Thursday, 24 July 2014

மதுரைக்கு அவசியம் வரணும் ப்ரோ..! நடிகர்களுக்கு விஜய்யிடமிருந்து போன் அழைப்பு!

By: ram On: 23:56
  • Share The Gag

  • இளம் நடிகர்கள் மத்தியில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது என்ன தெரியுமா? விஜய்யின் போன் அழைப்பு பற்றிதான் ஒருவருக்கொருவர் ஆச்சர்யமாக பேசிக்கொள்கிறார்கள். அதாவது, ஒரு வாரப்பத்திரிகையினால் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டார் விஜய். அதன் அடுத்த கட்டமாக அந்தப் பட்டத்தை அவருக்கு வழங்குவதற்காக மதுரையில் பிரம்மாண்ட விழா நடத்தவும் இருக்கிறது.

    இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி விஜய் சார்பாக நடிகர் நடிகைகள் அழைக்கப்பட்டிருக்கின்றனர். விஜய்யை வைத்து தேடினேன் வந்தது, வசீகரா போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் செல்வபாரதியிடம் நடிகர் நடிகைகளை மதுரைக்கு அழைத்து வரும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் விஜய். செல்வபாரதி தலைமையில் விஜய்யின் பி.ஆர்.ஓ. உள்ளிட்ட சிலர் தினமும் நடிகர் நடிகைகளை சந்தித்து விஜய்யின் அழைப்பை தெரியப்படுத்தி அவர்களை மதுரைக்கு வரும்படி அழைத்து வருகின்றனர்.

    யார் யாரெல்லாம் வருகையை உறுதி செய்துள்ளனர் என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறாராம் விஜய். வருவதற்கு யார் யார் எல்லாம் தயக்கம் காட்டுகிறார்கள் என்பதையம் கேட்டுத் தெரிந்து கொண்டு, தன் பி.ஆர்.ஓ.வின் செல்போனில் இருந்தே அவர்களுக்கு போன் போட்டு பேசுகிறாராம் விஜய். மதுரைக்கு அவசியம் வரணும் ப்ரோ..! என்று அன்புடன் அழைப்பு விடுக்கிறாராம். விஜய்யின் போன் அழைப்பைக் கேட்டு வளரும் நடிகர்கர் புல்லரித்துப்போய் இருக்கிறார்கள்.

    குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனிக்க வேண்டியவை....?

    By: ram On: 22:32
  • Share The Gag

  • நமது ஊர்களில் குழந்தைகளுக்கு காது குத்துவது ஒரு வழக்கம். ஆனால் குழந்தைகளுக்கு காது குத்தும்போது ஒரு சில விசயங்களை நாம் பேண வேண்டும்

    * காது குத்தும் இடம் சுத்தமானதாக இருக்கிறதா என்று நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படும்.


    * குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல் தோடுகளை இழுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அது அவர்களுக்கு மிகுந்த வலியினை கொடுக்கும்.


    * காது குத்திய முதல் நான்கிலிருந்து ஐந்து மாதத்திற்கு குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல், தோடுகளை தொடர்ச்சியாக அணிய வேண்டும்.


    * காது குத்தும் கருவி சுத்தமானதாக இல்லை என்றால் காது குத்தப்பட்ட இடத்தில் கிருமிகள் தாக்க அதிக வாய்ப்புள்ளது.


    * அவர்கள் அணியக்கூடிய காதணிகள் தரமானதாக இல்லை என்றாலும் இது போன்று கிருமிகள் தாக்க வாய்ப்புள்ளது.


    * காது குத்தும் இடத்தை தரமான ஆண்டிசெப்டிக்கை பயன் படுத்தி கழுவவும்.


    * சில நேரங்களில், காது குத்திய இடத்தில் சிறிய தழும்புகள் வர வாய்ப்புகள் உள்ளது. இது சில நாட்களில் தானாகவே நீங்கிவிடும். ஆனால் இது கூட பலபெரும் பிரச்சனைக்கு காரணமாக அமையலாம். பெரும்பாலும் காது குத்தும் இடங்களில் கட்டி இருந்தால் இந்த பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். அதனால் காது குத்தும் போது கட்டி இருந்தால் அந்த இடத்தை தவிர்ப்பது நல்லது.


    * உங்கள் குழந்தைக்கு இரும்பு போன்றவற்றினால் அலர்ஜி ஏற்படுமானால் அந்த அலர்ஜி, இது போன்ற காதணிகள் அணிவதால் உங்கள் குழந்தையை பாதிக்கலாம்.


