Sunday, 21 September 2014

"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"

By: ram On: 23:56
  • Share The Gag
  • "நாம் இருவர் நமக்கு ஒருவர்"
    என்பது போன்ற குடும்பக் கட்டுப்பாடு கோசங்களை விளம்பரமாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதினை வீதிதோறும் நாம் காணலாம்.

    படித்த இளைஞர்களிடையே திருமணம் ஆனதும் குழந்தைப் பெற்றுக் கொள்வதினை தள்ளி வைப்பதும், ஒன்னிரண்டு குழந்தைகளோடு கர்ப்பத்தடை செய்து கொள்வதும், கருத்தடை சாதனங்களை உபயோகிப்பதும் வாடிக்கையாக இருந்து வருவதினை நாம் காணலாம்.

    ஆனால் அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக் கழகத்தின், 'சமூக அமைப்பு சபையின்' ஆராச்சியின் பயனாக வெளியிடிடப்பட்ட அறிக்கையில், " அதிகமாக பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் பல காலங்கள் ஒற்றுமையாக மகிழ்வுடன் வாழ்கிறார்கள். ஆனால் ஒரு குழந்தை பெற்றவர்கள் சீக்கிரமே மனக் கசப்புடன் பிரிந்து வாழ்கிறார்கள்" என்ற உண்மையினை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

     படித்த இளைஞர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதினை தள்ளிப் போடுவதும், ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்வதும், பெண் குழந்தை பெற்றதும் அல்லது அது பிறக்கப் போகிறது என்று மருத்துவ ரீதியாக அறிந்து கொல்வதும் சரியா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

    எனக்குத் தெரிந்த இரண்டு சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

    1) எங்களூர் இளையான்குடியில் எங்கள் தெருவிற்கு அடுத்தத் தெருவில் இரண்டு முக்கிய நடுத்தர வர்க்கத்தினைச் சார்ந்தவர்களில் ஒருவருக்கு பதினொன்று, மற்றவருக்கு பத்துக்  குழந்தைகள். ஊரில் அவர்கள் நண்பர்கள் அவர்களைப்  பார்த்துக்  போட்டிப் போட்டுக் குழந்தை பெர்க்கிறீர்களா என்று கூட  கேட்டு இருக்கின்றேன். இன்று அவர்கள் அத்தனைக் குழந்தைகளும்,பேரப் பிள்ளைகளும்  நல்ல சுகத்துடனும், வசதிகளுடனும் வாழ்கிறார்கள்.

    2) வளைகுடா நாட்டில் வாழும் ஒருவர் ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் பெற்றுக் கொண்டு மனைவிக்குக் கருத்தடை செய்து கொண்டார். ஆனால் அவருடைய கல்லூரி படிக்கும் மகன் இரு சக்கர வாகன விபத்தில் இறைவனடி சேர்ந்து விட்டதால் அவர் மனம் ஓடிந்தவராகி விட்டார்.

