Thursday, 29 August 2013

குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை புதுமையாக கற்றுக்கொடுக்க உதவும் பயனுள்ள தளம்.

By: ram On: 23:00
  • Share The Gag
  • ஆங்கில மொழியை குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் சொல்லி கொடுக்க பலதரப்பட்ட இணையதளங்கள் இருந்தாலும் நாம் இன்று பார்க்க இருக்கும் தளம் குவிஸ் போட்டி மூலம் சற்றே வித்தியாசமாக குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை கற்றுக்கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


    நம் குழந்தைகளும் ஆங்கிலத்தில் எழுத அல்லது பேச வேண்டும் என்று எண்ணும் பெற்றோர்களுக்கு உதவுவதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது எந்த விதமான ஆசிரியரும் தேவையில்லை ஆன்லைன் மூலம் எளிதாக குழந்தைகள் புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தை சொல்லி கொடுக்கின்றனர்.

    இணையதள முகவரி : http://www.readingbear.org

    போட்டி என்றாலே குழந்தைகள் மகிழ்ச்சியாகிவிடுகின்றனர் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளமும் ஒவ்வொரு பாடத்திற்கும் குவிஸ் போட்டி நடத்தி தன்னுடைய ஆங்கில அறிவில் நிலை என்ன என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்.இத்தளத்திற்கு Getting Started என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் எப்படி குழந்தைகள் எளிதாக ஆங்கிலம் கற்கலாம் என்ற வழிமுறையை தெரிவித்தும் இவர்கள் சொல்லி கொடுப்பதை எப்படி எளிதாக புரிந்து கொள்ளலாம் என்பதை பற்றியும் விவரிக்கின்றனர்.வலது பக்கத்தின் மேல் இருக்கும் Register என்ற பொத்தானை சொடுக்கி புதிய கணக்கு ஒன்று இலவசமாக உருவாக்கி கொள்ளலாம். 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் சொல்லி கொடுக்கின்றனர், ஒவ்வொரு பாடமும் நாம் கற்ற பின் உடனடியாக அதன் அருகில் இருக்கும் Take a Quiz என்ற பொத்தானை சொடுக்கி கற்று கொண்டதை சோதித்து கொள்ளலாம். குழந்தைகள் மட்டும் தான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை நாமும் ஒரு முறை இதைப்பார்த்தால் நம் ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொள்ளலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    குழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.

    By: ram On: 22:39
  • Share The Gag
  • விடுமுறை தொடங்கியாச்சு நம் வீட்டு சுட்டிகளின் சேட்டைகளை குறைத்து அவர்களின் ஞாபகசத்தி மற்றும் எளிதில் புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை வீடியோவுடன் சொல்ல ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


    புத்தகத்தை கொடுத்து படி என்றால் குழந்தைகளுக்கு சற்றே முகம் சுழிக்கும், எப்படி படிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லி கொடுப்பதை விட வீடியோ மூலம் சிறு குழந்தைகள் எப்படி எல்லாம் படிக்கின்றனர் என்பதை காட்டினால் போதும் அவர்களின் அறிவு மேலும் வளரும் அரிய பல நுனுக்கங்களையும் எளிதாக கற்றுக்கொள்ள ஒரு தளம் உள்ளது.

    இணையதள முகவரி : http://www.neok12.com

    இத்தளத்திற்கு சென்று குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை எளிதாக பார்க்கலாம். Physical videos, Life Sciences , Human body , Earth & Space , Geography , Social Studies , English , Math ,  History , Games , Activities போன்ற பல்வேறு துறைகளில் எந்தத்துறை சார்ந்த வீடியோக்கள் பார்க்க வேண்டுமோ அதை சொடுக்கி அதிகப்படியான் வீடியோக்களை பார்க்கலாம்.ஓவ்வொரு வீடியோவும் குழந்தைகளுக்கு பயனுள்ள வீடியோவாகவே இருக்கிறது.ஓயாமல் படி படி என்று சொல்வதை விட இது போல் குழந்தைகளுக்கு வீடியோ மூலம் அறிவை புகட்டும் தளங்களை தெரியப்படுத்தினால் அவர்களின் அறிவு மேலும் பெருகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இத்தளத்தை
    அறிமுகப்படுத்துவதில் வின்மணி பெருமிதம் கொள்கிறது !.

    வீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.

    By: ram On: 22:27
  • Share The Gag

  • தொழில்நுட்பத்தின் வேகமான முன்னேற்றம் பல புதுமையான சிந்தனைகளையும் தினமும்வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் இன்று வீடியோவுடன் பயோடேட்டா உருவாக்க ஒரு தளம் உதவுகிறது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.


    மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்ற சொல் சரியாக இப்போது தான் பொருந்தி வருகிறது.பயோடேட்டா உருவாக்குவதில் பல வித்தியாசமான புதுமையான ஐடியாக்களை நாளும் பல இணையதளங்கள் அறிமுகப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன அந்த வகையில் இதுவரை யாரும் யோசிக்காத வண்ணம் புதுமையான முறையில் வீடியோவுடன் நம் பயோடேட்டா உருவாக்கலாம் என்பதை ஒரு தளம் அறிமுகப்படுத்தியுள்ளது இனி இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

    இணையதள முகவரி : https://www.kareer.me

    இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Start Your FREE Resume Now என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் நம் தகவல்களை முழுமையாக கொடுக்க வேண்டும், இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்த பின்னர் நம் பயோடேட்டாவே புதுமையாகவும் அழகாகவும் வடிவமைத்து நாம் எதில் திறமைசாலிகள் என்பதை பயோடேட்டா வெளிப்படையாக காட்டுகிறது. இத்துடன் நாம் நம்மைப்பற்றிய ஒரு அறிமுகத்தையும் என்னவெல்லாம் திறமை இருக்கிறது என்பதை வெப்காமிரா உதவியுடன் பதிவு செய்தும் அனுப்பலாம். நம் பயோடேட்டாவை பார்ப்பவர்கள் நம் வீடியோவையும் பார்ப்பதுடன் அவர்கள் நம் பயோடேட்டாவைப்பற்றி என்ன கருத்து சொல்கின்றனர் என்பதை பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது அத்துடன் நாம் உருவாக்கிய பயோடேட்டாவை எளிதில் யாருடனும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. புதுமை விரும்பிகளும் வேலையில்லாத நம் நண்பர்களும் இது போல் ஒரு அழகான பயோடேட்டா உருவாக்கி எளிதில் பெரிய வேலையை பெறலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    பிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.

    By: ram On: 22:16
  • Share The Gag

  • புரோகிராம் லாங்குவேஜ் ( Programming Language ) முதல் அனிமேசன் மென்பொருட்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது முதல் ஒவ்வொரு மென்பொருட்களிலும் திறமையானவர்களாக நம்மை மாற்ற இலவசமாக பயிற்சி கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.


    கணினியில் ஜாவா மொழி படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தொகை செலவிட்டால் தான் படிக்க முடியும் என்பதில்லை , நம்மிடம் கணினியும் இணைய இணைப்பும் இருந்தால் ஆன்லைன் மூலம் இன்றைக்கு அதிகமாக காசு வசூலிக்கும் கணினி பயிற்சிகள் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே இலவசமாக கற்கலாம் அத்தனை பயிற்சிகளையும் தன்னகத்தே கொண்டு ஒரு தளம் உள்ளது.

    இணையதள முகவரி : http://www.good-tutorials.com

    CSS, Flash , HTML , Illustrator, JavaJavaScript , Maya ,Photography , Photoshop, PHP , Ruby ,Ruby on Rails , 3ds Max , ஜாவா முதல் பிஎச்பி வரை அனிமேசன் மென்பொருளில் பிஷாஷ்-ல் தொடங்கி மாயா வரை அனைத்து மென்பொருள்களின் பயிற்சியையும் ஆரம்பம் முதல் நம்மை திறமையானவர்களாக மாற்றும் அத்தனை பயிற்சியும் இங்குள்ளது. ஸ்டூடியோ மேக்ஸ் , மாயா போன்ற மென்பொருட்களின் பயிற்சிக்கெல்லாம் சராசரியாக 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை செலவாகிறது , எந்தவிதமான பணச்செலவும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே கற்கலாம், நாம் விரும்பும் நேரத்தில் விரும்பும் மென்பொருளின் பயிற்சியை அளிக்க இந்தத்தளம் பலவிதமான பாடங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் முறையாக பயிற்சியை மேற்கொண்டால் எந்த மென்பொருளிலும்  திறமையானவர்களாக மாறலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு கணினி படித்தவர்களுக்கும் அனிமேசன் படிக்க விரும்புபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    நோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.

    By: ram On: 22:13
  • Share The Gag

  • விளையாட்டு மூலம் பாடம் சொல்லிக்கொடுக்க முடியுமா என்றால் பலருக்கும் எப்படி சாத்தியம்  என்ற கேள்வி இருக்கும் ஆனால் நோபல் பரிசு நிறுவனம் வழங்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


    பொழுதுபோக்கிற்காக விளையாடும் விளையாட்டு மூலம் கூட அறிவை வளர்க்கலாம் , மிகப்பெரிய நிறுவனமான நோபல் பரிசு நிறுவனம் நேரடியாக 30 -க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது இனி இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

    இணையதள முகவரி : http://www.nobelprize.org/educational/all_productions.html

    நோபல் பரிசு என்ற இத்தளத்திற்கு சென்று பல வகையான அறிவை வளர்க்கும்  விளையாட்டுகளில் ஒவ்வொன்றாக விளையாட ஆரம்பிக்கலாம் மன்னிகவும் அறிவை வளர்க்க ஆரம்பிக்கலாம், ஒவ்வொரு விளையாட்டுக்கு முன்னும் அந்த விளையாட்டு பற்றி விதிமுறைகளுடன் கூடுதலாக விபரங்களையும் அளிக்கின்றனர். உதாரணமாக எந்த ஒரு விளையாட்டை எடுத்துக்கொண்டாலும் அதில் இருந்து அதிகப்படியான தகவல்களையும் புதுமையான பல விசயங்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

    விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதமே சிறப்பாக இருக்கிறது, விளையாட்டின் விதிமுறை தெரிந்து கொண்டு நாம் விளையாடும் விளையாட்டுகள் நம் அறிவை வளர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, போட்டிக்கு தயாராகும் மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவருக்கும் இந்த நோபல் பரிசு தளம் பயனுள்ளதாக இருக்கும்.

