Tuesday, 2 September 2014

ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்களுக்கு

By: ram On: 23:43
  • Share The Gag

  • ஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார்தான் இல்லை?அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் அவசியம் காலை உணவை உட்கொள்ள வேண்டும். என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று!

    கர்ப்பம் உறுதிபடுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கு இயல்பாகவே வரும் மசக்கை மற்றும் வாந்தி போன்றவை, சில பெண்களுக்கு உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விடும். ஆனால் குழந்தை – அதுவும் ஆண் குழந்தையாக – பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் ஆகாசம் வரை இருக்கும். பொதுவாகவே கர்ப்பம் தரித்திருக்கும்.

    பெண்கள் நல்ல சத்தான் உணவை வேளை தவறாமல் உண்ண வேண்டும்;
    அதுவும் சிறிது சிறிதாக ஐந்து வேளை வரை உட்கொள்ளலாம், என்றெல்லாம் அறிவுறுத்துகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். இந்நிலையில், கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவாகுமா அல்லது பெண்ணாக உருவாகுமா என்பதையும், அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

    இது தொடர்பாக அண்மையில் கொலம்பியாவில் உள்ள மிஸ்ஸோரி பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு பெண் கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் காலை உணவை தவறாமல் உட்கொள்வதோடு, நல்ல கொழுப்பு சத்தான ஆகாரத்தையும் எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்க மிகப்பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதுவே குறைந்த கொழுப்பு சத்துடைய உணவையும், உணவு இடைவேளையை நீண்ட நேரமாக வைத்துக்கொள்ளும பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள் அந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

    சரி ஆண்குழந்தைக்காக இத்தனை தூரம் ஆராய்ச்சியெல்லாம் மேற்கொண்டவர்கள், பெண் குழந்தைதான் வேண்டும் என்று அடமாக ஆசை கொள்ளும் பெண்களுக்காக இதுபோன்ற ஆராய்ச்சியெல்லாம் மேற்கொள்ளவில்லையா என்று கேட்டால், அதற்கும் “உள்ளேன் ஐயா!”
    என்று ஆஜராகிறார்கள் ஹாலந்தின் மாஸ்ட்ரிக்ட் பல்கலைக் கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!

    இவர்கள் மேற்கொண்ட ஆய்வில், கர்ப்ப காலத்தில் பெண்கள் வாழைப்பழம்
    உண்பதை நிறுத்தி, உப்பு சேர்ப்பதை குறைத்துக் கொண்டால் பெண் குழந்தை பிறக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக சோடியம், பொட்டாசியம் அதிகம் உள்ள இறால், அரிசி உணவுகள், உருளைக் கிழங்கு, பிரட் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.அவற்றுக்குப் பதிலாக கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம் என பரிந்துரைக்க்கிறார்கள் மாஸ்ட்ரிக்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள்.

    இவர்கள் கூறுவதை, கொலம்பிய பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியவற்றுடன் – அதாவது கொழுப்பு சத்து குறைந்த உணவை உட்கொள்ளும் கர்ப்பிணி பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவித்ததோடு –ஒப்பிட்டு பார்க்கையில் நம்பகத்தன்மை மேலும் அதிகரிப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் இந்த ஆராய்ச்சி, ஆய்வு எல்லாம் இன்ன குழந்தைதான் வேண்டும் என்று அடம் பிடிப்பவர்களுக்குத்தான்…! ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ, ஒரு தாய்க்கு எந்த குழந்தையுமே அவள் குழந்தைதானே?!

    அரசியல் பற்றி தெரியணும்னா என்கிட்ட கேளுங்க – கமல்

    By: ram On: 23:09
  • Share The Gag
  • தமிழ் சினிமாவின் முதல் பேசும்படம் காளிதாஸ். இந்த பெயருடன் காளிதாஸ் என்ற ஒரு நடிகர் அறிமுகமாக இருக்கிறார்.

    அவர் தான் பிரபல நடிகர் ஜெயராமின் மகன். இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிற புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் பெயர் ஒரு பக்க கதை.

    காளிதாஸை பத்திரிகை உலகிற்கு அறிமுகப்படுத்த வந்திருந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்.

    அப்போது கமல்ஹாசன் பேசுகையில், காளிதாஸ் என்ற பெயர் சினிமாவில் யாருக்கும் கிடையாது. இந்தப் பெயர் மிக வித்தியாசமான பெயர்.

    இவரின் சினிமா பயணம் வெற்றிகரமாக அமைய இனிமேல் இயக்குனர் மற்றும் காளிதாஸ் கையில்தான் உள்ளது.

    சினிமாவில் நடிப்பதை மட்டும் கற்றுக் கொள்ளாமல், சினிமாத் துறைகளில் இருக்கும் எல்லா கஷ்டங்களையும் கற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ புரிந்தாவது கொள்ளுங்கள்.

    லைட் பாய், தயாரிப்பாளர், புரொடக்சன் நபர் என்ன செய்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏதாவது புரியாத குழப்பமான இண்டஸ்ட்ரீஸ், பாலிட்டிக்ஸ் அப்படினா என்னிடம் வந்து கேளுங்கள்.

    அது ஜெயராமுக்கு தெரியாது. நான் ரொம்ப பட்டிருக்கிறேன். அதனால் எனக்குத் தெரியும் என்று கூறினார்.

    பல்லி எச்சமிட்ட புண்களா?

    By: ram On: 22:26
  • Share The Gag
  • பல்லி எச்சம் இட்டுவிட்டது போலிருக்கிறது. வலிக்கிறது என்றாள் தனது உதடுகளைச் சுட்டியபடி.

    அழகான தடித்த உதடுகள் கொவ்வைப் பழம் போல என்று சொல்ல முடியாது. அதுகருமையான சரும நிறம் வாய்ந்த எம்மவர்களில் காண்பது அரிது. ஆயினும் செம்மை படர்ந்த அவளது உதடு கவர்ச்சியாக இருந்ததை மறுக்க முடியாது. அதில் சிறு சிறு கொப்பளங்கள் வலது பக்கமாகத் தென்பட்டன.

    பல்லி ஏன் உங்களது உதட்டை தேடி வந்து எச்சமிட்டது என நான் கேட்கவில்லை.

    ஆனால் ஏன் எல்லோரது உதட்டை மட்டும் தேடிப்போய் எச்சமிடுகிறது என்ற சந்தேகம் மருத்துவம் படிக்கு முன்னர் என்னிடம் இருந்தது என்பதை மறுக்க முடியாது.

    ஹெர்பீஸ் சிம்பிளக்ஸ்

    உண்மையில் இதற்கும் பல்லி எச்சத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இது ஒரு தொற்றுநோய். Herpes Simplex Virus (HSV) என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

    ஹெர்பீஸ் வைரஸில் பல உப பிரிவுகள் உண்டு. கொப்பளிப்பான், நரம்புக் கொப்பளிப்பான், பாலியல் ஹெர்பீஸ் போன்றவை வேறு உதாரணங்களாகும்.

