கல்யாண மோதிரம்' ஏன் நான்காவது விரலில் மட்டும் சூடப்படுகின்றது?
இதற்கு சீனாவில் ஒரு அருமையான விளக்கம் உள்ளது.
பெருவிரல் - நம் பெற்றோர்களை குறிப்பது.
ஆள்காட்டி விரல் - நம் உடன்பிறப்புகளை குறிப்பது.
நடுவிரல் - நம்மை குறிப்பது.
மோதிர விரல் - நம் வாழ்க்கை துணையை குறிப்பது.
சிறுவிரல் - நம் வாரிசுகளை குறிப்பது.
முதலில் இரு உள்ளங்கைகளை முகம் நோக்கி விரித்து கொள்ளுங்கள்.
இரண்டு நடு விரல்களையும் (நம்மை குறிப்பது) கீழ் நோக்கி வளைத்து நகமும் நகமும் தொட்டு கொள்ளும்படி இறுக்கமாக வைத்து கொள்ளுங்கள்.
உள்ளங்கையை அப்படியே மூடுவது போல் வைத்து மற்ற நான்கு விரல்களும் முனையோடு முனை தொடும்படி வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது பெரு விரல்களை (பெற்றோர்கள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் பெற்றோர்கள் நம்முடன் காலத்தின் விளையாட்டு காரணம் கடைசி வரை இருக்க மாட்டார்கள்.
இப்போது பெரு விரல்களை இணைத்து கொள்ளுங்கள். ஆள்காட்டி விரல்களை (உடன் பிறப்புகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் உடன் பிறந்தவர்கள் ஒரு வயது வந்தவுடன் அவரவர் வாழ்க்கையை தனியாக அமைத்துக்கொண்டு போய் விடுவர்.
ஆள்காட்டி விரல்களை இணைத்து கொள்ளுங்கள். சுண்டு விரல்களை (நம் குழந்தைகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் நம் குழந்தைகள் வளர்ந்து பெரிதாகி, கல்யாணம், என்று நம்மை விட்டு பிரிந்து விடுவர்.
கடைசியாக, சுண்டு விரல்களை சேர்த்து கொண்டு, மோதிர விரல்களை (வாழ்க்கைத்துணை) பிரித்து பாருங்கள். ம்ம்... பிரித்து பாருங்கள். என்ன ஆச்சர்யமாக இருக்கின்றதா ம்ம் ....ம்ம்.....ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
முடியாது.
ஏனெனில் வாழ்க்கைத்துணை (மனைவி/கணவன்) மட்டுமே இடையில் வந்தாலும் இறுதி வரை என்றுமே கூட இருப்பது.