    இவைகளை ஏன் இங்கே குறிப்பாக சொல்கின்றேனென்றால் பல பிள்ளைகளைப் பெற்றவர்கள் ஓட்டாண்டியாகப் போனதுமில்லை, ஒரு குழந்தைப் பெற்றவர் சந்தோசமாக வழ்ந்ததுமில்லை என்று சொல்வதிற்குத் தான்.
    "குழந்தைகள் பெற்றுக் கொள்வது சிரமம் தான். அனால் பயனுள்ளது, ஏனென்றால் விலைவாசி ஏற்றம்,குறைந்த வருமானம் என்று மனம் சஞ்சலம் இருக்கத் தான் செய்யும். ஆனால் உண்மையில் குழந்தைகள் பெற்றுக் கொள்வது ஒரு மூலதனமாகும்". என்று கிழக்கு மேற்கு சுற்றுப்புற சூழல் அராய்ச்சி இயக்குனர் டெர்ரி-வில்லியம் கூறுகிறார்.
    அதற்கான பத்துக்  காரணங்களாக  கீழ்க் கண்டவைகளைக் கூறுகிறார்:
    1) குழந்தைப் பெற்றுக் கொள்ளது விட்டால் மன வாழ்வு நிறைவு பெறாது.
    2) கிடைத்ததினை பெற்றோரே தின்பது என்றசுயநலமானது, பகிர்ந்துண்ணும் பண்பை வளர்க்கும்.
    3) குழந்தைகள் பிற்காலத்தில்  பலன் தரும் விருச்ச மரங்கள்.
    4) பெற்றோர்கள் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களாக இருக்கலாம். ஆனால் இன்றைய கணினி உலகில் குழந்தைகள் அவர்களுக்கும் பாடம் எடுக்கும்.
    5) குழந்தைகள் பெறும்போது பெற்றோர்கள் உடல் உறுப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு சுகாதாரத்துடன் வாழ்வார்கள்.
    6) குழந்தைகள் பெற்றுக் கொள்வது மூலம், ஆண்களின் வீரத்தினையும், பெண்களின் வீரியத்தினையும் அறிந்து கொள்ளலாம்.
    7) குழந்தைகள் மூலம் உங்களுக்குப் பெருமை சேர்க்கும். ஒரு மகன் அல்லது ஒரு மகள் தான் பெற்றோர் போன்று வர வேண்டும் என்று சொல்லும்போது உங்கள் மனது அவர்களைப் பெற்ற சந்தோசத்தினை பெற்றவர்களாவீர்.
    8) பெற்றோர்கள் குழந்தைகளோடு வன விலங்குப் பூங்காவிற்கோ,கடக்கறைக்கோ, விளையாட்டுத் திடலுக்கோ அல்லது இடங்களுக்கோ சென்று அவர்களுடன் விளையாடும் பொது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவிண்டோ?
    9) குழந்தைகள் செய்யும் குறும்புத் தனத்தினை கண்டு சிரிக்காத பெற்றோர்கள் உண்டா?
    10) நீங்கள் குழந்தைகளைக் கொஞ்சும்போது, அவை உங்களைக் கொஞ்சும்போது ஏற்படும் மனநிறைவு பெறாத பெற்றோர் உண்டா?

    சீனா கூட சில ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்ளும் கட்டுப் பாடு வந்து 2013 ஆண்டில் அந்தக் கட்டுப்பாடு ஏற்படுத்திய பொருளாதார, சுற்றுப் புறசூழல் தாக்கத்தினை அறிந்து அந்தக் கட்டுப்பாடினை இரண்டு குழந்தையாக மாற்றி உள்ளனர்.

    சுற்றுலாபுகழ் சுவிட்சர்லாந்து நாட்டில் குழந்தைகள் எண்ணிக்கை குறைவிதினை அறிந்து குழந்தை பெறுவதிற்கு பல வகையில் ஊக்கம் கொடுக்கின்றனர்.
     ஆகவே மக்களை பெற்றவர் மகாராசியாகத் தான் வாழ்ந்துள்ளனர், எந்தக் காலத்திலும் ஓட்டாண்டியாக வாழ்ந்தது இல்லை!

    ஜெ.வின் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக காத்திருக்கிறார் ரஜினி! கூட்டத்தில் கொளுத்திப்போட்ட டி.ராஜேந்தர்

    By: ram On: 22:39
  • Share The Gag
  • ‘கல்கண்டு’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் வளாகத்தில் நடந்தது. நாகேஷின் பேரன் கஜேஷ் இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். தலைமுறை வாழ்த்தும் நகைச்சுவை நடிகரின் பேரன் என்றால் சும்மாவா? விழா களை கட்டியது. தமிழ்சினிமாவின் முக்கிய புள்ளிகளான டி.ராஜேந்தரும், கே.பாக்யராஜும் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள்.

    இங்குதான் குப்பை லாரி குப்புற விழுந்தது போல ஒரு பெரிய பிரச்சனையை கிளம்பிவிட்டுவிட்டு போனார் டி.ராஜேந்தர். இப்போதிருக்கும் நகைச்சுவை நடிகர்கள் தயாரிப்பாளர்களை அழ வைக்கிறார்கள். 1500 ரூபாய் சம்பளம் வாங்கிட்டு என் படத்தில் நடிச்ச நகைச்சுவை நடிகர் இப்போ கோடிக்கணக்குல சம்பளம் கேட்கிறார் என்றெல்லாம் சந்தானத்தை பெயர் சொல்லாமலே வாரினார். எல்லாம் ஓ.கே.