    பொதுவாக இது நேரிடையாகத் தொற்றும். ஒரு முறை தொற்றினாலும் கிருமி நரம்புகளில் மறைந்திருந்து மீண்டும் மீண்டும் நோயை ஏற்படுத்த வல்லது. இது பொதுவாக உதடுகளிலேயே ஏற்படுகிறது. அதுவும் ஓரமாக நடு உதட்டில் அல்ல சிறு சிறு கொப்பளங்களின் கூட்டமாகத் தோன்றும். பல குழந்தைகளில் நாசித் துவாரங்களிலும் வாயிற்கு உள்ளும் தோன்றுவதைக் கண்டிருக்கிறேன். அரிதாகக் கன்னங்களிலும் தோன்றுவதாகச் சொல்லப்படுகிறது.

    முதன்முறை வரும்போது...

    முதல் முதலில் முக்கியமாகக் குழந்தைகளில் வரும்போது வேதனை இருக்கும். மேலே சொன்ன பெண்ணுக்கு பல தடவைகள் ஏற்கனவே வந்திருந்ததால் வேதனை அவ்வளவாக இருக்கவில்லை. உதடுகளில் மட்டமன்றி நாக்கிலும் வரலாம். கொப்பளங்கள் உடைந்து சிறிய புண்போலத் தோற்றமளிக்கும். பின் உலரத் தொடங்கும்போது மஞ்சள் ஆடைபோலப் பிடித்து காய்ந்து மறையும்.3 முதல் 14 நாட்கள் வரை எடுக்கலாம். புண்கள் வாயிலிருக்கும்போது எச்சில் ஊறுவது அதிகமாகவும் வாய் மணமும் இருக்கும். கடுமையாக இருந்தால் மாத்திரம் குளிர், மெல்லிய காய்ச்சல், காது வலி போன்றவை சேர்ந்து வரலாம். கட்டிளம் பருவத்தினரில் முதன் முதலில் வரும்போது வாய்ப்புண்களுக்கு பதிலாக தொண்டை வலியாக தோற்றலாம்.

    மீண்டும் வரும்போது...

    திரும்ப வரும்போது முதல்முறை வந்ததுபோல் கடுமையாகவோ வேதனை அளிப்பதாகவோ இருப்பதில்லை. வருடத்தில் ஓரிரு முறை வரலாம். ஒரு சிலருக்கு அடிக்கடி வருவதுண்டு. ஆயினும் முதல் வருடம் கழித்தபின்னர் நீண்ட இடைவெளிகளிலேயே வரும்.

    ஆனால் பெரும்பாலும் தடிமன், காய்ச்சல் வரும்போதுதான் அவ்வாறான கொப்பளங்கள் போடுவதுண்டு. இதனால் ஆங்கிலத்தில் இவற்றை Cold Sores என அழைப்பார்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல் இவை கடுமையாக இருப்பதில்லை. வந்தாலும் குறுகிய காலத்திற்குள் சுமார் 56 நாட்களுக்குள் குணமாகிவிடும். பெரும்பாலும் முன்பு வந்த அதே இடத்தில் வருவதும் குறிப்பிடத்தக்கது.

    ஏன் மீண்டும் வருகிறது?

    நிச்சயமாக எதுவெனத் தெரியாது என்ற போதும் பல சந்தர்ப்பங்கள் அதைத் தூண்டுவதாகச் சந்தேகிக்கப்படுகிறது. வெயில், காற்று, மாதவிடாய், காய்ச்சல், சத்திர சிகிச்சைகள், வேறு காயங்கள், மன உளைச்சல் எனப் பல.

    அந்த பழத்தை மட்டும் தோலோடு சாப்பிடுங்க

    By: ram On: 21:44
  • Share The Gag
  • அதிகமாக பழத்தை விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்? அதிலும் அந்த பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு, தோலை தூக்கி போடுபவர்களா? அவர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் காத்திருக்கு!!! அப்படி தோலை தூக்கி போடாமல் அதையும் சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

    ஏனெனில் பழத்தை விட பழத்தில் தோல்களிலேயே அதிகமான அளவு ஊட்டச்சத்தானது இருக்கிறது. அந்த தோலானது சுவையான இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதை கண்டிப்பாக சாப்பிடுங்கள். ஏனென்றால் அதனை உண்பதால் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதிலும் முக்கியமாக பழத்தை சாப்பிடும் முன்பு நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். அத்தகைய பழங்களில் எவற்றின் தோல்களை முக்கியமாக சாப்பிட வேண்டும் என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

    மாம்பழம் : பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தின் பழத்தில் மட்டும் ஊட்டச்சத்தானது இல்லை, அதன் தோலிலும் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் தோலை சாப்பிட்டால் நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்கள் குணமாவதுடன், இரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவை குறைத்துவிடும். ஆகவே இந்த மாம்பழத்தை தினமும் ஒரு துண்டுகளை தோலோடு சாப்பிட்டால் நல்லது.

    ஆப்பிள் : நிறைய பேர் ஆப்பிளை சாப்பிடும் முன் அதன் தோலை நீக்கி விட்டு, பின் அதனை சாப்பிடுவர். ஆனால் அந்த ஆப்பிளின் தோலானது அவ்வளவு கடினமாக இருக்காது, இருப்பினும் அவ்வாறே உண்பர். அத்தகைய ஆப்பிளின் தோலை சாப்பிடுவதால் விரைவில் செரிமானமடைவதுடன், பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆப்பிளின் தோலில் கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. மேலும் அது டயட் மேற்கொள்வோருக்கு ஏற்ற அதிகமான நார்ச்சத்தானது உள்ளது. அதிலும் அளவுக்கு அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், உடலில் இருக்கும் செல்கள் வலுவடைவதுடன், இதய நோய் மற்றும் நீரிழிவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது தோலுடன் சாப்பிடும் பழங்களில் மிகவும் எளிதாக விழுங்கக்கூடிய பழம்.

    எலுமிச்சை : எலுமிச்சையின் தோலை சாப்பிட்டால், உடலில் செரிமானமானது நன்கு நடைபெறும். இது வயிற்றில் ஏற்படும் தசைப்பிடிப்புகளை நீக்கும். ஒரு சிறு துண்டு எலுமிச்சை தோலை தினமும் சாப்பிட்டால், உடலில் இரத்த சுழற்சியானது நன்கு நடைபெறும். மேலும் ஆயுர்வேதத்தில் கல்லீரலில் ஏற்படும் நோய்க்கு, இந்த எலுமிச்சையின் தோலில் இருந்து சாற்றை எடுத்தே கொடுப்பர். அதிலும் ஆயுவேதத்தில் ஸ்கர்வி நோயை சரிசெய்ய, இந்த சாற்றையே கொடுப்பார்கள். தினமும் ஒரு சிறு துண்டுகளை சாப்பிட்டால் சருமமும் அழகாக இருக்கும்.

    ஆரஞ்சு : ஆரஞ்சு பழத்தோலில் அதிக அளவு தாவர ஊட்டச்சத்துகள் மற்றும் ஃப்ளேவனாய்டுகள் உள்ளன. இதுவும் செரிமானத்திற்கு சிறந்தது. மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கும். அதிலும் இதனை சமையலில் பயன்படுத்தினால், ஒரு நல்ல சுவையானது கிடைக்கும். இந்த ஆரஞ்சு பழத்தோலை அப்படியே சாப்பிட முடியாதவர்கள், அதனை சமையலில் சேர்த்து உண்ணலாம்.

    கிவி : கிவி பழத்தின் தோலில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவுக்கும் அதிகமாக இருக்கிறது. அதிலும் இதனை உண்பதால் இரத்தமானது லேசாக இருப்பதோடு, உடலில் எளிதாக நன்கு சுழற்சியானது நடைபெற்று, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. ஆகவே இந்த பழத்தை தினமும் உண்டால், உடலுக்கு தேவையான சத்துக்களை எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.

