Monday, 1 September 2014

ஒல்லி பெல்லி! சாத்தியமா? உடான்ஸா? - எடை குறைய என்ன வழி?

By: ram On: 22:55
  • Share The Gag

  • 'மச்சி, ரெண்டு கிலோ எடையைக் குறைக்கிறதுக்கு... ஊரெல்லாம் தெருத் தெருவா ஓடுறேன்டா! அந்த டி.வி. புரோகிராம்ல 30, 40 கிலோனு எப்பிடிடா குறைச்சாங்க?' - விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில், நூறு நாட்களில் உடல் எடையை 40 கிலோ வரை குறைத்த ஒரு பெண்மணியைப் பார்த்து வந்த பொறாமைப் புலம்பல் இது. 'ஒல்லி பெல்லி’ நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் பலரின் கேள்வி இதுதான்!

    ஜிம்முக்குப் போகாமலேயே, உடல் எடையைக் குறைக்க மாத்திரைகளில் ஆரம்பித்து ரோப், எலக்ட்ரானிக் பெல்ட் என ஆசை வார்த்தை காட்டும் விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகம். ''ஆறேழு கிலோ எடையைக் குறைப்பதற்கே அல்லாடுபவர்கள் இருக்கும் நிலையில், மிகக் குறுகிய காலத்தில் எப்படி இவ்வளவு எடையைக் குறைக்க வைத்தீர்கள்? திடீரென அதிக எடையைச் சில மாதங்களிலேயே குறைப்பது ஆரோக்கியமானதுதானா?'' - ரியாலிட்டி ஷோவின் பயிற்சியாளரும், விளையாட்டு மருத்துவ நிபுணரான கண்ணன் புகழேந்தியிடம் கேட்டோம்.

    ''இதுபோன்ற போட்டிகளில் கலந்து கொள்பவர்கள், முழு ஈடுபாட்டுடன் காலை முதல் இரவு வரை பயிற்சியில் ஈடுபட்டதால்தான் குறைந்த நாட்களில் எடையைக் குறைத்தது சாத்தியமானது. மற்றவர்களால் இதையே ஒரு வேலையாக எடுத்துச் செய்ய முடியாது. அவர்கள் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதேகூடச் சிரமம். மேலும், வேலை, குடும்பம் எனப் பல காரணிகள் இருப்பதால், அவர்களால் உடனடியாக எடையைக் குறைக்க முடியாது. இத்தனை செயல்பாடுகளுக்கும் இடையில், உடனே எடை குறைய வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுவதும் தவறு.

    400 மீட்டர் கூட நடக்க முடியாதவர்களை ஒரு நாளைக்குச் சராசரியாக 10 கி.மீ வரை பயிற்சியில் நடக்கவைக்க முடியும். அதற்கு, வெறும் உடல்வலிமை மட்டுமில்லை... மனவலிமையும் தேவை. உடல் எடையைக் குறைக்க முயற்சியும், முறையான பயிற்சியும், சரியான உணவுப் பழக்கமும் போதும். இதுபோன்ற ரியாலிட்டி ஷோக்களைப் பார்த்து, ஓர் உத்வேகத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர, நான்கு நாட்கள் நடந்துவிட்டு, உடல் எடை உடனே குறையவில்லை என வீணாகப் புலம்புவதில் அர்த்தம் இல்லை.

    பொதுவாக உடல் எடை நமது உயரத்துக்குச் சரியாக இருக்கிறதா என்பதைப் பி.எம்.ஐ (ஙிவிமி) கொண்டு கணக்கிடுகிறார்கள். பி.எம்.ஐ அளவீடானது 30-க்கு மேல் இருப்பின், அவர்கள் ஒபிசிட்டி நோயின் தாக்கத்தில் இருக்கின்றனர் என்று அர்த்தம்.

    உடல் எடை அதிகமாக இருப்பவர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். சிறிதளவு எடை அதிகமாக உள்ளவர்கள், தொப்பை விழும் அளவுக்குப் பருமனானவர்கள், ஒபிசிட்டி நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இதில், ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நீரின் அளவு அதிகமாக இருக்கும். இவர்கள், தினமும் 1/2 கி.மீ தூரம்கூட நடக்க மாட்டார்கள். முறையாகத் தொடர்ந்து 1 - 2 கிலோ மீட்டர் நடந்தாலே, உடல் எடை பெருமளவு குறையும். மேலும், உடலில் உள்ள கொழுப்பு குறைவதற்குக் கடும் உடலுழைப்புத் தேவை. இவர்கள் உடற்பயிற்சி செய்யும்போது, உடலில் நீரின் அளவு எளிதில் குறைந்துவிடும். ஆனால், இது பி.எம்.ஐ 25 முதல் 30-க்குள் இருப்பவர்களுக்குப் பொருந்தாது. இவர்கள் ஒபிசிட்டி உள்ளவர்களைக் காட்டிலும் அதிக அளவு பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடையைக் குறைத்து பி.எம்.ஐ. 30-க்குள் கொண்டுவர வேண்டும். இப்படி, கடுமையான உடற்பயிற்சி செய்தால் மட்டுமே உடல் எடை மேலும் குறையும்.

    ஒவ்வொருவருக்கும், அவரவர் உடல் எடையின் அளவைப் பொறுத்து, செய்ய வேண்டிய உடற்பயிற்சியின் அளவும் மாறுபடும்.

