Monday, 29 September 2014

சருமத்திற்கு நிறம் கொடுக்கும் கிர்ணி பழம்

By: ram On: 22:52
  • Share The Gag
  • தலை முதல் பாதம் வரை அழகைப் பாதுகாக்கும் அற்புதம் கவசம் கிர்ணிப்பழம். இதை `முலாம்பழம்' என்றும் அழைப்பர். இதில் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகம் இருப்பதால், கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது.

    உடலுக்கு வேண்டியச் சத்துக்களை அள்ளித்தரும் வள்ளலான கிர்ணிப்பழத்தின் அழகு, ஆரோக்கியக் குறிப்புகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

    * ஐம்பது வயதுக்கு மேல் தோலின் எண்ணெய்ப் பசை குறைந்து. வறண்டு போய்விடும் இவர்கள் பியூட்டி பார்லரில் `வேக்சிங்' அல்லது `திரெடிங்' போன்றவற்றைச் செய்து கொண்டால், தோலில் வீக்கம் ஏற்பட்டு விகாரமாகத் தோன்றும். இதற்கு கிர்ணிப்பழ ஜுஸ், வெள்ளி ஜுஸ் இரண்டையும் தலா ஒரு டீஸ்பூன் கலந்து தடவினால் வீக்கம் குறைந்து தோல் மிருதுவாகும்.

    * நூறு கிராம் கிர்ணி விதையுடன் பயத்தம் பருப்பு, சீயக்காய் தலா கால் கிலோ சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலைமுடி சுத்தமாவதோடு பளபளப்பும் கூடும்.

    * கிர்ணிப்பழ விதையைக் காய வைத்து அரைத்த பவுடர், ஓட்ஸ் பவுடர் தலா 100 கிராம் எடுங்கள். இதை பேஸ்ட்டாக்கும் அளவுக்கு வெள்ளரி ஜுஸ் சேர்த்து. கேசம் முதல் பாதம் வரை தேய்த்துக் குளியுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளித்தது போல குளிர்ச்சியாகவும் வாசனையாகவும் இருக்கும். ஓட்ஸ், சருமத்துக்கு நல்ல நிறத்தைத் தந்து தோலின் உள்ள கரும்புள்ளிகளை மறையச் செய்யும். கிர்ணி விதை, தலைமுடிக்கு நல்ல கண்டிஷனராக செயல்படும்.

    * சிலருக்கு முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டி. முகம் டல்லடிக்கும், அவர்கள் கிர்ணிப்பழத் துண்டு ஒன்றைக் கைகளால் மசித்து, முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

    * இரண்டு டீஸ்பூன் வெள்ளரி ஜுஸுடன், இரண்டு டீஸ்பூன் கிர்ணிப்பழ விழுதைச் சேர்த்து 4 (அ) 5 துளி எலுமிச்சைச் சாறு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து நன்றாகக் குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். எங்காவது வெளியில் போகும் போது இதை இயற்கை `சென்ட்' ஆகப் பயன்படுத்தலாம். 2 முதல் 3 மாதங்கள் வரை கெடாது. தோலையும் சேதப்படுத்தாது. விருப்பட்டால் பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம்.

    * சிலருக்கு கை, கால், முகத்தில் தேவையில்லாத முடிகள் முளைக்கும், இதற்கு பழ விதை பவுடர், ஓட்ஸ் பவுடர், கோரைக்கிழங்கு பவுடர், ஆவாரம்பூ பவுடர் தலா 100 கிராம் எடுத்து பேஸ்ட்டைத் தேய்த்துக் குளியுங்கள். கிர்ணிப்பழ விதை, கோரைக்கிழங்கு, ஓட்ஸ் பவுடர் மூன்றும் முகத்தில் உள்ள முடியை வலுவிழக்கச் செய்து தோலை மிருதுவாக்கும். ஆவாரம் பூ சருமத்துக்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

    * வயோதிகத்தின் அறிகுறி கண்களில் தான் முதலில் தெரியும். பால் பவுடர், கிர்ணிப்பழ விதை பவுடர் இரண்டையும் சம அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து கண்களைச் சுற்றிலும் பூசி, 5 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். சுருக்கங்கள், தொய்வு, கருவளையம், சோர்வு நீங்கி, கண்கள் பிரகாசிக்கும்.

    தமிழ் ஈழ மக்களின் உணர்வு வெளிபடுத்தும் புலிபார்வை தீபாவளிக்கு வருகிறது

    By: ram On: 22:19
  • Share The Gag
  • ரட்சகன்’, ‘ஸ்டார்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரவீன்காந்தி. இவரது கைவண்ணத்தில் மறைந்த தேசியத் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான வே.பாலச்சந்திரனின் வரலாற்று சுவடுடை மையபடுத்தி புலிபார்வை படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தை பிரவீன் காந்தி இயக்கியதோடு மட்டுமில்லாமல், பாடல்கள் எழுதி இசையமைக்கவும் செய்திருக்கிறார். வேந்தர் மூவிஸ் நிறுவனர் பாரிவேந்தர் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். சாய் மகேஷ்வரன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

    இப்படம் தமிழ் மக்களின் உணர்வை வெளிபடுத்தும் என்ற நம்பிக்கையில் பலத்த போட்டிக்கு இடையே தீபாவளி அன்று படத்தை வெளியிட வேந்தர் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

    நரம்புகளை சுத்தம் செய்யும் சித்தாசனம்

    By: ram On: 22:08
  • Share The Gag
  • நமது உடலில் உள்ள 72000 நாடி நரம்புகளை சுத்தம் செய்யும் எளிதான ஆசனம் இது.

    செய்முறை :

    முதலில் தரையில் அமருங்கள். பின்னர் இடது காலை மடித்து வலது கணுக்காலில் படும்படி மடித்து அமருங்கள். அடுத்தது வலது காலை மடித்து இடது தொடை மீது படும்படி செய்யுங்கள்.

    இரு கைகளையும் சின் முத்திரை தாங்கி கால் முட்டிகள் மீது வைத்து மூச்சை நிதானமாக இழுத்து விட வேண்டும். இவ்வாறு இந்த ஆசனத்தில் 20 நிமிடம் அமர வேண்டும். பிறகு கைகளை சமநிலைக்கு கொண்டு வந்து பின்னர் நிதானமாக  ஒவ்வொரு காலாக பிரித்து நிமிர்த்தி அமர்ந்த பின் எழ வேண்டும்.

    பயன்கள் :

    இந்த ஆசனத்தை செய்வதால் மனம் அமைதி அடையும். ரத்த ஒட்டம் சீராகும். பின்புறம் மற்றும் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் குறையும். மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    ’நான் காப்பி அடிக்கிறேனா?’ சொல்கிறார் மெட்ராஸ் இசையமைப்பாளர்..!

    By: ram On: 20:55
  • Share The Gag
  • தற்போதைய தமிழ் சினிமாவில் தன் வித்தியாசமான இசையில் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் சந்தோஷ் நாரயணன். இவர் இசையமைப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் மெட்ராஸ்.