    லிங்கா படத்தின் புதிய அப்டேட்.. படக்குழு ஐரோப்பா செல்கிறது..!

    By: ram On: 20:23
  • Share The Gag
  • ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. இந்த ஷெடியூலில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    கிளைமேக்ஸ் காட்சிகளை ஷிமோகா என்ற இடத்தில் 10 நாட்களுக்கு எடுக்கவுள்ளனர்.

    அதோடு இந்த ஷெடியூல் முடிந்ததும் படக்குழுவினருக்கு ஒரு வாரம் இடைவெளி விட்டுவிட்டு, அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஐரோப்பா செல்ல இருக்கின்றனராம்.

    அங்கு ஒரு பாடலுக்கான காட்சிகளை படமாக்க உள்ளனர்.

    மன அழுத்த பிரச்னைக்குத் தீர்வாகும் ஏலக்காய்

    By: ram On: 19:21
  • Share The Gag
  • வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிகப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.

    1. குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

    2. ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

    3. மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ஏலக்காய் டீ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும் போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

    4. நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

    5. வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

    6. விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

    7. வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

    இந்த வருடத்தின் அதிர்ஷ்ட நடிகர் விஜய் சேதுபதிதான்...!

    By: ram On: 18:28
  • Share The Gag
  • ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக நடித்து தற்போது கோலிவுட்டில் பிஸியாக நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

    படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள மெல்லிசை, கிருஷ்ணாவுடன் இணைந்து நடிக்கும் வன்மம், சீனு ராமசாமி இயக்கத்தில் விஷ்ணுவுடன் இணைந்து நடிக்கும் இடம் பொருள் ஏவல், ஆர்யா, ஷாமுடன் இணைந்து நடிக்கும் புறம்போக்கு மற்றும் விஜய் சேதுபதி 45 வயது தோற்றத்தில் நடித்து வரும் ஆரஞ்சு மிட்டாய் என படங்களின் பட்டியல் நீள்கிறது.

    இதுதவிர தனுஷ் தயாரிப்பில் நயன்தாராவுடன் நானும் ரௌடிதான் என்ற படமும், இயக்குனர் விஜய்யின் இயக்கத்தில் வசந்த குமரன் என்ற படத்திலும் நடிக்க தொடங்கவுள்ளார்.

    இந்த வருடத்தில் இத்தனை படங்களில் நடித்து வரும் ஒரே நடிகர் விஜய் சேதுபதிதான்.

    ஓட ஓட.. ஓட ஓட தூரம் குறையலையா?

    By: ram On: 17:58
  • Share The Gag
  • இன்று உலகம் பரபரப்பாகிவிட்டது. எந்த நேரமும் பதற்றம், மனச் சோர்வு, எரிச்சல், அவசரம் என ஒரே கவலையாகவே மாறிவிட்டது. காரணம் அந்த அளவுக்கு வேகமாக வாழ்க்கை ஓடுகிறது. ரயில் வண்டி போல தொடர் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையில் நாம் பலவற்றை இழந்திருக்கிறோம்.


    குறிப்பாக நட்பு, உறவு வட்டாரங்களைப் பெருமளவில் இழந்துள்ளோம். வாழ்க்கையில் நாம் சந்தித்த மனிதர்களில் எத்தனை பேர் நண்பர்கள் என்பதை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? இல்லை. காரணம், அத்தனை சுலபத்தில் காலம் ஓடிவிடுவதும், தொடர்புகள் துண்டித்திருப்பதும்தான்.


    சுமார் 30 ஆண்டுகள் பின்னோக்கி பார்த்தோமேயானால் நம்மோடு பழகியவர்கள், சந்தித்தவர்கள் என பெரிய பட்டியலே இருக்கும். ஆனால் அவர்கள் பற்றிய நினைவுகளை அத்துடன் மூட்டைகட்டி வைத்திருப்போம்.
    ஆபத்தில் உதவியவர்கள், முக்கியத் தருணங்களில் சந்தித்தவர்கள் அனைவரையும் மறந்து விட்டோம். தொடர்புகள் துண்டித்ததற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. ஆனால் அதை மீண்டும் புதுப்பிப்பதும் இயலாத காரியமாகிவிடுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் என்ன காரணம்? மனதை ஒருமைப்படுத்தும் தன்மை கிடையாது. எப்போதும் எதையாவது நினைத்து மனம் அலைபாய்வதுதான்.


    இதன் விளைவு மன அழுத்தம், மன உளைச்சல். அதற்கு நாம் இடம் அளிக்கக் கூடாது. “இயற்கை ஒரு கதவை சாத்தினால் மறு கதவைத் திறக்கும்’ என்பதுபோல மனதை அமைதியாக்கினாலே நாம் ஆரோக்கியமாகவும், தெளிவாகவும் வாழக் கற்றுக்கொள்ளலாம்.


    இன்று அடிக்கடி நடைபெற்றுவரும் பாலியல் குற்றங்களைப் பார்த்தால் அனைத்துமே திட்டமிடாத மன உந்தலில்தான் நடக்கின்றன என்று தெரியும். போதை, ஒரே சம்பவத்தைத் திரும்பத் திரும்ப நினைத்து ஏங்குதல் போன்றவை அவர்களுக்குள் தவறுசெய்யத் தூண்டுகின்றன.
    இறுதியில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மன நோயாளிகளாகவே மாறியிருப்பதைக் காண முடிகிறது. இதற்கெல்லாம் காரணம் நமது வாழ்க்கை நெறிமுறைகள் தடம் மாறிச் செல்வதுதான்.


    விலகிச் செல்லும் பாதையில் பயணிப்பதற்குக் காரணம் தவறான வழிகாட்டல்தான். இதெல்லாம் தெரிந்துதான் நம் முன்னோர் சில வழிமுறைகளை வகுத்து வைத்திருக்கின்றனர். அவை தியானம், யோகம் என அழைக்கப்படுகிறது.


    யோகக் கலையில் லட்சக்கணக்கான அம்சங்கள் இருக்கின்றன. அவற்றை முறையாகக் கற்று அனுபவத்தின் அடிப்படையில் 100 வகையான யோகங்களை மட்டுமே நாம் பயன்பாட்டில் வைத்திருக்கிறோம்.
    இவைதான் அடிப்படை யோகக் கலை. இதை முறையாகக் கற்றாலே வாழ்க்கையில் உடலளவிலும், மனதளவிலும் மிளிர முடியும். ஆற்றலைப் பயனுள்ள வகையில் செலவழித்தாலே போதுமானது. வீணாகப் பயப்படுதல், சினங்கொள்ளல் போன்றவை தேவையற்றவை. இதைத் தடுக்க நாம் முறையான சில பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.


