Saturday, 26 July 2014

கவலை என்பது எதுவரை? உயிரெழுத்தில் துவங்கும் தமிழ் பழமொழிகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.!

By: ram On: 21:34
  • Share The Gag

  • அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

    அகல உழுகிறதை விட ஆழ உழு.

    அகல் வட்டம் பகல் மழை.

    அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

    அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

    அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

    அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

    அடக்கமே பெண்ணுக்கு அழகு.

    அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

    அடாது செய்தவன் படாது படுவான்.

    அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

    அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.

    அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.

    அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

    அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

    அந்தி மழை அழுதாலும் விடாது.

    அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

    அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.

    அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.

    அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

    அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

    அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

    அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

    அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.

    அழுத பிள்ளை பால் குடிக்கும்.

    அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

    அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

    அறச் செட்டு முழு நட்டம்.

    அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

    அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.

    அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.

    அறமுறுக்கினால் அற்றும் போகும்.

    அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்.

    அறிய அறியக் கெடுவார் உண்டா?

    அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

    அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

    அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

    அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

    அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

    அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.

    அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

    அற்ப அறிவு அல்லற் கிடம். அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

    அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?

    அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.

    அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

    அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

    ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.

    ஆரால் கேடு, வாயால் கேடு.

    ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

    ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.

    ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.

    ஆழமறியாமல் காலை இடாதே.

    ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும்.

    ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.

    ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.

    ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.

    ஆறின கஞ்சி பழங் கஞ்சி.

    ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?

    ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

    ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.

    ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

    ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.

    ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.

    ஆனைக்கும் அடிசறுக்கும்.

    ஆனை படுத்தால் ஆள் மட்டம்.

    ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே...

    இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

    இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.

    இஞ்சி இலாபம் மஞ்சளில்.

    இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.

    இட்ட உறவு எட்டு நாளைக்கு; நக்கின உறவு நாலு நாளைக்கு.

    இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.

    இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.

    இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

    இரக்கப் போனாலும் சிறக்கப் போ.

    இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.

    இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.

    இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை. இராச திசையில் கெட்டவனுமில்லை.

    இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.

    இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.

    இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.

    இருவர் நட்பு ஒருவர் பொறை.

    இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.

    இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?

    இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.

    இளங்கன்று பயமறியாது

    இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.

    இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.

    இறங்கு பொழுதில் மருந்து குடி

    இறுகினால் களி , இளகினால் கூழ்.

    இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.

    இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.

    இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே

    இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.

    ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.

    ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.

    ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

    ஈர நாவிற்கு எலும்பில்லை.

    உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.

    உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.

    உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.

    உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.

    உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?

    உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

    உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.

    உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.

    உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.

    உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?

    உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.

    உலோபிக்கு இரட்டை செலவு.

    உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.

    உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.

    உளவு இல்லாமல் களவு இல்லை.

    உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல.

    உள்ளது போகாது இல்லது வாராது.

    உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய

    உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்

    உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.

    உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.

    ஊணுக்கு முந்துவான் வேலைக்குப் பிந்துவான்.

    ஊண் அற்றபோது உடலற்றது.

    ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.

    ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.

    ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.

    ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.

    ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.

    ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது.

    ஐயர் வருகிறவரை அமாவாசை நிற்குமா?

    ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.

    ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?

    ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

    ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை

    ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?

    ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?

    ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை

    ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?

    ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

    ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்.

    ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.

    ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.

    ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.

    ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.

    ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!

    ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.

    ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.

    ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.

    ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

    ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.

    ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.

    ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.

    ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.

    ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

    ஆகஸ்டில் தமிழ்சினிமாவின் சாதனை ரிலீஸ்..!

