Sunday, 10 August 2014

விஜய் வீட்டை மாணவர்கள் முற்றுகை? அதிர்ச்சியில் திரையுலகம்!

By: ram On: 22:14
  • Share The Gag

  • சிறிதாக ஆரம்பித்த பிரச்சனை தற்போது ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. கத்தி படத்தின் தயாரிப்பாளரை பற்றி யாரோ வதந்திகளை கிளப்பிவிட, படக்குழுவிற்கு பெரும் தலைவலியாக அமைந்துவிட்டது.

    இப்படத்தை ரிலிஸ் செய்யவிட மாட்டோம் என சில மாணவர்கள் அமைப்புகள் கூறி வந்த நிலையில். தற்போது மேலும் அவர்கள் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்களாம்.

    அது என்னவென்றால் அனைவரும் விஜய்யின் நீலாங்கரை வீட்டை முற்றுகையிட்டு தங்கள் எதிர்ப்பை காட்டப்போகிறார்களாம்.

    மேலும் இது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், எப்போது வேண்டுமானாலும் முற்றுகையிடுவோம் என கூறி வருகிறார்கள் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    இதை சற்றும் எதிர்பார்க்காத படக்குழு மட்டுமில்லாமல் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

    எப்பேர்ப்பட்ட தலைவலியும் குறைந்துவிடும்! கை வைத்தியம்..!!

    By: ram On: 21:34
  • Share The Gag

  • தலைவலி

    அதிமதுரம், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும். இரண்டும் நாட்டு மருந்துக் கடையில் பொடியாகக் கிடைக்கும். இரண்டையும் கலந்து எடுத்துக்கொள்ளவும். இந்தப் பொடியைத் தேனுடனோ, வெந்நீரிலோ கலந்து சாப்பிட்டால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் குறைந்துவிடும்.

    வயிற்றுப் பிரட்டலுக்கு (நாஸியா)

    1 பிடி கறிவேப்பிலை, அதன் தண்டு, அரை ஸ்பூன் மிளகு, 1 டேபிள்ஸ்பூன் ஓமம். இவற்றைத் தனித்தனியாக வறுத்து, உப்பு சேர்த்துப் பொடி செய்துவைக்கவும். வயிறு சம்பந்தப்பட்ட எல்லாவற்றுக்கும் இது நல்லது. வயிற்றுப் பிரட்டல் இருந்தால், மோரில் கலந்து சாப்பிடவும், வயிற்று வலிக்குச் சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடவும்.

    மூட்டுவலி

    கால் முட்டி, கணுக்கால், கைகளில் வீக்கம் இருந்தால் அரிசி களைந்த நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதைச் சூடுபடுத்தி 1 பிடி கல்உப்பு போட்டு, வீக்கம் இருக்கும் இடத்தில் விடவும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் வீக்கம் சரியாகிவிடும்.

    நரம்புத் தளர்ச்சி

    நரம்புத் தளர்ச்சி இருந்தால் முருங்கைக் கீரையை 1 பிடி எடுத்து, நன்றாகச் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். அதனுடன் வேப்பிலைக் கொழுந்தைக் கொஞ்சம் எடுத்து 2 டம்ளர் நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்ததும், எடுத்து ஆற வைத்து அடுத்த நாள் காலையில் குடிக்கவும். அத்திப் பழமும் சேர்த்துக்கொண்டால், அதுவும் நல்லது.

    நகச்சுத்தி

    பச்சரிசி சாதத்தைச் சூடாக எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள், கால் ஸ்பூன் சுண்ணாம்பு ஆகியவற்றைச் சேர்த்து உடல் பொறுக்கக்கூடிய சூட்டில் நகத்தில் வைத்து நன்றாகக் கட்டிவிடவும். இப்படிச் செய்தால் நகச்சுத்தி பழுத்து உடைந்துவிடும்.

    பி.பி., சர்க்கரை நோய்க்கு

    சர்க்கரை நோய் வருவதைத் தவிர்க்க, நெல்லிக்காயின் கொட்டை, நாவல்பழக் கொட்டை பொடிகளை எடுத்து, 1 டம்ளர் நீரில் 1 ஸ்பூன் பொடியைப் போட்டுக் குடிக்கவும். இரண்டு பொடிகளும் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்.

    “ஆண்மை சோதனை” செய்வது எப்படி?

    By: ram On: 19:38
  • Share The Gag

  • ஆணுக்கு அவருடைய விந்துக்களில் உயிரணுக்களின் எண்ணிக்கை எந்த அளவு இருக்கிறது என்பதை ஆணின் விந்து சாம்பிள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்புவார்கள்.