    வாழ்க்கைக்கு எது தேவை என்பதை நாமே திட்டமிட்டுச் செயல்படுத்த முடியும். உடனடியாகப் பலன்தரும் செயல்களைத் திட்டமிட்டு வேலைகளைச் சுருக்கி, பிரணாயாமம், தியானம் போன்றவற்றைக் கடமையாக்கிக் கொண்டால் வாழ்க்கைக்குத் தேவையான சக்திகளை நாம் பெற முடியும்.
    தினசரிச் செயல்பாட்டில் இதுபோன்ற அம்சங்களை நாம் முறையாகப் பின்பற்றினால் மிகத் தெளிவான முடிவை மேற்கொள்ளும் பக்குவம் ஏற்பட்டுவிடும். கவலை, கோபம், காமம், குரோதம் என பல்வேறு செயல்களைக் கட்டுப்படுத்த இன்றைய காலகட்டத்தில் அமைதியான பிரார்த்தனை தேவைப்படுகிறது. அதைத் தேர்வு செய்து பின்பற்றினாலே கவலை மறைந்துவிடும்.

    'ஆலப்புழா' - சுற்றுலாத்தலம்

    By: ram On: 17:26
  • Share The Gag

  • 'ஆலப்புழா'

    ஆலப்புழா
    'லப்புழா' என்றதும் பெரிய பெரிய படகு வீடுகளும் அலைஇல்லாத கடலும்,முகத்துவாரம் என்னும் கடலும் ஆறும் சங்கமிக்கும் நீர்ப்பரப்பும் தமிழ் மற்றும் கேரள  சினிமாக்களின் கனவு பாடல் காட்சிகளும் நினைவுக்கு வரும்  சுற்றிலும் நீலநிறத்தில் தண்ணீரும்.. பச்சை நிறத்தில் மரங்களும் சூழ்ந்த அந்த அற்புத பூமியை  இப்போது அறிவோம் 
    ஆலப்புழா இத்தாலி நாட்டின் வெனிஸ் நகருக்கு இணையான அமைப்பை உடையது. வெனிஸ்  நகர மக்கள் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு செல்வதென்றால் கூட படு வழியாகத்தான் பயணம் செய்வார்கள். கிட்டத்தட்ட ஆலப்புழாவும் அப்படிப்பட்டதுதான். அனைத்து பொருட்களும் படகு வழியாகத்தான் வீடுகளுக்கு வருகிறது.
    இதனால் ஆலப்புழாவை கேரளாவின் வெனிஸ் என்று அழைக்கிறார்கள். ஆலப்புழா அத்துணை ரம்யமான நகரம். காதல் ஜோடிகள் முதல், கல்யாணம் ஆன தம்பதிகள் வரை அனைவரும் விரும்பும் ஓர் இடமாக ஆலப்புழா விளங்குகிறது.

    ஊரை சுற்றிலும் ஆறுகள், ஏரிகள், அடர்ந்த பசுமையான மரங்கள் இவை அனைத்தும் இயற்கை அன்னையின் மடியில் நம்மை தவழச் செய்கிறது
    இங்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பாம்பு படகு சவாரி உலக புகழ் பெற்றது. மற்றும் விடுமுறை காயல் வீடுகள், கடற்கரைகள், கடல் உற்பத்திப் பொருட்கள் மற்றும் தேங்காய் நார் தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்குப் புகழ்பெற்ற இடமாக உள்ளது.
    கடல் வரை பரந்து காணப்படும் இங்குள்ள கப்பல் துறை 137 வருட பழைமை வாய்ந்தது.  இக்கடற்கரை மிகத்தூய்மையாகவும், அழகாகவும் ராமரிக்கப்படுகிறது இக்கடற்கரையின் தெற்குப் பகுதியில் குழந்தைகள் விளையாட தனிப்பூங்கா ஒன்றும்அமைக்கப்பட்டுள்ளது.
    படகு இல்லம்:
    லப்புழாவில் இருக்கும்போது நாம் காணும் மிகவும் அருமையான ஒரு அனுபவம் படகு இல்லப் பயணமாகும்.
    நாம் ஆலப்புழாவிலுள்ள காயல்களில் பழையகாலத்து கட்டுவள்ளங்களின் மறுபதிப்புகளைக் காணலாம்.
    அசலான கட்டுவள்ளம் அல்லது அரிசி தோணிகள் டன் கணக்கான அரிசி மற்றும் நறுமணப் பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுவது வழக்கம்.
    கட்டுவள்ளம் அல்லது முடிச்சோடு கூடிய படகு என இது அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது முழு படகும் கயிற்றினால் மட்டுமே கட்டப்பட்டு ஒரு படகாக உருவாக்கப்பட்டிருக்கும்.பின்னர் ஒரு ஹோட்டல் போன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட படுக்கை அறைகள், நவீன கழிப்பறைகள், ஆடம்பர வரவேற்பறைகள், சமையலறை மற்றும் அனைத்து பக்கங்களையும் பார்ப்பதற்கு ஏற்ற பால்கனி என அனைத்து வசதிகளையும் கொண்ட படகு இல்லங்கள் இப்போது வந்துவிட்டன
    கேரள சுற்றுலா துறையின் மூலமாகவும் பல்வேறு படகு இல்லங்கள் உள்ளன. படகு இல்லங்கள் சாதரணம் முதல் நவீனம் வரை உள்ளது.  பயணிகளின் பொருளாதார வசதிகளை பொறுத்தது. இந்த படகு இல்லங்களில் தங்குவதற்கு ஒரு நாளுக்கு 9000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. குறைந்த பட்சம் 7000 ரூபாய் வரையும் செலவாகலாம். மூன்று வேலை உணவும் உங்களுக்கு அதில் வழங்கப்படும்.
    ஒருவர் படகு இல்லத்தில் இருக்கும்போது காயல் வாழ்க்கை நிகழ்வுகளை எந்தவிதமான இடையூறும் இல்லாமல் கண்டு மகிழலாம் என்பது இப்பயணத்தின் சிறப்பாகும்
    இப்போது நாம்  வள்ளத்தில் பயணிப்போம் ;

    முதலில் நாம் ஆலப்புழாவிலிருந்து ஒரு படகினை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம்.
    கண்களை மூடி அப்படியே அமைதியாக சிறிது நேரம் பயணம் மேற்கொண்டுவிட்டு பின்னர் கேரளாவின் மிகப்பெரிய காயலான வேம்பனார் ஏரியின் அழகில் மனதைப் பறிகொடுத்தபடி மனதை வருடும் காற்றை நுகர்ந்தபடி பிரயாணம் செய்யலாம்.பின்னர் நாம் கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான குமரகோம் நோக்கிச் செல்வோம். வேம்பநாடு காயல்வழியாகச் செல்லும்போது காயல் கிராம வாழ்க்கை மற்றும் காயல் செயல்பாட்டுக் காட்சிகள் ஆகியவற்றைக் கண்டு மகிழலாம். இரு ஓரங்களிலும் தென்னந்தோப்புகளும் வயல்வெளிகளும் உள்ள கால்வாய்கள் வழியாக பொழுதுபோக்காக நீர்வழிப் பயணம் செல்லலாம்.
    குமரகோமை அடைந்ததும் நாம்  இன்னொரு விந்தையான உலகிற்குள் நுழைந்தது போல உணரமுடியும்  . தீவுக்கூட்டம் நிறைந்த இந்த சிறிய காயல் கிராமத்தின் தனக்கென பிரத்தியேக வாழ்க்கை முறையும் மெல்லிய அழகான மனதை வருடும் காட்சிகள் ஒலிகள் மற்றும் நறுமணம் யாவும் நம்மை  அப்படியே கட்டிப்போட்டு விடும்.குமரகோமில் சிறிது தங்கி இளைப்பாறிவிட்டு வைக்கமிற்குச் செல்லலாம்.