    * குழந்தைகளின் காதணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.


    * குழந்தை மருத்துவமனைகளில் இதனை செய்வது நல்லது.


    * காது குத்துவது சரியாக செய்யப்படவில்லை என்றால் அது குழந்தைகளுக்குஅதிகமான வலியை ஏற்படுத்தும்.

    பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ்...

    By: ram On: 21:03
  • Share The Gag

  •       சுள்ளெனக் கொளுத்தும் வெயிலையும், சடசட மழையையும் தாங்கி கொள்ளலாம். அதுவும் எலும்பை ஊடுருவும் கார்த்திகை, மார்கழிப் பனியை கண்டால் பயப்படுவோம். மழையும் குளிரும் வாட்டும் இந்த காலக்கட்டங்களில் காய்ச்சலும் சளித் தொந்தரவும் எளிதில் வந்துவிடும்.

    உதடுகளில் வெடிப்பு, கை, கால்களில் வறட்சி ஏற்படும். இதற்காக நாம் கவலைப்பட வேண்டாம். நாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்தால் பனியும் குளிரும் நம்மை எதுவும் செய்யாது.

    ஒரே சீரான தட்ப வெப்பநிலை இல்லாமல் வெப்பமும் பனியும் கலந்து இருக்கும் நாட்களில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். பனிக்காலத்தில் ஏ டிபிக்கல் வகை வைரஸ் அதிகமாக தாக்கும். இந்த வைரஸ் கிருமிகள் தாக்கினால் 10 முதல் 13 நாட்கள் வரை வலி நீடிக்கும். சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் நமது

    உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்து வருவதுதான் இதற்குக் காரணம். இந்த வைரஸ் குழந்தைகளையும், வயதானவர்களையும்தான் அதிகம் தாக்குகிறது. இந்தக் காய்ச்சல் வந்தவர்கள் காரத்தைத் தவிர்த்துவிட வேண்டும். இட்லி, இடியாப்பம், கோதுமை ரவை உப்புமா, புழுங்கல் அரிசி கஞ்சி, பிரெட் ஆகியவற்றைச் சாப்பிடலாம். சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் ஆகிய பழங்களை சாப்பிடலாம். புளிப்புச் சுவை நிறைந்த பழங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

    வெயில் காலங்களில் நம் உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் இந்தப் பழங்கள், குளிர் காலங்களில் ஒத்துக்கொள்ளாது. காரணம், தட்பவெப்ப நிலைக்கு ஏற்றமாதிரி நம் உடல் செயல்பாடுகள் மாறுவதுதான். வெயில் காலங்களில் நமக்கு அதிகமாக வியர்க்கும்.

    அப்போது வியர்வையுடன் சேர்ந்து அல்கலைன் சிட்ரைட் என்ற அமிலமும் நம் உடலில் இருந்து வெளியேறும். அதை ஈடு செய்வதற்காக அமிலச் சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்கள் மற்றும் மோர், பானகம் போன்ற புளிப்புச்சுவை நிறைந்த பானங்களைப் பருகுவோம். குளிர் காலத்தில் அதிகமாக வியர்க்காத நிலையில் இவற்றைக் குடிக்கும்போது, நம் உடலில் அதிக அளவில் அமிலச் சத்து சேர்ந்து, சளி, சைனஸ் போன்றவை ஏற்படலாம். முக்கியமாக பச்சை திராட்சையையும், பச்சை வாழைப்பழத்தையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    பனிக்காலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். குளிக்க வேண்டும். வெந்நீரில் கைப்பிடி அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் குடித்தால் சளி பிடிக்காது, தொண்டை வலியும் வராது.

    துளசி கிடைக்கவில்லை என்றால் கற்பூரவல்லி, தூதுவளை கீரை ஆகியவற்றில் கஷாயம் வைத்தும் குடிக்கலாம். எந்தக் கீரையும் கிடைக்கவில்லையென்றால் இரண்டு வெற்றிலையை மென்று சாப்பிடலாம். கற்பூரவல்லி கஷாயம் குடிக்கப் பிடிக்கவில்லையென்றால் அதில் பஜ்ஜி, மோர்க் குழம்பு செய்து சாப்பிடலாம்.