    எங்கேயோ சம்பந்தமில்லாமல் இருக்கும் ரஜினியையும் உரசிவிட்டு கிளம்பியதுதான் ஹையோடா. நானெல்லாம் எதுக்கும் பயப்பட மாட்டேன். மூன்று முதல்வர்களை எதிர்த்தவன். (இந்த ஒரே வார்த்தையை மட்டும் இதுவரை ஓராயிரம் மேடைகளில் சொல்லியிருப்பார் அவர். இங்கும் அதே கேசட்தான்) ஆனால் ரஜினி அப்படியல்ல. பி.ஜே.பி கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ரஜினியை பா.ஜ.க வில் சேர அழைச்சிருக்காங்க. ஆனால் ரஜினி யோசித்து பதில் சொல்வதா சொல்லிட்டு இன்னைக்கு வரைக்கும் பதிலே சொல்லல. ஏன் தெரியுமா? அவர் ஜெயலலிதா மீது பெங்களூர்ல நடக்கிற சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக வெயிட் பண்ணிகிட்டு இருக்கார். அதை வச்சுதான் அவர் முடிவு சொல்லுவார் என்று பேச, மேடையில் இருந்தவர்கள் நெளிய ஆரம்பித்தார்கள்.

    தன்னை துணிச்சல்காரர் என்று சொல்லிக் கொள்வது டிஆரின் உரிமை. ஆனால் அரசியல் கட்சி துவங்குவது பற்றியோ, பா.ஜ.க.வில் சேர்வது பற்றியோ கருத்தே சொல்லாத ஒருவரை கோர்த்துவிடுவதுதான் எந்த விதத்தில் சேர்த்தி என்று புரியவில்லை.

    உங்கள் கணினியின் திரை அழுக்காக உள்ளதா...?

    By: ram On: 22:20
  • Share The Gag
  • அதை சுத்தபடுத்த இந்த லிங்கை கிளிக் செய்தாலே போதும், சாப்ட்வேர் இல்லாமலே உங்கள் ஸ்க்ரீன் சுத்தம் செய்யப்பட்டுவிடும்...!




    http://www.formation-massage-stage.fr/outils/nettoyeurecran/cleanscreen.swf

    வேப்பம் பட்டை மருத்துவ பயன்கள் - நீரிழிவு, சர்க்கரை குஷ்டம் குணமாகும்.

    By: ram On: 21:18
  • Share The Gag
  • • முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி சம அளவில் கலந்து அதனுடன் சிறிது தேன் சேர்த்து காலை, மாலை என 48 சாப்பிட்டு வரத் அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

    • வேப்பம்பட்டை 5 பலம், கஸ்தூரி மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் இவை வகைக்கு 50 கிராம் எடுத்து இவற்றை இடித்துத் தூளாக்கி, ஒரே மாட்டின் பசும்பால் ஒரு படி நல்லெண்ணெய் ஒன்றரைப்படி எடுத்து இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து காய்ச்ச வேண்டும்.

    உரிய பதம் வந்ததும் இறக்கி ஆறியவுடன் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் வாதரோகங்கள், பாரிச வாயு, சீதளரோகம் சம்பந்தமுடையவர்கள், தோல் சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள் விரைவில் குணம் பெறுவார்கள்.

    • நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்தி காயவைத்து பொடித்து அதனைக 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும், வனப்பும் பெறும்.  உடலில் எந்த நோயும் போகும். நீரிழிவு, சர்க்கரை குஷ்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும்.

    • வேப்பம் பட்டையுடன் நீர், எண்ணெய் மற்றும் பிற மருந்துப்பொருட்களைச் சேர்த்து காய்ச்சி தைலங்களாக தோல் புண்,சொறி,​​ சிரங்குகளின் மீது பூசிவந்தால் அவை குணம் பெறும் என்று மூலிகை மருத்துவ நூல்களில் கூறப்பட்டு வருகிறது.

