Monday, 22 September 2014

இந்த ராம்கோபால் வர்மாவுக்கு என்ன தான் ஆனது?

By: ram On: 23:36
  • Share The Gag
  • சில பவர் ஸ்டார்கள் அவர்கள் பப்ளிசிட்டிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால் ராம்கோபால் வர்மா ஒரு சிறந்த இயக்குனர் என்று அனைவருக்கும் தெரியும். இவர் ஏன் இப்படி செய்கிறார் என்று தான் தெரியவில்லை.

    சமீப காலமாக இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் சொல்லும் கருத்துகள் அனைவரையும் கோபப்படுத்தி வருகிறது. சமீபத்தில் திரைக்கு வந்து எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வரும் படம் ஆகடு.

    இப்படத்தை பற்றி மிகவும் மோசமாக தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். இதனால் கோபமடைந்த மகேஷ் பாபு ரசிகர்கள் அவரை செம்ம ரைடு விட்டு வருகின்றனர்.

    மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்க சில சூப்பர் டிப்ஸ்...

    By: ram On: 23:23
  • Share The Gag
  • வீட்டில் உள்ள மார்பிள் தரையில் கறை படிந்துள்ளதா? அதை சுத்தப்படுத்தி சோர்ந்துவிட்டீர்களா? அப்படியெனில், அந்த கறையை எளிதில் போக்குவதற்கு ஒருசில பொருட்கள் உள்ளன. பொதுவாக மார்பிள் கல்லானது மிகவும் விலை உயர்ந்தது. தற்போது அத்தகைய விலை உயர்ந்த மார்பிள் கல் தான் பெரும்பாலான வீடுகளில் உள்ளது. இந்த மார்பிள் கல் வீட்டிற்கு மிகவும் அழகான தோற்றத்தைத் தரும். அதே சமயம் அதில் கறை படிந்தால், அதனைப் போக்குவது சற்று கடினம்.

    ஏனெனில் மற்ற தரைகளை சுத்தம் செய்வது போல், இந்த மார்பிளால் செய்த தரையை சுத்தம் செய்தால், மார்பிள் கல்லில் பாதிப்பு ஏற்படும். ஆகவே இந்த கரையை சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அத்தகைய மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்குவதற்கு ஒருசில எளிமையான பொருட்களைக் கொடுத்துள்ளோம். அந்த பொருட்களைக் கொண்டு எப்போதும் சுத்தம் செய்தால், மார்பிள் தரைகள் பொலிவுடன் காணப்படுவதோடு, வீட்டில் நல்ல மணம் இருக்கும்.

    பேக்கிங் சோடா

    மார்பிள் தரையில் உள்ள கறைகளைப் போக்க சிறந்த வழியென்றால், அது பேக்கிங் சோடா தான். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து, வீட்டைத் துடைத்தால், கறைகள் முற்றிலும் நீங்கிவிடும். குறிப்பாக பேக்கிங் சோடாவை அளவுக்கு அதிகமாக போட வேண்டாம்.

    டூத் பேஸ்ட்

    டூத் பேஸ்ட் பற்களை மட்டும் சுத்தம் செய்யப் பயன்படுவதில்லை. மார்பிள் தரைகளில் உள்ள கறைகளைப் போக்கவும் தான் உதவுகிறது. அதற்கு செய்ய வேண்டியது எல்லாம், டூத் பிரஷ்ஷில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து, கறை உள்ள இடத்தில் தேய்த்து, பின் ஈரமான துணி கொண்டு துடைத்தால், கறைகள் எளிதில் போய்விடும்.

    எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், இதனை கறை உள்ள மார்பிள் தரையில் தேய்த்தால், கறைகள் இருந்த இடமே தெரியாமல் போகும்.

    வினிகர்

    மார்பிள் தரையில் உள்ள கெட்சப் மற்றும் ஒயின் கறைகளைப் போக்குவதற்கு, வெள்ளை வினிகரை ஒரு துணியில் நனைத்து, கறை உள்ள இடத்தில் தேய்த்தால், கறை நீங்கி மார்பிள் தரையானது பளிச்சென்று மின்னும்.

    டிஷ் வாஷ் திரவம்

     எளிய முறையில் மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்க வேண்டுமெனில், பாத்திரம் கழுவப் பயன்படுத்தும் டிஷ் வாஷ் திரவத்தைப் பயன்படுத்துவது தான். இதற்கு அந்த திரவத்தை கறை உள்ள இடத்தில் ஊற்றி நன்கு தேய்த்து, கழுவ வேண்டும். முக்கியமாக, மார்பிள் தரைக்கு கடினமான சோப்பைப் பயன்படுத்தக்கூடாது. அது மார்பிள் தரைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    சோப்பு தண்ணீர்

     மார்பிள் தரை எப்போதும் சுத்தமாகவும், பளிச்சென்று மின்ன வேண்டுமெனில், ஸ்பாஞ்சை சோப்புத் தண்ணீரில் நனைத்து பிழிந்து, தரையைத் துடைக்க வேண்டும். அதிலும் இந்த முறையை, தரையில் ஏதேனும் கொட்டும் போது செய்தால், தரையில் கறை படிவதை தவிர்க்கலாம்.

    வாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி?

    By: ram On: 21:33
  • Share The Gag
  •  எப்படித் தேர்ந்தெடுப்பது?

    * புதிதாக வாஷிங்மெஷின் வாங்கும்போது அதில் எத்தனை வகை இருக்கிறது;
    அவற்றின் செயல்பாடுகள் எப்படியிருக்கும்; உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை;
    நிதி நிலைமை; வீட்டில் தண்ணீர் வரத்து; இடவசதி என அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப வாஷிங்மெஷினைத் தேர்ந்தெடுங்கள்.

    * வாஷிங்மெஷினில் அஜிடேட்டர், பல்சேட்டர், டம்பிள் என்று மூன்று வகைகள் உண்டு.

    *அஜிடேட்டர் வகை மெஷினைத் திறந்தால் நடுவில் ‘ராடு’ போன்ற கருவி உயரமாக இருக்கும். இதுதான் துணிகளைத் திருப்பி, சுழற்றித் துவைக்கிறது. பல்சேட்டர் மெஷினில் இந்த வகை ராடு இல்லாமல், தட்டை வடிவ பிளாஸ்டிக்காலான தட்டு இருக்கும். இந்த இரண்டு வகை வாஷிங்மெஷின்களையும் டாப் லேடிங் (Top loadingல் பக்கக் கதவைத் திறந்து துணிகளை உள்ளே போட வேண்டாம். டம்பிள் வாஷிங்மெஷின் ஃப்ரன்ட் லோடிங் (Front loading) அதாவது, முன்பக்க கதவைத் திறந்து துணிகளைப் போடலாம்.

    * அஜிடேட்டர் மற்றும் பல்சேட்டர் மெஷினில் செமிஆட்டோமேட்டிக் (Semi automatic) மற்றும் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் (Fully automatic) என்று இரண்டு வகை உண்டு. டம்பிள்வாஷ் வகை மெஷின்கள் மட்டும் ஃபுல்லி ஆட்டோமேட்டிக்காகத்தான் கிடைக்கின்றன. சூடான தண்ணீரில் அலசக் கூடிய வசதிகளும் இதில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.

