Sunday, 3 August 2014

இருவேறு கெட்டப்புகளில் அஜீத்

By: ram On: 22:49
  • Share The Gag

  •  கௌதம் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் குறித்த தகவல்களை ரகசியமாக பாதுகாக்கிறது படக்குழு. அஜீத் நடிக்கிறார், அனுஷ்கா, த்ரிஷா நடிக்கிறார்கள் என்பதற்கு மேல் எந்தத் தகவலும் பெயரவில்லை.

    லிங்கா படத்தில் அனுஷ்கா பிஸியாக இருந்த நேரத்தில் த்ரிஷா, அஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த காட்சிகளின் போது வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் இல்லாமல் சாதாரண கருப்புநிற ஹேர் ஸ்டைலுடன் அஜீத் நடித்தார். த்ரிஷாவுடனான அவரது காட்சிகள் படத்தின் பிளாஷ்பேக்கில் வருவதாக கூறப்படுகிறது.

    அதேநேரம் அனுஷ்காவுடனான காட்சிகளில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜீத் தோன்றுகிறார். ஆரம்பத்தில் அனுஷ்காவுடன் நடித்த காட்சிகளில் அப்படிதான் அஜீத் காட்சியளித்தார். ஆக, இந்தப் படத்தில் அஜீத்துக்கு இரு கெட்டப்புகள் என்பது உறுதியாகியிருக்கிறது.

    கௌதமின் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் இசையமைக்க தாமரை பாடல்களை எழுதுகிறார்.

    அழும் குழந்தையை சமாளிக்கும் முறை..?

    By: ram On: 21:10
  • Share The Gag

  • பொதுவாக பெண்கள் திருமணமாகி கருத்தரித்து குழந்தை பெற்ற பின் அக்குழந்தையை பாதுகாப்போடு வளர்ப்பதில் பெரும் சிரமங்களை  சந்திக்கின்றனர். வீட்டில் பெரியவர்கள் பாட்டி, தாத்தா போன்ற அனுபவசாலிகள் இருந்தால் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு கவலை இல்லை.  அப்படி பெரியவர்கள் இல்லாத வீடுகளில் குழந்தைகளை வளர்ப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. குழந்தைகள் காரணமே இல்லாமல் திடீரென பெரும்  அலறலுடன் அழும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

    சாதாரணமாக ஏதேனும் பிரச்னை என்றால் தான் குழந்தை அழும். சிறிய குழந்தைகளுக்கு பசி ஏற்பட்டால் அழும். மேலும் புதுவிதமான பிடிக்காத  உணவை கொடுத்தாலும் அழும். அந்நேரங்களில் தாய்ப்பால் கொடுப்பது நல்லது. பசி இல்லாவிட்டாலும் உறிஞ்சுவது அக்குழந்தைக்கு ஆறுதல்  அளிக்கும். சில சமயம் பெற்றோர் கண்ணில் படாத நேரங்களிலும் குழந்தைகள் அழும்.

    அப்போது குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சினால் அழுகையை நிறுத்தி விடும். இறுக்கும் துணிகள், மிகவும் உஷ்ணமாக்கும், மிகவும்  குளிர்ச்சியான துணிகள் அணிவதால் ஏற்படும் உணர்வால் அழும். மேலும் பல் முளைத்தல் போன்ற அசெளகரியங்கள் ஏற்படும் போதெல்லாம் கூட  அழலாம். இப்பிரச்னையை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.கால்களை உதைத்து உதைத்து உரக்க அழுதால் குழந்தைக்கு மலப்பையில் ஏற்பட்ட  பிடிப்பினால் வயிற்று வலி உள்ளது என்று அர்த்தம்.