    ரஜினிக்கு கிடைத்தது எனக்கு கிடைக்கவில்லை?

    By: ram On: 20:29
  • Share The Gag
  • யாமிருக்க பயமே படத்தை யாரும் அத்தைனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். படம் ஏ,பி,சி என அனைத்து செண்டர்களிலும் பட்டையை கிளப்பியது.

    இப்படத்தில் ஃப்ரைட் ரைஸ் திருடனாக நடித்தவர் தான் நளினிகாந்த். இவர் ரஜினி சினிமாவில் அறிமுகமான காலத்தில், இவரும் அறிமுகமானவர். நீண்ட நாட்கள் இடைவேளைக்கு பிறகு அவர் தன் மனதில் உள்ள பாரங்களை எல்லாம் இறக்கி வைத்துள்ளார்.

    இதில் ’ரஜினியோட வளர்ச்சியைப் பார்த்து எனக்கு நானே இந்தப் பேர் வெச்சுக்கலை என்பதுதான் நிஜம். அது ரஜினிக்கும் தெரியும். அவருக்கு கொடுப்பினை அப்படி இருந்தது. எனக்குக் கொடுப்பினை இப்படி. கடவுள் எனக்கு விதிச்சது இவ்ளோதான் என்பதை நான் பெருந்தன்மையா ஏத்துக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

    தொப்பையை குறைக்க அருமையான வழி !

    By: ram On: 20:19
  • Share The Gag
  • * உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

    * பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை வி…ட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

    * எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

    * காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

    * இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

    * உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

    * தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

    * எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

    இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

    சர்க்கரையின் அளவை சரிபாதியாக குறைக்கப் பரிந்துரை – BBC

    By: ram On: 18:53
  • Share The Gag
  • நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரையின் ஒரு நாளைக்கு சுமார் 15 கிராமாக குறைக்கவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள். இதனை ஊக்குவிக்க அரசுகள் சர்க்கரை வரி என்கிற புதிய வரியை விதிக்கலாம் என்றும் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

    உலக சுகாதர நிறுவனமும், இங்கே பிரிட்டனின் சுகாதார நிபுணர்களும் சமீபத்தில் அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை சரிபாதியாக குறைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

    இன்றைய நிலையில் ஒருவரின் அன்றாட உணவில் இருந்து உடலுக்கு பெறப்படும் சக்தியின் அளவில் அதிகபட்சமாக 10 சதவீதம் வரை உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையில் இருந்து கிடைக்கலாம் என்று மருத்துவர்கள் அனுமதிக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் கொடுத்திருந்த தனது பரிந்துரையில் இந்தமாதிரி சேர்க்கப்படும் சர்க்கரையில் இருந்து உடலுக்கு கிடைக்கும் சக்தியின் அளவு சரிபாதியாக குறைக்கப்பட வேண்டும்; அதாவது சேர்க்கப்படும் சர்க்கரைச்சக்தியின் அளவு 5 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

    தற்போது லண்டனில் இருக்கும் ஆய்வாளர்கள் இதுகுறித்து செய்திருக்கும் பரிந்துரையில் இந்த ஐந்து சதவீதத்திற்கு பதிலாக உடலுக்கு கிடைக்கும் உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை சக்தியின் அளவு 3 சதவீதத்திற்கு மேல் போகாமல் இருக்கவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

    சிறார்களின் பற்களை சிதைக்கும் சர்க்கரை

    குறிப்பாக பற்களில் ஏற்படும் சிதைவுக்கு உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையே முக்கிய காரணியாக இருப்பதாக சுட்டிக்காட்டும் லண்டன் ஆய்வாளர்கள்ம், நம் அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை குறைத்தால் மட்டுமே பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பலவகையான நோய்கள் மற்றும் அதற்கு அரசும் தனிநபர்களும் செலவிடும் கூடுதல் மருத்துவ செலவுகளை குறைக்க முடியும் என்று கணக்கிட்டு தெரிவித்திருக்கிறார்கள்.
    சர்க்கரை பற்சிதைவை அதிகரிக்கும்