    குழந்தைகளுக்கு இரவில் தூங்குவதற்கு முன்பு காதுகளின் பின்புறங்களில் லேசாகத் தைலம் தேய்த்தால் சளி பிடிக்காது. எந்த உணவாக இருந்தாலும் சுடச்சுட சாப்பிடத் தர வேண்டும். கடுகுடன் பால் அல்லது தண்ணீர் சேர்த்து அரைத்து, தினமும் பூசி வர, சருமம் மென்மையாகி, பளபளக்கும். ஒரு கரண்டி ஆலிவ் ஆயிலை ஒரு பக்கெட் நீரில் கலந்து குளிக்கலாம். சருமம் மிகவும் வறண்டிருந்தால், ஆலிவ் ஆயிலை உடம்பில் பூசி, மசாஜ் செய்யவும். 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கலாம்.

    சிறிது பஞ்சை காதில் வைத்துக் கொண்டு சென்றாலும், குளிர் காற்றிலிருந்து தப்பிக்கலாம். குளிர்ச்சியான பானங்களை அருந்துவதை தவிர்க்கவும். சூப் அருந்தலாம். குழந்தைகளுக்கு குல்லா, ஸ்வெட்டர், சாக்ஸ் அணிவித்து, வெளியே அழைத்துச் செல்வதும் அவசியம்.

    எண்ணெய் மற்றும் மசாலா ஐட்டங்கள் அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. தினமும் காலையில், துளசி இலை நான்கை தண்ணீரில் ஊற வைத்து அருந்துவது நல்லது.

    குளிக்கும் போது சோப்பு பயன்படுத்தாமல், கடலை மாவு அல்லது பயத்தம் பருப்பு மாவு தேய்த்து குளிக்கலாம். தொண்டை வலி, கமறல், இருமல் போன்றவற்றுக்கு, ஒரு கரண்டியில் நெய்யை விட்டு காய்ந்ததும், ஒரு சிறு துண்டு வெல்லத்தை போட்டு பொங்கி வரும் போது, அரை தேக்கரண்டி மிளகுப் பொடி போட்டு, அடுப்பை அணைத்து. சற்று ஆறியதும் உருட்டி வாயில் போட்டு கொண்டால் இதமாக இருக்கும்; இருமலும் அடங்கும்.

    பாத வெடிப்பு நீங்க டிப்ஸ்

    பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

    கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஷ் கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும். வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும்.

    விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும். வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல குழைத்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம்.

    உதடுகளை பாதுகாப்பது எப்படி..?

    சோற்றுக் கற்றாழை சாரையோ அல்லது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜெல்லையோ உதடுகளில் தடவினால் உதடு ஈரப்பதத்துடன் வெடிக்காமல் இருக்கும். பொதுவாக நாம் குளிர் காலங்களில் தண்ணீர் குடிப்பதில்லை. உடம்பில் தண்ணீர் சத்து குறைந்தாலும் உதடுகள் வெடிக்கும். அதனால் குளிர் காலங்களில் தாகம் எடுக்கவில்லையென்றாலும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஊட்டச்சத்து பற்றாக்குறையினாலும் உதட்டில் தோல்உரிந்து, வெடித்துப் புண்ணாகும். அதனால் சத்துள்ள பழங்கள்,காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    அயன் படத்தில் நடிக்க இருந்தார் நட்ராஜ்..! கே வி ஆனந்த்..!

    By: ram On: 19:50
  • Share The Gag

  • பிரபல இயக்குனர் கே வி ஆனந்த் சமீபத்தில் வெளிவந்த சதுரங்க வேட்டை படத்தை பார்த்து நட்டி என்றழைக்கப்படும் நட்ராஜ் மற்றும் இயக்குனர் வினோத்தை மனதார பாராட்டினார்.

    இதை பற்றி கே வி. ஆனந்த் கூறுகையில், 'சதுரங்க வேட்டை' படத்தில் நட்டி நன்றாக நடித்திருக்கிறார். 'அயன்' படத்தில் சிட்டி ஜெகன் வேடத்திற்கு முதலில் நட்டியிடம் தான் பேசினேன்.

    ஆனால் ஒளிப்பதிவாளராக அவர் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போய்விட்டது" என்று கூறியிருக்கிறார் கே.வி.ஆனந்த்.

    கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஒரு ஆண் வர்க்கம்!

    By: ram On: 18:43
  • Share The Gag

  • இந்த உலகத்திலேயே ஆண் வர்க்கத்தை பொறுத்த வரை கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஒரு உயிரினம் கடல் குதிரைதான்.