    *முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்*

    By: ram On: 20:17
  • Share The Gag
  • *முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்*

     
     
    வெந்தயம்! முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை ஒழித்துக் கட்ட சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல நீவி தடவவேண்டும்.
     
     
    அல்லது மெந்தய விதைகளை நன்றாக கொதிக்கவிட்டு, பிறகு அரைத்து கூலான இடத்தில் வைக்கவும். இதனை தழும்புகள் மீது தடவி 15 அல்லது 20 நிமிடம் உலர விடவும். பிறகு ஜில் தண்ணீரில் முகத்தை அலம்பவும்.
     
    எலுமிச்சை சாறை எடுத்துக்கொள்ளவும், பஞ்சை அதில் நனைத்து பருக்கள் தழும்புகள் மீது தடவவும். சிறிது நேரம் கழித்து மிதமான கொதிநீரில் முகத்தை அலம்பவும். எலுமிச்சை கரும்புள்ளிகளை போக்கவும் சிறந்த மருந்தாகும்.
     
    சந்தனம் மற்றும் பன்னீரைக் கலந்து பேஸ்ட் போன்று செய்து முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளலாம். ஒரு மணிநேரம் கழித்து பிறகு அலம்பவும்.
    ஆலிவ் எண்ணெயை ரெகுலராக முகத்தில் தடவி வந்தால் ஏற்கனவே உள்ள பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் உருவக்கத்தையே தடுத்தாலும் தடுத்து விடும்.
     
    வெள்ளரிப்பிஞ்சு முகத்தை மென்மையாக வைக்க உதவும் மற்றொரு இயற்கைப் பொருளாகும். இதனையும் ரெகுலராக பயன்படுத்தலாம்.

    அனைத்து வகையான DRIVER களையும் ஒரே இடத்தில் DOWNLOAD செய்ய அருமையான தளம்!

    By: ram On: 20:11
  • Share The Gag

  • Driver CDகளை தொலைத்துவிட்டவர்களுக்கு அல்லது குறித்த Driver இனை தேடுவோருக்கு இன்றைய தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதில் பல வகையான Driverகள் முற்றிலும் இலவசமாக Windows XP, Windows 7(32-Bit) , Windows 7(64-Bit) போன்றவற்றுக்கு கிடைக்கும்.

    Audio Drivers

    Barebone Drivers

    Bluetooth Drivers

    EEE PC Drivers

    Fax-Modem Drivers

    Graphics Card Drivers

    LCD Monitors Drivers

    Mobile Phone Drivers

    Modem Drivers

    Motherboard Drivers

    Mouse Drivers

    Netbook Drivers

    Networking Drivers

    Notebook Drivers

    Other Drivers

    Printer Drivers

    Scanner Drivers

    Sound Drivers

    TV-Card Drivers

    Webcam Drivers

    Wireless Drivers

    HTTP://WWW.ALL-DRIVER.COM

    கணனியால் அழிக்க முடியாது என்ற File ஐ எவ்வாறு Delete செய்வது...

    By: ram On: 20:06
  • Share The Gag

  •          ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம்


    செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.


    சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம்.


    எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.


    முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\Documents and Settings\ User Name \ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.


    இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and Settings\Your Name\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது.


    டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும்.
     

    ஒரு சொடுக்கில் உங்கள் கணனியை Shutdown and Reboot செய்வதற்கு....

    By: ram On: 20:02
  • Share The Gag

  • First Reboot செய்வதற்கு,


    ஒரு shortcutஐ உருவாக்கவும். அதற்கு Desktopல்
    Right click, செய்து New என்பதை தேர்ந்தெடுத்து, shortcut என்பதை click
    செய்யவும்.அதில் shutdown -r -t 01 -c
    "Rebooting your PC"என்று Type செய்து, Next என்பதை click செய்யவும்



    பின் உங்கள் shortcutன் பெயரைக்கொடுத்து Finish என்பதை click செய்யவும்.



     இதில்,

    1. -s  என்பது உங்கள் கணனியை shutdown செய்வதற்கான குறியீடு.

    2. -l  என்பது உங்கள் கணனியை current userஐ Logs off செய்வதற்கான குறியீடு.

    3. -t nn  என்பது "நேரம்" இது செக்கனில் உள்ளிடப்படும்.

    4. -c "xx"  என்பது உங்கள் பணியை முடிக்கும் முன் "xx" இதற்குள் இருக்கும்
    செய்தியை தெரிவிக்க.அதிகபட்சம் 127 சொற்களைப்பயன் படுத்த முடியும்.

    5. -f  என்பது உங்கள் கணனியை வலுக்கட்டாயமாக shutdown செய்வதற்கான குறியீடு.

    6. -r  என்பது உங்கள் கணனியை Reboot செய்வதற்கான குறியீடு.

    240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத்து ஊரை கண்டுபிடிக்கலாம்......

    By: ram On: 18:36
  • Share The Gag

  • இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் அனைத்து நாடுகளின் அஞ்சல்

    குறியீட்டு எண்ணை வைத்து எந்த நாடு என்பதையும் தெருவின்

    பெயரையும் எளிதாக கண்டுபிடிக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்

    இந்த சிறப்புப் பதிவு.

    அஞ்சல் குறியீட்டு எண் வைத்து நாட்டை கண்டுபிடிக்கலாம் ஒரு

    நாட்டு அஞ்சக் குறியீட்டு எண் மட்டும் அல்லாமல் 240 நாடுகளின்



    அஞ்சல் குறியீட்டு எண் வைத்து எந்த ஊர் என்று எளிதாக

    கண்டுபிடிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

    http://www.addressdoctor.com/lookup/default.aspx?lang=en

    இந்த முகவரியைச் சொடுக்கி இந்தத்தளத்திற்கு சென்று எந்த நாடு

    என்பது தெரிந்திருந்தால் நாட்டை தேர்ந்தெடுக்கவும் தெரியாவிட்டால்

    நாடு என்பதில் Worldwide எனபதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.

    அடுத்து Postal code என்பதில் பின்கோட் ( அஞ்சல் குறியீட்டு எண்)

    கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்தவும். உடனடியாக

    சில நொடிகளில் நமக்கு எந்த ஊர் என்று காட்டுகிறது. வரும்

    முடிவின் வலது பக்கம் இருக்கும் Select  என்பதை சொடுக்கி

    மாவட்டம், தாலுகா, தெரு வாரியாக பார்க்கலாம். கண்டிப்பாக இந்தத்

    தகவல் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக நாம்

    இந்தியாவில் இருக்கும் நம் கிராமத்தின் பின்கோடு முகவரி கொடுத்து

    தேடினோம் முடிவு மிகச்சரியாக இருந்தது.

    ஒரே இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் தரவிரக்கலாம்.

    By: ram On: 18:26
  • Share The Gag
  • ஒரே இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் தரவிரக்கலாம்.


    இன்றைய உலகில் நாம் பயன்படுத்தும் டிஜிட்டல் கேமிரா முதல்

    மொபைல் போன், கம்ப்யூட்டர்,தொலைக்காட்சி,ஏ.சி என்று

    பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களின் எலக்ட்ரானிக்ஸ்

    பொருட்களின் வழிகாட்டி புத்தகத்தையும் (User Manual) ஒரே

    இடத்தில் இருந்து தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



    என்னிடம் இப்போது லேட்டஸ்டாக வந்திருக்கும் நோக்கியா மொபைல்

    போன் இருக்கிறது ஆனால் அதன் User Manual என்னிடம் இல்லை,

    பல இணையத்தில் தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று



    சொல்லும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக

    இருக்கப்போகிறது. புது அலைபேசியின் User Manual மட்டும் அல்லாமல்

    பழைய மொபைல் போன் முதல் அனைத்து எலக்ட்ரானிக்ஸ்

    பொருட்களின் பயன்பாட்டு புத்தகத்தையும் சில நிமிடங்களில் ஒரே

    இடத்தில் இருந்து தரவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்

    உள்ளது.

    இணையதள முகவரி : http://www.retrevo.com/samples/index.html

    3G போன் முதல் சைனா போன் வரை , பழைய கணினி முதல் இப்போது

    லேட்டஸ்டாக வெளிவந்திருக்கும் பாக்கெட் கணினி வரை அனைத்து

    எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் User Manual – ஐ இந்தத் தளத்தில்

    இருந்து எளிதாக தரவிரக்கலாம். User Manuals for Popular Categories

    என்பதில் இருந்து நாம் தேட விரும்பும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை

    தேர்ந்தெடுத்து அடுத்து வரும் திரையில் எந்த நிறுவனம் என்பதையும்

    அதன் மாடல் எண் என்ன என்பதையும் கொடுத்து எளிதாக

    தரவிரக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு பயன்பாட்டு புத்தகம்

    (User Manual) -ஐ தேடும் நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

    Hacking அறிந்தும் அறியாமலும்!

    By: ram On: 17:55
  • Share The Gag
  • .

    Key Loggers:-  
     
     கீ லாக்கர்ஸ் என்பவை நீங்கள் கணினி விசைப்பலகையில்  தட்டச்சிடும் விடயங்களை ஒரு கோப்பு வடிவில் மாற்றி,  கீலாக்கர்ஸ்ஸை உங்களுடைய கணினியில் நிறுவியவர் கைகளுக்கு அவற்றை அனுப்பி விடும் வேலையை செய்கின்றன.

    அந்தவகையில் நீங்கள் உள்நுழையும் பக்கங்களில் வழங்கும் தகவல்கள். நீங்கள் தட்டச்சிடும் மின்னஞ்சல் செய்திகள் என முக்கியமான பலவற்றுடன் சேர்ந்து அத்தனையும் கீலாக்கர்ஸ்ஸை உங்கள் கணினியில் நிறுவியவர் கைகளுக்கு சென்றுவிடும்.

    பொதுவாக key loggers(கீலாக்கர்ஸ்) software key logger/hardware key logger என இரண்டு வகைப்படும். அவற்றைப் பற்றி சிறிது பார்க்கலாம்.

