Thursday, 18 September 2014

34 வருடங்களுக்கு பிறகு சின்னத்திரைக்கு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்

By: ram On: 22:41
  • Share The Gag
  • 1980ம் ஆண்டில் ஒண்டர் பலூன் என்ற சின்னத்திரை தொடரில் நடித்தார் ஏ.ஆர்.ரகுமான். அதன் பிறகு அவர் சின்னத்திரை பக்கம் வரவில்லை. தற்போது, அதாவது 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி உள்ளார். அஷூதோஸ் கவுரிகர் இயக்கும் எவரெஸ்ட் என்ற சின்னத்திரை நிகழ்ச்சிக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். அஷூதோஸ் இயக்கிய பல படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

    அதன் அடிப்படையில் இதற்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டுள்ளார்இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறியிருப்பதாவது: ஒண்டர் பலூனுக்கு பிறகு இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறேன். சின்னத்தரை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஹை டெபினிசியனில் ஒளிபரப்புகிறது.

    அஷூதோஸ் தன் படங்களுக்கு என்னிடம் நல்ல பாடல்களை வாங்கியிருக்கிறார். அவருடன் பணிபுரிவதே நல்ல அனுபவம். எவரெஸ்ட் நிகழ்ச்சியின் கான்செப்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் தீம் மியூசிக்கை முடித்து விட்டேன் என்கிறார் ரகுமான். -

    உறவுகள் முதலில் உண்டானது எப்படி – அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் !!

    By: ram On: 22:13
  • Share The Gag
  • மனிதன், சமுக வாழ்க்கையை மேற்கொண்டுவிட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர்.

    காட்டு மிராண்டிகளாகச் சிதறிக் கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் `ஊர்’ என்று அழைக்கப்பட்டது.

    அதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் `நகரம்’ என்றழைக்கப்பட்டது.

    தனி மனிதர்கள் `சமுக’மாகி விட்டார்கள்.

    தனி மனிதனுக்கான நியதிகளோடு சமுதாயத்திற்காகச் சில சம்பிரதாயங்களும் உருவாயின.

    அந்தச் சம்பிரதாயங்களுள் சில புனிதமாகக் கருதப்பட்டுத் தருமங்களாயின.

    கணவன் மனைவி உறவு, தாய் தந்தை பிள்ளைகள் உறவு, தாயாதிகள் பங்காளிகள் உறவு, ஊர்ப்பொது நலத்துக்கான கூட்டுறவு முதலியவைகள் தோன்றின.

    தந்தைவழித் தோன்றல்களெல்லாம் `பங்காளி’களாகவும், தந்தையுடன் பிறந்த சகோதரிகளெல்லாம் `சம்பந்தி’களாகவும், தாய்வழித் தோன்றல்கள் `தாயாதி’களாகவும் ஒரு மரபு உருவாயிற்று.

    வார்த்தைகளைக் கவனியுங்கள்.

    தந்தைவழி பங்குடையவன் என்பதாலே `பங்காளி’யாகவும், தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் `தாயாதி’ என்றும் கூறப்பட்டது.

    `சகோதரன்’ என்ற வார்த்தையே `சக உதரன்- ஒரே வயிற்றில் பிறந்தவன்’ என்பதைக் குறிக்கும்.

    சம்பிரதாயங்களாகத் தோன்றிய உறவுகள் மரபுகளாகி, அந்த மரபுகள் எழுதாத சட்டங்களாகி விட்டன.

    இந்த உறவுகளுக்குள்ளும், பொதுவாகச் சமுகத்திலும் நிலவ வேண்டிய ஒழுக்கங்கள் சம்பிரதாயங்களாகி, மரபுகளாகி, அவையும் சட்டங்களாகி விட்டன.

    இந்தச் சட்டங்களே நமது சமுகத்தின் கவுரவங்கள்; இந்த வேலிகள் நம்மைக் காவல் செய்கின்றன.

    இந்த உறவுகள், ஒழுக்கங்களுக்கும், நிம்மதிக்குமாக உருவாக்கப்பட்டவை.

    ஆனால் இவை மட்டும்தானா உறவுகள்?