    கடல் குதிரைகளிடையே உடல் உறவு என்பது கிடையாது. பரஸ்பரம் சீண்டிக் கொள்கின்றன.

    இச்சீண்டல்களை தொடர்ந்து பெண் கடல் குதிரையின் உடல் சிலிர்த்து விடுகின்றது.

    ஆண் கடல் குதிரையின் வயிற்றுப் பகுதியில் இனப் பெருக்க பை என்கிற உறுப்பு காணப்படுகின்றது.

    ஆணின் இவ்வுறுப்புக்குள் பெண் கடல் குதிரை மிகவும் நுட்பமான முறையில் முட்டைகளை உட்செலுத்தி விடுகின்றது.

    ஆண் கடல் குதிரை கர்ப்பம் தரித்து விடுகின்றது.

    ஆண் கடல் குதிரையின் வயிற்றில் சுரக்கின்ற ஒரு வகை திரவம்தான் குட்டிகளுக்கு உணவு.

    மூன்று வாரங்களின் பின் குட்டிகளை வெளித் தள்ளி விடுகின்றது ஆண் கடல் குதிரை.

    ஒரு பெரிய படையை போல குட்டிகள் வெளியில் வந்து விடுகின்றன. பிரசவ வேதனை மிகவும் கொடுமையானது தான்.

    உடல் எடையை குறைக்கும் உணவுகள்! அட அப்படியா..?

    By: ram On: 17:01
  • Share The Gag
  •  எப்போதும் உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் ஈஸியான விஷயம் அல்ல.

    யாருக்கு உடல் மிகவும் அழகாக ஸிலிம்மாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அவர்கள் கண்டிப்பாக தங்கள் உணவுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

    அதற்காக சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்றில்லை. அனைத்தையும் சாப்பிடலாம் ஆனால் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்.

    அதிலும் சரியான டயட்டை மேற்கொள்ளாமல் இருந்தால், முகம் வாடி உடலில் செரிமானம் குறைந்து குடலானது சுருங்கிவிடும்.

    ஆகவே ஆரோக்கியமான உடலை அழகான சருமத்தை பெற வேண்டுமென்றால், நல்ல ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உண்ண வேண்டும்.

    மேலும் ஒரு சில உணவுகள் மிகவும் குறைந்த கொழுப்புகள் நிறைந்திருப்பதோடு, அதைச் சாப்பிட்டால் உடல் அழகாக ஒல்லியாக இருக்கும்.

    பெர்ரிஸ்: உடல் எடையை குறைக்க பெர்ரிப் பழங்கள் மிகவும் சிறந்தவை. ஏனெனில் அந்த பழத்தில் சுவையைத் தரும் ஆன்தோசையனின்கள், உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்கிறது.

    இதற்காக ஒரு எலியின் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அந்த எலி எவ்வளவு தான் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்டாலும், இந்த பழத்தை சாப்பிட்டதால் அதன் எடை கூடவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு காரணம் ஆன்தோசையனின்கள் தான். ஆகவே எத்தகைய உணவுகளை உண்டாலும், இந்த பெர்ரி வகையைச் சேர்ந்த ஸ்ட்ராபெர்ரி, க்ரான் பெர்ரி மற்றும் திராட்சை போன்றவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். அதிலும் இதனை ஜூஸ் அல்லது சாலட் போன்றும் செய்து சாப்பிடலாம்.

    ஆப்பிள்: ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை. ஏனெனில் ஆப்பிளில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள் இருப்பதால், அடிக்கடி பசி ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.

    மேலும் உடலில் இரத்தம் நன்கு ஊறும். அதிலும் ஆப்பிளில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆப்பிள் உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு செரிமானத்தையும் அதிகரிக்கிறது. இதனால் உடலில் அதிகமான அளவு கொழுப்புகள் சேராமல் இருக்கும்.

    தக்காளி: சமையலில் பயன்படுத்தும் தக்காளி உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு உடலை சுத்தம் செய்கிறது.

    அதிலும் தக்காளியில் அதிகமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் குறைந்த அளவு கொழுப்பு, கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால்கள் இருக்கிறது.

    ஆகவே உடல் ஸ்லிம்மாக தினமும் ஒரு தக்காளி சாப்பிட வேண்டும். ஆனால் இந்த தக்காளியை சமையலில் சேர்த்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறந்தது. ஏனெனில் சமைத்து சாப்பிட்டால் தக்காளியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும்.

    சொக்லேட்: சொக்லேட் என்று சொன்னதுமே அனைவருக்குமே ஒரு ஆசை ஏற்படும். அத்தகைய சொக்லேட்டில் டார்க் சொக்லேட் சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, சருமமும் மென்மையாக மின்னும்.

    நிறைய ஆராய்ச்சியில் டார்க் சொக்லேட் சாப்பிட்டால், அதில் இருக்கும் கொக்கோ உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு உடலை பிட்டாகவும் வைக்கும்.

    அதுமட்டுமல்லாமல் சொக்லேட் இதய நோயைத் தடுப்பதோடு பசியையும் கட்டுப்படுத்தும். வேண்டுமென்றால் பசி ஏற்படும் போது சிறிது டார்க் சொக்லேட் சாப்பிட்டுப் பாருங்கள், சுவையாக இருப்பதோடு, பசி கட்டுப்பட்டு உடல் எடையும் கூடாமல் இருக்கும்.

    ஆகவே இத்தகைய உணவுகளையெல்லாம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை அதிகமாகாமல் உடலும் பிட்டாக, சருமமும் மென்மையாக அழகாக இருக்கும்.

    பிரியங்கா சோப்ராவை பார்த்து அழுத சமந்தா!

    By: ram On: 16:47
  • Share The Gag

  • ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற குத்து சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை சித்தரிக்கும் படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார்.

    சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது. டிரெய்லரை பார்த்தால் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வருவது உறுதி. அதற்கு சமந்தா மட்டும் விதிவிலக்கல்ல.

    விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த சமயத்தில் 'மேரி கோம்' டிரெய்லரை பார்தத சமந்தா, அனைவரின் முன்னிலையில் அழுது விட்டாராம். அதை அவரே தான் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    ஹிர்த்திக் ரோஷன் ஜோ‌டியான முகமூடி ஹீரோயின்..!

    By: ram On: 08:08
  • Share The Gag

  •  மிஷ்கினின் முகமூடி படத்தின் பலவீனமாக முன் வைக்கப்பட்டதில் முக்கியமானது ஹீரோயின். முகமூடியில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் பூஜா ஹெக்டே. அவரது தோற்றமும், நடிப்பும் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. சில விமர்சகர்கள் இதனை வெளிப்படையாக எழுதவும் செய்தனர்.

    தமிழகத்தில் புறக்கணிக்கப்பட்ட பூஜா ஹெக்டே இந்தியில் மிகப்பெரிய வாய்ப்பை பெற்றுள்ளார். லகான், ஸ்வதேஸ், ஜோ‌தா அக்பர் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய அஷுதோஸ் கவாரிகரின் மொகஞ்ச தாரோ படத்தில் ஹிர்த்திக் ரோஷனுட‌ன் நடிக்க உள்ளார்.

    மொகஞ்ச தாரோ பல நூற்றாண்டுகள் முந்தைய கதை. சரியாகச் சொன்னால் மொகஞ்ச தாரோ நாகரிகம் இருந்ததாக கூறப்படும் காலகட்டத்தைச் சேர்ந்தது. மிகப் பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்துக்கு இந்தியாவிலேயே அதிகபட்சமாக 50 கோடிகள் ஹிர்த்திக் சம்பளமாக பெறப் போவதாக கூறப்படுகிறது.

    அஷுதோஸ் லகான், ஸ்வதேஸ் படங்களிலும் புதுமுகங்களுக்குதான் வாய்ப்பளித்தார். அதேபோல் மொகஞ்ச தாரோவில் பூஜா ஹெக்டேக்கு லாட்டரி அடித்துள்ளது.

    தென்னிந்தியாவில் புறக்கணிக்கப்பட்ட வித்யாபாலன் இப்போது இந்தியின் முன்னணி நடிகை. நாளை அதேநிலை பூஜாவுக்கும் ஏற்படலாம்.

    இயற்கை முறையில் பயனுள்ள சில வைத்திய குறிப்புகள்!

    By: ram On: 07:46
  • Share The Gag
  •  உணவுக்கு பின்பு தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.

     * துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

     * 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கிண்ணம் நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

     * காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

     * தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

     * அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

     * கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

     * பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

     * சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

     * குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

     * காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

     * வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.