Friday, 10 October 2014

லேப்டாப் கணிணியின் வெப்பம் குறித்த கவலையா…

By: ram On: 22:32
  • Share The Gag
  • கடந்த சில ஆண்டுகளாக, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை, இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர்.

    சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்த லேப்டாப் கம்ப்யூட்டர் களில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு, புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.

    தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் தரப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் நாமும் இது குறித்து இங்கு காணலாம். மோசமான பேட்டரிகளைத் தவிர்த்து, லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வெப்பம் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுமே, அவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன.

    ஒரு டிவிடி பிளேயர் இயங்கிய சில நிமிடங்கள் கழித்து, அதில் கைகளை வைத்துப் பார்த்தால், இந்த வெப்பத்தின் தன்மையை அறியலாம். டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப்கம்ப்யூட்டர்களில் இடம் மிகக் குறைவு. இதனால், அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தை வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள், சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அமைகின்றன. நெருக்கமாக இருப்பதனால், இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம் வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.

    அடுத்த பிரச்னை இயக்க திறன். லேப்டாப் கம்ப்யூட்டர்களில், அதிக வேகத்தில் இயங்கும் கூடுதல் திறன் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பொருத்தப்படுகின்றன. பதியப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் அவை வேகமாக இயங்க, இந்த எலக்ட்ரானிக் பொருட்களை கூடுதலாக இயக்குகின்றன. இதனால் அதிக வெப்பம் உருவாகிறது.

    லேப்டாப் கம்ப்யூட்டரைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இது தெரியும். அதனால் தான், வெப்பத்தினை வெளியேற்றும் வகையில் சிறிய விசிறிகள், ஹீட் ஸிங்க் எனப்படும் தகடுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவற்றால் முழுமையாக வெப்பத்தினை வெளியேற்ற முடியவில்லை. விசிறிகள் காலப் போக்கில் வேகம் குறைந்து இயங்குவதால், வெப்பம் வெளியாவதில் பிரச்னை ஏற்படுகிறது.

    பொதுவாக லேப்டாப்பில் ஹார்ட்வேர் பிரச்னை ஏற்பட இந்த வெப்பம் அடிப்படை காரணமாக உள்ளது. எனவே இந்த வெப்பத்தினை வெளியேற்றுவதிலும், அதனை குளிரவைப்பதிலும் கவனம் செலுத்தினால், பல பிரச்னைகள் ஏற்படுவதனை முன்கூட்டியே தடுக்கலாம்.

    விசிறிகள் சோதனை: லேப்டாப்பில் அதிக வெப்பம் உருவாகிறது என்று தெரிந்தால், உடனே கம்ப்யூட்டரைத் திறந்து, இயக்கத்தின் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து விசிறிகளும் சரியாக அதன் அதிக பட்ச வேகத்தில் இயங்குகின்றனவா எனச் சோதிக்க வேண்டும். பெரும்பாலும் இவற்றை நாம் திறந்து பார்க்க இயலாது.

    திறந்தால், நிறுவனங்கள் வாரண்டி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே விசிறிகள் இயக்கத்தினைக் காட்ட இணையத்தில் கிடைக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தி அறியலாம். இந்த சாப்ட்வேர் புரோகிராம் களை, லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமே, அதன் இணைய தளத்தில் கொண்டிருக்கலாம்.

    காற்று துளைகளின் சுத்தம்: வெப்பம் வெளியேறுவதற்காக, அமைக்கப்பட்டிருக் கும் காற்று துளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இவற்றில் தூசு படிந்து அடைத்துக் கொண்டிருந்தால், வெப்பம் விரைவாக வெளியேற்றப்பட மாட்டாது. எனவே சுத்தம் செய்வது அவசியம்.

    பயாஸ் சோதனை: நம் பயாஸ் செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதன் மூலம், வெப்பம் உருவாவதனை அறியலாம். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இதனை மாற்றலாம் என்பதற்கு, உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் தயரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும். சில நிறுவனங்கள், இந்த பயாஸ் அமைப்பினையும் அப்டேட் செய்து புரோகிராம்களை வெளியிட்டி ருப்பார்கள்.

    பொதுவான சில பழக்கவழக்கங்களையும் நாம் மேற்கொண்டால், வெப்பம் உருவாவதனைத் தடுக்கலாம். வெப்பமான, சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கக்கூடாது. அதே போல, மூடப்பட்ட கார், சிறிய அறை ஆகியவற்றில் இயக்கக் கூடாது. ரேடியேட்டர்கள், வெப்பம் வெளியேறும் இடங்கள் அருகே லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்திருக்கக்கூடாது.