    இந்து மதம் அதற்கொரு விளக்கம் சொல்கிறது.

    “பிறப்பால் தொடரும் உறவுகளல்லாமல், பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை” என்பது இந்துமதத் தத்துவம்.

    பிறப்பின் உறவுகளே பேதலிக்கின்றன.

    பெற்ற தந்தையைப் பிச்சைக்கு அலையவிடும் மகன் இருக்கின்றான்.

    கட்டிய தாரத்தையும் பட்டினி போடும் கணவன் இருக்கிறான்.

    தாயைத் தவிக்கவிட்டுத் தாரத்தின் பிடியில் லயித்துக் கிடக்கும் பிள்ளை இருக்கிறான்.

    கூடப் பிறந்தவனே கோர்ட்டுப் படிக்கட்டுகளில் ஏறி எதிராக நிற்கிறான்.

    ச முக மரபுகள் இவற்றை ஒழுக்கக் கேடாகக் கருதவில்லை.

    முதலில் நமது சமு கங்களுக்கு, `இவையும் ஒழுக்கக் கேடுகள்’ என்று போதித்தது இந்து மதம்.

    கணிகை ஒருத்தியைக் கட்டிலில் போட்டு இரவு முழுவதும் விளையாடுகிறோம். இச்சை தீர்ந்ததும், அவளைத் தள்ளிப் படு என்றுதான் சொல்லத் தோன்றுகிறதே தவிர, அங்கு நீக்க முடியாத பிணைப்பு ஏற்படுவதில்லை.

    அந்த உறவு அந்த இரவுக்கு மட்டுமே!

    அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம். வேலையிலிருந்து விலகியதும், வேலை பார்த்த இடத்தை மறந்து விடுகிறோம். அந்தப் பிணைப்பு கூலிக்காகவே!

    ஹோட்டலில் அறை எடுத்துக்கொண்டு தங்குவது போல் சில உறவுகள், சொந்த வீட்டில் வாழ்வது போல் சில உறவுகள்.

    ஆயிரம் வாசல் இதயம்! யாரோ வருகிறார்கள். யாரோ போகிறார்கள்!

    வாழ்ந்தால் சிரிக்கிறார்கள்; வறண்டால் ஒதுங்குகிறார்கள்; செத்த பின் ஒப்புக்காக அழுகிறார்கள்.

    இரண்டு ஆத்மாக்கள் ஐக்கியமாகி, ஓர் ஆத்மா தாக்கப்படும் போது இன்னொரு ஆத்மாவும் இயற்கையாகத் துடிக்குமானால், அந்த உறவே புனிதமான உறவு.

    பிறப்பில் சொந்தமிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி.

    அது மனிதனாயினும் சரி, நாய் பூனையானாலும் சரி.

    எங்கே பந்தம் ஏற்றத்தாழ்வுகளில் சேர்ந்து வருகிறதோ, அங்கேதான் உறவிருக்கிறது.

    கண்ணீரைத் துடைக்கின்ற கைகள், காயத்துக்குக் கட்டுப் போடும் கைகள், வறுமையில் பங்கு கொள்ளும் உள்ளம், சோதனையில் கூடவே வரும் நட்பு உறவு பூர்த்தியாகி விடுகிறது.

    வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை

    By: ram On: 21:01
  • Share The Gag

  • வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை


    குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியின் திட்டை சமாளிக்க மடிக்கணினியை எடுத்துகொண்டு வேலை செய்ய துவங்கினான்.













    மனைவி: குடிச்சீங்களா?





    கணவன்: இல்லம்மா






    மனைவி: குடிகார சனியனே அப்புறம் ஏன் சூட்கேசை தொறந்து வெச்சு டைப் பன்ற

    சிவகார்த்திகேயனால் தான் நாங்கள் காதலர்கள் ஆனோம்! அட்லீ-ப்ரியா கலகல காதல் டாக்!

