க வேண்டும். பின் காய்ந்ததும், அதனை ஐயர்ன் செய்து சரியாக மடித்து வைக்க வேண்டும். இதனால் ஜீன்ஸ் நன்கு புதிது போன்று அழகாக சுத்தமாக இருக்கும்.

    எதற்கு ஜீன்ஸை உப்பை வைத்து துவைக்க வேண்டும்?

    * புதிய ஜீன்ஸை உப்பை வைத்து துவைத்ததால், ஜீன்ஸில் உள்ள நிறம் போகாமல், புதிது போன்று காணப்படும்.

    * உப்பு துணிகளில் படியும் கறைகளை எளிதில் நீக்கிவிடும். அதாவது கறைகளை கஷ்டப்பட்டு தேய்த்து நீக்க வேண்டும் என்று இருக்காது.

    * ஜீன்ஸை எப்போது துவைக்கும் போதும், உட்பகுதி வெளியே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் சாயம் போய், வெளுப்புடன் காணப்படுவதைத் தடுக்கலாம்.

    * உப்பை சேர்த்து துவைத்தால், துணிகளில் உள்ள சாயம் வெளி வராமல் இருக்கும். மேலும் மற்ற துணிகளில் இருந்து வரும் சாயமும் எந்த துணிகளோடும் கலக்காமல் இருக்கும்.

    * அதிலும் உப்போடு, சிறிது வெள்ளை வினிகரை கலந்து துவைத்தால், நல்லது.

    * எப்போதும் ப்ளீச்சிங் பவுடரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை துணியில் உள்ள நிறத்தை முற்றிலும் வெளியேற்றிவிடும், பின் துணியின் தன்மையையும் குறைத்துவிடும்.

    ஆகவே மேற்கூறியவற்றை நினைவில் வைத்து, ஜீன்ஸை துவைத்தால், ஜீன்ஸை சூப்பராக இருப்பதோடு, லாண்டரியில் துணிகளை போட வேண்டிய அவசியமில்லை. மேலும் வேறு எப்படியெல்லாம் ஜீன்ஸை துவைக்கலாம் என்று தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

    பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?

    By: ram On: 23:00
  • Share The Gag



  • நமது வீடுகளில் சிடி அல்லது டிவிடிக்கள் பழுதாகிவிட்டால் அதை பழுது பார்ப்பதற்கும் அதிக செலவாகும். ஆனால் வீட்டிலேயே அவற்றை குறைந்த செலவில் பற்பசை கொண்டு டிவிடிக்கள் அல்லது சிடிக்களின் பழுதுகளை நீக்க முடியும். பின்வரும் எளிய வழிகளைப் பின்பற்றினால் மிக எளிதாக சிடி மற்றும் டிவிடிக்களின் பழுதுகளை சரி செய்ய முடியும்.


    முதலில் சிடி அல்லது டிவிடியை வெளியில் எடுக்க வேண்டும். பின் அதன் பின்புறத்தைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பின்புறத்தில் ஏகப்பட்ட கீறல்கள் இருக்கலாம். மிகப் பெரிய கீறல்கள் இருந்தால் அந்த சிடிக்களை பழுது பாக்க முடியாது. கீறல்கள் சிறயதாக இருந்தால் அவற்றை எளிதாக சரி செய்ய முடியும்.

    வெளியில் எடுத்த சிடியை சோப்பு தண்ணீரால் மென்மையாக கழுவ வேண்டும். அதன் மூலம் கீறல்களை ஏற்படுத்தும் சிறிய துகள்களைக்கூட நீகக முடியும்.

    கழுவியபின் அந்த சிடியை சுத்தமாக இருக்கும் ஒரு துணியின் மீது வைக்க வேண்டும்.

    பின் பற்பசையை எடுத்து சிடியின் முன்பகுதி முழுவதும் சிறிய சிறிய வட்ட வடிவில் விரல்களால் பரப்ப வேண்டும்.

    பின் அந்த சிடியை ஒரு சமமான பகுதியில் வைக்க வேண்டும். பின் விரல்களால் மிகவும் மென்மையாக அந்த பற்பசையை சிடியில் தேய்க்க வேண்டும்.

    அதன் பின் ஒரு ஐந்து நிமிடங்கள் பற்பசையை சிடி மீது அப்படியே வைத்திருக்க வேண்டும்.

    ஐந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் சிடியில் உள்ள பற்பசையை கழுவ வேண்டும். அதாவது சிறிதளவு பற்பசைகூட சிடியில் இல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பின் டிஷ்யு பேப்பரைக் கொண்டு சிடியை உலர்த்த வேண்டும். ஏனெனில் இந்த பேப்பர் மிகவும் மென்மையாக இருக்கும். அதோடு சிடியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதோடு பற்பசையும் முழுமையாக நீங்கிவிடும்.

    சிறிது நேரம் கழித்து முழுவதும் காய்ந்து போன சிடியை நாம் பயன்படுத்த முடியும்.

    காதலுக்கும் , திருமணதிற்கும் உள்ள வித்தியாசம்...

    By: ram On: 22:42
  • Share The Gag


  • ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும்திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.அதற்கு அந்த ஞானி,''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ.அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ,அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை.நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது.''என்றார்.


    கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.ஞானி,''எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி?''என்று கேட்டார். சீடன் சொன்னான்,'குருவே,வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன்.இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன.அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன்.அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே.வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.'


    புன்முறுவலோடு ஞானி சொன்னார்,   ''இது தான் காதல்.''


    பின்னர் ஞானி,''சரி போகட்டும்,அதோ அந்த வயலில் சென்றுஉன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை.ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.''


    சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான்.ஞானி கேட்டார்,''இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா?''சீடன் சொன்னான்,'இல்லை குருவே,இதை விட அழகான செடிகள் இருக்கின்றன.ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன்.நிபந்தனைப்படி,ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.'


    இப்போது ஞானி சொன்னார், ''இது தான் திருமணம்.''

    கணினியை ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய...

    By: ram On: 22:31
  • Share The Gag



  • பொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது "Saving your settings" , "Windows is Shutting down" போன்ற செய்திகள் வரும்.சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும்.


    இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள் தான் . கணினியை அணைக்க சில வினாடியே போதுமானது . இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும்பாதவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒரு சில வினாடியில் கணினியை அணைக்கலாம் . எந்த சேதமும் ஏற்படாது.


    உங்கள் கணினியின் Task Manager ரை திறந்து கொள்ளுங்கள். ( Ctrl + Alt + Delete விசைகளை சேர்த்து அழுத்தினால் Task Manager திரைக்கு வரும் )


    இந்த Task Manager ல் உள்ள மெனுவில் Shut Down ல் உள்ள Turn Off என்பதை Ctrl கீயை அழுத்திக்கொண்டே கிளிக் செய்யுங்கள் .


    வினாடியில் கணினி அணைந்து விடும்.

    அவசியம் தேவை ஐந்து ஊட்டச்சத்துக்கள்...?

    By: ram On: 22:07
  • Share The Gag


  •  குடும்ப நலனில் அதிக கவனம் உள்ள பெண்கள் கூட இந்த முக்கிய ஐந்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உணவில் சேர்த்துக்கொள்ள தவறிவிடுகின்றனர். உணவு தயாரிக்கும்போது இல்லத்தரசிகள் இதை கவனத்தில் கொண்டு உணவு தயாரித்தால் நம் குடும்பத்திற்கும், நம் உடலுக்கும் அத்தியாவசிய நன்மைகளை எளிதில் பெற்றுவிடலாம்.

    1. வைட்டமின் ஈ

     வைட்டமின் ஈ சக்திவாய்ந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பான் (antioxidant) இது உயிரணுக்களை (cells) பாதுகாக்கிறது, மேலும் உயிரணுக்களை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள செய்து தோலில் ஏற்படும் புற ஊதா(UV) சேதத்திற்கு எதிராக செயல்படுகிறது. போதுமான அளவு வைட்டமின் ஈ கிடைக்கவில்லை என்றால் மற்ற சத்துக்களை உடலுக்கு உறுஞ்சுவதில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. ஒரு நாளைய தேவை 15 மிகி , ஆனால் நாம் பெறும் அளவு 6.4 மிகி, எனவே பற்றாக்குறை 57% என ஆய்வுகள் கண்டறிந்துள்ளது.

    உணவில் தினமும் எந்தெந்த வகைகளில் வைட்டமின் ஈ சேர்த்துக்கொள்ளலாம்:

    1 / 4 கப் முளைக்கட்டிய கோதுமையை ஊறவைத்து அரைத்து தோசையாக வார்த்து சாப்பிடலாம்
     ஒரு கைப்பிடியளவு ஏழு (அ) எட்டு பாதாம் பருப்பு.
    ஒரு தேக்கரண்டி தாவர எண்ணெய் காய்கறி கலவைகளில் ஊற்றி கலந்து உண்ணலாம். பொதுவாக சமையலுக்கு உபயோகப் படுத்தும் சூரிய காந்தி எண்ணெய். (சண்ட்ராப்,சப்போலா, சநோலா போன்ற எண்ணெய்கள் )
    1 நடுத்தர பப்பாளி .
    1 கப் அறிந்த சிகப்பு குடைமிளகாயை கூட்டு (அ) பொரியல் செய்து உண்ணலாம் .
    1 கப் வேகவைத்த வெள்ளை பீன்ஸ் கூட்டு (அ) பொரியல்.
    மேலும் மீன்களில், கேரட், ப்ரோக்கோலியில் வைட்டமின் ஈ நிறைய உள்ளது.



    2. பொட்டாசியம்

     பொட்டாசியம் ஒரு மின்பகுபொருள் (எலக்ட்ரோலைட் – electrolyte ). இது நமது நரம்பு மண்டலம் முனைப்பாக செயல்படவும், தசைககளை நயமாக(muscles tone) வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தை இயல்பான அளவில் வைத்திருக்க உதவுகிறது. போதுமான பொட்டாசியம் கிடைக்கவில்லை என்றால், விரைவில் எரிச்சல் அடைவோம் , பலவீனமாக உணர்வோம் எளிதில் களைப்படைவதாக உணர்வோம். இதை தவிர்க்க, நாம் போதுமான அளவு பொட்டாசியம் நிறைந்த உணவுகள் மற்றும் அளவான சோடியம் உண்ண வேண்டும். இந்த இரண்டு கனிமங்கள் (சோடியம் மற்றும் பொட்டாசியம்) நமது உடலில் சமநிலையில் இருக்க வேண்டும், ஏனெனில் உணவில் அதிக சோடியம் சேர்ப்பதாலும் பிரச்சினைகள் உண்டாகும்.

    ஒரு நாளைய தேவை 4.700 மில்லி கிராம் , ஆனால் நாம் பெறும் அளவு 2.458 மில்லி கிராம். எனவே பற்றாக்குறை 48% என ஆய்வுகள் கண்டறிந்துள்ளது.

    தினமும் எந்தெந்த வகைகளில் பொட்டாசியத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்:
    1 நடுத்தர வேகவைத்த தோல் நீக்காத உருளைக்கிழங்கு பொரியல் செய்து சாப்பிடலாம்.
    1 கப் சமைத்த பயறு, பருப்பு சூப் (அ)கூட்டு செய்து சாப்பிடலாம்.
    1 கப் நறுக்கிய வாழைப்பழம்.



