Saturday, 2 August 2014

கை குலுக்கும் பழக்கம் யாரிடமிருந்து வந்தது...?

By: ram On: 22:04
  • Share The Gag

  • கை குலுக்கும்  பழக்கம் மேல் நாட்டுக்காரர்களிடம் இருந்து, உலகிலுள்ள எல்லாரையும் தொற்றியுள்ளது. வெளிநாட்டு பிரமுகர்கள் நம்மூர் பிரமுகர்களை சந்திக்க வந்தால் நீண்ட நேரமாக கை குலுக்குவதை "டிவி'களில் காட்டுகிறார்கள்.

     இந்தப் பழக்கம் குரங்குகளிடம் இருந்து மனித இனத்தைத் தொற்றியது என்ற சுவாரஸ்யமான தகவல் உங்களுக்கு தெரியுமா?

    ஒரு பெண்ணை ஆணுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதை "பாணிக்ரஹணம்' என்பர். அதுபோல, ராமபிரானை சுக்ரீவன் சந்தித்து அவருடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ள விரும்பினான்.அதற்கு அடையாளமாக தனது கையை அவர் பிடித்தால் போதும் எனக்கருதி "க்ருஹயதாம் பாணினா பாணிம்' என்றான். "கையைப் பிடித்தாலே நம் நட்பு உறுதியாகி விட்டது' என்று பொருள்.

    ராமன் மனிதனாக வந்திருந்தார் என்றாலும் அவர் கருணாமூர்த்தி. அவரவர் தரத்தைப் புரிந்து கொண்டு, அதே தரத்திற்கு தானும் இறங்கி வந்து அனுக்கிரஹம் செய்பவர். எனவே, குரங்கு என்றும் பாராமல் சுக்ரீவனின் கையைப் பிடித்து நட்பை உருவாக்கிக் கொண்டார்.

    இவ்வாறு முதன்முதலில் கைபிடித்து உருவாகிய நட்பு, இன்று பரிணாம வளர்ச்சி பெற்று கை குலுக்கும் அளவுக்கு போயிருக்கிறது. வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆண்ட போது, அவர்களை குரங்குகளுக்கு ஒப்பிட்டு பரிகாசம் செய்ய, ஆன்மிக உபன்யாசகர்கள் இந்த மேற்கோளை காட்டுவார்கள்

    நகைகள் அணியும் போது பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை..? பெண்கள் அவசியம் படிக்கவும்..!

    By: ram On: 17:34
  • Share The Gag

  • நகைகள் அணிய ஆசைப்படாத பெண்களே இல்லை. நகைகளை அணியும் பொழுதும், தேர்ந்தெடுக்கும் பொழுதும் கீழ்க்கண்ட விவரங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

    • எப்பொழுதும் அதிகமாக நகைகளை அணிய வேண்டாம். திருமணம் அல்லது நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகளின் போது மட்டும் நகைகளை அதிகமாக அணிலாம்.

    • முத்தினால் ஆன ஆபரணங்கள் பார்ப்பதற்கு அழகாகக் காட்சியளிப்பதுடன் அணிபவரை எடுப்பாகக் காண்பிக்கும். இதனால், அலுவலகத்திற்குச் செல்லும் போதோ, சின்ன சின்ன விருந்துகளில் கலந்து கொள்ளும் பொழுதோ முத்து பதித்த நகைகளை அணியவும்.

    • உயரமான பெண்கள் சின்னச் சின்ன நகைகளை அணிந்தால் எடுப்பாக தெரியாது.

    • இரு வேறு விதமான நகைகளை ( வெள்ளி மற்றும் தங்க நகைகளை ஒன்றாக அணிவது) ஒன்றாய்ச் சேர்த்து எப்பொழுதும் அணிவதைத் தவிர்க்கவும்).

    • காலை நேரங்களில் நகைகளைக் குறைவாக அணிய வேண்டும். இரவில் அதிகமான நகைகளை அணியலாம்.

    • வெளிர் சிவப்பு மற்றும் நீல நிற ஆடைகளுக்கு வெள்ளி நகைகளும், சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகளுக்கு தங்க நகைகளும் கச்சிதமாகப் பொருந்தும.

    • தற்பொழுது எங்கு பார்த்தாலும், கவரிங் நகை அதிகரித்து விட்டது. இவை மலிவாகக் கிடைப்பதோடு, ஈர்க்கக் கூடியவையாகவும், தொலைந்து போனால் பெரிதாக எதையும் இழந்து விடவில்லை என்று மனதை தேற்றிக் கொள்ளும் படியாகவும் உள்ளன.