    By: ram On: 21:22
  • Share The Gag

  • சமீப காலமாக தமிழில் அதிக அளவில் படங்கள் தயாராகி வருகின்றன. எனவே தயாரான படங்களை ரிலீஸ் செய்ய தியேட்டர் கிடைப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் அஞ்சான் உட்பட 37 படங்கள் ரிலீசாக காத்திருப்பதாக கூறுகிறது தமிழ் பட உலகம். இந்தாண்டில் ஒரே மாதத்தில் இப்போதுதான் இவ்வளவு அதிக படங்கள் வெளியாவதாக கூறப்படுகிறது.

    வி.ஐ.பி,, சதுரங்க வேட்டை இந்த ஆண்டிலேயே அதிகபட்சமாக, ஆகஸ்ட் மாதத்தில் 37 படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

    அஞ்சான், காவியத்தலைவன், கதை திரைக்கதை வசனம் இயக்கம், வானவராயன் வல்லவராயன், கவுண்டமனி நடித்துள்ள 49 ஓ, கன்னக்கோல், சண்டியர், சரபம், ஜிகிர்தண்டா, பட்டைய கிளப்பணும் பாண்டியா, சிநேகாவின் காதலர்கள், ஆள், பூலோகம், பரணி, ஆ, தகடு தகடு, மொசக்குட்டி, சேர்ந்து போலாமா, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, வாலிப ராஜா, அரண்மனை, வாலு, மெட்ராஸ், கங்காரு, புலிப்பார்வை, இரும்புக்குதிரை, சலீம், காதலைத்தவிர வேறொன்றுமில்லை, வெண்நிலா வீடு, சோன்பப்டி, திருடன் போலீஸ், தொட்டால் தொடரும், பூலோகம், கடவுள் பாதி மிருகம் பாதி, காமராஜர் மற்றும் ஆங்கிலப் படங்களான ஹெர்குலீஸ் ரிட்டர்ன், தி எக்ஸ்பெண்டபிள் 3 ஆகிய 37 படங்கள் ஆகஸ்ட் மாத ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இன்னும் சில டப்பிங் படங்களும் இந்த லிஸ்டில் சேரும் என்றும் கூறப்படுகிறது.

    சளி பிரச்னையால் அவஸ்தைப்படுகிறீர்களா? உங்களுக்கான டிப்ஸ்!

    By: ram On: 17:29
  • Share The Gag
  •  தொண்டையில் சளி உண்டாவதையும், அதனால் ஏற்படும் தொந்தரவுகளையும் பெரும்பாலானோர் அனுபவித்திருப்போம்.

    அதிலும் தொண்டையில் சளி இருந்தால் மூச்சு விடவே சிரமமாக இருக்கும்.

    சுவாசமானது இயல்பாக இல்லையென்றால் அன்றாட தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும்.

    ஆவி பிடித்தல்

     தொண்டை சளி இறுகி இருந்தால், அப்போது சூடான நீரில் ஆவி பிடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

    தண்ணீர்

     கபம் மற்றும் சளியை தளர்த்த வேண்டுமெனில், தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

    சுத்தமான மூக்கு

     தொண்டையில் சளி தேங்காமல் இருக்க, மூக்கினை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

    உப்புத் தண்ணீர்

     சளி இருக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீருடன் உப்பைச் சேர்த்து அடிக்கடி வாய் கொப்பளிக்க வேண்டும்.

    இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்து, தொண்டை கரகரப்பு நீங்கும்.

    யூகலிப்டஸ் எண்ணெய்

     கபத்தைத் தளர்த்தவும் மற்றும் சளியின் இறுக்கத்தை போக்கவும், சிறிது யூகலிப்டஸ் எண்ணெயை வெந்நீரில் சேர்த்து ஆவி பிடித்தல் நல்லது.

    மூலிகைத் தேநீர்

     சளியை குணப்படுத்த மூலிகைத் தேநீர் அல்லது கோழி சூப் போன்றவற்றை சூடாக பருகினால், தொண்டை இதமாக இருக்கும்.

