Sunday, 31 August 2014

ஷங்கருக்கு நோ சொல்லி சூர்யாவுக்கு ஓகே சொன்ன சத்யராஜ்! காரணம் என்ன?

By: ram On: 23:05
  • Share The Gag

  • தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி கொண்டவர் நடிகர் சத்யராஜ்.

    வில்லனாக அறிமுகமாகி அசத்தியவர் ஹுரோவாகவும் பட்டைய கிளப்பினார்.

    இவர் தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்பு எஸ்.ஜே சூர்யாவின் இசை படத்தில் மீண்டும் வில்லனாக நடித்துள்ளார்.

    இது குறித்து சத்யராஜ் கூறுகையில், நான் 75 படங்களில் வில்லனாகவும், 125 படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளேன்

    கடந்த 1994-ம் வருடம் வெளிவந்த ‘அமைதிப்படை’ படத்தில், கடைசியாக வில்லனாக நடித்ததற்கு பிறகு சில வருடங்களுக்கு முன்பு ‘சிவாஜி’, ’எந்திரன்’ படத்தில் வில்லனாக நடிப்பதற்கு அழைப்பு வந்தது.

    அந்த படத்திலும் நடிக்க மறுத்து விட்டேன். வெங்கட்பிரபு டைரக்ஷனில் உருவாகி வரும் ‘மாஸ்’ படத்திலும், சாஹித்கபூர் கதாநாயகனாக நடிக்க, பிரபுதேவா இயக்கும் இந்தி படத்திலும் வில்லனாக நடிக்கும்படி கேட்டார்கள். மறுத்து விட்டேன்.

    20 வருடங்களுக்குப்பின், எஸ்.ஜே.சூர்யா இயக்கும் ‘இசை’ படத்தில் வில்லனாக நடிக்கிறேன். ‘சிவாஜி’ படத்துக்காக எனக்கு பேசப்பட்ட சம்பளத்தில், பத்தில் ஒரு பங்கு சம்பளம் வாங்கிக்கொண்டு இந்த படத்தில் நடித்து இருக்கிறேன். சம்பளமே கொடுக்காவிட்டால்கூட, ‘இசை’ படத்தில் நடித்து இருப்பேன். அப்படி ஒரு கதையம்சமும், கதாபாத்திரமும் உள்ள படம் அது.

    உலகிலேயே எந்த நடிகரும் நடித்திராத ஒரு வில்லன் கதாபாத்திரத்தில், நான் நடித்து இருக்கிறேன் என்றும் அதற்காக பெருமைப்படுகிறேன் எனவும் கூறியுள்ளார்.

    ஜோதிகாவுடன் சூர்யாவும் இணைகிறார் - எக்ஸ்குளூசிவ் தகவல்

    By: ram On: 22:02
  • Share The Gag

  • பிரபல நடிகை ஜோதிகா "ஹெவ் ஓல்டு ஆர் யூ" என்ற மலையாளே ரீமேக் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீண்ட்ரி ஆகிறார் என்று எல்லாருக்கும் தெரியும்.

    தற்போது அனைத்து வேலைகளும் முடிந்து மிக விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர் . இந்நிலையில் ஒரு மிக முக்கியமான தகவல் கசிந்து உள்ளது , மலையாளே பதிப்பை அப்படியே எடுக்காமல் பல மாற்றங்கள் செய்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தை உருவாக்கி உள்ளனராம் படக்குழு.

    இதில் எந்த நடிகரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த போது ஜோதிகா சூர்யாவை நடிக்க வைக்கலாம் என்று பரிந்துரை செய்து உள்ளார்.

    இந்த கதாபாத்திரம் முக்கியமானது என்றாலும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தலை காட்டுவார். ஏற்கனவே சூர்யா சில படங்களில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆடாதொடை செடியின் மருத்துவ குணங்கள்

    By: ram On: 21:48
  • Share The Gag

  •  நீண்ட முழுமையான ஈட்டிவடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. சிற்றூர்களில் வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

    சளி நீக்கி இருமல் தணிப்பானாகவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், இசிவு நோய் நீக்கியாகவும் செயற்படும்.

    1. இலைச் சாறும் தேனும் சமஅளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை கொடுக்க நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை வருதல் ஆகியவை குணமாகும்.

    குழந்தைகளுக்கு 5 + 5 துளி
    சிறுவர் 10 + 10 துளி
    பெரியவர் 15 + 15 துளி

    2. இலைச் சாறு 2 தேக்கரண்டி எருமைப்பாலில் காலை, மாலை கொடுத்து வரச் சீதபேதி, இரத்தப்பேதி குணமாகும்.

    3. 10 இலைகளை அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சித் தேன் கலந்து காலை, மாலை 40 நாள்கள் பருகி வர என்புருக்கிக் காசம், இரத்தக் காசம், சளிச்சுரம், சீதளவலி, விலாவலி ஆகியவைத் தீரும்.

    4. ஆடாதொடை வேருடன் கண்டங்கத்திரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் 1 கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சுவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிச்சுரம், என்புருக்கி, குடைச்சல் வலி ஆகியவை குணப்படும்.

    5. ஆடாதொடை இலையையும், சங்கன் இலையையும் வகைக்கு ஒரு பிடி அரை லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிக் காலை, மாலை பருகி வரக் குட்டம், கரப்பான், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றவலி தீரும்.

    6. உலர்ந்த ஆடாதொடை இலைத் தூளை ஊமத்தை இலையில் சுருட்டிப் புகைப்பிடிக்க மூச்சுத் திணறல் உடனே தீரும்.

    7. 700 கிராம் தூய இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கியதில் அக்கரகாரம், சித்தரத்தை வகைக்கு 10 கிராம், ஏலம் 4 ஆகியவற்றைத் தூள் செய்து போட்டுப் பொன் வறுவலாய் வறுத்து 2 லிட்டர் நீர்விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டியதில் 1 கிலோ சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி(ஆடாதொடை மணப்பாகு) வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வர நீர்க்கோவை தீரும். ஒரு நாளைக்கு 3 வேளையாக நீண்ட நாள்கள் கொடுத்து வரக் காசம், என்புருக்கி, மார்புச்சளி, கப இருமல், புளூரசி, நீடித்த ஆஸ்துமா, நிமோனியா ஆகியவை குணமாகும். குரல் இனிமை உண்டாகும்.

    8. ஆடாதொடை, கோரைக்கிழங்கு, பற்பாடகம், விஷ்ணுகாந்தி, துளசி, பேய்ப்புடல், கஞ்சாங்கோரை, சீந்தில் வகைக்கு ஒரு பிடி 1 லிட்டர் நீரில் போட்டு அரை விட்டராகக் காய்ச்சி வேளைக்கு 50 மி.லி. அளவாகப் பருகி வர (அஷ்ட மூலக் கஷாயம்) எவ்விதச் சுரமும் நீங்கும்.