    3. கால்சியம்

     கால்சியம் என்கின்ற கனிமம் வலிமை மிக்க வலுவான எலும்புகள் உருவாக உதவுகிறது, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரை நோய் வரும் ஆபத்தைக் குறைக்கிறது. கால்சியம் மற்றும் சில முக்கிய நோய்களை தடுக்க உதவிசெய்கிறது. டஃப்ட்ஸ்-புதிய இங்கிலாந்து மருத்துவ மையம் கிட்டத்தட்ட 84.000 பெண்களை வைத்து நடத்திய ஒரு ஆய்வில், விஞ்ஞானிகள் தினசரி 1,200 மிகி கால்சியம் உட்கொண்ட பெண்களுக்கு 33% நீரிழிவு நோய் தாக்குதல் குறைந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர். ஒரு நாளைய கால்சியம் தேவை 1,000-1,200 மில்லி கிராம் , ஆனால் நாம் பெறும் அளவு 800 மில்லி கிராம். எனவே பற்றாக்குறை 20-33% என ஆய்வுகள் கண்டறிந்துள்ளது. மேலும் கால்சியம் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது என பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உடல் எடையும் குறைக்கக் கூடிய தன்மையும் கொண்டது.

    தினமும் எந்தெந்த வகைகளில் கால்சியத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்:

    250 மில்லி கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் (அ) மோர்.
    3 அவுன்ஸ் எலும்புடன் உண்ணக்கூடிய சூடை மீன், அயிரை, நெத்திலி போன்றவற்றை வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து தொக்கு (அ) குழம்பு செய்து சாப்பிடலாம்.
    1/2 கப் டோபு என்றழைக்கப்படும் சோயாக்கட்டியை காய்கறிகளுடன் பொரியல் செய்து சாப்பிடலாம். கேழ்வரகு உணவிலும் அதிக அளவில் கால்சியம் சத்து அடங்கியுள்ளது. இதை நம் ஊர் கிராமப்புறங்களில் அதிகம் புட்டு, களி, ரொட்டி என செய்து சாப்பிடுவார்கள். எனவேதான் உடல் வலிமை கூடி , இறுக்கமாகி (muscle toning)உறுதியும் பெற்று காணப்படுவர்.

    4. வைட்டமின் எ


     இந்த ஊட்டச்சத்து கண்பார்வை, குறிப்பாக இரவு நேர பார்வை, தோல், ஈறு மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு ஊக்கியாகவும் மற்றும் வைரஸ்களுக்கு எதிராக போராடவும் உதவுகிறது. வயது ஏற ஏற புலனுணர்வு செயல்பாட்டை பாதுகாக்க அதிக வைட்டமின் ஏ தேவைப்படுகிறது, யூட்டா மாநில பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு அதிக அளவில் கரோட்டின் (உடலினுள் இதிலிருந்து வைட்டமின் எ தயாரிக்கப்படுகிறது ) ஆண்டியாக்ஸிடண்ட்கள் உட்கொண்ட முதியவர்களின் மன வீழ்ச்சி வேக விகிதம் குறையத் தொடங்கியது கண்டறியப்பட்டது. ஒரு நாளைய தேவை 700 மைக்ரோ கிராம் , ஆனால் நாம் பெறும் அளவு 558 மைக்ரோ கிராம். எனவே பற்றாக்குறை 20-33% என ஆய்வுகள் கண்டறிந்துள்ளது.

    உணவில் வைட்டமின் எ எப்படி சேர்த்துக்கொள்ளலாம் :

    1 சிறிய சர்க்கரை வள்ளிக் கிழங்கை வேகவைத்து உண்ணலாம்.
    1 / 4 கப் பூசணி கூட்டாக (அ) அவியல் செய்து சாப்பிடலாம்.
    1 நடுத்தர கேரட் பொரியல், கூட்டு (அ) பச்சையாக சிறு துண்டுகளாக்கி சாப்பிடலாம்.
    1 கப் பரங்கிக்காய் பொரியல், கூட்டு.
    1 / 4 கப் சர்க்கரை பாதாமி/apricot .
     1 நடுத்தர பப்பாளி.



    5. மக்னீஷியம்

     ஒரு நாளைய தேவை 320 மில்லி கிராம் , ஆனால் நாம் பெறும் அளவு 267 மில்லி கிராம். எனவே பற்றாக்குறை 17% என ஆய்வுகள் கண்டறிந்துள்ளது.

    மெக்னீசியம் உடலில் நடக்கும் நூற்றுக்கணக்கான இரசாயன மாற்றங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. மரபணுக்கள் சரியாக (helping your genes function properly) வேலை செய்ய ஆற்றலை சேமித்து (storing energy) கொடுத்து உதவுகிறது, இது எலும்புகள் வலிமையுடன் இருக்க , நரம்புகள் மற்றும் தசைகள் தொய்வில்லாமல் நயத்துடன் பராமரிக்க மற்றும் ரத்தம் தடையில்லாமல் சீராக உடல் முழுவதும் பாய உதவுகிறது.

    இந்த தாது, பரிந்துரைக்கப்பட்ட 38% கிடைக்கப்பெற்றால் வளர் சிதை மாற்ற நோய் அறிகுறி (metabolic syndrome) தவிர்க்கப்படுவதை சிடிசி ஆய்வு அறிக்கை கண்டுபிடித்துள்ளது. மேலும் அதிக வயிற்றுக் கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் ஆபத்துகள் கட்டுக்குள் உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

    உணவில் மெக்னீசியம் எப்படி சேர்த்துக்கொள்ளலாம் :

    1 கப் சமைத்த கருப்பு மொச்சை கூட்டு, பொரியல் (அ) குழம்பு.
    1 அவுன்ஸ் (6 முதல் 8 முழு) முந்திரி, பாதாம் பருப்பு.
    1 கப் வெண்டைக்காய் பொரியல் (அ) கூட்டு.
    1 கப் சமைத்த பழுப்பு மட்டை அரிசி, ஓட்ஸ், பார்லி,கோதுமை குருணை ரவை.
    1 கப் சமைத்த பசலிகீரை.

    சூப்பர் ஸ்டாருடன் மோதத் தயாராகும் பவர் ஸ்டார்?

    By: ram On: 21:40
  • Share The Gag



  • 'லத்திகா' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் 'பவர்ஸ்டார்' சீனிவாசன்.அந்தப் படத்தை ஒரே தியேட்டரில் ஓடவைத்து வெள்ளிவிழா கொண்டாடினார்.


    அதற்குப் பிறகு. 'ஆனந்தத் தொல்லை', 'இந்திர சேனா', 'மூலக்கடை முருகன்', 'தேசிய நெடுஞ்சாலை' என பல படங்களுக்கு ஒரே சமயத்தில் பூஜை போட்டார்.


    அதில். 'ஆனந்தத் தொல்லை' படம் மட்டும் எடுக்கப்பட்டு, ரிலிஸுக்குத் தயாராக உள்ளது.


    இதற்கிடையில் தான் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்து பிரபலமானார். பண மோசடி வழக்கில் சிறைக்கு சென்று வந்தார்.


    இப்போது 'சுட்ட பழம் சுடாத பழம்'. 'நாலு பொண்ணு நாலு பசங்க', 'நாலு பேர் ரொம்ப நல்லவங்க' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


    'ஆனந்தத் தொல்லை' படத்தை எப்போது வெளியிடுவீர்கள் என்று அவரிடம் கேட்டால், சூப்பர் ஸ்டார் ரஜினியின்  'கோச்சடையான்' எப்போது ரிலீசாகுமோ அன்றே எனது 'ஆனந்தத் தொல்லை'யும் வெளிவரும் என கூலாக சொல்கிறார்.

    தம்பியைப் புகழும் சிம்பு!

    By: ram On: 21:09
  • Share The Gag



  • சிம்பு, நயன்தாரா, சூரி நடிப்பில்பாண்டிராஜ் இயக்கும் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு டிசம்பர் 20ல் தொடங்குகிறது.


    இந்த படப்பிடிப்பில் சிம்புவும், நயன்தாராவும் கலந்துகொண்டு நடிக்கின்றனர்.


    ஆறேழு வருடங்கள் கழித்து இவர்கள் இரண்டுபேரும் இணைவது உண்மையிலேயே ஒரு புதுவிதமான காம்பினேஷன் தான்.


    அதைவிட முக்கியமான விஷயம் இந்தப்படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.


    சமீபத்தில் இந்தப்படத்திற்கான முதல் பாடல் கம்போஸிங் நடந்தது. குறளரசன் இசையை லயித்துக்கேட்ட சிம்புவும் பாண்டிராஜும் ‘நீ நல்லா வருவடா’ என ட்விட்டரில் பாராட்டு மழை பொழிந்துள்ளார்கள்.


    சிம்பு தன் தம்பியை 'நல்லா மியூசிக் பண்றான்' என  பார்ப்பவர்களிடம் புகழ்ந்து தள்ளுகிறாராம்.

    மருந்தாகும் பூண்டு...!

    By: ram On: 20:59
  • Share The Gag



  •  பூண்டை பொடியாக நறுக்கிப் பாலுடன் சேர்த்து உட்கொண்டால் இதயக் கோளாறு கட்டுப்படும்.

    நான்கு அல்லது ஐந்து பல் பூண்டை நசுக்கி உட்கொண்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

    பூண்டை தேங்காய்ப்பாலில் வேகவைத்து நன்கு மசிய அரைத்து சுளுக்கினால் ஏற்பட்ட வீக்கத்தின் மேல் தடவினால் வீக்கம் குறையும்.

    ஒரு தேக்கரண்டி பூண்டு விழுதுடன் தேங்காய் எண்ணெய் கலந்து உட்கெண்டால் வாதநோய் கட்டுப்படும்.

    பூண்டுச் சாறுடன் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து தடவினால் சரும நோய்கள் கட்டுப்படும்.

    பூண்டை சிறிதளவு நீர் கலந்து நசுக்கி சாறெடுத்து அத்துடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து உட்கொண்டால் இருமல் கட்டுப்படும்.

    பூண்டை நசுக்கி ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோயினால் உருவாகும் கால் வீக்கம் குறையும். ரத்தக் கொதிப்பும் கட்டுப்படும்.

    பூண்டை நெருப்பில் சுட்டு அதை இளம் சூட்டில் மைபோல் அரைத்துத் தொண்டைக்கு வெளிப்புறம் தடவினால் தொண்டை வீக்கம் குறையும்.

    உணவில் மருந்தாக உபயோகப்படுவது பூண்டு. பல மருத்துவ குணம் உள்ளடங்கியது என்பதால் தினசரி உணவில் பூண்டை அனைவரும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    சங்குப் பூவின் மருத்துவக் குணங்கள்....

    By: ram On: 20:46
  • Share The Gag



  •  சங்குப் பூ கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இது கொடி வகையைச் சார்ந்த்து. இதன் பூக்கள் நீலநிறத்திலும் வெண்மை நிறத்திலும் காணப்படும். இதன் பூக்கள் சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ எனப் பெயர் வந்தது. இதற்கு காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான் என்றும் வேறு உண்டு. நீல மலருடையதைக் கறுப்புக் காக்கணம் என்றும், வெள்ளைப் பூ உடையதை வெள்ளைக் காக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.