    இப்படத்தின் பின்னணி இசையில் வரும் சிலவற்றை சந்தோஷ் நாராயணன், ஹன்ஸ் சிம்மர் இசையமைத்த இன்செப்ஷன் படத்தில் இருந்து காப்பியடித்து இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    இதற்கு விளக்கம் அளித்த இவர் "ஹன்ஸ் சிம்மர் இசையமைத்த இன்செப்ஷன் படத்தின் 'டைம்' இசையைப் போலவே 'மெட்ராஸ்' படத்தில் சில இசைக் கோர்ப்புகள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள். அவ்வாறு கூறிய இசை வல்லுநர்களுக்காக விரைவில் 'மெட்ராஸ்' படத்திற்காக நான் உருவாக்கிய இசையை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ய இருக்கிறேன்" என்று தன் ஃபேஸ்புக் தளத்தில் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து 'மெட்ராஸ்' படத்தில் இடம்பெற்ற KILLED FROM INSIDE என்ற பெயரில் பின்னணி இசையினை வெளியிட்டு, "'மெட்ராஸ்' படத்தின் பின்னணி இசையினை சொன்னது போலவே வெளியிட்டு விட்டேன். தற்போது படத்தின் பின்னணி இசை உள்ளிட்டவை சமூக வலைத்தளங்களில் விவாதம் செய்வது புத்துணர்ச்சியாக இருக்கிறது.

    இசையை காப்பியடித்திருக்கிறேன் என்ற செய்திக்கு விளக்கம் அளிக்கவே இதனை பதிவேற்றி இருக்கிறேன். எனது பணிகள் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் விளக்கம் அளிக்க காத்திருக்கிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.

    மக்களை மொட்டையடிக்கும் சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்! விரிவான அலசல்!

    By: ram On: 20:45
  • Share The Gag
  • [ நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம் ]

    "AMWAY
    " இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம்.
    இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு
    முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு.

    இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம்.

    ஒருவன்
    என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல்
    வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன்
    உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில்
    இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த
    வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா
    சொல்லுவான்?.

    [i]ஒருவனை
    இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று "இந்த தொழில்
    செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால்
    உன் நோய் குணமாகிவிடும்" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக
    கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் "AMWAY" இதுவரை
    தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான
    வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம்
    கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.[/i]

    [i]ஒரு
    நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள்
    விற்ப்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும்
    பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில்
    இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு
    நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்ப்பட்டுவிடும்
    என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. [/i]

    [i]இந்த
    கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து
    நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற
    நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில்
    கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான்
    இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம்
    விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS)
    மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.[/i]

    [i]FMCG
    பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை
    சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை
    செய்ய இந்தியாவில் ஏற்க்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு
    வருகின்றன, பின்பு எதற்க்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய
    நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும்?.

    [i]அடுத்தது
    PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால்
    அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி
    வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக
    விற்பனை செய்யலாம்?.[/i]


    [i]பொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்: [/i]
    [i]ஒரு
    நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்ப்பட்டால் பங்குசந்தையில் உள்ள
    அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது
    போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து
    நிறுத்துவது சில செக்ட்டார்கள் தான், அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE
    SECTOR) என்று சொல்வார்கள்.

    [i]அந்த
    DEFENCE SECTOR என்று சொல்லப்படும் செக்டர்களில் முக்கியமான இரண்டு
    செக்டார்கள் தான் இந்த FMCG மற்றும் PHARMACEUTICAL செக்டோர்கள். இந்த
    இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த
    AMWAY நிறுவனமும். ஆனால் இது இந்திய நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு
    நிறுவனம். நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் இந்த
    நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை. [/i]

    [i]இப்படி
    இருக்கும்போது இந்த AMWAY நிறுவனம் DIRECT SALE என சொல்லப்படும் நேரடி
    விற்ப்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால் DEFENCE SECTOR என
    சொல்லப்படும் இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும்,
    இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில் நமது நாட்டில் பொருளாதார
    வீழ்ச்சி ஏற்ப்பட்டால் பாதிப்பு முன்பை விட அதிகமாகவே இருக்கும்.
    இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY
    நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார் என்றால் நீங்களே
    யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.[/i]

    [i]இதனால்
    நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக
    பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் வேலை இழப்பால்
    பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு
    வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு
    இருக்கும் கடமையை உணர்ந்து
    செயல்படுங்கள்.[/i]

    [i]இதுவரை
    நான் எழுதியதெல்லாம் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும்
    வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம்
    பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும்
    என்று ஒருசிலர் இருப்பார்கள், இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம்.
    நீங்கள் AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட
    இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.[/i]

    [i]ஏமாற்றும் வழிகள்: [/i]
    [i]இந்த
    நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது உறவினரோ
    ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது
    வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு
    மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து
    இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய்
    ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை
    கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு
    வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர். [/i]

    [i]நமது
    இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில்
    இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது
    மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான்.
    பயனாளர் மூலம் கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர் என பலர் லாபம்
    பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின்
    ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். [/i]

    [i]இவர்கள்
    சொல்வது உண்மைதான், மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம்
    பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர்
    ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின்
    பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின்
    பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக
    உள்ளது.[/i]

    [i]►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20 ரூபாய் (கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).[/i]

    [i]►ஆனால்
    ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய் (விளம்பரதாரர்,
    விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே!)[/i]

    [i]மேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.[/i]

    [i]TOOTHBRUSH(1) -19 ரூபாய்[/i]

    [i]HAIR OIL(500 ML) -95 ரூபாய்[/i]

    [i]SHAVING CREAM(70G) -86 ரூபாய்[/i]

    [i]OLIVE OIL (1 LITRE) -400 ரூபாய்[/i]

    [i]FACE WASH -229 ரூபாய்[/i]

    [i]PROTIEN POWDER(1KG) - 2929 ரூபாய்[/i]

    [i]மேலே
    இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்
    இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?. இத்தனைக்கும்
    இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என
    பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு
    குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக
    சொல்லி விற்று வருகின்றனர்.[/i]

    [i]நேரடி
    விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில்
    லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால்
    ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற
    இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். [/i]

    [i]இந்திய
    நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது
    ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே
    நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால்
    இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால்
    இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?[/i]

    [i]► ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும். [/i][i](எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)[/i]

    [i]►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.[/i]

    [i](எந்த
    ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம்
    உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த
    நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)[/i]

    [i]►
    இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது
    6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு
    நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில்
    30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய்
    லாபம் வருகிறது.[/i]

    [i]இப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்: [/i]

    [i]►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய்.[/i]

    [i]►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் .[/i]

    [i]►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.[/i]

    [i]இந்த
    நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம்
    ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று
    எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.[/i]

    [i]►ஒருவன்
    ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு
    கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது
    இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)[/i]

    [i]100 x 995 = 99500 ரூபாய்[/i]

    [i]இந்த
    ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில்
    அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும்
    மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று
    சொல்வார்கள்.[/i]

    [i]3000 x 100 = 300000 ரூபாய்[/i]

    [i]அப்படிபார்த்தால்
    இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500
    ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).[/i]

    [i]இவ்வளவு
    கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் (
    ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.[/i]

    [i]இன்னொரு
    கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால்
    வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள் அதிலும் ஒரு
    கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிருவனத்தில்
    இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக
    வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு
    கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல்
    இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே
    300 அல்லது 900 PV , அதற்க்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான்
    சம்பாதிக்க முடியும்.[/i]

    [i]300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)[/i]

    [i]900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)[/i]

    [i]இந்த
    PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில்
    இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.[/i]

    [i]லட்சங்களையும்,
    கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி
    கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத
    மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான்
    வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த
    நிறுவனத்தில் இனைந்து
    தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை
    விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.[/i]

    [i]இந்த
    நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை
    ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு
    நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் .
    இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த
    ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம்
    பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்.[/i]

    [i]இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்: [/i]

    [i]தயவு
    செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில்
    உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து
    சொல்லுங்கள்.