    1.software key logger -

    இந்த வகை கீலாக்கர்ஸ் ஒரு மென்பொருளாக உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும். இவை நீங்கள் இணைய நடவடிக்கைகளின் போது தட்டச்சிடும் அனைத்து தகவல்களையும் கோப்பாக மாற்றம் செய்து இம்மென்பொருளை நிறுவியவருக்கு மின்னஞ்சல் செய்துவிடுகின்றன.

     இந்த கீலாக்கர்ஸ் மென்பொருட்கள் பிறரால் உங்களின் கணக்கு விபரங்களை அறியும் பொருட்டு உங்களுக்கு தெரியாமல் உங்களுடைய கணினியில் நிறுவபடலாம்.

    அல்லது நாம் பாதுகாப்பற்ற தளங்களில் தரவிறக்கும் சில இலவச மென்பொருட்களோடு தரவிறங்கி அந்த மென்பொருளோடு சேர்ந்தே  கணினியில் நிறுவப்படலாம்.

    2.hardware key logger -

    இந்தவகை கீலாக்கர்ஸ் ஒரு  hardware device ஆக உங்கள் கணினியின் விசைப்பலகை தொடுப்பு கேபிள்களில் மிகவும் சூட்சுமமான முறையில் இணைக்கப்பட்டிருக்கும். இவற்றை கணனிகளில் இணைக்க 5 செக்கன்களே போதுமானது. இத்தகைய hardware key loggersஇன் செயற்பாடுகளும் software key loggersகளின் செயற்பாடையொத்தே காணப்படுகிறது. அதாவது இணைய உலவலில் நீங்கள் தட்டச்சிடும் விபரங்கள் அனைத்தையும் இவை  hardware key loggersகளை கணினியில் இணைத்தவர் கைகளுக்கு அனுப்பிவிடுகின்றன.



    கீலாக்கர்ஸ் புரோகிராம்கள் எவ்வாறு எம் கணினிகளுக்குள் புகுந்துகொள்கின்றன?

    கீலாக்கர்ஸ்கள் பிரதானமாக இரண்டு வழிகளில் எம் கணினிகளுக்குள் உள்நுழைகின்றன. முதலாவது, நாம் பாதுகாப்பற்ற தளங்களில் தரவிறக்கும் சில மென்பொருளோடு மென்பொருளாக சேர்ந்து தரவிறங்கி அம்மென்பொருட்களோடு சேர்ந்தே கணினியில் நிறுவப்படுபவை.

    இரண்டாவது, பிறரால் உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் கணினியில் தகவல்களை திருடும் நோக்குடன் மென்பொருள் வடிவாக நிறுவப்படுபவை, அல்லது ஹாட்வெயெர் டிவைசாக(Hardware Device) பொருத்தப்படுபவை.

    கீலாக்கர்ஸ்ஸின் செயற்பாட்டை கணினியில் இனங்காண்பது எப்படி?

    கணினியில் Task Manager ( CTRL+ALT+DEL) சென்று அவதானியுங்கள். எதேனும் சந்தேகத்திற்கிடமான Application கள் இயங்கிக்கொண்டிருந்தால் அவற்றை உடனடியாக End Task செய்துவிடுங்கள். அவை இத்தகைய கெடுதல் விளைவிக்கக்கூடிய புரோகிராம்களாக இருக்கலாம். எனினும் ஹாட்வெயர் ரகத்தைச்சேர்ந்த கீலாக்கர்ஸ்களை இனங்காண இம்முறை உதவாது. அவற்றை நீங்களாக கீபோர்ட் இணைப்பு தொடுப்பிகளில் அவதானித்தால்தான் கண்டுபிடிக்க முடியும்.

    பொதுவாக கீலாக்கர்ஸ் புரோகிராம்களை திறந்துகொள்ள ஒரு சில விசைத்தொகுதிகள்(CTRL+ALT+SHIFT+K) பயன்படுத்தப்படுகின்றன. இவ்விசைகளை ஒருங்குசேர அழுத்தும்போது ஏதேனுமொரு புதிய வின்டோ தோன்றி பாஸ்வேர்ட்டை வேண்டி நின்றால்  அது ஒரு கீலாக்கர்ஸ் புரோகிராம்தான் என்பதை உறுதிப்படுத்தமுடியும். எனினும் எல்லாவகையான கீலாக்கர்ஸ் புரோகிராம்களையும் இந்த முறைமூலம் திறந்துகொள்ளமுடியாது.

    சந்தையில் இலவசமாக கிடைக்கும் சில Keylogger Scanner (KL-Detector, SnoopFree) மென்பொருட்களைப் பயன்படுத்தியும் கீலாக்கர்ஸ்களின் செயற்பாடுகள் கணினியில் உள்ளதா என்பதை பரிசோதிக்க முடியும்.

    கீலாக்கர்ஸ்களிலிருந்து கணினிகளைப் பாதுகாப்பது எப்படி?

    ஓரளவு மிகச்சிறந்த ஒரு பாதுகாப்பு முறையென்றால் KeyScrambler  மென்பொருள் பாவனையைக் குறிப்பிடலாம். இதனை கணினியில் நிறுவியிருந்தால் நீங்கள் தட்டச்சிடும் ஒவ்வொரு எழுத்தையும் உடனடியாகவே இது என்கிரிப்ட்(encrypt) செய்துவிடுகிறது. ஆனபடியால் கீலாக்கர்ஸ் மென்பொருட்களால் நீங்கள் தட்டச்சிட்டதன் சரியான வடிவத்தை பெறமுடியாது போகும்.

    பொது இடங்களிலுள்ள கணினிகளில் தட்டச்சிடும் போது ON  Screen Keyboard(Start->searchbox->type OSK)அல்லது சில வகையான அன்ரிவைரஸ் மென்பொருட்களில் உள்ள ”Virtual Keyboard” வசதிகளைப் பயன்படுத்துங்கள். எனினும் ஸ்கீரீன் சொட் எடுக்கும் வல்லமையுடைய கீலாக்கர்ஸ்களிடம் இந்த விளையாட்டும் செல்லாது.

    மிகச்சிறந்த அன்ரிவைரஸ் மென்பொருட்களை பாவியுங்கள். இவை பெரும்பாலும் கீலாக்கர்ஸ்களின் செயற்பாடுகள் கணினியில் இருந்தால் காட்டிக்கொடுத்துவிடும். அன்ரிவைரஸ் பாவனையோடு மட்டுமல்லாமல் Firewall Softwares                           (I recommend you to use COMODO), Anti-spyware program என்பவற்றை பாவிப்பதும் நல்லது. firewall வசதி இயங்குதளங்களிலும் இருப்பதால் அவற்றை உயிர்ப்பு நிலையில் வைத்திருத்தல் பாதுகாப்பானது. இவற்றிற்கு மேலதிகமாக Anti Keyloggers மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். கீலாக்கர்ஸ் பிரச்சினைக்கு இதுவும் ஒரு தீர்வாக அமையும்.

    மேலும் உங்கள் கணினியின் Operating System, Anti Virus, Internet Browser என்பவற்றிற்கு கிடைக்கப்பெறும் புதிய மற்றும் அவசியமான அப்டேட்களை(important updates) ஒதுக்கிவிடாதீர்கள். அத்தோடு நம்பிக்கையற்ற தளங்களிலிருந்து மென்பொருட்களை தரவிறக்கம் செய்வதை இயன்றளவு தவிர்த்துக்கொள்ளுங்கள். கீலாக்கர்ஸ் அபாயங்களும் இவற்றோடேயே கூட வரலாம்.

    Social Engineering-

    இந்த வகை ஹக்கிங் தாக்குதல் என்றால் என்ன என்பது பற்றி பார்ப்பதற்கு முன்னர், Social Engineering முறையிலமைந்த ஹக்கிங் வழிமுறை மூலம் தனது மின்னஞ்சல் கணக்கை இழந்து கொண்ட அமெரிக்கப்பிரபலம் பற்றிய கதையைப் பார்த்துவிடலாம்.

    சாரா பாலின்(Sarah Palin) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அலாஸ்காவின் முன்னாள் அழகி, குடியரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர், அலாஸ்காவின் 11ஆவது ஆளுனர் என்றவாறு பலவற்றையும் அவரைப்பற்றி சொல்லிக்கொண்டுபோகலாம். அந்தளவுக்கு அமெரிக்க அரசியலில் புகழ்வாய்ந்த ஒரு பெண்மணி.

    2008 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பாக துணை ஜனாதிபதி வேட்பாளராக சாரா பாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தல்நேர பரபரப்புகளுக்கு மத்தியில் சாரா பாலின் அம்மையாரின் தனிப்பட்ட ஈமெயில் கணக்கை(gov.sarah@yahoo.com) ஹக் செய்துவிட்டான் 20வயதேயான ஒரு மாணவன். எப்படி சாத்தியமானதென நீங்கள் நினைக்கலாம். ஆனா சிம்பிளா முடிச்சிட்டான் அந்த ஹக்கேர் வாலிபன்.

    சாரா பாலின்  ”gov.sarah@yahoo.com” என்ற ஈமெயில் கணக்கைதான் பயன்படுத்துகிறார் என்பதை எப்படியோ அறிந்துள்ளான் அந்த குறும்புக்கார வாலிபன் . பின்னர் அவன் யாகூ மெயிலின் நுழைவுப்பக்கத்தில்(Login Page) சாராபாலினின் ஈமெயில் முகவரியை உள்ளிட்டு விட்டு ”Forgot Your Password” என்ற தெரிவினை அழுத்தி அது கேட்கும் ”security question” களுக்கு விடைகூற முற்பட்டிருக்கிறான். அங்கு கேட்கப்பட்ட  ”சாராபாலினின் பிறந்ததினம்”,”அவர் வசிக்கும் இடத்தின் Postal zip code” போன்ற வினாக்களுக்கு கூகுள் தேடல் மூலம் இலகுவாகவே பதில் கண்டுபிடித்துவிட்டான். எனினும் “where did you meet your spouse?” என்ற ஒரு கேள்வி மட்டும் கொஞ்சம் சிக்கலைக் கொடுத்தது. ஆனாலும் இடைவிடாத கூகுள் தேடலின் பின் அதற்கான விடை  “Wasilla high” என்பதை கண்டுபிடித்து விட்டான்.