    இதன் இலை, வேர் மற்றும் விதை முதலியவை மருத்துவ குணம் கொண்டவை. இது புளிப்புச்சுவை கொண்டதாக இருக்கும். இது சிறுநீர் பெருக்கும், குடற்பூச்சிகளை கொல்லும். தாது வெப்பு அகற்றும். வாந்தி, பேதி, தும்மல் ஆகியவற்றை குணப்படுத்தும்.


    இரத்த குழாய் அடைப்பு நீங்கும்

     அழகுக்காக வளர்க்கப்படும் சங்குப்பூக்கள், இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் குணமாக்கும். சங்குப்பூக்களை பறித்து தண்ணீரில் 24 மணி நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்துவர இரத்தக்குழாயில் உள்ள அடைப்பு நீங்கும்.

    சங்குப்பூ, வேர், திப்பிலி, விளாம்பிசின், ஆகியவை வகைக்கு 10 கிராம் எடுத்துக்கொண்டு 15 கிராம் சுக்குடன் நீர் விட்டு அரைக்க வேண்டும். சிறு சிறு மாத்திரைகளாக செய்து நிழலில் காயவைத்து பத்திரப்படுத்தவும். ஒரு மாத்திரை கொடுக்க நன்கு பேதியாகும். சிறுகுழந்தைகளுக்கு அரை மாத்திரை கொடுக்க வேண்டும்.

    நெறிகட்டிகள் குணமாகும்


     சங்குப்பூ, இலை, உப்பு சேர்த்து அரைத்து நெறிகட்டிகள் மீது பூச கட்டிகள் கரையும். குழந்தைகள் அடிக்கடி இருமலால் சிரமப்பட்டால் அவர்களுக்கு சங்குப்பூக்களை வதக்கி இடித்து சாறு பிழிந்து அச்சாறில் ஒரு சங்கு அளவு அல்லது குறைந்த அளவு பருக வேண்டும்.

    நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும் போது சங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்தி வர வியர்வை நீங்கும்.

    சங்குப்பூவின் இலைகளை சட்டியல் இட்டு இளவறுப்பாக வறுத்து நன்கு சூரணம் செய்து கொண்டு 2 மணிக்கு 1 தடவை 6 முறை சாப்பிட காய்ச்சல், தலைவலி ஆகியவை தீரும். 

    அடிக்கடி சூடு பிடிக்குதா? அப்ப இந்த காய்கறிகளை அளவா சாப்பிடுங்க....

    By: ram On: 20:33
  • Share The Gag


  • காய்கறிகளில் இயற்கையாகவே வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அனைவருக்கும் அவசியமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. நமக்குத் தேவையான சத்துக்களை சேமித்து வைக்கும் வங்கிகள் தான் காய்கறிகள். ஆனால், சில காய்கறிகள் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் குணம் கொண்டவையாக உள்ளன.

    கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் நிறைந்த சில காய்கறிகள் உடல் சூட்டை அதிகப்படுத்தும் என்றால் நம்ப முடிகிறதா? கொழுப்பை குறைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் விரும்புபவர்களுக்கு இந்த காய்கறிகள் பயனுள்ளவையகாவே உள்ளன. ஆனால், இது முழுமையான பலன் அளிப்பதில்லை. கோடைக்காலங்களில், அதுவும் வெப்பக் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும் நாட்களில் உங்கள் உடலை குளுமையாக வைத்திருப்பது மிகவும் கடினமாக இருக்கும். அந்த நாட்களில், இது போன்ற காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நலம்.

    அனைத்து வகையான பருவநிலைகளிலுமே உடல் சூடு அதிகரித்து விடுவது பலருக்கும் பிரச்சனையான விஷயம் தான். அதன் காரணமாக ஹார்மோன் சமநிலையற்ற தன்மைகள், அரிப்பு மற்றும் பிற தோல் வியாதிகள், மூலம் மற்றும் பிற செரிமானக் கோளறுகள் போன்றவை வரிசையாக அணிவகுத்து உடலின் மீது தாக்குதல் தொடுக்கின்றன. இது போன்ற பிரச்சனைகளை அவ்வப்போது எதிர்கொள்ளும் மனிதர்கள், உடல் சூட்டை அதிகரிக்கும் காய்கறிகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். இங்கே அது போன்று சாப்பிடாமல் தவிர்க்க வேண்டிய காய்கறிகளை வரிசைப்படுத்தியுள்ளோம்

     இஞ்சி


     காரமான மற்றும் சூட்டை அதிகரிக்கும் காய்கறியாக இஞ்சி உள்ளது. இஞ்சி இயற்கையாகவே நமது உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை உடைய காய்கறி வகையைச் சேர்ந்தது. அதன் காரத்தன்மைதான் சூட்டை அதிகரிக்கும் குணத்தைக் கொடுக்கிறது. எனவே, உடல் சூட்டைக் குறைக்க நீங்கள் நினைத்தால், இஞ்சி சாப்பிடுவதை குறைக்கவும் அல்லது தவிர்க்கவும். ஆனால், சிறதளவு இஞ்சியை உடலில் சேர்த்துக் கொண்டால் அது உடலுக்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பெருமளவு இஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடு அதிகரித்து கெட்டுவிடும

     மிளகாய்

     மிளகு குடும்பத்தைச் சேர்ந்த காய்கறிகளான மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாய் ஆகயிவற்றில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் குணங்கள் நிறைய உள்ளன. உடலின் இரத்த ஓட்டத்தை தூண்டக் கூடிய குணமுடைய மிளகாயில், உடல் சூட்டை அதிகரிக்கும் குணம் உள்ளது. எனவே மிளகாய் சாப்பிடும் போது சற்றே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மேலும், நமது வாயில் உள்ள தோல் பகுதியை எரிக்கும் தன்மையும் மிளகு, மிளகாயின் காரத்திற்கு உண்டு - உஷார்


     கேரட்


    'பக்ஸ் & ஃபன்னி' முயல் குட்டியின் பேவரைட் சாப்பாடான கேரட்டில் உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை அளவற்ற வகையில் உள்ளது என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். அதன் உறுதியான வண்ணம் உடலின் இரத்த ஓட்டத்தை பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கும் அதே நேரத்தில், அதன் மூலம் உடல் சூடும் அதிகரிக்கும் என்பதை மறக்க வேண்டாம். எனவே, உஷ்ணத்தை அதிகரிக்கும் கேரட்டை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்ப்பது நலம்.

    வெங்காயம்

     எந்தவொரு உணவிலும் காரத்தை கூட்ட உதவும் காய்கறியாக வெங்காயம் உள்ளதால் தான், பல்வேறு சுவை மிக்க உணவுகளின் தயாரிப்பிலும் வெங்காயத்திற்கு பங்கு உள்ளது. ஆனால் இந்த வெங்காயத்தை அதிகளவு உட்கொண்டால், அதன் மூலம் ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படுகிறது என்ற உண்மையை நாம் அறியும் போது, வெங்காயம் உரிக்காமலே நமக்கு கண்ணீர் வந்து விடும். உடல் சூட்டை அதிகரிக்கும் குணமுடைய வெங்காயத்தை எடுத்து, உங்கள் கையின் அக்குளில் வைத்தால் உடல் சூடு தானாக மேலேறத் துவங்கி, உங்களுக்கு காய்ச்சல் வந்து விட்ட உணர்வை ஏற்படுத்தி விடும். எனவே, உடல் சூடு தொடர்பான பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் வெங்காயத்திற்கு சொல்லுங்கள் 'NO'.

    பச்சை இலைக் காய்கறிகள்

     கீரைகள், பசலை கீரை மற்றும் பிற பசுந்தழைக் காய்கறிகள் உடலுக்கு மிகவும் நன்மை தரும் என்று படித்திருப்போம். அவற்றில் அதிக அளவில் ஆக்ஸிஜன் எதிர் பொருட்கள் இருப்பதால், அவை மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளன. ஆனால், அதே பச்சை இலைக் காய்கறிகளில் புரதங்களும் அதிகளவில் உள்ளன. எனவே, அவற்றை சாப்பிடும் போது உடலில் சேரும் புரதங்களால் பெருமளவு வெப்பம் உடலில் உருவாகும். எனவே, உடலுக்குள் சூடு ஏற்படும் பிரச்சனையை நீங்கள் எதிர்கொண்டிருந்தால், பச்சை இலைகள் உள்ள காய்கறிகளை தவிர்ப்பது நலம்.

    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு!

    மேலே படித்த காய்கறிகள் எல்லாம் உடல் சூட்டை கூட்டக் கூடியவை தான். ஆனால், சத்தான இந்த காய்கறிகளை அளவாக உட்கொள்ளும் போது உடலுக்கு எந்தவித கெடுதலும் ஏற்படாது. எனவே, காய்கறிகளை முழுமையாக தவிர்த்து விடாமல், அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை மனதில் கொண்டு, நமக்குத் தேவையான அளவில் மட்டும் சாப்பிடுவது நல்லது.

    பிரியாணியின் கதை உங்களுக்கு தெரியுமா ...???

    By: ram On: 19:51
  • Share The Gag




  • நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரியாணியின் கதை உங்களுக்கு தெரியுமா ...???

    பேரரசர் அக்பர் ஒரு உணவு பிரியர் ... அவருக்கு எப்பொழுதும் உணவு சுவையாக இருக்க வேண்டும்

     உணவு சுவையாக இல்லையெனில் சமையல் காரர்களை ரொம்பவும் கடிந்து கொள்வார் ....!!!

    அக்பருடைய தொந்தரவு தாங்க முடியாமல் அரண்மனை சமையல் காரன், ஒருநாள் அக்பர் வேட்டைக்கு சென்று இருந்த நேரம் பார்த்து அரண்மனையை விட்டு ஓடிவிட முடிவு செய்தான்

     அரண்மனையை விட்டு கிளம்பும் நேரத்தில், அக்பர் மீது இருந்த கோபத்தில் ... அரண்மனை சமையல் கூடத்தில் இருந்த அரிசி, நெய், முந்திரி பருப்பு ஏலக்காய், இலவங்கம், மற்றும் எல்லா காய் கறிகளையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணியையும் ஊத்தி அடுப்பை மூட்டி விட்டு கிளம்ப தயாரானான்

     அப்பொழுதும் அவன் கோபம் தீரவில்லை அதனால்
     ஒரு பெரிய தட்டை வைத்து அந்த பாத்திரத்தை மூடி அதன்மேல் நெருப்பு சாம்பலை அள்ளி கொட்டி வைத்து விட்டு அரண்மனையை விட்டே ஓடி போய் விட்டான் ...

    வேட்டைக்கு சென்ற அக்பர் திரும்பி வந்து பார்க்கையில் சமையல் காரன் ஓடிப் போனது தெரியவந்தது ....

    வேட்டைக்கு சென்று திரும்பி வந்த பசியில் ஏதாவது சாப்பிட வேண்டுமே என்ற நினைப்பில் சமையலறையை சுற்றிவந்த அக்பருக்கு, ஓடிப் போன சமையல்காரன் செய்து வைத்து விட்டுப் போன நெருப்பு சாம்பலுடன் கூடிய பெரிய பாத்திரம் தெரிந்தது.