    9. வேர்க்கஷாயத்தைக் கடைசி மாதத்தில் காலை, மாலை கொடுத்து வரச் சுகப்பிரசவம் ஆகும்.

    ஹாலிவுட் பாடகியை மயங்க செய்த ஏ.ஆர். ரஹ்மான்

    By: ram On: 21:19
  • Share The Gag

  • ஏ.ஆர். ரகுமான் கோலிவுட், பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட்டிற்கு இசையமைத்து வருவது நமக்கு தெரியும். அவரது இசையில் மயங்கியுள்ளாராம் ஹாலிவுட் மற்றும் பாப் பாடகி டைலர் ஸ்விப்ட்.

    இவர் 4 முறை கிராமி விருது பெற்றதுடன் இளசுகளை கவரும் குரல் வளத்தால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கிறார்.

    இவர் ரஹ்மான் இசையை பற்றி கூறுகையில், இந்திய இசை எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மயங்கி இருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றார்.

    இதற்கு பதில் கூறும் வகையில் ஏ.ஆர். ரஹ்மான், கண்டிப்பாக நீங்கள் இந்தியா வருவதை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

    உடல் எடை குறைய -கொழுப்பை எரிக்கும் கொடம்புளி (படம் & சாப்பிடும் முறை )

    By: ram On: 18:32
  • Share The Gag

  • பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா ?....குறையும் .ஆனால் பத்து நாளில் குறையாது ஆனால் நாற்பது நாளில் குறையும் -கீழ் வரும் விசயங்களை நீங்கள் கடை பிடித்தால் ???
    1.கொடம்புளி சூப்- காலை வெறும் வயிற்றில் சாப்பிடணும்.

    கொடம்புளி சூப் எப்படி செய்யணும்?

    கொடம்புளி ஐம்பது கிராம் - முன்னூறு மிலி வெந்நீரில் இரவிலேயே ஊற வைத்து விடணும்.
    கொள்ளு (கருப்பு காணம்)  இருபது கிராம் + நூறு கிராம் வெந்நீரில் ஊற வைத்து விடணும் .
    காலையில் இந்த நானூறு மிலி-யையும் கொதிக்க வைத்து நூறு மிலியாக வற்ற வைத்து எடுத்து வைக்கணும்.
    இந்த நூறு மிலியாக வற்றவைத்து -வடிகட்டிய சூப்பில் சிறிது பொடி செய்து வைத்துள்ள வாய்விடங்கம்,சுக்கு,மரமஞ்சள் -இவைகளையும் தேன் ஐந்து மிலியும் கலந்து வெறும் வயிற்றில் பருகவும்.

    2 .குளிர் பானங்களை குடிக்கவே குடிக்கவே கூடாது
    3 .உணவிற்கும் படுக்கைக்கும் குறைந்தது 3  மணி நேரமாவது இடைவேளை விடணும்.பகலில் தூங்கவே கூடாது .
    4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்தணும்.
    5 .வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டு நோன்பு இருக்கணும்.
    6 .வாழப்பழத்தை சாப்பிடவே கூடாது
    8 சைவ உணவிற்கு முடிந்தால் மாறிடணும்.அசைவம் பொரிக்காத மீன் வேண்டுமானால்    சாபிடலாம்.
    9 .எண்ணையில் பொறித்த உணவுகளை ,சைனீஸ் உணவுகளையும் நிறுத்தணும்.
    10 . டிவி பார்த்து கிட்டே சாப்பிட கூடாது.சாப்பிடும் போது பேச கூடாது.

    மந்திரத்தில் மாங்காய் காய்க்காது .உடல் பயிற்சிகள் -யோகாசனங்கள் செய்யணும்.


    ஷங்கரின் ஐ படத்தில் வினோதமான பாடல் - கசிந்த உண்மை

    By: ram On: 17:29
  • Share The Gag

  • இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைந்துள்ளது ஐ படம். ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டத்துக்கு பஞ்சம் இருக்காது என்பது எல்லாருக்கும் தெரியும்.

    அதே போல் வினோதமான விஷயங்களும் யோசிக்க முடியாத விஷயங்களும் தன்னால் செய்ய முடியும் என்பதற்கு உதாரணம் தான் எந்திரன் படத்தில் வரும் கொசு காட்சி.

    அது போல் ‘ஐ’ படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் கபிலன். அதில் ஒரு பாடலை விமானத்தில் பயணித்தவாறும், வாசஸ்தலமான கொடைக்கானல் உச்சியில் அமைந்த ஒரு தோட்டத்திலும், இயக்குனர் ஷங்கருடன் அமர்ந்து எழுதியிருக்கிறார் கபிலன்
    .

    அது ஒரு வித்தியாசமான, சுகமான அனுவபம் என்று கூறியிருக்கிறார் கபிலன். இவர் எழுதிய அந்த 3 பாடல்களில் ஒரு பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இசை அமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார்.

    பிரபுதேவா வரிசையில் ஒரு ஹீரோ

    By: ram On: 08:36
  • Share The Gag

  • பிரபுதேவா, லாரன்ஸ் வரிசையில் மீண்டும் ஒரு நடன இயக்குனர் ஹீரோவகிறார்.

    ஃபிலிம்பாக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் ’ஒரு குப்பைக்கதை’.இப்படத்தின் மூலம் இயக்குனர் அஸ்லம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.இவர் ஸ்ரீகாந்த் நடித்த 'பாகன்' படத்தை இயக்கியவர்.

    காளி ரங்கசாமி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்குநர் எழிலிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

    நடன இயக்குநர் தினேஷ் முதல் முறையாக ஹீரோவாக நடிக்கிறார். தேசிய விருது பெற்ற தினேஷ் இதுவரை 130 படங்களுக்கு மேல் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

    "என்னப்பா படத்தை குப்பை படம்னு சொல்கிறாய் என நிறைய பேர் கேட்டார்கள். அவர்கள் அப்படி கேட்கும்போதே அதில் ஒரு அக்கறை தெரிந்தது. இப்படி கேட்டுக் கேட்டே படம்

    பொடுகு என்றால் என்ன ?

    By: ram On: 08:11
  • Share The Gag
  • தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.

    பொடுகு ஏன் வருகிறது?

    1. வரட்சியான சருமத்தினால் வரும்

    2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும்.

    3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது

    4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வரும்

    5. “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்.