    சிறப்பான சிந்தனைகள் பத்து!

    By: ram On: 22:13
  • Share The Gag
  • சிறப்பான சிந்தனைகள் பத்து!

    1. படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.
    2. மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
    3. உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.
    4. வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.
    5. பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.
    6. ஆசைகள் வளர வளர தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.
    7. எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.
    8. மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.
    9. கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.
    10. அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

    உடல் எடையை குறைக்க கரும்பு சாப்பிடுங்கள் .

    By: ram On: 21:58
  • Share The Gag

  • குண்டான உடலை குறைக்க ஆண்களும், பெண்களும் பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். நடை பயிற்சி, கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர். விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் போன்றவற்றையும் வாங்கிச் சாப்பிட்டு, எப்படியாவது உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர்.

    இப்போது, சிரமமே இல்லாத செலவே பிடிக்காத வழிமுறையை கண்டு பிடித்து, மருத்துவ வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின்
    முடிவுகள் வருமாறு:-

    குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
    பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும். பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது.
    இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ரசித்த உரை மொழிகள் சில!

    By: ram On: 20:55
  • Share The Gag
  • ரசித்த உரை மொழிகள் சில>>>

    1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்...

    2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

    ‎3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

    4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.அதற்கு என் நிழலே போதும்.

    5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்.

    6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

    7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்.

     ‎8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

    ‎9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

    10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.


    மூன்று என்ற சொல்லினிலே...

    By: ram On: 20:55
  • Share The Gag


  • மூன்று என்ற சொல்லினிலே...

    மிகக் கடினமானவை மூன்றுண்டு:
    1. இரகசியத்தை காப்பது.
    2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.
    3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.


    நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்:
    1. இதயத்தால் உணர்தல்.
    2. சொற்களால் தெரிவித்தல்.
    3. பதிலுக்கு உதவி செய்தல். 

    மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு:
    1. சென்றதை மறப்பது.
    2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
    3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.

     
    இழப்பு மூன்று வகையிலுண்டு:
    1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.
    2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.
    3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.

     
    உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்:
    1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.
    2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.
    3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.

    கமல் படத்தில் மோகன்லால் மகன்

    By: ram On: 20:17
  • Share The Gag

  • மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் மோகன்லால்.

    இவரது மகன் பிரணவ் எப்போது சினிமாவில் ஹீரோவாக களமிறங்குவார் என்ற கேள்வி, மலையாள மெகாஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதிலிருந்தே மோகன்லால் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

    இந்நிலையில் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மோகன்லால் நடித்த ‘சாகர் ஏலியாஸ் ஜாக்கி’ என்ற படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார் பிரணவ்.

    இப்படத்தை தொடர்ந்து பெரிய ஒரு இயக்குனர் மூலம் பிரணவ் ஹீரோவாக அறிமுகமாவார் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

    ஆனால், பிரணவ் இப்போது கமல்ஹாசன் நடிக்கும் ‘பாபநாசம்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

    மலையாள ‘திரிஷ்யம்’ படத்தின் ரீ-மேக் ஆன இப்படத்தை திரிஷ்யத்தை இயக்கிய ஜித்து ஜோசஃபே தமிழிலும் இயக்க, அவருக்கு உதவி இயக்குனராகி இருக்கிறார் பிரணவ்!

    ‘பாபநாசம்’ படத்தை மோகன்லாலின் மைத்துனரும், பிரணவின் தாய் மாமாவுமான சுரேஷ் பாலாஜி மற்றும் ராஜ்குமார் சேதுபதி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

    எனக்கு தீக்குளிக்கவும் ரசிகர்கள் உண்டு – பவர் ஸ்டார் அதிரடி

    By: ram On: 19:24
  • Share The Gag

  • பவர் ஸ்டார் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார்.

    பவர் ஸ்டார் என்றாலே அந்நிகழ்ச்சி எப்படி இருந்திருக்கும் என்று உங்களுக்கே புரிந்திருக்கும். நிகழ்ச்சிக்கு சென்றவர் சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி கல்யாணியை பார்த்து முத்தம் கேட்டுள்ளார்.

    அதோடு இல்லாமல் நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு ஓடிப்போகலாமா என்று கேட்டு அலறவைத்துள்ளார்.

    மேலும் பட வாய்ப்புகளை பற்றி பகிர்ந்து கொண்ட பவர் ஸ்டார், எனக்கு நிறைய வெறித்தனமாக ரசிகர்கள் இருக்கின்றனர். தீக்குளிக்கக் கூட தயாராக இருக்கின்றனர் என்றார்.

    ஆயுர்வேத முறைப்படி உடல் எடையை குறைக்க சில தகவல்கள்!