    By: ram On: 19:58
  • Share The Gag
  • சென்ற வாரம் சமூக வலைத்தளங்களில் ஐ படத்திற்கு செம்ம காம்படிசனாக இருந்தது ஷங்கரின் சிஷ்யன் அட்லீயின் காதல் தான். அட்லீக்கும் சின்னத்திரை நடிகை ப்ரியாவிற்கும் காதல் என யாரோ கொழுத்தி போட. அட உண்மையாகவே நாங்கள் காதலர்கள் தாங்க என்று ஒரு ஸ்டில்லை இவர்களே நெட்டில் தட்டி விட, பின் சொல்லவா வேண்டும் இந்திய அளவில் இவர்கள் காதல் வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆனது.

    எப்படிப்பா... இது நடந்தது என அனைவரும் குப்புற படுத்து யோசிக்க, அவர்களே அந்த சிதம்பர ரகசியத்தை ஓபன் செய்துள்ளனர். இது குறித்து அட்லீ கூறுகையில் ‘எனக்கு சிவகார்த்திகேயன் மிகவும் நெருங்கிய நண்பர், அவரை வைத்து தான் என் முதல் குறும்படமான முகப்புத்தக்கதை இயக்கினேன். இதன் பிறகு எங்கள் நட்பு அதிகமானது.

    அவரை பார்க்க அடிக்கடி ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிக்கு செல்வேன், அங்கு தான் முதன் முதலாக ப்ரியாவை சந்தித்தேன். 'முகப்புத்தகம்’னு ஷார்ட் பிலிமோட பிரீமியர் ஷோவுக்கு பிரியா அவங்க குடும்பத்தோட வந்திருந்தாங்க. என் குடும்பத்துல உள்ளவங்களும் வந்ததால, ரெண்டு பேரும் ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். சொல்லபோனால் எங்கள் காதலுக்கு பிள்ளையார் சுழியே சிவகார்த்திகேயன் தான்.

    அப்போதிலிருந்தே அவர் மீது எனக்கு ஒரு லவ் இருந்தது, பின் ஒரு நாள் ‘எனக்கு மாப்பிள்ளை பார்க்குறாங்க என்று ப்ரியா கூற, உடனே நான் என் போட்டோவை தரவா? என்று கேட்டேன். அவரும் சிரித்து கொண்டே வீட்டில் வந்து பேசுங்க என்று கூற பின் எல்லாம் சுபமே’.

    என் காதலை முதலில் ஆர்யாவிடம் கூறிய போது 'யூ ஆர் வெரி லக்கி’னு விஷ் பண்ணினார். ஜெய்கிட்ட 'எனக்குக் கல்யாணம்’னு சொன்னப்போ, 'என்னது உனக்குக் கல்யாணமா?!’னு பயங்கர ஷாக் ஆகிட்டார்.

    உண்மையை சொல்ல வேண்டுமென்றால் என் ராஜா ராணி படத்தில் நஸ்ரியா கதாபாத்திரத்திற்கு இன்ஸ்ப்ரேஷனே ப்ரியா தான், அவள் ஒரு குழந்தை மாதிரி என்று சொல்ல ப்ரியா முகத்தில் 1000 வாட்ஸ் பிரகாஷம்.

    அப்படியே ப்ரியா, அட்லீயை பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். ‘ நான் இதுவரை கடைக்கு கூட தனியாக சென்றது இல்லை, எங்கு சென்றாலும் அம்மாவுடன் தான் செல்வேன். அதற்கு பிறகு அட்லீ தான் இந்த அளவிற்கு என்னை கேரிங்காக பார்த்து கொள்கிறார்.

    அட்லீ எப்போதும் ப்ரியாவை பாப்பா என்று தான் அழைப்பாராம். அதே ஸ்டையிலில் அவரை கூப்பிட ப்ரியா வெட்கத்தில் தலை குனிந்தார்.

    இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை!

    By: ram On: 19:23
  • Share The Gag

  • 'மும்பையின் இரவு நேர விடுதி ஒன்றிலிருந்து, ஒரு பெண்ணைக் கடத்திச் சென்ற 5 குண்டர்கள், அவளை பாலியல் பலாத்காரம் செய்து வீதியில் வீசிச் சென்றுவிட்டனர்' என்று சமீபத்தில் ஒரு வழக்கு பதிவானது. பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரித்தபோது, 'என்ன நடந்தது என்பது சிறிதளவுகூட என் நினைவில் இல்லை’ என்றார். ஆனால், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானது.

