Saturday, 6 September 2014

எரிவது இன்றையப் பிணம். எரியூட்டுவது நாளையப் பிணம்

By: ram On: 23:15
  • Share The Gag

  • 'நான் நான்' என்று ஆணவத்தோடு சொல்வதைவிட‌ 'நாம் நாம்'என்று அடக்கத்தோடு சொல்லு. உலகம் உன் கையில்,

    இளமையில் ஆரோக்கியம் தொலைத்துப் பணத்தை தேடுகிறோம். முதுமையில் பணத்தை தொலைத்து ஆரோக்கியம் தேடுகிறோம்.

    காற்றில் கலந்து, செவியில் நுழைந்து, இதயத்தை நிரப்பும் இசையை கேள். மனம் பூவாக‌ மலரும்.

    முடியாது, முடியாது என்று நூறு முறை சொல்வதை விட‌, 'முடியும்' என்று ஒரு முறை சொல் முடியாததும் முடியும்.

    கொடுத்து சிவந்த‌ கரங்களை விட‌ உழைத்து சிவந்த‌ கரங்களை பாராட்டு.அதுதான் உழைப்புக்கு மரியாதை ஆகும்.

    வாழ்க்கை என்பது ஒரு புதிர், புரட்சி, போராட்டம், சந்தோஷம், மகிழ்ச்சி, விளையாட்டு, சவால், சாதனை. வாழ்ந்து சாதிக்கலாம் வாங்க‌.

    தோல்விகளைக் கண்டு துவளாதே. வெற்றியைக் கண்டு வெறியாட்டம் போடாதே.

    உனக்குள்ளும் பல‌ தலைவர்கள் உண்டு. முயற்சிச்செய். நீயும் தலைவன் ஆவாய்.

    எரிவது இன்றையப் பிணம். எரியூட்டுவது நாளையப் பிணம்.

    ஒரு குடும்பம் வாழ‌ ஒருவன் அழியலாம். ஒரு ஊர் வாழ‌, ஒரு குடும்பம் அழியலாம். அழிவும், சில‌ நேரங்களில் பயனுள்ளதே.

    பணக்காரனைக் கண்டு வெம்பாதே. பிச்சைக்காரனைக் கண்டு சிரிக்காதே.இவை உன் குணத்தையே அழித்துவிடும்.

    வானவில் ஓர் வண்ணப்பூச்சரம், ஓவியம், கதம்ப‌ மாலை, அழகு வண்ண பட்டுப்புடவை, வரவேற்பு தோரண‌ வளைவு, மயில் வண்ண‌ சால்வை. மொத்தத்தில் இயற்கை நமக்குத் தந்த‌ கவிதை, கவிதை.

    இறந்தகாலத்தை நினைத்து கவலைப் படாதே. எதிர்காலத்தை எண்ணி பயப்படாதே. நிகழ்காலமே பொற்காலம். நிகழ்காலத்தை சந்தோஷமாக‌ அனுபவி.

    உற்சாகமாக‌ இருக்கும்போது கடினமான‌ வேலைகளை செய், ஓய்வு எடுக்கும்போது எளிமையான‌ வேலைகளை செய். வாழ்க்கை சுலபமாக‌ இருக்கும்.

    நஷ்டம் வேண்டுமா கோபப்படு. லாபம் வேண்டுமா சமாதானமாக‌ இரு.

    தவறு செய்தால் பயப்படு. மீண்டும் அந்த‌ தவறு நேராமல் பார்த்துக்கொள். அதுவே வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடம்.

    வழிப்பாட்டைவிட‌ முதன்மையானது, மனிதனை மனிதன் புரிந்துக்கொள்ளுதலும், மதிப்பதும், அன்பு செலுத்துவதும் ஆகும்.

    பசி மனிதனை வென்றுவிடுகிறது.பல‌ தவறுகளுக்கும் பசியே காரணமாகிவிடுகிறது.

    மாற்றம் என்பது வளர்ச்சியின் தொடக்கம். அதுவே வெற்றியின் அறிகுறி.

    பணம் பத்து நன்மை செய்தால், உன் நல்ல‌ குணம் கோடி நன்மை செய்யும்.