    சாதாரணமாக காய்ச்சல் உள்ள குழந்தையின் அழுகை சத்தம் குறைவாக இருக்கும். அரற்றும். வலியின் காரணம் தெரிந்தால் சரி செய்து குழந்தையை  தேற்ற வேண்டும். இல்லையென்றால் மருத்துவரை அணுக வேண்டும். கால்களை உதைத்து அழும்போது அடிவயிற்று வலி இருக்கிறது என்று  அர்த்தம். இதற்கு நேராக மேல் நோக்கி சில நொடிகள் பிடிப்பது பிரச்னையை தீர்க்கும். சிவந்த, பிசுபிசுப்பான கண்களாக இருந்தால் கண் நோய்  ஏற்பட்டதாக கருதலாம்.

    இதற்கு கண்களை வெந்நீரால் சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகள் எப்போதாவது மலம் கழிக்கும். கெட்டியாக, சிரமப்பட்டு போனால் அதற்கு  மலச்சிக்கல் நோய் தொற்றியுள்ளது என்பதை உணர வேண்டும். இதற்கு பாலூட்டுவதும், ஆகாரமும் குறைவாக உள்ளதா? என்பதை சரி பார்க்க  வேண்டும். கூடுதல் திரவ ஆகாரங்கள், பழச்சாறு கொடுக்கலாம்.

    இளகிய, நீராக மலம் போனால் சீத பேதி ஏற்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம். இதற்கு நிறைய திரவ பதார்த்தங்களை கொடுக்க வேண்டும்.  ஓ.ஆர்.எஸ். மற்றும் தொடர்ந்து வழக்கமான ஆகாரம் கொடுக்க வேண்டும். தொடைகள் மற்றும் பின்புறம் சிவந்திருந்தாலும் நேப்பி ரேஷ் வந்துள்ளதை  அறியலாம். இதற்கு நேப்பியை அடிக்கடி மாற்ற வேண்டும். குழந்தையை சுத்தமாக, உலர்வாக வைத்திருப்பது அவசியமாகும்.

    பின்புறத்திற்கு நல்ல காற்றோட்டம் தேவையாகும். தலையில் மஞ்சள் செதில்கள் உருவாகி பொடுகால் குழந்தைகள் அழலாம். இதற்கு ஒரு  வாரத்திற்கு தினமும் குழந்தையின் தலைமுடிக்கு ஷாம்பூ போட்டு அல சினால் பொடுகு குணமாகும். இவைகள் மூலம் குழந்தைகள் என்ன  காரணத்திற்காக அழுகிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வைத்தியம் செய்வது குழந்தைகள் அழுகையை நிறுத்த வழி செய்யும்.

    "ஏசி'யால் நேர்ந்த அவலம்..! அவசியம் படிக்கவும்..!

    By: ram On: 19:27
  • Share The Gag

  • என் தோழியின் ஆறு வயது குழந்தைக்கு, தோலில் அடிக்கடி அரிப்பு பிரச்னை இருந்தது. தோழியும், குழந்தையின் பள்ளிக்கு சென்று பார்த்தும், அவளால் காரணத்தை கண்டறிய முடியவில்லை. எத்தனையோ மருத்துவர்களிடம் சென்றும், தொடர்கதையாக இருந்தது. கோவில்களில் பரிகாரங்கள் கூட செய்து பார்த்தாள். இப்போது, குழந்தை கோடை விடுமுறையில், வீட்டில் இருந்த போது அரிப்பு நின்றிருந்தது. தோழிக்கு, அப்போது தான் குழந்தையின் பிரச்னை புரிந்தது.

    குழந்தை படிக்கும் பள்ளியின் வகுப்பில் தினமும், தொடர்ந்து சில மணி நேரம், "ஏசி' போடப்படுவது வழக்கம், அந்த, "ஏசி' குளிர்ச்சிதான் குழந்தையின் அரிப்புக்கு காரணமாகியுள்ளது. வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளின் தோலில், வியர்வை துளைகள் அடைபட்டு, கழிவுகள் வெளியேற முடியாமல், அரிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சில பள்ளிகள், அட்மிஷனை அதிகரிக்கும் நோக்கில், "ஏசி' வகுப்பறையை சிறப்பம்சங்களாக விளம்பரப்படுத்தி வருகின்றன. குழந்தைகளுக்கு ஆடம்பர வசதிகள் வேண்டாம்; ஆரோக்கிய உடல்நலம் தான் வேண்டும்.