    'அந்தப் பெண்ணுக்கே தெரியாமல், இது எப்படி நடந்திருக்க முடியும்? என்று அதிர்ந்த மருத்துவர்கள்... மேற்கொண்டு அந்தப் பெண்ணை பரிசோதித்ததில், ஒரு மயக்க மருந்தை குளிர்பானத்தில் கலந்துகொடுத்து, சீரழித்துள்ளனர் என்பது தெரிந்தது.

    'ஃபேஸ்புக்'கில் சுழன்றுகொண்டிருக்கும் இந்தச் செய்தியை... சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் புகழேந்தியிடம் சொன்னபோது, ''இது மும்பையில் மட்டும் நடந்திருக்கும் கொடுமையல்ல... எல்லா இடங்களிலும் இந்த வகை குற்றம் தற்போது பெருகி வருகிறது'' என்று அதிரவைத்தார்.

    தொடர்ந்தவர், ''தற்போது விதம்விதமான மயக்க மருந்து மற்றும் மாத்திரைகள் சந்தைக்கு வருகின்றன. இவற்றில் சில, மிக எளிதில் கிடைக்கக் கூடியனவாக இருக்கின்றன. குளிர்பானம், ஐஸ்க்ரீம் என எதில் வேண்டுமானாலும் இவற்றை எளிதில் கலந்துவிட முடியும். மூடி போடப்பட்டிருக்கும் குளிர்பானங்களில்கூட ஊசி மூலம் கலக்கலாம். அவை எவ்வித சுவை, வண்ண மாற்றமும் ஏற்படுத்தாமல், கண்டுபிடிக்க முடியாதபடி உணவுப் பொருளோடு முற்றிலும் கலந்துவிடும்.

    சதிகாரர்கள் இதை பெண்களை உட்கொள்ளச் செய்து, சிறிது நேரத்தில் போதையேற்றி, தன்னிலை மறக்கச் செய்து, 10, 12 மணிநேரம் வரை என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாத அளவுக்கு மயக்க நிலைக்குத் தள்ளுகிறார்கள். மிக எளிதில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகிறார்கள். இப்படி பலியாகும் பெண்களுக்கு, தங்களை யார் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர் என்பதுகூடத் தெரியாது. இம்மருந்துகளை சாப்பிட நேரிடும் பெண்கள், கருவுறமுடியாமல் போவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் பல பக்கவிளைவுகளையும் வாழ்நாள் முழுக்க எதிர்கொள்ள நேரிடலாம்'' என்று எச்சரிக்கையாகச் சொன்னார் டாக்டர்.

    இரவு நேர கொண்டாட்டங்களுக்குச் செல்லும் பெண்கள், ஆண் நண்பர்களுடன் அவுட்டிங் செல்லும் பெண்கள் மட்டுமல்ல, எல்லா வயதுப் பெண்களுமே உஷாராக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. எல்லாவற்றையுமே சந்தேகப்பட வேண்டும் என்பதைத் தவிர, வேறெதையும் சொல்லத் தோன்றவில்லை.

    தீபாவளி ரேஸில் ஐ பின் வாங்குகிறதா?

    By: ram On: 18:41
  • Share The Gag
  • இந்த வருடம் ஐ படத்தை தான் அனைவரும் தீபாவளிக்கு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஆவலுக்கு முட்டுகட்டையாக ஒரு செய்தி வந்துள்ளது.

    ஐ படத்தின் பாடல்கள் ரிலிஸ் ஆனாலும் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லையாம். செக்ஸி ரேடியோ என்ற பாடல் இந்த வாரத்தில் தான் படமாக்கப்படவுள்ளன.

    இந்நிலையில் கத்தி, பூஜை படங்கள் தீபாவளிக்கு வரும் என ஏற்கனவே அறிவித்த நிலையில் ஐ படக்குழு தற்போது வரை அதிகாரப்பூர்வமாக ரிலிஸ் தேதி கூறவில்லை. இதனால் ஐ தீபாவளிக்கு வருமா என்றால் கேள்விக்குறி தான்.