    நல்ல பசியில் இருந்த அக்பர் பாத்திரத்தின் மேல் இருந்த நெருப்பு சாம்பலை நீக்கிவிட்டு தட்டை திறந்து பார்க்கையில் நல்ல கம கமக்கும் வாசனை யுடன் கூடிய அரிசி உணவு நன்கு வெந்து தம் கட்டப் பட்ட நிலையில் உண்ணுவதற்கு சரியான பக்குவத்தில் இருந்தது.

    அக்பர் அந்த உணவை உண்டு விட்டு, அதன் சுவை யில் மெய் மறந்து போனார்.

    சமையல் காரனை....இன்னுமா திரும்பி வரவில்லை ? இன்னுமா திரும்பி வரவில்லை ? என்று கேட்டுக் கொண்டே சாப்பிட்டார் உருதில் "பிர் ஆயா னி"...... "பிர் ஆயா னி" என்பதாக.... அதுவே மருவி அந்த உணவின் பெயர் பிரியாணி ஆகி விட்டது.

    மெய்யும் பொய்யும் ஆண்டவனுக்கே வெளிச்சம்...

    டேப்ளட் பிசி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

    By: ram On: 19:13
  • Share The Gag


  • டேப்ளட் பிசி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

    தற்போது மக்கள் கம்ப்யூட்டர் வாங்குவதை விட்டுவிட்டு, டேப்ளட் பிசிக்களை நாட இருக்கின்றனர். பல வசதிகள், தனி நபர் விருப்பங்கள், இயக்க, எடுத்துச் செல்ல எளிது எனப் பல புதிய சிறப்புகளில் டேப்ளட் பிசி, தற்போதைய டிஜிட்டல் உலகில் இடம் பிடித்துள்ளது. ஒரு டேப்ளட் பிசியை, என்ன என்ன அம்சங்களைப் பார்த்து வாங்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.

    1. டேப்ளட் பிசியின் அளவு:


    டேப்ளட் பிசி வாங்கும் ஒவ்வொருவரும், அது தடிமன் குறைந்ததாகவும், குறைந்த எடை கொண்டதாகவும், எடுத்துச் சென்று பயன்படுத்த எளிதாகவும் இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அதே நேரத்தில், அதன் திரை என்ன அகலத்தில் இருக்க வேண்டும் என்பதில், பல வகையான அபிப்ராயங்கள் உள்ளன. ஐ–பேட் அதன் திரை 10 அங்குலம் (சரியாகச் சொன்னால் 9.56) என வரையறை செய்தது. அதன் எடை 750 கிராம் முதல் 900 கிராம் வரை என்ற ரீதியில் இருந்தது. சிலர் 12 அங்குல திரையை எதிர்பார்த்தனர். ஆனால், பொதுவாக ஐ–பேட் சற்று கூடுதல் தடிமனுடன் இருப்பதாக அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

    தற்போது மார்க்கட்டில் வந்துள்ள டேப்ளட் பிசிக்கள், ஐ–பாட் பாணியைப் பின்பற்றாமல், மக்கள் விருப்பம் எனத் தாங்கள் கணித்தபடி, அவற்றைத் தந்துள்ளனர். சாம்சங் காலக்ஸி டேப் முதல் வெரிஸான் வரை 7 அங்குல திரை கொண்டுள்ளன. எடை 600 கிராமிற்கும் குறைவாகவே உள்ளது. எனவே நாள் முழுவதும் தூக்கிக் கொண்டு செயல்படுபவருக்கு, இது உகந்ததாகவே உள்ளது. அஸூஸ் நிறுவனம் 8 அல்லது 12 அங்குல அகலத்திரையுடன் டேப்ளட் பிசி தர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, ஒருவருக்கு சிறியதாக இருப்பது, இன்னொருவருக்கு பெரியதாக இருக்கலாம். அளவு என்பது அவரவர் விருப்பத்தினைப் பொறுத்ததே.

    2. ஸ்டோரேஜ் அளவு:

    ஐ–பாட் 16, 32 மற்றும் 64 ஜிபி உள் நினைவகத் துடன் வந்தது. இதில் கூடுதல் நினைவகத்தை ஏற்படுத்த முடியாது. கூடுதலாக நினைவகம் வேண்டும் எனில், புதியதாகத்தான் வாங்க வேண்டும். விரிவு படுத்த வேண்டும் எனில், இவற்றில் வெளியிலிருந்து இணைத்துப் பயன்படுத்தக் கூடிய நினைவகத்தைத் தான் நாட வேண்டும். அப்படி யானால், அதற்கான எஸ்.டி. அல்லது மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் கொண்ட டேப்ளட் பிசி வேண்டும்.

    அதிர்ஷ்டவசமாக, ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் 7 இயக்கம் கொண்ட டேப்ளட் பிசிக்களில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி 16 மற்றும் 32 ஜிபி நினைவகத்துடனும், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்டுடனும் கிடைக்கிறது. பிமோடோ (bModo) என்னும் விண்டோஸ் டேப்ளட் பிசி, சற்று எடை கூடுதலாக இருந்தாலும், இரண்டு யு.எஸ்.பி. போர்ட் கொண்டு இருப்பதால், எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ்களை இணைக்க வழி தருகிறது.

    விண்டோஸ் 7 அடிப்படையில் இயங்கும் சி.டி.எல். (CTL) டேப்ளட் 250 ஜிபி ஹார்ட் ட்ரைவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

    3.பேட்டரி திறன்:

    டேப்ளட் பிசிக்களில் அடுத்து கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் அதில் தரப்பட்டிருக்கும் பேட்டரி களாகும். ஐ–பேட் இந்த வகையில் 10 முதல் 12 மணி நேரம் வரை தொடர்ந்து மின் சக்தி தருவதாக அமைக்கப்பட்டு, பெயர் பெற்றுள்ளது. சாம்சங் கேலக்ஸியில், 7 மணி நேரம் ஹை டெபனிஷன் வீடியோ பார்க்கலாம் என விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது. சாதாரண பணிகள் எனில், 10 மணி நேரம் பயன்படுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது.

    ஆனால், விண்டோஸ் 7 இயக்கம் கொண்டுள்ள டேப்ளட் பிசிக்கள், இந்த விஷயத்தில் ஏமாற்றம் தருகின்றன. ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் உள்ள டேப்ளட் பிசிக்கள் நிறைவைத் தருகின்றன.

    4. 3ஜி அல்லது வை–பி மட்டுமா?

    சில டேப்ளட் பிசிக்கள் 3ஜி அல்லது வை–பி நெட்வொர்க் இணைப்பு என ஏதேனும் ஒன்றையே தருகின்றன. இந்தியாவில் அறிமுகமாகும்போது, இதில் ஒரு தெளிவு ஏற்பட்டு, இரண்டும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

    5. சிஸ்டம்:

    ஆண்ட்ராய்ட் போல ஓப்பன் சிஸ்டம் அல்லது விண்டோஸ் 7 போல குளோஸ்டு சிஸ்டம் எனத் தற்போது சாய்ஸ் உள்ளது. ஆண்ட்ராய்ட் சிஸ்டம் எனில், அது கொண்டுள்ள டேப்ளட் பிசியில் சில வரையறைகள் உள்ளன. விண்டோஸ் சிஸ்டம் கொண்டுள்ள டேப்ளட் பிசியில், இந்த வரையறைகள் இல்லை. எனவே, தேவைகளின் அடிப்படையில்தான் இவற்றைத் தேர்ந்தெடுக்க முடியும்.

    6.உள்ளீடு வழிகள்:

    ஐ–பேட் சாதனம் கொண்டுள்ள, ஆன்ஸ்கிரீன் கீ போர்ட், பெரிய அளவில் டாகுமெண்ட்களை உருவாக்க ஒரு தடையாகவே கருதப்படுகிறது. எனவே வயர்டு கீ போர்ட் அல்லது இணைப்பின்றி செயல்படும் புளுடூத் கீ போர்டு பயன்படுத்தியாக வேண்டும். ஆனால் ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் இயக்க டேப்ளட் பிசிக்களில், யு.எஸ்.பி. போர்ட் கொடுக்கப்பட்டிருப்பதால், அதன் இணைப்பில் கீ போர்டுகளைக் கொண்டு, விரைவாகச் செயல்படலாம்.

    7. விலை:

    மிக முக்கியமான ஒரு விஷயம் விலையே. இந்திய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் விலையின் அடிப்படையிலேயே எந்த சாதனத்தினையும் வாங்கிப் பயன்படுத்த முன்வருவார்கள் என்பது ஏற்கனவே மொபைல் போன் மற்றும் சில சாதனங்களில் நிரூபணம் ஆகி உள்ளது. எனவே, இந்தியாவில் டேப்ளட் பிசிக்கள் விற்பனைக்கு நேரடியாக அறிமுகம் ஆகும்போது இந்த அம்சமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கலாம்.

    8. சிரிங்க, கேமரா முன்னால இருக்கு:

    ஐ–பேட் சாதனம் குறித்துக் கருத்து தெரிவிக்கையில், அதில் கேமரா இல்லாதது பலமாகப் பேசப்பட்டது. பொதுவான போட்டோ எடுக்கும் வகையிலான கேமரா அந்த சாதனத்திற்குள் இல்லை. எனவே போட்டோ எடுக்க வேண்டும் அல்லது வீடியோ கான்பரன்சிங் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் எனில், ஆப்பிள் ஐ–பேட் உகந்தது அல்ல என்ற கருத்தினை அனைவரும் மேற்கொண்டுள்ளனர். மற்ற பெரும் பாலான நிறுவனங்களின் படைப்புகள் கேமராவினைக் கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

    9. கூடுதல் அப்ளிகேஷன் புரோகிராம்கள்:


    ஸ்மார்ட் போன் ஒன்றைத் தேர்ந்தெடுக்கையில், அதில் எத்தனை அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பதிந்து இயக்கலாம் எனவே அனைவரும் எதிர்பார்க் கின்றனர். ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோர், ஐ–பேட் மற்றும் ஐ–போனுக்கென ஆயிரக் கணக்கில் அப்ளிகேஷன் புரோகிராம்களைக் கொண்டுள்ளது. ஆனால் ஐ–பேட் சாதனத்திற்கான புரோகிராம்கள் என எடுத்துக் கொண்டால், அவை சற்றுக் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. விண்டோஸ் அடிப்படையில் இயங்கும் டேப்ளட் பிசிக்களுக்கான அப்ளிகேஷன் புரோகிராம்கள் பல வர இருப்பதாக தகவல்கள் இதனாலேயே வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டே, எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் டேப்ளட் பிசிக்களை வாங்குவது என்றும் முடிவு செய்திடலாம்.

    10.ஒத்திசைந்த செயல்பாடு:

    ஒரு டேப்ளட் பிசி தனியே மட்டும் இயங்காது. உங்களுக்கு 3ஜி டேப்ளட் பிசி வேண்டும் என்றால், அது உங்களுக்கு அந்த சேவையைத் தரும் நிறுவனத்தின் செயல்பாட்டுடன் இணைந்து செல்ல வேண்டும். கேலக்ஸி டேப் போன்ற டேப்ளட் பிசிக்கள், ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ வகை இணைப்புகளுடன் இணைந்து செயலாற்றும் தன்மை கொண்டவையாக உள்ளன. எனவே டேப்ளட் பிசியைத் தேர்ந்தெடுக்கையில் இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இன்றைய நிலையில், நமக்கு எந்த மாதிரி டேப்ளட் பிசி வேண்டும் என ஒரு பரவலான முடிவினை எடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்தியச் சந்தையில், அதிக எண்ணிக்கையில் நிறுவனங்கள், டேப்ளட் பிசிக்களைக் கொண்டு வருகையில், முடிவினை எடுக்க இது உதவியாக இருக்கும்.