    By: ram On: 17:24
  • Share The Gag

  • ஆயுர்வேதம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. அதை யாராலும் மறுக்க முடியாது. ஆம் இந்தியாவின், பிறப்பிடம் தான் ஆயுர்வேதம். பல நோய்களை குணப்படுத்த ஆயுர்வேதம் பெரிதும் உதவுவதை நாம் அனைவரும் அறிவோம். இது மட்டுமல்லாமல் அதில் எண்ணிலடங்கா பயன்கள் உள்ளது. ஆயுர்வேதம் என்றால் நீண்ட காலம் வாழ்வதற்கான அறிவியல் என்பது நிதர்சனமான உண்மை. ஆயுர்வேத சிகிச்சைகள் உங்களை இயற்கைக்கு மிக அருகில் கொண்டு செல்லும். மேலும் ஆரோக்கியமான எளிய வாழ்க்கையையும் ஏற்படுத்தி கொடுக்கும். உடல் பருமன் என்பது வாழ்க்கை முறை நோயாக ஆயுர்வேதத்தில் கருதப்படுகிறது.

    ஆயுர்வேதத்தில் எந்த ஒரு குறுக்கு வழியும் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள். நல்ல அழகான வாழ்க்கை முறையில் வாழ்ந்திட கீழ்கூறிய ஆயுர்வேத டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.

    உண்ணுவதில் எளிமை: வாழ்வதற்காகவே உண்ண வேண்டும் என்ற தொடர் மொழியை இங்கே வலியுறுத்த விரும்புகிறோம். எளிமையான உணவுகள், குறைந்த எண்ணெயில் சமைத்த நற்பதமான உணவுகள் போன்றவைகளை உண்ண மக்களை அறிவுறுத்த வேண்டும். எந்த ஒரு டையட்டிலும் உண்ணக்கூடிய உணவின் அளவை தான் முதலில் மாற்ற வேண்டி வரும். டையட்டை மேற்கொள்பவர்கள் மனரீதியான கட்டுப்பாடுடன் இருந்தால் ஆரோக்கியமற்ற உணவை கண்டிப்பாக அவர்களால் கைவிட முடியும். அதனால் கஞ்சி, வேகவைத்த காய்கறிகள், காய்கறி சூப்கள் மற்றும் கோதுமையால் செய்த உணவுகளை உண்ண வேண்டும்.

    நொறுக்குத் தீனிகள்: வறுத்த, எண்ணெய் சத்துள்ள உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கேரளாவின் பாரம்பரிய அவித்த வாழைப்பழத்தை உங்கள் நொறுக்கு தீனிகளில் சேர்த்துக் கொள்ளலாம். அப்பளங்களை பொறித்து எடுக்காமல் லேசாக வறுத்தாலே போதுமானது.

    அதிக நார்ச்சத்துள்ள தானியங்கள்: வரகு சாதம் அல்லது அவித்த காய்கறிகளுடனான அதிக நார்ச்சத்துள்ள பார்லியை உண்ணலாம். இவைகளை அதிகமாக உட்கொண்டாலும் கூட தெவிட்டாது. இவைகளை உங்களின் மதிய உணவில் அல்லது இரவு உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் ஓட்ஸ் மற்றும் உடைத்த கடலையை சேர்த்துக் கொள்ளுங்கள். சந்தையில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கண்டிப்பாக உண்ணாதீர்கள்.

    இனிப்புகள் மற்றும் டெசர்ட்கள்: டீயில் சேர்க்கப்படும் சர்க்கரையை தவிர வேறு இனிப்புகளுக்கு இடம் கிடையாது. ஆனாலும் சர்க்கரையை இழந்த உணர்வை நீங்கள் பெற மாட்டீர்கள். எனவே கேழ்வரகை உணவில் சேர்த்து வந்தால், அவை உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை நிலையாக வைத்து இனிப்பின் மேல் இருக்கும் ஆர்வத்தை கட்டுப்படுத்தும்.

    புரதம் நிறைந்த உணவுகள்: சோயா, பலவித பருப்புகள், கொண்டைக்கடலை, கொள்ளு மற்றும் பச்சை பயிறு போன்ற உணவுகளில் இருந்து புரதச்சத்தை பெற்றிடுங்கள். அசைவ உணவு வகைகளுக்கு ஆயுர்வேதம் தடை போடுவதில்லை. ஆனால் ஹார்மோனால் உருவாக்கப்படும் மாமிச இனங்கள் என்றால் கண்டிப்பாக கூடாது. மீன் சேர்த்துக் கொள்ளலாம் � ஆனால் குழம்பில் வைத்த மீனே தவிர பொரித்த மீன் அல்ல.

    பானங்கள்: அடர்த்தியான தயிருக்கு பதிலாக மோரை பருகுங்கள். டீ மற்றும் காபி கூட பருகலாம். தினமும் 1500 மி.லி. அளவிலாவது இளஞ்சூடான தண்ணீரை பருகினால், உங்களை நீர்ச்சத்துடன் வைக்க உதவுவதோடு மட்டுமல்லாது, பசி வருவதையும் தாமதப்படுத்தும். வெதுவெதுப்பான நீர் நீண்ட நேரம் வயிற்றில் இருப்பதால் பசி உண்டாவதை தாமதப்படுத்தும்.

    உங்கள் விருப்ப உணவுகளை தவிர்த்தல்:நீங்கள் சாதம் சாப்பிடுபவராக இருந்தால், மதிய உணவின் போது கோதுமை தோசை அல்லது சப்பாத்திக்கு மாறுங்கள். அதனால் உண்ணும் அளவு குறையும். இதனை மாற்றி பின்பற்றினாலும் கூட அதுவும் உதவி புரியும்.