    பொறுமை உள்ளவனே பொறுப்புள்ள‌ தலைவனாக‌ வாழ்ந்துக்காட்ட‌ முடியும்.

    பலருக்கு வழிகாட்டியாக‌ வாழ்ந்து காட்டு, அதுவும் ஒரு சாதனைத்தான்.

    இறந்தகால‌ சாதனையாளர்களைவிட‌, நிகழ்கால‌ சாதனையாளர்களை அடையாளம் காட்டு. அது வாழ்க்கைக்கு நம்மிக்கை ஊட்டும்.

    துணை நடிகரை ஜுஸில் விஷம் கலந்து கொன்ற நடிகை!

    By: ram On: 19:20
  • Share The Gag
  • ஒரு சில கன்னட படங்களில் தலையை காட்டியவர் ஸ்ருதி சந்திரலேகா. இவர் தமிழ் படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கும் நடிகர் ரொனால்ட்க்கும் பழக்கம் ஏற்பட்டு பின் திருமணம் வரை சென்றுள்ளது.

    ஒரு கட்டத்தில் ரொனால்ட் நிறைய பணம் சம்பாதிப்பதற்காக ஸ்ருதியை நீலப்படங்களில் நடிக்க வைத்துள்ளார். இதை பொறுத்து கொள்ள முடியாத ஸ்ருதி அவரை கொலை செய்துள்ளார்.

    இது குறித்து போலிஸாரிடம் அவர் தெரிவிக்கையில் ‘ அவரது தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்ததால் ஜுஸில் விஷம் கலந்து கொடுத்தேன்’ என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து இதில் மேலும் சிலர் சம்மந்தபட்டுள்ளனர் என அறிந்த போலிஸார் மேற்கொண்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.

    ஏலம் போன லைட் ஹவுஸ் – இது அமெரிக்க நியூஸ்!

    By: ram On: 18:59
  • Share The Gag
  • அமெரிக்காவில் மைன் மாநிலத்தில் யோர்க் கவுன்டி கடற்கரை பிராந்தியமாகும். இங்கிருந்து 6 மைல் தொலைவில் பூன் என்ற சிறிய பாறை தீவு உள்ளது. இங்கு 1855-ம் ஆண்டு 133 அடி உயரத்தில் ஒரு லைட் ஹவுஸ் கட்டப்பட்டது. நியூ இங்கிலாந்து லைட் ஹவுஸ் என இது அழைக்கப்பட்டது. மைன் மாநிலத்தில் பயன்பாட்டில் உள்ள 57 லைட் ஹவுஸ்களில், இது கடல் மட்டத்தைவிட உயரமான இடத்தில் அமைந்துள்ளது. இன்றும் இது கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த லைட் ஹவுசை நிர்வகித்து வந்த உள்ளூர் அரசு, கடந்த மாதம் 17-ம் தேதி இதை தனியாருக்கு ஏலம் விட்டது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட போர்ட்லாண்டை சேர்ந்த ஆர்ட் ஜிரார்ட், நியூ இங்கிலாந்து லைட் ஹவுசை 78 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு(ரூ.47 லட்சம்) ஏலத்தில் எடுத்தார்.இந்த லைட் ஹவுசை புதுப்பித்து, சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகையில் மாற்றுவேன். இதன் மூலம், சுற்றுலா பயணிகள் கடலின் அழகை கண்டு ரசிக்கலாம். இதனால், மைன் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று ஜிரார்ட் பெருமையுடன் கூறினார்

    அக்டோபர் 23 ரஜினிக்கு என்ன ஸ்பெஷல்?

    By: ram On: 15:05
  • Share The Gag
  • சூப்பர் ஸ்டார் படம் வருகிறது என்றால் அன்றைய தினம் தமிழகம் முழுவதும் திருவிழா தான். தற்போது இவர் லிங்கா படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.

    இப்படத்தை எப்படியாவது டிசம்பர் 12 தேதி அவர் பிறந்தநாள் அன்று வெளியிட படக்குழு முயற்சி செய்து வருகிறது. தற்போது படத்தை பற்றி கூடுதல் தகவல் ஒன்று வந்துள்ளது.