    பரு தழும்புகளால் கவலையா?

    By: ram On: 19:31
  • Share The Gag

  • பருக்களைக் கிள்ளவோ, தொடவோ கூடாது. ஃபேஷியல் செய்யக் கூடாது. சாதாரணமாக வரும் பருவானது, தானாகவே சரியாகி விடும். அதைக் கிள்ளி, அழுத்தித் தொந்தரவு செய்தால்தான் பிரச்சனையே! சூடான எதையும் சாப்பிட வேண்டாம்.

    கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்க வைத்து, ஆறிய தண்ணீரைக் குடிக்கவும். நான்கு பல் பூண்டை அரைத்து, வலியுள்ள பழுத்த பருவின் மேல் வைக்கவும். அதற்கு மேல் கீழே குறிப்பிட்டுள்ள பேக் போடவும். சிறிது வேப்பந்தளிர் எடுத்துக் கையால் கசக்கி, சாறு எடுக்கவும்.

    கஸ்தூரி மஞ்சள் அல்லது கடலை மாவில் விரலைத் தொட்டு, வேப்பம் சாற்றையும் தொட்டு, பரு மேல் பொட்டுப் போல வைக்கவும். பருக்கள் பரவலாக இருந்தால், இதையே முகம் முழுக்கத் தடவவும். இந்த முறையை வாரம் 2 முறை என தொடர்ந்து செய்து வந்தால் பரு தழும்புகள் படிப்படியாக மறைவதை காணலாம்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் விசாரணை! வெளிவந்த உண்மை

    By: ram On: 19:16
  • Share The Gag
  • வெற்றிமாறன் அடுத்து தனுஷை வைத்து சூதாடி என்ற படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் இவர் யாருக்கும் தெரியாமலேயே ‘அட்டகத்தி’ தினேஷை வைத்து விசாரணை என்ற படத்தை எடுத்து முடித்துவிட்டாராம்.

    இப்படம் ஹாலிவுட் படங்களை போல் 1.30 மணி நேரம் தான் ஓடுமாம். இதுகுறித்து அவர் தரப்பில் ‘இது தான் மிகக் குறுகிய நேரம் கொண்டதாக வெளிவரும் முதல் வெள்ளித்திரை படம்’ என்று கூறியதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    இப்படத்தின் ரிலிஸுக்கு பிறகே தனுஷ் படத்தை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எரிபொருளை மிச்சப்படுத்த எளிமையான சில யோசனைகள்

    By: ram On: 18:53
  • Share The Gag
  • பெட்ரோல் மற்றும் டீசல் விலை மடமடவென உலக சந்தையில் ஏகிறிக்கொண்டே செல்கின்றது. அதன் இருப்புகளும் தீர்ந்துகொண்டு தான் செல்கின்றது. சராசரி குடியானவன் என்ன செய்ய முடியும்? அதிகபட்சம் தான் சார்ந்திருக்கும் நிறுவனம், சங்கம், அமைப்புகள் மூலம் எதிர்குரல் கொடுக்க முடியும். அரசுக்கு நாம் படும் அவதிகளை சுட்டிக்காட்ட முடியும். அதனை அரசு ஏற்று அதை நடைமுறைபடுத்துகின்றாதா என்பது வேறு கதை. அடுத்த சந்தியினருக்கு நாம் விட்டு செல்வதெல்லாம் அவர்கள் நிம்மதியாக வாழ முடியாத வாழ்கை மட்டுமே. எத்தனை இயந்திரங்கள், நவீன கண்டுபிடிப்புகள் இருந்து என்ன பயன். நிம்மியாக சுவாசிக்க காற்றை நாம் விட்டு செல்லபோவதில்லை, குடிக்க குடிநீரை நிலத்தடியில் விட்டுவைக்கவில்லை, நீளும் இந்த பட்டியல்..

    சரி பெட்ரோல் விலை ஏறுகின்றது என்கின்ற எரிச்சலை தூரப்போட்டுவிட்டு அதனை சரியாக முறையாக எப்படி பயன்படுத்தி நாட்டுக்கும் வீட்டுக்கும் நமக்கும் எப்படி நல்லது செய்ய முடியும் என்பதனை பார்க்கலாம். சில யோசனைகள்

    1. பிடித்துக்கொண்டே இருக்காதே.
    வண்டி ஓட்டும் போது கைகளை (இருசக்கர வாகனம் ஓட்டுகையில்) கால்களை (நான்குசக்கர வாகனம் ஓட்டுகையில் கிலட்சில்(clutch) அதிகம் வைத்துக்கொண்டு ஓட்ட வேண்டாம். இது அதிக எரிபொருளை செலவு செய்யும்.தேவையான சமயம் மட்டுமே பயன்படுத்துவது நல்லது. இது பாதிக்கு பாதி எரிபொருளை மிச்சம் செய்யும். அனேகமாக வண்டி ஓட்ட பழகும் போதே இதனை சொல்லி இருப்பார்கள். மேலும் கிலட்சை பிடித்துக்கொண்டு ஓட்டும் போது எஞ்சின் விரைவில் பாழடைந்துவிடும்.

    2. சன்னலை திற காற்று வரட்டும்
    குளிரூட்டப்பட்ட வாகனத்தில் செல்லும் போது, வெளியே நல்ல தட்பவெட்பம் சூழல் நிலவுகையில் குளிர்சாதன வசதியினை பயன்படுத்தாமல் சாரளத்தை திறந்துவைக்கலாம். இது சுமார் 10% எரிபொருளை மிச்சப்படுத்தும்.

    3. நட ராசா
    நடக்கும் தூரத்தில் இருக்கும் இடத்திற்கு நடந்தே செல்லவும். வாகனத்தை பயன்படுத்துவதை தவிர்த்துவிடலாம். இது உடலுக்கும் நல்லது தானே. சைக்கிள் வாங்கும் வசதி இருப்பின் முடிந்த அளவிற்கு அதனை பயன்படுத்தலாம்.

    4. காற்றில்லாத போது அடுத்துக்கொள்
    அடிக்கடி வண்டியில் உள்ள காற்றின் அடர்த்தியினை சரிபார்க்கவும். குறைந்த அடர்த்தியுள்ள வாகனங்கள் 50% சதவிகிதம் வரை அதிக எரிபொருளினை ஏப்பம் விடுமாம். பெட்ரோல் போடும் பொழுதே இதை சரிபார்க்கும் வசதி எல்லாம் பெட்ரோல் நிலையங்களிலும் உள்ளது.

    5. சீர் கேட்காதே, சீராக செல்
    சீரான வேகத்தில் வாகனத்தினை செலுத்தினால் சுமார் 30% சதவிகிதம்வரை எரிபொருளினை சேமிக்கலாம். சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் எப்படி சீரான வேகத்தில் செல்ல முடியும் என்கின்ற கேள்வி நியாயமானதே. பீக் அவர் எனப்படும் நேரத்தை தவிர்த்து அதற்கு முன்னரே அலுவலகத்திற்கு பயனிக்கலாம். அதே போல திரும்பவரும் போதும் அப்படி செய்யலாம். அது அவரவர் வேலையின் தன்மையினை பொருத்ததே.