    அதிர்ச்சி* என்ன விலை மெஷினே?

    * செமி ஆட்டோமேட்டிக் மெஷின்கள் 8,000 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.
    ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மெஷின்கள் 13,000 ரூபாயிலிருந்தும், டம்பிள் மெஷின்கள் 20,000 ரூபாயிலிருந்தும் கிடைக்கின்றன.

    * மெஷின்கள் 4 கே.ஜி., 5 கே.ஜி. முதல் 8 கே.ஜி. வரையிலான கொள்ளளவில் கிடைக்கின்றன.
    4 கே.ஜி. என்றால், 4 கிலோ கிராம் அளவுக்கான உலர்ந்த துணிகளைத் துவைக்க முடியும். நான்கு பேர் கொண்ட குடும்பம் என்றால், 5 கே.ஜி. போதுமானது.

    * மெஷினில் டியூப்பை, வீட்டிலிருக்கும் ஏதாவது ஒரு நல்ல தண்ணீர் குழாயுடன் இணைத்து விடுங்கள்.

    செமி ஆட்டோமேட்டிக் என்றால், துணிகளைப் போட்டு, பவுடரையும் போட்டு, தண்ணீரைத் திறந்துவிட வேண்டும். பிறகு, ‘சுவிட்ச் ஆன்’ செய்ய வேண்டும். துவைத்த பிறகு, உரிய பட்டனைத் தட்டினால் அந்தத் தண்ணீர் வெளியேறிவிடும். பிறகு பட்டனை அழுத்தித் தண்ணீரை வெளியேற்றி, பைப்பை மீண்டும் திறந்து விட வேண்டும். இப்போது அலசுவதற்கான பட்டனைத் தட்டினால், அது அலசிக் கொடுக்கும். மீண்டும் ஒரு பட்டனைத் தட்டினால், அந்தத் தண்ணீரும் வெளியேறிவிடும். பிறகு, துணிகளை டிரையரில் போடவேண்டும். அதன் மீது, ஸ்பின்கேப் போட்டுவிட்டு, டிரையரின் கதவை மூட வேண்டும்.

    ஃபுல்லி ஆட்டோமேட்டிக் என்றால்- துணிகளையும், தேவையான பவுடரையும் போட்டு விட்டு, தண்ணீர் அளவை கொடுத்திருக்கும் பட்டன் மூலம் செலக்ட் செய்துவிட்டால் போதும். அதுவே துவைத்து, அலசி, டிரையரில் பிழிந்து கொடுத்துவிடும்.

    * மெஷினில் துணிகளைப் போடும்போது, துணிகளைவிட இரண்டு இன்ச் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் துணிகளை நன்கு துவைக்கும்.

    * உங்கள் வீட்டுக்குழாயில் உப்பு தண்ணீர்தான் என்றாலோ? குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தண்ணீர் வரும் என்றாலோ? செமி ஆட்டோமெடிக் மெஷினை வாங்கலாம். சில சமயம் பைப்பில் தண்ணீர் வரவில்லையென்றாலும்கூட, நேரடியாக தண்ணீர் ஊற்றும் வசதி இந்த வகை மெஷின்களில் உண்டு. தண்ணீர் வரத்து பைப்பில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்றால் மட்டுமே ஃபுல்லி ஆட்டோமெடிக் வாஷிங்மெஷினை வாங்குங்கள்.

    * பொதுவாக எந்தவகை வாஷிங் மெஷினாக இருந்தாலும், அதில் இருக்கும் டிரையர், எண்பது சதவிகிதம்தான் துணியை உலர்த்தும், அதன்பிறகு கொடியில் சற்று நேரமாவது உலர்த்த வேண்டும்.
    * என்னதான் மெஷினில் துவைத்தாலும், துணிகளில் சட்டை காலர், பேன்ட்டின் அடிப்பகுதிகளை நீங்கள் கைகளால் ஒரு முறை நன்றாக கசக்க வேண்டும்.

    * பெட்ஷீட், ஜீன்ஸ், உல்லன், பாலியஸ்டர், காட்டன் என்று துணிகளின் தன்மைக்கு ஏற்ப பார்த்துத் துவைக்கும் வசதிகள் கொண்ட மெஷின்களும் வந்துவிட்டன. இவற்றைத் தேர்ந்தெடுத்தால், உங்களின் துணிகள் சேதமடையாமல் இருக்கும்.

    * வாஷிங்மெஷின்கள் அதிகமாக மின்சாரத்தை இழுக்காது. தினமும் இரண்டரை மணி நேரம் ஓடினால் ஒரு யூனிட்தான் ஆகும். அதுவும் துவைக்கும்போது மோட்டார் ஓடுவது என்பது அரைமணி நேரம்தான்.

    அதிர்ச்சி* பயன்படுத்துவது எப்படி?

    * பொதுவாக எல்லா மெஷின்களிலும் லின்ட்பில்டர் (lint filter) வசதி உருவாக்கப்பட்டிருக்கும். இது, துணிகளைத் துவைக்கும்போது ஷர்ட், பேன்ட், சேலையில் இருந்து வெளியேறும் நூல்களை எல்லாம் சேகரித்து, வடிகட்டி வைத்திருக்கும். இந்த ஃபில்டர், பார்க்கச் சின்னக் குழந்தைகளின் கால் சாக்ஸ் போலத் தெரியும். ஒவ்வொரு முறை துவைத்ததும் இந்த ஃபில்டரை சுத்தம் செய்ய வேண்டும். ஃபில்டர் துணி கிழிந்துவிட்டால், குழந்தைகளின் சாக்ஸை எடுத்து அதில் மாட்டி விட்டுவிடுவார்கள். அப்படிச் செய்யாமல் உரிய சர்வீஸ் ஆட்களை அழைப்பதுதான் நல்லது.

    * மெஷினுக்கு வெளியே இன்லெட் வால் ஃபில்டர் என்றொரு வடிகட்டி அமைக்கப்பட்டிருக்கும். இது தண்ணீரில் இருந்துவரும் அழுக்குகளை எல்லாம் வடிகட்டி, சுத்தமான தண்ணீரை மெஷினுக்குள் அனுப்புகிறது. குறைந்தபட்சம் மாதம் ஒரு முறை இந்த ஃபில்டரையும் சுத்தம் செய்து விடுங்கள்.

    * சுவிட்ச் போர்டில் இருந்து நேரடியாகத்தான் மெஷினுக்குக் கனெக்ஷன் கொடுக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் எக்ஸ்டன்ஷன் பாக்ஸ் பயன்படுத்தாதீர்கள். இதனால், சரியாக எர்த் கிடைக்காமல் போகும். தேவையான எர்த் சரியாக இருக்கிறதா என்று எலெக்ட்ரிஷியன் மூலம் பரிசோதித்து விடுங்கள். அது, சரியாக இல்லையென்றால் ஷாக் அடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    * வெள்ளைத் துணிகளையும், கலர் துணிகளையும் ஒன்றாகத் துவைக்காதீர்கள். இதனால், வெள்ளைத் துணிகள் நாளடைவில் தன்னுடைய தரத்தை இழந்துவிடும்.