    தமிழ் இல் type செய்ய...!

    By: ram On: 18:43
  • Share The Gag





  • http://www.google.com/inputtools/windows/index.html

    இதனை ஒருமுறை தரவிறக்கி கணினியில்
     பதிந்துகொண்டால் போதுமானது..

    பின் எப்போதும்
     இதனை இயக்க இணைய இணைப்பு அவசியப்படாதுஇதனை நாம் மற்ற எந்த எழுத்து மென்பொருட்களிலும்
     உபயோகிக்கலாம்.

     (எ-கா) MS Word, Notepad etc.,
    இந்த மென்பொருளின் அளவு 1 MB –க்கும்
     குறைவாகும்..

    இதில் எழுத்துப்பிழை என்பது அறவே வராது..


    நாம் தவறாக தட்டச்சு செய்தாலும் அதை சரியான

     வார்த்தையாக மாற்றிகொள்வதே இதன்


     தனிச்சிறப்பாகும்..



    கணினியில் பதிந்தபின் இதனை உபயோகிக்க:

    1) Taskbar-ன் ஏதேனும் ஒரு இடத்தில் 'க்ளிக்'

    செய்து Toolbar-->Language bar

    தேர்வு செய்யவும்..

    2) பின்பு, ALT+SHIFT கீயை ஒரு சேர அழுத்தினால்

     ஆங்கிலம் மற்றும் தமிழில் மாறி மாறி தட்டச்சு செய்யலாம்..

    உபசரிப்பு முறையை தெரிந்து கொள்ள ..

    By: ram On: 18:26
  • Share The Gag




  • உபசரிப்பு முறையை தெரிந்து கொள்ள ..

    தமிழர்கள் தலை வாழை இலை விருந்து பறிமாறும் முறை!!!


    1. உப்பு (Salt)

     2. ஊறுகாய் (Pickles)

     3. சட்னி பொடி (Chutney Powder)

     4. பச்சை பயிர் கூட்டு (Green Gram Salad)

     5. பருப்பு கூட்டு (Bengal Gram Salad)

     6. தேங்கய் சட்னி (Coconut Chutney)

     7. பீன்… பல்யா (Fogath)

     8. பலாப்பழ உண்டி (Jack Fruit Fogath)

     9. சித்ரண்ணம் (Lemon Rice)

     10. அப்பளம் (Papad)

     11. கொரிப்பு (Crispies)

     12. இட்லி (Steamed Rice Cake)

     13. சாதம் (Rice)

     14. பருப்பு (Dal)

     15. தயிர் வெங்காயம் (Raitha)

     16. ரசம் (Rasam)

     17. உளுந்து வடை (Black Gram Paste Fired Cake)

     18. கத்திரிக்காய் பக்கோடா (Brinjal Pakoda)

     19. இனிப்பும் புளிப்பும் கலந்த கூட்டு (Sweet And Sour Gravy)

     20. காய்கறி பொரியல்(Vegetable Fry)

     21. காய்கறி அவியல் (Vegetabel Mix)

     22. வெண்டைக் காய் பக்கோடா (Ladies Finger Pakoda)

     23. கத்திரிக்காய் சாம்பார் (Brinjal Sambar)

     24. இனிப்பு (Sweet)

     25. வடைகறி (Masalwada Curry)

     26. இனிப்பு தேங்கய் போளி (Sweet Coconut Chapati)

     27. கிச்சடி (Vegetable Upma)

     28. இஞ்சி துவையல் (Sour Ginger Gravy)

     29. பாயசம் (Sweet)

     30. தயிர் (Curds)

     31. மோர் (Butter Milk )

    நம் முன்னோர்களின் ரகசியம்?

    By: ram On: 18:08
  • Share The Gag


  • டெல்லியில் குதுப்மினார் அருகில் இந்த இரும்பு தூண் உள்ளது.. இதை உலக விஞ்ஞானிகள் ஏன் இன்னும் துருப்பிடிக்கவில்லை என ஆராய்ந்தனர்.. பதில் காண முடியவில்லை.


    கி.பி.500ல் சந்திரகுப்த மன்னரால் வைக்கப்பட்டது.. இந்த துருப்பிடிக்காத இரும்பு தயாரிப்பதை நாம் கண்டுபிடித்தால் நமது உலகக்கடன்களை எல்லாம் அடைத்துவிடலாம். ஏனெனில் எவர்சில்வர் கொண்டு ராட்சச இயந்திரங்களை தயாரிக்க முடியாது செலவு மிக அதிகமாகும்...


    முன்னோர்களின்  இந்த ரகசிய கண்டுபிடிப்பை நம் முன்னோர்களே மறைத்துவிட்டனர்.

    ‘சர்வதேச கடிதம் எழுதும் போட்டி- ஜன=5!’: தபால் துறை அறிவிப்பு!

    By: ram On: 17:43
  • Share The Gag



  • இந்திய தபால் துறை ஆண்டுதோறும் நடத்தும் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி வரும் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் டிசம்பர் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என தபால் துறை அறிவித்துள்ளது.

    மின்னஞ்சல், குறுஞ்செய்தி, இணையம் போன்ற தகவல் தொடர்பு வளர்ச்சிக் காரணமாக கடிதம் எழுதும் பழக்கம் மறைந்து வருகிறது.

    இதைக் கருத்தில் கொண்டு கடிதம் எழுதும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் உலக அளவில் கடிதம் எழுதும் போட்டியை தபால் துறை நடத்தி வருகிறது.

    இதுகுறித்து தபால் துறை உயர் அதிகாரி,”ஆண்டுதோறும் சர்வதேச தபால் சங்கத்தின் (மய்ண்ஸ்ங்ழ்ள்ஹப் டர்ள்ற்ஹப் மய்ண்ர்ய்) சார்பில் கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது.வரும் ஜனவரி 5-ஆம் தேதி 43-ஆவது உலக அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பத்துடன் 2 பாஸ்போர்ட் புகைப்படங்கள் இணைத்து அனுப்ப வேண்டும். முதற்கட்டமாக மாவட்ட அளவில் சென்னையைச் சேர்ந்த மாணவர்களுக்கு மேற்கு மாம்பலம் ஜூப்பிளி சாலையில் உள்ள அஞ்சுகம் மேல் நிலைப்பள்ளி, மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    பள்ளி நிர்வாகம், மாணவர்களுக்காக தங்கள் வளாகத்திலேயே போட்டியை நடத்த விரும்பினால், அந்தந்தப் பள்ளியிலேயே நடத்தலாம்.கடிதம் எழுதும் போட்டியில் தேர்வாகும் மாணவர்கள் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச அளவில் இந்தியா சார்பாக போட்டியில் பங்கேற்கலாம்.போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படும் என்றார்” அவர்.

    இசை எப்படி வாழ்க்கையைத் தொடுகிறது என்ற தலைப்பில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, உருது, அசாமி, பஞ்சாபி, நேபாளி போன்ற மொழிகளில் ( 8-ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்ட எந்த மொழிகளிலும்) எழுதலாம்.

    காலை 10 மணி முதல் 11 மணி வரை போட்டி நடைபெறும்.

    இது குறித்து மேலும் விவரங்களுக்கு “துணை இயக்குநர், தலைமை தபால் அலுவலகம், சென்னை – 600002′ என்ற முகவரியிலும்,”pmgccrtcagmail.com’ என்ற இணைய தளத்திலோ அல்லது 28520048, 28520430, 28551774 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என தபால் துறை அறிவித்துள்ளது.

    இந்தியாவும் ஆன்லைன் உளவுதுறையை ஆரம்பிச்சாசில்லே!

    By: ram On: 17:21
  • Share The Gag



  • உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவும் “நேத்ரா” – ‘Netra’ – a NEtwork TRaffic Analysis என்னும் ஆன்லைன் உளவுத் துறையை துவக்கி உள்ளது என்ற தகவலை பகிங்கர ரகசியமாக தெரிவித்துக் கொள்கிறேன்..


    சமீப காலமாக ஒவ்வொரு நாடும் தன் நாட்டின் பாதுக்காப்புக்காக ஒட்டு கேட்பது – டேட்டா இன்டர்செப்ட் செய்வது போன்ற பல விஷயங்களை செய்கின்றன. அந்த வரிசையில் இந்தியா “நேத்ரா” என்னும் ஒரு பிராஜக்ட்ட மூல்ம் India’s Centre for Artificial Intelligence and Robotics (CAIR), Defence Research and Development Organisation (DRDO) laboratory இவர்களின் உதவியோடு ஐ பி எனப்படும் இன்டலஜின்ஸ் பீரொ / இந்தியா டமஸ்டிக் இன்டலிஜன்ஸ் பீரோ / ரா என்னும் மூன்று முக்கிய உளவுத்துறைக்கு தகவல்கள் / கால்கள் / பேச்சுகள் என அனைத்தையும் ஷேர் செய்யும்.


    நேத்ரா என்னும் இந்த டெக்னாலஜி கணனியின் மென் பொருள் போன்றது தான் இதன் மூலம் இந்தியாவில் தீவிரவாதிகள் சிலர் ஸ்கைப் / கூகுள் டாக் / இன்டர்னெட் டெலிஃபோனி மூலம் பேசும் போது சில சொற்களான = “பாம்” – “வெடி” – “குண்டு” போன்ற பல அதி தீவிரவாத வார்த்தை உபயோகபடுத்தப்பட்டால் உடனே அது இவர்களை அலெர்ட் செய்யும்.


    இத்துடன் சிறிய அளவு பறக்கும் டிரொன் நேத்ராவும் உருவாக்கியுள்ளனர். இது 200 மீட்டர் உயரத்தில் 2.5 கிலோமீட்டர் வரை பறந்து கண்காணிக்கும். இதன் மூலம் 1.5 கிலோமீட்டர் ஏரியாவில் நடக்கும் விஷயத்தை பார்க்கவும், பேசுவதை டிரான்ஸ்மீட்டர் மூலம் வயர்லெஸ்ஸில் கிடைக்க வைக்கவும் முடியும்.


    இதற்கிடையில் தமிழர் ஆதித்தன் தலைமையில் 2008 ஆம் ஆண்டு இந்த நேத்ரா பறக்கும் உளவு மெஷினுக்கு அக்னி விருது வழங்கி கவுரவித்தது நினைவிருக்கலாம். அதனால உங்களின் ஒவ்வொரு ஆன்லைனும் இந்தியாவின் ஏதாவது ஒரு உளவுத்துறை கண்காணிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லைங்கோ.

    வைப்பர்களுக்குப் பதிலாக புதிய தொழில்நுட்பம -இங்கிலாந்து நிறுவனத்தின் அப்டேட்!

    By: ram On: 17:01
  • Share The Gag



  • இங்கிலாந்து நாட்டில் முன்னணியில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்களில் மக்லரென் குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனம் பார்முலா-1 போட்டிகளுக்கான சூப்பர் கார்களைத் தயாரிப்பதில் முதலிடத்தில் உள்ளது. காரின் முன்புறக்கண்ணாடிகளைத் துடைக்கும் வைப்பர்களுக்குப் பதிலாக போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இந்த நிறுவனம் உள்ளது.