    இந்த கம்ப்யூட்டரை லேப்டாப் என அழைத்தாலும், நம் தொடைகளின் மீது வைத்து இயக்குவது கூடாது. இதனால், வெப்பம் வெளியேறும் வழிகள் தடைபடும். நம் உடலையும் இந்த வெப்பம் தாக்கும். மெத்தைகள், துணிவிரிப்புகள் ஆகியவற்றின் மீது இவற்றை வைத்து இயக்குவதும் தவறு.

    இப்போது லேப்டாம் கம்ப்யூட்டர்களை வைத்து இயக்கவென, சிறிய ஸ்டாண்டுகள் விற்பனை செய்யப் படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தினால், நல்ல இடைவெளி கிடைப்பதனால், வெப்பம் வெளியேறுவது எளிதாகிறது. இந்த ஸ்டாண்டுகள் அலுமினியத்தினால் செய்யப்பட்டிருந்தால், வெப்பத்தினை அது எடுத்துக் கொள்ளும்.

    லேப்டாப் கம்ப்யூட்டரில் வெப்பம் உருவாவதனைத் தடுக்க முடியாது. எனவே வெப்பம் எளிதில் விரைவாக வெளியேற்றப்படும் வழிகளை நாம் நம் பழக்கத்தின் மூலம் தடுக்காமல் இயங்க வேண்டும். மேலும் கூடுதல் துணை சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத்தினை வெளியேற்றுவதனை விரைவுபடுத்தலாம். இந்த வழிகளை மேற்கொண்டால், வெப்பமானது லேப்டாப் கம்ப்யூட்டரின் பாகங்களைத் தாக்குவதனைத் தடுக்கலாம்.

    திரைப்பிரபலங்கள் பலரையும் கவர்ந்த அஜித்தின் நியூ லுக்!

    By: ram On: 21:58
  • Share The Gag
  • அஜித் படம் வருகிற நாட்கள் மட்டுமில்லை, அவர் ஸ்டில் வந்தாலே அன்று திருவிழா தான். அந்த வகையில் நேற்று கௌதம் மேனன் தற்போது அஜித்தை வைத்து இயக்கி கொண்டிருக்கும் படத்தின் சில போஸ்டர்கள் வெளிவந்தது.

    இப்போஸ்டர்கள் ரசிகர்களை மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரையும் கவர்ந்தது. அஜித்தின் நியூ லுக் தங்களை வெகுவாக கவர்ந்ததாக தயாநிதி அழகிரி, சாந்தனு, பாபி சிம்ஹா, நீது சந்திரா போன்ற பல பிரபலங்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தனர்.

    இதுவரை இப்படத்தின் மூன்று கெட்டப் வெளிவந்துள்ளது, இன்னும் ஒரு கெட்டப் படக்குழுவால் ரகசியம் காத்து வரப்படுகிறது.

    ஆண் டிரைவர்கள் மட்டுமே அதிக விபத்துக்குள்ளாகிறார்கள் ஆய்வில் தகவல் !!

    By: ram On: 20:47
  • Share The Gag
  • பெண் வாகன ஓட்டுநர்களை விட ஆண் வாகன ஓட்டுநர்களே அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். இதை நாம் கூறவில்லை. மேலைநாட்டில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

    கவனச் சிதைவு காரணமாக பெண் ஓட்டுநர்களைவிட ஆண் ஓட்டுநர்கள் இரண்டு மடங்கு விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். விபத்தைச் சந்தித்த ஆண்களில் 10 பேரில் ஒருவர், கவனச் சிதைவால் விபத்து ஏற்பட்டது என்று ஒத்துக்கொண்டிருக்கின்றார். ஆனால், 20 பெண்களில் ஒருவர்தான் கவனச் சிதைவால் விபத்தைச் சந்தித்திருக்கின்றார்.

    மேலும், வாகனத்தைச் செலுத்தும்போது கவனத்தை இழந்து ஏறக்குறைய விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டதாக மூன்றில் ஒரு பங்கு ஆண்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் ஐந்தில் ஒரு பங்கு பெண்களுக்குத்தான் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது.