    6. கம்முனு கெட
    சிக்கலான சிக்னல் இல்லாத ஊரே இல்லை எனலாம். அதுவும் எவ்வளவு நேரம் நிற்கப்போகின்றோம் என்பது கூட நமக்கு தெரியாது. அந்த சூழல்களில் வண்டியினை நிறுத்திவிடுதல் சிறந்தது. முதலில் எரிபொருள் சேமிக்கப்படும், இரண்டு தேவையில்லாத கழிவுக்காற்று, மூன்று சத்தம் குறையும். உர் உர் என்று உருமிக்கொண்டே இருப்பது எரிச்சல்களை ஏற்படுத்தவில்லை?

    7. கனத்தை குறை
    கனமான பொருட்களை வண்டியில் சுமந்து செல்லாதீர்கள். தேவையான பொருட்களை மட்டுமே எடுத்து செல்லவும். அதிக எடை அதிக எரிபொருள். மூட்டை முடிச்சுகள் போன்றவைகளையும் அகற்றிவிடவும். தேவையற்ற பொடுட்கள் இருக்கும் போது குளிர்சாதனம் செய்ய அதிக எரிபொருள் தேவைப்படும்.

    8. சுத்தம் சோறு போடும்
    மூன்று மாதத்திற்கு ஒரு முறை வண்டியினை சர்வீஸ் செய்யவும். ஏதேனும் அடைப்பு இருந்தால் சர்வீஸ் செய்யும் போது சரிசெய்யப்படும். முறையாக சர்வீஸ் செய்யாத வாகனங்கள் நிறைய பெட்ரோல் டீசலை குடிக்கும். பெங்களூரில் வண்டியிலிருந்து வெளியேறும் புகையில் எவ்வளவு நச்சு கலந்து இருக்கின்றது, அதன் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றதா என்ற சோதனை சான்றிதழ் எல்லா வண்டியிலும் இருக்க வேண்டும். அது இல்லை என்றால் கடுமையான கட்டணம் வசூலிக்கப்படுக்கின்றது. இது எல்லா இடத்திலும் வந்தால் நலம்.

    9. பேருந்து பயணம்
    நல்ல பேருந்து வசதி இருக்கும் ஊர்களுக்கும் இடங்களுக்கும் நம் வாகனத்தை பயன்படுத்துவதை தவிர்த்து பேருந்துகளை பயன்படுத்தலாம். இது கூட்ட நெரிசலையும் குறைக்கும், எரிபொருளையும் மிச்சப்படுத்தும்.

    10. ஒன்றாக செல்லுங்களேன்.
    ஒரே/அடுத்த குடியிருப்பில் வசிக்கும் நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் சேர்ந்து ஒரே இடத்திற்கு செல்லவேண்டுமானால் தினமும் ஒருவர் மாற்றி ஒருவர் வண்டியினை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் சுற்றி இருப்பவர்களுடன் நல்ல நட்பும் கிடைக்கும். அதே போல சுற்றி இருக்கும் மாணவர்கள் ஒரே பள்ளிக்கு செல்லவேண்டுமெனில் தனித்தனி வாகனத்திற்கு பதிலாக ஒரு நாள் நீங்களும், மறுநாள் அடுத்த நண்பர் என பேசி அதன்படி நடக்கலாம்.

    இவை அனைத்தும் உங்களுக்கு தெரிந்தவை தான். என்றாலும் இது ஒரு நினைவூட்டலே. காலத்தின் அவசியமாக மாறிவிட்டது. போராட்டங்களும் முழக்கங்களும் ஒரு புறம் நடக்கட்டும், நாமும் பங்கேற்போம் அதே சமயம் இவற்றையும் நடைமுறை படுத்தலாமே.!!!

    கடைசியாக

    என்னிடம் பணம் உள்ளது, நான் எவ்வளவு எரிபொருள் வேண்டுமானாலும் பயன்படுத்துவேன் என்று நீங்கள் நினைத்தால் உங்களை கட்டுப்படுத்த யாரும் இல்லை. அல்லது வாகனமே வேண்டாம் சாமி எதற்கு? நம்ம முன்னோர்கள் எல்லாம் என்ன காரிலும் பைக்கிலுமா சென்றார்கள் என்று கேட்கலாம். அது நடைமுறைக்கு வந்தால் சந்தோஷம் தான். இவை நம்மால் இயலக்கூடிய சாதாரண விஷயங்கள் தான். நடைமுறைபடுத்திவிட்டால் சிரமம் ஏதும் தெரியாது.

    நமக்காகவும், நம் அடுத்த தலைமுறையினருக்காகவும் இதை பற்றி சிந்தித்தே தீரவேண்டும்.

    தீபாவளி ரேஸில் இருந்து பின் வாங்கிவிட்டதா ஐ?

    By: ram On: 18:28
  • Share The Gag
  • இந்த தீபாவளியை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். கத்தி, ஐ என இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் வரவிருக்கிறது.

    ஆனால் ஐ படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2ம் வாரத்தில் நடக்கும் எனவும், இதில் ஜாக்கிஜான் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

    அதேபோல் ஹிந்தியில் இசை தட்டை வெளியிட ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் வருகிறார் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    இதனால் படம் தீபாவளியிலிருந்து ஒரு வாரம் தள்ளி போகும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டாலும், தயாரிப்பாளர் தரப்பில் "இன்னும் இரண்டு நாட்களில் அனைத்தும் முடிவாகி விடும்.

    பெரிய பட்ஜெட் படம் என்பதால், பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டே தான் இருக்கும். அனைத்திற்கும் பதில், இன்னும் இரண்டு நாட்களில் தெரியும்"என்று அறிவித்துள்ளனர்.

    உடல் இளைக்க கிரீன் டீ.....? கிரீன் டி எதற்கு பயன்படுகிறது

    By: ram On: 17:54
  • Share The Gag


  • 1.கிரீன் டீ  நம் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க செய்து நமது  வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.பசிஎடுக்கும் உணர்வு குறைக்கபடுவதால் குறைந்தளவே சாப்பிட முடியும் .ஆதலால் உடலில் தேவையற்ற ஆற்றல் சேர்வது  குறைக்கபடுகிறது. இயற்கையான வழியில் உடல் இளைக்க கிரீன் டீ உதவுகிறது .

    2.நமது உடலில் இருக்கும் அதிகப்படியான நீர் நம் உடல் குண்டாக தோன்றுவதற்கு ஒரு காரணமாகும். அத்தகைய நீரினை கிரீன் டீ உடலிலிருந்து குறைப்பதால் மெலிதான தோற்றத்தை அடையலாம்.

    3.கிரீன் டீ-யில் catechins என்ற வேதிப்பொருள் இருப்பதால் உடலை வெப்பப்படுத்தும் பணியை செய்கின்றன.இது உடலில் உள்ள  கொழுப்பை எரித்து ஆற்றலை கொடுக்கிறது .இதனால் கொழுப்பு இழக்கப்படுகிறது, உடல் எடை குறைக்கபடுகிறது .

    4. உடலில் கார்போஹைட்ரேட்டை மெதுவாக செயல்பட  வைப்பதால் இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைக்கபடுகிறது . இதனால் குளுகோஸ் கொழுப்பாக மாறும் அளவும் குறைக்கபடுகிறது.உடல் எடையும் குறைக்கபடுகிறது .