    பின்னர் என்ன எல்லாகேள்விக்கும் சரியாக பதில் அளித்தாகிவிட்டதே, இப்போது சாரா பாலின் அம்மையாரின் பிரத்தியேக ஈமெயில் கணக்கு அந்த குறும்புக்கார வாலிபன் கைகளில், அப்படியே கணக்கின் பாஸ்வேர்ட்டை ”popcorn” என ஒரு வகை களிப்போடு மாற்றி விட்டு உள்ளுக்குள் ஒருமாதிரியாக புகுந்து விளையாடினான் அவன்.

    மறுநாள் விக்கிலீக்ஸ் போன்ற பிரபல தளங்களில் சாரா பாலினின் சில குடும்ப படங்களும் சில தனிப்பட்ட மெயில்களும் வெளியாகி செய்தியாக்கப்பட்ட போதுதான் வெளியுலகிற்கு தெரிந்தது. பின்னர் F.B.I ஹக்கேர் வாலிபனை பொறிவைத்துப்பிடித்தது தனிக்கதை.



    சரி அதை விடுங்க விடயத்திற்கு வருவோம், இவ்வாறாக ஒருவருடைய கணக்கை மீட்பதற்கான தேவைக்காக வைக்கப்பட்டிருக்கின்ற security questionகளுக்கான விடைகளை உய்த்தறிந்து கொண்டு அவற்றுக்கு சரியாக விடை அளிப்பதன் மூலம் அந்த கணக்கை கைப்பற்றும் வழிமுறையே ”Social Engineering” என்பதாகும்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள்-

    பெரிசா எதுவுமில்ல, ஒரு இணையக்கணக்கை(ஈமெயில்…etc) ஆரம்பிக்கும் போது உங்கள் கணக்கின் பாதுகாப்பு கருதி சில security questionகளை உங்களை தெரிவுசெய்து பதிலளிக்கவும் செய்வார்கள். அதன்போது பிறரால் இலகுவால் உய்தறியமுடியாத வினாக்களாக தெரிவு செய்யவேண்டும்.

     ”படித்த பாடசாலை” “வேலைசெய்யும் இடம்” “அம்மா/அப்பா பெயர்”  போன்ற இலகுவில் பிறரால் உங்களைப்பற்றி உய்த்தறியக்கூடிய வினாக்களை security questions ஆக அமைப்பதை தவிர்ப்பது நலம். ஏனென்றால் இவற்றுக்கான விடைகள் உங்கள் ஒன்லைன் ப்ரொபைல்களில்(Facebook,Google+) எளிதாக பிறருக்கு கிடைத்துவிடும். கூடவே உங்கள் நண்பர்கள் மற்றும் உங்களுக்கு பழக்கமானவர்களுக்கும் தெரிந்திருக்கும்.

    சரியாகச் சொன்னால் நீங்கள் தெரிவுசெய்யும் Security Questionஇற்கான விடை நீங்கள் மட்டும் அறிந்த விடயமாக இருத்தல் சிறப்பானது.

    மேலும் ஏற்கணவே உள்ள security questionகளை தெரிவு செய்வதை விடுத்து ”create your own security question” வசதியைப் பயன்படுத்தி நீங்களாகவே வினாக்களை உருவாக்கி விடையளிக்க முற்படுங்கள். இத்தகைய கேள்விகளுக்கான விடைகளை பிறரால் இலகுவாக உய்த்தறிய முடியாமல் இருக்கும்.

    Tap Napping

    இறுதியாக இந்த Tap napping தாக்குதல் வழிமுறை பற்றிப் பார்த்துவிடலாம். இது ஒருவகை கடத்தல் செயற்பாடு அதாவது kidnapping மாதிரி இது Tap napping. ஆனா இங்க கடத்துறது ஆட்களயில்ல P: அதாவது நீங்க ப்ரோசிங் செய்யும்போது திறந்து வைத்திருக்கின்ற பல Tapகளில் ஒன்று அதேமாதியான போலியான பக்கத்திற்கு திருப்பப்படுவதே Tap napping ஆகும்.

    இதுவும் ஒரு வகையான phishing தாக்குதல்தான், அதாவது நீங்கள் இணையத்தில் உலவும்போது பல Tapகளை திறந்து வைத்துக்கொண்டு உங்கள் வேலைகளை செய்துகொண்டிருப்பீர்கள்.

    உதாரணத்திற்கு நீங்கள் ஒரு Tapஇல் பேஸ்புக் கணக்கு இன்னொரு Tapஇல் ஒன்லைன் பாங்கிங், மற்றொரு Tapஇல் ஈமெயில் கணக்கு என ஏகப்பட்ட Taps திறந்து வைத்துக்கொண்டே ப்ரோசிங் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அப்பிடியே நீங்களும் உங்களுக்கு வந்த ஈமெயில்களை ஒரு சில நிமிடம் பார்த்திட்டு திரும்பவும் ஒன்லைன் பாங்கிங் சைட் திறந்துவைத்திருக்கிற Tapஇனை திறக்கிறீர்கள் என வையுங்கள்.

    அப்போதுதான் ஆரம்பிக்கிறது Tap napping விளையாட்டு, அதாவது நீங்கள் ஈமெயில் திறந்து வைத்திருக்கின்ற Tapஇல் இருக்கும் போது  ஒன்லைன் பாங்கிங் சைட் திறந்துவைத்திருந்த Tapஇனை ஹக்கேர்ஸ் நீங்கள் அறியாத வகையில் அதேமாதிரியான போலி பக்கத்திற்கு திசைதிருப்பி(Redirect) விடுவார்கள். அத்தோடு நீங்கள் திரும்பவும் லாகின்(Login) செய்யும்படியும் அறிவுறுத்தப்படுவீர்கள்.

    என்ன ஏதென்றே தெரியாமல் நீங்களும் அந்த போலிபக்கத்தில்  பயனர்பெயர்,கடவுச்சொல் விபரங்களை உள்ளிட்ட அடுத்தநொடியே  அவை இதனை ஏவிய ஹக்கேர்ஸ் கைகளுக்கு சென்றுவிடும்.

    இதுவும் ஒருவகை  phishing தாக்குதல்தான் என்றபடியால், phishing விடயத்தில் மேற்கொள்கின்ற பாதுகாப்பு ஏற்பாடுகளையே இந்த(Tap napping) விடயத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக எந்த ஒரு தளத்திலும் லாகின்(Login) செய்யமுன் அவற்றின் URL Spelling mistake, Secure enabled  வசதி என்பவை அவசியம் அவதானிக்கப்பட வேண்டும்.

    இத்தகைய வேறுபல ஹக்கிங் தாக்குதல் வழிமுறைகளும் இருந்தாலும் முக்கியமானவற்றை அதாவது தனிநபர் பாதுகாப்புக்கு சவாலான ஹக்கிங் வழிமுறைகளையும் அவற்றுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் இந்த தொடர்நெடுகே பார்த்தோம். மீண்டும் இன்னுமொரு சுவாரசியமான தொடருடன் சந்திப்போம்.

    USB மூலமாக விண்டோஸ் இயங்குதளத்திற்கு பூட்டு போட .......

    By: ram On: 17:43
  • Share The Gag
  • USB மூலமாக விண்டோஸ் இயங்குதளத்திற்கு பூட்டு போட

    விண்டோஸ் இயங்குதளத்தை பூட்டி வைக்க கணினி பயன்பாட்டாளர்கள் பலரும் பயனர் கணக்கிற்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைப்பார்கள். தற்போது வெளிவந்திருக்கு விண்டோஸ் 8 இயங்குதளத்தில் படத்தினை கொண்டு பயனர் கணக்கினை பூட்டி வைக்க முடியும். இதற்கு மேல் விண்டோஸ் இயங்குதளத்தை பூட்ட வேறு வழி இருக்கிறதா என்ற இன்னும் ஒரு சில வழிகள் உள்ளன அவற்றில் ஒன்றுதான் USB வழியாக விண்டோஸ் இயங்குதளத்தை பூட்டுதல்.






    விண்டோஸ் இயங்குதளத்தை பூட்ட சிறந்ததொரு மென்பொருள் VSUsbLogon ஆகும். இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.

    மென்பொருளை தரவிறக்க சுட்டி





    மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும்.பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் இந்த VSUsbLogon  அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் கணினியில் USB ட்ரைவினை கணினியில் இணைக்கவும்.



    பின் நீங்கள் கணினியில் இணைத்த USB ட்ரைவானது அப்ளிகேஷனில் காட்டும். அதை தெரிவு செய்து பின் Assign என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் நம்முடைய விண்டோஸ் பயனர் கணக்கிற்கு என்ன கடவுச்சொல்லை உருவாக்கினமோ அதே கடவுச்சொல்லை இங்கும் உள்ளிடவும். அடுத்து Auto Logon எனும் செக்பாக்சை டிக் செய்து கொள்ளவும். பின் Check Password எனும் பொத்தானை அழுத்தி ஒரு முறை சோதனை செய்து பார்த்துக்கொள்ளவும்.



    இதற்கு முன் விண்டோஸ் பயனர் கணக்கிற்கு கடவுச்சொல்லை உருவாக்கி இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.



    பின் OK பொத்தானை அழுத்தவும். இப்போது உங்கள் பயனர் கணக்கிற்கு USB பூட்டு உருவாக்கப்பட்டுவிட்டதாக செய்தி வரும்.





    பின் கணினிக்குள் நீங்கள் உள்நுழையும் போது கடவுச்சொல் கேட்கும் அதற்கு பதிலாக USB ட்ரைவினை கணினியில் பொருத்தினால் போதும் பயனர் கணக்கு தானகவே திறக்கும்.



    இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா , ஏழு மற்றும் எட்டு ஆகிய இயங்குதளங்களுக்கு பொருந்தும்.
     

    உலகை இயக்கும் மந்திர சக்தி...! - கணினி!

    By: ram On: 16:52
  • Share The Gag
  • உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர்

    உலகை இயக்கும் மந்திர சக்தி...! - கணினி

    (Computer-The magical power of the world)

    கணினி தற்காலத்தில் கைக்குள்ளே உலகத்தை அடக்கிவிட்டது . கையடக்கத் தொலைபேசி இருந்தாலே போதும். உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் பிறரை
    தொடர்புகொள்ள முடியும். நமக்குத் தேவையான தகவல்களைப் பெறமுடியும்.