    ஆண்களின் கவனத்தை அதிகமாகச் சிதைக்கும் விஷயம், கார் ஸ்டீரியோவை சரிசெய்வது. இதன் காரணமாகவே சாலையில் இருந்து பார்வையை விலக்க நேர்வதாக 76 சதவீத ஆண்கள் கூறியிருக்கின்றனர்.

    மூன்றில் இரண்டு பங்கு பேர், வாகனத்தைச் செலுத்தும்போது பானம் பருகுவது, சாப்பிடுவது போன்றவற்றால் கவனத்தை இழக்கின்றனர். ஆய்வில் பதில் தெரிவித்தவர்களில் பாதிப் பேர் சிடியை எடுப்பது, வைப்பதில் சாலையில் தடுமாறிவிடுவதாகக் கூறியிருக்கின்றனர். கால்வாசிக்கு மேற்பட்டோர், செல்போன் பேசுவதன் மூலம் பிரச்சினையைத் தேடிக்கொள்கின்றனர். வாகனத்தை ஓட்டும்போது எஸ்.எம்.எஸ். அனுப்புவது தங்கள் வழக்கம் என்று பலர் கூறியிருக்கின்றனர்.

    வாகனத்தை ஓட்டிக்கொண்டே வழித்தடப் படத்தைப் பார்ப்பது, ‘ஷேவிங்’ செய்வது, முத்தமிடுவது, செய்தித்தாளில் பார்வையை ஓட்டுவது போன்றவையும் ஆண்களுக்கு விபத்தை ஏற்படுத்துகின்றன.

    அஜித் தான் ரியல் சூப்பர் ஸ்டாரா? அருண் விஜய்

    By: ram On: 20:28
  • Share The Gag
  • தமிழ் திரை நட்சத்திரங்களில் அஜித்திற்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கும் அருண் விஜய் சமீபத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

    இதில் ‘அஜித் பற்றி எல்லோரும் சொல்வதை கேட்டுள்ளேன், ஆனால் முதன் முறையாக அவருடன் சேர்ந்து நடிக்கும் போது தான் தெரிகிறது, அவரின் எளிமை, பழகும் குணம் என அனைத்திலும் கவர்கிறார்.

    மேலும் எல்லோருக்கும் முன் உதாரணமாக இருக்கும் அஜித் தான் ரியல் சூப்பர் ஸ்டார்’ என்று தெரிவித்துள்ளார்.

    தொப்புளில் வளையம் போடும் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை !!

    By: ram On: 19:42
  • Share The Gag
  • நாகரீகம் என்ற பெயரில் பல வித்தியாசமான மாற்றங்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் நன்மையும் தீமையும் சரிசமமாக கலந்திருக்கிறது. சொல்லப்போனால், அவற்றில் தீமை தான் மேலோங்கி நிற்கிறது. அப்படி வளர்ந்து வரும் நாகரீகத்தில் ஒன்றாக விளங்குகிறது பாடி பியர்சிங் எனப்படும் உடம்பில் துளையிடுதல்.

    நம் சமூகத்தில் உடம்பில் துளையிடுதல் என்பது ஒரு முக்கிய நாகரீகமாகவும், பண்பாடாகவும் மாறி வருகிறது. எந்த ஒரு காரணத்திற்காக இருந்தாலும், உடம்பில் துளையிடுவது என்பது பெரிய முடிவாகும். உடம்பில் துளையிடுவதால் ஏற்படும் உடல்நல இடர்பாடுகள் என்னவென்று பார்ப்போம்…

    தொற்று என்பது உடம்பில் துளையிடுவதால் ஏற்படும் பொதுவான பிரச்சனை. இதில் கவனம் செலுத்தவில்லை என்றாலோ அல்லது உரிய சிகிச்சையை சரியான காலத்தில் எடுக்கவில்லை என்றாலோ, தழும்பு ஏற்படுவதுடன் இரத்தம் நஞ்சாகிவிடும். அதிலும் சரிவர கவனம் செலுத்தாவிட்டால் அசிங்கமான தழும்பை உண்டாக்கிவிடும்.

    குறிப்பாக தொற்றுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக ஒழுங்கில்லாமல் துளையிடுதல், துளையிட்டப் பின் சரியாக பராமரிக்காமல் போவது மற்றும் துளையிட்ட இடத்தில் பயன்படுத்தும் நகைகள் போன்றவை ஆகும்.