    உடல் எடை குறைக்க சில வழிமுறைகள்

    By: ram On: 18:06
  • Share The Gag

  • உடல் பருமன். இது பலருக்கும் பல்வேறு பிரச்சினைகளைத் தருகிறது. உடல் பருமனைக் குறைப்பதற்காக நாம் படா தபாடு படுகிறோம். உடற்பயிற்சி, மருந்து, மாத்திரைகள் என்று இது தொடர்கதையாகவே உள்ளது. இங்கு சில சுலபமான வழிமுறைகள் முயச்சித்து பாருங்கள் பாருங்கள்

    உடல் எடை குறைக்க சில வழிமுறைகள்

    1. இலநதைமர இலையை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடிக்க உடல் எடை குறையும்.

    2. அமுக்கிராவேர், பெருஞ்சீரகம் இவைகளை பாலுடன் காய்ச்சி குடித்துவர உடல் எடை குறையும்.

    3. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை பொடியாக்கி வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறையும்.

    4. ஓமத்தை கறுக வறுத்து பொடி செய்து தேன் கலந்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும்.

    5. செம்பருத்தி பொடியை தேன் கலந்து தினமும் காலை, மாலை உணவுக்கு பின் சாப்பிட கொழுப்பு குறையும்.

    6. கல்யாண முருங்கை பொடியை தினமும் காலையில் உணவுக்குப் பின் சாப்பிட உடல் எடை குறையும்.

    7. துளசி இலை சாறை சூடாக்கி சிறிது தேன் கலந்து குடித்தால் உடல் பருமன் குறையும்.

    8.புடலங்காயை அடிக்கடி சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

    9. கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

    10. முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் தினமும் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.

    11. அவரை இலையை உலர்த்தி இடித்துத் தூளாக்கி தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.

    12. சிறிதளவு மோர் மற்றும் காரட் இவற்றை நன்றாக சேர்த்து அரைத்து தினமும் குடித்து வந்தால் உடல் இளைக்கும்.

    13. ஆவாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து ஒரு ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.

    14. சிறிதளவு சோம்பு, கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி அதனுடன் சுத்தமான சிறிதளவு தேன் கலந்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் உடல் எடைக் குறையும்

    15. சிறிதளவு இலந்தை இலைகளை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து மைய அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல காய்ச்சி தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் மெலியும்

    16.சிறிதளவு கொள்ளை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து அதை ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு(கல் உப்பு) கலந்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் உடல் மெலியும் அதனுடன் உடல் பலமும் கிடைக்கும்.

    ஐ படத்தை பின்னுக்கு தள்ளி கத்தி சாதனை!

    By: ram On: 17:32
  • Share The Gag
  • இந்த தீபாவளி ரசிகர்களுக்கு செம்ம விருந்து வெயிட்டிங். ஐ, கத்தி என இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் திரைக்கு வரயிருக்கிறது.

    சில நாட்களுக்கு முன் ஐ படத்தின் பாடல்கள் பிரம்மாண்டமாக வெளிவந்து ஐடியுனில் முதலிடம் பிடித்தது. தற்போது கத்தி திரைப்படத்தின் பாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியான சில மணி நேரங்களிலேயே, பலர் பயன்படுத்து ஐடியூன்ஸ் இணையதளத்தில், இப்படத்தின் பாடல்கள், இந்திய அளவில் முதலிடத்தை பிடித்து ஐ பாடலை பின்னுக்கு தள்ளியது.

    இதற்கு முன்பு அனிருத் இசையமைத்த எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மான் கரத்தே, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களும் ஐடியுனில் இடம்பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியர்களால் $1200 கோடி லாபம் பார்க்கப்போகும் பேஸ்புக் – இந்தியர்களே உஷார்..!