    அதில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை வைத்து அவருக்கு ஆண்மை பரிசோதனை என்று தவறாகப் புரிந்துகொண்டு இருக்கிறார்கள். இது ஆண்மை பரிசோதனை இல்லை. சொல்லப்போனால் ஆண்மை பரிசோதனை என்ற ஒன்றே நடத்த முடியாது.

    ஆண்மை சோதனைக்கு பீனைல் டாப்லர் (Penile Doppler) என்று பெயர். இந்த சோதனையின்போது ஆண் உறுப்பில் ஒரு இன்ஜக்ஷன் போடப்படும். அப்படி ஊசிபோட்டதும் ரத்த நரம்புகளில் ரத்தம் பீறிட்டுச் செல்லும்.

    இதனால் ஆண் உறுப்பு விறைப்புத் தன்மைக்கு மாறும். ஒருவேளை ஆண் உறுப்புக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், ஊசி போட்டாலும் ஆண் உறுப்பு விறைப்புத் தன்மை அடையாது.

    அப்படி விறைப்புத் தன்மை அடையவில்லை என்றால், அவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். இதுதான் இப்போது நடக்கும் ஆண்மை சோதனையாக இருக்கிறது.

    ஆனால், அவருக்கு உடம்பு சரியாக இருக்கிறதா என்பதை வேண்டுமானால் இந்தச் சோதனையை வைத்துச் சொல்லலாமே தவிர அவரை ஆண்மை இல்லாதவர் என்று முடிவு செய்துவிட முடியாது

    கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?

    By: ram On: 19:14
  • Share The Gag

  • கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?! கூந்தல் நீளமா... அடர்த்தியா... கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்...

    * நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.

    * முடி எல்லோருக்கும் அடர்த்தியாக வளரும் என்று சொல்லமுடியாது. இது பரம்பரையாக வருகின்ற சொத்து என்பதுதான் உண்மை. அதேபோல்தான் வழுக்கை விழுவதும், அதைப் புரிந்து கொண்டால் கவலைப்படுவதனால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம்.

    * அழுகின தேங்காயைத் தூக்கி எறியாமல் சிறிது சுடு நீருடன் அரைத்துத் தலையில் தடவி ஊறவைக்கவும். பிறகு நன்றாக 'மசாஜ்' செய்யவும். மயிர்க்கால்கள் வலுப்பெற சரியான வழி இது.

    * இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போயே போச்சு.

    * சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும்.

    * தேங்காயைத் தண்ணீ­ர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.

    * நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.

    * விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.

    * கூந்தல் வறண்டு இருந்தால ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.

    மாரடைப்பு வராமல் இருக்க சில வழிகள்...!

    By: ram On: 18:25
  • Share The Gag

  • நீரிழிவு நோய் உடையவர்கள் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது நல்லது.

    * சரியான சர்க்கரையின் அளவு: சாப்பிடுவதற்கு முன்பு: 70-லிருந்து 110 மி.கி./ டெ.லி வரை சாப்பிட்ட இரண்டு மணிகளுக்குப் பிறகு: 100-லிருந்து 140 மி.கி./ டெ.லி. வரை.

    * அதிக எடை உள்ளவராயின் உடல் எடையை கட்டுக்குள் வைத்தல் நல்லது.

    * கொழுப்பு சத்தின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். மொத்த கொழுப்பின் அளவு 200-க்கும் குறைவாக இருப்பது நல்லது. கெட்ட கொழுப்பின் அளவு 130-ம் குறைவாக இருப்பது நல்லது. நல்ல கொழுப்பின் அளவு 35-க்கு மேல் இருப்பது நல்லது.

    * புகைப்பிடித்தலை அறவே நிறுத்தி விட வேண்டும். புகைப்பதை விடுவதுடன் மற்றவர் விடும் புகையை சுவாசிப்பதையும் தவிர்த்தல் வேண்டும்.

    * மன அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். மன அழுத்தத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் சிலவற்றை அதாவது யோகா, தியானம், இசை, சிரிப்பு பயிற்சி மற்றும் நண்பர்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    * தினமும் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சிகளை மேற்கொள்வது சிறந்தது. இன்றைய குழந்தைகள் கணினி, தொலைக்காட்சி பெட்டி முன் அமரும் நேரத்தை விட விளையாடும் நேரம் மிக மிகக்குறைவு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட செய்ய வேண்டும்.