    சர்க்கரை பற்சிதைவை அதிகரிக்கும்

    குறிப்பாக பற்சிதைவு என்பது பெருமளவு தடுக்கப்படக்கூடிய ஒரு நோய் என்று கூறியுள்ள இந்த ஆய்வாளர்கள், ஒரு குழந்தையின் உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை அளவு அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்றபடி, அந்த குழந்தையின் பற்சிதைவின் அளவும் அதிகரிப்பதாக இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரச் செலவில், 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை பற்கள் தொடர்பான நோய்களுக்காக செலவிடப்படுவதாகவும் இவர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்.

    பல் மருத்துவத்துக்காக செலவிடப்படும் இந்த 5 முதல் 10 சதவீத அரசு மற்றும் தனியார் பணத்தை, அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை குறைப்பதன் மூலம் கண்டிப்பாக குறைக்க முடியும் என்றும் இந்த ஆய்வாளர்கள் அரசுகளுக்கு பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

    சர்க்கரை வரி விதிக்க யோசனை

    இது தொடர்பில் அரசுகள் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்கிறார் இந்த ஆய்வறிக்கையை எழுதியவர்களில் ஒருவரான ஊட்டச்சத்து மருத்துவத்துறை பேராசிரியர் பிலிப்ஸ் ஜேம்ஸ். உதாரணமாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளிகள், மருத்துவமனைகளில் இருக்கும் சாக்லேட் மற்றும் சர்க்கரை கலந்த குளிர்பானங்களை விற்கும் தானியங்கி இயந்திரங்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும் என்று இவர் அரசுகளுக்கு பரிந்துரை செய்கிறார்.

    அடுத்ததாக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவு 2.5 சதவீத்திற்கு மேல் போனால் அத்தகைய உணவுகளை அதிக சர்க்கரை உள்ள உணவு என்று லேபிள் ஒட்டுவதோடு, அத்தகைய உணவுகள் மீது சர்க்கரை வரி என்கிற கூடுதல் வரியையும் விதிக்கவேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்திருக்கிறார். அதிகரித்த சர்க்கரையை அன்றாடம் சாப்பிடுவது என்பது மிகப்பெரிய பொது சுகாதார பிரச்சனையாக மாறிவிட்டது என்று கூறும் பேராசிரியர் ஜேம்ஸ், இதில் இனியும் காலம் தாழ்த்த முடியாது என்றும் எச்சரிக்கிறார்.

    ஆரோக்கியமாக இருக்க அன்றாட சர்க்கரையின் அளவு என்ன?
    ஒரு நாளைக்கு 5 முதல் 7 தேக்கரண்டி சர்க்கரையே சரியான அளவு

    ஒரு நாளைக்கு 5 முதல் 7 தேக்கரண்டி சர்க்கரையே சரியான அளவு

    ஒருவரின் அன்றாட உணவிலிருந்து உடலுக்கு கிடைக்கும் சக்தியின் அளவில் 10 சதவீதத்துக்கு மேல் உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையால் கிடைக்கக்கூடாது என்கிற முந்தைய அதிகபட்ச அளவையே இன்று பெரும்பாலானவர்கள் கடைபிடிப்பதில்லை என்றும் இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

    இதில் புதிய பரிந்துரையான 5 சதவீதம் என்பது பெண்களுக்கு ஒரு நாளைக்கு 25 கிராம் சர்க்கரை. அதாவது 5 முதல் 6 தேக்கரண்டி சர்க்கரை. இதுவே ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 35 கிராம் சர்க்கரை. அதாவது 7 முதல் 8 தேக்கரண்டி சர்க்கரை.

    இந்த அளவையும் ஏறக்குறைய சரிபாதியாக குறைக்கவேண்டும் என்று இந்த ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விஷால் நடிக்கும் ஆம்பள படத்தின் கதை லீக் ஆனது?