    6. எக்ஸீமா(Eczema), சொறாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நொய்களாளும் பொடுகு வரலாம்

    7. அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் வரலாம். க்ண்ட கண்ட செல்களை தலையில் தேய்ப்பதனாலும் இது வரலாம்.

    8. மனஅழுத்தம் கவலையாலும் இது வரலாம்

     பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

    1. ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது

    2. தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்ததிருக்க வேண்டும்

    3. கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்

     பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?


    1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.

    2. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.“பிடிரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்கவும்.

    3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்

    4. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.

    5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்

    6. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.

    7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது

    8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

    9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்

    10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்

    11. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்

    12. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

    13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.

    14. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.

    15. தேங்காய் எண்ணையுடன் வேப்பை என்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.

    16. நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.

    17. நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.

    18. தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

    19. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

    20.ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும்.

    நட்பின் சிறப்பு என்பது யாதெனில்....

    By: ram On: 08:10
  • Share The Gag
  • உயிர் காப்பான் தோழன்..என்பர்.

    அது எவ்வளவு தூரம் உண்மை என நான் அறியேன்..ஏனெனில் நான் யார் உயிரையும் காப்பாற்றியதில்லை..என்னையும் யாரும் காப்பாற்றியதில்லை.

    ஆனால்..நமக்கு வாழ்வில்..ஏற்படும் நண்பர்கள்தான் எவ்வளவு?

    பள்ளி பருவத்தில்...உண்டாகும் இளம் நண்பர்கள்..மன விகாரம் இல்லா வயது.கிடைத்த அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ளும் வயது.ஒன்றாக சேர்ந்து விளையாடிய வயது.மாமரத்தில் இருந்து விழும் அல்லது திருடும் மாங்காயை..உப்பு ,காரம் தோய்த்து சாப்பிட்ட நட்பு,கமர்கட்டை காக்காய் கடி கடித்து பகிர்ந்துக் கொண்ட வயது.போட்டி படிப்பில் மட்டுமே.இப்படி அந்த கால நட்பு..மனதில் பசுமரத்தாணி போல பதிந்து இன்றும் நினைவில் அவர்கள் பெயர் தங்கியிருக்கும் நட்பு.

    அடுத்து..கல்லூரி கால நட்பு.பெற்றோர் கஷ்டப்பட்டு செலவு செய்து படிக்க வைப்பது தெரிந்தும்..பணத்தைப்பற்றி கவலைப்படாமல் இருக்கும் வயது.இக்காலத்தில் ஏற்படும் நட்பு சிலருக்கு வாழ்வில்..சிகரெட்,மது,மாது..போன்ற பழக்கங்களை ஏற்படுத்தி வைக்கிறது..அப்படிப்பட்டவர் நட்பு இவ்வயதில் அதிகம் கிடைக்கிறது.இப்படிப்பட்ட நட்பு..ஆசைக்காக..சில எதிர்ப்பார்ப்புகளோடு அமைந்து விடுகிறது.இப்பருவ நட்பு கம்பி மேல் நடப்பது போல.

    அதைத் தாண்டி வந்தால்..அலுவலகத்தில், உடன் வேலை செய்வார் நட்பு.இந்த சமயம்...நிறைய சம்பாதிக்க வேண்டும்,சமுதாயத்தில் ஒரு பெரிய மனிதனாக வரவேண்டும்..அவனைவிட நான் பெரிய ஆளாக வர வேண்டும் என்றெல்லாம் எண்ணக்கூடிய சுயநலம் நிறைந்த நட்பு..

    பின் ஓய்வு பெற்றதும்..கிடைக்கும் நட்பு...பழைய வாழ்வை அசை போடும் நண்பர்களுடன்.

    இப்படி ஒவ்வொரு பருவத்திலும்..பல வேறுபட்ட நண்பர்கள்..பள்ளி பருவம் முதல்..கடைசி வரை தொடரும் நட்பு..ஒரு சிலருக்கே கிட்டும்.அப்படிப்ப நட்பு அமைந்தால் அதுதான் சிறந்த நட்பு..அப்படிப்பட்டவன் தான் சிறந்த நண்பன்.

    ஆனால் எப்பருவத்தில்..எவ்வளவு நாட்கள் தொடரும் நட்பாய் இருந்தாலும்..வீட்டில்..பெற்றோரோ,மனைவியோ கோபப்பட்டால், அதைத் தாங்கும் மனம்..நண்பன் ஒருவன் நம்மை தவறாக புரிந்துக் கொண்டால்..கடுமையாக ஏசி விட்டால்/பேசிவிட்டால் தாங்க மாட்டேன் என்கிறது.

    இது தான் நட்பின் சிறப்பு.

    மௌனம்....?

    By: ram On: 08:09
  • Share The Gag
  • வார்த்தைகள் இல்லாத புத்தகம் மௌனம். ஆனால், வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள். மௌனம் என்பது வெளிச்சம். நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம். மௌனம் என்பது இருட்டு. எல்லாத்துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மௌனம் என்பது மூடி! இதை தயாரித்து விட்டால் எல்லா உணர்ச்சிகளையும் இதற்குள் பூட்டி வைக்கலாம். மௌனம் என்பது போதி மரம். இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். மனம் என்பது தவம். இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.

    “மௌனம் என்பது வரம்” நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும் மௌனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ்களை இறுக மூடி நாம் நமக்குள் இறங்குவோம்!”

    எங்கோ, எப்பொழுதோ படித்திதயத்தை வருடிய வரிகள், உலகத்திலேயே நமக்குப் பிடித்த குரல் நமது குரல்தான். நமக்குப் பிடித்த பேச்சு நமது பேச்சுதான். அதனால் நாம் பேச ஆரம்பித்தால் மணிக்கக்காகப் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரிகளில் பேசுகிறோம். நாம் பல சமயம் யாரிடம் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம எந்த இடத்தில் பேசுகிறோம் எனபதைப் பற்றியே சிந்திப்பதில்லை. நமக்குத் தெரிந்ததை பேச வேண்டும் என்பது, மட்டுமே நமது இலக்கு. புத்திசாலி மற்றவர்களைப் பேசவிட்டு,, மௌனம் சாதித்து, தேவையான பொழுது மட்டும் பேசி பேசுபவர்களின் நட்பைப் பெறுகிறான். பேசுவதால் நம் இருப்பை பிறர்க்கு உணர்த்துகிறோம். நாம் ஒரு நாளில் பேசுகிற பேச்சை ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால் சில நேரங்களில் வருத்தப்படுவோம். நமது நாக்கு ஈரமுடையது.