    By: ram On: 17:18
  • Share The Gag
  •                வாட்ஸ்ஆப் என்ற மென்பொருள் அறிமுகமானதில் இருந்து முகநூலை பெரும்பாலானோர் மறந்துவிட்டனர். வாட்ஸ்ஆப் மென்பொருள், முகநூலை விட பாதுகாப்பானது என்கின்ற காரணத்தால் அசுர வளர்ச்சி அடைந்தது. இதன் வளர்ச்சியை கண்டு ஆடிப்போன பேஸ்புக் அதை பல மில்லியன் டாலர் விலைகொடுத்து வாங்கியது. போஸ்புக் எப்பொழுது வாட்ஸ்ஆப்பை வாங்கியதோ அப்பொழுதே வாட்ஸ்ஆப்பில் வைக்கப்பட்டிருந்த பல பாதுகாப்பு அம்சங்களை நீக்கப்பட்டுவிட்டது. நீண்ட நாட்களாக வாட்ஸ்ஆப்பை உபயோகப்படுத்திவருகின்றவர்களுக்கு இது தெரியும். மேலும் இந்த வாட்ஸ்ஆப் சேவையை தொடர்ந்து நம் மொபைலில் பெறுவதற்கு ஆண்டுக்கு சுமார் 60 ரூபாய் கட்டணமாக செலுத்தவேண்டும். இந்த ஆண்டு இந்தியாவில் உள்ள வாட்ஸ்ஆப் பயனாளர்களால் மட்டும் 1200 கோடி டாலர் லாபம் பார்க்க உள்ளது பேஸ்புக் நிறுவனம்.

    பேஸ்புக் ஒரு அமெரிக்க நிறுவனம். கணினி துறை எப்பொழுதுமே அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்து வருகின்றது. நாம் அனுப்பும் தகவல்கள் அமெரிக்க உளவுத்துறையால் வேகு பார்க்கப்படுகிறது. இப்படி பாதுகாப்பே இல்லாத மென்பொருளுக்கு 60 ரூபாய் கட்டணம் கண்டிப்பாக செலுத்த வேண்டுமா? வாட்ஸ்ஆப் போன்ற சந்தையில் புதியதாக அறிமுகமான மென்பொருள் டெலிகிராம்.

    டெலிகிராம் ஆப் வாட்ஸ்ஆப்பை விட மிகவும் பாதுகாப்பானது. இந்த மென்பொருளை லைப்லாங் இலவசமாகவே உபயோகப்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் தவறுதலாக மெசேஜ் அனுப்பிவிட்டால், அடுத்தவர் பார்பதற்கு முன்பே அதை டெலிட் செய்யும் வசதியும் இதில் உள்ளது. குறிப்பாக டெலிகிராம் வாட்ஸ்ஆப்பை போன்றே செயல்படும், பெரிதாக மாற்றங்கள் தெரியாது. அதே நேரத்தில் பல பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளது.

    கத்தி படத்தை கை பற்றிய ஜெயலலிதா; சரண்டரான விஜய்..! – திக் திக் நிமிடங்கள்

    By: ram On: 17:02
  • Share The Gag
  • ராஜபக்சேவின் நண்பர் என்று சொல்லப்படுகிற லைகா மொபைல் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கத்தி படத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக, தீபாவளி அன்று கத்தி படம் திரைக்கு வருவது கேள்விக்குறியாகவே இருந்தது. சில தினங்களுக்கு முன் சுபாஸ்கரன் அல்லிராஜா சென்னை வந்தார். அப்போது நடைபெற்ற சில பேச்சுவார்த்தைகள்… ஆளுங்கட்சிக்கு சாதகமாக பேரங்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது.

    குறிப்பாக, கத்தி படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் விவகாரம்…!

    கத்தி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்று சொல்லப்படும் ஐங்கரன் கருணாமூர்த்தி, சன் டிவிக்கு மிகவும் நெருக்கமானவர். எந்திரன் படத்தை ஆரம்பித்துவிட்டு கையில் பணமில்லாமல் அவர் தவித்தபோது அந்தப்படத்தை சன் டிவி அண்டர்டேக் பண்ணியது. அதன் மூலம் அப்போது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து கருணாமூர்த்தி காப்பாற்றப்பட்டார். அதோடு, கருணாமூர்த்தியிடம் புழங்கும் பணத்தில் பாதி பணம் சன் டிவியின் பணம் என்றெல்லாம் படத்துறையில் சொல்லப்பட்டு வருகிறது. இப்படியான தொழில் பந்தம் காரணமாக, கத்தி படத்தை ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே, அதன் சாட்டிலைட் ரைட்ஸை 20 கோடிக்கு சன் டிவிக்கு விற்றுவிட்டார் கருணாமூர்த்தி.