    கிரீன் டீ-யின்  பயன்கள் :

        கேன்சர் உருவாவதை தடுக்கிறது.
        சர்க்கரை நோயை கட்டுபடுத்துகிறது.
        இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
        ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கும், முகப்பரு மற்றும் சுருக்கங்களை தடுக்கிறது.
        எடை இழப்பிற்கு உதவி செய்கிறது .
        முதுமை அடைவதை தடுக்கிறது ,இளமையாக இருக்க உதவுகிறது.
        சீரான செரிமானத்திற்கு உதவுகிறது .
        குடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குகிறது.
        சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவற்றை பாதுகாக்கிறது .
        எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
        சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது.

    ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திரையுலகம் திரண்டது!

    By: ram On: 17:38
  • Share The Gag
  • சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தன் முதல்வர் பதவியை இழந்தார். இதை தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் நேற்று வரை போராட்டம் நீடித்தது.

    தற்போது ஜெயலலிதாவை, விடுதலை செய்யக்கோரி தமிழ் திரையுலகம் சார்பில் நாளை(செப்., 30ம் தேதி) ஒருநாள் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அநேகமாக தயாரிப்பாளர்கள் சங்க வளாகத்தில் இது நடக்கலாம் என தெரிகிறது. இதில் நடிகர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

    திரை விமர்சனம் - ஜீவா

    By: ram On: 12:38
  • Share The Gag
  •  மட்டையை எடுத்துக்கொண்டு தெரு வில் இறங்கும் கோடிக்கணக்கான சிறுவர்களுக்கு இருக்கும் ஆசைதான் ஜீவாவுக்கும் இருக்கிறது. சச்சின் டெண்டுல்கரைப் போல ஆக வேண்டும் என்பதுதான் அவன் கனவு. “நல்லா ஆடறி யேடா, யார் கிட்ட கத்துக்கிட்ட?” என்று கேட்கும் ஆசிரியரிடம் “சச்சின் கிட்ட கத்துக்கிட்டேன் சார்” என்று சொல்லும் ஜீவா, கிரிக்கெட் கனவுகளுடனும் தீவிரமான பயிற்சியுடனும் வளர்கிறான்.

    ஏழு வயதில் தொடங்கும் அவனது கிரிக்கெட் ஆர்வம், அவன் இளைஞ னாகும்போது காதலால் பெவிலியனுக் குத் திரும்புகிறது. காதல் தோல்வியின் வேதனை கிரிக்கெட் வாசலை மீண்டும் திறக்க வழிசெய்கிறது. கிரிக்கெட்டைத் தொடர்ந்து காதலும் புதுப்பிக்கப்பட, அவன் வாழ்வில் மளமளவென்று வளர்ச்சி. ரஞ்சி அணியில் இடம்பெறும் அவனும் நண்பன் ரஞ்சித்தும் களத்துக்கு வெளியே எதிர்பாராத நெருக்கடியை எதிர்கொள்ள, அவர்கள் கனவுப் பாதை சிதிலமாகிறது. ஆடுகளம் சார்ந்த அவர்களது லட்சியப் பயணத்தில் யாரெல்லாம் விளையாடுகிறார்கள், இறுதியில் லட்சியத்தை அடைய முடிந்ததா என்பதை போரடிக்காமல் சொல்கிறார் இயக்குநர்.

    கிரிக்கெட்டில் நடக்கும் ஊழலைப் பற்றிப் பலரும் படமெடுத்துள்ளார்கள். ஆனால் அதில் ஆதிக்கம் செலுத்தும் சாதி உணர்வைப் பற்றி யாருமே பேசிய தில்லை. அதைப் பேசத் துணிந்த இயக்குநர் சுசீந்திரன் பாராட்டுக் குரியவர். நன்றாக விளையாடியவனின் முதுகை அதிகாரி தடவிப் பார்க்கும் காட்சி தமிழ்த் திரையுலகில் இதுவரை காணப்படாதது. “அவர் தட்டிக்கொடுக்கிறார்னு நெனைச்சேன், ஆனா அவர் தடவிப் பார்த்தாருன்னு அப்புறம்தான் புரிஞ்சுது” என்னும் வசனம் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறது. பாதிப்புக்குள்ளான ரஞ்சித் சம்பந்தப்பட்டவரைப் பார்த்துக் கேட்கும் கேள்விகளில் தெறிக்கும் நியாயமும் புள்ளிவிவரங்களும் யாரையும் யோசிக்கவைக்கும்.

    கிரிக்கெட் பற்றிய கதையில் காதல் என்பதையும் கிட்டத்தட்ட இணை கோடாகக் கொண்ட திரைக்கதை அதற் கான காரணத்தையும் கொண்டிருக் கிறது. ஆனால் காதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் அளவுக்கு அதிகமாக நீண்டு பொறுமையைச் சோதிக்கின்றன. பாடல் காட்சிகளும் திரைக்கதையில் தேக்கத்தை ஏற்படுத்துகின்றன.

    காதல், பிரிவு, பணக் கஷ்டம் போன்றவை புளித்த மாவில் செய்த பண்டங்களாக இருந்தாலும் அதிகாலையிலேயே மைதானத்துக்கு வரும் ஜீவாவுக்கு வாட்ச்மேன் பந்து வீசுவது, ஜீவாவின் சோகத்தை கோச் எதிர்கொள்ளும் விதம், ஜீவாவின் அப்பா குடிப்பதை நிறுத்தும் இடம் என்று சில இடங்கள் மனதைத் தொடும் அளவில் செதுக்கப்பட்டிருக்கின்றன.

    விஷ்ணு விஷால், கிரிக்கெட் ஆடத் தெரிந்தவர் என்பதால் பாத்திரத்திற் குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். நண்பனை இழந்த துக்கம், புறக்கணிப் பால் வரும் குமுறல் ஆகிய தருணங் களில் நேர்த்தியான நடிப்பு வெளிப் படுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் சந்தோஷத்தில் சிரித்துக்கொண்டே கண்ணீர் விடும் காட்சியில் கைதட்டலை அள்ளுகிறார். ஆனால் காதல் காட்சி களிலும் பாடல் காட்சிகளிலும் வழக்க மான தமிழ் சினிமா ஹீரோவாக ஆகி விடுவது பலவீனம்.

    நண்பனாக வரும் லட்சுமணனும் கவனம் ஈர்க்கிறார். கிரிக்கெட் ஆடும் காட்சிகளிலும் அதிகாரியிடம் வாதிடும் காட்சியிலும் முத்திரை பதிக்கிறார்.

    ‘அண்ணா.. கொஞ்சம் சக்கரை வேணும்’ என்று பள்ளி மாணவியாகக் கதைக்குள் நாயகி ஸ்ரீதிவ்யா வரும் போது அவரது துறுதுறுப்பும் அழகும் கவர்கின்றன. காதலிப்பது, காதலிக்கப் படுவதைத் தவிர அவருக்கு வேறு எந்த வேலையும் இல்லை. பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம், பிறகு வேலைக்குச் செல்லும் பருவம் என்று மாறுபட்ட தோற்றங்களில் தன் திறமையைக் காட்டியிருக்கிறார்.