    By: ram On: 18:25
  • Share The Gag

  • பூஜை படம் முடிவதற்குள் விஷால், சுந்தர்.சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா முதன் முறையாக நடித்து வருகிறார்.

    இந்நிலையில் இப்படத்தின் கதை இது தான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விஷாலுக்கு மூன்று அத்தைகளாம், அந்த அத்தைகள் தங்கள் மகளை எப்படியாவது விஷாலுக்கும் திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்று போட்டி போடுகின்றனர்.

    இதில் கிளைமேக்ஸில் விஷால் யாரை கரம் பிடிக்கிறார் என்பதை தன் வழக்கமான நகைச்சுவை பாணியிலேயே சுந்தர்.சி திரைக்கதை அமைத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    நண்பேன்டா படப்பிடிப்பில் பயங்கர விபத்து! ஷுட்டிங் நின்றது

    By: ram On: 17:58
  • Share The Gag
  • உதயநிதி, நயன்தாரா, சந்தானம் நடித்து வரும் படம் நண்பேண்டா. இப்படத்தின் படப்பிடிப்பு விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூந்துறையில் நடந்து வருகிறது.

    இதில் ஷெட் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்காக ராட்சத கிரேன் ஒன்று பயன்படுத்தப்பட்டது. அப்போது எதிர்பாரத விதமாக இந்த கிரேன் சாய கீழே நின்று கொண்டிருந்த கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அருணகிரி, ரமேஷ், சதீஷ், மூர்த்தி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதை தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை நிறுத்தப்பட்டுள்ளது.

    சக்கரை வியாதியை சமாளிக்க எளிய கைமருந்து

    By: ram On: 17:38
  • Share The Gag
  • இன்று உலகில் அதிகமானவர்கள் இன்று இந்த வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.  அது மட்டுமல்ல இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் விஷேட நிகழ்வுகளில் கலந்து இனிப்பான பண்டங்களை சாப்பிட முடியாது மற்றும் உறவினர்களின் வீட்டுக்குச் சென்றால் அவர்களிடமிருந்து ஏதாவது ஒரு இனிப்பு பண்டத்தை சாப்பிட முடியாது. அத்துடன் இந்த நோய் பரம்பரையாகவும் வருகின்றன எனலாம். இந்த நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த சிறிய கைமருந்து முறை இங்கே உங்களுக்காக தரப்படுகின்றன. Suger

    நீரழிவு சக்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து.

    சர்க்கரை நோய்க்கு ஒரு எளிமையான சிகிச்சை.

    முயற்சித்துப் பார்க்கலாமே…!

    மருந்து:-

    வெந்தையம் – 50 கி

    கருஞ்சீரகம் – 25 கி

    ஓமம் – 25 கி

    சீரகம் – 25 கி

    இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

    (வறுத்த பின் மிக்‌ஷியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்).

    தினமும் காலை சிறிய ஸ்பூன்-ல் 1 ஸ்பூன் அளவு எடுத்து வாயில் போடவும். கசப்பாக இருக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மேலும் நல்லது. ( தண்ணீர் தேவைப்பட்டால் குடிக்கலாம்).

    ஒரு வாரத்திற்கு பின் மருத்துவரிடம் சென்று சுகர் சோதித்து பார்த்துக் கொள்ளவும்.

    {வேறு நோய்கள் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின் செய்யவும்.}

    விக்ரமிற்கு தேசிய விருது கிடைத்தால் போதும்! சொல்கிறார் ஷங்கர்

    By: ram On: 11:14
  • Share The Gag
  • தமிழ் சினிமா ரசிகர்களின் அனைவரின் பார்வையும் தற்போது ஐ படத்தின் மீது தான் உள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து இந்தியா முழுவதும் நல்ல வரவேறபை பெற்று வருகிறது.

    இப்படத்திற்காக தன் உடலை வருத்தி நடித்த விக்ரம் குறித்து இயக்குனர் ஷங்கர் கூறுகையில் ‘எல்லோரும் உயிரை கொடுத்து தான் நடித்தேன் என்று கூறுவார்கள், ஆனால் விக்ரம் தன் உடலை கொடுத்து நடித்துள்ளார்.