    • நகைகளைத் தேர்வு செய்யும் பொழுது உங்கள் வயதைக் கவனத்தில் கொள்வது அவசியம். வயதானவர்கள் அளவில் பெரிய நகைகளை அணிவதை தவிர்ப்பது நல்லது. வயதில் சிறியவர்கள் சின்ன நகைகளை அணிவதைக் காட்டிலும், நடுத்தர அளவு நகைகளை அணியலாம்.

    இந்தியில் ரீமேக் ஆகும் 'வேலையில்லா பட்டதாரி?

    By: ram On: 16:52
  • Share The Gag

  • தனுஷ், அமலாபால், சரண்யா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்த படம் 'வேலையில்லா பட்டதாரி'. சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வணிக ரீதியிலும் வெற்றியடைந்தது.

    இப்படத்தை  இந்தியில் டப்பிங் செய்து வெளியிட பலர் தனுஷை அணுகியும் தனுஷ் மறுத்துவிட்டாராம். படத்தை இந்தியில் டப்பிங் செய்ய விரும்பாத தனுஷ் 'வேலையில்லா பட்டதாரி' படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் திட்டத்தில் இருக்கிறாராம்.

     'ராஞ்சனா' படத்தை இயக்கிய ஆனந்த்.எல்.ராய் விஐபி படத்தை சில மாற்றங்களுடன் இந்தியில் ரீமேக் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிப்பார் எனக் கூறப்படுகிறது.

    தற்போது பால்கி இயக்கத்தில் 'ஷமிதாப்' படத்தில் நடித்துவரும் தனுஷ், அதை முடித்துவிட்டு இந்தி 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் நடிப்பாராம்.

    இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தல யங் லுக்கில் புது கெட்டப் இதோ உங்களுக்காக!

    By: ram On: 11:43
  • Share The Gag

  • தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் அஜித். இவர் படம் திரைக்கு வருகிறது என்றால் ரசிகர்களுக்கு திருவிழா தான்.

    சில நாட்களாகவே இவர் தன் சால்ட்&பெப்பர் லுக்கில் தான் நடித்து வருகிறார், அஜித்தை பழைய யங் லுக்கில் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    தற்போது அதற்கு நேரம் வந்துவிட்டது, கௌதம் இயக்கும் படத்தில் அஜித்தின் நியு லுக் வெளிவந்துள்ளது, இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது

    கிரெடிட் கார்டு கழுத்தை இறுக்காமல் தப்பிக்க சிறந்த வழிகள்...!

    By: ram On: 10:07
  • Share The Gag

  •  கிரெடிட் கார்டு மூலம் செய்யும் செல்வினை 45 -- 50 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்திவிட்டால், வட்டி எதுவும் இல்லை . அந்தக் காலத்தைத் தாண்டிவிட்டால், மாதம் 2 - 3 சதவீதம் வட்டி . அதாவது, ஆண்டுக்கு 24 -36 சதவிகிதம் !

    * குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணத்தைக் கட்டாவிட்டால், வட்டிக்கு வட்டி கட்டுவதோடு, அபராதக் கட்டணமாக ரூ 600 - 700 செலுத்த வேண்டி இருக்கும் . நீங்கள் ரூ.500 -க்குப் பொருள் வாங்கிக் காலம் கடத்தினால்கூட , ரூ. 600 அபராதம் உஷார் !

    * வெட்டி பந்தாவுக்காக கிரெடிட் கார்டு வாங்கவே வாங்காதீர்கள் . ஆண்டு முழுக்கச் சும்மா வைத்து இருந்தாலும் ஆண்டு பராமரிப்புக் கட்டணம் என்று ரூ. 700 - 1,000 விதிப்பார்கள் !

    * ஆடைகள் அல்லது வீட்டு உபயோகப் பொருட்களுக்கு .ஒரு வாரம் வரை 20 - 25 சதவிகிதம் தள்ளுபடி என அறிவித்து இருக்கிறார்கள் . அடுத்த 15 -20 நாட்களுக்குள் உங்களுக்கு போனஸ் வந்துவிடும் என்றால், தள்ளுபடி சலுகையை அனுபவிக்க கிரெடிட் கார்டு பயன்படுத்தலாம் !

    * இரு சக்கர, நான்கு சக்கர வாகனக் கடன், வீடுக் கடன் வாங்க மார்ஜின் பணத்துக்கு கிரெடிட் கார்டு கடனைப் பயன்படுத்தாதீர்கள் !