    இன்றைய தகவல் தொழிநுட்பம், கணினி வரவின் மூலம் சாதாரண விஷயமாகிவிட்டது. ஆனால் இதற்கெல்லாம் அடிப்படையான கணினியின் மகத்துவத்தை, உன்னதத்தை யாரேனும் நினைத்துப் பார்க்க கூடிய சூழலில் உள்ளனரா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் அந்த கணினியே அவர்களை ஒரு இயந்திரமாக மாற்றி வைத்துவிட்டது.

    கணினியும், பயன்பாடும்: 

    தற்போதைய சூழலில் கணினி அனைத்து வீடுகளிலுமே ஒரு தொலைக்காட்சிப் பெட்டியைப் போல மிக எளிதாக நுழைந்துவிட்டிருக்கிறது. வீட்டில் மட்டுமா?

    கணினி அலுவலகம், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள், ஆராய்ச்சிக் கூடங்கள், விற்பனை வளாகங்கள், மருத்துவமனைகள், என எந்த ஒரு துறையை எடுத்துக்கொண்டாலும் கணினியே ஆட்சி செய்கின்றது.

    கணினி இல்லையெனில் இந்த உலகமே ஸ்தம்பித்து நின்றுவிடும் அளவிற்கு கணினி எங்கும் வியாபித்து தன்னை நிலைநிறுத்திக்கொண்டு விட்டிருக்கிறது. இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, நம் கைக்குள்ளே சாதுவாய் ஒரு செல்லப் பிராணியைப் போல் படுத்திருக்கும் இந்த தொழில்நுட்பத்தின் ஆரம்பம் எப்படி இருந்தது?

    அத்தொழில்நுட்பத்தின் பின்னணி, அதற்காக தூக்கத்தை இழந்து பல வருடகாலமாக உழைத்து இந்நிலையை எட்டிய அவர்களின் உழைப்பு எப்படிப்பட்டது என்பதை பார்க்கும்பொழுது வியப்பிலும் வியப்பு ஏற்படுகிறது.

    மென்பொருள் கணினியின் உயிராதாரம். இந்த உயிராதாரம் இருந்தால் மட்டுமே கணினி இயங்கும். மென்பொருள் Software என்பது கணினியை இயக்குவதற்கு எழுதப்படும் புரோகிராம்கள்.  இந்த புரோகிராமிங் செய்பவர்களைத்தான் Computer Programer என்பர்.

    தற்பொழுது நான் பயன்படுத்திக்கொண்டிருக்கும் கணினியின் தொடக்க காலத்திற்கு வருவோம். 1790 முதல் 1871 வரை தனது இடைவிடாத உழைப்பால் ஒரு முழுமையான கணினியின் மாதிரியை உருவாக்கியவர் சார்லஸ் பாபேஜ்.

    கணிதத்தையும் இயந்திரத்தையும் இணைத்துப் Analytical Engine என்ற முதல்  கணினி கருவியை அவர் உருவாக்கினார்.

    கம்ப்யூட்டரை கண்டுபிடித்த மாமேதை.. சார்லஸ் பாபேஜ்..


    Charles Babage
    சார்லஸ் பாபேஜ்
    அவர் உருவாக்கிய கணினி மிகப்பெரிய அறையில் இடம்பிடித்தது. அதன் எடையோ ஆயிரம் கிலோ.. (மயக்கமடைய வேண்டாம்). அத்துடன் தற்பொழுது நாம் இலாகவமாக பயன்படுத்தும் கீபோர்டோ, மௌசோ அதற்கு இல்லை.

    அந்த அறைக்குள் பெரிய பெரிய இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கபட்டிருந்தது. ஆனால் தற்போதைய கணினி நம் உள்ளங்கையிலேயே அடக்கும் அளவிற்கு வந்துவிட்டிருக்கிறது என்பதை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது.

    வெறும் புள்ளிகள், கோடுகள் ஆகியவை இணைந்து செயல்பட்டது. கணினியின் நினைத்திறனும், வேகமும் ந்த்தையை விட குறைவானது. அதாவது இன்றைய கணினியின் வேகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் பத்து இலட்சம் மடங்கு குறைவான வேகம் கொண்டது.



    முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர்




    இந்த கண்டுபிடிப்பில் உடன் இருந்து பணியாற்றியவர் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரின் மகள் அகஸ்டா கிங்.

    உலகிலேயே முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் என்று அழைக்கப்படுபவர். ஆம்.. அவர்தான் மிகச்சிறந்த கணித அறிஞராக, இசைக் கலைஞராக இருந்தார். அவரது கணித அறிவைப் பயன்படுத்தி தொடக்க காலத்தில் கணிப்பீட்டு கருவி அனலிட்டிக்கல் என்ஜினுக்கு புரோகிராம்களை எழுதினார்.

    World's first computer programmer


    சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய அனலிட்டிக்கல் என்ஜின் டிஃபன்ஸ் என்ஜின் ஆகியவற்றின் இயக்க முறைமைகளை நன்றாக புரிந்து கொண்டார். கணினியின் மூலம் இசையமைக்க முடியும் என்பதை அன்றே கண்டறிந்து கூறியவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் 36வது வயதில் இறந்தார். எனினும் இவருடைய பெயர் 2013 ம் ஆண்டு தங்கம்பழனி தளத்தில் கட்டுரையாக எழுதுகிற வரைக்கும் அழியாமல் இருக்கிறது. அவர் செய்த செயல்கள் சாதாரணமானதா என்ன? கணினி உலகம் இருக்கும் வரைக்கும் என்றுமே நிலைத்திருக்க கூடியவர் அவர்.

    அவர் நினைவை நிலைநிறுத்தி, புகழ்ந்து போற்றும் வகையில் அமெரிக்க பாதுகாப்பு துறை 1980ம் ஆண்டு கணினி நிரல் மொழி ஒன்றிற்கு ADA என்றே பெயர் சூட்டியுள்ளது.

    முதல் கணினி உருவாகி, அது செயல்பட ஆரம்பிட்ட அந்த தருணத்தை உலகின் மிகப்பெரிய தொழில்நுட்பம், அறிவியல் விஞ்ஞானம் வளர்ச்சிக்கு விதை ஊன்றப்பட்டுவிட்டது.

    அதைக்கண்டுபிடித பிராடி வில்லியம்ஸ் அந்த வினாடியைப்போல் என்வாழ்நாளில் வேறெந்த நேரத்தையும் நான் உணர்ந்ததில்லை என்று உணர்வுப் பூர்வமாக கூறியிருக்கிறார்.

    டிரான்சிஸ்டர்.. வருகை

    டிரான்சிஸ்டர் இந்தியா சுதந்திரம் அடைந்த வருடத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இது வெற்றிடக் குழலுக்கு வேகத்தடை போட்டது. நீ இருந்த வரைக்கும் போதும்.. இனி என்னுடைய ராஜாங்கம்தான்.. என்று அதனுடைய பழைய தொழில்நுட்பத்தை தூக்கி நொறுக்கிவிட்டு, இரண்டாம் தலைமுறைக் கணினிகளில் தன்னை அடக்கிக்கொண்டது.

    ஒருங்கிணைச் சுற்றமைப்பு என்று கூறப்படும் Intergerated Cirucuit - IC கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுப்பிடிக்கப்பட்ட ஆண்டு 1958. இந்த கண்டுபிடிப்பின் மூலம் மூன்றாம் தலைமுறைக் கணினிகள் உருவாயின. இந்த கண்டுபிடிப்பின் மிகப்பெரிய பயன் என்னவெனில் ஒரு Chip -ஐப் பயன்படுத்தி பல கணினிகளின் பகுதிகளை இணைக்க முடிந்ததுதான். இதனால் ஒரு Operating System-ஐ பயன்படுத்தி பல நிரல்வரிகளை (Programmes) இயக்குவதற்கான வாய்ப்பு பிரகாசமானது. இதுவே நான்காம் தலைமுறைக் கணினியைக் கண்டுபிடிக்க ஆதாரமாகவும் இருந்தது.

    INTEL நிறுவனம்: 

    இன்டெல் நிறுவனம் 4004 Chip-ல் Central Processing Unit - CPU, Momory, Input, OutPut Devices, ஆகியவைகள் இடம்பெற்றன. இதன் மூலம் ஒரு கணினி ஒரு முழுமையான வியாபார வடிவத்திற்கு வந்தது.

    IBM நிறுவனம்: 

    முதன் முதலில் Personal Computer (பர்சனல் கம்ப்யூட்டர் - தனியாள் கணினி) வழங்கியது. 'டைம்ஸ்' இதழ் அந்த ஆண்டின் சிறந்த மனிதனாக இந்த பர்சனல் கம்ப்யூட்டரை தேர்ந்தெடுத்து குறிப்பிடத்தகுந்த விடயம்.

    அன்று மட்டும் கணினி என்ற விதையை சார்லா பாபேஜ், பிரட்டி வில்லியம்ஸ், அடா பைரன் லவ்லேஸ் மற்றும் கணினி தொடர்புடைய ஜாம்பவான்கள் விதைக்காமல் இருந்திருந்தால்.. இன்று நாம் காணும் கையடக்கத் தொலைபேசி.. கணினி... டிஷ், சாட்டிலைட்.. இப்படி நிறைய தொழில்நுட்பங்கள் நமக்கு சாத்தியமாகலேயே போயிருக்கலாம்..

    ஒரு நிலையான, எதிர்கால வளர்ச்சியை அசுர வேகத்தில் கொண்டுச் செல்லப் பயன்படும் கணினியை உருவாக்கிய அறிஞர்கள் மற்றும் வல்லுநர்களை நினைவு கூர்வோம்..!!!

    WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!