    உலோகங்கள் உடலில் படும்போது சரும அலர்ஜி ஏற்படுவதற்கு அந்த உலோகங்களே காரணியாக விளங்குகிறது. அதனால் உடம்பில் துளையிடும் சில வகை அணிகலன்களால், இவ்வகை அலர்ஜிகள் ஏற்படுவதுண்டு. மேலும் இத்தகைய அலர்ஜிகள் சுவாசப் பிரச்சனை, சொறி மற்றும் துளையிட்ட இடத்தில் வீக்கம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.

    சில நேரம் அலர்ஜி தீவிரமடைந்தால் அது அதிர்ச்சியை ஏற்படுத்தி மருத்துவமனையில் அனுமதிக்கச் செய்யும். ஒழுங்காக துளையிடவில்லை என்றாலோ அல்லது துளையிட்ட இடத்தில் குத்தப்படும் அணிகலன் சரியாக குத்தப்படவில்லை என்றாலோ நரம்பு சிதைவு ஏற்படும்.

    அதிலும் தவறான இடத்தில் துளையிட்டால், அங்குள்ள நரம்பையும் சேர்த்து துளையிட வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமல்லாது துளையிட்ட இடத்தைச் சுற்றியுள்ள இடங்களும் நிரந்தரமாக செத்துப்போகும். குறிப்பாக நாக்கில் துளையிடும் போது, நரம்புகள் பாதிப்புக்குள்ளாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

    முக்கியமாக துளையிடுபவர் வல்லுனராக இல்லாத போது தான், இத்தகைய பிரச்சனை ஏற்படும். துளையிடுவதில் வல்லுநர் இல்லாதவர் சுகாதாரமற்ற இடத்தில் துளையிட்டால் இரத்த சம்பந்த நோய்களான எச்.ஐ.வி. கிருமி, ஈரல் அழற்சி மற்றும் இதர நோய்களை ஏற்படுத்தும்.

    ‘வெண்நிலா வீடு’ அழகான குடும்பம் - திரைவிமர்சனம்..!

    By: ram On: 18:46
  • Share The Gag
  • கார்த்திக் (செந்தில்குமார்) ஒரு லேத் பட்டறையில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தேன்மொழி (விஜயலட்சுமி) தனது மாமா கார்த்திக்கை காதலித்து கரம்பிடித்தவள். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவள் பெயர் வெண்ணிலா.

    அளவான குடும்பம், அமைதியான வாழ்க்கை என மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இவர்களது வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு குடிவருகிறாள் இளவரசி.

    பெரிய செல்வந்தரின் மகளான இளவரசிக்கு திருமணம் ஆகியும் நீண்ட நாளாக குழந்தை இல்லாததால், தனிக்குடித்தனம் வைத்தால் குழந்தை பேறு உண்டாகும் என ஜோசியர் சொன்னதால் இந்த வீட்டில் குடியமர்த்துகிறார் அவளது அப்பா மோகன்வேலு(முத்துராமன்).

    அந்த வீட்டுக்கு குடிவந்ததில் இருந்து தேன்மொழிக்கும், இளவரசிக்கும் மோதல் இருந்து வருகிறது. இளவரசி செய்யும் அடாவடித்தனங்கள் தேன்மொழிக்கு அவள் மீது வெறுப்பை உருவாக்குகிறது.

    ஆனால், இளவரசியோ தேன்மொழியின் குணநலன்களை புரிந்துகொண்டு, அவளிடம் நட்பு வைத்துக் கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ஒருநாள் தேன்மொழிக்கு அநாவசியமாக போன் பேசி தொந்தரவு செய்யும் நபரை இளவரசி கண்டறிந்து அவனை தண்டிக்கிறாள். இதனால், தேன்மொழிக்கு இளவரசி மீது நல்ல மரியாதை உண்டாகிறது. இருவரும் நெருங்கிய நண்பர்களாகிறார்கள்.

    இந்நிலையில், செந்தில்குமார் முதலாளியின் மகளுக்கு திருமணம் வருகிறது. அவளது திருமணத்திற்கு குடும்பத்தோடு வரவேண்டும் என்று செந்தில்குமாருக்கு அழைப்பு வருகிறது. தன்னிடம் நகைகள் இல்லாதால் இளவரசியிடம் விலை உயர்ந்த நகை ஒன்றை இரவல் வாங்கி போட்டுக் கொண்டு கல்யாணத்துக்கு போகிறார் தேன்மொழி.