    லிங்கா படத்திற்கு வழக்கம் போல் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கிறார். படத்தின் பாடல்கள் அக்டோபர் 23ம் தேதி வெளிவரும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பலம் இழந்து வரும் ஆண்டிபயாடிக் மருந்துகள், பயமுறுத்தும் அசைவ உணவுகள்...

    By: ram On: 14:21
  • Share The Gag
  • ‘நமது உடலை தாக்கும் கிருமிகளை அழித்து நம்மை காப்பாற்றிய ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகள் மெதுவாக பலம் இழந்து வருகிறது’ என்று உலக சுகாதார மையத்தின் அதிகாரி மார்காட் சான் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

    இந்த நோய் கிருமிகள் அதிக சக்தியுடன் ஆண்டிபயாடிக் மருந்துகளை முறியடித்து வளர்வதின் ரகசியம் மேலும் அதிர்ச்சி தருகிறது.

    உற்பத்தி செய்யப்படும் ஆண்டிபயாடிக் மருந்துகளின் பெரும் பகுதி ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற மிருகங்களுக்கு அளிக்கப்படுகிறது. இவற்றை நாம் உண்பதால், இந்த ரக ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு நமக்கு வரும் நோய்கள் கட்டுபடுவதில்லை.
    இது முதல் காரணம்!

    இரண்டாவது காரணம், புதுவித ஆண்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி அதிகம் நடைபெறவில்லை என்பது தான்!
    பிறகு இதற்கு என்ன தான் தீர்வு?

    ‘எல்லோரும் சைவமாக மாறி விடுங்கள்’ என்கிறார் மார்கிரட்!
    ‘இல்லை என்றால் வெகு சீக்கிரம் சாதாரண சளி என்றால் கூட கட்டுபடுத்த முடியாத நிலை வந்து விடும். மற்ற பயங்கரமான வியாதிகளை நினைத்து பாருங்கள்’ என்று எச்சரிக்கிறது உலக சுகாதார மையம்!

    சில கை வை‌த்‌திய முறைக‌ள்

    By: ram On: 10:59
  • Share The Gag
  • திருமணமா‌கி இ‌ன்னு‌ம் குழ‌ந்தை இ‌ல்லாத பெ‌ண்களு‌க்கு ஒரு இய‌ற்கை வர‌ப்‌பிரசாதமாகு‌ம் தே‌ன்.

    குழ‌ந்தை இல்லாத பெண்கள், தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தேன் சாப்பிட்டு வந்தால் கரு‌ப்பை ‌பிர‌ச்‌சினைக‌ள் ‌நீ‌ங்‌கி ‌விரை‌வி‌ல் குழந்தை பிறக்கும்.

    காது அடை‌த்தது போ‌ல் இரு‌க்‌ந்து, எ‌ப்போது‌ம் அ‌தி‌ல் ஒரு சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கு‌ம். இ‌ப்படி இரு‌ப்பவ‌ர்க‌ள், நா‌‌ட்டு மருந்து கடையில் கடுகு எண்ணெய் விற்கிறார்கள். இதை ஒரு பாட்டில் வாங்கி வந்து வைத்துக் கொள்ளுங்கள்.

    இந்த எண்ணெய்யை, ஒரு கரண்டியில் எடுத்துக் கொண்டு சூடாக்குங்கள். இலேசான சூடுபோதும். இரைச்சல் கேட்கும் காதில் இரண்டு சொட்டு விடுங்கள். கா‌தி‌ல் இரு‌க்கு‌ம் அடை‌ப்புக‌ள் ‌நீ‌ங்கு காது சு‌த்தமாகு‌ம்.காது அடை‌ப்பு‌ம் ‌நீ‌ங்கு‌ம்.

    எ‌‌ப்போது‌ம் தா‌ளி‌க்கு‌ம் போது கடுகு, ‌‌சீரக‌ம், க‌றிவே‌ப்‌பிலை‌ப் போ‌ட்டு‌த் தா‌ளி‌க்கவு‌ம். இவை மூ‌ன்று‌ம் ‌ஜீரண‌த்‌தி‌ற்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது.

    வாழைத்தண்டு, சிறுநீர்க் கோளாறுகளுக்கு மிகவும் நல்லது. சிறுநீர் கழிக்கச் சிரமப்படுகிறவர்கள் வாழைத் தண்டுக் கறி சமைத்து அடிக்கடி சாப்பிட வேண்டும். 

    கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெருமாள் கோயில் பக்தர்கள்!

    By: ram On: 10:15
  • Share The Gag
  • உத்தமவில்லனைத் தொடர்ந்து கமல் நடித்து வரும் படம் பாபநாசம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கெளதமி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடக்கிறது. கதைப்படி ஒரு பெருமாள் கோயில் தேவைப்பட்டதால், சமீபத்தில் தான் நாங்குநேரி பகுதியில் உள்ள ஜீயர் சாமிகளை சந்தித்து அங்குள்ள பெருமாள் கோயிலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டார் கமல்.

    அதையடுத்து, கடந்த சில தினங்களாக அந்த பெருமாள் கோயிலில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். ஆனால், 108 வைணவ தலங்களில் ஒன்றான அந்த கோயிலுக்குள் ஆண் பக்தர்கள் யாரும் சட்டை அணிந்து உள்ளே செல்லக்கூடாது என்றொரு கட்டுப்பாடு இருந்து வருகிறதாம். கோயில் வாசலுக்கு சென்றதும் சட்டையை கழற்றி விட்டு, சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த பிறகு சட்டை அணிந்து கொள்ள

    வேண்டுமாம்.

    ஆனால், கமல் அந்த கோயிலுக்குள் சட்டை அணிந்து கொண்டே சென்றதோடு, சட்டை அணிந்து கொண்டே நடித்தாராம். இதனால் நீண்டகாலமாக பக்தர்கள் கடைபிடித்து வரும் கட்டுப்பாட்டை கமல் மீறி விட்டார் என்று பெருவாரியான பக்தர்கள் குற்றம் சாட்டி வருகிறார்களாம். இருப்பினும், கதைக்கு சட்டை அணிந்துதான் நடிக்க வேண்டியுள்ளது என்பதை அவர்களிடம் விளக்கி, தொடர்ந்து அப்படி நடித்து வருகிறாராம் கமல்.

    கொழுப்பு சத்து அதிகரிக்காமல் உடல் எடையைக் கூட்டுவதற்கான உணவுப் பழக்கம் ...

    By: ram On: 08:14
  • Share The Gag
  • (குறைந்தபட்சம் 21 நாட்கள் கடைப் பிடிக்க வேண்டும்).


    * அதிகாலை மிதமான உடற்பயிற்சிக்கு முன்னதாக ஐந்து பாதாம் பருப்புகளை தினமும் உட்கொள்ளுங்கள். தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    * பாஸ்ட்
    ஃபுட், க்ரீம் வகைகள் கலந்த உணவு மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

    * வெண்ணெய் தடவிய நான்கு பிரட் டோஸ்ட், ஒருவித கொழுப்புச் சத்துள்ள பாலில் கலக்கப்பட்ட ஒரு கிளாஸ் ஹார்லிக்ஸ் அல்லது காம்ப்ளான்!

    * உலர் பழங்களுடன் ஒரு பெரிய கிண்ணம் நிறைய அவித்த பயறு வகைகள், கொஞ்சம் முந்திரி, சர்க்கரை கலந்த திராட்சைப் பழரசம்.

    * மூன்று இட்லி, சர்க்கரை கலக்காத வாழைப்பழ மில்கே்ஷக்.

    * எண்ணெய் குறைவாக மூன்று தோசை, சர்க்கரை இல்லாத சப்போட்டா மில்க் ஷேக்.

    * ரவா அல்லது சேமியா உப்புமா, சர்க்கரை இல்லாத ஃபைன் ஆப்பிள் ஜூஸ்.

    * ஒரு கைப்பிடி உலர் பழங்கள் (அ) ஒரு கப் தயிர் (அ) அவித்த சோளம் (அ) கொஞ்சம் சீஸ். இவற்றுள் ஏதேனும் ஒன்றை மதிய உணவுக்கு முன்னர் நண்பகலில் சாப்பிடலாம்.

    * மதிய உணவுக்கு மூன்று கரண்டி சாதம், சாம்பார், தயிர், மிக மிகக் குறைவான எண்ணெயில் பொரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு.