    * சொட்டு நீலம் (லிக்விட் ப்ளூ) வாங்கும்போது அது டை பேஸ்டு (Dye based) நீலமா என்று பார்த்து வாங்குங்கள். பவுடர் பேஸ்டு (power based) பயன்படுத்தும்போது, சரியாகக் கரையாமல் துணிகளில் ப்ளூ கலர் கறை படிந்து விடக்கூடும்.

    * உங்கள் வீட்டில் பைப் கோளாறு ஏற்பட்டால், ஃபுல்லி ஆட்டோமெட்டிக் மெஷினாக இருந்தாலும் செமி ஆட்டோமெடிக் போல பயன்படுத்த முடியும். என்றாலும், அது ஒரு ஆப்ஷன்தான். இதையே தொடர்ந்து பயன்படுத்தத் தேவையில்லை.

    இந்த மெஷினில் தண்ணீரை வெளியே இருந்து எடுத்து ஊற்றித் துவைக்கும்போது மேல்புறத்தில் இருக்கும் சுவிட்ச்களின் மேல் தண்ணீர் படக்கூடாது. ஏனென்றால் அந்த இடத்தில்தான் எலெக்ட்ரானிக் அயிட்டங்கள் இருக்கும். அதில் தண்ணீர் படும்போது, சரியாக வேலை செய்யாமல், செயலிழந்து, செலவு வைத்து விடும். எனவே, அந்த இடத்தில் டவல் அல்லது கடினமான துணியைப் போட்டு மூடிவிட்டு உபயோகியுங்கள்.

    * வாஷிங்மெஷினை பாத்ரூமில் வைக்காதீர்கள். வெகு சீக்கிரத்தில துருப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது. அதிகம் வெயில் படக்கூடிய இடங்களிலும் வைக்காதீர்கள்.

    * வாஷிங்மெஷின் வாங்கி இரண்டு வருடம் ஆகிவிட்டால் உடனடியாக சர்வீஸ் செய்து விடுங்கள்.

    * துணிகளின் கொள்ளளவுக்கு ஏற்ப, தானே தண்ணீரை செலக்ட் செய்து கொள்ளும் டெக்னிக்குக்கு ‘ஃபஸ்ஸி லாஜிக்’ என்று பெயர்.

    மெஷினின் உள்ளே வரும் தண்ணீரின் அடர்த்தி, இரண்டையும் பரிசோதித்து, துணிகள் முழுவதும் துவைக்கப்பட்டு விட்டதா என்று கண்டறியும் டெக்னாலஜிக்கு ‘நியூரோ ஃபஸ்ஸி’ என்று பெயர்.

    இந்த வசதிகள் எல்லாம் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மெஷின்களில் கிடைக்கும்.

    * சாஃப்டான துணிகளை அலசும்போது அதற்கென பிரத்யோகமாக விற்கப்படும் சாஃப்ட்னர்களை வாங்கி உபயோகப்படுத்துங்கள். ஃபுல்லி ஆட்டோமேடிக் மெஷின்களில் இதற்கென தனியாக ஒரு பாக்ஸ் கொடுத்திருப்பார்கள். அதில், ஊற்றி வைத்துவிட்டு பட்டனை ஆன் செய்தால், தானாக எடுத்து உபயோகிக்க ஆரம்பித்துவிடும்.

    முன்னணி நடிகர்களுக்கு இணையாக அரண்மனை பாக்ஸ் ஆபிஸ் வசூல்!

    By: ram On: 21:19
  • Share The Gag
  • கடந்த வாரம் வெளிவந்த அரண்மனை திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. திரையிட்ட அனைத்து இடத்திலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வெற்றி நடைப்போடுகிறது.

    இப்படத்தின் 3 நாள் வசூல் முன்னணி நடிகர்களுக்கு இணையாக வந்துள்ளது. படத்தின் முதல் நாள் வசூலே தமிழகம் முழுவதும் ரூ 2.60கோடி வந்தது.

    இதை தொடர்ந்து சென்னையில் மட்டும் இப்படம் இதுவரை ரூ. 89 லட்சம் வசூல் செய்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    வள்ளலார் அருளிய காயகல்பம் உங்களுக்காக..!

    By: ram On: 21:01
  • Share The Gag


  • காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும். ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் அருளியுள்ளார்.

    வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம், முசுமுசுக்கை 50 கிராம், சீரகம் 50 கிராம் ஆகியவற்றை பொடியாக காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்).

    இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

    தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.

    இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும். இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்.

    இந்த மருந்து என்னிடம் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் கட்டாயமாக சாப்பிடச் சொல்வேன். சர்வ நிச்சயமாக பலன் பெறுவீர்கள்.

    இதனைப் படிக்கும் அனைத்து நண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும். நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்.

    தனுஷுற்கு டப்பிங் கொடுக்கும் கார்த்தி!

    By: ram On: 20:20
  • Share The Gag
  • கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவரவிருக்கும் படம் அனேகன். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் டப்பிங் வேலை தற்போது தொடங்கியுள்ளது.

    இப்படத்தில் ஹீரோவை அறிமுகப்படுத்த ஒரு பெரிய நட்சத்திரத்தின் குரல் தேவைப்பட்டது. அதற்காக கே.வி.ஆனந்த் கார்த்தியிடம் கேட்க, அவரும் மறுக்காமல் ஓகே சொல்லிட்டாராம்.

    மேலும் அப்படியே ஒரு கதையை அவரது காதில் போட, கார்த்தி ‘சூப்பர் சார், கண்டிப்பாக நடிக்கிறேன்’ என்று சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

    இவர்கள் திரைக்கு வருவதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

    By: ram On: 18:47
  • Share The Gag


  • 1. ஜெமினி கணேசன் - உதவிப் பேராசிரியர்

    2. சிவக்குமார் - ஓவியர்

    3. விஜயகாந்த் - அரிசிக் கடை

    4. பாக்யராஜ் - ஜவுளிக்கடை

    5. ரகுவரன் - உணவு விடுதி

    6. பாலசந்தர் - அக்கவுண்டண்ட்

    7. விசு - டி .வி.எஸ். ஊழியர்

    8. மோகன் - வங்கி ஊழியர்

    9. எஸ். வி. சேகர் - மேடை நாடக ஒலி அமைப்பாளர்

    10. ரஜினிகாந்த் - பஸ் கண்டக்டர்

    11. நாகேஷ் - ரயில்வே குமாஸ்தா

    12. அஜித் - டூ வீலர் மெக்கானிக்

    13. பாரதிராஜா - மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர

    இதுபோல் யாரும் செய்ததில்லை! லிங்காவை புகழ்ந்த ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்

    By: ram On: 18:23
  • Share The Gag
  • லிங்கா படம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் பணியாற்றிய ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் லீ டக்கர் தன் டுவிட்டர் வலைத்தளத்தில் படத்தை புகழ்ந்துள்ளார்.