    கல்யாணத்துக்கு போய்விட்டு திரும்பி காரில் வரும் வேளையில் தேன்மொழியின் செல்போனை ஒருவர் எடுத்து வைத்திருப்பதாகவும், தானே நேரில் வந்து ஒப்படைப்பதாகவும் கார்த்திக்கின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வருகிறது.

    அதன்படி, நேரில் வந்து கொடுக்க வரும் அந்த நபர் திட்டம் போட்டு தேன்மொழியின் கழுத்தில் கிடக்கும் நகையை திருட பார்க்கிறார். செல்போனை கொடுக்க வந்த நபர் நடுவழியில் நின்றுகொண்டிருக்கும் கார்த்திக்கை தனியாக அழைத்து பேசிக் கொண்டிருக்கும் வேளையில், பைக்கில் வரும் மற்றொரு நபர் தேன்மொழியின் கழுத்தில் கிடந்த நகையை பிடுங்கிக் கொண்டு சென்றுவிடுகிறார்.

    அவனை பிடிக்க கார்த்திக் முயல்கிறார். ஆனால், அது முடியாமல் போகிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துப் போய் நிற்கிறார்கள்.

    நகை தொலைந்து போனதால் தேன்மொழி-இளவரசி நட்பு என்ன ஆயிற்று? இந்த நகையால் கார்த்திக்-தேன்மொழியின் வாழ்க்கை என்ன நிலைமைக்கு ஆளானது? என்பதை வெள்ளித்திரையில் காண்க.

    கார்த்திக் கதாபாத்திரத்தில் வரும் செந்தில்குமார், நடுத்தர வர்க்க குடும்பத்து கணவன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தனது மனைவியுடன் கொஞ்சிக் குலாவும் காட்சிகளில் நடிப்பில் யதார்த்தம் காட்டியிருக்கிறார். இறுதிக் காட்சியில் இவரது நடிப்பு பலே.

    விஜயலட்சுமி, அழகான குடும்ப பெண்ணாக மனதில் இடம் பிடிக்கிறார். நடிப்பும் அபாரம். கணவனிடம் செல்லமாக பேசும் இவரது பேச்சு நம்மை வெகுவாக ரசிக்க வைக்கிறது. நமது மனைவியும் இவளைப்போல் இருப்பாளா? என எல்லோரையும் ஏங்க வைத்திருக்கிறார்.

    இளவரசியாக வரும் சிருந்தா ஆசாப், வில்லத்தனம் கலந்த நடிப்பில் அசத்துகிறார். அடாவடி பெண்ணாக நடித்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதே நேரத்தில், விஜயலட்சுமியிடம் காட்டும் பாசத்திலும் நெஞ்சை தொடுகிறார்.

    இளவரசியின் அப்பாவாக வரும் முத்துராமன் வில்லன் வேடத்திற்கு பொருத்தமாக இருக்கிறார். ஆக்ரோஷமான பேச்சால் அனைவரையும் நடுநடுங்க வைக்கிறார். பிளாக் பாண்டி, டாடி எனக்கு ஒரு டவுட் குரூப் சரவணன், செந்தில் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

    தங்கத்தை மையமாக வைத்து அழகான குடும்ப சித்திரமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம். ஒரு குடும்ப பின்னணியில் தங்கத்தின் மீதான மக்களின் மோகத்தை இவ்வளவு அழகாகவும் எடுத்துச் சொல்ல முடியும் என்று நிரூபித்திருக்கிறார். அதே நேரத்தில் எல்லோரும் ரசிக்கும்படியாகவும் சொல்லியிருப்பது பலே.

    படத்தின் கதாபாத்திரங்கள் தேர்விலிருந்து, அனைத்து தொழில்நுட்பங்களையும் கவனமாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார். தன்ராஜ் மாணிக்கம் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் வெகுவாக கவர்கிறது. கண்ணனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘வெண்நிலா வீடு’ அழகான குடும்பம்

    சிறந்த Life Partner ரை தேர்ந்தெடுக்க வழிகள்.

    By: ram On: 18:02
  • Share The Gag
  • நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைத் திருமணம் என்ற பந்தத்தில் இணைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். உங்கள் வாழ்க்கையில் உங்களோடு இணைந்துக் கொள்ளப் போகும் ‘லைப் பார்ட்னர்’ அமைவதைப் பொறுத்தே உங்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.

    உங்களவர் எப்படிப்பட்டவராக இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறக்கும்? அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு மனதளவில் நீங்கள் எப்படியெல்லாம் தயாராக வேண்டும் என்பது பற்றி பார்க்கலாமா?

