பொதுவாக தெருநாய்களை தத்தெடுத்து வளர்ப்பது த்ரிஷாவுக்கு மிகவும் பிடித்த ஒன்று. இப்போது அந்த வரிசையில் சமந்தாவும் சேர்ந்திருக்கிறார்.
சமீபத்தில் படப்பிடிப்புக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது தெருவில் ஒரு கருப்பு நிற நாய் தவித்துக் கொண்டிருப்பதை கண்டார். அதன் மீது இரக்கப்பட்டு தானே காரை விட்டு இறங்கிச் சென்று அதனை தன் வீட்டுக்கு தூக்கிச் சென்றார். அதற்கு நூரி என்று பெயரிட்டு வளர்க்க ஆரம்பித்து விட்டார்.
"எங்கள் வீட்டுக்கு இப்போது ஒரு புதிய விருந்தினர் வந்திருக்கிறார் அவர் பெயர் நூரி. அவர் வந்ததில் இருந்து சந்தோஷமாக இருக்கிறேன். அவரும் சந்தோஷமாக இருக்கிறார். நாய்களை வாங்காதீர்கள். தத்தெடுங்கள்" என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் சமந்தா.
0 comments:
Post a Comment