    இந்தப் புதிய திட்டத்தில் உயர் அதிர்வெண் அலைகள் மூலம் கண்ணாடிகள் சுத்தம் செய்யப்படும. இந்த சக்தியைப் பயன்படுத்தி கண்ணாடியின் மேல் விழும் குப்பைகள், பூச்சிகள், மண் மற்றும் நீர் முதலியவற்றை சுத்தம் செய்யமுடியும். மேலும்,வைப்பர்களை நீக்குவதன் மூலம் காரை ஓட்டுபவர்களுக்கு வெளிப்புறப்பார்வை தெளிவாகக் கிடைக்கும்.


    இதற்கான மோட்டார்களை நீக்குவதன் மூலம் எரிபொருள் சக்தி அதிகரிக்கும். குளிர்காலத்தில் இந்த வைப்பர்களின் தகடுகள் இறுகி செயல்படாமல் இருப்பது போன்ற பிரச்சினைகளும் இந்தப் புதிய முறையில் தோன்றாது என்று மக்லரென் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


    இந்த அதிர்வெண் அலைகள் முறையே பல் மருத்துவத்திலும், கருவிலுள்ள சிசுக்களைக் கண்டறியும் முறையிலும் பயன்படுத்தப்படுகின்றது. மக்லரென் நிறுவனத் தயாரிப்பு கார்களில் இந்தப் புதிய தொழில்நுட்பம் வரும் 2015க்குப் பிறகு அறிமுகப் படுத்தப்படும். அவற்றின் விலை 1,70,000 பவுண்டுகளில் இருந்து 8,70,000 பவுண்டுகள் வரை இருக்கும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஆசை.....?

    By: ram On: 12:29
  • Share The Gag


  • கடினமாக உழைப்பதற்குரிய முயற்சியை ஒருவர் எப்போது உத்வேகப்படுத்துகிறார்? ஒரே ஒரு வார்த்தையில் இதற்கு பதிலைச் சொல்லிவிடலாம் – “ஆசை”.



    நாயை பற்றிய ஒரு கதை. ஒரு நாய் தன்னால் மிகவும் வேகமாக ஓட முடியும் என்று எப்போது பார்த்தாலும் பெருமை பேசிக் கொண்டிருந்தது. ஒரு நாள் முயலை துரத்திக் கொண்டு ஓடிய அந்த நாயால் முயலைப் பிடிக்க முடியவில்லை. மற்ற நாய்கள் அதைப்பார்த்து கேலி செய்தன. ஆனால் அந்த நாய் இவ்வாறு சொல்லியது…..



    “ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். முயல் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியது. ஆனால் நான் வேடிக்கைக்காகத்தான் அதை விரட்டிக் கொண்டு ஓடினேன்”. முயலைப் பிடிப்பது எனக்கு ஒரு முக்கியமான விஷயமாக தோன்றவில்லை.



    ஆனால் முயலைப் பொறுத்தவரையில் இது வாழ்வா! சாவா!! என்றதொரு போராட்டம். நாயை விட கடுமையாக முயற்சித்தது. வாழ்க்கை அதற்கு மிகவும் முக்கியமான விஷயம். ஒரே வார்த்தையில் மிகவும் சுருக்கமாகச் சொல்லிவிடலாம் வாழ வேண்டும் என்றதொரு “ஆசை”.



    மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவரான வில்லியம் ஜேம்ஸ் இதனை இவ்வாறு கூறுகிறார். “விளைவைப் பற்றி நீங்கள் போதுமான அக்கறை காட்டினால் அநேகமாக நிச்சயமாக நீங்கள் அதைப் பெற்று விடுவீர்கள். நல்லவராக இருக்க விரும்பினால் நல்லவராக இருப்பீர்கள். நீங்கள் அடைய வேண்டிய விஷயங்களை உண்மையாகவே அடைய ஆசைப்பட வேண்டும் என்பது மட்டும் தான் முக்கியம்”.



    “ஒரு விஷயம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் நீங்கள் செய்கின்ற முயற்சியின் உத்வேகமும் இருக்கும்”.



    நீங்கள் விரும்புவதை அடைவதற்கு ஒரு இரகசியம் இருக்கிறது.

        * நீங்கள் போதுமான அக்கறைகாட்ட வேண்டும்.
        * மெய்யாகவே விரும்ப வேண்டும்.
        * ஆசை இருக்க வேண்டும். உங்கள் ஆழ்மனதில் இந்த ஆசை கொழுந்துவிட்டு எரிய வேண்டும்.
        * உங்கள் எண்ணங்களின் மீதும் செயல்களின் மீதும் அதற்குப் பெரிய பாதிப்பு இருக்க வேண்டும்.
        * மேலும், அதை அடைந்தே தீர வேண்டும் என்பது உங்கள் நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற வேண்டும்.

    அந்த அளவுக்கு அது உங்களுக்கு உங்களது வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்க வேண்டும்.



    “அத்தனைக்கும் ஆசைப்படு – ரஜனீஷ்(ஓஷோ)”

    ஆஸ்கார் பூனை...

    By: ram On: 08:48
  • Share The Gag


  • மரணம் ஏற்படுவதை யாராவது முன் கூட்டியே கணித்துக் கூற முடியுமா, அது சாத்தியம் தானா? நிச்சயமாக முடியாது என்பதுதான் நமது பதிலாக இருக்கும். சகலமும் அறிந்த ஜோதிடர்கள் கூட இந்த விஷயத்தில் சற்று தடுமாறத்தான் செய்வர். ஆனால் ஒருவரது மரணத்தை முன் கூட்டியே கணிப்பது மட்டுமல்ல; அவர் இறக்கும் வரை அவர் அருகிலேயே இருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வருகிறது ஒரு பூனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அந்த அமானுஷ்யப் பூனையின் பெயர் ‘ஆஸ்கர்’

    அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ஒரு நகரம்தான் ரோடே ஐலண்ட். இங்கு ஸ்டீரே என்ற இடத்திலுள்ள முதிய நோயாளிகளுக்கான மருத்துவ மற்றும் உயர் சிகிச்சைப் பாதுகாப்பு மையம் மிகவும் புகழ் பெற்றது. அல்சீமர், பக்கவாதம், பர்கின்சன் போன்ற பல நோய்களால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இங்குதான் ஒரு சிறிய குட்டியாக வந்து சேர்ந்தது அமானுஷ்யப் பூனை ஆஸ்கர். முதலில் அதன் செயல்பாடுகளை யாரும் கவனிக்கவில்லை. அது ஒரு சாதாரணப் பூனை என்றே அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் ப்ரௌன் யுனிவர்சிடியைச் சார்ந்த ஆல்பர்ட் மருத்துவப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றுபவரும், அந்த ரோலண்ட் மருத்துவமனையின் மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் டேவிட் டோசா, இந்தப் பூனையேச் சற்றே அவதானித்து சில செய்திகளை வெளியிட்ட போதுதான் அனைவரது கவனமும் ஆஸ்கர் மீது திரும்பியது.

    அப்படி என்னதான் செய்தது ஆஸ்கர்? வழக்கமாக மற்ற பூனைகளைப் போலவே வலம் வரும் ஆஸ்கர், யாராவது ஒருவர் மரணிக்கப் போகிறார் என்று தனது அமானுஷ்ய ஆற்றலால் உணர்ந்து கொண்டால் உடனே அந்த நபரின் படுக்கையறைக்குச் சென்று விடும். அங்கேயே பல மணி நேரம் அமர்ந்திருக்கும். அப்போது அதன் உடல், கண்கள் என அனைத்தும் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். அந்த நபர் இறக்கும் வரை காத்திருந்து, அவர் உயிர் பிரிந்ததும் வித்தியாசமான ஒரு குரலை எழுப்பி விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்று விடும்.

    இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல. நூற்றுக்கணக்கான மரணங்களை முன் கூட்டியே கணித்திருக்கிறது ஆஸ்கர். அதனால் இங்கே தங்கியிருப்பவர்களுக்கு ’ஆஸ்கர் பூனை’ என்றால் ஒருவித அச்சம்.

    ஒருவர் இறக்கப் போகிறார் என்பதை உணர்ந்து கொள்ளும் ஆஸ்கர் முதலில் அவரது படுக்கை அருகே சென்று வித்தியாசமான ஒரு ஓசையை எழுப்பும். பின்னர் அங்கேயே அமர்ந்து விடும். அதைக் கண்ட மருத்துவர்களும், செவிலிகளும் எச்சரிக்கை உணர்வை அடைந்து மேல் சிகிச்சைகளுக்கு உடனடியாகத் தயாராகின்றனர். நோயாளின் உறவினர்களும் எச்சரிக்கை அடைந்து, முன்னேற்பாடாகச் செய்ய வேண்டிய செயல்களைச் செய்ய ஆரம்பிக்கின்றனர்.

    இங்கு பணியாற்றும் மருத்துவர்களோ அதன் செயல்பாடுகளைக் கண்டு வியப்பதுடன், இது எப்படி சாத்தியம் என்றும் புரியாமல் விழிக்கின்றனர். ஆனால் டேவிட் டோஸா இதுபற்றிக் கூறும் போது, “ ஆஸ்கருக்கு கூடுதல் புலனறிவு மிக அதிகமாக உள்ளது. அதன் சக்தியால், இறப்பிற்கு முன் ஓர் உடலில் ஏற்படும் மிக நுணுக்கமான வேதியியல் மற்றும் உயிரியல் மாற்றங்களை அதனால் எளிதாக உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால் இறக்கும் நபர் யார் என்பதை முன் கூட்டியே அதனால் கணிக்க முடிறது” என்கிறார்.

    ”சரி, ஆனால் இறக்கும் நபர் அருகே சென்று ஏன் ஆஸ்கர் அமர வேண்டும். எதற்கு அந்த இறப்பை உற்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்?” என்ற கேள்விக்கு விடையளிக்க அவரால் முடியவில்லை.

    பிடிவாதம்.....?

    By: ram On: 08:37
  • Share The Gag


  • எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், அனைத்து அதிகாரங்களையும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வைத்திருந்தாலும் இறுதியில் அவர்களது அழிவு அவர்களது ‘பிடிவாத’ குணத்தால்தான் நிகழ்கிறது. காலம், சூழ்நிலை, தன்நிலை, பிறர்நிலை, அறிவு சார்ந்த ஆய்வு, மாற்றத்தைப் புரிந்துகொள்ளல், புரிந்ததை ஏற்றுக் கொள்ளல் போன்றவற்றில் கவனம் செலுத்தாதவர்கள் தோல்வியடைகிறார்கள். உலகச் சர்வாதிகாரிகள் அனைவரும் இந்தப் பட்டியலில் இடம் பிடிப்பவர்களாகவே இருப்பார்கள். ஹிட்லர், முசோலினி, இடி அமீன், சதாம் உசேன் போன்றவர்களை உதாரணங்களாகக் கூறலாம்.


    ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் வென்ற ஹிட்லர், பிரிட்டனை ‘கோழிக்குஞ்சு’ என்று கூறிவிட்டு சோவியத் யூனியனை (ரஷ்யா) பிடித்தால் தான் என் ஆசை தீறும் என்ற ‘பிடிவாத’ குணத்தால் ரஷ்யாவின் மீது போர் தொடுத்தான். கால நிலைகளின் மாறுதல் அறியாமையாலும், அப்போதைய தன் படையின் பலவீனத்தாலும் ‘அவனது சவம்’ அங்கேயே புதைக்கப்பட்டது. பல நாடுகளின் தலைவனாக ஆட்சி செய்த ஹிட்லர் தனது ‘பிடிவாதத்தால்’ இறுதியில் தன்னையே இழந்தார்.