    இதில் ‘இது வரை நான் பணியாற்றிய படங்களில் லிங்கா படத்தை போல், பெரிய அளவில் பிரம்மாண்டமாக யாரும் எடுத்தது இல்லை’ என்று டுவிட் செய்துள்ளார்.

    இவர் அஜித் நடித்த ஆரம்பம், கமலின் விஸ்வரூபம் படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரண்டையின் மருத்துவ குணங்கள் என்ன? எல்லோரும் சாப்பிடலாமா?

    By: ram On: 18:11
  • Share The Gag
  • பிரண்டையின் மருத்துவ குணங்கள் என்ன? எல்லோரும் சாப்பிடலாமா?

    பிரண்டையை மேல்தோல் கணு நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, புளித்த மோரில் ஒருநாள் முழுவதும் ஊறவைத்து, மறுநாள் மைய இடித்து, வறுத்த மிளகு, சீரகம், எள், ஓமம், மல்லி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து, பட்டாணியளவு மாத்திரைகளாகவோ அல்லது உலர்த்தி, பொடியாகவோ எடுத்துக்கொள்ள வேண்டும்.

    1 முதல் 2 மாத்திரைகள் அல்லது 1 கிராம் பொடி தினமும் ஒரு வேளை சாப்பிட்டுவர பசி உண்டாகும்.

     உணவு நன்கு செரிக்கும். கல்லீரல் பலப்படும். வயிற்றில் தங்கிய காற்று வெளியேறும்.

    ஷங்கரின் அடுத்த படத்தில் சமந்தா?

    By: ram On: 17:17
  • Share The Gag
  • ஐ படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் ஷங்கர். இந்த ஐ படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனது சமந்தா தான். ஆனால் இவரின் தோல் வியாதி, படத்தில் நடிக்க தடையாக அமைந்தது.

    தற்போது விஜய், விக்ரம், சூர்யா போன்ற பெரிய நடிகர்கள் படத்தில் நடித்தாலும், ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்து வருகிறது.

    அதனால் ஷங்கர் அடுத்து இயக்க போகும் படத்தில் தன்னை கதாநாயகியாக்க, அவரை சந்தித்து பேசும் முயற்சியில் உள்ளாராம்.

    தொப்பை குறைய இயற்கை வழிகள்..!

    By: ram On: 17:06
  • Share The Gag

  • இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.

    பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க விட வேண்டும் .

    பிறகு அதை இறுக்கி மூடி வைக்கவும் மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு சாறை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

     தொடர்ந்து பத்து நாட்கள் இது போல் அன்னாசிப் பழத்தைத் தாயாரித்து குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்

    கமலால் வருத்தமடைந்த அர்னால்ட்!

    By: ram On: 16:55
  • Share The Gag
  • உலக நாயகன் என்ற பட்டத்திற்கு ஏற்றார் போல் உலகம் போற்றும் நடிகராகிவிட்டார் கமல். சமீபத்தில் ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த அர்னால்டை நடிகர் சூர்யா மற்றும் ஸ்டண்ட் கலைஞர்களை நேரில் சென்று சந்தித்தனர்.

    இந்நிலையில் அவர் கமல்ஹாசனை சந்திக்க விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அவர் அந்த நேரத்தில் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்ததால் பார்க்க முடியாமல் போனதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் அர்னால்ட் கொஞ்சம் மனவருத்தம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது நினைவில் கொள்ளவேண்டியவை..

    By: ram On: 16:42
  • Share The Gag


  • 1. மாப்பிள்ளை பார்க்கும் போது, இன்னதை எல்லாம் தாருங்கள் என பட்டியல் இடுவோரை துளியும் யோசிக்காமல் ...ஒதுக்கிடுங்கள். என்ன கேட்டாலும், நிலம் விற்று, கடன் வாங்கி பாடாய் பட்டேனும் கேட்டதைக் கொடுத்து திருமணம் செய்து வைப்பேன் என்ற நினைப்பை தவிர்த்திடுங்கள். அப்படி கடினப்பட்டு செய்வதெல்லாம் ஓர் நாள் நிகழ்வுக்கு தான். பெண்ணுக்குத் தானே தருகிறோம் மகிழ்ச்சியாய் இருப்பாள் என்ற கனவு பொய்த்த பின் அழது பிரோஜனம் இல்லை. மனம் பணத்தை விரும்பும் இடத்தில் மகிழ்ச்சி நிரந்தரமாய் இருக்காது.

    2. சில நல்ல எண்ணம் கொண்டவர்கள், எந்த எதிர்பார்ப்பும் இல்லை, நீங்கள் முடிந்ததைச் செய்யுங்கள் இல்லையெனினும் குறையில்லை என்றால், உடனே " இந்த மாப்பிள்ளைக்கு ஏதோ குறை, அது தான் எதுவுமே வேண்டாம் என்கிறார்" என தப்புக் கணக்கு போடாதீர்கள். எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது நலமே. அதற்காக, இந்த ஒரே காரணத்திற்காக சந்தேகம் கொள்வது தவறு. மாப்பிள்ளையை நன்றாக விசாரியுங்கள். அதில் தவறில்லை. எதற்காக இவர் ஒன்றும் வேண்டாம் என்கிறார் என்று விசாரிக்காதீர்கள். அந்த ஒரு கண் கொண்டு மட்டுமே விசாரித்தால் நீங்கள் நல்ல வரனை இழக்க கூடும்.

    3. வாழ்க்கைத் துணைவி இந்த நடிகையைப் போல் அழகாய் இருக்க வேண்டும் என்பதை விட அவள் என்னுடன் வாழப்போகும் காலத்தில் ஓர்நாள் கூட என்னிடம் நடிக்காதவளாய் இருக்க வேண்டும் என்று ஆண்கள் எண்ணுவதே நலம்.

     4. பெண்களும் வாழ்க்கை துணை இந்த நடிகனைப் போல் இருக்க வேண்டும் என ஒரு போதும் எண்ணாமல் இருத்தல் நலம். அப்புறம் உங்களுக்கு ஆபத்து என்றால் சண்டை போட டூப் தேட வேண்டியிருக்கும். எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் துணையாய் இருப்பவரே வாழ்க்கை துணை என்பதை நம்புங்கள்.

    5. படித்தவர் துணையாக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தவறில்லை. ஆனால் பொறியியல் மட்டுமே படித்திருக்க வேண்டும் கணியில் செய்யும் மென்பொருள் வேலை மட்டுமே நல்ல தொழில் என்று எதிர்பார்ப்பது தவறே. எவ்வளவு பணம் கட்டியாவது பொறியியல் படிக்கவேண்டும் என்ற நிலைமை ஒரு புறம் இருக்க, எவ்வளவு கொடுத்தேனும் பொறியியல் துறை மாப்பிள்ளையை பிடிக்க வேண்டும் என்பது இன்னொரு பக்கம் வளர்ந்துக் கொண்டே இருக்கிறது.