    கலோரிகளை எண்ணுதல்: கலோரிகளை எண்ணுவது மட்டும் முக்கியம் அல்ல. உண்ணும் உணவிலும் வாழ்க்கையிலும் நெறிமுறையை கடைப்பிடிப்பது அவசியம். உண்ணுவதில் மாறிய உணவு பழக்கங்களும், அணுகுமுறையும், உடல் எடையை குறைக்கவும், பராமரிக்கவும் பெரிதும் உதவும்.

    முக்கியமானவை: சூரிய உதயத்திற்கு முன் காலையில் வேகமாக எழுந்திருப்பது, பகலில் தூங்காமல் இருப்பது அல்லது இரவு நீண்ட நேரம் தொலைகாட்சி பார்க்காமல் இருப்பது போன்ற இதர வாழ்க்கை முறை விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த கொள்கைகளை ஒரு மாத காலம் கடைப்பிடித்தால், உடல் நல எடை குறைப்பிற்கு அது ஒரு பாதை வகிக்கும். மேலும் எளிய உணவுகள் மற்றும் உடல ரீதியான சுறுசுறுப்பான வாழ்க்கை முறை போன்றவைகளே ஆரோக்கியமாக இருப்பதற்கான ரகசியங்கள்.

    ஷங்கரின் ஐ படத்தில் ஓநாய் தோற்றத்தில் விக்ரம்

    By: ram On: 08:07
  • Share The Gag

  • டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக, நீண்ட நாட்களாக உரவாகி வரும் ஐ படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இப்படத்திற்காக தனது எடையைக் குறைத்தும், கூட்டியும் நடித்துள்ளார் விக்ரம். ஏற்கனவே, இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகமாக உள்ள நிலையில், தற்போது 50 வினாடிகள் ஓடக்கூடிய டீசர் மீடியாக்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது.

    அதில், உடல் முழுவதும் ரோமங்களுடன், பெரிய பற்கள் மற்றும் கொம்புகளுடன் ஓநாய் போன்ற உருவத்தில் தோன்றுகிறார் விக்ரம்.

    தவறான பாதையில் செல்லும் விளையாட்டு வீரனை குறித்து அறிவியல் பரிசோதனை செய்வது தான் ஐ படத்தின் கதையாம். இப்படத்தில் விக்ரம் அழகான வாலிபனாக மட்டுமின்றி விளையாட்டு வீரர் போன்ற உடல்கட்டுடன் தோற்றமளிக்கிறார். இதற்காக விக்ரம் மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்து உடல் எடையை கூட்டியும் குறைத்தும் உள்ளாராம்.

    சமீப காலமாக தான் பங்கேற்ற விழாக்களிலும் விக்ரம் அடையாளம் காண முடியாத, ஆர்ச்சயபட வைக்கும் தோற்றங்களிலேயே தலை காட்டி வந்தார். விக்ரமின் இந்த மாறுபட்ட தோற்றங்கள் டீசரில் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்த்த மீடியாக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாறாக கோரமான, அடையாளம் காண முடியாத முகம் மற்றும் விலங்குகளை போன்ற கால்களுடனும் விக்ரம் வரும் காட்சிகள் தான் டீசரில் வெளியிடப்பட்டது.

    இந்த டீசருக்காக டம்மியான இசை பின்னணியில் ஒலிக்க செய்யப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த பத்திரிக்கையாளர்கள் இப்படத்தில் ஹாலிவுட்டின் சூப்பர் ஹிட் படமான ஹல்க் படத்தின் சாயல் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது கூறி உள்ளனராம்.

    ஐடி கேர்ள் அனுஷ்கா, ஹோம்லி த்ரிஷா! - தல 55 கேரக்டர் ரகசியங்கள்

    By: ram On: 07:49
  • Share The Gag

  • கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் , அனுஷ்கா, த்ரிஷா நடிக்கும் 'தல 55' படத்தின் புதிய படங்கள் நேற்று வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    படத்தில் த்ரிஷா , அஜித் இருவருக்கும் ரொமான்ஸ் காட்சிகள் உள்ளனவா என்பதற்கு கௌதம் மேனன் பதில் சொல்லவில்லை.

    '' இதுவரை பார்க்காத கேரக்டரில் த்ரிஷாவைப் பார்க்கலாம். இந்தப் படத்தில் த்ரிஷா இன்னும் புதிதாகத் தெரிவார்.  அஜித்திற்கும், த்ரிஷாவிற்குமான காட்சிகள் ரசிக்கும் வகையில் அருமையாக இருக்கும். த்ரிஷா தான் கதைக்கரு'' என்கிறார் கௌதம்.

    ஐடி வேலையில் இருக்கும் மாடர்ன்  கேர்ள் கேரக்டரில் நடிக்கிறாராம் அனுஷ்கா.

    அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக வட இந்தியாவின் எல்லைகளில், ராணுவ தளங்களில் உள்ள லொக்கேஷன்களின் சிறப்பு அனுமதி பெற படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சென்றிருக்கிறாராம்.

    உடல் பருமனாக இருக்கிறதா? கவலையை விடுங்க

    By: ram On: 07:23
  • Share The Gag

  • உடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம்.

    1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும், உடம்பு இளைக்கும்.

    2. இஞ்சி துவையல், பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

    3. இஞ்சி சாற்றில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

    4. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும், சுறுசுறுப்பு ஏற்படும்.