    சிறார்கள் கொழு கொழு என்று இருப்பது நல்லதல்ல. தினமும் குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உடல் பயிற்சி மற்றும் வேகமான நடை பயிற்சிகளை (அல்லது மெதுவாக ஓடுதல், நீந்துதல், மிதிவண்டி பயிற்சி) மேற்கொள்ள வேண்டும்.

    * சமச்சீரான, நல்ல ஆரோக்கியமான உணவு முறைகள் தேவை. உணவை மருந்தைபோல் சாப்பிட்டால் பின்னாளில் மருந்தை உணவாக சாப்பிட வேண்டியது இல்லை.

    * கொழுப்பு குறைந்த, உப்பு குறைந்த, எண்ணை குறைந்த, பழங்கள் நிறைந்த, பச்சை காய்கறிகள் உணவே ஆரோக்கியமானது.

    * மஞ்சள் கரு இல்லாத முட்டை, வேகவைத்த மீன், தோல் உரித்த கோழி அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம்.மேலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    குரங்காட்டி ஆகிறார் தனுஷ்?

    By: ram On: 17:39
  • Share The Gag

  • தனுஷ் தன் எதார்த்த நடிப்பால் கோலிவுட் தாண்டி பாலிவுட் வரை கவர்ந்துவிட்டார். தற்போது அனேகன், ஷமிதாப் படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்க அடுத்து என்ன படம் நடிப்பார் என்று பலர் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

    வெற்றிமாறன் அல்லது பாலஜி மோகன் படத்தில் நடிப்பார் என்று சொல்லிவந்த நிலையில், குக்கூ இயக்குனர் ராஜுமுருகன் இயக்கதில் ஒரு படம் நடிக்க போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    எழுத்தாளர் ராம் திருவுடையான் எழுதிய குரங்காட்டி நாவலை திரைப்படமாக்காலாம் என்று யோசித்து வருகிறார்களாம்.

    ஜில்லா படத்தில் என்னை ஒதுக்கிவிட்டார்கள்! மனோகர் வருத்தம்!

    By: ram On: 10:36
  • Share The Gag

  • தன் குரலாலும், உடல் மேனரிசத்தாலும் பலரை கவர்ந்தவர் மனோகர். இவரை பலருக்கும் ஒரு காமெடி நடிகராக தான் அனைவருக்கும் தெரியும், ஆனால் நமக்கு தெரியாமல் இவருக்கு பல முகங்கள் உள்ளது.

    மனோகர் சென்னையில் உள்ள ராயபுரத்தில் தான் வசித்து வருகிறார், காமெடி நடிகர் சந்தானமும் இவரும் பள்ளி தோழர்களாம், சினிமாவின் மீது கொண்ட காதலால் தனது வங்கி வேலையை கூட தற்போது விடப்போகிறாராம்.

    மேலும் இவர் விஜய் நடித்த ஜில்லா படத்தில் நிறைய காட்சிகள் நடித்தாராம், ஆனால் படத்தின் நீளத்தை காரணம் காட்டி இவர் வரும் காட்சிகளை கட் செய்துவிட்டார்கள் என வருத்தத்துடன் தெரிவித்தார்.

    சிவாஜியின் சாதனையை முறியடித்தது அஞ்சான்!

    By: ram On: 10:11
  • Share The Gag

  • தமிழ் சினிமாவில் தன் சாதனையை தானே முறியடிப்பவர் ரஜினிகாந்த். ஆனால் தற்போது இவரின் சாதனையை இளம் நடிகரான சூர்யா முறியடித்துள்ளார்.

    ரஜினி நடித்த சிவாஜி திரைப்படம் சென்னையில் 18 திரையரங்குகளில் ரிலிஸ் ஆகின, தற்போது சூர்யா நடித்த அஞ்சான் படம் 37 திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

    மேலும் படத்தின் முன்பதிவு வெளிவந்த 2 மணி நேரத்தில் 5000 டிக்கெட் விற்று சாதனை படைத்துள்ளது.

    மென்மையான சருமத்துக்கு உதவும் சீனி...!

    By: ram On: 09:41
  • Share The Gag

  • முகத்தில் ஆலிவ் ஆயிலை நன்கு பரவலாக தடவிக் கொள்ளவும். சீனியை வாய் அகன்ற பாத்திரத்தில் கொட்டி, விரல்களை ஈரப்படுத்தி சீனியில் தோய்த்து, முகத்தில் வைக்கவும். இதே போல் ஐந்து அல்லது ஆறு முறை சீனில் ஈரப்படுத்திய விரல்களைத் தோய்த்து முகம் முழுவதும் சீனி பரவும்படி செய்யவும்.