     6. ஆண் வீட்டாரோ, பெண் வீட்டாரோ பார்த்த வரன் பிடித்திருக்கா இல்லையா என்பதை நேரமாய் நேர்மையாய் சொல்லி விடுங்கள். அதில் யாருக்கும் எந்த மனக்கசப்பும் இல்லை. இன்று சொல்கிறேன், நாளை சொல்கிறேன். இப்ப பிடிச்சிருக்கு ஆனா மேற்கொண்டு அப்புறம் பேசலாம் என்று ஜவ்வு மாறி இழுத்து அடுத்தவர் மனதில் தேவையற்ற எதிர்பார்ப்புகளை விதைத்து அவர்களை துன்புறுத்தாதீர்கள். எந்த அளவுக்கு இன்று மணமுறிவுகள் அதிகம் இருக்கோ அதே அளவிற்கு மனங்கள் இணையும் திருமணமும் கடினமாகத் தான் இருக்கிறது.

    இந்த ஆண்டு கணக்குப்படி தமிழ்நாட்டின் 7.4 கோடி மக்கள் தொகையில் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற நல்ல நிலையில் தான் இருக்கிறது. இருந்தும் இங்கு பலருக்கு பல வருடங்கள் தேடினாலும் நல்ல வரன் அமைவதில்லை. எல்லாவற்றிற்கும் காரணம் தேவையற்ற எதிர்பார்ப்புகளே. உங்களின் அதிக பட்ச எதிர்ப்பார்ப்பாக நல்ல மனதையும், குணத்தையும் கொள்ளுங்கள். எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால், இனிதாய் ஓர் இல்லறம் அமைந்துவிடும். இரு மனங்கள் இணைந்தால் மட்டுமே அது திருமணம். மான்யங்கள் கொண்டு விலைபேசப்பட்டால் அது வெறும் மணமே!

    கமல் படத்தில் தொடர்ந்து இடம்பெறும் ஆனந்த் மகாதேவன்!!!

    By: ram On: 08:11
  • Share The Gag
  • மராட்டியத்தில் இருந்து நமக்கு கிடைத்திருக்கும் இன்னொரு நடிகர் தான் ஆனந்த் மகாதேவன். ஆனால் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த கதாசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர் இவர். இந்தியிலும் மராத்தியிலும் பல படங்களை இயக்கி, நடித்தும் இருக்கிறார் இவர். இப்போது தமிழ்சினிமாவுக்கு இவரை அழைத்து வந்திருப்பவர் நம் உலகநாயகன் கமல் தான்..

    தனது ‘விஸ்வரூபம்-2’ படத்தில் ஆனந்த் மகாதேவனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் கமல். அந்தப்படம் இன்னும் வெளிவராத நிலையில் தற்போது ‘த்ரிஷ்யம்’ ரீமேக்காக ஜீத்து ஜோசப் இயக்கத்திலேயே தமிழில் உருவாகிவரும் ‘பாபநாசம்’ படத்திலும் இவரை தன்னுடன் இணைத்திருக்கிறார் கமல்.

    படத்தில் அசிஸ்டென்ட் போலீஸ் கமிஷனராக வரும் ஆஷா சரத்தின் கணவராக (மலையாளத்தில் சித்திக் நடித்த வேடம்) நடிக்கிறார் ஆனந்த் மகாதேவன்.. ஆக கமலின் குட் புக்கில் ஞானசம்பந்தன், ஜிப்ரான் வரிசையில் இவருக்கும் ஒரு இடம் கிடைத்துவிட்டது என்றே சொல்லலாம்.

    சனி பகவான் பற்றி அறிந்துக் கொள்வோம்

    By: ram On: 08:00
  • Share The Gag
  • தந்தை     :       சூரியன்
    தாய்             :       சாயா தேவி
    உரிய பால்     :       அலிக் கிரகம்.
    உரிய நிறம்     :       கருமை.
    உரிய இனம்     :       சூத்திர இனம்.
    உரிய வடிவம்     :       குள்ள உயரம்.
    உரிய அவயம்     :       தொடை,பாதம், கணுக்கால்.
    உரிய உலோகம்     :       இரும்பு.
    உரிய மொழி     :       அன்னிய மொழிகள்.
    உரிய ரத்தினம்     :       நீலம்.
    உரிய ஆடை     :       கறுப்பு.
    உரிய மலர்     :       கருங்குவளை.
    உரிய தூபம்     :       கருங்காலி.
    உரிய வாகனம்     :       காகம், எருமை.
    உரிய சமித்து     :       வன்னி.
    உரிய சுவை     :       கைப்பு.
    உரிய தான்யம்     :       எள்.
    உரிய பஞ்ச பூதம்     :       ஆகாயம்.
    உரிய நாடி     :       வாத நாடி.
    உரிய திக்கு     :       மேற்கு.
    உரிய அதி தேவதை     :       யமன், சாஸ்தா.
    உரிய தன்மை (சர – சத்திர – உபயம் )     :       உபயக் கோள்.
    உரிய குணம்     :       தாமசம்.
    உரிய ஆசன வடிவம்     :       வில்.
    உரிய தேசம்     :       செளராஷ்டிரம்.
    நட்புப் பெற்ற கோள்கள்     :       புதன், சுக்கிரன், இராகு, கேது.
    பகைப் பெற்ற கோள்கள்     :       சூரியன், சந்திரன், செவ்வாய்.
    சமனான நிலை கொண்ட கோள்கள்     :       குரு.
    ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு     :       ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம்.
    உரிய தெசா புத்திக் காலம்     :       பத்தொன்பது ஆண்டுகள்.
    சனியின் மறைவு ஸ்தானம்     :       லக்கினத்துக்கு 8, 12ல் இருந்தால் மறைவு.
    நட்பு வீடு     :       ரிஷபம், மிதுனம்.
    பகை வீடு     :       கடகம், சிம்மம், விருச்சிகம்.
    ஆட்சி பெற்ற இடம்     :       மகரம்,கும்பம்.
    நீசம் பெற்ற இடம்     :       மேஷம்.
    உச்சம் பெற்ற இடம்     :       துலாம்.
    மூலதிரி கோணம்     :       கும்பம்.
    உரிய உப கிரகம்     :       குளிகன்.
    உரிய திசை     :       மேற்கு
    மனைவியர்     :       வேஷ்டா, மந்தா, நீலா
    மகன்     :       குளிகன்
    சகோதிரர்கள்     :       யமன்
    வேறு பெயர்கள்     :       சனீஸ்வரன், ஆயுள்காரகன், நீதிமான்
    உரிய காரகத்துவம்     :       ஆயுள் காரகன்.