    * பொருட்கள் வாங்கும்போது ' ஸ்டேட்மென்ட் பில் ' போடப்படும் சுழற்சியைக் கவனிப்பது அவசியம் . பில்லில் தேதி 25 என்றால், நீங்கள் 23 -ம் தேதி பொருள் வாங்கினால், இரண்டு
    நாட்கள்தான் வட்டி இல்லாக் காலம் கிடைக்கும் . 26 -ம் தேதி வாங்கினால் வட்டி இல்லா சலுகையை அதிக நாட்கள் அனுபவிக்கலாம் !

    * கிரெடிட் கார்டு பெறும் முன் சம்பந்தப்பட்ட வங்கியின் விதிமுறைகள் மற்றும் நிபர்ந்தனைகளை முழுக்கப் படித்துப் புரிந்துகொள்ளுங்கள் . புரியவில்லை என்றால், தெளிவு படுத்திக்கொண்ட பிறகே ஒப்பந்தத்தில் கையோப்பம் இடுங்கள் !

    * கார்டைக்கொண்டு பணம் எடுப்பதை 100 சதவிகிதம் தவிர்க்கவேண்டும் . பணம் எடுத்த உடனே வட்டி மீட்டர் ஓடத் தொடங்கிவிடும் . மேலும், பணம் எடுத்ததற்கான பறிமாற்றக்
    கட்டணம் சுமார் ரூ. 250 என்பதையும் மறக்காதீர்கள் !

    பிகே(PK) படத்தில் நிர்வாணமாக நடிக்கும் அமீர்கான்..1

    By: ram On: 08:37
  • Share The Gag

  • படத்திற்கு படம் ஏதாவது வித்யாசமாக செய்து பரபரப்பு கிளப்புவார் அமீர்கான். தற்போது பிகே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் ஆடைகள் எதுவும் இன்றி நிற்கும் அமீர்கான் கையில் ஒரு டேப்ரெக்கார்டரை வைத்து அந்தரங்கப் பகுதியை மறைத்துக் கொண்டிருப்பது போல போஸ்டர் வெளியாகியுள்ளது.

    3 இடியட்ஸ்’ படத்துக்குப் பிறகு ராஜ்குமார் ஹிரானி இயக்கும் படம் ‘பிகே’. இதில் அமீர்கான் ஜோடியாக அனுஷ்கா சர்மா நடிக்கிறார்.

    பிகே படத்துக்காக அமீர்கான் – அனுஷ்கா சர்மா ஜோடி லிப் டு லிப் முத்தம் கொடுக்கும் காட்சியை ராஜ்குமார் ஹிரானி படமாக்கியுள்ளார். இதுவரை இந்திய சினிமாவில் படமாக்கப்பட்ட முத்தக் காட்சியில் இதுதான் நீளமான முத்தக்காட்சியாம்.

    ஏற்கனவே ’3 இடியட்ஸ்’ படத்தில் கரீனா கபூருக்கு முத்தம் கொடுத்து அமீர்கான் நடித்திருந்தார். இதில் அனுஷ்கா சர்மாவுக்கு நீண்ட முத்தம் கொடுத்து அசத்தியுள்ளார்.
    அதைவிட முக்கிய அம்சம் அவர் கொடுத்துள்ள நிர்வாண போஸ்தான். இந்த போஸ்டர் நேற்றிரவு வெளியானது முதல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    எதையோ முறைத்து பார்ப்பது போன்ற தோற்றத்தில் காணப்படும் அமீர்கான் முகத்தோற்றமும், உடலமைப்பும் வித்தியாசமாக இருக்கிறது.

    பிகே திரைப்படம் கிருஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் பார்த்த உடனே டீசரை ஆவலோடு எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர் அமீர்கான் ரசிகர்கள்.

    திருப்தி தராத படைப்பாகவே இருக்கிறது இந்த ஜிகர்தண்டா - திரைவிமர்சனம்...!

    By: ram On: 07:51
  • Share The Gag

  • யாருமே தொடாத களத்தில் இறங்கி அடிப்பது ஒருவகை. சரியாக தொட்டாலும் இறங்கி அடிக்காமல் விட்டதை தேடிப்பிடித்து செம காட்டு காட்டுவது ஒரு வகை. அதில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இரண்டாம் ரகம். திகில் படங்களின் வருகை குறைந்த நேரத்தில் கதி கலங்க அடித்தது பீட்சா. பருத்திவீரனை தொடர்ந்து நம்மையெல்லாம் அடித்து ஓய்ந்து போன மதுரைவாழ் ரவுடி (கதை)யை தட்டி எழுப்ப வந்திருக்கிறது ஜிகர்தண்டா. தமிழ் சினிமாவிற்கு பெரிதும் பரிச்சயம் இல்லாத ‘ம்யூசிக்கல் கேங்க்ஸ்டர்’ வகை கதையுடன் பாண்டிய நாட்டில் வலம் வந்திருக்கிறார் இந்த பீட்சா பாய்.