    5. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும்.

    6. காலையில் இஞ்சி சாற்றில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்தம், தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும், உடல் இளமை பெறும்.

    உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

    By: ram On: 01:33
  • Share The Gag
  • அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன. மேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால், பலரும் வாயில் கை வைத்து 'அப்படியா!!!' என்று ஆச்சரியமாக கேட்பார்கள். சொன்னால் கூட நம்பமாட்டார்கள். உதாரணமாக, உலகிலேயே வெடிகுண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான்பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல் கூட உயிருடன் இருக்கும் என்று சொன்னால் ஆச்சரியம் தானே.

    இது போன்று நிறைய விசித்திரமான சில உண்மைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் வேறு ஏதாவது இயற்கையில் உள்ள சில விசித்திரமான உண்மைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, அந்த விசித்திரமான உண்மைகளைப் பார்ப்போமா!!!


    லிப்ஸ்டிக்

    பெண்களுக்கு லிப்ஸ்டிக் என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் அந்த லிப்ஸ்டிக்கை போடும் முன், அது எதனால் ஆனது என்று சற்று யோசியுங்கள். ஏனெனில் லிப்ஸ்டிக்கில் மீன் செதில்கள் உள்ளன.

    ஹெட்போன்
    தொடர்ச்சியாக விருப்பமான பாடல்களை ஹெட்போனில் கேட்கிறீர்களா? அவ்வாறு ஒரு மணிநேரம் பாட்டு கேட்டால், காதுகளில் பாக்டீரியாவானது 700 மடங்கு அதிகரிக்கும்.

    இறால்

    கடல் உணவுகளில் இறால் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் அடுத்த முறை அதன் தலையை சாப்பிடும் போது, அதன் இதயத்தை சாப்பிடும் உணர்வைப் பெறுவீர்கள். ஏனெனில் இறாலுக்கு இதயமானது அங்கு தான் உள்ளது.

    நாக்கு
    எப்படி கைவிரலில் உள்ள ரேகைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறதோ, அதேப் போன்று உதடுகளின் ரேகைகளும்.

    பட்டாம்பூச்சி

    இந்த அழகான பட்டாம்பூச்சி, பூக்களில் உள்ள தேனின் சுவையை வாயால் தான் சுவைக்கிறது என்று நினைத்தால், அது தான் தவறு. ஏனெனில் உண்மையில் பட்டாம்பூச்சி தேனின் சுவையை அதன் கால்களில் தான் சுவைக்கிறது.

    யானை

    பாலூட்டிகளிலேயே யானையின் பிரசவ காலம் தான் அதிகம். அதுவும் 645 நாட்கள், யானையானது தன் கருவை சுமக்கும்.
     

    ஆங்கில மொழி

    ஆங்கில மொழியில் உள்ள ரைம்ஸ்களில் மாதம், ஆரஞ்சு, ஊதா மற்றும் சில்வர் போன்ற வார்த்தைகளே வராது என்ற உண்மை தெரியுமா?


    நெருப்புக்கோழி

    உலகிலேயே மிகவும் பெரிய பறவையான நெருப்புக்கோழியின் மூளையை விட, அதன் கண்கள் பெரியது என்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒரு உண்மை.

    புகைப்பிடித்தல்
    இப்போது சொல்லப்போகும் உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது என்னவெனில், சிகரெட்டை பற்ற வைக்கும் லைட்டரானது, தீக்குச்சிக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.

    முழங்கை ட்ரிக்

    கைகளை எவ்வளவு தான் அங்கும் இங்கும் அசைக்க முடிந்தாலும், முழங்கையை மட்டும் எவராலும் நாக்கால் தொட முடியாது. இப்போது அதை நிச்சயம் முயற்சிப்பீர்கள் பாருங்களேன்.

    சிலந்தி

    உலகில் எத்தனையே ஃபோபியாக்களைப் பார்த்திருப்போம். ஆனால் இன்றும் சிலந்தியின் மீதுள்ள பயத்தாலேயே உயிர் போகும் வாய்ப்பு உள்ளது.

    தும்மல்

    சொன்னால் நம்பமாட்டீர்கள், மிகவும் கடுமையாக தும்மினால் விலா எலும்புகளில் முறிவு ஏற்படும். மேலும் இவ்வாறு திடீரென்று கடுமையாக தும்பும் போது, சில நேரங்களில் தலை அல்லது கழுத்தில் உள்ள இரத்த நாளங்கள் சிதைவடைந்து இறப்பை சந்திக்கவும் கூடும். ஆகவே இந்த மாதிரியான கடுமையான தும்மல் வரும் சூழ்நிலையில், கண்களை திறந்து தும்மினால், இத்தகைய அபாயத்தில் இருந்து விடுபடலாம்.


    பிறப்பு
    குழந்தையாக இருந்து வளர வளர, உடலின் கண்கள் மட்டும் பிறக்கும் போது இருந்த அளவில் தான் இருக்கம். ஆனால் மூக்கு மற்றும் காதுகள் வளர்ச்சியடையும் என்பது தெரியுமா?
     

    கம்ப்யூட்டர்
    கம்ப்யூட்டர் கீ போட்டின், ஒரே வரிசையில் 'typewriter'என்னும் மிகவும் நீளமான வார்த்தையை டைப் செய்யலாம்.
     