    சூரியனுக்கும், சாயாதேவிக்கும் பிறந்தவர் தான் இந்த சனி பகவான். இவர் தோற்றத்தில் குள்ளமானவர். அறிவியல் கூற்றுப் படி, சனி என்பது விண்வெளியிலுள்ள ஒரு கோள். வியாழனுக்கு அடுத்தபடியான மிகப்பெரிய கோள். இந்தக்கோளின் குறுக்களவு சுமார் 73 ஆயிரம் மைல். பூமிக்கும் சனிக்கும் உள்ள தூரம் 75 கோடி மைலாகும். இந்த கிரகத்தை இத்தாலி விஞ்ஞானி கலிலியோ வானமண்டலத்தில் இருந்ததை முதன் முதலாக 1610 பார்த்தார். (குறிப்பு: இந்து மதத்தில் அதற்கு பல யுகங்களுக்கு முன்பே சனியைப் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளது வியப்பு)

    சனிக்கு ஒருகால் கிடையாது என்பார்கள். அவர் நொண்டியாக இருக்கும் காரணத்தினால் அவர் மெதுவாக வலம் வருகிறார். இதனால் இவரை “மந்தன்” என்றும் கூறுவார்கள். சனி நொண்டியானதற்கு ஒரு கதை சொல்வார்கள். இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றே. ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறான். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான். தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனர். ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினர். அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, “உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்கமுடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்கு இணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தன.

    இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். இது தான் சனிபகவான் முடமான கதை. ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவா30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறார்.

    சனி பகவான், நீலமணித் தேரில் நீலப் பட்டுத் துணியுடன் காற்றில் பறக்க, தேரை எட்டு கரு நிறக் கழுகுகள் இழுத்துக் கொண்டு வர வான்வெளியில் பவனி வருகிறார் என்பது ஐதீகம். இருகரம் உடைய இவர் வலது கரத்தில் தண்டம் ஏந்தியிருப்பார். இடது கரத்தால் வரத முத்திரை காட்டுவார். தாமரை மலர் போன்ற பீடத்தில், காக்கை வாகனத்தில் அமர்ந்திருந்திருப்பார். சனி பகவானின் மகனாகிய குளிகன் பெயரில் தினமும் ஒரு நேரம் உண்டு. அந்த நேரத்தில் எது செய்தாலும் விருத்தியாகும் எனவே அந்நேரத்தில் நல்லதே செய்ய வேண்டும்.

    சர்ச்சை வீடியோவை கண்டு கூலாக விளக்கம் அளித்த சிம்பு!

    By: ram On: 07:49
  • Share The Gag
  • இணையத்தளத்தில் சிம்பு மற்றும் கன்னட நடிகை ஹர்சிகாவும் பொது இடத்தில் முத்தம் கொடுப்பது போல் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதை கண்ட பலர் இது சிம்பு இல்லை என்றும், ஒரு சிலர் ஆமாம் இது சிம்பு தான் என்று கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த சர்ச்சை வீடியோ குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். இதில் ’அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், அது முழுக்க முழுக்க போலியான வீடியோ என்றும் அவர் தெரிவித்தார். மேலும், போலியான ஒரு வீடியோவிற்காக நான் ஏன் பதற வேண்டும்?’ என்று தெரிவித்துள்ளார்.

    சர்க்கரை நோயாளிகளா ? – சீத்தாப்பழம் சாப்பிடுங்கள்

    By: ram On: 07:34
  • Share The Gag

  • சீத்தாப்பழம் நமக்கு வரும் நோய்களில் பெரும்பாலானவற்றை தீர்க்க இயற்கையிலேயே பல வழிமுறைகள் உள்ளன. மூலிகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்வதன் மூலம் மனிதனுக்கு மரணத்தைத் தரும் நோய்களைக் கூட விரட்டு முடியும் என்பது உண்மை.அந்த வகையில் மனிதனுக்கு மரணவாயிலை திறக்கும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோயும் உள்ளது.

    சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க இயற்கையான வழிமுறைகள் சில உள்ளன. மருந்துகளை சாப்பிடுவது முக்கியமானதாக இருந்தாலும், இயற்கை வழிமுறைகளில் சர்க்கரை நோயை விலக்கி வைத்திருப்பது எளிதான செயலாகும்.உங்களுடைய உடலின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், அதுதொடர்பான வேறு சில பிரச்சனைகளுக்கும் ஆளாகிட நேரிடும். சாப்பிடும் உணவு மற்றும் தொடர்ந்த உடற்பயிற்சி ஆகியவை இரண்டும் நீரிழிவு நோயாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நம்ப வேண்டிய இரண்டு வழிமுறைகளாகும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுமையாகத் தவிர்த்து விட்டு, இயற்கையான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டியதும் அவசியமாகும்.

    இயற்கையான உணவுகளைக் கொண்டு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும் என்று பேசும் போது, சீத்தாப்பழம் அந்த உணவுப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும். உண்மையில், சீத்தாப்பழத்திற்கு பல்வேறு ஆரோக்கிய பலன்கள் உள்ளன. எண்ணற்ற விதைகளை கொண்டுள்ள இந்த ஆப்பிளுக்கு இணையான பலன்கள் வேறெங்கும் இல்லையென்றும் சொல்ல முடியும். புற்றுநோயை எதிர்க்கும் அக்சிடோஜெனின்களை பெருமளவு கொண்டிருக்கும் உணவாக உள்ளது சீத்தாப்பழத்தில் சர்க்கரை நோய்க்கு எதிரான குணங்கள் உள்ளன. இந்த குறிப்பிட்ட குணம் குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தி, தசைகளுக்கு குளுக்கோஸ் சென்றடையும் வழிகளை மேம்படுத்துகிறது. உடலில் குளுக்கோஸ் பயன்படும் செயல்சீத்தாப்பழம்-1பாட்டை இந்த குணம் தான் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, சீத்தாப்பழத்தை தினமும் சிறிய அளவுகளில் சாப்பிடும் போது, அது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. அதிக அளவு வைட்டமின் சி உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விரும்பினால், உடலிலுள்ள வைட்டமின் சி சத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் இன்சுலின் தேவையை கட்டுப்படுத்த முடியும்.

    சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி நிறைய உள்ளதால், இதை சாப்பிடுவதால், மருந்துகளை சாப்பிடுவதை விட அதிகமான பலன் கிடைக்கும். இதன் மூலம் மிகவும் எளிதாக, இயற்கையான வழிமுறையில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும், விரட்டிடவும் முடியும். மக்னீசியம் உடலுக்குத் தேவையான மிக முக்கியமான தாதுக்களில் மூன்றாவது இடத்தை மக்னீசியம் பிடிக்கிறது. குறைவான அளவு மக்னீயம் உடலில் இருந்தால், நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இது உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகமாக வைத்திருக்கவும், குளுக்கோஸை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே, மக்னீசியம் நிறைந்திருக்கும் சீத்தாப்பழத்தை சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து என்றால் அது தவறில்லை.