    வைக்கம்  இது பல மனோரம்மியமான காட்சிகளையும் வாழ்க்கை முறைகளையும் கண்முன் கொண்டு நிறுத்துகிறது . இங்கு  நாம் கேரள மிகமதிப்பான பாரம்பரிய மாதிரி பொருட்களைக் காணலாம். இந்த நகரின் முதன்மை கவர்ச்சி மிக பிரசித்திபெற்ற சிவன் கோவிலாகும்.
    இங்குள்ள பச்சை வயல் வெளிகள் நமக்கு  மற்றுமொரு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும்.
    வைக்கத்திலிருந்து கேரளாவின் சுவையான உணவை உண்டு தெம்பாகிய பின்னர் நாம்  சைனைஸ் மீன்பிடி வலைகள் மற்றும் வரலாற்று இடங்கள் நிறைந்த ஃபோர்ட் கொச்சிக்கு  செல்லலாம்.

    ஃபோர்ட் கொச்சிக்கு விடைகொடுத்து விட்டு நாம் பால்கட்டி தீவை நோக்கி செல்வோமானால்
    அதுதான் நாம் இறுதியாக சென்றடையும் சுற்றுலா தளமாகும். பால்கட்டி  தீவிற்குச் செல்லும் வழியில்நாம் முக்கிய இடமான எர்ணாகுளத்தின் அழகிய காட்சியைக் காணலாம். இதன் தொடுவானம், கப்பல்தளம் ஆகியவை பார்க்கத்தக்கவை ஆகும். பால்கட்டிக்குள் சென்றுவிட்டால் திரும்பிவர மனம் வராது. மெல்லிய தென்றல் காற்று மனதை அள்ளும்.
    அழகிய சூரிய வெளிச்சம் ஆகியவை நம்மை பிரியவிடாமல் செய்யும்.அந்த இனிய நினைவுகள் நம்மை எல்லா வருடமும் இங்கு வரத்தூண்டும்

    ஆலப்புழாவில் ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்ப படகுகளை எளிதாக பெற்றுக் கொள்ளலாம். சிறிய நாட்டுப் படகுகள், ஆடம்பரப் படகுகள், சிறிய விரைவு படகுகள், பெரிய பயணிகள் மோட்டார் படகுகள் என்று எல்லாவிதமான படகுகளும் இங்கு கிடைக்கும். சிறிய படகுகள் கால்வாய்கள் வழியாக பயணம் மேற்கொள்ள உதவும்.
    நீங்கள் பிரயாணம் மேற்கொள்ள தயாராகிவிட்டால் ஆலப்புழாவைச் சுற்றியும் உள்ளேயும் பயணம் செய்ய கால்வாய் வழி பயணம் முறைகளுள் ஒன்றைத் தேர்வு செய்வது இனிய அனுபவமாக இருக்கும்.

    கிருஷ்ணர் கோவில் :

    லப்புழாவில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அற்புதமான கிருஷ்ணர் கோவில் காண்போரை ஆச்சர்யப்படுத்தும்.
    இக்கோவிலின் மகாவிஷ்ணுவின் தசாவதார காட்சிகள் வியப்பூட்டும்  விதத்தில் அமைந்துள்ளது. இங்கு பள்ளிபானா என்ற பெயரில்
    மாயமந்திர நிகழ்ச்சி   12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது
    இங்குள்ள கோவிலில் பிரசாதமாக பால் பாயசம் வழங்கப்படுகிறது.

    காயங்குளம்-கிருஷ்ணாபுரம் அரண்மனை:
    18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனை ஆலப்புழாவில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கேரள மன்னர்களின் கட்டட கலைக்கு சிறப்பான உதாரணமாக இது திகழ்கிறது.
    இரண்டு அடுக்குகளால் ஆன இந்த அரண்மனையில்  பல்வேறு புராதான பொருட்கள் உள்ளது. அதனை பாதுகாக்கும் விதமாக ஒரு அருங்காட்சியகமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஓவியங்கள், வெண்கல சிற்பங்கள், சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளிட்டவை அரண்மனையின் வரலாற்றை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
    சக்குலத்து பகவதி கோவில் :
    மபலப்புழா நீராட்டுபுரத்தில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. பிரம்ஹா, விஷ்ணு, சிவன், ஆகிய முக்கடவுல்களையும் உருவாக்கிய மகா சக்தியாக இந்த பகவதி போற்றப்படுகிறாள்.
    இங்கு நடக்கும் பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. இதல் நாடு முழுவதிலுமிருந்து பெண்கள் பங்கேற்று வழிபடுகின்றனர்.
    எடத்துவா தேவாலயம் :

    லப்புழாவில் இருந்து சும்மார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிறிஸ்துவ தேவாலயம் 1810ல் கட்டப்பட்டது. ஐரோப்பாவின் கட்டடக்கலையை பின்பற்றி இந்த தேவாலயம் கட்டப்பட்டது. இங்கு வந்து மனம் ஒன்றி பிரார்த்தனை செய்தால் மனநோய், புத்தி பேதலிப்பு, உள்ளிட்ட நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. இந்தியா முழுவதிலுமிருந்து கிறித்துவ அன்பர்கள் வந்துசெல்லும் புனித தளமாக, சக்திவாய்ந்த இடமாக,
    தேவனின் கருணை நிரம்பும் இடமாக இந்த தளம் அமைந்துள்ளது.
    நேரு ஸ்னேக் கோப்பை படகுப் போட்டி
    வ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 2-ம் சனியன்று இங்கு பிரசித்திபெற்ற படகுப் போட்டி நடைபெறும்.
    பல தினுசுப் படகுகள் அலங்கரிக்கப்பட்டு, அதில் 100 துடுப்பாளர்கள் துடுப்பு போடுவார்கள். இந்தப் படுகுச் சவாரிப் போட்டி, நகரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய வேம்பாநந்த் ஏரியில் நடைபெறும். இதற்கான நுழைவுச் சீட்டுகள் எல்லா கடைகளிலும் விற்கப்படும்.

    ஆலப்புழாவில் எங்கு தங்குவது?
    1. ஹோட்டல் கய்லோரம்
    2. மராரி பீச்
    3. கேரளா ஹவுஸ் போட்
    4. கேரளீயம் ஆயுர்வேதிக் லேக் ரிசார்ட்
    ஆகிய ஹோட்டல்களில் தங்கலாம்.

    ஆலப்புழா செல்வது எப்படி :
    பிற பகுதியில் இருந்து எளிதாக ரயிலில் வந்து விடலாம். சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் கொச்சி சர்வேதேச விமானநிலையம் அமை
    ந்துள்ளது. இதனால் விமானம் மார்கமாக வர விரும்பும் பயணிகளுக்கு ஏதுவான வசதிகள் உள்ளது.
    சென்னையிலிருந்து தினமும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும். ஆலப்புழா எக்ஸ்பிரஸ் தினமும் இரவு 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் .ஆலப்புழாவில் தம்பதிகள் இருவர் மற்றும் இரண்டு குழந்தைகள் இரண்டுநாட்கள் தங்க சுமார் 15000 வரை ஆகும்.
    செலவு குறைக்க விரும்பினால் சாதாரண விடுதிகளை தேர்ந்தெடுக்கலாம். அல்லது ஆலப்புழாவிலிருந்து 15 கிலோமீட்டர் வெளியில் தங்கி அங்குள்ள விடுதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆலப்புழாவை சுற்றிபார்க்க 2 நாட்கள் தேவை. ஆலப்புழாவில் உணவுவகைகள் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக கரிமீன், மற்றும் சில மீன் வகைகள் நிறைந்த உணவு கிடைக்கும். அது மட்டுமா கேரளாவின் பாரம்பரிய உணவுகள் எங்கும் மணக்கும்.

    சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்..!

    By: ram On: 17:05
  • Share The Gag
  • உணவு ஜீரணமாக ஒருவகை திரவக் கசிவு உதவுகிறது.
    தேங்காய், மாவுப் பண்டங்கள், எண்ணெயில் பொரித்த
    பட்சணங்கள் போன்றவை கடித்து மென்று சாப்பிடக்
    கூடியவை. சத்து மாவு போன்ற உமிழ்நீர் சேர்க்கையால்
    நெகிழ்ந்து உட்சென்றவை.

    இவை வறண்ட உணவுகள். திரவம் மிக்க உணவும் சில.
    இவற்றைச் சேர்த்து உண்ணும்போது உணவின்
    இறுக்கமானது நெகிழ்ந்து கூழ் போன்ற நிலை பெறும்
    போது தான் ஜீரண திரவங்கள் ஒரே சீராகப் பரவி
    அவற்றைப் பக்குவப்படுத்த முடியும்.
    இதற்குத் தேவையான அளவில் நீரும், அந்த நீரால்
    கூழ் போன்ற நெகிழ்ச்சியும் ஏற்படாமல் போனால்
    உண்ட உணவு செரிக்காமல் கனத்து கல் போலாகி
    வலியைத் தரும்.

    அதனால் நீரோ அல்லது ஏதேனும் திரவமோ சிறிது
    சிறிதாக உண்ணும் உணவின் தன்மைக்கேற்ப
    சூடாகவோ அல்லது உடல் சூட்டிற்கேற்பவோ சாப்பிட
    வேண்டும். நீங்கள் அதிகமான திரவப் பொருளை
    சாப்பிடுவதாகத் தோன்றுகிறது. அது ஜீரண திரவத்தை
    நீர்க்கச் செய்து செரிமானத்தைக் கெடுத்துவிடும்
    நிலையில், நீங்கள் குறிப்பிடும் சாப்பிட்ட பின் உமிழ்நீர்
    போன்று சிறிது வாந்தியாக வெளியேறும்.

    அதனால் நீங்கள் உண்ணும் சமயம் வெதுவெதுப்பான
    நீரை உணவின் நடுவே ஒரு சிறிய அளவில் சேர்த்துக்
    கொள்வது நல்லது. உண்ட பிறகு நிறைய தண்ணீர்
    குடிப்பதையோ, உடனே படுத்துக் கொள்வதையோ
    தவிர்த்துவிடவும்.
    -
    உணவிற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்பாகவே டீ
    மற்றும் காபி போன்றவற்றைக் குடிப்பதை நீங்கள்
    தவிர்த்துவிடுவது நலம். உணவிற்கு பிறகும் அவற்றை
    உடனே சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் நல்லதே.
    வயிற்றிலுள்ள பித்த ஊறலை இவை அதிகப்படுத்தி
    விடுவதால் உணவிற்குப் பிறகு அந்த பித்த சீற்றத்தை
    உமிழ்நீருடன் வாந்தியாக வெளிப்படுவதற்கு அதுவே
    காரணமாகலாம்.
    -
    அதுபோல உணவிற்கு பிறகும் சுமார் இரண்டு அல்லது
    மூன்று மணிநேரம் வேறு எதுவும் சாப்பிடாமல் இருப்பதும்
    நலமே.
    பொதுவாகவே உணவிற்கு பிறகு வேம்பு இலையை
    வெந்நீர் போட்டுக் குடிப்பது வழக்கத்தில் இல்லை.
    ஆனால் வெறும் வயிற்றில் வேப்பிலை வெந்நீர் குடிப்பதால்
    ஒரு சில நன்மைகளை நீங்கள் பெறலாம்.
    -
    வயிற்றிலுள்ள அல்சர் புண்ணை ஆற்றக் கூடியது.
    இலைக்காம்புகள் வயிற்றிலுள்ள தேவையற்ற புழு,
    பூச்சிகளை அழிக்கக் கூடியது. தோல் உபாதையை
    நீக்கும், பித்த காய்ச்சலைக் குணப்படுத்தக் கூடியது
    என்று "கைய்யதேவநிகண்டு' எனும் ஆயுர்வேத புத்தகத்தில்
    காணப்படுகிறது.
    -
    பாவப்ரகாசர் எனும் முனிவர் வேப்பிலை கண்களுக்கு
    நல்லது என்றும், வயிற்றில் பித்த ஊறலைக்
    குறைப்பதாகவும், ஒவ்வாமை உணவினால்
    விஷத்தை கல்லீரல் மற்றும் மண்ணீரல் பகுதியிலிருந்து
    அழிக்கக் கூடிய சக்தியை அது பெற்றிருப்பதாகவும் அவர்
    மேலும் தெரிவிக்கிறார்.
    -
    உண்ட பிறகு ஏற்படும் உமிழ்நீர் மற்றும் வாந்தி
    ஆகியவற்றை ஏற்படுத்தும் கப பித்த தோஷங்களை கட்டுப்
    படுத்தக் கூடிய ஆயுர்வேத மருந்துகளாகிய,
    மாதீபலரஸயனம், ஜம்பீராதி பானகம், ஜீரகாரிஷ்டம்,
    தசமூலாரிஷ்டம் போன்றவை சாப்பிடத் தகுந்தவை.
    -
    மாதத்தில் ஒருமுறை சிறிது உப்பு கரைத்த வெந்நீரைச்
    சாப்பிட்டு வாந்தி செய்தும் அதற்கடுத்த மாதம் ஒருமுறை
    கடுக்காய்தோல், உலர்திராட்சை, சுக்கு ஆகியவற்றை
    வகைக்கு 5 கிராம் இரவு முழுவதும் வெந்நீரில் ஊற
    வைத்து மறுநாள் காலை நன்றாகக் கசக்கிப் பிழிந்து
    அந்தத் தண்ணீரைக் குடித்து நன்றாக மலம் இளகிப்
    போகுமாறு செய்து கொள்வதன் மூலமாக குடல்
    சுத்தமடைவதால் உங்களுடைய இந்த பிரச்னைக்கு
    அதுவொரு தீர்வாக அமையக் கூடும்.
    -
    உணவில் முடிந்தவரை எண்ணெய்ப் பொருட்கள்
    பதனழிந்துபோன முதல்நாள் சமைக்கப்பட்ட உணவு
    வகைகள் புளிப்பு நிறைந்த தயிர், அதிக உப்பு, புலால்
    வகைகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நலம்.
    -
    நன்றாக வேக வைத்த வெதுவெதுப்பான காய்கறிகள்,
    சூடான புழுங்கலரிசி சாதம், சிறிது நெய் விட்டு
    சாம்பார், ரசம் என்ற வகையில் சாப்பிடவும். மோர்
    எந்த வகையிலும் உங்களுக்கு நல்லதே.

    பொது இடத்தில தும்மவோ, இருமவோ சிரமமா இருக்கா?