    * இனிப்பான பிரெட் (அ) சர்க்கரை இல்லாத மில்கே்ஷக் (அ) பால், முட்டை கலந்த ஃப்ரூட் சாலட் இவற்றுள் ஏதேனும் ஒன்றை சாயங்கால ஸ்நாக்ஸ் ஆக உட்கொள்ளலாம்.

    * இரவு உணவுக்கு முன்னர் காய்கறி அல்லது சிக்கன் சூப் குடிக்கலாம். நான்கு சப்பாத்தி, காய்கறி குருமா, தயிர் (அ) குறைவான தேங்காய் இல்லாத குருமாவுடன் நான்கு ஆப்பம். அரிசி மற்றும் அசைவ உணவு வகைகளை இரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது!

    ஸ்ருதிஹாசன் என்றாலே தெறித்து ஓடும் முன்னணி நடிகர்கள்!

    By: ram On: 07:22
  • Share The Gag
  • கமலின் மகள் என்று பெயருடன் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் ஸ்ருதி. பின் அதையெல்லாம் நீக்கி தனக்கென ஒரு பெயரை உருவாக்கி அதில் வெற்றியும் பெற்றார்.

    அதிலும் குறிப்பாக சமீபத்தில் அவர் நடித்த அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலிருந்து நீக்க பட்டார் என்று ஒரு செய்தி வந்தது, அதை அவரே மறுத்து டுவிட்டும் செய்தார்.

    ஆனால் அவரை நீக்கியது விஜய் படத்திலிருந்து இல்லையாம், மகேஷ் பாபு ஆகடு படத்திற்கு பின் நடிக்கும் படத்தில் இவர் தான் முதலில் ஒப்பந்தம் ஆனார், தற்போது அதிலிருந்து நீக்கியது அவரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.

    நரம்புகளை முறுக்கேற்ற அரச மரம்

    By: ram On: 06:28
  • Share The Gag
  •  அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.

    புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் பாரத பூமிதான்.
    நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் அரச மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.
    நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர்.இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.
    அரச இலை கொழுந்துகளை எடுத்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வன்மை கொடுப்பதுடன் சுரக்காய்ச்சல் குறையும். முக்குற்றத்தையும் அதாவது வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சீராக்கி உடலை சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
    அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

    அரச விதைகளைக் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் பாலில் கலந்து உண்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் குணமாகும்.

    அரசமரப் பட்டையை சிதைத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். உடல் வெட்கை குறையும். வியர்வை நாற்றம் நீங்கும். சருமம் பளபளப்பதுடன், சரும நோய்கள் அண்டாது. சருமத்தில் சுருக்கம் ஏற்படாது.
    அரசமரப் பட்டையை சிதைத்து பொடியாக்கி நாள்பட்ட புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும்.
    அரச மரப் பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள புண்கள் விரைவில் குணமாகும்.

    வெள்ளைப்படுதல் நோய் கொண்ட பெண்கள் இந்த நீரால் பிறப்புறுப்பை கழுவி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். அதனால் ஏற்படும் மற்ற பாதிப்புகள் குறையும்.

    அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
    அரச மரத்தின் பாலை எடுத்து பாத வெடிப்புகள் உள்ள பகுதிகளில் பூசிவந்தால் பித்த வெடிப்புகள் விரைவில் மறையும்.
    அரச இலை, பட்டை, வேர் இவைகளை எடுத்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேவையான அளவு பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால், மன அழுத்தம், மன எரிச்சல், அதீத கோபம், தீரா சிந்தனை போன்றவை தீரும்.
    அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் அரச மரமும் ஒன்று. எனவே அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.

    அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.

     குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய, பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறது.

     நம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள். அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

    இதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்.

    அதனால்தான், அரச, வேம்பு போன்றவைகளை பராமரிப்பது என்பது பரிகாரம் போன்றது என்று சொல்லியிருக்கிறார்கள். 4 அரச மரங்களை நட்டு அதற்கு கீழ் 4 பேர் உட்கார்ந்து மருத்துவ குணம் பெற்று உடல் நலம் தேறிச் செல்கிறார் என்றால், அந்தப் புண்ணியம் அந்த மரத்தை நட்டவரைப் போய்ச் சேரும்.