    இது சரும துவாரங்களை நன்கு சுத்தப்படுத்துவதோடு முக வீக்கத்தையும் தணிக்கும். மேலும், சருமத்தின் எண்ணெய்ப் பசையை நீக்கும் போது, சருமத்தின் பளபளப்புக் குறையாமல் இருப்பதற்கு ஆயில் உதவி செய்கிறது. நான்கு அல்லது ஐந்து லவங்கத் துண்டுகளை நன்றாக வெந்நீரில் ஊற வைத்து, அத்துடன் ஒரு பிடி துளசி இலைகளை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    அதை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் ஊறவைத்து, குளிர்ந்த நீரில் முகத்தை சுத்தம் செய்யவும். இவை இரண்டுக்கும் உள்ள மருத்துவ குணத்தால், முகத்தில் பருக்கள் வராமலும், எண்ணெய்ப் பசை இல்லாமலும் தடுக்கலாம். மேலும், சருமம் அதன் மென்மைத்தன்மையை இழக்காது.

    பாதாம், பிஸ்தா, கசகசா மூன்றையும் அரை டீஸ்பூன் எடுத்து பாலில் ஊறவைத்து நன்கு அரைக்க வேண்டும். க்ரீம்போல வந்ததும், அதனை கழுத்திலிருந்து முகம் வரைக்கும் நல்ல அடர்த்தியாகப் போட வேண்டும். ஒரு மணி நேரம் ஊறவைத்து, வெந்நீரில் முகத்தை சுத்தம் செய்யவும். இது, சருமத்தின் வறட்சியை நீக்கி, தேவையான எண்ணெய்ப் பசையைக் கொடுத்து முகத்தை பளபளப்பாக்கும்.

    பேச்சிலர்களுக்கான சமையல் குறிப்பு...உங்களுக்குதாங்க..!

    By: ram On: 09:21
  • Share The Gag

  • வேலை (வெட்டி)க்கு போய் ரூமுக்கு வந்தால் கொலை பசி எடுக்கிறதா...
    அவசரத்துக்கு சோறு மட்டும் வடித்துக்கொண்டு, கை பச்சைப்புளி கரைத்து குழைத்து அடித்தால் அமிர்தமாக இருக்கும். ஆனால், இதையே இதனமும் உட்கொண்டால் புளி ரத்தத்தை சுண்டச் செய்துவிடும்.

    ஆடிக்கு ஒருக்கா... அம்மாவாசைக்கு ஒருக்கா உட்கொள்ளலாம்...

    கை பச்சைப்புளியா பேரே வித்தியாசமா இருக்கு என்றுதானே யோசிக்கிறீர்கள்...
    வேலூர் மாவட்டத்தில் கைப்பச்சைப்புளி ரொம்ப பேமஸ்...

    கை பச்சைப்புளி செய்வது எப்படி?


    தேவையான பொருட்கள்
    (ஒரு வேளைக்கான அளவு)

    புளி - நெல்லிக்காய் அளவு
    பச்சை மிளகாய் - 3
    பெரிய தக்காளி - 1
    பெரிய வெங்கயம் - 1
    உப்பு, கரிவேப்பிலை, கொத்துமல்லி, தண்ணீர் தேவையான அளவு. நல்லெண்ணெய் ஒரு மேஜை கரண்டி.

    செய்முறை

    புளியை சிறிது நேரம் தண்ணீரில் ஊரவிடவும், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பிறகு ஊறவைத்துள்ள புளியை நன்றாக கரைத்துக்கொண்டு, புளி தண்ணீரை வடிகட்டி, சக்கையை நீக்கிவிடவும்.
    பின்னர், கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரில், நறுக்கி வைத்துள்ளவற்றை கொட்டி ஒரு கலக்கு கலக்கவும். அதில் உப்பு, கொத்தமல்லி, கரிவேப்பிலையை கிள்ளி போட்டால் கை பச்சைப்புளி தயார்.

    நல்லண்ணெயை என்ன செய்வது என்றுதானே கேட்கிறீர்கள்? சோற்றில் கை பச்சைப்புளியை ஊற்றி கலக்கும்போது நல்லெண்ணையையும் ஊற்றி கலந்து உட்கொண்டால், பச்சை மிளகாவின் காரமும் தெரியாது. நல்லெண்ணையும் உடலுக்கும் நல்லது.
    அவசரத்தில் செய்து பார்த்து சாப்பிட்டு அசத்துங்கள்....