    “தான் எடுத்த காரியத்தில் விடாமுயற்சியுடன், சிறதும் விட்டுக் கொடுக்காமல், எந்தத் துன்பம் வந்தாலும் வெற்றி பெறும் நோக்கத்துடன் போராடுவது பிடிவாதம் ஆகாது”.


    “அதே சமயத்தில் எது எப்படி இருந்தாலும், எனது நிலையில் இருந்து பின்வாங்க மாட்டேன். அந்த நிலைப்பாடு தவறு என்று தெரிந்தாலும் மாற மாட்டேன் என்று இருப்பதுதான் பிடிவாதம்”.



    நாம் பிறர் போற்றத்தக்க அல்லது மிக உயர்ந்த பதவியில் இருந்தாலும் இப்படிப்பட்ட குணம் உடையவர்களைப் பற்றி நம்மூர் மக்கள் கூறுவது:


        * காட்டான். ஒரு விஷயமும் தெரியாது.

        * தான் பிடித்த பிடியிலேயே இருப்பான், புரிய வைக்கவும் முடியாது.

        * பணம் மட்டும் இருக்கிறது, அறிவு கிடையாது.

        * தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்னு நிப்பான்.



    இலக்கியம் கூறுவது: 


    மகாபாரதத்தில், துரியோதனனிடம் கிருஷ்ணர் கடைசியாகக் கேட்டது ஐந்து கிராமங்களையாவது பஞ்ச பாண்டவர்களுக்குத் தர வேண்டும் என்பதைத்தான். ஆனால், அதைக்கூடக் கொடுக்க முடியாது என்ற மூர்க்கத்தனமான பிடிவாதத்தால், துரியோதனன் அனைத்தையும் இழக்க வேண்டியதாயிற்று.

    அறிவாளி சிறுவன்...!

    By: ram On: 08:24
  • Share The Gag



  • அந்த சலூன் கடையை நோக்கி அந்த சிறுவன் வருவதை பார்த்த அந்த கடைக்காரர், தன்னிடம் முடி திருத்திக் கொள்ள வந்தவரிடம் "சார் இப்ப இங்க வர்ற பையன சரியான முட்டாள்னு நீருபிக்கிறேன் பாருங்கன்னு சொல்லிட்டு,


    ஒரு கையில் நூறு ரூபாயும் இன்னோரு கையில் இரண்டு ஐந்து ரூபாய் நானயங்களயும் கான்பித்து எது வேனுமோ எடுத்துக்கோ என்றார்.


    சிறுவன் இரண்டு ஐந்து ரூபாய்யை மட்டும் எடுத்து சென்றுவிட்டான்.


    கடைக்காரர் தன் கஸ்டமரிடம் பெருமையாக சொன்னார் டெய்லி இப்படி தான் சார் ஏமாந்துற்றான்.
    முடி வெட்டி விட்டு வெளியே வந்தவர் அந்த சிறுவன் ஐஸ்கிரீம் கடையிலிருந்து வெளியே வருவதை பார்த்தார்.


    அவனை கூப்பிட்டு ஏம்ப்பா இந்த வயசுல கூட உனக்கு நூறுக்கும், ஐஞ்சு ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியாதா என கேட்டார்.


    சிறுவன் ஐஸ் கிரீமை நக்கிக்கொன்டே சொன்னான் அந்த நூறு ரூபாய எடுத்திட்டா அன்னையோட இந்த விளையாட்டு முடிஞ்சிறும் அங்கிள்!!


    கடைகாரனை பாவமாய் பார்த்து சிரித்துவிட்டு போனார் கஸ்டமர்,

    மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

    By: ram On: 08:07
  • Share The Gag



  • பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.


    1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.

    2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.

    3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.

    4. விரும்பியதைப் பெற இயலாமை.

    5. ஒருவரையொருவர் நம்பாமை.

    6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.

    7. உலலாசப் பயணம் போக இயலாமை.

    8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.

    9. விருந்தினர் குறைவு.

    10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.

    11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.

    12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.

    13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.

    14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

    கோபத்தை கையாள எளிய வழிகள்..

    By: ram On: 07:56
  • Share The Gag



  •  1. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.

    2. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.

    3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்

    4. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.

    5. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.

    6. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.

    7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.

    8. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.

    9. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.

    10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.

    11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.

    12. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.

    13. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.

    புகழ்ச்சி....?

    By: ram On: 07:32
  • Share The Gag


  • புகழ்ச்சி இது ஒரு அதிசய மருந்து. இதனை உருவாக்க எந்த ஒரு கருவியும் தேவையில்லை. நாமே நமது எண்ணத்தால் இதனை உருவாக்கிட முடியும். இந்த மருந்தை மற்றவருக்குக் கொடுப்பதனால் “புகழ்பவரும் மகிழ்ச்சி அடைகிறார்! புகழப்பட்டவரும் மகிழ்ச்சி அடைகிறார்!!”.

    இந்த அதிசய மருந்திற்கு வயது வரம்புகள் எதுவும் கிடையாது. நமது ஆழ்மனதில் தோன்றும் எண்ண அலைகளே இதற்குக் காரணம்.

     பயன்கள்:

     உங்கள் குழந்தைகளிடம் தேர்விற்கு முன்னரோ அல்லது தினசரியிலோ சபாஷ்! நீ நன்றாகப் படிக்கிறாய் என்று கூறிப்பாருங்கள். இந்த மருந்தைக் கொடுத்தவுடன் குழந்தை முன்பு படித்ததை விட மேலும் ஆர்வமாக படிக்கத் தொடங்குகிறது. தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறது.

    வியாபாரத்தில் உங்கள் வர்த்தக பங்குதாரர்கள் புகழ்ச்சியின் காரணமாக ஒத்துழைத்து உங்கள் வெற்றிக்கும் செல்வச் சேமிப்பிற்கும் உறுதுணை ஆகிறார்கள். புகழ்ச்சி அவர்களுக்கு கிடைக்கும்  போது அவர்களுடைய ஒத்துழைப்பு உங்களுக்கு மிகையாகக் கிடைக்கிறது.

    இந்த மருந்தை நீங்கள் கொடுக்கும் போது, உங்களுக்கும் அது போதுமான அளவில் கிடைத்து, உங்களை மகிழ்ச்சியாகவும், புகழ்மிக்கவராகவும் மற்றும் செல்வந்தராகவும் ஆக்கிவிடுகிறது.


    அதிசய மருந்து பற்றி மூத்த அறிஞர்கள் கூறுவது:

    சொல்வேந்தர் சுகி சிவம்: பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்! பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்!! பிறர் உங்களைப் பாராட்டாத பொழுதும் நீங்கள் மற்றவர்களைப் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்!!!

    அமெரிக்காவின் மிகப்பெரிய தத்துவ ஞானியும், மனோ தத்துவ நிபுணரும் ஆன வில்லியம் ஜேம்ஸ் கூறுகையில், “மனித இயல்பின் ஆழமான தத்துவம் என்னவென்றால், பாராட்டைப் பெறுவதற்காக ஏங்குவது தான்”.

    நீங்கள் வெளிச்சத்தை மற்றவர்கள் மீது பாய்ச்சும் போது, அதன் பிரதிபலிப்பு உங்கள் மீது அதிகமாக வரத் தொடங்குகிறது. உங்கள் மீது நீங்கள் வெளிச்சம் பாய்ச்சுவதைவிட இது பிரகாசமானது. இறுதியாக, மற்றவர்களை நீங்கள் புகழ்வது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான மனோபாவத்தை உங்களிடம் ஏற்படுத்துகிறது.

    மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

    By: ram On: 07:22
  • Share The Gag



  • 1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
    2. காலையில் ஆறு மணிக்கு முன் எழுந்திருத்தல்.
    3. எப்போதும் சிரித்த முகம்.
    4. நேரம் பாராது உபசரித்தல்.
    5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
    6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
    7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
    8. அதிகாரம் பணணக் கூடாது.
    9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
    10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
    11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
    12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
    13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
    14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
    15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
    16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
    17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
    18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
    19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
    20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
    21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
    22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
    23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
    24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
    25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
    26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
    27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
    28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
    29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
    30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
    31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
    32. அதிகம் சினிமா பார்க்கக் கூடாது.
    33. உடற்பயிற்சி செய்து உடம்பை சிலிம் ஆகவைத்துக் கொள்ள வேண்டும்.

    பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுங்கள்!

    By: ram On: 07:15
  • Share The Gag



  • தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.


    படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது.


    ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும்.


    'நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா? ' என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். 'மக்கு, மண்டு, மண்டூகம் - போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.


    பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

    பயன் தரும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்:-

    By: ram On: 07:05
  • Share The Gag



  • * காய்ச்சி வேப்ப எண்ணெய் தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.

    * வில்வபழம் சாப்பிட மூளை தொடர்பான நோய்கள் தீரும்.

    * வெண்ணீரில் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வர ஞாபகசக்தி பெருகும்.

    * யானைக்கால் நோய் குணமாக வல்லாரை கீரை தொடர்ந்து சாப்பிடலாம்.

    * நார்த்தங்காய் ஊறுகாய் மலச்சிக்கலைப் போக்கி நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.

    * பாதாம் பருப்பு வறுத்து அடிக்கடி உண்டு வர கண் பார்வை தெளிவு பெறும்.

    * வேப்பம் பூவுடன் மிளகு, சீரகம் சேர்த்து உண்டுவர பித்தப்பை நோய் குணமாகும்.

    * சப்போட்டா பழம் தினமும் பகல் பொழுதில் உண்டுவர இரவில் நன்றாக தூக்கம் வரும்.

    * சுக்கை அரைத்து நெற்றியில் பற்று வைக்க தலைவலி குணமாகும்.

    * காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து சுட வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்; முடி உதிர்வது நிற்கும்.

    * வாழைத்தண்டுச் சாறு, பூசணிச் சாறு, அருகம்புல் சாறு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.

    * எருக்கஞ் இலையின் பின்புறம் விளக்கெண்ணெய் தடவி தணலில் காட்டி கட்டிகள் மீது வைத்துக் கட்டினால் கட்டி பழுத்து உடையும்.

    * தொடர் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட குணமாகும்.

    * இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயத்தின் மீது போட்டு வர வெட்டுக்காயம் குணமாகும்.

    இதுதான் உண்மையான நட்பு..!

    By: ram On: 06:45
  • Share The Gag



  • கார்கில் போரின் போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்தனர்.எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து கிடந்தான்.

    நான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வந்து விடுகிறேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் கமேண்டர் என்றான்.மறைந்து இருந்து தாக்குவது தான் சரியான வழி ,நீ அங்கு போவதால் உன் உயிர்க்கு தான் ஆபத்து என்றார் கமேண்டர்.

    நீ போவது என்றால் போ, ஆனால் நீ போவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை என்று கமெண்டர் சொன்னார்.அதையும் மீறி தன் நண்பனை காப்பாற்ற ஓடினான், அவனை தோளில் தூக்கி கொண்டு வரும்போது எதிரிகள் சுட்டனர். இவனுக்கும் அடிப்பட்டது, அதையும் மீறி அவனை தூக்கி கொண்டு வந்தான்.