    அனுஷ்காவை தீவிரமாக நேசிக்கும் லிங்குசாமி!

    By: ram On: 17:40
  • Share The Gag

  • இயக்குனர் லிங்குசாமி, அனுஷ்காவின் தீவிர ரசிகர் என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. சமீபத்தில் நடந்த அஞ்சான் பாடல் வெளியீட்டு விழாவில் அதனை அவரே தன் வாயால் ஒத்துக்கொண்டார்.

    ரொமான்டிக் பாடல்களை கேட்கும் போது எனக்கு அனுஷ்கா ஞாபகம் தான் வரும் என்று கூறினார்.

    தெலுங்கில் சிக்கந்தர் என்ற பெயரில் வெளியாகும் அஞ்சான், பாடல்கள் இரு தினங்களுக்கு முன்பு தான் பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டது. விழாவில் நாகார்ஜுனா, ராஜமௌலி என பல தெலுங்கு சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

    விழாவில் பேசிய சூர்யா, தான் ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க விரும்புவதாகவும், அவர் இப்போது அனுஷ்காவை வைத்து இயக்கி கொண்டிருக்கும் "மஹாபலி" படத்தில், ஏதாவது ஒரு கதாபாத்திரம் இருந்தால் தன்னை அதில் நடிக்க வைக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

    இடையில் பேசிய லிங்குசாமி, அவர் அனுஷ்காவின் தீவிர ரசிகர் என்றும், தன்னை அனுஷ்காவுடன் குறைந்தபட்சம் ஒரு சீனிலாவது நடிக்க வைக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

    ஆயில் புல்லிங் என்றால் என்ன ?

    By: ram On: 17:22
  • Share The Gag

  •          ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

    இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.

    ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி குணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய்கள் 191 பேருக்கு சரியானது.

    தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக சர்வேயில் தெரிவித்திருந்தனர்.

    நீண்ட ஆயுளோடு வாழ ஆயில் புல்லிங் செய்யுங்க...

    நல்லெண்ணெய்யைக் கொண்டு சமையல் செய்தால் உடலுக்கு மிகவும் நல்லது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அத்தகைய நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இத்தகைய நல்லெண்ணெய்யில் வாயைக் கொப்பளிப்பது ‘ஆயில் புல்லிங்' என்று கூறப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நோய்களும் குணமாகின்றன.

    இத்தகைய ஆயில் புல்லிங்கை விடியற்காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், பல் துலக்கியதும் சுத்தமான நல்லெண்ணெயை இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து கொப்பளிக்கவும். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெய்யின் தன்மை இருக்கும். பின்னர் நீரினால் வாயையும், பற்களையும் நன்கு கழுவ வேண்டும். பிறகு 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் இதனை நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். மூன்று முறையும் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.

    ஆயில் புல்லிங் எதற்கெல்லாம் நல்லது?

    மூட்டு வலி, முழங்கால் வலி, இருமல் மற்றும் சளி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு, குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்துகிறது. மேலும் தலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. அதிலும் ஒற்றைத் தலைவலியானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை. நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள், கல்லீரல், நுரையீரல் நோய், புற்று நோய், பக்கவாதம், நரம்பு சம்பந்தமான நோய்களையும் கட்டுப்படுத்துவதாக மருத்துவர்களில் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

    மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு...?

    By: ram On: 12:34
  • Share The Gag

  • உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு….?

    நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து

    நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு

    நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி

    மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி

    மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்

    மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்

    மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம்

    மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர்

    இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு

    வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை

    வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம்

    நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம்

    கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்

    இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்

    தலை – பேராசை, பொறாமை குணம்

    தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை

    தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்

    தொப்புள் – ஆடம்பரம், படாடோபம்

    வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை

    அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள்

    இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்

    வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை

    மிருகி முத்திரையின் பயன் தெரியுமா உங்களுக்கு....?