    * நான் திருமணத்திற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முற்றிலும் தயாராக இருக்கிறேன் என்ற எண்ணம் முதலில் உங்களுக்கு ஏற்பட வேண்டும். அந்த எண்ணம் ஏற்பட்ட பிறகே உங்களுக்கு வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்கு சம்மதிக்க வேண்டும்.

    * உங்களது வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், சம்பளம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றிய உங்களது விருப்பங்களில் தெளிவாக இருக்க வேண்டும்.

    * ஒருவருடைய கல்வி மற்றும் சம்பளம் இரண்டும்தான் தம்பதியரிடையே ஈகோ பிரச்சினை ஏற்படக் காரணமாகிறது. எனவே உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்ட கல்வித் தகுதி உடையவராய் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.

    * வரப்போகும் வாழ்க்கைத் துணையிடம் உள்ள குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், பொழுது போக்குகள் மற்றும் சிந்தனைகள் உங்கள் ரசனையுடன் ஒத்துப்போகுமா என்பதை கவனிக்கவேண்டியது முக்கியம்.

    * பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக இருந்தால், தங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையின் குடும்பப் பின்னணி, வரதட்சணை, அந்தஸ்து ஆகியவை கவனிக்கப்படுகிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி அவர் எப்படிப்பட்டவர், நமக்கு ஏற்ற துணையாக இருப்பாரா என்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். அப்படிப்பட்ட வாழ்க்கைதான் இனிமையாக இருக்கும்.

    * உங்களுக்குப் பிடித்த மாதிரி பார்ப்பதற்கு வசீகரமாக இல்லாவிட்டாலும், ‘பரவாயில்லை’ என்று சொல்லும் அளவிற்காவது பார்க்க வேண்டும்.

    * வாழ்க்கைத் துணை அழகாக இருந்து அவரிடம் நல்ல குணம் இல்லாவிட்டால் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. எனவே அழகை விட குணத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    * நீங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை முதலில் உங்கள் பெற்றோரிடம் தெரியப்படுத்துங்கள். பெற்றோர் உங்களுக்குப் பிடித்த மாதிரி தேர்ந்தெடுத்தால்தான் உங்கள் வாழ்க்கையில் எந்த மனக் கசப்பும் நேராது. வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.

    * என்னதான் இருந்தாலும் நீங்கள் 100 சதவீதம் எதிர்பார்ப்பது போன்ற வாழ்க்கைத் துணை கிடைப்பது கடினம். ஆதலால் நீங்கள் எதிர்பார்த்த அதிக பொருத்தங்களுடன் கூடிய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதுடன், அட்ஜஸ்ட் செய்யும் மனப் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    * நீங்கள் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதைத் திருமணத்திற்கு முன்பே உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அதனால் திருமணத்திற்குப் பிறகு எந்தக் குழப்பங்களும் ஏற்படாது. நாம் மனம் விட்டுப் பேசுவதில் முக்கியமான விஷயம், நம்மைப் பற்றிய எந்த விஷயத்தையும் மறைத்துவிடாமல் சொல்லிவிடும்போது பிளாஷ்பேக் திருப்பங்களுக்கு வாய்ப்பில்லாது போய்விடுகிறது.

    * உடை விஷயங்கள் சிலருக்குப் பிடிக்கும். சிலருக்குப் பிடிக்காது. உங்களது வாழ்க்கைத் துணை எந்த மாதிரியான உடை உடுத்த வேண்டும் என்று நினைப்பதைப் பற்றி முதலில் பேசுங்கள். உடை கலாச்சாரத்தை மாற்றுவதற்கு பெரும்பாலும் யாரும் முன்வருவதில்லை. ஆனால் உங்களது விருப்பத்தை முதலிலேயே சொல்லி விடுங்கள்.

    * பெற்றோர் அல்லது மற்றவர் நிர்பந்தத்திற்குப் பணிந்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.

    * திருமணம் வேண்டாம் என்று சொல்பவர்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். ஏனெனில் அவர்களுக்கு சொல்ல முடியாத பிரச்சினைகள், சில பலகீனங்கள் அல்லது திருமணத்தின் மீது தவறான நம்பிக்கைகள் இருக்கும். எனவே அவர்களிடம் மனம் விட்டுப் பேசி அவர்களது கஷ்டங்களை அறிந்துக் கொள்ளுங்கள். உங்களால் தீர்க்க முடியாவிட்டால் கவுன்சலிங் அழைத்துச் சென்று ஆலோசனை பெறுங்கள்.