    By: ram On: 16:39
  • Share The Gag
  • கம்பியில்லா இணைய இணைப்பை சாத்தியமாக்கி WiFi தொழில்நுட்பத்தில் உள்ள அபாயங்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. அதற்கு முன்பு வைஃபை(WiFi) என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். 
    WiFi என்பது wireless fidelity என்பதின் சுருக்கம். இது ஒரு wireless local area network  ஆகும். கணினி - இணையதள இணைப்புகளுக்கும், நெட்வொர்க்குகளுக்கும் இணைப்புகளை ஏற்படுத்திய கம்பிவட தொழில்நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக வளர்ந்துள்ள புதிய பரிணாம வளர்ச்சியே வைஃபை என்று சொல்லக்கூடிய கம்பியில்லா இணைய இணைப்பு தொழில்நுட்பம் ஆகும். 

    வைஃபை நெட்வொர்க்கில் உள்ள குறைகள்: 

    (Imperfections in the WiFi network:)
    Wi-Fi நுட்பத்தின் மூலம் கணினி, மொபைல், டேப்ளட் பிசி போன்ற சாதனங்களில் இணைய இணைப்பு எந்த இடத்திலிருந்தும் பெற முடியும் என்றாலும் முறையான தடுப்பு, பாதுகாப்பு வசதிகளைப் பயன்படுத்தாத பொழுது இது பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது. 
    அதாவது, இணைய இணைப்பை வான்வழி சிக்னல்களாக அனுப்பி பெற்றுப் பயன்படுத்துவதால் இடையில் வேறு யாரேனும் அதில் குறுக்கிட்டுப் பயன்படுத்த சாத்தியங்கள் அதிகம். இதன் மூலம் கணினி ஹேக்கர்கள் எளிதாக ஒரு கணினியின் நெட்வொர்க்கில் புகுந்து நாச வேலைகளில் ஈடுபட முடியும். . 
     
    உதாரணமாக சொல்வதெனில் சமீபத்தில் நடைப்பெற்ற குண்டுவெடிப்புச் சும்பவத்தில் ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சல் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த மின்னஞ்சலுக்கு சொந்தக்காரர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அதாவது அமெரிக்காவில் உள்ள ஒருவரின் கணினியின் நெட்வொர்க்கில் புகுந்து ஹேக் செய்து அவருடைய கணினியின் மூலம், அவருடைய மின்னஞ்சலை நாசவேலைக்குப் பயன்படுத்தியிருந்தார்கள் என்பது தெரிய வந்தது.  தொடர்பில்லாத ஒரு நபரின் கணினியின் மூலம் அந்த நாசவேலை அரங்கேறியிருப்பது தெரிய வந்தது. 
     
    வயர்லெஸ் அக்சஸ் கார்டுகளின் மூலம் இயங்கும் லேப்டாப்கள், தானியங்கி இணைப்பு அமைப்புகள் ஆகியவை தற்போது பெருகி வருகிறது. அதாவது ஒயர்லஸ் இணைப்பைப் பயன்படுத்துபவர்கள் வான்வழியே தகவல்களை அனுப்புவதால் அதனை தடுத்து ஹேக் செய்து சுலபமாகிறது. அத்தகவல்களை யார்வேண்டுமானாலும் பார்க்க முடியும். எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும், எந்த ஒரு நெட்வொர்க்கைப் பயன்படுத்தினாலும் ஹேக் செய்வது சுலபமாகிறது. 

    தடுக்கும் வழிகள்: 

    (ways to stop Hacking)
    வயர்லெஸ் கருவியின் அட்மின் பாஸ்வேர்ட்டை (Wireless admin password)நீங்கள் உடனடியாக மாற்ற வேண்டும். அதாவது உங்கள் நெட்வொர்க்கின் பெயர், அல்லது பொதுவான பெயருடன் 12345 என இருக்கும் கடவுச்சொற்களை உடனடியாக மாற்றி வேறு புதிய கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டும். 
    உங்களுடைய வயர்லெஸ் கருவி பயன்படுத்தக்கூடிய WPA/WEP பாதுகாப்பு குறியேற்றங்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும். 
    பயன்படுத்தும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் இணைய இணைப்பு துண்டித்துவிடுவது நல்லது. 
     
    வளாகத்தின் மையப்பகுதியில் ஒயர்லெஸ் அணுகள் இடத்தை வைப்பது நல்லது. சுவர் அல்லது சுவற்றின் மூளைகளில் வைப்பதால் கசிவுகள் ஏற்பட்டு அதன் மூலம் உங்களுடைய இணைய நெட்வொர்க்குகளை பிறர் எளிதாகப் பயன்படுத்த முடியும். 


    உங்கள் கணினி Error காட்டுகிறதா? இதோ தீர்வு..!!!

    By: ram On: 07:45
  • Share The Gag
  • நீங்கள் கணினிக்கு புதியவரா? உங்கள் கணினியில் ஏதேனும் பிழை ஏற்பட்டு பிழைச் செய்தி தோன்றியிருக்கும்.. ஆனால் அவற்றை என்னவென்று உங்களால் கூற முடியவில்லையா? கவலை வேண்டாம்.. அதற்கான தீர்வை தேடி கூகிள் முதலான தளங்களில் தேடியும், உங்களுக்கு குழப்பமே மிஞ்சுகிறதா? 
    அப்படியானால் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு மிகச்சிறந்த தளம் உள்ளது.
    இணையதள முகவரி : http://www.errorhelp.com/
    இந்த தளம் மற்றத் தளங்களைப் போலல்லாமல்நீங்கள் கூறும் பிழைகளுக்கு பிழை உதவி ( Error Help) சரியான தீர்வைத் தேடி தருகிறது.

    நீங்கள் உள்ளிடும் பிரச்னைகளுக்கான தீர்வை வழங்கும் இணையதளங்களையும் காட்டுகிறது.. இதற்கு முன்பு பயனாளர்கள் இத்தளத்தில் உள்ளிட்ட கணினி குறித்த  பிழைச் செய்திகளையும், அதற்கான தீர்வை வழங்கிய விபரங்களையும் வரிசைப்படுத்திக் காட்டுகிறது.
    ஏற்கனவே அங்குள்ள இத்தகைய தொகுப்பில் உங்களுடைய பிரச்னை ஒன்றாக இருந்தால் நீங்கள் அதையே தீர்வாக பயன்படுத்திக்கொள்ள முடியும். பெரும்பாலான பிரச்னைகள் அனைத்தையும் ஏற்கனவே இதில் உள்ளடக்கி உள்ளதால் இந்த பகுதியும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 
    நீங்கள் தேடும் கணினி பிரச்னைக்கான தீர்வு இத்தளத்தில் இல்லையெனில் விரைந்து அதுகுறித்த தகவல்களை நாற்பத்தெட்டு மணி நேரத்தில் தேடித் தருவதாக உறுதியளிக்கின்றனர்.. 99.9 சதவிகித கணினி பிழைகளை இத்தளத்தின் மூலமாகவே கண்டறிந்து, அதற்கான தீர்வையும் பெற்றுவிடலாம்.. 
    இந்த தகவல்கள்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்..

    லேப்டாப்பை பராமரிக்க சிறந்த வழிமுறைகள்..!

    By: ram On: 07:35
  • Share The Gag

  • கணினி யுகத்தில் நாம் வாழ்கிறோம்.. ஒவ்வொருவரிடத்திலும் மொபைல், கணினி போன்றவைகள் அத்தியாவசியமான பொருட்களாக மாறிவிட்டது. ஒவ்வொரு நிமிடமும் கணினியைப் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் லேப்டாப்..
    Important tips to maintain laptop
     
    லேப்டாப் தனிப்பட்ட முறையில் வாங்கிப் பயன்படுத்தி வரும் அதே வேளையில் படிக்கும் மாணவர்களுக்காக அரசும் இலவசமாக லேப்டாப்களை வழங்கி வருகிறது. ஆக, லேப்டாப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே உள்ளது என்பதில் சந்தேகமில்லை.. 

    ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தில் மிக எளிதாக எடுத்துச் சென்று பயன்படுத்த முடிவதால் மேசைக் கணினிகளில் பயன்பாடு வெகுவாக குறைந்துவருகிறது.. லேப்டாப் பயன்பாடு அதிகரிக்கும் அளவிற்கு அதை பராமரிப்பில் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவதில்லை.. 
    நன்கு பராமரிக்கப்படும் லேப்டாப் விரைவில் பழுதடைவதில்லை.. பராமரிப்பில்லாமல் பயன்படுத்தும் லேப்டாப் விரைவில் பழுதடைந்துவிடும். அவ்வாறு விரைவாக லேப்டாப் பழுதடையாமல் இருக்கச் செய்வதற்கான பயனுள்ள வழிமுறைகளை தெரிந்துகொள்வோம். 

    மடிக்கணினி திரைப் பாதுகாப்பு:

    கணினியில் மிக முக்கியமானதொரு பாகம் கணினித் திரைதான்.. அதில் பார்த்துதான் அனைத்தை வேலைகளையும் மேற்கொள்கிறோம். கணினித் திரையை சுத்தமாக வைத்திருக்க மெல்லிய 'சில்க்' துணிகளைப் பயன்படுத்தலாம்.. அல்லது அதற்கென இருக்கும் Screen Cleaning Liqued பயன்படுத்தி காட்டனால் துடைத்தெடுக்கலாம். 

    தவிர்க்க வேண்டியவை:

    கரடு முரடான துணிகளையோ, அல்லது வெறும் கைகளையோ பயனபடுத்தி துடைக்க கூடாது. இதனால் கணினித் திரையில் கீரல் விழும், கைத்தடங்கள் அதில் பதிந்துபோகும். மேலும் அழுத்தமாக துடைப்பதால் கணினித் திரைக்கு சேதம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. 

    தூசி மற்றும் ஈரப்பதம்: 

    பொதுவாகவே அனைத்து கணினிகளும் தூசி மற்றும் ஈரப்பதத்தால் பாதிக்கபடுகின்றன. குறிப்பாக பயணங்களின்போது லேப்டாப்பை பயன்படுத்தக்கூடிய இடம் நல்ல காற்றோட்டமான சூழ்நிலையாக இருக்க வேண்டும்.. அதோடு அங்கு ஈரப்பதம் இல்லாம் சாதாரண சூழ்நிலையாக இருக்க வேண்டும்.. தொடர்ந்து ஈரப்பதம் மற்றும் காற்றோட்டமில்லாத இடங்களில் லேப்டாப் கணினியை பயன்படுத்தும்போது அதனால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 

    ஆண்டி வைரஸ் ரொம்ப முக்கியம்: 

    வைரஸ் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதும் நம் கடமை. பல ஆயிரம் மதிப்பு வாய்ந்த மடிக் கணினியை பாதுகாக்க ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்து நல்லதொரு ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் வாங்குவது தவறில்லை. அதனால் நல்லதொரு ஆன்டி வைரஸ் சாப்வேர் ஒன்றை வாங்கி இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். அவ்வாறு கட்டண வைரஸ் தடுப்பு மென்பொருளை பயன்படுத்தும்பொழுது வைரஸ் தாக்குதல்களிலிருந்து உங்களுடைய  லேப்டாப்பிற்கு  முழுமையான  பாதுகாப்பு கிடைக்கிறது. 

