சிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை! ஏன் தெரியுமா? சிலந்தி வலையில் வட்டமாகவும், குறுக்காகவும் இழைகள் இருக்கும். அதில் வட்டத்தில் உள்ள இழைகளில்தான் பசை இருக்கும். குறுக்காகச் செல்கிற இழைகளில் பசை இருக்காது. சிலந்தி அதன் வலையில் நடமாடும்போது, இந்தக் குறுக்கு இழைகளில்தான் நடக்கும். வட்டமான இழைகளைத் தொடாது. அப்படி வட்டஇழைகளில் பட்டுவிட்டாலும் ஒட்டிக்கொள்ளாதிருக்க, அதன் வளைந்த கால்களும், கால்களில் உள்ள பிரத்தியேக ரோமங்களும் உதவுகின்றன
சிலந்திகளை சாதாரணமாக வீட்டில் பார்த்திருப்போமே தவிர, அவற்றைப் பற்றி அதிகமாக அறிந்திருக்க மாட்டோம்.
பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிலந்திகள் உதவப் போகின்றன. சென்னையில் உள்ள ‘இந்திய அறிவு அமைப்புகள் மையம்’, அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த மையத்தினர், சிலந்திகளைக் கொண்டு இயற்கைக் கட்டுப்பாட்டு முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
சிலந்தியைப் பார்க்கும் போதே பலருக்குப் பயம் ஏற்படும். அவசரமாக விலகிச் செல்வார்கள். ஆனால் உண்மையில், பெரும்பாலான இந்தியச் சிலந்திகள் அபாயமற்றவை. நஞ்சு கொண்ட சில சிலந்திகளும் அதிகமாக அபாயத்தை ஏற்படுத்தாது.
‘ஓநாய் சிலந்தி’ போன்றவை விவசாயிகளின் தோழர்களாகி வருகின்றன. அவை, பயிர்களை நாசம் செய்யும் பழுப்பு தாவர வெட்டுக்கிளிகளை விருப்பமான உணவாகக் கொள்கின்றன.
‘பெரிய நண்டுச் சிலந்தி’ மற்றொரு இயற்கையான பூச்சிக்கொல்லியாகும். இந்த சாம்பல் கலந்த பழுப்பு நிறச் சிலந்தி, கரப்பான்பூச்சிகளை வேட்டையாடி உண்கிறது.
இது வலை ஏதும் பின்னுவதில்லை. மாறாக, சமையலறை ‘சிங்க்’ மற்றும் வீட்டுக் குப்பைகளில் மறைந்திருக்கிறது. இரவில் மட்டும் வெளிப்பட்டு கரப்பான்பூச்சிகளை வேட்டையாடுகிறது. இந்தச் சிலந்தியால் மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் கிடையாது.
சென்னை இந்தியா அறிவு அமைப்புகள் மையமானது நிறைய ‘பெரிய நண்டுச் சிலந்திகளை’ உருவாக்குகிறது. கரப்பான்பூச்சிகளை வேட்டையாடும் அளவுக்குப் பெரிதாகும் வரை அவற்றை வளர்க்கிறது. பின்னர், கரப்பான்பூச்சித் தொந்தரவு அதிகமுள்ள பகுதிகளில் அவற்றை விடுகிறது.
ஒரு கட்டத்தில் இந்தச் சிலந்திகளின் எண்ணிக்கையே அளவுக்கதிமாக அதிகரித்து ஒரு தொந்தரவாகிவிடுமா? கிடையாது. இந்தச் சிலந்திகளின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள். ஒரே பாலினத்தைச் சேர்ந்த சிலந்திகளை ஒரு பகுதியில் அதிகமாக விடும்போது அவை பெருகாமல் போய்விடுகின்றன.
சிலந்தி அல்லது எட்டுக்கால் பூச்சிகளைக் கண்டு நாம் பயப்படுகிறோம். ஆனால் உண்மையாக எல்லாப் பூச்சிகளும் நம்மைக் கண்டு பயப்படுகின்றன. நீங்கள் சிலந்தி வலைப் பின்னுவதைப் பார்த்திருப்பீர்கள். சுவற்றின் மூலைகள் அதற்கு மிகப் பிடித்த இடம். அதன் உமிழ்நீராலேயே அது வலைப் பின்னும். அது எவ்வளவு லாவகமாக அதைப் பின்னும் என்பது அதை உற்றுக் கவனிக்கப் புரியும். பகுதியில் அந்த வலையின் நூல் அறுந்தாலும் திரும்பவும் அந்த இடத்தை மிக அழகாக பின்னி விடும். பெரியக் கட்டடக்கலை நிபுணர் போல் தன் வலையைத் தயார் செய்யும்.
உலகத்தில் சிலந்தியின் வகைகள் சுமார் 50000 என்று சொல்லுகிறார்கள் ஆஸ்ட்ரேலியாவில் மிகவும் விஷம் வாய்ந்தச் சிலந்திகள் உள்ளனவாம். சிலந்தி அல்லது எட்டுகால் பூச்சி கடித்தால் அவரவர் உடல் அமைப்புக்கேற்றவாறு எதிர்ப்பலன்கள் reaction இருக்கும் என்கிறார்கள் டாக்டர்கள். சிலருக்கு உடல் முழுவதும் தடிக்கும், அரிக்கும், சிவப்பு சிவப்பாக, பட்டை பட்டையாக தோலின் மேல் அடையாளம் வந்து அரித்து தொல்லைக் கொடுக்கும். சிலருக்குத் தலைவலியுடன் சுரமும் வரலாம். குழந்தைகளுக்குத்தான் பாதிப்பு அதிகமாகத் தெரியும்.