    மஞ்சள் தூள்

     சளி இருக்கும் பொழுது அரை டம்ளர் பாலுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பருக வேண்டும். ஏனேனில் மஞ்சள் தூளில் கிருமி நாசினிகளின் பண்பு அதிகமாக இருப்பதால், அதனைக் குடிக்கும் போது, தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.

    காரமான உணவுகள்

     காரமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஹார்ஸ் முள்ளங்கி அல்லது ஹாட் சில்லி பெப்பர்ஸ் போன்ற உணவுகளை உட்கொள்வது சளி இறுகுவதை தவிர்க்கும்.

    விக்ரமின் அடுத்த படம்! அதிர்ச்சியில் சிம்பு!

    By: ram On: 16:36
  • Share The Gag

  • தமிழ் திரையுலகின் அடுத்த கமல் என்றால் கண்டிப்பாக விக்ரம் தான். படத்திற்கு படம் தன் உடல், மொழி என மாற்றி நடிப்பார், விரைவில் வெளிவரயிருக்கும் ஐ படத்தில் கூட மிகவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது இவர் விஜய் மில்டன் இயக்கத்தில் பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை முடித்த பிறகு கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கயிருக்கிறார்.

    ஆனால் கௌதம் தற்போது அஜித் படத்தை இயக்கி வருகிறார், இதை முடித்தவுடன் மீதியிருக்கும் சிம்பு பட வேலைகளை ஆரம்பிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், இந்த முடிவு சிம்புவிற்கு அதிர்ச்சியை தந்துள்ளதாம்.

    பேஸ்புக் நண்பர்களுடன் இலவசமாக பேச ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    By: ram On: 15:56
  • Share The Gag
  •  
    உலகில் அதிகம் பயன்படுத்தபடுத்தப்படும் முக்கியமான சமூக இணையதளம் ஒன்று உண்டென்றால் அது பேஸ்புக் தளமாகத்தான் இருக்கும். அவ்வாறு பலரும் பயன்படுத்த காரணம் அத்தளத்தில் உள்ள வசதிகள், மற்றும் எளிமையாக பயன்படுத்தும் வழிமுறைகளே காரணமாக உள்ளது. பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதும்,மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டதுமான பேஸ்புக் தளத்திலிருந்து இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

    பேஸ்புக் நண்பர்களுடன் இலவசமாக பேச

    உங்கள் பேஸ்புக் நண்பர்களுடன் இலவசமாக உங்கள் மொபைலிலிருந்து அழைத்துப் பேச பயன்படுகிறது ஓனஜ் என்ற   ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் பயன்படுகிறது. நீங்கள் Android, Apple iPad, iPod touch என எந்த வகை மொபைல்களைப் பயன்படுத்தினாலும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி எளிதான உங்களுடைய நண்பர்களுடன் உரையாடல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

    இந்த பேஸ்புக் அப்ளிகேஷன் முற்றிலும் இலவசமே. இதைப் பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ள உங்கள் நண்பரும் அவருடைய ஆண்ட்ராய்ட் அல்லது ஐபோன் போன்ற சாதனங்களில் இந்த அப்ளிகேஷனை நிறுவியிருக்க வேண்டும்.

    உலகில் எந்த ஒரு மூலையில் உங்கள் உறவினர் நண்பர்கள் இருந்தாலும் உடனடியாக அவரைத் தொடர்புகொண்டு பேச முடியும் என்பதே இந்த அப்ளிகேஷனின் சிறப்பு. இந்த அப்ளிகேஷன் ஐபோன், ஆண்ட்ராய்ட், ஐபோட், ஐபேட் ஆகிய சாதனங்களில் தொழிற்படுகிறது.