    * திருமணத்திற்கு முன்பே உங்களது வாழ்க்கைத் துணையின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

    * உங்களது வாழ்க்கைத் துணை வேலைக்கு சென்று கொண்டிருந்தால், திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு செல்லலாமா, வேண்டாமா என்பதை முதலிலேயே தெரிவித்து விடுங்கள். இப்படி செய்வதால் திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

    * சிலர் அமைதியான சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு எப்பொழுதும் குறைசொல்லும் அல்லது கோபப்படுகின்ற வாழ்க்கைத் துணை அமைந்து விடுவார்கள். இது திருமணத்திற்குப் பிறகு நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    எனவே உங்கள் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்ட சுபாவம் உடையவர் என்பதை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் திருமணத்துக்கு சந்தோஷமாய் சம்மதம் சொல்லுங்கள்.

    யாவும் வசப்படும் - பதிக்கும் வெற்றித்தடம் - திரைவிமர்சனம்..!

    By: ram On: 17:21
  • Share The Gag
  • மண் என்ற முழு நீள படத்தை கொடுத்த இயக்குனர் புதியவன் ராசைய்யவின் அடுத்த படைப்பு யாவும் வசப்படும்.

    முழுக்க முழுக்க லண்டனில் வாழும் ஈழத்தமிழர்களால் உருவான இப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கரு என்னவென்ற பார்த்தோமானால் இன்றைய காலகட்டத்தில் பணத்துக்காக எந்த அளவு கடத்தல், கொள்ளை, போதை பொருள் என்று உலகம் முழுவதும் விஷ கிருமி போல பரவி யுள்ள சம்பவங்களைத்தான் அடிப்படையாக வைத்து அதில் சினிமாவுக்கு தேவையான எல்லா அம்சங்களும் சேர்த்து ஒரு கிரைம் த்ரில்லர் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

    என்ன கதை

    ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட நாச வேலைகளை பணக்கார வேஷத்தில் செய்யும் ஒரு வில்லன், அவனுடன் அடியாட்களாக வேலை செய்யும் ராம் மற்றும் திவா என்ற முக்கிய கதபாத்திரம். இவர்களுக்கு வில்லனிடம் இருந்து ஒரு பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அதாவது லோண்டில் வாழும் மிகப்பெரிய கோடிஸ்வரனின் பெண்ணை கடத்த வேண்டும் என்று, அதன் படி இவர்களும் அப்பெண்ணை கடத்தி ஒரு பங்களாவில் அடைத்து வைக்கின்றனர். அதன் பிறகு வழக்கம் போல் கடத்திய பெண்ணின் அப்பாவுக்கு போன் போட்டு உன் பொண்ணை கடத்திவிட்டோம் எங்களுக்கு 30 கோடி கொடுத்தால் விட்டு விடுவோம் என்ற மிரட்டுகின்றனர். அவரும் சம்மதிக்க திடிரென்று ஒரு மாஸ்டர் பிளான் போடுகின்றார் ராம் மற்றும் திவா. பேசாம பணத்த பாஸ்கிட்ட கொடுக்காம நாமே எடுத்துக்கொள்ளலாம் என்று கணக்கு போடுகின்றனர்.

    இந்த நேரத்தில் தான் படத்தில் ஒரு ட்விஸ்ட் , இரண்டு அடியாட்களில் ஒருவரான திவா வெளியே போகும் சமயத்தில், ராமை ஏமாற்றிவிட்டு தில்மி தப்பிக்க முயற்சிக்கிறார், அந்த நேரத்தில் தான் தில்மிக்கு முகமூடி அணிந்து தன்னை கடத்தியது தனது காதலன் ராம் என்பது தெரிய வருகிறது, என்ன செய்வது என்று ராம் தவிக்கும் போது திவாவை ஏமாற்றிவிட்டு பணத்துடன் நாம் இந்தியாவுக்கு சென்று விடலாம் என்று தில்மியிடம் ராம் சொல்லி மயக்குகிறான், ஆனால் அதை கேட்டுக்கொண்ட தில்மி, ராமிடம் இருந்து தப்பிக்கும் சமயத்தில் அந்த உண்மையை திவாவிடம் சொல்லி விடுகிறார்.