    உணவுப் பொருட்களை தவிருங்கள்: 

    மடிக் கணினியைப் பயன்படுத்திக்கொண்டே சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதோ, டீ, கூல்டிரிங்ப் போன்ற பான வகைகளை அருந்துவதோ கூடாது.. அவ்வாறு செய்வது உங்கள் லேப்டாப்பிற்கு நீங்களே உருவாக்கும் ஆபத்து..    

    லேப்டாப் பேக்: 

    வெளியில் பாதுகாப்பாக லேப்டாப்பை எடுத்து   வைக்க தகுந்த லேப்டாப் பேக்கைப் பயன்படுத்துங்கள். லேப்டாப்பின் அளவிற்கு தகுந்த மாதிரியான போதுமான அளவில் லேப்டாப் பேக் இருக்க வேண்டும். முதுகில் மாட்டிச் செல்ல ஏதுவான லேப்டாப் பேக் லேப்டாப்பை பாதுகாப்பாக கொண்டு செல்ல உதவும். 

    ஹபர்னேட் நிலை:

    பணிக்கு இடையே சிறுது நேரம் அவசகாசம் எடுத்துக்கொள்ளும் நிலையில், (உதாரணமாக உணவு எடுத்துக்கொள்ள செல்வதற்கு முன்பு, தொலைபேசியில் அதிக நேரம் பேசும் சூழல்) உங்கள் லேப்டாப்பை ஹைபர்னேட் நிலையில் வைப்பது சிறந்தது.. இதனால் அதிக மின்சாரம் சேமிக்கப்படுவதுடன் லேப்டாப்பும் பாதுகாக்கப்படும். 

    தொடர்ச்சியான பயன்பாட்டை தவிருங்கள்: 

    தொடர்ச்சியாக மடிக்கணினியை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதிகபட்சமாக 8 மணி நேரம் வரைக்கும் தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்.. எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக இடைவிடாமல் கணினியை பயன்படுத்திக்கொண்டே இருந்தால் விரைவில் மடிக் கணினி வெப்பமடைந்துவிடும். இதனால் விரைவிலேயே கணினியின் ஆயுட்காலம் குறைய வாய்ப்புள்ளது. 

    ஃபையர் வால் பாதுகாப்பு: 

    பொதுவாக எல்லா மடிக்கணினிகளிலும் ஃபையர்வால் நிறுவப்பட்டே விற்பனைக்கு வருகிறது. ஃபையர்வால் பாதுகாப்பு மிக முக்கியம். கணினியின் தலைமைக் காவலனாக இது செயல்படுகிறது.. எந்த வகையிலும் உங்கள் கணனி சேதாரமாகாமல் இருக்க இது பயன்படுகிறது. உங்கள் கணினியில் பையர்வால் இல்லையெனில் தனியாக வாங்கியோ அல்லது இணையத்தில் தரவிறக்கம் செய்தோ உங்கள் கணினியல் நிறுவிக்கொள்ளுங்கள். 

    பரிசோதனை: 

    வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களுடைய லேப்டாப்பை சர்வீஸ் செய்வது நல்லது.. அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டரில் லேப்டாப்பை கொடுப்பது புத்திசாலித்தனம். 

    லேப்டாப் மேடை: 

    வீடுகள்,  மற்றும் அலுவலகங்களில் லேப்டாப்பை பயன்படுத்தும்பொழுது, அதற்கென தயாரிப்பட்ட மேடைகளைப் பயன்படுத்துங்கள். தற்பொழுது லேப்டாப் ஸ்டேன்டுகள் பலவிதங்களில் கிடைக்கிறது. அதனால் லேப்டாப் சூடேறுவதை குறைப்பதோடு, பயன்படுத்தவும் எளிதாக இருக்கும். 
     

    மடிக் கணினியை பாதுகாக்கும் வழிமுறைகள்..!

    By: ram On: 07:32
  • Share The Gag
  •  Methods of Laptop Maintenance.!

     
    மடிக்கணினி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. பள்ளி மாணவர்கள், வியாபாரம் தொடர்பாக வெளிநாடு செல்பவர்கள் (Business mans), சாப்ட்வேர் இன்ஜினியர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், பாமர மக்கள் என அனைத்து தரப்பினருமே லேப்டாப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். லேப்டாப்பின் வளர்ச்சி அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளது.   லேப்டாப்பானது பல்வேறு அளவுகளில், சிறிதும் பெரிதுமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு கொண்டுள்ளன. பொதுவாக லேப்டாப்பை அனைவருமே விரும்பக் காரணம் எடை குறைவு, எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்ல முடிவது என காரணங்களை வரிசையாக அடுக்கலாம். இதனால்தான் மடிக்கணினியின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது.

    இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம், அவ்வாறு பயன்படுத்துபவர்கள் எத்தனைப் பேர் முறையாக மடிக்கணினியைப் பராமரிக்கின்றனர் என்பதுதான். 
    மடிக்கணினியை முறையாக பராமரித்தால் நீண்ட நாட்களுக்கு எந்த ஒரு செலவும் செய்யாமல், எந்த பிரச்னையும் வராமல் வருடக்கணக்கில் புதிய மடிக்கணியின் (new laptop computer ) செயல்பாட்டை வேகத்தை உங்களால் பெற முடியும். இதற்கு குறிப்பிட்ட பராமரிப்பு வேலைகளை (Maintenance) தொடர்ந்து செய்ய வேண்டும். அவ்வாறு முறையாக பரிமரித்தால் நிச்சயம் உங்களுடைய மடிக்கணினிக்கு ஆயுள் கூடும். 

    மடிக்கணினியை பராமரிக்க என்னென்ன செய்ய வேண்டும்? 

    Methods of Laptop Maintenance

    • குறைந்தது ஆறுமாதங்களுக்கு ஒரு முறையாவது உங்களுடைய மடிக்கணினியில் Operating System த்தை புதுபிக்கவும்.  
    • மடிக் கணினிக்கு -ற்கு Battery மிக முக்கியம். பேட்டரியை நன்கு பராமரிக்க வேண்டும். 
    • குறிப்பாக சொல்லவேண்டுமெனில், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு உங்களுடைய மடிக்கணினியை பயன்படுத்தமாட்டீர்கள் என்ற நிலையில், லேப்டாப்பில் உள்ள பேட்டரியை கழற்றி தனியே வைத்துவிடுங்கள். (உ.ம் - வெளியூர் செல்லும் நாட்கள்) remove battery in the laptop if you have not work on laptop two or three days
    • மடிக்கணினிக்கான உறை பையை (Use Laptop Bag) பயன்படுத்துவது உங்கள் மடிக்கணினிக்கு பாதுகாப்பைக் கொடுக்கும். 
    • மடிக் கணினியில் ஏற்படும் வெப்பத்தை வெளியேற்ற, அதற்கு தகுந்தாற் போல் உள்ள சமமான இடத்தில் வைத்து பணியாற்ற வேண்டும். 
    • மடிக்கணினிக்கு என தயார் செய்து விற்கப்படும் Laptop Stand மீது வைத்துப் பயன்படுத்துங்கள். (Use Laptop Stand)
    • அதிக தூரப் பயணங்களின் போது பயணித்தவாறே லேப்டாப் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும். 
    • லேப்டாப்பிற்கு என கொடுத்த சார்ஜரையே (Original Laptop Charger)பயன்படுத்த வேண்டும். வேறு தரமில்லாத சார்ஜரைப் பயன்படுத்தினால் வெப்ப மாறுதல், அதிக மின்னோட்டம் (High power flow) காரணமாக உங்களுடைய லேப்டாப் செயலிழந்து போகலாம். 
    • மடிக்கணினி பேட்டரியில் உள்ள மின்சாரம் குறைந்து, அதில் Low battery warning செய்தி தோன்றிய பிறகே மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். அல்லது லேபேட்டரி சிக்னல் கிடைத்தப் பிறகே புதியதாக சார்ஜ் செய்ய வேண்டும். 
    • முடிந்தளவு மடிக்கணினி இயக்கவிட்டு, அதில் வேலை செய்துகொண்டிருக்கும்பொழுதே சார்ஜ் செய்வதை தவிர்க்கவும். (do not charge laptop battery while working on laptop.)
    • மடிக்கணினியைப் பொறுத்தவரை, ஒரு சிறிய பிரச்னை என்றாலும் கூட, அதை நாமாவே சரி செய்ய முயற்சிப்பது தவறு. அதுவே பெரிய பிரச்னையாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே தெரியாத ஒன்றை செய்ய லேப்டாப் பொறுத்தவரை முயற்சிக்க கூடாது. 
    • மடிக்கணினியின் உள்ள பேட்டரியை வேறொரு மடிக்கணினிக்கு மாற்றி பொருத்தி செயல்படுத்த கூடாது.(Do not change the battery from a laptop to another laptop) ஒரு லேப்டாப்பிற்கான பேட்டரியை அதே லேப்டாப்பில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    இணையத்தை எளிதாக கையாள பயன்மிக்க குறிப்புகள்..!

    By: ram On: 07:28
  • Share The Gag
  • Internet tips and Tricks

    மிகச்சிறந்த Internet tips and Tricks (கணினிக் குறிப்புகள்) என்ற இப்பதிவில் உண்மையிலேயே சிறந்த Internet tips and Tricksகளைப் பார்க்க இருக்கிறோம்.

    internet tips and tricks
     
    இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் இன்று ஏராளம். கணினியில் மூலம் அதிகம் இணையத்தைப் பாவிக்கிறோம். வலைத்தளங்கள் அல்லது இணையப் பக்கத்தை எளிதாக கையாள குறுக்கு விசைகளைக் (Shortcuts of internet)கற்றுக்கொண்டோமானால் எளிதாக நாம் பிரௌசிங் செய்யலாம்.