    ஆனால் விஜய் டிவியின் விசுவாசியான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், கத்தி படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை விஜய் டிவிக்குக் கொடுக்க வேண்டும் என விரும்பினார். சாட்டிலைட் ரைட்ஸ் விஷயத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படி ஒரு கத்தியை கையில் எடுப்பார் என்பதை முன் கூட்டியே கணித்துவிட்ட கருணாமூர்த்தி, அதற்கு முன்னதாகவே… அதாவது முருகதாஸுக்கு சொல்லாமலே… சன் டிவிக்கு விற்பனை செய்தார். இப்படி எல்லாம் சாகசம் செய்து சன் டிவிக்கு விற்கப்பட்ட சாட்டிலைட் ரைட்ஸை, அவர்களிடமிருந்து திரும்ப வாங்கி தற்போது ஜெயா டிவிக்கு விற்பனை செய்திருக்கிறார்கள்.
    ஏன்..என்னாச்சு?

    கத்தி படத்துக்கு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பை காரணம் காட்டி, அப்படத்தை அரசாங்கம் தடை செய்யப்போவதாக முக்கிய இடத்திலிருந்து கத்தி தயாரிப்பாளர்களுக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி தடை செய்யப்பட்டால் தனக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்பதால், இப்பிரச்சனையிலிருந்து மீள என்ன வழி என்று ஆலோசிக்கப்பட்டபோது, கத்தி சாட்டிலைட் ரைட்ஸை ஜெயா டிவிக்குக் கொடுத்தால், படத்துக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. திட்டமிட்டபடி தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

    இந்த பிரச்சனைகளை எல்லாம் சன் டிவி நிர்வாகத்திடம் தெரிவித்த கருணாமூர்த்தி, அவர்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து, ஜெயா டிவிக்கு சாட்டிலைட் ரைட்ஸை விற்றிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இன்று நடைபெறும் கத்தி படத்தின் இசைவெளியீட்டுவிழாவை ஒளிபரப்பும் உரிமையும் ஜெயா டிவிக்கே வழங்கப்பட்டிருக்கிறது. ஆக… கத்தி படம் தீபாவளிக்கு வெளியாவதை மாணவர்கள் அமைப்பு என்ன, மைனர்கள் அமைப்புகளினால் கூட இனி தடுக்க முடியாது என்கின்ற நிலை உருவாகியுள்ளது.
    சரண்டர் ஆனா விஜய்…

    கத்தி படத்திற்கு நன்மைகள் கைகூடியுள்ள நிலையில் படக்குழுவினர் அனைவரும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால் ஒருவருக்கு மட்டும் இது மகிழ்ச்சியை கொடுக்கவில்லை.  அவர் வேறு யாரும் அல்ல கதாநாயகன் விஜய் தான். கத்தி படவிவகாரத்தில் ஜெயலலிதாவை கனவுகளை தவிடுபொடியாக்கி படத்தை ரிலீஸ் செய்து நிஜத்திலும் கதாநாயகன் ஆகிவிடலாம் எனத் திட்டமிட்டார் விஜய். காரணம் தலைவா பிரச்சனையில் விஜய்யை அங்கும் இங்கும் அலையவிட்டு நொங்கெடுத்தார் ஜெயலலிதா. இதனால் கடந்த தேர்தலில் மோடியுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டார். ரஜினிக்கு மைசூர் அரண்மையை லிங்காவிற்காக வாடகைக்கு விட்ட மோடி… நமக்கும் ஏதாவது செய்வார் என நம்பியிருந்தார் விஜய்…

    என்ன தான் நண்பராக இருந்தாலும்… வடஇந்தியர் என்பதை  காட்டிவிட்டார் மோடி… அதாவது தற்பொழுது உள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் எந்த ஒரு காரியத்தையும் பஜாகவால் முன்னெடுக்க முடியாது என்று கூறிவிட்டார். சமீபத்தில் பாஜகவினர் கட்சி தாவல்களால் ஆடிப்போய்விட்டார் மோடி… எனவே ஜெயலலிதா விசயத்தில் கொஞ்சம் நிதானமாக செயல்பட முடிவு செய்துவிட்டார். விஜய்க்கு இது பெருத்தபின்னடைவை ஏற்படுத்திவிட்டது. எங்குபோனாலும் சுற்றிவளைத்து பிளாக் செய்த ஜெயலலிதாவிடம், சரணாகதியாக சரண்டர் ஆகிவிட்டார் விஜய்.