    இதை தெரிந்துவுடன் திவாக்கு கோபம் வர பணத்தை அள்ளி கொண்டு ராமை போட்டு தள்ளிடலாம் என்று திட்டமிடுகிறான், அதே நேரத்தில் திவாவிடம் இருந்து பணத்தை பறிக்க வேறு சிலரும் திட்டம் போட, இறுதியில் அந்த பணம் யார் கைக்கு போனது, ராமும், திவாவும் என்ன ஆனார்கள் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

    நடிகர் நடிகர்களின் பங்களிப்பு

    படத்தில் சொல்லும் படி எந்த ஒரு தெரிந்த முகமும் இல்லை என்றாலும் அந்த குறை இல்லாமல் நடித்துள்ளனர். புதுமுகங்களும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக திவாக நடித்திருக்கும் கதாபாத்திரம் தன்னுடைய முரட்டுத்தனமான நடிப்பில் படம் பார்ப்பவர்களை கூட மிரட்டுகிறார். நாயகி தில்மி, கொழுக் மொழுக் என்று மூன்று குஷ்புவை சேர்த்து செஞ்சது போல இருக்கிறார்.

    பலம்

    1.படத்தின் ஒளிப்பதிவு அக்ஷன் கதைக்கே உண்டான பாணியில் கேமரா கோணத்தை வைத்து பிரேமை அழகு படுத்துகிறார். அதுவும் லண்டனில் இதுவரை பார்க்காத தடங்களிலும் படம் படித்திருப்பது அருமை.

    2. சில இடங்களில் போர் அடிக்கிற மாதிரி தெரிந்தவுடன் அடுத்து விறுவிறுப்பான காட்சியை மாற்றி திரைக்கதையில் அசத்தியிருக்கிறார் இயக்குனர் புதியவன் ராசய்யா.

    பலவீனம்

    1. பின்னணி இசை மற்றும் பாடல்கள் சொல்லும் படி இல்லாதது கொஞ்சம் வருத்தம்.

    2. ராம் கதாபாத்திரம் அவ்வளவு இயல்பாக இல்லாமல் நடிப்பாகவே தெரிந்தது.

    ஆட்கடத்தல் பற்றி அவ்வளவு யதார்த்தமான மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்த இயக்குனர் புதியவன் ராசய்யாவுக்கு பாராட்டுக்கள்

    மொத்தத்தில் யாவும் வசப்படும் - பதிக்கும் வெற்றித்தடம்

    பேப்பர் கப்களில் டீ,காபி குடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்…!!!!

    By: ram On: 08:41
  • Share The Gag
  • ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் “கப்’களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, “கப்’கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.

    அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், “பேப்பர் கப்’களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் “கப்’கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
    இப்படி மெழுகு பூசப்பட்ட “கப்’களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, “கப்’பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.
    அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.

    “டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் “கப்’களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, “கப்’களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்…’ என்று கூறினார் டாக்டர்.

    அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்….

    எது தப்பு! சந்தானத்துக்கு நச் விளக்கம் கொடுத்த ரஜினி

    By: ram On: 08:04
  • Share The Gag
  • நடிகர் சந்தானம் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இந்த அனுபவம் பற்றி மனம் திறந்துள்ளார்.

    சூப்பர்ஸ்டாருடன் ஆன்மிகம் பத்தி பேசினா, நேரம் போறதே தெரியாது. மனசுக்குள்ள ரொம்ப நாளா சந்தேகமான விஷயங்களைப் பத்தி அவர்கிட்ட பேசுவேன். 'இதுக்கு இதுதான் தீர்வு, உபாயம்'னு எந்தக் கேள்விக்கும் லாஜிக்கலா சரியான பதிலைச் சொல்வார்.

    ஒரு தடவை, 'அசைவம் சாப்பிட்டா தப்பு, மது குடிச்சா தப்புனு சொல்றாங்களே... உண்மையில் தப்புன்னா என்னண்ணே?'னு கேட்டேன்.

    எதுவுமே வாழ்க்கையில் தப்பு இல்லை. நீ செஞ்சதை தப்பு பண்ணிட்டோமோனு நினைக்கிறீங்களா, அதுதான் உண்மையான தப்புனு சொன்னார்.

    நினைக்கிறதெல்லாம் தப்பாதான் இருக்குன்னு சொன்னேன். அப்ப நீ தப்பா தான் நினைக்கிறீன்னு சொல்லி சிரிச்சார்.