    முதலை

    பொதுவாக கீழ் தாடை இறங்கி தான் வாயானது திறக்கப்படும். ஆனால் முதலைக்கு மட்டும் தான், மேல் தாடை தூக்கி வாய் திறக்கப்படும்.


    கரப்பான்பூச்சி

    வீட்டில் பெரும் தொல்லையைக் கொடுக்கும் கரப்பான்பூச்சி, தலை இல்லாமல், 9 நாட்கள் உயிருடன் வாழும் தன்மை கொண்டது. எனவே வீட்டில் கரப்பான்பூச்சி அடித்து கொல்லும் போது, கவனமாக அடித்துக் கொல்லுங்கள்.


    வெங்காயம்

    யாருக்குமே வெங்காயம் வெட்டுவது என்பது பிடிக்காது. ஏனெனில் அது தேவையில்லாமல் அழ வைக்கும். ஆனால் அவ்வாறு வெங்காயத்தை வெட்டும் போது கண்ணீர் வரக்கூடாது என்றால், வாயில் சூயிங் கம் போட்டுக் கொண்டு வெட்டினால், உண்மையில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை தவிர்க்கலாம்.


    தூசிப்படிந்த வீடு

    வீட்டில் அடிக்கடி தூசி படிகிறதா? அப்படியெனில் அதற்கு காரணம், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் தான். அவை தான் வீட்டில் படிந்து, வீட்டை அடிக்கடி தூசியடைய வைக்கின்றன.


    கர்ப்பமான மீன்

    வீட்டில் தங்கமீன் கர்ப்பமாக இருந்தால், அதனை 'ட்விட்' (twit) என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, 'கர்ப்பமான தங்கமீன்' என்று சொல்லக்கூடாது.

    சத்தான மாவிலே அத்தனையும் செய்யலாம் செம ருசியாக!

    By: ram On: 01:32
  • Share The Gag
  • சத்துமாவு தயார் செய்ய… 


    தானியங்கள் அனைத்தும் ஒரே அளவு எடுத்துக்கொள்ளவும். கம்பு, கேப்பை (கேழ்வரகு), வெள்ளைச் சோளம், தினை, கோதுமை, புழுங்கலரிசி, பச்சரிசி சிறு தானியங்கள் அனைத்தையும் தனித்தனியாக மண் நீக்கி, கழுவி, வெயிலில் உலர்த்தி, வறுத்து ஆற வைத்து, ஒன்றாகக் கலந்து மில்லில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் பொட்டுக்கடலை, நிலக்கடலையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இந்த மாவு சத்துமாவு கஞ்சிக்கு மட்டும் பயன்படுத்த என்றால், இதனுடன் நாலுக்கு ஒரு பங்கு என முந்திரி, பாதாம் பருப்புகளும், வாசனைக்குத் தேவையெனில் சிறிது ஏலக்காயும் சேர்க்கலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள மற்ற வகை பதார்த்தங்கள் செய்ய மு.பருப்பு, பா.பருப்பு, ஏலக்காய் சேர்க்க வேண்டியதில்லை.

    1. சத்துமாவு கஞ்சி 



    என்னென்ன தேவை?

    சத்துமாவு, பனங்கற்கண்டு அல்லது வெல்லம், பால்.
    எப்படிச் செய்வது?

    சத்துமாவில், தூசி நீக்கிய வெல்லம் அல்லது பனங்கற்கண்டு தேவையான அளவு சேர்த்து, மாவு அளவில் 4 மடங்கு நீர் சேர்த்துக் கிளறவும். நீர்க்க இருந்தது கஞ்சி போல கெட்டியாகும் போது, தேவையான பால் விட்டு லேசாக கிளறி இறக்கவும். ஹார்லிக்ஸ் போல சூடாகக் குடிக்கலாம்.

    * கூல் கஞ்சி: ஆற வைத்து ஃபிரிட்ஜில் வைத்தும் கூல் கஞ்சியாக ஸ்பூனில் எடுத்தும் சாப்பிடலாம்!

    2. சத்துமாவு உருண்டை 

    என்னென்ன தேவை?

    சத்துமாவு, வெல்லம், நெய் அல்லது நல்லெண்ணெய், ஏலக்காய் தூள் சிறிது.
    எப்படிச் செய்வது?

    இதை அடுப்பில் வைக்க வேண்டியதில்லை. மாவை வறுத்து அரைத்திருப்பதால் அப்படியே சாப்பிடலாம். பச்சை வாடை தெரியாது.
    வெல்லத்தில் நீர்விட்டு தூசு எடுத்துவிட்டு சத்து மாவு, ஏலக்காய் தூள் சேர்க்கவும். நன்றாக கெட்டியாகப் பிசைந்து சிறிதளவு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து உருண்டை பிடிக்கவும்.

    3. புட்டு

    என்னென்ன தேவை?

    சத்துமாவு, தேய்காய்த் துருவல், லேசாக வறுத்த வெள்ளை எள்.
    எப்படிச் செய்வது?

    சிறிது வெந்நீரை லேசாக மாவில் தெளித்து உதிரியாக பிசறிக்கொள்ளவும். வெள்ளை எள்ளை லேசாக வறுத்துக் கொள்ளவும். இட்லி தட்டில் வெந்நீர் விட்டு உதிரியாகப் பிசைந்து வைத்த மாவை வைக்கவும். தேங்காய்த் துருவலையும், வறுத்த எள்ளையும் மாவின் மேல் போட்டு வேக வைக்கவும்.