    இது அவசர உலகம். இயந்திர கதியில் மனிதர்கள். வாய்க்கும் வயிறுக்கும் போராட்டம். நின்று, நிலைக்க நேரமில்லை, வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. வாரம் ஒரு முறை தினசரிக் காலண்டரில் ஞாயிறன்று ஆறு நாட்களைச் சேர்த்து கிழிக்கிறோம். தேவை நிம்மதி. தேவை மன அமைதி. தேவை மகிழ்ச்சி. இது மௌன தவத்தால் கிட்டும்.

    மனதை இளமையாக வை‌‌த்திருக்க சில ஆலோசனைகள்

    By: ram On: 08:08
  • Share The Gag
  • மனதை இளமையாக வை‌‌த்திருக்க  சில ஆலோசனைகள்


    மனதை எ‌ப்போது‌ம் உ‌ற்சாகமாக வை‌த்து‌க் கொ‌ண்டா‌ல் நா‌ம் எ‌ப்போதுமே இளமையாக இரு‌க்கலா‌ம். அதெ‌ப்படி ‌பிர‌ச்‌சினைக‌ள் வரு‌ம் போது மனதை உ‌ற்சாகமாக வை‌த்து‌க் கொ‌ள்ள முடியு‌ம் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் கே‌‌ட்கலா‌ம்.
    முடியு‌ம். எதையு‌ம் நே‌ர்மறையாக ‌சி‌ந்‌தி‌க்க ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டா‌ல் ந‌ம்மா‌ல் எ‌ந்த ‌சூ‌ழ்‌நிலை‌யிலு‌ம் உடை‌ந்து போகாம‌ல் ம‌கி‌ழ்‌ச்‌சியாக வாழ முடியு‌ம்.

    ஒரு நகை‌ச்சுவை இரு‌க்‌கிறது. அதாவது ‌நீ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஏ‌ன் கவலை‌ப்பட வே‌ண்டு‌ம்...எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்குமே இர‌ண்டு வா‌ய்‌ப்புக‌ள் தா‌ன் உ‌ள்ளன.
    வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஒ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ஆரோ‌க்‌கியமாக இரு‌ப்‌பீ‌ர்க‌ள் அ‌ல்லது நோ‌ய்வா‌ய்‌ப்படு‌வீ‌ர்க‌ள். முத‌லி‌ல் ‌நீ‌ங்க‌ள் நலமாக இரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ‌நீ‌ங்க‌ள் ஏ‌‌ன் கவலை‌ப்பட வே‌ண்டு‌ம்? இ‌ல்லை, உட‌ல் நல‌க் குறைவு ஏ‌ற்படு‌கிறது எ‌ன்று வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். அத‌ற்கு‌ம் இர‌ண்டு வா‌ய்‌ப்புக‌ள்தா‌ன். ஒ‌ன்று ‌நீ‌ங்க‌ள் குணமடை‌வீ‌ர்க‌ள். இ‌ல்லையெ‌ன்றா‌ல் இற‌ந்து‌விடு‌வீ‌ர்க‌ள். நீ‌ங்க‌ள் குணமடை‌வீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ஏ‌ன் அதை‌ப் ப‌ற்‌றி கவலை‌ப்பட வே‌ண்டு‌ம். இ‌ல்லை இற‌ந்து ‌வி‌ட்டா‌ல் ஒ‌ன்று ‌நீ‌ங்க‌ள் சொ‌ர்‌க்க‌த்‌தி‌ற்கு செ‌ல்‌வீ‌ர்க‌ள் இ‌ல்லை நரக‌த்‌தி‌ற்கு செ‌ல்‌வீ‌ர்க‌ள். சொ‌ர்‌க்க‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ன்றா‌ல் அதை‌ப் ப‌ற்‌றி கவலை‌ப்பட வே‌ண்டுமா எ‌ன்ன? இ‌ல்லை நரக‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்‌வீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல்... அ‌ங்குதா‌ன் உ‌ங்களது ஏராளமான ந‌ண்ப‌ர்க‌ள் இரு‌ப்பா‌ர்களே.. அவ‌ர்களுட‌ன் அர‌ட்டை அடி‌த்தே கால‌த்தை ‌க‌ழி‌க்கலாமே ‌பிறகு ஏ‌ன் கவலை‌ப்பட வே‌ண்டு‌ம்.. இதுதா‌ன் அ‌ந்த நகை‌ச்சுவை.

    ஆனா‌ல் இது நகை‌ச்சுவை ம‌ட்டும‌ல்ல‌.. வா‌ழ்‌க்கை‌யி‌ன் சுவையை அ‌றியு‌ம் வ‌ழியு‌ம் கூட..

    எ‌திலு‌ம் ஒ‌ன்று ந‌ல்லது அ‌ல்லது கெ‌ட்டது நட‌க்கு‌ம். ந‌ல்லது நட‌ந்தா‌ல் கவலை‌ப்பட ஒ‌ன்று‌மி‌ல்லை, கெ‌ட்டது நட‌ந்தா‌ல் அ‌திலு‌ம் இர‌ண்டு ‌விஷய‌ங்க‌ள். இ‌ப்படி இரு‌க்க, உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌யைப் ப‌ற்‌றிய கவலையைத் தூ‌க்‌கி எ‌றி‌ந்து ‌வி‌ட்டு, வா‌ழ்‌க்கை எ‌ன்பது பூ‌ங்காவன‌ம் அ‌ல்ல போரா‌ட்ட‌க்கள‌ம் எ‌ன்பதை உணரு‌ங்க‌ள்.

    போரா‌ட்ட‌க்கள‌த்‌தி‌ல் இழ‌ப்புகளு‌ம், வெ‌ற்‌றிகளு‌ம் சாதாரண‌ம். எத‌ற்கு‌ம் கல‌ங்காம‌ல் வாழப் பழ‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். எ‌ப்போது‌ம் நட‌‌ப்பவை எ‌ல்லா‌ம் ந‌‌ன்மை‌க்கே எ‌ன்று அத‌ன் போ‌க்‌கி‌ல் உ‌ங்களது வா‌ழ்‌க்கையை ‌சிற‌ப்பாக வாழப்‌ பழ‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

    ‌நீ‌ங்க‌ள் ‌எ‌ந்த ‌பிர‌ச்‌சினையையு‌ம் ச‌ந்‌தி‌க்காம‌ல் வா‌ழ்‌க்கை‌யி‌ல் செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ‌நீ‌ங்க‌ள் தவறான‌ பாதை‌யி‌ல் பய‌ணி‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்று பு‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள். முத‌லி‌ல் உ‌ங்க‌ள் பாதையை மா‌ற்று‌ங்க‌ள். ‌‌சில சமய‌ங்க‌ளி‌ல் இது பெ‌ரிய அள‌வி‌ல் மு‌ன்னே‌ற்ற‌த்தை அளிக்கும்.

