தமிழ் சினிமாவில் தற்போது உண்மைச் சம்பவங்கள் திரைப்படமாகி வருகிறது.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகனின் வாழ்க்கை புலிப்பார்வை என்ற பெயரில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் உண்ணாவிரதம் இருந்து இறந்த விடுதலைப்புலி போராளி திலீபனின் வாழ்க்கை கதை திரைப்படமாக உள்ளது. இந்த படத்தை ஆனந்த மூர்த்தி இயக்குகிறார்.
இதில் திலீபன் கேரக்டரில் நந்தா நடிக்கிறார். விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் வேடத்தில் ஸ்ரீதர் நடிக்கிறார்.
கிட்டு கேரக்டரில் வினோத் சாகரும், மில்லர் கேரக்டரில் பரத்தும், மாத்தையாவாக முனுசாமியும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவில், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஆனந்தமூர்த்தி கூறுகையில், இந்திய அமைதிப்படை இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து இறந்த திலீபன் வீர வாழ்க்கை மகத்தானது. அந்த மாவீரனின் வாழ்க்கையை அவர் பெயரிலேயே படமாக எடுக்கிறேன்.
திலீபனை பிரபாகரன் சொந்த தம்பியாகவே கருதினார். உண்ணாவிரதம் இருக்க திலீபன் அனுமதி கேட்டபோதுகூட அவர் மறுத்தார். கிட்டுவுக்கும் திலீபனுக்கும் உள்ள நட்பு ஆழமானது.
ஈழத்து காந்தி என்று அழைக்கப்பட்ட திலீபன் உண்ணாவிரதம் இருந்து இறந்தபோது பிரபாகரன் கண்ணீர் விட்டு அழுதார். பிரபாகரன் அழுதது அந்த ஒருநாள் மட்டும்தான். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்றும் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.