    கண்டிப்பாக இப்படத்திற்காக விக்ரம் அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தால் அதுவே எனக்கு போதும்’ என கூறியுள்ளார்.

    ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?

    By: ram On: 11:02
  • Share The Gag
  • 4 வயதில்-
    என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை.

    6 வயதில்-
    என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும்.

    10 வயதில்-
    என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது..

    12 வயதில்-
    ஹும்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார்.

    14 வயதில்-
    என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.

    16 வயதில்-
    அப்பா அந்த காலத்து மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை.

    18 வயதில்-
    அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்?

    20 வயதில்-
    அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. அம்மா எப்படித்தான் இவரை சகித்துக்கொள்கிறாரோ?

    25 வயதில்-
    என் அப்பாவுக்கு என்ன ஆச்சு? நான் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே முதல் காரியமாகச் செய்கிறாரே?

    30 வயதில்-
    என் மகனை சமாளிப்பது பெரியகஷ்டம்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பாவுக்கு எத்தனை பயந்து நடந்தேன்?

    40 வயதில்-
    ஹும்! அந்த காலத்தில் என் அப்பா என்னை அத்தனை ஒழுக்கத்தோடு வளர்த்தார். நானும் என் மகனை அப்படித்தான் வளர்க்க வேண்டும்!

    45 வயதில்-
    குழந்தைகளை-அதுவும் டீன் ஏஜ் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கஷ்டம். என்னை அப்பா எப்படித்தான் சமாளித்தாரோ

    50 வயதில்-
    எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் என் அப்பா எங்கள் எல்லோரையும் நன்றாக வளர்த்தார். எனக்கு ஒரு மகனையே ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை.

    55 வயதில்-
    என் அப்பா ஒரு தீர்க்கதரிசி. தனித்துவம் மிக்கவர்.

    60 வயதில்-
    என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை!

    முதல் நிலைக்கு திரும்பவும் வருவதற்கு ஒரு மகனுக்கு 56 வருடங்கள் பிடித்திருக்கிறது.

    நல்ல வேளையாக உங்களுக்கு அத்தனை வயது ஆகவில்லையெனில், ஏன் தாமதிக்கிறீர்கள்? உடனடியாக உங்கள் அப்பாவுக்கு ஒரு ஃபோன் செய்து அவரை நீங்கள் மிகவும் நேசிப்பதாகச் சொல்லுங்கள்..

    ஆண்மையை அதிகரிக்க கல்தாமரை

    By: ram On: 00:02
  • Share The Gag

  • சித்தர்கள் உடலுக்கு நோய் வந்தபிறகு செய்ய வேண்டிய மருத்துவத்தை மட்டும் கூறவில்லை. நோய் என்றும் அணுகாமல் இருப்பதற்கும் உடல் காயசித்தி பெறுவதற்கும் மருந்துகளை கண்டறிந்து கூறியுள்ளனர். இதில் காய கற்பம் என்ற முறையையும் கூறியுள்ளர்.

    காய கற்பம் = காயம் + கற்பம்

    காயம் என்பது உடல், கற்பம் என்பது கால அளவு.

    நூறாண்டு காலத்திற்கு மேல் நோயில்லாமல் இந்த உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் முறையே காயகற்ப முறை என்று அழைக்கப்படுகிறது. இதில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகளும் உண்டு. அதில் சிறந்த ஒரு மூலிகைதான் கல்தாமரை.

    கல்தாமரை மலைப்பகுதியில் வளரும் ஒருவகை கொடி இனமாகும். இதன் இலை தாமரை இலை வடிவில் இருப்பதாலும், மலை, கல் நிறைந்த பகுதிகளில் அதிகம் வளர்வதாலும் இதை கல்தாமரை என்கின்றனர். ஆனால் தாமரை இலையை விட சிறியதாகவும் தடித்தும் இருக்கும்.