    இந்த அப்ளிகேஷனை ஐடியூன் ஸ்டோர் (iTunes Store), ஆண்ட்ராய்ட் மார்க்கெட் (Android market), வோனஜ் பேஸ்புக் பேன் பேஜ் (Vonage Facebook FanPage)ஆகியவற்றில் கிடைக்கிறது. தற்பொழுது அனைத்து நாடுகளிலும் கிட்டதட்ட 3ஜி, 4ஜி மற்றும் வைபை தொழில்நுட்பம் (3G, 4G, WiFi) இயங்குவதால் அனைத்து நாடுகளில் உள்ளவர்களும் இந்த பேஸ்புக் அப்ளிகேஷனைப் பயன்படுத்தலாம்.


    பேஸ்புக் வோனஸ் மொபைல் அப்ளிகேஷன் இயங்கும் விதம்:


    இந்த அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்து, முதன் முதலில் இயககும்பொழுது உங்களுடைய கடவுச் சொல், பயனர் பெயர் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.


    உடனேயே இந்த அப்ளிகேஷன் , உங்கள் பேஸ்புக் நண்பர்களை இரு குழுக்களாக பிரித்து காண்பிக்கும். வோனஜ் அப்ளிகேஷன்களை பயன்படுத்தி இலவச அழைப்புகளை மேற்கொள்பவர்களை ஒரு பிரிவாகவும், மற்றொரு பிரிவில் இன்ஸ்டன்ஸ் மேசேஜ் (Instant Message) சேவையை பயன்படுத்துபவர்களாகவும் காட்டும்.


    பேச வேண்டிய நபர்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்துபவர்களாக இருப்பவராயின் உடனடியாக அவர்களை நீங்கள் தொடர்புகொண்டு அழைக்கலாம். நீங்கள் அழைத்தவுடன் உங்களுடைய நண்பரின் முகப்பு படமும் அவரது ஸ்டேடஸ் செய்தியும் திரையில் தோன்றும். இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கும்பொழுதும், உங்கள் நண்பர்கள் உங்களை அழைக்கும்பொழுது உங்களுக்கு அழைப்புச் சத்தம் கேட்கும்.


    மிகச்சிறந்த இலவசமான இந்த அப்ளிகேஷன்களை நீங்கள் பின்வரும் வழிமுறைகளில் பெறலாம். 



    1. ஐடியூன் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்ய முடியும். (இது iPhone, iPod touch பயன்படுத்துவபர்களுக்கு) CLICK


    2. ஓனஜ் அப்ளிகேஷன் ஆன்ட்ராய்ட் லிப் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்ய முடியும் (இது ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு)  CLICK


    குறிப்பு: இந்த அப்ளிகேஷன் மூலம் பேசுவது மட்டுமின்றி, எழுத்துகள், படங்கள் ஆகியவற்றையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். 


    விஜய் சேதுபதிக்கு கல்தா: பொறுமையிழந்த இயக்குனரின் அதிரடி முடிவு!!

    By: ram On: 11:37
  • Share The Gag

  • விஜய சேதுபதிக்கு வெற்றியை கொடுத்த முக்கிய படங்களில் சூது கவ்வும் படமும் ஒன்று.  நலன் குமாரசாமி என்ற புதிய இயக்குனர்  இயக்கியிருந்த இந்தப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.இதனை அடுத்து அடுத்தப்படத்துக்கு தயாரானார் நலன். இதற்காக கதையை தயார் செய்து விஜய சேதுபதியிடம் கூறினார். அவருக்கும் கதை பிடிக்கவே நடிப்பதாக கூறினாராம்.

    இந்த படத்தை அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், முண்டாசுப்பட்டி என தொடர்ந்து வெற்றிப்படங்களையே கொடுத்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் தயாரிக்க முன்வந்தார். விஜய் சேதுபதியும் இந்த படத்திற்காக தான் ஒப்புகொண்ட படங்களை  இரவு பகல் பாராமல் நடித்துக்கொண்டிருந்தார்.