    இறந்தும் வாழ்கிறார்கள் பொதுநலவாதிகள்..!

    By: ram On: 01:31
  • Share The Gag

  • உறவுகள் மட்டுமல்ல
     ஊரும் மரணத்திற்கு அழுதால்
     வாழ்வாங்கு வாழ்ந்துள்ளார் !
    -
    —————–
    -
    இறப்பு இல்லை
     இறந்தும் வாழ்கிறார்கள்
     பொதுநலவாதிகள் !
    -
    ——————
    -
    வராது நோய்
     பசித்த பின்
     புசித்தால் !
    -
    ———————
    -
    உச்சரிக்க வேண்டாம்
     முன்னேற்றத்தின் எதிரிகள்
     முடியாது தெரியாது நடக்காது !
    -
    ———————-
     -
    நாளை என்று
     நாளைத் தள்ளிட
     நாள் உன்னைத் தள்ளும் !
    -
    ——————
    -
    உடலை உருக்கும்
     உருவமில்லா நோய்
     கவலை !
    -
    ——————–
    -பெறுவதை விட
     கொடுப்பதே இன்பம்
     பொதுநலம் !
    பெறுவதை விட
     கொடுப்பதே இன்பம்
     பொதுநலம் !
    -

    உலகில் உள்ள சில விசித்திரமான அடிமைத்தனங்கள்!!!

    By: ram On: 01:30
  • Share The Gag
  • உலகில் உள்ளோர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அடிமைத்தனங்கள் இருக்கும். அதில் அடிமைத்தனம் என்று சொல்லும் போமு, பெரும்பாலும் அனைவரது நினைவுக்கும் வருவது புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், வீடியோ கேம்ஸ் விளையாடுதல் போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் உலகில் இன்னும் சில விசித்திரமான, அதிசயப்படக்கூடிய வகையில் சில அடிமைத்தனங்களும் உள்ளன.

    அவற்றில் சிலவற்றைக் கேட்டால், அருவெறுப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கும். ஆனால் அவற்றையும் மக்கள் அன்றாடம் மேற்கொள்கின்றனர். மேலும் அத்தகைய அடிமைத்தனத்தால், இத்தனை நாட்கள் உயிர் வாழ்கின்றனரா என்று சற்று யோசித்தால், ஆச்சரியப்படக்கூடிய வகையில் தான் இருக்கும்.

    இப்போது அவற்றில் அந்த மாதிரியான சில விசித்திரமான அடிமைத்தனங்களைப் பற்றி கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து பாருங்களேன்...

    சிறுநீர் அடிமை

    கேர்ரி என்பவருக்கு சிறுநீரின் சுவை மிகவும் பிடித்துவிட்டது. எனவே அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக, தனது சொந்த சிறுநீரில் சுமார் 900 கேலன்களை குடித்துள்ளார்.

    கார் அடிமை

    அனைவருக்குமே கார் என்றால் மிகவும் பிடிக்கும். மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கார் பிடிக்கும். அந்த வகையில் நதானியேல் என்பவர், தனது சிவப்பு நிற 1998 மான்டே கார்லோ என்ற காருக்கு சேஸ் என்று பெயரிட்டு, தனது வாழ்க்கையின் அன்பு கிடைத்துவிட்டது என்று அதனுடன் வாழ்கிறார். மேலும் அவர் அந்த கார் வாங்கிய தினத்தை அதற்கான பிறந்தநாளாக கருதி, அதற்கு பரிசுகளை வாங்கி மகிழ்வார்.
     
    பூனை அடிமை

    43 வயது பெண்மணியான லிசா என்பவர், தனது செல்லப்பிராணியான பூனையின் மயிர் சுவைக்கு அடிமையாக உள்ளார். மேலும் இவர் தனது சொந்த பூனையின் மயிரை மட்டுமின்றி, எந்த ஒரு பூனையின் மயிரையும் சாப்பிடுவார்.

    இரத்த அடிமை

    உண்மையிலேயே இரத்தக்காட்டேரியைப் பார்த்திருக்கிறீர்களா? ஆம், இரத்தத்திற்கு அடிமையாக உள்ளவர்கள் உண்டு. அதிலும் 29 வயதான மிச்செல் என்னும் பெண், மனித இரத்தம் மற்றும் பன்றியின் இரத்தத்தை கடந்த 15 ஆண்டுகளாக குடித்து வருகிறார்.

    அழுக்கு அடிமை


    இதுவும் வித்தியாசமான ஒரு அடிமைத்தனம் தான். அதிலும் ஹெய்டி சேரிகளில் வாழும் மக்கள், தினமும் அழுக்குகளை தண்ணீரில் கலந்து குடித்து வருகிறார்.