     குறும்படம் எடுக்கும் கார்த்திக்கிற்கு சினிமா எடுக்கும் வாய்ப்பு கிட்டுகிறது. ரத்தம் தெறிக்க நாயகன், தளபதி மாதிரி ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது தயாரிப்பாளர் போடும் உத்தரவு. எனவே மதுரையில் இருக்கும் நண்பன் வீட்டில் தங்கி அங்கிருக்கும் பிரபல தாதா சேதுவின் வாழ்க்கை கதையை படமாக்க முனைகிறான் அவன். ஆனால் சேதுவை துப்பறியும் சாகசத்தில் வசமாக சிக்கிக்கொள்கிறான் கார்த்திக். சேதுவிற்கும், கார்த்திக்கிற்கும் இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் இந்த ஜிகர்தண்டா.

     சாக்லேட் பாய் இமேஜை தாண்டி சினிமாவில் தனது பெயரை நிலைநாட்ட சித்தார்த் இன்னும் முயற்சித்துக்கொண்டேதான் இருக்கிறார். இந்த படமாவது அவருக்குள் இருக்கும் சிங்கத்தை தட்டி எழுப்புமா என்று பார்த்தால் சற்றே குறுகுறுவென்று பார்த்துவிட்டு மீண்டும் சொப்பனத்தில் ஆழ்ந்துவிடுகிறது. முதல் படம் எடுக்க போராடும் இளம் இயக்குனர் கதாபாத்திரம் என்னவே இவருக்கு பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் அழுத்தமான நடிப்பு எட்டாக்கனியாகவே இருப்பது பரிதாபத்தை மட்டுமே வரவழைக்கிறது.

    பெயருக்குத்தான் சித்தார்த் ஹீரோ. மற்றபடி சிம்ஹாதான் கதையின் மையப்புள்ளி. தனது ஆத்ம நண்பனுக்கு மிகப்பெரிய வாய்ப்பை பரிசளித்து உள்ளார். இயக்குனர். ஆனால் இந்த அதிகப்படியான பளுவை தாங்க இயலாமல் ஆங்காங்கே திணறி இருக்கிறார் சிம்ஹா. என்னதான் கெத்து கெட்டப்பை வெளிப்படுத்த முயன்றாலும் அந்த பிஞ்சு முகத்தில் தென்படும் உணர்ச்சி நம்மை சில சமயம் பயமுறுத்தாமல் பின் வாங்கிவிடுகிறது. லட்சுமி மேனன் – சித்தார்த் கெமிஸ்ட்ரி….சுத்தம்.

    சித்தார்த் நண்பனாக கருணாகரன். சூது கவ்வும் அளவிற்கு ரிப்பீட் அடிக்க முடியாவிட்டாலும் பயம் கலந்த பார்வை பார்த்தே பல இடங்களில் ஒப்பேற்றி விடுகிறார். ரத்தம் தெறிக்கும் கனவில் கருணா ராக்ஸ். சிம்ஹா & கோவி நடிப்பு பயிற்சி எடுக்கும் காட்சிகள் காமடி கலாட்டா. ‘நீ என்ன விர்ஜின் ரவுடியா?’, ‘நடுவீட்ல கொலை பண்ணிட்டு சிரிப்பொலி பாக்கறீங்களா?’ போன்ற சில ஒற்றை வரி வசனங்கள் சிரிப்பு பட்டாசு.

    சங்கிலி முருகன் கொஞ்சமே வந்தாலும் நிறைவான நடிப்பு. ஆடுகளம் நரேன், டெல்லி கணேஷ், அம்பிகா என பரிச்சயமான முகங்கள் தென்பட்டாலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் தரப்படவில்லை. கௌரவ வேடத்தில் விஜய சேதுபதி. வெறும் நட்புக்காக மட்டுமே. சிலாகிக்க ஒன்றுமில்லை.

     ஆரியின் கேமரா ஜாலம் வெகு சிறப்பு. இசைப்பின்னணி அதிகம் கொண்ட படமென்பதால் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசைக்கு சவால்கள் அதிகம். அபாரம் என்று சொல்ல முடியாவிட்டாலும் திருப்தியாக இருக்கிறது. அதே சமயம் இருவரிடமும் உலக சினிமாக்களின் பாதிப்பு அநியாயத்திற்கு அதிகம்.  ‘பாண்டி நாட்டு’, ‘கண்ணம்மா’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

    துவக்கத்தில் சற்று மெதுவாக நகரும் கதை இடைவேளைக்கு முந்தைய காட்சியில் படபடப்பை கூட்டுகிறது. அதன் பிறகு காமடி, விறுவிறுப்பு என கலந்து கட்டி அடிக்கிறார் இயக்குனர். ஆனால் இப்படியே ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வைப்பதால் பக்காவாக படத்தை முடிப்பது சாத்தியமா எனும் சந்தேகம் எழும்போது ‘சத்தியமாக சாத்தியமே இல்லை’ என நிரூபிக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். இரண்டே கால் மணி நேரத்தில் நச்சென்று முடிக்காமல் மேலும் அரை மணிநேரம் இழுத்ததோடு அரை டஜன் மினி க்ளைமாக்ஸ்களை வைத்து சொதப்பி இருப்பது பெரிய மைனஸ்.

    முன்பு சொன்னது போல காமடி கலந்த கேங்க்ஸ்டர் கதையை இசைப்பின்னணியுடன் தமிழக ரசிகர்களுக்கு சொல்ல அசாத்திய தைரியம் வேண்டும். அந்த முயற்சிக்காக இயக்குனரை பாராட்டலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் திருப்தி தராத படைப்பாகவே இருக்கிறது இந்த ஜிகர்தண்டா.

    தினமும் தலைக்கு குளிப்பது கூந்தலுக்கு நல்லதா?

    By: ram On: 06:58
  • Share The Gag

  • குளிக்கிற நோக்கில் தினமும் தலைமுடியைக் நீரில் அலசுவது நல்லதா, எப்படியெல்லாம் தலைமுடியைப் பராமரிக்கலாம் என்பதை பார்க்கலாம்…

    ஷாம்புக்களில் ரசாயனங்கள் அதிகம் இருப்பதால் அவை தலைமுடிகளிலும் மயிர்க் கால்களிலும் உள்ள தேவையான எண்ணெய்களை நீக்குவதோடு, தலைமுடியை அளவுக்கு அதிகமாக உலர வைத்துவிடும். இது கூந்தலுக்கு நல்லதல்ல. எனவே வாரத்திற்கு 3 முறை தலைமுடியைக் கழுவினால் போதும். அதிலும் சாதாரண நீரில் கழுவுதல் போதுமானது.

    • எண்ணெய்த் தன்மையுள்ள பொடுகுகளை நீக்க, ஆலிவ் எண்ணெயில் தலைமுடியை 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து, அதற்குப் பின் சூடான டவல் கொண்டு சுற்றிக் கொண்டு, பின்னர் முடியைக் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், இஞ்சிச் சாற்றை உச்சந்தலையில் தேய்த்து, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் முடியைக் அலசுவதும் நல்லது. மேலும் பொடுகு எதிர்ப்பு ஷாம்பு தேய்த்து 2 நாட்களுக்கு ஒருமுறை தலைமுடியைக் கழுவுதல் நலம்.

    • தலைமுடிக்கு ஹென்னாவை உபயோகிப்பதால், அது வறண்டு தான் அதற்குப் பதில் தரமான கண்டிஷனர்களைப் பயன்படுத்துவது சிறந்தது.

    • தலைமுடிகளை மிருதுவாக்க ஹேர் சீரம்களைப் பயன்படுத்துவது நல்லது. ஆனால் இதை அளவுக்கு அதிகமாக உபயோகிக்கக் கூடாது. ஓரிரண்டு துளிகளை மட்டுமே எடுத்து முடிகளில் சீராகத் தடவினாலே போதும்.

    • ஹேர் ஸ்பா செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டால், இயற்கை வழிகளையே நாடுங்கள். செம்பருத்திப் பூவை நன்றாக அரைத்து முடிகளில் தடவுவது நல்லது. அது முடியை நன்கு கருமையாகவும், வலுவாகவும் வளரச் செய்யும்.

    மேலும் இரும்புச்சத்து அதிகமுள்ள மருதாணி மற்றும் நோயெதிர்ப்பு சக்தி நிறைந்த வேம்பு ஆகியவையும் முடியின் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதே போல் முடி அலர்ஜிக்கு கற்றாழை மிகவும் நல்லது. முடிகளில் கலர் செய்திருப்பவர்கள், வெண்ணெயை உபயோகிக்கலாம்.