    பொட்டாசியம் குறைவான அளவு பொட்டாசியம் இருந்தால், சர்க்கரை நோய்க்கான கதவு வேகமாக திறக்கப்படும்.முறையான வழிமுறையில் பொட்டாசியத்தை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். அதிகளவு மக்னீசியமும், பொட்டாசியமும் நிறைந்திருப்பது தான்

    சீத்தாப்பழத்தின் ஆரோக்கிய பலன்களில் குறிப்பிடத் தக்கவையாக உள்ளன. பொதுவாகவே பொட்டாசியமானது செல்லுலர் செயல்பாடுகளை கவனிக்க உதவும், ஆனால் சீத்தாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உடலில் உள்ள இன்சுலின் அளவை கட்டுப்படுத்தும். இரும்பு மிகவும் அதிகமான இரும்புச்சத்தை கொண்டிருப்பதும் சீத்தாப்பழத்தின் ஆரோக்கிய பலன்களில் ஒன்றாகும்.இரத்த சோகைக்கு எதிராகப் போராடவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் இந்த சத்து உதவுகிறது. எனினும், சர்க்கரை நோயாளியின் உடலில் அளவுக்கு அதிகமாக இரும்புச்சத்து இருந்தால், அது வேறு சில பிரச்சனைகளை வரவழைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழர்கள் உணவையே மருந்தாக கொண்டும், மருந்தையே உணவாக கொண்டும் இயற்கை சார்ந்த வாழ்வியலை உலகிற்கு கொடையாக கொடுத்துள்ளனர்


    ஆடாம ஜெயிச்சோமடா - தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரண்ட் டார்க் - திரைவிமர்சனம்!

    By: ram On: 01:31
  • Share The Gag
  • தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரண்ட் டார்க் ஹுயுமர் தான். இதை மையமாக கொண்டு வெளிவந்த மூடர்கூடம், சூதுகவ்வும் போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது, இதே பாணியில் வெளி வந்திருக்கும் படம் தான் ஆடாம ஜெயிச்சோமடா.

    கால்டாக்ஸி டிரைவரான கதாநாயகன் கருணாகரன், பத்து லட்சத்திற்கும் மேல் கடனில் இருக்கிறார். பிறந்ததில் இருந்து காமன் பாத்ரூமில் காலை கடன்களை முடிக்கும் காலனி குடித்தனத்தில் காலம் தள்ளும் கதாநாயகி விஜயலட்சுமி.

    வீட்டுக்குள்ளேயே பாத்ரூம் இருக்கும் ஒரே ஒரு காரணத்திற்காக தன் தள்ளுவண்டி கடையில் நாஷ்டா திண்ண வரும் கருணாவின் காதலை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், முதல் இரவு முடியும் தருவாயில் கருணா பெரும் கடன்காரன், அவர் வீட்டில் தான் வட்டிக்கு கொடுத்த கடன்காரர்கள் எல்லாம் வந்து போவார்கள்...எனும் விஷயம் தெரிந்து விவாகரத்து வாங்காத குறையாக கடனை அடைத்து விட்டுவா...என விலகி போகிறார்.

    இந்நிலையில் கருணாவின் கால்டாக்ஸியில் பை நிறைய பணத்துடன் வந்து ஏறும் கிரிக்கெட் சூதாட்ட தரகர் பாலாஜி, தன்னை சரியாக கவனித்துக் கொண்டால் நடக்க இருக்கும் 20-20 மேட்ச் முடிந்ததும் உன் கடனை நான் அடைக்கிறேன் என வாக்குறுதி தருகிறார்.

    ஆனால் பாலாஜி கத்தி குத்துபட்டு மேட்ச்க்கு முன்பே மர்மமாக மரணமடைகிறார். கால்டாக்ஸி டிரைவர் கருணாகரன் தான் குற்றவாளி என போலீஸ் இன்ஸ்பெக்டர் சிம்ஹா, கருணாவை கைது பண்ண, அவரை சிம்ஹாவிடம் தான் மும்பை போலீஸ் என ஏமாற்றி அழைத்து போகிறார் ஆடுகளம் நரேன்.

    சிம்ஹா ஏமாந்தது தெரிந்ததும் கமிஷனர் கே.எஸ்.ரவிக்குமாரும் எண்ட்ரி ஆகிறார். போலீஸ் எல்லோரும் சேர்ந்து கருணாவையும், ஆடுகளம் நரேனையும் பிடித்தார்களா? கருணா தான் கொலையாளியா? கருணாவை நரேன் கடத்த காரணம் என்ன? கருணாவிற்கு பத்து லட்சம் கிடைத்ததா? பல கோடி கிடைத்ததா? சிம்ஹா சிறப்பான போலீஸ் என பெயர் எடுத்தார்? கருணா, விஜயலட்சுமி ஜோடி சேர்ந்ததா? என பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் முடிச்சுகளை அவிழ்த்து விடை தெருகிறார் இயக்குனர் பத்ரி.

    ஐந்தாம் படை, தில்லு முல்லு போன்ற கமர்ஷியல் படங்களுக்கு பிறகு பத்ரி கொஞ்சம் இப்படத்தை வித்தியாசமாக எடுக்க மெனக்கெட்டுள்ளார். படத்தின் பலமே நடித்த அனைத்து நடிகர்களும் மிக அழகாக யதார்த்தமாக நடித்துள்ளனர். சான் ரோல்டன் இசையில் 1 பாடல் மட்டும் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை நன்றாக உள்ளது.

    டைரியில் உள்ள கதையை சிம்ஹா சொல்லும் காட்சி, படத்தின் வசனங்கள் போன்றவை படத்தின் பலமாக உள்ளது.

    “தமிழ்ப்படம்” சிவா இப்படத்தின் மூலம் வசனகர்த்தமாக அறிமுகமாகி வெற்றி பெற்றுள்ளார்.

    கிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டத்தை நம் கண்முன் அப்படியே கொண்டு வந்துள்ளனர். பலவீனம் சொல்லி கொள்ளும் படி ஏதும் இல்லை.

    ஆடாம ஜெயிச்சோமடா என்று டைட்டிலிலேயே படத்தின் ரிசல்ட்டையும் அவர்களே கூறிவிட்டார்கள்

    குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய்!

    By: ram On: 00:44
  • Share The Gag
  • பால் கொடுக்கும் வேளையில் தனது மார்பினைக்  கடித்தமைக்காக  தாயொருவர் அவரது  குழந்தையை  90 தடவைக்கும் அதிகமாக கத்திரியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் சூசவு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

    தாயின் தாக்குதலுக்கு இலக்கான குழந்தையின் வயது 8 மாதங்கள் எனவும் தெய்வாதீனமாக அக்குழந்தை உயிர்பிழைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    குழந்தை, அதன் தாய் மற்றும் அவரது உறவுக்காரர்கள் இரண்டு பேர் என 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் அவர்கள் குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் தொழிலை மேற்கொண்டு வருபவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

    வீட்டின் முற்றத்தில் குழந்தை இரத்த வெள்ளத்தில் மிதப்பதைக் கண்ட அதன் மாமா ஒருவர் அதனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

    குழந்தைக்கு 100 தையல்கள் வரை போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகத்திலேயே அதிக தடவை குத்தப்பட்டுள்ளன.
    மேலும் குழந்தை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மைந்தன்…திரைவிமர்சனம்... பாஸ்போர்ட் ப்ளைட் டிக்கெட்... இல்லாத மலேசியா பயணம்!