    இதனால் நேரம் மீதியாகும். குறிப்பாக Internet சென்டர் அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த குறுக்குவிசைகள் பயன்படுத்துவதன் மூலம் குறைந்த நேரத்தில் இணையத்தில் உங்கள் பணிகளை மேற்கொள்ள முடியும்.

    மேலும் இணையத்தில் உலவப் பயன்படும் உலவிகளைப் பற்றிய தகவல்களையும் (About Browsers)அறிந்துவைத்திருப்பது மேலும் இணையத்தில் சிறப்பாக உலவ பயன்படும்.

    விரைவாக இணையத்தைப் பயன்படுத்த உதவும் Internet tips and Tricks களைப் பார்ப்போம்.

    முதலில் உங்கள் பிரௌசரைத் திறந்தவுடன் என்ன செய்வீர்கள்? அட்ரஸ் பாரில் நீங்கள் விரும்பும் வலைத்தளத்தின் பெயரை உள்ளிட்டு Go அல்லது Enter அழுத்துவீர்கள் அல்லவா?

    இதில் உள்ளப்படும் URL -ஐ முழுவதுமாக தட்டச்சிட்டு, உதாரணமாக http://goodluckanjana.blogspot.com/ என தட்டச்சிட்டு enter கொடுப்பீர்கள்.

    இனி அவ்வாறு செய்ய வேண்டாம். goodluckanjana என அட்ரஸ் பாரில் தட்டச்சிட்டு Ctrl+Enter தட்டிப்பாருங்கள்.

    வலைத்தளம் திறக்கிறதா? கண்டிப்பாக திறக்கும். Ctrl+Enter கொடுக்கும்போது தானாவே அட்ரஸ்பாரில் நாம் உள்ளிடும் பெயருக்கு முன்பாக htttp:// என்ற ஆரம்பமும், .com என்ற முடிவும் தானாகவே சேர்ந்துகொள்ளும்.

    ஒவ்வொரு வலைத்தள முகவரியையும் இப்படி வலைத்தளத்தின் பெயரை மட்டும் உள்ளிட்டு கண்ட்ரோல்+என்டர் மட்டும் தட்டுவதால் எளிதாக வலைத்தளத்தைத் திறக்க முடியும்.

    இணையப்பக்கங்களில் ஒரு தொடுப்பிலிருந்து மற்றொரு தொடுப்புக்கு எளிதாக மாற Tab அழுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.

    Tab பட்டனை அழுத்துவதன் மூலம் ஒரு இணைப்பிலிருந்து அடுத்த இணைப்பிற்கு தானாகவே செல்ல முடியும்.

    மீண்டும் முந்தைய இணைப்பிற்கு செல்ல Shift+Tab அழுத்துங்கள்.

    ஒரு வலைத்தளத்தில் உள்ள படிவத்தை (Form) நிரப்ப அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல இந்த Tab key உங்களுக்கு உதவும். Email Form, வலைத்தளங்களின் கணக்குகளை உருவாக்க(Website account creation form) போன்ற விண்ணப்ப நிரப்புக் கட்டங்களை நிரப்பும்போது ஒவ்வொரு கட்டமாக கர்சரை வைத்துக் கிளிக் செய்யாமல் Tab விசையை அழுத்துவதன் மூலம் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்லலாம். முந்தை கட்டங்களுக்குச் செல்ல வேண்டுமெனில் Shift+Tab அழுத்துங்கள்.

    ஒரு வலைத்தளத்தை, வலைப்பக்கத்தை மறுபடியும் தொடக்கம்(Refresh) செய்ய F5 விசையை அழுத்துங்கள்.

    வலைத்தளம் அல்லது வலைப்பக்கத்திலுள்ள URL செலக்ட் செய்ய F6 விசையை அழுத்துங்கள்.
    அல்லது Alt+D கொடுக்கலாம்.

    வலைபக்கத்தை முழுவதுமாக Screen க்கு கொண்டுவர F11 விசையை அழுத்துங்கள்...

    கூகிள் சர்ச் போன்ற சர்ச் பாக்சில் நீங்கள் வேண்டியதை எளிதாக தேடிப்பெற தேட வேண்டிய சொற்களுடன் "" குறிகளை இட்டு Search கிளிக் செய்யுங்கள். உதாரணமாக "goodluckanjana" என Google Search-ல் தேடினால் நீங்கள் தேடிய சொற்களுக்கான "goodluckanjana" -க்கான சரியான முடிவுகள் மட்டும் உங்களுக்கு காட்டும். இவ்வாறு நீங்கள் உங்களுக்கு வேண்டிய சொற்களை "" குறிகளுக்குள் இட்டுத் தேடுவது உங்கள் தேடுதலை எளிதாக்கும். நீங்கள் வேண்டிய செய்திகளடங்கிய வலைத்தளங்கள் முதன்மைப்படுத்தி காட்டும்.

    தேடுபெட்டியில் தேடியதை தட்டச்சிட்டுவிட்டு அருகிலுள்ள Search பட்டனை கிளிக்செய்வதைக் காட்டிலும் Enter அழுத்திப் பாருங்கள். ஒவ்வொரு முறையும் தேடுபெட்டியில் தேடும்போது வேண்டியதை தட்டச்சிட்டு என்டர் கொடுத்தாலே போதும். உடனே தேடல் தொடங்கிவிடும். மௌஸ் கர்சரைக் கொண்டுபோய் சர்ச் பட்டனில் கிளிக் செய்துதான் சர்ச் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. (புதியவர்கள் இந்த Internet tips and Tricks ஐ கவனிக்கவும்.)

    Tabbed Browsing

    தற்காலத்தில் உள்ள அனைத்து பிரௌசர்களுமே Tabbed browsing அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. முக்கிய பிரௌசர்களான IE, Firefox, Google Chrome ஆகிய உலவிகளில் இப்போது Tabbed Browsing வசதி தரப்பட்டுள்ளது.

    அதாவது வலைப்பக்கத்தில் உள்ள இணைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதிய விண்டோவில் திறக்கும் முறை மாறிவிட்டது.

    ஒரே விண்டோவில் Tabbed முறையில் அடுத்து அடுத்து திறக்கும் செயல்பாட்டைக் கொண்ட புதிய வலைஉலவிகளே(Tabbed Browsing) இப்போது பெரிதும் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதையும் நவீன தொழில்நுட்ப்பதிற்கு(New Technology) ஒரு உதாரணமாக சொல்லலாம்.

    இவ்வாறு டேப்(Tab) பயன்படுத்தி ஒவ்வொரு வலைப்பக்கத்தையும் ஒரே விண்டோவில் திறப்பதற்கு குறுக்கு விசைகள் உள்ளன. பொதுவாக எல்லா உலவிகளுக்கும் இது பொருந்தும்.

    ஒரு வலைப்பக்கத்தை அல்லது ஒரு இணைப்பை புதிய டேபில் திறக்க இந்த இணைப்பில் கண்ட்ரோல் கிளிக் செய்தால் புதிய டேபிள் அந்த இணைப்பு திறக்கும். இதற்கு மற்றொரு வழியும் உள்ளது. உங்கள் Mouse-ல் Scroll Wheel இணைப்பின் மீது ஒரு சொடுக்கு சொடுக்குவதன் மூலமும் வலைப்பக்கத்திலுள்ள ஒரு இணைப்பை புதிய டேபில் திறக்கச் செய்யலாம். இவ்வாறான Internet tips and Tricks களை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வர Internet Browsing உங்களுக்கு எளிதாகிவிடும்.

    Browserகள் பலவகை:

    நம் கணினியிலேயே அமைந்திருக்கும் Browser ஒன்று உண்டு. அதுதான் Internet Explorer என்ற வலைஉலவி. பெரும்பாலானவர்கள் இதையே தங்கள் உலவியாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளனர். இணையத்தில் பல்வேறு வலைஉலவிகள் இலவசமாக கிடைக்கின்றன. அவைகள் கணினிலேயே இணைந்து இருக்கும் இன்டர்நெட் பிரௌசரைவிட மிகச் சிறந்த முறையில் செயல்படுகிறது.

    அவற்றில் முதன்மையான மூன்று browserகள்.. (Top Three Browsers)

    1. Google Chrome
    2. Firefox Browser
    3. Opera Browser

    இவற்றை இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உட்பட அனைத்து உலவியிலும் தற்போது நான் முன்னரே குறிப்பிட்டபடி Tabbed Browsing முறையில் இயங்குகிறது.

    Add-Ons and Plugins:

    இத்தகைய புதிய பிரௌசர்களுக்கு ஆயிரக்கணக்கில் பிளகின்களும், ஆட்ஆன் புரோகிராம்களும் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன. வேண்டிய வசதிகளை இந்த வலைஉலவிகளில் இணைப்பதன் மூலம் கூடுதல் வசதிகளைப் பெற முடியும்.

    உங்கள் பிரௌசர் அப்டேட்களை தவறாமல் செய்யுங்கள். இதனால் புதிய வசதிகளைப் பெற முடியும். உதாரணமாக Adobe Flash Player Update-ஐ கூறலாம். இந்த Adobe Flash Player ஆனது இணையத்தில் இருக்கும் வீடியோக்கள், படங்களை காண்பதற்கு பயன்படுகிறது.

    இவ்வாறான update களைச் செய்யும்போது கணினியின் நிலைத்தன்மையும், பாதுகாப்பும் மேம்படுத்தப்படுகிறது. எனவே உங்கள் பிரௌசர் பிளகின்கள்(Browser Plugins), ஆட்ஆன் புரோகிராம்களை (Odd-On Programe)தவறாமல் அப்டேட் செய்வது முக்கியம்.

    மேற்கண்ட Internet tips and Tricks  அனைத்தையும் நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செய்ய பழகிக்கொண்டாலே இணையம் உங்கள் வசமாகும்.  உங்களாலும் மிகச் சிறந்த, வேகமான,பாதுகாப்பான உலவுதலை(Browsing) செய்ய முடியும்.