    பு‌திதாக செ‌ய்யு‌ம் போதுதா‌ன் உ‌ற்சாக‌ம் அ‌திக‌ரி‌க்கு‌ம். அரை‌த்த மாவையே அரை‌த்து ‌நீ‌ங்க‌ள் எதையு‌ம் சா‌தி‌க்க முடியாது எ‌ன்பதை உணரு‌ங்க‌ள்.

    உ‌ற்சாக‌ம் உ‌ங்களு‌க்கு‌ள்தா‌ன் இரு‌க்‌கிறது. அதை வெ‌ளி‌யி‌ல் தேடா‌தீ‌ர்க‌ள். ம‌ற்றவ‌ர்களு‌க்கு மு‌ன்னுதாரணமாக வா‌ழ்‌ந்து கா‌ட்டு‌ங்க‌ள்.

    என்றும் புன்னகையோடு...

    ஒரு அப்பாவும், 4 வயது மகனும்!

    By: ram On: 00:24
  • Share The Gag

  • ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது...

    கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

    மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

    வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

     அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
    " ஐ லவ் யூ அப்பா".

    மனிதர்களை பயன்படுத்துகிறோம்,பொருட்களை நேசிக்கிறோம்...

    எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ..?

    பிரசவத்திற்குப் பின் கவனிக்க வேண்டியவை...!

    By: ram On: 00:23
  • Share The Gag
  • ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கிய காலகட்டம் என்றால் அது தாய்மைப் பருவம் தான். குழந்தை பெற்ற பிறகு, அது சுகப்பிரசவமானால் 1 மாதமும், அறுவை சிகிச்சை என்றால் 3 மாதங்களும் ஓய்வு அவசியம்.

    பிரசவித்த பெண் முழுமையாக மனதளவிலும்,உடலளவிலும் பழைய நிலைக்குத் திரும்ப குறைந்தது 18 மாதங்கள் அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    அறுவை சிகிச்சை என்றாலும் சுகப்பரசவம் என்றாலும் சரி அதிக கணம் கொண்ட பொருட்களை தூக்குவது கூடாது. அது உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

    குழந்தைக்கு முதலில் தாய் பால் தான் தரவேண்டும். தாய்பாலைவிட சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை. பிறந்த குழந்தையை தாயின் உடலோடு இணைத்து அந்த சூட்டில் குழந்தையை படுக்க வேண்டும்.

    குழந்தை பெற்ற உடன் அனேகப் பெண்களுக்கு தன்னம்பிக்கை அளவு சற்றே குறைகிறது மேலும் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கிறது. சருமம் பொலிவிழக்கிறது. அவர்களது ஒட்டுமொத்த தோற்றமுமே மாறிப் போகிறது.

    இதெல்லாம் 18 மாதங்களுக்குப் பிறகு சகஜ நிலைக்குத் திரும்பும் அதுவரை பொறுமை அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    இந்த கதை உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

    By: ram On: 00:22
  • Share The Gag
  • கள்ளிப்பட்டு என்னும் ஊரில் இருந்தது அந்த அரசினர் பள்ளி. அங்கு ஐந்தாம் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். மாணவர்கள் அனைவரும் சிறப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். அப்போது “ஐயா” என்று ஒரு குரல் கேட்டது.

    பெண்-ஒற்றைக் கண்ணுடன்ஆசிரியர் திரும்பிப் பார்த்தார். வகுப்பறையின் வாசற்படிக்கு அருகே முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவளை பார்க்கவே அருவருப்பாக இருந்தது. ஏனெனில் அவளுக்கு ஒரு கண் இல்லை. அவளைப் பார்த்ததும் மாணவர்கள் அனைவரும் பயந்துவிட்டனர். வகுப்பு ஆசிரியர் கூட பயந்தவராய் அவளைப் பார்த்து,

    “யாரும்மா நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டார்.


    “ஐயா, என் மகன் ராமு மதிய சாப்பாட்டை மறந்து விட்டு வந்து விட்டான். அவனிடம் கொடுக்கத்தான் இந்த சாப்பாடுக் கூடையை எடுத்து வந்துள்ளேன். இதை அவனிடம் கொடுத்துவிட்டு சென்று விடுகிறேன்.” என்றாள்.
    “ராமு! உங்க அம்மாகிட்ட போய் அந்த கூடையை வாங்கிட்டு வா.”

    ராமு எழுந்து சென்று வாங்கி வந்து ஆசிரியரிடம் நன்றி கூறி அமர்ந்தான். அவனது அம்மாவும் சென்றுவிட்டாள். ஆனால் வகுப்பறையில் உள்ள மாணவர்கள்தான் ராமுவை ஓட்டித்தள்ளிவிட்டனர்.

    “ஏய்....... ஒத்த கண்ணு அம்மா!”

    “டேய்! அதுதான் உங்க அம்மாவா? பேய் மாதிரி இருக்காங்க...”

    “ராமு அம்மா, ஒத்த கண்ணு அம்மா”

    என்றெல்லாம் அவனை ஏளனம் செய்தனர். ராமுவிற்கு அழுகையே வந்துவிட்டது. ஆசிரியர் மாணவர்களை அதட்டி அமைதிபடுத்தினார்.

    பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற ராமு, தனது புத்தகப்பையை வீட்டினுள் ஒரு மூலையில் தூக்கி எறிந்தான். அவன் அவ்வளவு கடுப்பாக இருப்பதைப் பார்த்த அவன் அம்மா வள்ளி “என்னப்பா ஆச்சு? ஏன் இவ்வளவு கடுப்பா இருக்கே?” என்று கேட்டாள்.

    “எல்லாம் உன்னாலதான். நான் எத்தனை முறை சொல்றது, என்ன பார்க்க பள்ளிக்கூடம் வராதேனு? நீ இன்னைக்கு வந்ததால எல்லாரும் என்ன ‘ராமு அம்மாவுக்கு ஒத்த கண்ணு’ அப்படினு எவ்வளவு கேலி கிண்டல் பண்ணினாங்க தெரியுமா? நான் அழுதே விட்டேன்.”

    “நீ சாப்பாட்டை மறந்து விட்டு போயிட்டே. சாப்படலனா உடம்பு கெட்டுடும். அதனாலதான் எடுத்துக்கிட்டு வந்தேன்.”

    “நான் சாப்பிடாம செத்தா உனக்கு என்ன? என்னையை அசிங்கப்படுதுவதே உனக்கு வேலையாப்போச்சி. நீ இனிமே பள்ளிக்கூடம் வந்த, நான் பள்ளிக்கு போகவே மாட்டேன்.”.