    By: ram On: 00:33
  • Share The Gag
  • தமிழ்சினிமாவின் அகன்ற சந்தைகளில் ஒன்று மலேசியா! மலேரியா வரவழைக்கும் நம்ம ஊரு மொக்கை படங்களை கூட, மலேசியாவில் கொண்டாடுவார்களாம் தமிழர்கள். ‘நம்ம ஆளுங்க எடுத்த படம். ஓட்டிருவோம்டா…’ என்கிற பெருத்த மனசு காரணமாக இருக்கலாம்! அப்படியாப்பட்ட அன்பொழுகும் பூமியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் படம்தான் மைந்தன். முழுக்க முழுக்க மலேசிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். மனசுல ஒட்டுவாங்களோ, மாட்டாங்களோ என்கிற சந்தேகமே வேண்டாம். முகம் மட்டுமல்ல, குளோஸ் அப்பில் காட்டப்படும் நகம் கூட, ‘அவிய்ங்க எங்க தமிளனுங்கடா…’ என்கிற சந்தோஷத்தை தருகிறது. அதிலும் ஹீரோ குமரேசனை பார்த்தால், இளைச்சுப்போன எஸ்.ஜே.சூர்யா போலவே இருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் இருவரில் புன்னகைப்பூ கீதா, நம்ம கோடம்பாக்கத்தில் ஏராளமான லட்சங்களை கொட்டி, எக்கச்சக்க நஷ்டங்களை அள்ளிக் கொண்டு போனவர். அதுக்காகவாவது கல்லாபொட்டிய நிரப்புங்க ரசிகர்களே…

    கதை? தனது கார் மீது தீராத ஆசை வைத்திருக்கும் குமரேசன், சொந்த வாழ்வில் காதலியையும் இழந்து அப்பா அம்மா இல்லாத அநாதையாகவும் இருக்கிறார். ஒரே பொழுதுபோக்கு குவார்ட்டர் அடிப்பதும், குப்புற கவிழ்வதும்தான். இந்த நேரத்தில், இவரின் காரில் ஒரு குட்டிப் பையன் ஒளிந்து கொள்ள, வேறு வழியில்லாமல் அவனோடு ரூமிற்கு திரும்புகிறார். ‘ஒருவேளை சாப்பாடு, ஒரு ராத்திரி உறக்கம். சொல்லாம கொள்ளாம ஓடிப்போயிரு’ என்பதுதான் குமரசனின் கண்டிஷன். ஆனால் அந்த சிறுவனோ ‘கிடைச்ச இடம் கிஷ்கிந்தா’ என்று அங்கேயே செட்டில் ஆக துடிக்கிறான். நடுவில், சிறுவனை கண்டுபிடித்து திருப்பிக் கொண்டுபோக நினைக்கிறது வில்லன் கோஷ்டி. இவர்களின் வேலை அநாதை ஆசிரமம் நடத்துவது. அங்கிருக்கும் பிள்ளைகளை விற்பது. எப்படியோ அந்த வில்லன் கோஷ்டி குமரேசனை ரீச் பண்ணி குழந்தையை பறிமுதல் செய்து கொண்டு தப்பிக்க, விரட்டிக் கொண்டே கிளம்புகிறார் குமரேசு. ஒரு ஆக்சிடென்ட். அதிலிருந்து தப்பிக்கும் அவர் காரை அப்படியே போட்டுவிட்டு, வழியில் நிற்கும் புன்னகைப்பூ கீதாவையும் அவரது காரையும் கடத்திக் கொண்டு எஸ்கேப்.

    அந்த காரும் பறிபோய் கீதாவும் இவரும் ஒரு காட்டுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். லேசாக காதல் முளைக்கிறது கீதாவுக்கு. குமரேசன் அதை ஏற்றுக் கொள்வதற்குள் மீண்டும் சிறுவனை தேடி டிராவல் ஆகிறார்கள் இருவருமே! சிறுவன் கிடைத்தானா? வில்லன்கள் வெளுக்கப்பட்டார்களா? கீதாவும் குமரேசனும் ஜில் ஜில்லா? என்பதோடு முடிகிறது மைந்தன்.

    எதிலும் சிக்காத புதுக் கலரோடு டிராவல் ஆகிறது படம். முழு புத்துணர்ச்சியோடு ஒரு ஹீரோ கிடைத்திருக்கிறார் மைந்தன் குமரேசன். படத்தின் இயக்குனரும் இவரே. காட்டுக்குள் இவருக்கும் புன்னகைப்பூ கீதாவுக்கும் நடக்கும் செல்ல சண்டைகளை ரசிக்கலாம். அதுவும் கீதா அடிக்கடி உச்சரிக்கும் ‘மாரியாத்தா காப்பாத்து’க்கு சம்பந்தமேயில்லாத காஸ்ட்யூம் அவருக்கு. (அதுதாண்டா கிக்! ) ‘இந்தா கயிறை பிடிச்சு மேலே வா’ என்று கீதா வீசுவது மலைப்பாம்பு. (ஹையே…!) காரில் கீதாவும் குமரேசனும் கொஞ்சம் எக்குதப்பான கோணத்தில் சண்டை போட, வெளியேயிருந்து கவனிக்கும் ஒரு மாமி, ஐயே என்று அருவருப்படைவது ஆஹா… ஓஹோவ்…! மலேசியாவின் நிஜ தொழிலதிபர் கீதாவை படத்தில் சிலுக்கு ரேஞ்சுக்கு காண்பிப்பது ரசிகர்களுக்கு அல்வா? கீதாவின் இமேஜுக்கு குல்லா! (அதிலும் ஒரு காட்சியில் உன் ‘பேக்’கை பார்க்கலாம்னா விட மாட்றீயே என்ற வசனமெல்லாம் வருகிறது கீதாவை நோக்கி.

    அந்த சிறுவன் ஹனுமந்த் பேசும் வசனங்களில் பொங்கி வழியும் நியாய தர்மங்கள் சிந்தனை கூடை. அதற்காக பீர் பாட்டிலில் உச்சா போய், அதை குமரேசன் சிப் பண்ணுவதெல்லாம் உவ்வே சாமீய். குமரேசனின் பிளாஷ்பேக், மற்றும் கார் சேசிங் காட்சிகள் பரபரப்புக்கு உத்தரவாதம். அந்த முதல் காதலும் அந்த காதலியும் கோடம்பாக்க சினிமாவை மீறிய சென்ட்டிமென்ட்.

    ஆக்ஷன் அடிதடி க்ளைமாக்ஸ்தான். நம்ம ஊரு ஸ்டன்ட் மாஸ்டர்களின் கடைசி அசிஸ்டென்ட் அமைத்த மாதிரியிருந்தாலும், அந்த சண்டை நடக்கும் கடல் பகுதி பரபரப்பை அள்ளி தருகிறது. பாடல்கள் இசையமைப்பாளர் மான்ஷா சிங் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ என்கிற ரேஞ்சில் இசையமைத்திருந்தாலும், இசையை விட மலேசியாவின் அழகைதானே ரசிக்கிறோம். விட்ருங்க…

    மைந்தன்…. பாஸ்போர்ட் ப்ளைட் டிக்கெட் இல்லாத மலேசியா பயணம்!