    பின்னணி இசையிலும் பாடல்களி லும் புதிதாகக் கேட்பதுபோல் செய்திருக் கிறார் இமான். ஆர். மதியின் ஒளிப்பதிவு படத்துக்கு வண்ணம் சேர்க்கிறது. கிரிக் கெட் காட்சிகள் நன்கு படம்பிடிக்கப்பட் டிருக்கின்றன. பொருத்தமான வசனங் கள் மூலம் கவனம் ஈர்க்கிறார் சந்தோஷ்.

    காதலில் தோல்வி என்றால் அதற் குப் பெண்களையே குற்றம்சாட்டும் தமிழ் சினிமாவின் நோய்க்கு சுசீந்திர னும் தப்பவில்லை. யதார்த்தமாகப் படம் எடுக்க முயற்சி செய்பவர்களும் பெண்கள் தரப்பைப் பற்றிக் கவலைப் படாமல் இருப்பது வேதனைக்குரியது.

    கிரிக்கெட் பின்னணியில் எவ்வளவு அரசியல் இருக்கிறது, திறமையானவர் கள் எவ்வாறு சாதி அடிப்படையில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய துணிச்சலுக்காகவும் அதைச் சுவையான கதையாகச் சொன்னதற்காகவும் சுசீந்தரனுக்கு வாழ்த்துக்கள்.

    அஜினோ மோட்டோ….நல்லதா கெட்டதா? ஒரு விரிவான ஆய்வு..!

    By: ram On: 12:21
  • Share The Gag
  • மனிதனைத் தவிர உயிரினங்கள் அனைத்தும் உணவை உயிர்வாழ்வதற்கான ஆதாரப் பழக்கமாக மட்டுமே கொண்டுள்ளன. ஆனால் மனிதன் மட்டுமே சுவைக்காகவும், சுகத்துக்காகவும் உணவருந்தும் பழக்கம் உள்ளவனாக இருக்கிறான்.

    இந்த பழக்கம் நவீன உலகில் இந்தியா போன்ற வளரும் நாடுகளை பெரும் சந்தையாக்கி இருப்பதால், சுவையின் பெயரால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வினோதப் பண்டங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரித்து இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றன.

    கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகி வரும் அஜினோமோட்டோ என்ற உப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். முன்பு சென்னை போன்ற மாநகரங்களில் மட்டும் பிரபலமாக இருந்த மோனோ சோடியம் குளூட்டமேட் (Mono sodium glutamate) என்ற வேதிப்பெயரைக் கொண்ட இந்த விநோத உப்பு, தற்போது கிராமப்புற வீடுகளின் சமையலறைக் குள்ளும் புகுந்துவிட்டது.

    கண்ணைக் கவரும் வண்ணங்களில், வித்தியாசமான நறுமணத்துடன் சந்தைக்கு வரும் எந்த பொருளாக இருந்தாலும் அவற்றை வாங்கிக் குவிக்கும் நமது மக்கள், அஜினோ மோட்டோவுக்கும் அடிமையாக இருப்பதில் வியப்பில்லை.

    பிரியாணி, ஃபிரைடு ரைஸ், சாம்பார், ரசம் போன்ற எதுவாக இருந்தாலும், ஒரு ஸ்பூன் அஜினோ மோட்டோ சேருங்கள்.. சாப்பிட அடம்பிடிக்கும் உங்கள் குழந்தைகள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்று பாருங்கள் என்ற விளம்பரங்களுடன் சந்தையில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த அஜினோமோட்டோ விற்பனை, இப்போது பெட்டிக்கடைகள் வரை சக்கைப்போடு போடுகிறது.

    அஜினோமோட்டோ கலந்த உணவை உண்டால், குழந்தைகளுக்கு ஆபத்து. தினமும் மூன்று கிராமுக்கு மேல் அஜினோமோட்டோ கலந்த உணவை உண்டால் பெரியவர்களுக்குக்கூட கழுத்துப் பிடிப்பு, தலைவலி, நெஞ்வலி, தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் வர வாய்ப்பு உள்ளது என்ற சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது. அப்போதுதான் அஜினோ மோட்டோவின் இன்னொரு முகம் பொதுமக்களுக்கு தெரியத் தொடங்கியது.

    அஜினோமோட்டோ தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஏஜெண்டுகள், அஜினோ மோட்டோவைப் பயன் படுத்தும் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்டுகள் என அனைவருக்கும் சென்னை மாநகராட்சி இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் இதுகுறித்து கீழ்க்கண்ட விளக்கத்தை அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் அளித்தனர்.

    எங்கள் நிறுவனம் கண்டுபிடித்த இந்த சோடியம் குளுட்மேட் தொண்ணூற்று எட்டு ஆண்டுகளாக இருபத்து மூன்று நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. அஜினோமோட்டோ என்ற பெயரில் இதனை விற்பனை செய்து வருகிறோம். வேறு பல நிறுவனங்களும் வெவ்வேறு பெயர்களில் இதனை விற்பனை செய்து வருகின்றன.

    சீன, ஜப்பானிய, ஸ்பானிய, பிரெஞ்ச் மற்றும் மேற்கத்திய உணவு வகைகளிலும் அஜினோ மோட்டோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாங்கள் தாய்லாந்தில் இருந்து இதை இறக்குமதி செய்து சென்னையில் பேக் சேய்து இந்தியா முழுவதும் விற்கிறோம்.

    அஜினோமோட்டோவால் தலைவலி, வாந்தி, உடல் அசதி, கழுத்துப்பிடிப்பு, மூச்சுத் திணறல் வரும் என்ற தவறான தகவல் ஆரம்பத்தில் அமெரிக்காவில் உலா வந்தது. அதன்பிறகு நடந்த ஆய்வில் அது தவறான கூற்று எனத் தெரிய வந்தது. அஜினோமோட்டோவால் எந்த ஆபத்தும் இல்லை என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஆராய்ச்சிக் கழகம் சான்றிதழ் அளித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு இது பாதுகாப்பானது என அங்கீகரித்துள்ளது. சில நிபந்தனைகளுடன் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

    மேலும் சோடியம் குளுட்மேட் என்பது ஒரு அமினோ அமிலம். இது நம் உடலில் உள்ள புரதத்தில் இயற்கையாகவே உள்ளது. நாங்கள் ஆண்டுக்குப் பதினெட்டு லட்சம் டன் சோடியம் குளுட்மேட்டை உற்பத்தி செய்து, அதை எழுபதாயிரம் கோடி டாலருக்கு விற்று வருகிறோம். இதே அளவுக்கு கலப்பட சோடியம் குளுட்மேட் விற்பனையும் நடைபெறுகிறது. கடைகளில் கலப்படமாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் சோடியம் குளுட்மேட், உண்மையிலேயே ஆபத்தானது. இந்த கலப்பட சோடியம் குளுட்மேட்டை தடுத்தாலே தற்போது எழுந்துள்ள சர்ச்சை ஓய்ந்துவிடும் என்று அவர்கள் விளக்கம் கூறியிருந்தனர்.

    போலி உணவுப் பொருட்களையும் மாத்திரை மருந்துகளையும் கண்டறிவதே குதிரைக்கொம்பாக இருக்கும்போது, போலி வேதிப் பொருட்களை கண்டறிவது சுலபமான வேலையா என்ன ?

    விஷத்தன்மை

    இந்த அஜினோமோட்டோவின் விஷத்தன்மை பற்றி இருவேறு கருத்துகள் இருந்தபோதிலும் பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன. கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து கொடுத்து வந்தால் அவற்றின் குட்டிகளுக்கு மூளைப் பகுதியில் உள்ள செல்கள், அளவில் சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

    அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாக குறையும். இதனால் உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் ஆர்குவேட் நுக்ளியஸ் என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.

    மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் அழற்சியையும், சிறு ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்றுவலி அடிக்கடி ஏற்படும். ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு இந்த வேதிப் பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, உடல் வியர்க்க ஆரம்பித்துவிடும். இந்த நோய்க் குறிகளுக்கு சைனா உணவக நோய் என்று தனிப் பெயரே சூட்டப் பட்டுள்ளது.

    ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட்

    அஜினோ மோட்டேவைப் போன்றே பாஸ்ட் புட் கடைகளிலும், ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் பயன்படுத்தப்படும் ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெயும், பல்வேறு ஆபத்துக்களை உருவாக்கும் குணம் கொண்டது என்ற தகவல்களையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெய் பசு, எருது, பன்றி போன்ற பல விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப் படுவதாகும். இதில் உடலுக்குத் தேவையற்ற ஒருவித கொழுப்பு இருக்கிறது. பாக்கெட்டுகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ், பீட்ஸா, சாக்லெட், துரித உணவுகள் போன்றவை இந்த எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன. இந்த எண்ணெயைப் பலமுறை திரும்பத் திரும்ப பயன்படுத்தினாலும் உணவின் மணம் மாறாது பதினெட்டு மாதம் வரை உணவுப் பொருள் கெட்டுப் போகாது. மெக்டொனால்ட், பீட்ஸா கார்னர்களில் கிடைக்கும் ஸ்னாக்ஸ் பொருட்கள் நாம் வீட்டுத் தயாரிப்பை விட சுவையுடன் இருப்பது போல தோன்றுவதற்கு இந்த எண்ணெய்தான் காரணம். ஆனால் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் உடலில் வேண்டாத கொழுப்பு சேர்ந்து இருதய நோய், புற்றுநோய், உடல் பருமன் எல்லாம் வந்துவிடும் என்கிறார்கள். இது குறித்து எச்சரிக்கும் மருத்துவ ஆய்வாளர்கள்.

    புதிது புதிதாக கண்டுபிடித்து சுற்றுச் சூழலிலும், உணவிலும் கலக்கும் பெரும்பாலான வேதிப் பொருட்களை நமது கல்லீரலில் செயல்படும் பி 450 என்னும் நொதிப் பொருட்கள் விஷ முறிவு செய்து நம்மைக் காப்பாற்றுகின்றன. ஆயினும் சில வகையான நச்சுப் பொருட்களை வெளியேற்ற முடியாமல் இந்த பி 450 நொதிகள் திணறுகின்றன. குறிப்பாகச் செயற்கை நிறமிகளும் அஜினோ மோட்டோ போன்ற சுவையூட்டிகளும் பி 450 நொதிகளைச் செயலிழக்கச் செய்கின்றன.

    சோடியம் குளுட்மேட்டை உணவில் கலந்து சாப்பிடுவதால் தலைவலி, வாந்தி வருவதாக எழுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க டாக்டர்கள் கண்டுபிடித்து எச்சரித்தனர். ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கக் கூடாது என்ற அமெரிக்க அரசு தடை விதித்தது.

    இந்த நிலையில், அஜினோமோட்டோ நிறுவனம் 6 ஆண்டுகளுக்கு முன் அமர்க்களமாக இந்த சோடியம் குளுட்மேட்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. பால், பால் சேர்க்கப்பட்ட பொருள்கள், மினரல் வாட்டர், ஐஸ்கிரீம், காபி, டீ போன்றவற்றில் இதைக் கலக்கக்கூடாது என்ற நிபந்தனையோடுதான் அஜினோமோட்டோ நிறுவனம் இங்கு அடியெடுத்து வைக்க இந்திய அரசு அனுமதியளித்தது. ஆனால், இந்திய உணவுப் பொருள் கலப்பட தடுப்புச் சட்டத்திற்கு எதிராக இந்த பொருள் விளம்பரப்படுத்தப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

    பரவலான விளம்பரங்கள் மூலமும் வீடு வீடாக சென்று விற்பனை செய்வதாலும் தற்போது பலரும் இந்த நச்சுப் பொருளை சமையலில் ஒரு சுவையூட்டியாகச் சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரிய உணவகங்களில் வழங்கப்படும் சூப்களிலும் பிரியாணி வகைகளிலும், துரித உணவகங்களில் வறுத்து வழங்கப்படும் எல்லா உணவுப் பண்டங்களிலும் இந்த அஜினோமோட்டோ சேர்க்கப்படுகிறது. விருந்துணவு தயாரிக்கும் பல சமையல் நிபுணர்கள் டேஸ்ட் பவுடர் என்று பெயரிட்டு சமையல் பொருட்களின் பட்டியலில் இதையும் சேர்த்து வாங்குகின்றனர்.

    இதனால்தான் திருமணம் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் உணவு உண்போர் உடனடியாக வயிற்று உபாதையால் அவதிப்படுகிறார்கள்.

    மேலை நாடுகளில் உணவுப் பொட்டலங்களின் அட்டைப் பெட்டியில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை வெளிப்படையாக எழுத வேண்டும் என்று விதி இருக்கிறது.

    ஆனால் நமது நாட்டில் குழந்தைகளைக் கவரும் வகையில் பல வண்ணப் பாக்கெட்டுகளில் நொறுக்குத் தீனிகளை விற்பவர்கள் அவற்றில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை மறைத்து அஞீஞீஞுஞீ ஞூடூச்திணிதணூண் என்று மக்களுக்குப் புரியாத சங்கேத மொழியில் எழுதி ஏமாற்றுகிறார்கள்.

    குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கப்படும் ரெடிமேட் நொறுக்குத் தீனிகளாக மேகி, லேய்ஸ், குர்குர்ரே என்பதிலிருந்து இன்று பலவகை துரித உணவுகள், வீட்டுச் சமையல் அறைகள் வரை புகுந்துவிட்ட இந்த அஜினோமோட்டோ தன் கரங்களை இன்னும் அகலமாக நீட்டிக்கொண்டிருப்பது அதன் ஆக்கிரமிப்புத் தன்மையையே காட்டுகிறது.

    சாப்பாட்டில் அதிகம் பிரியமில்லாத நோஞ்சான் குழந்தைகளுக்குப் பல பெற்றோர்கள் இந்த அஜினோமோட்டோ கலந்த நொறுக்குத் தீனி பொட்டலங்களை வாங்கிக் கொடுப்பர். இந்தக் குழந்தைகளும் வீட்டு உணவைவிட இந்தப் பொட்டலத் தீனிகளை அளவுக்கு அதிகமாக விரும்பித் தின்பர். குழந்தை இதையாவது சாப்பிடுகிறதே என்று ஆசை ஆசையாக பலரும் அதை வாங்கிக்கொடுப்பர்.

    சில மாதங்கள், வருடங்கள் கழித்து இந்த நோஞ்சான் எக்கச்சக்கமாக சதை போட்டு ஊளைச் சதையுடன் தோன்றுவான் என்பதே உண்மை. பசியை கண்ட்ரோல் செய்யும் உடலின் இயற்கையான நொதிப் பொருட்கள் அஜினோமோட்டோ வால் செயல்படாத தன்மை ஏற்படும்போது, அஜினோமோட்டோவைத் தொடர்ந்து உண்ணும் சிறுவர்கள் சில காலம் கழித்துக் கண்டதை உண்ண ஆரம்பிப்பார்கள். பசிக்கும் நேரத்தில் அளவுக்கு அதிகமாக இப்படி உண்டதால்தான் இவர்கள் காலப்போக்கில் நடக்க முடியாத அளவுக்கு குண்டாக மாறிவிடுகிறார்கள்.