    “சரிப்பா, என்ன மன்னிச்சிடு. இனிமே உன்னை நான் தொந்தரவு செய்யமாட்டேன்.” என்று கூறியவள் சாமியறைக்குள் சென்று குமுறிக் குமுறி அழுதாள். தன் மகனே தன்னை கேவலமாக பார்க்கிறானே என்று சாமியிடம் முறையிட்டாள்.

    ராமுவின் அப்பா அவன் பிறந்த ஒரு மாதத்திலேயே இறந்துவிட்டார். அவனுடைய ராசிதான் அவரை கொன்றுவிட்டது என்று அனைவரும் கூறினர். ஆனால் அவனது அம்மா வள்ளி, “என் புருஷன் குடிகாரன். குடிச்சி, குடிச்சியே செத்து போய்ட்டான். அதுக்கு என் புள்ள ராசியை தப்பா சொல்லாதீங்க” என்று அவனை மெச்சிக்கொள்வாள். புருஷன் இறந்த பிறகு மறுமணம் செய்து கொள்ளாமல், கூலி வேலை செய்து அவனை காப்பாற்றி வருகிறாள்.

    ராமு தன் உயர் கல்விக்கு சென்னை செல்லவேண்டிய சூழ்நிலை. அதனால் தன் தாயிடம் விடைபெற்று சென்று அங்கு விடுதியில் தங்கி படித்து வந்தான். அவன் படிக்கும் காலக்கட்டத்தில் விடுமுறைக்கு கூட அவன் அம்மாவை பார்பதற்கென்று வந்தது கிடையாது. இதை நினைத்து வள்ளி வருந்தாத நாளே இல்லை. பெத்த மனம் தன் பிள்ளையை பார்க்க ஏங்கியது. அதனால் அவள் ஒருநாள் ராமுவின் கல்லூரிக்கே சென்றுவிட்டாள். இப்போதும் ராமு தனது அம்மாவை மிகவும் அசிங்கப்படுத்தி அனுப்பினான். அதனால் நொந்துபோய் வீட்டிற்கு சென்ற அவள் ராமுவை பார்க்கச்செல்லாமல் அவனுக்குத் தேவையான பணம் மட்டும் அனுப்பி வந்தாள். ராமுவிடமிருந்து கடிதம் வரும். ஆனால், வள்ளி எப்படி இருக்கிறாள் என்று கேட்டிருக்கமாட்டான். “எனக்கு ஐயிந்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும்” என்று மொட்டையாக இருக்கும். அவளும் தன் மகன் இவ்வளவு கல் நெஞ்சக்காரனாக இருக்கிறானே என்று அழுதுகொண்டே பணத்தை அனுப்புவாள்.

    ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அவனிடமிருந்து வரும் கடிதம் கூட வருவதில்லை. தன் மகனுக்கு என்ன ஆயிற்றோ என்று அவன் தன்னை அவமானப்படுத்தினாலும் பரவாயில்லையென்று அவனது கல்லூரிக்குச் சென்று விசாரித்ததில், அவனது படிப்பு முடிந்து வேலை கிடைத்துச் சென்றுவிட்டதாக தெரியவந்தது. அவளும் தன்னை தன் மகன் அடியோடு மறந்துவிட்டானே என்று தினமும் அழுதுகொண்டே இருப்பாள். அதனால் அவளது உடல்நிலை மோசமானது. சில வருடங்கள் கழிந்தன. ராமு நல்ல வேலையில் உள்ளதாகவும், அவனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதாகவும், தான் அவனைப் பார்த்ததாகவும் ஒருவர் வந்து வள்ளியிடம் கூறினார். இந்த செய்தி அவளுக்குப் புத்துயிர் அளித்தது.

    அவர் மூலம் அவன் விலாசத்தை அறிந்து அவனை பார்க்கச் சென்றாள். சென்னையில் அவனது இருப்பிடத்திற்கு அருகில் உள்ளவர்களிடம் விசாரித்ததில் அவன் வீட்டைக் கண்டுபிடித்தாள். அங்கு ராமுவின் பிள்ளைகள் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் தவறவிட்ட பந்து வள்ளிக்கு அருகில் வந்தது. அதை எடுத்துக்கொண்டு தன் பேரப்பிள்ளைகளை கொஞ்ச அவள் சென்றபோது அவளது ஒற்றைக்கண்ணைப் பார்த்து பயந்துபோய் பிள்ளைகள் அழ ஆரம்பித்தன.

    குழந்தைகளின் அழுகை சத்தத்தை கேட்டு ராமு வெளியில் வந்தான். அம்மாவை பார்த்த ராமு ஏதோ பிச்சைக்காரியைப்போல் போல் “நீ எதுக்கு இங்க வந்த, நாங்க நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலயா? உன் மூஞ்சிலேயே படக்கூடாதுன்னுதான நான் எங்க இருக்கிறேன்னு சொல்லவேயில்ல, இப்ப என் பிள்ளைகல பயம்புறுத்த வந்துட்டியா? முதல வெளிய போ”, என்றான் ராமு.

    “இத்தனை வருடங்கள் கழித்து நான் அவனைப் பார்க்க வந்திருக்கிறேன். ஆனால் இவன் நம்மை அம்மா என்று கடுகளவு கூட பாராமல் இப்படி சொல்லிவிட்டானே! இனிமேல் இவனிடம் பாசத்தை எதிபார்ப்பது தவறு” என்று எண்ணிய வள்ளி அங்கிருந்து வந்துவிட்டாள்.

    சில நாட்கள் கழித்து ராமுவிற்கு ஒரு கடிதம் வந்தது. அது அவன் அம்மாவின் அண்டை வீட்டுக்காரர் எழுதியது. அதில் “ராமு உங்க அம்மா இறந்துவிட்டார். அவங்க உன்னிடம் தருமாறு கொடுத்தக் கடிதத்தை இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன். தயவு செய்து படிக்காமல் விட்டுவிடாதே. இருக்குபோதுதான் அவர்களை மதிக்கவில்லை. இறந்தபிறகாவது இந்த கடிதத்தை படித்து அவருடைய ஆத்துமாவை சாந்தியடைய வை!” என்று இருந்தது. ராமு தன் அம்மா இறந்துவிட்டாளே என்று சிறு கவலைகூட இல்லாமல் இன்னொரு கடிதத்தை எடுத்துப் படித்தான்.

    “ராமு! என் மகனே! உன்னைப் பெற்றெடுக்க மறு பிறவி எடுத்தேன். என் ரத்தத்தைப் பாலாக்கி உனக்குக் கொடுத்தேன். என் உடலையே உருக்கி கூலி வேலை செய்து உன்னைப் படிக்கவைத்தேன். ஆனால் அதற்கெல்லாம் நீ கொடுத்த கைமாறு எந்தவொரு தாய்க்கும் கிடைக்கக்கூடாது. சரி, ஏன் என்னை நீ வெறுக்கிறாய்? நான் ஒற்றைக் கண் கொண்டவள் என்பதால்தானே? நீ குழந்தையாய் இருந்தபோது ஒரு விபத்தில் உன்னோட ஒரு கண்ணை இழந்துவிட்டாய். உன்னை ஒரு கண்ணோடு பார்ப்பதற்கு என் இருதயமே நின்றுவிடும் போலிருந்தது. அதனால் என் ஒரு கண்ணை கொடுத்து உன் கண்ணைக் காப்பாற்றினேன், என் அழகை இழந்தேன். ஆனால் எனக்கு அப்போது அது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த விஷயத்தை உனக்கு கூறி வளர்த்திருக்கவேண்டும். ஆனால் அப்படி செய்திருந்தால், நீ ஒருவித மன உறுத்தலுடன் வாழ்ந்துவந்திருப்பாய்.” இதைப் படித்தவுடன் ராமுவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. மேலும் படித்தான்.

    “அழாதே மகனே, எனக்காக அழாதே. உன் பிள்ளைகளுக்காக அழு. அவர்களை வளர்க்கும்போதே நீ படும் கஷ்டங்களை சொல்லி வள. இல்லையென்றால் என் கதிதான் உனக்கும்.”

    இதை படித்ததும் ராமு தன் தவறை உணர்ந்தான். அவனது கண்ணில் தாரை தரையாய் நீர் வழிந்தது. தரையில் புரண்டு புரண்டு அழுதான்.

    வாழும்போதே தன் தாயின் தியாகத்தை உணராமல், அவள் இறந்தபிறகு அழுது என்ன பிரயோஜனம்?

    கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு?.

    உங்கள் பெண் பிள்ளைகளை சுய மதிப்புடன் வளர்ப்பதற்கான சில வழிமுறைகள்…

    By: ram On: 00:21
  • Share The Gag
  • உங்களுடைய மகள் உங்களுக்கு மிகவும் அரிய சொத்தாக இருப்பவள். அவள் இனிமையானவள், அழகானவள் மற்றும் வளமாக வாழ்வதற்கு மிகவும் தகுதியானவள். இவையனைத்தும் உண்மை என்னும் போது, அவளுடைய பெற்றோர்ககளாகிய உங்களுக்கு அவளை சுய மதிப்புடையவளாக வளர்க்கும் பொறுப்பு பெரிதும் உள்ளது.

    இது மிகவும் எளிமையானது மற்றும் தினசரி அவளை சில செயல்களைச் செய்யச் சொல்லி கற்றுக் கொடுக்கக் கூடியது. ஒரு பெற்றோராக நீங்கள் குழந்தையின் மனதில் உலகத்தை எதிர்கொள்ளத் தேவையான நம்பிக்கையையும் மற்றும் அவளுடைய வாழ்க்கைக்கு சிறந்த அர்த்தத்தையும் உருவாக்க கொடுக்க வேண்டும். மகளை வளர்தெடுப்பது பொதுவாகவே கடினமான விஷயமாக இருந்தாலும், அது ஒரு உன்னதமான வேலையாகும். பெண் குழந்தையை வளர்த்தெடுப்பதிலும், அவளுடன் பழகுவதிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

    வாழ்க்கை தங்களிடம் முன்வைக்கும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தேவையான நம்பிக்கையை அளித்து, பின்நாளில் சமூகத்தின் சிறந்த மனிதர்களாக தங்களை வெளிப்படுத்தவே குழந்தைகளின் சுய மதிப்பு உதவுகிறது. தங்களை சூழ்ந்துள்ளவர்கள் தங்களை மதிப்பவர்களாகவும், தங்களுடைய மதிப்பை உணர்ந்தவர்களகாவும் இருக்கும் இடங்களில் பெண்களை இருக்கச் செய்ய வேண்டும். குறைவான சுய மதிப்புடைய பெண்கள் தங்கள் வாழ்க்கையில் தவறான பாதையை தேர்ந்தெடுப்பார்கள் என்பது பொதுவான உண்மையாகும். குழந்தைகளை நல்ல வழியில் வளர்ப்பது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது. ஒரு தயானவள் தன்னுடைய குழந்தையின் வாழ்வில் பெரிய விஷயங்களை செய்யக் கூடியவள் மற்றும் பெண்களை அவள் வளர்ப்பது ஒன்றும் குறைவான கவனம் கொண்டு செய்யும் விஷயமும் அல்ல. உங்கள் மகளை சுய மதிப்புடன் வளர்ப்பதற்கான சில குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.

    1. பாராட்டுங்கள்!


    அவளுக்கு பாராட்டுகளை தெரிவியுங்கள்! அவள் அதற்கு தகுதியானவள் தான். அவள் சிறிய வேலையை செய்தால் கூட, நீங்கள் அவளை பாராட்டலாம். அவள் மிகச்சிறந்த பணியை செய்துள்ளதாக சொல்லுங்கள். அவளுக்கு மேலும் சில பணிகளை கொடுத்து, அவளால் அவற்றை செய்ய முடியும் என்று சொல்லுங்கள். அவளால் அவளுடைய வழிமுறையில் எந்த விஷயத்தையும் கையாள முடியும் என்று சொல்லுங்கள். பெண் குழந்தையை வளர்ப்பது சில நேரங்களில் அதிக தேவையுள்ளதாக இருக்கும், அதனால் உங்களுடைய அன்பை முழுமையாக அவளுக்கு கொடுங்கள்.

    2. தேவை கல்வி


     நல்ல தரமான கல்வி இயற்கையாகவே சுய மதிப்பை அதிகரிக்கும் கருவியாகும். அவளுக்கு எல்லா வகையிலும் கல்வியை புகட்டுங்கள். அவளை செய்திகளை அறியச் செய்யுங்கள். உங்களுடைய பிஸியான வேலைகளிலிருந்து சிறிது நேரத்தை அவளுடன் கழிப்பதற்காக ஒதுக்குங்கள். அவள் என்ன கற்றுக் கொண்டாள் என்பதை கேளுங்கள், அவளுடன் சேர்ந்து டிவி பாருங்கள்! டிவியில் பார்த்த விஷயங்கள் பற்றியும், அவளைப் பற்றியும் மற்றும் உங்களைப் பற்றியுமான விஷயங்களை அவளுடைய பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், மேலும் அவள் எவற்றை பார்க்கக் கூடாது என்பதையும் குறிப்பிடுங்கள். ஊடகங்களின் தகவல்களை சரியாக தேர்ந்தெடுக்கும் வகையில் அவளுக்கு உதவி செய்யுங்கள். இந்த வகையில் உங்கள் மகளின் சுய மதிப்பினை நீங்கள் உயர்த்தலாம்.

    3. திறன்களை வளர்த்தல்

     குழந்தைகளை திறன் மிக்கவர்களாக வளர்ப்பதன் மூலம் அவர்களை சுய மதிப்பு மிக்கவர்களாக்க முடியும் என்பது முக்கியமான கருத்தாகும். பெண் குழந்தைகளை அவர்களுக்கான திறன்களை அவர்களாகவே வளர்க்கச் செய்வதும் கூட, பெண்களை வளர்ப்பதன் ஒரு பகுதியாக உள்ளது. அவள் தன்னுடைய கனவுகளை செயல்படுத்த ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுங்கள். பெண்களை வளர்ப்பது எளிதான விஷயம் கிடையாது, அதற்கு நிறை அன்பும், நேரமும் தேவைப்படும்.

    4. வீட்டில் உள்ள இதழ்களை கவனிக்கவும்

     நீங்கள் எப்பொழுதும் செய்ய வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். உங்கள் வீட்டில் நீங்கள் வாங்கும் இதழ்களையும் மற்றும் உங்கள் மகள் அவற்றில் எதை படிக்கிறார் என்பதையும் சற்றே கவனிக்க வேண்டும். அவள் சரியான இதழ்களையும், நூல்களையும் படிக்க நீங்கள் வழிகாட்ட வேண்டும். இதுவும் பெண்களை வளர்க்கும் முறை தான்.

    5. அன்பை வெளிப்படுத்துங்கள்

     உங்களுடைய அன்பை உங்கள் மகள் உணர வேண்டும். கடினமான நாட்களிலும் கூட அவளை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை அவளுக்கு உணர்த்த வேண்டும் மற்றும் அவள் துன்பத்தில் இருக்கும் நாட்களில் தனிமையில் அவளை விட்டு விடக் கூடாது. உங்களுடைய அன்பை அவளுக்கு காட்டுங்கள், அவளை உணரச் செய்யுங்கள். இதன் மூலம் குழந்தைகளின் சுய மதிப்பு உயரும். சில குழந்தைகளிடம் சுய மதிப்பு குறைவாகவே இருக்கும். எனினும், உலகம் முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தங்கள் குழந்தைகளை தயார் செய்ய வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். அவளை இவ்வகையில் சுய மதிப்புடன் தயார் செய்வதன் மூலமாக ஒரு நல்ல வாழ்க்கையை நீங்கள் அவளுக்கு அமைத்துக் கொடுக்கிறீர்கள்.

    குழந்தை வளர்ப்பதில் சில தவறான பழக்க வழக்கங்கள் !

    By: ram On: 00:20
  • Share The Gag
  •  
    1. குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். வேறு எந்தப் பொருளும் என்ன காரணம் கொண்டும் ஊட்டக்கூடாது.


    *
    2. பிறந்த சில குழந்தைகளுக்கு மார்பகத்தில் பால் கட்டி தடித்து இருக்கும். இதை குழந்தை வீறிட்டு அழுவதையும் பொருட்படுத்தாது நசுக்கி விட்டு பாலை வெளியே எடுக்கும் பழக்கம் உள்ளது. இது நல்லது அல்ல. மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.


    *
    3. பச்சிளங்குழந்தை அழுவதற்கு காரணம் ‘உரம் விழுந்து இருக்கிறது’ என்று எண்ணி ‘உரம் எடுத்தல்’ என்று செய்கிறார்கள். இது தவறான பழக்கம். இப்படியொரு ‘நோய் நிலை’ இல்லை.


    *
    4. அடிக்கடி பேதியாகும் குழந்தைகளுக்கும் தொக்கம் எடுக்கிறார்கள். அப்படி ஒன்று கிடையாது. பேதியின் காரணம் என்ன என்று அறிந்து அதற்கான வைத்தியம் செய்ய வேண்டுமே தவிர தொக்கம் எடுப்பது தவறு - சில சமயம் விபரீதம் ஏற்படக் கூடும்.



    பேதியை உடனே நிறுத்தும் மாத்திரையை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. வயிற்றில் ஏதோ ஒரு பொருள் ஒதுங்கி உள்ளது என்று ‘தொக்கம் எடுத்தல்’ என்று சொல்கிறார்கள். இது இல்லாத ஒன்று. அது போல் குடல் ஏற்றம் என்று ‘குடல் தட்டல்’ என்று செய்கிறார்கள். இது தவிர்க்கப்படவேண்டும்.


    *
    5. சில குழந்தைகளுக்கு பிறந்து சில மாதங்களுக்கு தொப்புள் சிறிது வெளியே தள்ளிக் கொண்டு இருக்கும். அதை அமுக்கி காசு வைத்து கட்டும் பழக்கம் கூடாது. மாறாக தொப்புளைச் சுற்றி உள்ள பகுதியில் விரலை வைத்து சிறிது சிறிது அமுக்கி அமுக்கி விடலாம்.


    *
    6. சாம்பிராணி, கொமஞ்சான் புகை போடுவதால் சில குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அவை அவசியமில்லை; பயனுமில்லை.


    *
    7. சில பெரியவர்கள் மூக்கில் ஊதி சளியை எடுக்க முயல்கிறார்கள். இது தவறான பழக்கம். இதனால் இவர்களின் வாயில் உள்ள நுண்கிருமிகள் எளிதில் குழந்தைகளுக்குப் பரவும்.


    *
    8. தலைக்கு குளிக்க வைக்கும் முன் தலையில் எண்ணெய் தடவும் பழக்கம் உள்ளது. இதனால் எண்ணை தண்ணீருடன் முகத்தில் இறங்கி மூக்கு துவாரம் அருகே வரும்போது மூக்கு அனிச்சை செயலாக அதை உறிஞ்சி உள்ளே இழுத்து அதனால் சளி, நிமோனியா போன்ற நோய் வர வாய்ப்பு உள்ளது.



    *
    9. தோலில் சிலசமயம் நுண்கிருமிகளின் பாதிப்பால் சிறுசிறு சீழ் வைத்த பரு போன்று கூட்டாக ஏற்படுவதை ‘அக்கி’ என்று சொல்லி அதற்கு அக்கி எழுதுவதாக சிலர் நம்புகிறார்கள். மருந்தை உட்கொண்டாலே ஒழிய வெறும் அக்கி எழுதுவதால் போய் விடாது.