    கத்தியை வாங்கிய ஜெயா டி.வி? காற்றாய் பறக்குமே எதிர்ப்பு!

    By: ram On: 07:41
  • Share The Gag
  • நாளை மாலை (செப்டம்பர் 18) கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. அது எவ்வித சிக்கலும் இல்லாமல் நடைபெறுமா? கடைசி நேரத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படுமா என்றெல்லாம் வைத்த கண் வாங்காமல் கவனித்துக் கொண்டிருக்கிறது ரசிகர்கள் கூட்டம். அந்த சிக்கலை மேலும் உறுதி படுத்துவதை போல தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், கத்தியை எதிர்க்கும் தமிழர் அமைப்புகளுக்கான குழுவின் தலைவருமான வேல் முருகன் ‘இந்த பாடல் வெளியீட்டு விழாவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று காவல் துறை ஆணையரிடம் புகார் மனு அளித்திருக்கிறார்.

    விளம்பரத்திற்காக சில அமைப்பினர் குரல் கொடுக்கிறார்கள் என்று சில தினங்களுக்கு முன் சென்னை வந்த கத்தி படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ் கரண் அல்லிராஜாவும் பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்த விஜய் ரசிகர்கள், ‘நாளைய பொழுது நல்லா விடியுமா ?’ என்றே கவலைப்பட ஆரம்பித்திருந்தார்கள். எல்லாவற்றுக்கும் அருமருந்தாக வந்து சேர்ந்திருக்கிறது ஒரு தகவல். அது…?

    கத்தி திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜெயா தொலைக்காட்சி வாங்கியிருக்கிறதாம். காவல்காரனிடமே கல்லா பெட்டியை ஒப்படைத்தாயிற்று? இனி பயமின்றி பயணத்தை தொடரலாம்!

    ஆமா… ஏதோ மனு கினுன்னு சொன்னீங்களே…? அட போங்கப்பா. அது ச்சும்மா தமாஷுக்கு!

    உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும் உணவுகள்

    By: ram On: 07:20
  • Share The Gag

  • உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிக்க சிறந்த வழி என்றால், கொழுப்பை குறைக்கும் உணவுகளை வழக்கமான ஆகாரத்தில் சேர்த்து கொள்வதாகும். சரி இப்போது உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் உணவுகளை பார்க்கலாம்.

    • பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பை குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.

    • ஆப்பிள் உடலில் கொழுப்புச் செல்களை குறைக்க உதவுகிறது. ஆப்பிளின் தோலில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க்கைகளை நீக்க உதவுகிறது.

    • வால் நட்ஸ்களில் ஒமேகா-3, ஆல்பா லினோலினிக் கொழுப்புச் சத்தை ஆரோக்கியமான அளவுகளில் கொண்டுள்ளது. இது பெரிய அளவில் கொழுப்பை கரைக்க உதவுவதோடு, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. ஆகவே ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க சிறிதளவு வால்நட்ஸ்கனை உட்கொள்ளுங்கள்.

    • பீன்ஸ் ஒரு குறைந்த கொழுப்பையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு. இது ஒரு நல்ல கொழுப்பை கரைக்கும் உணவாக விளங்குகிறது.

    * ஓட்ஸ் உணவு மெதுவாக செரிமானமாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப்பைக் கரைய வைத்து துரிதப்படுத்தவும் உதவுகிறது. இப்படி மெதுவாக செரிமானமாகும் தன்மையினால் எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உணவாகும்.

    • க்ரீன் டீ எனப்படும் பச்சை தேயிலையில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

    • தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். கொழுப்பு கரைப்பிற்கு தண்ணீர் உதவுவதால், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமாகிறது.