Sunday, 7 September 2014

அகத்திக்கீரையும் ஆரோக்கியமும்!...

By: ram On: 22:59
  • Share The Gag
  • இயற்கை உணவு வகைகளில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது.

    தோற்றம் :

    அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி எனவும் அழைக்கப்படும்.

    அடங்கியுள்ள பொருட்கள் :

    ஈரப்பதம் _ 73 சதம், புரதச்சத்து _ 83 சதம். தாதுஉப்புக்கள் _ 3.1 சதம், நார்ச்சத்து _ 2.2 சதம், மாவுச்சத்து _ 12 சதம், கொழுப்புச்சத்து _ 1.4 சதம் என்ற அளவில் சத்துக்கள் உள்ளன. தாதுஉப்புக்களில் சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன. வைட்டமின் _ ஏ, தயாமின், நிபோபிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின் _ சி போன்றவை அடங்கியுள்ளன.
    மேலும் மரப்பட்டையில் டானின், பிசின் உள்ளது.

    குணங்கள் :

    இதற்கு நச்சை நீக்கும் குணமுள்ளதாகையால், பொதுவாக மருந்துண்ணும் காலங்களில் இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
    எப்படிப் பயன்படுத்தலாம்?இலையை கீரையாக நறுக்கி வதக்கி உண்ணலாம், குழம்பிலிட்டு பயன்படுத்தலாம். பூக்களையும் வறுத்து உண்ணலாம், பூக்களை கஷாயமாக்கி அருந்தலாம். இலைச்சாறை தேனில் கலந்து அருந்தலாம்.

    மருத்துவப் பயன்கள்

    பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் மாறும்
    அகத்தி இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும்.
    இலைச்சாறை உறிய, தலைநீர் இறங்கும்.
    அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும்.
    இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவர புண் ஆறும்.
    அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட வயிற்றுவலி மாறும்.
    அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும்.
    இக்கீரையை உணவில் சேர்த்து வர, மலச்சிக்கல் தீரும்.
    பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி மாறும்.
    அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, இதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், சளி தீரும்.
    அகத்திக்கீரை சாறு இரு துளி மூக்கில் விட தும்மல், ஜலதோஷம் தீரும்.
    அகத்திப்பூ சாறு இரு துளி மூக்கில் விட தலைநீர், ஜலதோஷம் தீரும்.
    அகத்தி மரப்பட்டை கஷாயம், காய்ச்சலின்போது உள்ளுக்குக் கொடுக்கப்படுகிறது.
    வேர்ப்பட்டையை அரைத்து வாதவலி மேல் பூசிவர வலி மாறும்.
    அகத்திக்கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும்.
    இக்கீரை பித்த நோயை நீக்கும்.
    இக்கீரை, உடல் சூட்டைத் தணிக்கும்.

    நீரிழிவு நோய், இரத்த கோளாறு நீங்க - பாகற்காய்!

    By: ram On: 22:29
  • Share The Gag
  • காய்கறி வகைகளில் பாகற்காய் மருத்துவத்தில் சிறந்து விளங்குகின்றது..

    இரத்த கோளாறுகள்

    பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்ற வற்றிற்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும். இரண்டு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். இரத்த கொதிப்பு இரத்த கோளாறுகள், போன்றவைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

    காலரா மற்றும் வாந்தி பேதி

    ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் காலரா மற்றும் வாந்தி பேதியை போக்க இரண்டு டீஸ்பூன் பாகற்காய் இலையின் சாறு, இரண்டு டீஸ்பூன் டீத்தூள், வெங்காயச்சாறு இரண்டு டீஸ்பூன், எலுமிச்ச சாறு இரண்டு டீஸ்பூன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காலராவினால் ஏற்பட்ட வாந்தி பேதி குணமாகும். காலரா குணமாகும் வரை சாப்பிடவேண்டும்.

    நீரிழிவு நோய்

    பழத்த பாகற்காய் இரத்தம் மற்றும் சீறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது ஏனெனில் பாகற்காய் செடியில் இன்சுலின் கொண்டுள்ளது. குறிப்பிட்ட அளவு பாகற்காயை  ஜீஸ் செய்து சாப்பிட்டால் ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பது மட்டுமின்றி குளுக்கோஸ் சகிப்பு தன்மையை அதிகரிக்கிறது.

    கண் பிரச்சினைகள் நோய் எதிர்ப்பு

    தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தவும் பாகற்காய் சிறந்ததாகும். பாகற்காயில் அதிக பீட்டா கரோட்டின் மற்றும் பிற பண்புகள் அடங்கியுள்ளன. இது கண்ணில் ஏற்படும் சிக்கல்களை போக்க சிறந்த மருந்தாகும்.பாகற்காய் பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும்.