    ஆனாலும் முடியவில்லை போல. இவருக்காக பல மாதங்களாக தயார் நிலையில் காத்திருந்த நலன் இனியும் பொறுத்தால் பலனில்லை என்று முடிவு செய்து விஜய் சேதுபதியை சந்தித்தாராம். நாம் அடுத்த படத்துல சேர்ந்து பண்ணலாம்.இப்ப வேற ஹீரோவை வைத்து எடுத்துவிடுகிறேன் என்றாராம் விஜய்செதுபதியிடம். அவரும் சூழ்நிலையை புரிந்துகொண்டு சரி என்றாராம்.

    தற்போது நலன் முண்டாசுப்பட்டி விஷ்ணுவை ஒப்பந்தம் செய்துவிட்டாராம். சி.வி.குமார் ஏற்கெனவே முண்டாசுப்பட்டி பாகம் ரெண்டை எடுக்க உள்ளார். முண்டாசுபட்டியை இயக்கிய ராமுவே இந்த படத்தையும் இயக்க உள்ளார்.விஷ்ணுதான் அதிலும் ஹீரோ. தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துவரும் நிறுவனத்தின் அடுத்த இரண்டு படங்களிலும் தான் ஹீரோவாக நடிப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளாராம் விஷ்ணு.

    இவைகளெல்லாம் இந்தியாவில் மட்டுமேச் சாத்தியம்....

    By: ram On: 10:00
  • Share The Gag


  • 1) வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும்.

    2) ஆங்கிலம் சரளமா பேசத் தெரிஞ்சவனுக்கு உலகமேத் தெரியும்.

    3) நிறம் கம்மியா இருக்கவனுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது.

    4) தமிழ் பேசுறவனுக்கு தமிழைத் தவிர ஒன்றும் தெரியாது.

    5) முதல் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் புத்திசாலி.

    6) கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் மக்கு.

    7) வேட்டிக் கட்டுனவங்க படிக்காதவங்க.

    8) கையெழுத்து அழகா இருந்தா எழுதினது பாட்டி வடை சுட்ட கதையா இருந்தாலும் 100 மதிப்பெண்.

    9) பொறியியலும் மருத்துவமும் படிப்பவன் மேதை.

    10) ஒரு சினிமா வ ஒருதரம் ரசித்துவிட்டால் தொடர்ந்து
     அதேபானியில் படம் எடுப்பது.

    11) பெத்தவன் பிறந்த நாள் தெரியாதவன் தலைவன் போஸ்டருக்கு பாலூத்தறது.

    12) மழை பெய்து தேங்கிய நீரில் நீந்திக் கொண்டே பேருந்து செல்வது .

    13) ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே ஒரே நேரத்தில் இரயில் வந்து மோதுவது.

    14) கீழே விழும் புத்தகத்தை பெண்ணிடம் எடுத்துக் கொடுத்ததும் காதல் வருவது.

    15) அரசியல்வாதி ஆவதற்கு அதிகப்பட்ச தகுதி TV Channel ஆரம்பிப்பது.

    16) பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது வீரம் சாகசம்னு நினைப்பது.

    17) நகைக் கடைகளுக்கு நடிகைகளை வச்சு மட்டுமே திறப்புவிழா நடத்துவது.

    18) இடுப்பு வலி வராத புள்ளத்தாச்சுக்கும் பணத்திற்காக சிசேரியன் செய்வது.

    19) பரிட்சை எழுதாதவனுக்கு " பாஸ்" என்று தேர்வு முடிவு வருவது.

    20) இலவசங்களுக்காகவும் பணத்திற்காகவும் தன் உரிமை அறியாமல் ஓட்டை விற்பது.

    21) Ambulance உம் , காவல் துறையும் அழைத்ததும் வருமோ இல்லையோ pizza வந்திடும்.

    22) இலவசமா கிடைக்கற அரிசி புழுவோட இருக்கும்.இலவசமா கிடைக்கற sim card credit (balance) oh da இருக்கும்.

    23) கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் வாகனக் கடனின் வட்டி விகிதத்தை விட அதிகம்.