    பிறப்புக் கோளாறு, உறுப்புகளில் வளர்ச்சியற்றத் தன்மை, தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, செரிமானச் சிக்கல், கெட்ட கனவு, தூங்குவதில் சிக்கல், சோம்பல், மிதமாகும் இதயத்துடிப்பு, முடிகொட்டுதல், ஆஸ்துமா, பக்கவாதம், அல்சிமர்ஸ் என்ற முதுமை நோய் மற்றும் சர்க்கரை நோய் என அஜினோமோட்டோ அள்ளி வழங்கும் நோய்களை சர்வதேச மருத்துவ ஆய்வாளர்கள் அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

    பெற்றோர்களே ! குழந்தைகளே இயற்கையான உப்பு நம்மிடம் இருக்க இந்த அஜினோமோட்டோ என்ற ஆபத்து தேவையா?

    தயவு செய்து சிந்தித்துப் பாருங்களேன்..

    இதற்கான ஆதாரங்கள்

    Sharon fowler, University of Texas, USA
    Jock – Samvels – NOHA Board member Lecture on “The dangers and hidder sowiees of processed free glutmatic acid”
    Dr. Olney, 5w Brain lesions, Obesity and other disturbences in mice treated with MSG
    Mr.Ka He, Department of Nutrition School of public health,
    University of Carolina.
    Dr. Betty Maritimi, Georgic, Asinomoto, Aspartame & Brain
    Tumors Recipe of Death.

    நிலைமை புரியாமல் டுவிட்டரில் மோதிக்கொண்ட அஜித், விஜய் ரசிகர்கள்!

    By: ram On: 11:16
  • Share The Gag
  • டுவிட்டர், பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் எப்போதும் அஜித், விஜய் ரசிகர்களுக்குள் கருத்து மோதல் நடப்பது சாதரணம் தான். ஆனால் தமிழகத்தில் அரசியல் பிரச்சனைகள் தலை தூக்கி நிற்க, அதை மையமாக கொண்டு அவர்கள் செய்த விஷயம் ஒன்று பலரையும் சங்கடப்படுத்தியுள்ளது.

    நேற்று டுவிட்டரில் #IfAjithBecomesCM மற்றும் #IfVijayIsCm என்ற டேக்கை கிரியட் செய்து, இதை இந்திய அளவில் ட்ரண்ட் செய்தனர்.

    இதில் வழக்கம் போல் மாறி, மாறி தங்களுக்கு பிடிக்காத நடிகர்களை திட்டி கொண்டனர். ஒரு முதல்வர் பதவியை வைத்து இவர்கள் இப்படி கேலி, கிண்டல் செய்தது மிகவும் அநாகரிகமானது என்று பலர் டுவிட்டரிலேயே கருத்து தெரிவித்து வந்தனர்.

    அஞ்சரைப்பெட்டி அருமருந்து பெட்டி

    By: ram On: 10:34
  • Share The Gag
  • அடுப்பங்கரையில் உள்ள அஞ்சரைப்பெட்டியில் உள்ள பொருட்கள் சமையலுக்கு மட்டுமல்ல உடல் நலம் காக்கும் உண்ணத மருந்தாகவும் பயன்படுகிறது. கடுகு,சீரகம், மிளகு, வெந்தயம், மஞ்சள் என வகை வகையாய் இடம் பெற்றிருக்கும் அஞ்சரைப்பெட்டியை அருமருந்து பெட்டி என்றே கூறலாம்.

    மஞ்சள்

    நோய் எதிர்ப்பு குணம் மஞ்சளில் அதிகம் உண்டு. வயிற்றுப் புண்களை குணமாக்கும். உடலில் அடிபட்ட காயங்களில் சிறிதளவு மஞ்சளை எடுத்து பூசினால் ரணம் குறையும். சளியை போக்கும்

    கடுகு

    கடுகு சிறுத்தாலும் காரம் போகது என்பார்கள். அந்தளவிற்கு நோய் தீர்க்கும் சக்தி கடுகுக்கு உண்டு. அனைத்துவகை உணவுப் பொருளும் சமைத்து முடித்தவுடன் சுவைக்காக தாளித்து கொட்டப்படும் கடுகு விஷபேதி, வயிற்றுவலி,ஜன்னி போன்ற நோய்களுக்கு ஏற்றது.

    வெந்தயம்

    உடல் சூட்டை குறைக்கும். நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும்

    சீரகம்

    உடலின் உள்ளே உள்ள நச்சுக்களை அகற்றுவதில் சீரகத்திற்கு ஈடு இணை இல்லை. இது அஜீரணம்,வயிற்றுவலி, பித்தமயக்கம் முதலிய நோய்களை போக்கும்.

    மிளகு

    திரிகடுகத்தில் ஒன்றாகிய மிளகு வயிற்றுக் கோளாறுகளை சீராக்கி பசியை அதிகரிக்கச்செய்யும். இது தொண்டை கமறலுக்கும், மூலரோகங்களுக்கும் ஏற்றது.

    பெருங்காயம்

    சாம்பார், ரசம் முதலியவற்றில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் பெருங்காயம் வயிறு தொடர்பான நோய்களைப் போக்கும். வயிற்றுப்பொருமல், வயிற்றுவலி போன்ற நோய்களுக்கு ஏற்றது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சாதாரணமாக இவற்றை கொடுக்கலாம்.

    லவங்கம், கிராம்பு

    அசைவ சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பட்டை, கிராம்பு போன்றவை அஜீரணத்தைப் போக்கும், வாந்தியை நிறுத்தும்.

    ஆண்களைவிட பெண்கள் மிக முக்கியமாக சாப்பிட வேண்டிய சாறு

    By: ram On: 00:22
  • Share The Gag
  • கருப்பு திராட்சையில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதில் போலிக் அமிலம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

    பலர் கர்ப்பகாலங்களில் சாப்பிடக்கூடாது, குழந்தை கருப்பாக பிறக்கும் என்பார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, நீங்கள் சாப்பிடுவது குழந்தைக்கும் நல்லது தாய்க்கும் நல்லது.

    தர்பூசணி பழத்தில் தண்ணீர்ச்சத்து அதிகம் இருக்கும். வைட்டமின் ஏ சத்து மற்றும் போலிக் அமிலம் அதிகம் காணப்படுவதால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. தாய்மார்கள் விரும்பிச் சாப்பிடலாம்.

    அத்திப் பழச்சாறு ஆண்களைவிட பெண்கள் மிக முக்கியமாக சாப்பிட வேண்டிய சாறு. ஏனெனில் பெண்களுக்கு ஏற்படும் சத்துக்குறைவு(இரத்தசோகை) பிரச்சனைகளை சரி செய்கிறது.

    உடலில் இரத்தத்தைச் சுத்திகரிக்கக் கூடியது. இதில் இரும்புச்சத்து அதிகம். பெண்கள் அதிகமாக சாப்பிட வேண்டும். சோர்வாக இருக்கும் போது சாப்பிட்டால் உடனடியாக சுறுசுறுப்பு வரும்.