    கல்லீரல் பிரச்சினை

    பாகற்காற் பழத்தின் சாறு மது போதை மற்றும் நச்சுத் தன்மை நிறைந்த சிகிச்சைகளுக்கு சிறந்ததாகும்.. இது குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

    மூல வியாதி:

    ஒரு டம்ளர் மோரில் மூன்று டீஸ்பூன் பாகற்காய் சாறு சேர்த்து மாதத்திற்கு மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலம் நோய் குணமாகும். மேலும் பாகற்காய் செடியின் வேர்களை பேஸ்ட் போல அரைத்து மூலம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வர மூலநோய் குணமாகும்.

    சொரியாஸிஸ்

    கைகளில் ஏற்படும் அரிப்பு, கால்களில் ஏற்படும் பூஞ்சை, தோல் தடிப்பு,சொரியாஸிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிடவேண்டும்.

    சுவாச கோளாறுகள்

    பாகற்காய் நச்சுத் தன்மையை அகற்றி இரத்தத்தை சுத்திகரிப்பதில்  முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாச கோளாறு மற்றும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால் பாகற்காயை பொரியல் செய்தோ அல்லது ஜீஸ் செய்தோ சாப்பிட சுவாச கோளாறுகளில் ஏற்பட்ட பிரச்சனை தீரும்.

    சின்னத்திரை பிரபலத்தை திருமணம் செய்துக்கொள்ள போகிறார் அட்லீ!

    By: ram On: 20:37
  • Share The Gag
  • ராஜா ராணி என்ற ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் இயக்குனர் அட்லீ. இந்த சிறிய வயதிலேயே எப்படி இத்தனை அழகான காதல் படத்தை இயக்கினார் என்று அனைவரும் கேட்டனர்.

    அவர் மனதிலும் நீண்ட நாட்களாக ஒரு காதல் இருந்துள்ளது. இவர் சின்னத்திரை பிரபலமான ப்ரியாவை காதலித்து வந்துள்ளார், இவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெறும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    ப்ரியா, சிங்கம் படத்தில் அனுஷ்காவிற்கு தங்கையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    குழந்தை அழகாக பிறக்க...

    By: ram On: 20:01
  • Share The Gag
  • ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

    கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசனி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

    கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

    மிளகுபொடி, சுக்குப்பொடி, தண்ணீர் போட்டு கஷாயமாக்கி பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.

    சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் ஒரு கரண்டி இஞ்சிச் சாற்றை கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு சளித்தொல்லை இருக்காது.

    பிரபல நடிகையின் ஒரு முத்தத்திற்கு ரூ 49 லட்சம்!

    By: ram On: 18:49
  • Share The Gag
  • லண்டனை சேர்ந்த பிரபல நடிகை மற்றும் மாடல் எலிசபெத் ஹர்லே. எல்டன் ஜான் எயிட்ஸ் அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சி லண்டனின் பிரபலமான ஓட்டலில் நடந்தது.

    பிரம்மாண்டமாக அரங்கேறிய அந்த நிகழ்ச்சியில் ‘தன்னை யார் வேண்டுமானாலும் முத்தமிடலாம், அதற்கான ஏலத்தை நானே விடுகிறேன்’ என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் எலிசபெத்.

    கனடாவில் வங்கியை நடத்திவரும் பிரபல கோடீஸ்வரரான இந்திய வம்சாவளி ஸ்டான் பாரதியின் மகனான 27 வயதாகும் ஜூலியன் பாரதி ரூ.49 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார்.

    பின் அந்த இடத்திலேயே முத்தத்தை தந்து பணத்தையும் செட்டில் செய்தார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    நல்லெண்ணெய் குளியல் அவசியமா?!

    By: ram On: 18:00
  • Share The Gag
  • நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கேசம் பொலிவு பெறுவதுடன், உடல் உஷ்ணத்தைக் குறைப்பது, ஒளி, ஒலி, திறன் அதிகரிப்பது, சரும வியாதிகளில் இருந்து காப்பது, பித்தத்தைச் சமன்படுத்துவது என இதன் பலன்கள் பற்பல. எண்ணெய்க் குளியல் கூடாது என்று பல ஆண்டுகளாகவே மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    குறிப்பாக, குழந்தைகளுக்குக் கூடவே கூடாது என்கிறார்கள். இதற்குக் காரணம், முறையாக எண்ணெய்க் குளியல் எடுக்கத் தெரியாத, குழந்தைகளைக் குளிக்க வைக்கத் தெரியாத தலைமுறையாக நாம் இருப்பதுதான். குறிப்பாக, சீகைக்காய் துகள்கள் குழந்தையின் நாசிக்குச் சென்று, சுவாசப் பாதையில் அலர்ஜியை ஏற்படுத்த ஆரம்பித்தும் என்பதால்தான் எண்ணெய் குளியலே தேவையில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

     மற்றபடி, முன்கூட்டியே சீகைக்காயை சரியாக குழைத்துக்கொண்டு முறையாக எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை'' என்று வலியுறுத்துகிறார் சித்தமருத்துவர் .