    கமேண்டர் அவனை பரிசோதித்து பார்த்தார் அவன் நண்பன் இறந்து போய் இருந்தான்.நான் அப்போழுதே சொன்னேன் நீ அவனை காப்பாற்றப்போவதால் எந்த உபயோகமும் இல்லை ,இப்போது பார் நீயும் அடிப்பட்டு கிடக்கிறாய் என்றார் கமேண்டர்.

    நான் போனது தான் சார் சரி என்றான்.என்ன சொல்கிறாய் உன் நண்பன் இறந்து கிடந்தான் நீ சொல்வது எப்படி சரியாகும் என்று கேட்டார் கமேண்டர்.

    நான் அங்கு போகும்போது என் நண்பன் உயிருடன் தான் சார் இருந்தான்.”என்னை காப்பாற்ற நீ வருவாய் என்று எனக்கு தெரியும் நண்பா” என்று சொல்லிவிட்டு தான் சார் இறந்தான் .அந்த ஒரு வார்த்தை எனக்கு போதும் சார் இந்த காயம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றான்.

    இதுதான் உண்மையான நட்பு.

    வித்தியாசமான பிறந்தநாள் விழா!

    By: ram On: 00:39
  • Share The Gag



  • எங்கள் பேத்தியின் பிறந்தநாள் விழாவை, வித்தியாசமாக கொண்டாட விரும்பினோம். வழக்கமாக, அனாதை ஆசிரமங்களுக்கு உணவு அளிப்போம். இம்முறை, அவர்களை ஒரு நாள் சுற்றுலாவாக அழைத்து செல்ல எண்ணி, சென்னை அருகே உள்ள ஒரு முதியோர் இல்லத்தை அணுகினோம். அவர்களும் அனுப்ப சம்மதித்தனர். இல்லத்தில் இருப்போர், 51 பேர் அதில்: 40 பேர் வருவர் என்று கூறினர். தனியார் பேருந்தை ஏற்பாடு செய்து, பேத்தியின் பிறந்த நாளன்று, அவர்கள் இல்லத்தை அடைந்து, பிறந்த நாள் கேக் வெட்டி, எல்லாருக்கும் வழங்கி, சுற்றுலா கிளம்பினோம்.

    சுற்றுலா வராமல், இல்லத்தில் இருந்தோருக்கு, வெளியில் இருந்து அவர்கள் விரும்பியதை சாப்பிட, ஏற்பாடு செய்து விட்டு வந்தோம். மொத்தத்தில், அவர்கள் இல்ல கிச்சனுக்கு, அன்று முழுவதும் விடுமுறை.

    காலை உணவு, விரும்பியதை விரும்பியவாறு சாப்பிட வைத்து, சென்னையில் உள்ள அஷ்டலட்சுமி கோவிலுக்கு அழைத்து சென்றோம். பிறகு முட்டுக்காடு போட்டிங். விருப்பபட்டவர்கள், 16 பேர் மட்டும் போட்டிங் சென்றனர். பின், மகாபலிபுரத்தில் மதிய சாப்பாடு; சைவம், அசைவம் என, விரும்பியதை சாப்பிட வைத்தோம். பின், 6:00 மணிக்கு கடற்கரை, 7:00 மணிக்கு திருவிடந்தை நித்ய பெருமாள் கோவில் தரிசனம்.

    இரவு டின்னரை முடித்து, இல்லம் வந்து, நினைவு பரிசாக அனைவருக்கும் கோ.ஆப்டெக்ஸ் பெட்ஷீட்டை வழங்கினோம். அவர்கள் அடைந்த மகிழ்ச்சி அளவிடற்கரியது. அதை விட, நாங்கள் அடைந்த மகிழ்ச்சி எல்லையில்லாதது. செலவு கொஞ்சம் அதிகம் என்றாலும், வசதி படைத்தோர், ஆதரவு அற்ற முதியோர்களை, அவர்கள் பார்க்க விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் சென்று அசத்தலாமே!

    கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

    By: ram On: 00:30
  • Share The Gag


  • 1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
    2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
    3. கோபப்படக்கூடாது.
    4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
    5. பலர் முன் திட்டக்கூடாது.
    6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
    7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
    8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
    9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
    10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
    11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
    12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
    13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
    14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
    15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
    16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
    17. ஒளிவு மறைவு கூடாது.
    18. மனைவியை நம்ப வேண்டும்.
    19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
    20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
    21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
    22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
    23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
    24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
    25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
    26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.
    27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
    28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
    29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
    30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
    31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
    32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
    33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
    34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
    35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
    36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
    37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

    நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!

    By: ram On: 00:23
  • Share The Gag


  • முதன் முதலாகத் தேர்தலைச் சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிராத்தனை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் அபிரஹாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், “உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்” என்றார் பாதிரியார். எல்லோரும் கையைத் தூக்க, அபிரஹாம் லிங்கன் மட்டும்  பேசாமல் நின்றார். “அபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், “நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்” என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம். “நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.



    1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, “தோல்விகளின் செல்லக் குழந்தை” என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார். இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேற, லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால்தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்தும், அவசரமாக தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல் வேட்பாளராக களம் இறங்கி, படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் பெரும் கடனாளியாக மாறியிருந்தார்.



    சோர்ந்து போயிருந்த லிங்களை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாரா புஷ். ‘ஆட்சிப பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்’. “நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!” என்றார் சாரா புஷ். பாதிரியார் சொன்ன அதே வார்த்தைகள்!



    இப்போது லிங்கனுக்கு தன் இலக்கு புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு, 1834ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப்பினர், உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத்தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்!.



    இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்! 1835ல் அவரின் காதலி ‘ஆனி’ விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் மேரியுடன் திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகள் சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு எதிர்கொண்டதால்தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது.



    அமெரிக்க ஜனாதிபதி ஆனதும், அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும் அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறியினரால் சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன்.



    மணவாழ்க்கை பற்றி லிங்கன் கூறியது - மணவாழ்க்கை லிங்கனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது “மண வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல; போர்க்களம்” என்று குறிப்பிட்டார்.



    “நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்” என்பது அபிரஹாம் லிங்கனுக்கு மட்டுமல்ல… நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற ஒவ்வொருவருக்கும் அது வெற்றி திருமந்திரம்.

    நம்பிக்கை...?

    By: ram On: 00:17
  • Share The Gag


  • உங்களுக்கு  நான் கூற விரும்புவது பல முறை நாம்  எந்த  விஷயதிட்காகவது தாகம் அடைகிறோம் ஏங்குகிறோம். ஆனால் நாம் நம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பதில்லை.தாகமும் ஏக்கமும் நம்பிக்கை இல்லாமல் இருக்கும் பொது நிராசை அடைகின்றது.நிராசையுடன் ஒருவனது முதல் அடி எடுத்து வைக்கும் போது நிராசையுடனே கடைசி அடியும் நிறைவு பெறும். கடைசி அடி வெற்றியிலும் அர்த்தமுள்ளதாகவும் அமைய வேண்டுமெனில் முதல் அடி மிகுந்த நம்பிக்கையுடன் எழ வேண்டும்.

    வாழ்க்கை முழுவதற்குமே நம்பிக்கையுடன் கூடிய திருஷ்டிக் கோணம் தேவை என்று உங்களுக்கு வலியுறுத்துகின்றேன். உங்கள் சித்தம் நம்பிக்கையால் நிறைந்து ஒரு வேலையைச் செய்கிறதா அல்லது நிராசையுடனா என்பதைச் சார்ந்தே அனைத்தும் இருக்கின்றன.நம்பிக்கையை இழந்து விட்டால், உங்கள் கைகளினாலேயே நீங்கள் அமர்ந்து இருக்கும் கிளையை வெட்டுகிறீர்கள்.

    சாதனை விசயத்தில் நம்பிக்கை நிறைந்து இருப்பது மிகவும் முக்கியம். நம்பிக்கையினால் நிறைந்து இருப்பது என்பதன் பொருள், உலகில் எந்த மனிதனாலாவது   சத்திய நிலையை அடைந்து இருந்தாலோ அல்லது எப்பொழுதாவது ஒரு மனிதன் எல்லையற்ற ஆனந்தத்தையும் அமைதியையும்  அடைந்து இருந்தான் என்றால் நாம் அடைய முடியாததற்கு எந்த காரணமும் இல்லை என்றே நாம்  எண்ண வேண்டும்.

    இருள் சூழ்ந்த இலட்சணக்கான மனிதர்களை பார்க்காதீர்கள். எந்த வித நம்பிக்கையும் எந்த  ஒளிக்கிரகணமோ  இல்லாத பிரகாசம் அளிக்காத கோடிக்கணக்கான மனிதர்களை பார்க்காதீர்கள் .
    சத்யப்ப்ராப்தி அடைந்த சில மனிதர்களைச் சரித்திரத்தில் நோக்குங்கள். மலர்ச்சி அடைந்து பரமாத்மா வரை சென்ற சொற்ப மனிதர்களை நோக்குங்கள். அந்த விதைகளுக்கு சாத்தியமானது ஒவ்வொரு விதைக்கும் சாத்தியமே. ஒரு மனிதனுக்கு சாத்தியமானது மற்ற மனிதனுக்கும் சாத்தியமே.
    விதை உருவில் உங்களிடம் உள்ள சக்தி புத்தர் மகாவீரர் ஜேசு இவர்களுடைய சக்தியின் அளவேதான் என்று உங்களுக்கு கூற விரும்புகிறேன்.

    இறைவனின் உலகில் குறைந்த சாத்தியக் கூறு சிலருக்கு அதிக வல்லமை சிலருக்கு என்ற பாகுபாடு கிடையாது. ஆனால் இயற்கை நடப்புக்கள் அனைவருக்கும் சமமானதாக இல்லை.ஏனெனில் நம்மில்  அனேகமாக அனைவரும் தமது சாத்தியங்களை இயற்கை நடப்பாகப் பரிணமிக்கும் பிரயாசையை ஒரு பொழுதும் செய்வதில்லை.

    வாழ் நாள் முழுவதும் நிராசையில் சென்று பார்த்தாயிற்று  இப்பொழுது நம்பிக்கையில் சென்று பாருங்கள். நீங்கள் முழு நம்பிக்கை வைக்கும் போது உங்களது ஒவ்வொரு மூச்சும் நம்பிக்கையினால் நிறைகிறது. உங்கள் எண்ணங்களில் நம்பிக்கை ஒளிர்கிறது. உங்களது தனித்தன்மை முழுவதும் நம்பிக்கையுடன் நிறைந்து விடும்பொழுது நீங்கள் ஒன்றைச் செய்ய முடியும் என்ற துவக்கம் ஆரம்பம் ஆகி விடுகின்றது.

    இன்று இரவே உறங்கப் போகும் போது மிகுந்த நம்பிக்கையுடன் உறங்குங்கள். நாளைக் காலையில் எதுவும் நேரும், நேர முடியும், எதையாவது செய்து விட முடியும் என்ற பூரண நம்பிக்கையுடன் உறங்குங்கள்.

    ஓஷோவின் படிப்படியாக தியானம் என்ற நூலில் இருந்து.