ஐ படத்தின் இறுதி கட்ட வேலைகள் மெல்……ல்ல நடந்து வருகிறது. படத்தின் பட்ஜெட் சுமார் 200 கோடி என்கிறார்கள். பிச்சுக்கோ பீராஞ்சுக்கோ என்றுதான் பணம் புரட்டி படப்பிடிப்பு நடந்து வருவதாக கேள்வி. இந்த நேரத்தில் பிரசாத் லேப்பில் போடப்பட்ட செட் ஒன்று எமி ஜாக்சனுக்கு சரிவர சம்பளம் தரப்படாததால் அப்படியே வெயில் மழையில் கிடந்து படப்பிடிப்பை தொடராமலிருப்பதாகவும் காதை கடிக்கிறார்கள்.
இவ்வளவு சிக்கல்களுக்கு நடுவிலும் ‘ஜிகிர்தண்டா’ படத்தின் விநியோக உரிமையை செம விலை கொடுத்து வாங்கியிருக்கிறாராம் அப்படத்தின் தயாரிப்பாளர். அதுவும் மிகப்பெரிய ஏரியா ஒன்றை! வசூல்? அதிருக்கட்டும்… அப்படியே ஹாலிவுட் படம் ஒன்றையும் ஏகப்பட்ட விலைக்கு வாங்கியிருக்கிறாராம் தமிழில் ரிலீஸ் செய்வதற்காக. எல்லா பணத்தையும் இப்படி கண்டபடி இறைக்காமல், ஐ யில் போட்டிருந்தால் அடுத்தகட்ட வேலையை பார்க்கலாமே என்று கவலைப்படுகிறாராம் படத்தின் இயக்குனர் ஷங்கர்.
படத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கைமாற்றி விட்டுவிடலாம் என்று கொக்கிப்பிடி போட்ட ஷங்கருக்கு, நானே ரிலீஸ் பண்றேன் என்று கூறி அந்த முயற்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டாராம் தயாரிப்பாளர்.
0 comments:
Post a Comment