    By: ram On: 10:34
  • Share The Gag

  • இம்முத்திரை வயிற்றுக்கு நேராகச் செய்யும்போது மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரக சக்கரங்கள் தூண்டப்படும், நெஞ்சிற்கு நேராக செய்யும் போது அனாகதம்,விசுத்தி சக்கரங்களும்,நெற்றிக்கு நேராகச் செய்யும்போது ஆக்ஞா சக்கரமும், தலைக்கு மேல் வைத்து செய்யும் போது சகஸ்ரார சக்கரமும் தூண்டப்பட்டு, பல்வேறு விதமான பலன்களைத் தரும்.

    கோபம் குறையும், டென்ஷன் நீங்கி, மன அமைதி ஏற்படும். தற்கொலை செய்யும் எண்ணம்,பயம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நல்ல நினைவாற்றல் ஏற்படும், காக்காய் வலிப்பு, சளியால் ஏற்படும் தலைவலி, பல்வலி நீங்கும். மிகவும் ரகசியமாக வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த முத்திரை இது.

    செய்முறை :

    நடுவிரல், மோதிர விரலை மடக்கி, கட்டை விரலை அதன் முதல் ரேகையில் படும்படி வைக்கவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கும்படி வைக்கவும்.

    கொழுப்பை குறைக்கும் சூரியமுத்ரா பயிற்சி..! எளிமையானது..!

    By: ram On: 09:57
  • Share The Gag

  • இந்த பயிற்சி செய்வதால் நம் உடலில் தேவையற்ற கொழுப்பை கொஞ்ச கொஞ்சமாக குறைக்கலாம்.

    செய்யும் முறை:

    மோதிர விரலை மடக்கி வையுங்கள் அதன்மீது பெருவிரலை வையுங்கள். மற்ற மூன்று விரல்களையும்  நிமிர்ந்த நிலையில் செங்குத்தாக வைத்துக் கொள்ளுங்கள். இதை தொடர்ந்து 10-15 நிமிடங்கள் தினமும் செய்யலாம்.

    அதிக குளிர் தாங்க முடியாத நிலை மற்றும் அடிக்கடி நடுக்கம் ஏற்படுபவர்களுக்கு இந்த முத்ரா உதவியாக இருக்கும். வலுமான வளர்சிதை மாற்றம், அதிக வெப்ப நிலை, அல்சர், எண்ணெய் சருமம், முகப்பரு உள்ளவர்கள் சூர்யா முத்ரா பயிற்சி செய்ய கூடாது.

    நரம்புகளை சுத்தம் செய்யும் சித்தாசனம்.... உங்களுக்காக..!

    By: ram On: 08:42
  • Share The Gag

  • நமது உடலில் உள்ள 72000 நாடி நரம்புகளை சுத்தம் செய்யும் எளிதான ஆசனம் இது.

    செய்முறை :

    முதலில் தரையில் அமருங்கள். பின்னர் இடது காலை மடித்து வலது கணுக்காலில் படும்படி மடித்து அமருங்கள். அடுத்தது வலது காலை மடித்து இடது தொடை மீது படும்படி செய்யுங்கள்.

    இரு கைகளையும் சின் முத்திரை தாங்கி கால் முட்டிகள் மீது வைத்து மூச்சை நிதானமாக இழுத்து விட வேண்டும். இவ்வாறு இந்த ஆசனத்தில் 20 நிமிடம் அமர வேண்டும். பிறகு கைகளை சமநிலைக்கு கொண்டு வந்து பின்னர் நிதானமாக  ஒவ்வொரு காலாக பிரித்து நிமிர்த்தி அமர்ந்த பின் எழ வேண்டும்.

    பயன்கள் :

    இந்த ஆசனத்தை செய்வதால் மனம் அமைதி அடையும். ரத்த ஒட்டம் சீராகும். பின்புறம் மற்றும் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் குறையும். மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.