    By: ram On: 08:19
  • Share The Gag
  • நாற்பது வயதினைக் கடந்தாலே பெண்களுக்கு மெனோபாஸ் பருவம் தொடங்கிவிடும். உடலில் வலிகள், மன அயற்சி போன்றவைகளோடு அடிக்கடி சிறுநீர் தொற்றுகோளாறுகளும் வாட்டி வதைக்கும்.இருமினாலோ, தும்மினாலோ சிறுநீர் கசியும். இதனால் பொது இடத்திற்கு எங்காவது செல்லவேண்டும் என்றால் கூட கூச்சப்பட்டுக்கொண்டு செல்லமாட்டார்கள். இதற்கு காரணம் உடை நனைந்து விடுமோ என்ற அச்சம்தான்.

    மொனோபாஸ் கட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு இந்த சிறுநீர் தொற்று ஏற்படுவது இயற்கைதான் என்கின்றனர் நிபுணர்கள். இதற்கு காரணம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதும் ஒரு காரணமாக இருக்கிறது.

    மெனோபாஸ் பெண் உறுப்புகள் வலுவிழந்து காணப்படுவதோடு அதன் சுவர்களில் பாக்டீரியாக்கள் குடியேறுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். இதுவே சிறுநீர் தொற்றின் ஆரம்பமாகிறது. பின்னர் படிப்படியாக அரிப்பு, வலி, சிறுநீர் பிரியும் போது எரிச்சல், சிறுநீர் கலங்கலாக இருத்தல் போன்றவை காணப்படும் என்கின்றனர் பிரபல மகப்பேறு மருத்துத்துறை மருத்துவர்கள்.

    சத்தான ஜூஸ்

    சிறுநீர் தொற்று ஏற்பட்டவர்கள் தினசரி ஒரு பழரசம் அருந்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். இது 35 சதவிகிதம் வரை சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். பெர்ரீ பழ ஜீஸ் அருந்தினால் சிறுநீர் தொற்றுநோயை கட்டுப்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். இதில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் நோய் தொற்று பாக்டீரியாக்களை கொல்கிறது.

    பால் பொருட்கள்

    மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் சிறுநீர் தொற்றினை தடுக்க பால் பொருட்கள் நன்மை தருகின்றன. யோகர்டு, சீஸ் போன்றவை வாரத்திற்கு மூன்று முறையாவது உண்ணவேண்டும். இது 80 சதவிகிதம் சிறுநீர் தொற்று ஏற்படுவதை தடுக்கும். இதில் உள்ள நன்மை தரும் லாக்டோசில்லி பாக்டீரியாக்கள் தீமை தரும் பாக்டீரியாவை எதிர்த்து போரிடுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்கறிகள் பழங்களை சாப்பிட வேண்டும். வைட்டமின், தாது சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் சிறுநீர் தொற்று ஏற்படுவதை தவிர்க்கலாம். நல்ல உறக்கமும், ஓய்வும் சிறுநீர் தொற்று ஏற்படாமல் தடுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    தண்ணீர் அதிகம் அருந்துங்கள்

    அதிக அளவு தண்ணீர் அருந்துவது சிறுநீர் தொற்று ஏற்படுவதை தடுக்கும் என்கின்றர் மருத்துவர்கள். தினசரி 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் அருந்துவது அவசியம். மிதமான சுடுநீரை பாட்டிலில் ஊற்றி அடி வயிற்றில் ஒத்தடம் கொடுக்கலாம். இது நோய் தொற்றினால் ஏற்படும் வலியை தவிர்க்கும்.

    காபி குடிக்காதீங்க

    மெனோபாஸ் பருவத்தில் சில உணவுகளை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். சிட்ரஸ் பழ ஜூஸ்களை அறவே தவிர்க்க வேண்டும். அதேபோல் காஃபின் சேர்க்கப்பட்ட உணவுகள், சில சாக்லேட்கள், காபி, ஆல்கஹால் போன்றவைகள் மெனோபாஸ் பருவத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகளாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் காரமான உணவுகளையும் சாப்பிடக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.

    நெற்றியை விட மூக்கு நீளமா இருக்கிறவங்க முட்டாளாதான் இருப்பாங்க! பத்ரி டயலாக்கில் பஞ்சர் ஆகும் மூக்கு!

    By: ram On: 07:56
  • Share The Gag
  • விஜயலட்சுமியெல்லாம் கவர்ச்சி காட்டுனா வௌங்குமாய்யா நாடு? எலும்பும் தோலும் எட்டிப்பார்க்க ஒரு மாராப்பு அணிந்து கொண்டு பாத் டப்பில் குளித்துக் கொண்டிருந்தார் அவர். நம்புங்கள்… அவரை ஜொள்ளொழுக ரசித்துக் கொண்டிருந்தார் நகைச்சுவை நடிகர் கருணாகரன். டைரக்டர் பத்ரி இயக்கிய படங்களில் நகைச்சுவைக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பதால், விஜயலட்சுமியின் கவர்ச்சியையும் அந்த லிஸ்ட்டில் வைத்துவிட்டு பத்ரி சொல்வதை கேட்போமா?

    பாலசந்தரின் ‘தில்லுமுல்லு’ படத்தின் ரீமேக்கான மற்றொரு தில்லுமுல்லுவை இயக்கியது பத்ரிதான். அதில் மிர்ச்சி சிவா ஹீரோ. இப்போது இவர் இயக்கும் ‘ஆடாம ஜெயிச்சோமடா’ படத்தின் வசனத்தை எழுதியிருப்பவர் அதே சிவா. இந்த படத்தில் சிவாவை நடிக்க வைக்காமல் வெறும் வசனத்தை மட்டும் அவர் பொறுப்பில் விட்டுவிட்டார் பத்ரி. ஏன்? ‘சிவா பேசிக்கலா ஒரு கிரிக்கெட்டர். அதனால்தான்’ என்றார்.

    தொடர்ந்து சிவா பேசியதை கேட்டால், அந்த பாடல் காட்சியை பார்க்க வேண்டும் என்ற ஆசை இப்போதே வந்தது. தில்லு முல்லு ரீமேக்கின் போது, பழைய படத்தில் வரும் ராகங்கள் பதினாறு பாடலை இடைவேளைக்கு சற்று முன்பு வைத்திருந்தாராம். ‘ஒருநாள் பாலசந்தர் சார் போன் பண்ணினார். அந்த பாடல் காட்சி எந்த இடத்தில் வருதுன்னு கேட்டார். நான் இன்டர்வெல்லுக்கு முன்னாடின்னு சொன்னேன். அப்ப அவர் சொன்னார். அந்த இடத்தில் வச்சா எல்லாரும் எழுந்து தம் அடிக்க போயிருவாங்க. ஒரு நல்ல பாடல் யாரும் கேட்காமல் மிஸ் ஆகிடும். அதனால் இடைவேளைக்கு அப்புறம் வைன்னு சொன்னார். அவர் சொன்னபடியே வச்சேன்’.

    ‘ஆனால் இந்த படத்தில் வேணும்னே ஒரு பாடல் காட்சியை இன்டர்வெல்லுக்கு சற்று முன்பு வச்சுருக்கேன். ஆனால் யாருக்கும் போரடிக்காத மாதிரி, அதை ஒரு ஆக்ஷன் சீக்குவென்ஸ் பாடலா மாத்திட்டேன். பொதுவா ஒரு பாடல் காட்சியை நடன இயக்குனர்தான் ஷுட் பண்ணுவார். முதன் முறையா இந்த பாடல் காட்சியை ஒரு ஸ்டன்ட் மாஸ்டர் ஷுட் பண்ணியிருக்கார் ’ என்றார்.