    இதன் இலை மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

    உட்கொள்ளும் மருந்துகள், வெளிப்பூச்சு மருந்துகள் மற்றும் தைல வகைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது. இது கார்ப்புச் சுவை கொண்டது.

    வீரிய விருத்திதரு மெய்குப் பலம்கொடுக்கும்

    கூரிய குட்டுதனைக் கோபிக்குங்-காரீயத்தை

    நற்றாம் பரமாக்கு நங்காய்! அருக்கலுறை

    கற்றா மறைதனைக் காண்

    (அகத்தியர் குணவாகடம்)

    பொருள் - சுக்கிலத்தையும் பலத்தையும் விருத்தியாக்கும். காரீயத்தை செம்பாக்கும்.

    உடல் வலுப்பெற

    உடல் வலுப்பெற்றால் நோய்கள் ஏதும் அணுகாமல் பாதுகாக்க முடியும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப உடல் நன்கு பலமாக ஆரோக்கியமாக இருந்தால்தான் சிறந்த வாழ்வைப் பெற முடியும். இத்தகைய உடலை வலுப்பெறச் செய்ய கல்தாமரை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக்கொண்டு காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும். அல்லது காய்ந்த கல்தாமரை இலையின் பொடியை நீரில் கொதிக்கவைத்து பனை வெல்லம் கலந்து அருந்தலாம். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இளைத்த உடல் தேறும்

    இடுப்பு வலி தோள்பட்டை வலி நீங்க

    இன்றைய நவீன உணவு மாறபாட்டாலும், போதிய உற்பயிற்சியின்மையாலும் சிலருக்கு மிகக் குறைந்த வயதிலே கழுத்துவலி, இடுப்பு வலி, மூட்டு வலி, என உண்டாகிறது. இப்படி கை, கால், முட்டுகளில் வலி உண்டாவதற்குக் காரணம் மூட்டுத் தேய்மானம் என்பார்கள். இதனைப் போக்க கல்தாமரை சிறந்த மருந்து. கல்தாமரை இலைகளை நிழலில் காயவைத்து கஷாயம் செய்து அருந்தி, கல்தாமரை இலைகள் சேர்க்கப்பட்ட வெளிப்பூச்சு எண்ணெய்களை பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூசி வந்தால் மேற்கண்ட பாதிப்புகள் நீங்கும்.

    நரம்புகள் வலுப்பெற

    நரம்புகளில் நீர் கோர்த்துக்கொண்டு நரம்பு வறட்சி உண்டானால் அது நரம்புப் பாதிப்பை உண்டுபண்ணும். இதனால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். இத்தகைய குறையைப் போக்கி நரம்புகளை வலுவடையச் செய்ய கல்தாமரையிலை கஷாயம் செய்து அருந்தி வருவது நல்லது. அல்லது கல்தாமரை இலை பொடியில் தேன் கலந்து அருந்தலாம்.

    ஆண்மை பெருக

    இன்றைய பொருளாதார சூழ்நிலையால் மன அழுத்தம் உண்டாகி பலருக்கு வீரியக்குறைவு உண்டாகிறது. குழந்தைப்பேறு இன்றி தவிக்கின்றனர். சிலர் திருமணத்திற்குப் பின் வீரியக் குறைவால் அவதிப்படுகின்றனர். இக்குறையைப் போக்க பல விளம்பரங்களைத் தேடி அவர்கள் கொடுக்கும் மருந்துகளை உண்டும் பயனில்லாமல் வேதனையுறுகின்றனர். இவர்கள், கல்தாமரை இலைப் பொடியை பாலில் கலந்து இரவு உணவுக்குப்பின் ஒரு மண்டலம் அருந்தி வந்தால் வீரியக் குறைவு நீங்கி ஆண்மை பெருகும்.

    சருமத்தைப் பாதுகாக்க

    கல்தாமரை இலையை சிறிதாக நறுக்கி நீர் விட்டு அரைத்து, சொறி, சிரங்கு, கரப்பான் உள்ள இடங்களில் பூசி வந்தால் மேற்கண்ட நோய்கள் நீங்கும்.