    இன்னும் நமக்கே நமக்குன்னு நிறைய இருக்கு.நான் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

    சைவம் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

    By: ram On: 09:23
  • Share The Gag
  •  

    சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:

    நச்சுக்களை அகற்றுபவை:

    நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை.உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரத சத்து இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை.

    எலும்புகளை வலுவாக்குபவை:

    இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.

    மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.

    கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:

    அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு.இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.

    எளிதில் ஜீரணம்:

    சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளூகோஸ் சத்தை சீராக அளிக்கும்.அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.

    ஆரோக்கியமான மேனி:

    பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

    குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை.........

    By: ram On: 00:57
  • Share The Gag
  • குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்ட விடமால் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணை இதோ...


    * பிசிஜி - பிறப்பின் போது

    * ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) - பிறப்பின்போது

    * ஹெபடைடிஸ் பி (2) - 4 வாரங்கள்

    * டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 8 வாரங்கள்

    * டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 12 - 20 வாரங்கள்

    * டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 18-20 வாரங்கள்

    * அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) - 8-9 மாதங்கள்

    * சின்னம்மை (விருப்பத்துடன்) - 12-18 மாதங்கள்

    * எம்எம்ஆர் - 15-18 மாதங்கள்

    * எச்ஐபி (பூஸ்டர்) - 15-18 மாதங்கள்

    * டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) - 18-24 மாதங்கள்

    * ஹெபடைடிஸ்-ஏ மருந்து (விருப்பம்) - 2 ஆண்டுகள்

    * டைபாய்டு ஊசி - 3 ஆண்டுகள்

    * டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ்டர்) - 5 ஆண்டுகள்

    * ஹெபடைடிஸ் - ஏ மருந்து (விருப்பம் - 5 ஆண்டுகள்

    * எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம்எம்ஆர் கொடுக்காவிட்டால்) - 5 ஆண்டுகள்

    * வாய்வழியாக டைபாய்டு - 8 ஆண்டுகள்

    * வாய்வழியாக டைபாய்டு - 9 ஆண்டுகள்

    * டெட்டானஸ் - 10 ஆண்டுகள்

    * சின்னம்மை தடுப்பூசி - 10 ஆண்டுகள் (சின்னம்மை தடுப்பூசி ஆரம்பத்திலேயே கொடுக்காவிட்டாலும், சின்னம்மை ஏற்கெனவே வராவிட்டாலும்)

    * டைபாய்டு வாய்வழியாக - 12 ஆண்டுகள்

    * டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) - 16 ஆண்டுகள்

    தழும்புகளை தலைமறைய செய்ய சூப்பர் டிப்ஸ்!

    By: ram On: 00:11
  • Share The Gag
  •      பொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், சிலருக்கு உடல் குண்டாக இருந்து, பின் ஒல்லியானாலும் இந்த தழும்புகள் வரும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும்.


    இந்த மாதிரியான தழும்புகள் நமது உடலின் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதால், அதனை போக்குவதற்கு கடைகளில் பல க்ரீம்கள், ஆயின்மெண்ட்கள் போன்றவை விற்கப்படுகின்றன. என்ன தான் விலை உயர்வான அந்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும், அது முற்றிலும் அந்த தழும்புகளை போக்காமல், சில சமயங்களில் அவை சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, வேறு வித சரும பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றன.


    எனவே அத்தகைய பிரச்சனைகள் எதுவும் வராமல் எளிதில் தழும்புகளைப் போக்க, ஒரு சில இயற்கை பொருட்கள் வீட்டிலேயே இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தினால், சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல், தழும்புகளை போக்கலாம்.


    எலுமிச்சை சாறு


    எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.


    பாதாம் எண்ணெய்


    தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.

    கற்றாழை



    கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.

    பால்


    தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.


    ஆலிவ் ஆயில்


    ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் மறையும்.


    தக்காளி சாறு



    தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும்.

    அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.