    படத்தில் ஆடுகளம் நரேனை குறித்து சொல்வதாக ஒரு டயலாக் வருகிறது. ‘நெற்றியை விட மூக்கு நீளமா இருக்கிறவன் முட்டாளாதான் இருப்பான் ’ என்று. பத்ரியிடம், அப்படிங்களா? என்றால், சாமுத்ரிக்கா லட்சணம் புத்தகத்தில் அப்படிதான் எழுதியிருக்காங்க என்றார். யாரோட கால்ஷீட்டோ கிடைக்காத கோபத்துல வச்சுட்டாரோன்னு தோணுது! ஒருவேளை இருக்குமோ?

    முக்கிய குறிப்பு- இந்த படத்தில் ‘ஜிகிர்தண்டா’ பாபி சிம்ஹா போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். எல்லாம் பத்ரியின் அன்புக்கு கட்டுப்பட்டு!

    பிரசவத்துக்கு அப்புறம் வேலைக்கு போவது நல்லதா? கெட்டதா?

    By: ram On: 07:37
  • Share The Gag
  • வேலைக்கு செல்லும் பெண்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் கூறுவது, பிரசவத்திற்கு பிறகு குறைந்தது ஒரு மாதமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்பது. அதிலும் அது அவர்களது பிரசவம் மற்றும் உடல் நிலையை பொறுத்து, ஒரு மாதத்தில் கூட வேலைக்கு போகலாமா வேண்டாமா என்று பரிசோதித்து கூறுவார்கள். ஆனால் சில பெண்கள் தங்களுக்கு பிரசவம் நடந்த ஒருசில வாரங்களிலேயே வேலைக்கு சென்று விடுவார்கள். அவ்வாறு வேலைக்கு செல்வது நல்லதா? கெட்டதா? என்பதை பார்ப்போமா!!!

    * பொதுவாக பிரசவம் முடிந்த பிறகு, தாய் கண்டிப்பாக குழந்தையுடன் இருக்க வேண்டும். அதிலும் பிரசவம் முடிந்த பிறகு அனைத்து தாய்மார்களும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மற்றும் ஓய்வு எடுப்பது போன்றவற்றை உடனடியாக நிறுத்த முடியாது. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது அலுவலகத்தில் தரும் பிரசவ விடுமுறையை, பிரசவத்திற்கு பின் இரண்டு மாதங்கள் எடுத்துக் கொள்வது நல்லது. இதனால் குழந்தையை நன்கு பார்த்துக் கொள்வதோடு, அவர்களது உடல் நிலையும் நன்கு இருக்கும்.

    * நிறைய மகப்பேறு மருத்துவர்கள் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் பிரசவத்திற்கு பின், ஆறு மாதத்திற்குப் பிறகு மீண்டும் வேலைக்கு செல்வது நல்லது என்று கூறுகின்றனர். அதிலும் சிசேரியன் பிரசவம் என்றால், தையல் காய்ந்து, குணமாவதற்கு நீண்ட நாட்கள் ஆகும். அதிலும் அவர்கள் நடக்கும் போது, வேலை செய்யும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லையெனில் தையல் பிரிந்து, கடுமையான வலியை ஏற்படுத்திவிடும். ஆகவே ஓய்வு மிகவும் அவசியம் என்று வலியுறுத்துகின்றனர்.

    * பெண்கள் பிரசவத்திற்குப் பின் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் வேலைக்குச் சென்றால், அதிக வேலையின் காரணமாக மன அழுத்தம் ஏற்படும். இது மிகவும் ஆபத்தானது. அதிலும், பிரசவத்திற்குப் பின் உடல் நலம் சரியாகாத போது வேலை செய்தால், பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே வேலைக்கு நிறைய நாட்கள் விடுமுறை போட் முடியாது என்று நினைப்பவர்கள், பிரசவத்திற்குப் பின் நல்ல ஆரோக்கியமான உணவை உண்டு, அதிக நேரம் வேலை செய்வதை தவிர்த்து ஓரளவு செய்து வந்தால், எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்கலாம்.

    * வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது மிகவும் சிறந்தது. இதனால் வேலையை பார்த்தது போலும் இருக்கும், குழந்தையை பார்த்துக் கொள்வது போலும் இருக்கும். ஆனால் நிறைய பெண்கள் குழந்தையை பார்த்துக் கொள்ள வேலைக்கு ஆள் வைப்பார்கள். அது நல்லதல்ல. தாய் பார்த்துக் கொள்வது போல் எதுவும் வராது. அதுவும் அவ்வப்போது சரியான நேரத்திற்கு குழந்தைக்கு பால் கொடுத்து வந்தால், குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தால், மார்பகப்புற்று நோய் வரும் நிலை ஏற்படும். ஆகவே எதுவோ, குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் அவசியமானது.

    * எங்கு வேலை செய்தாலும், நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டாம். ஏனெனில் பிரசவத்திற்கு பின் நிறைய ஓய்வு உடலுக்கு வேண்டும். சாதாரணமாக இருக்கும் போது அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி, அப்போது செய்ய முடிந்த வேலை கூட, சில சமயங்களில் செய்ய முடியாமல் போகும். ஏனென்றால் அவ்வளவு உடல் சோர்வாக இருக்கும்.
    ஆகவே மேற்கூறியவற்றை நினைவில் வைத்து, உங்கள் பிரசவத்திற்குப் பிறகு என்ன செய்வதென்று முடிவெடுங்கள்.

    அஜீரணம் பல் ஈறுகளுக்கு உகந்தது கொத்தமல்லி கீரை

    By: ram On: 06:58
  • Share The Gag
  • வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் பச்சைக் கொத்து மல்லி இலையை தினமும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் நாற்றம் நீங்கும்.

    கொத்து மல்லி கீரையை பிழிந்து கிடைக்கும் சாற்றை அம்மை மற்றும் பித்த தழும்புகளுக்கு மேல் தடவி வந்தால் அவைகளின் நிறம் தோலோடு பொருந்துவது போல மாறி வரும்.

    முகத்தில் ஏற்படும் பருக்கட்டிகளுக்கு கொத்துமல்லி சாற்றை எடுத்து அதில் கொம்பு மஞ்சளை அரைத்து, அரைத்ததை பருக்கள் மீது பூசி வந்தால் பருக்கள் மறையும், முகம் பளபளப்பாகும்.

    கொத்துமல்லி சாறுடன் சிறிது கற்பூரம் கலந்து பூசினால் தலைவலி குணமாகும்.

    கொத்துமல்லி இலைகளை எண்ணெய் விட்டு வதக்கி வீக்கம், கட்டிகளுக்கு வைத்து கட்டி வர அவை சீக்கிரம் கரைந்து போகும் அல்லது பருத்து உடையும்.

    கொத்துமல்லி சாற்றை தேனோடு கலந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் ஏற்பட்ட பித்த நோய் முற்றிலும் குணமாகும்.

    கொத்து மல்லி கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் சிறிதளவு சர்க்கரை போட்டு அருந்தி வந்தால், உடல் உஷ்ணம் நீங்கும். அஜீரணம் உண்டாகாது.