    இறுதிச்சடங்கு அடிமை

    என் புரியவில்லையா? சிலருக்கு மரண நிகழ்ச்சியில் பங்கேற்கும் பழக்கம் இருக்கும். அதில் 42 வயதான லூயிஸ் ஸ்குவாரிஸி என்பவர், கடந்த 20 ஆண்டுகளாக, அவர் வசிக்கும் பகுதியில் நடக்கும் அனைத்து இறுதிச்சடங்கிலும் தவறாமல் கலந்து கொள்கிறார். மேலும் இந்த மாதிரியான விருப்பம் உள்ளவர்களும் இவ்வுலகில் உண்டு

    ஐஸ் அடிமை

    ஐஸ் கட்டிகளை சாப்பிடும் பழக்கம் சிலருக்கு உண்டு. அதிலும் ஐஸ் கட்டிகளை இடைவெளியே இல்லாமல் சிலர் மென்று சாப்பிடுவார்கள். இவ்வாறு இதற்கு அடிமையாவதற்கு காரணம், உடலில் இரும்புச்சத்து அளவுக்கு குறைவாக இருப்பது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    காஸ்மெட்டிக் சர்ஜரி அடிமை

    உலகில் மில்லியன் கணக்கில் மக்கள் காஸ்மெட்டிக் சர்ஜரி செய்து கொள்வார்கள். அதே சமயம், சில மில்லியன் மக்கள் அந்த காஸ்மெட்டிக் சர்ஜரிக்கு அடிமையாக இருக்கிறார்கள். உதாரணமாக, இதில் ஒரு பிரபலமான அடிமை என்று சொன்னால் ஜாய்ஸ்லின் வில்டென்ஸ்டீன் என்பவர், காஸ்மெட்டிக் சர்ஜரிக்காக ஒரு வருடத்திற்கு 4,000,000 டாலர்கள் செலவழித்துள்ளார்.

    டாய்லெட் பேப்பர் அடிமை

    சிலருக்கு டாய்லெட் பேப்பரின் வாசனை மற்றும் சுவை மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அதிலும் இத்தகைய பழக்கமானது சிறு வயதில் இருந்து தான் ஆரம்பமாகும்.

    டேனிங் அடிமை

    பெரும்பாலான மக்கள் கடற்கரை ஓரங்களில் செய்யப்படும் டேனிங்கிற்கு அடிமையாக இருப்பார்கள். இந்த அடிமைக்கு டேனோரேக்ஸியா என்று பெயர்.

    உடலில் துளையிடுதல்...


    தற்போதுள்ள மக்கள் ஃபேஷன் என்ற பெயரில், உடலில் வலியை ஏற்படுத்தக்கூடிய விதவிதமான டாட்டூக்கள் மற்றும் தொப்புள் வளையம், நாக்குகளில் வளையம் போன்றவற்றிற்கு அடிமையாக உள்ளனர்.

    சமூக வலைதளங்கள்

    சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, அனைவரது மத்தியிலும் இருக்கும் ஒருவிதமான அடிமைத்தனம் தான் சமூக வலைதளங்களில் உலாவுதல். அதிலும் ஃபேஸ் புக், டுவிட்டர் போன்றவற்றில் இருப்பது மிகவும் பிரபலமானது.

    முடியை பிடுங்குதல்...

    உலகில் 11 மில்லியன் மக்கள், முடியின் நுனியில் உள்ள வெடிப்புக்களைப் பிடுங்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.

    டிடர்ஜெண்ட் அடிமை

    எப்போதாவது டிடர்ஜெண்ட்டை சுவைத்துள்ளீர்களா? பொதுவாக டிடர்ஜெண்ட்டுகளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். ஆனால், 19 வயதான டெம்பஸ்ட் என்பவர், டிடர்ஜெண்ட்டின் சுவைக்கு அடிமையாகியுள்ளார்.

    கண்ணாடி டம்ளர்கள்

    ஜோஷ் என்பவருக்கும் கண்ணாடி டம்ளர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். உடனே ஒயின் குடிப்பதற்கு என்று நினைக்காதீர்கள். கண்ணாடி டம்ளர்களை சாப்பிடுவதற்கு மிகவும் பிடிக்குமாம். மேலும் அவர், கடந்த நான்கு ஆண்டுகளில் 100 மேற்பட்ட கண்ணாடி டம்ளர்களையும், 250 பல்ப்புக்களையும் சாப்பிட்டிருப்பதாக சொல்கிறார்.

    மலமிளக்கும் மாத்திரை (Laxative)

    இந்த மாத்திரையானது 15 வயதான கிம்பர்லி என்னும் பெண்ணுக்கு சாக்லெட் போன்றது. அதிலும் ஒருநாளைக்கு 100 மாத்திரைகளை சாப்பிடுவார். இதனால் அவர் இரத்தப்போக்குடன் கூடிய அல்சர் மற்றும் அதிகப்படியான ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    கற்கள்
    44 வயதான தெரேசா என்னும் பெண், கற்களின் சுவையானது பிடித்துவிட்டது. இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக கற்களை சாப்பிட்டு வந்திருக்கிறார். இதனால் அவரது பற்கள் உடைந்து போய், கடுமையான வயிற்று வலிக்கு ஆளானாலும், கற்கள் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவில்லை.

    நெயில் பாலிஷ்
    நெயில் பாலிஷை நகங்களுக்கு போடும் அடிமைத்தனம் இருக்கிறது என்று சொன்னால், நம்பலாம். ஆனால் 32 வயதான ஜேமிக்கு, நெயில் பாலிஷின் வாசனை மற்றும் சுவை பிடித்து விட்டது. இதனால் ஒரு நாளைக்கு 6 பாட்டில் நெயில் பாலிஷை குடித்து வருகிறார்.