Saturday, 30 August 2014

நானும் ரவுடிதான்... தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி - நயன்தாரா நடிக்கும் படம்!

By: ram On: 23:28
  • Share The Gag

  • தனுஷின் சொந்தப் பட நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் அடுத்து தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா.

    தனுஷ் சமீபத்தில் தயாரித்து நடித்த ‘வேலையில்லா பட்டதாரி' படம் பலத்த வரவேற்பை பெற்றது. வசூலும் குவித்தது. இதைத் தொடர்ந்து இந்த நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் புதுப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    நானும் ரவுடிதான்... தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி - நயன்தாரா நடிக்கும் படம்!

    இந்தப் படத்துக்கு நானும் ரவுடிதான் என தலைப்பிடப்பட்டுள்ளது. நயன்தாரா - விஜய் சேதுபதி நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். ‘போடா போடி' படத்தை எடுத்த விக்னேஷ் இயக்குகிறார்.

    நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்பது விஜய் சேதுபதியின் நீண்ட நாள் ஆசையாகும்.

    முன்பு ஒரு விழாவில், நயன்தாராவைக் கடத்த வேண்டும் என ஆசை இருக்கிறது என்று கூறி அதிரவைத்தார் விஜய் சேதுபதி. அதை முன் வரிசையில் அமர்ந்து ரசித்துக் கேட்டார் நயன்தாரா.

    இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க வேண்டும் என நயன்தாராவிடம் கேட்டதும், சந்தோஷமாக ஒப்புக் கொண்டாராம்.

    பண்டைய கால வீடுகளில் திண்ணை வைத்து கட்டியது ஏன்?

    By: ram On: 22:24
  • Share The Gag

  • நம் முன்னோர்கள் பிறருக்கு ஈகை புரிவதில் வான் அளவு உயர்ந்து நின்றனர். இன்றைய கால மக்கள் காலம் காலமாக வைத்து போற்றும் அளவு எதிர்கால சந்ததியினருக்கு நிறைய பண்பாடு,கலாசாரம்,வளங்கள்,மருத்துவ முறைகளை விட்டு சென்றுள்ளனர். அவர்களது ஈகை உணர்வுக்கு எடுத்துகாட்டாக பண்டைய கால வீடுகளில் உள்ள திண்ணைகளை கூறலாம். பேருந்து இல்லாத காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யும் வழிபோகர்கள் தங்க ஏதுவாக வீட்டில் திண்ணைகளை அமைத்தனர்.

    மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தரும் இடமாகவும், வயது முதிர்ந்த வயதானவர்கள் என பலதரப்பட்ட மக்களும் தங்கள் அறிவினை பகிருந்துகொள்ள, பொழுது போக்கிற்காக,கூட்டு குடும்பங்களாய் வசிப்போர் தங்கள் குடும்பத்தினருடன் பொழுதினை கழிக்க என பல முகங்கள் திண்ணைகளுக்கு உண்டு. இன்றைய "பாஸ்ட் பூட்" காலத்தில் பெற்ற குழந்தையுடன் செலவிடும் நேரமே குறைந்து விட்டநிலையில், நாங்கள் எப்படி வாழ்ந்தோம் என்று பாருங்கள் என்று நமக்கு ஒரு பாடமாகவே விளங்குகிறது நம் முன்னோர் விட்டு சென்ற இந்த திண்ணைகள்.

    ஆண்மை அதிகரிக்க இலவங்கப்பட்டை(Cinnamon)

    By: ram On: 21:11
  • Share The Gag

  • தாது விருத்திக்கு
    தாது நட்டம் உள்ளவர்கள் இன்று பகட்டு விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தைத் தொலைத்துக்கொண்டிருப்பார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையை தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம்.

    தாதுநட்டம் பேதி சருவவிஷம் ஆகியநோய்
    பூதகிர கஞ்சிலந்திப் பூச்சிவிடஞ்-சாதிவிடம்
    ஆட்டுமிரைப் போடிருமல் ஆகியநோய்க் கூட்டமற
    ஓட்டுமில வங்கத் துரி
    சன்னலவங் கப்பட்டை தான்குளிர்ச்சி யுண்டாக்கும்
    இன்னுமிரத் தக்கடுப்பை யீர்க்குங்காண்-முன்னமுறும்
    உந்திக் கடுப்பகற்றும் உண்மூலப் புண்போக்கும்
    கந்தமிகு பூங்குழலே! காண்

    - அகத்தியர் குணபாடம்

    லவங்கப்பட்டையை கறிமசாலாவில் அதிகம் சேர்ப்பார்கள். இது அதிக சுவையையும், மணத்தையும் தரக்கூடியது.

    நீரிழிவு நோய்க்கு

    நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் லவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது.

    வாய் துர்நாற்றம் நீங்க

    வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் லவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.

    செரிமான சக்தியைத் தூண்ட
    எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில் லவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.

    இருமல், இரைப்பு

    சளித்தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காச நோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்கு ஆளாவார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.

    விஷக்கடிக்கு

    சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும்.

    வயிற்றுக் கடுப்பு நீங்க

    வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.

    பெண்களுக்கு

    குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு கருவாப்பட்டை கஷாயம் செய்து கொடுத்து வந்தால் கருப்பை வெகு விரைவில் சுருங்கி சாதாரண நிலைக்கு வரும். அதிக உதிரப்போக்குள்ள பெண்களுக்கும்இது சிறந்த மருந்து.

    இத்தகைய அரிய பயன்களைக் கொண்ட கருவாப்பட்டையை இனியும் ஒதுக்கலாமா... முன்னோர்களின் வழியைப் பின்பற்றி நாமும் நோயின்றி நூறாண்டு வாழ்வோம்.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் விஜயசாந்தி

    By: ram On: 20:26
  • Share The Gag

  • தமிழ், தெலுங்கு திரையுலகில் 1980 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் விஜயசாந்தி, இரு மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்தார். ரஜினி, கமல், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா போன்றோருடனும் நடித்துள்ளார். பிறகு அரசியலில் இணைந்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார். நிறைய பட வாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தெலுங்கு பட மொன்றில் மீண்டும் நடிக்கிறார்.

    விஜயசாந்தி ஏற்கனவே நடித்து வெற்றிகரமாக ஓடிய ஓசே ராமு லம்மா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கின்றனர். இதில் விஜயசாந்தி நடிக்கிறார்.

    இந்த படத்தின் முதல் பாகம் 1997–ல் வெளியாகி 200 நாட்கள் ஓடிய விஜய சாந்தியின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இது இருந்தது. தாசரி நாராயணராவ் இயக்கினார். தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் நடித்து மீண்டும் சினிமாவுக்கு வருகிறார்.

    அண்ணனே தேவலாம்… அலற வைக்கிறாராம் தம்பி

    By: ram On: 19:27
  • Share The Gag

  • ‘நெறிகட்டுன புண்ணு மேலயே இப்படி குறி வச்சு அடிக்குறானுங்களே… ’ என்று மெல்லிசை விரும்பிகள் கதறுகிற அளவுக்கு ‘மிஜீக் ’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இப்போது வரும் யூத் இசையமைப்பாளர்கள். இவர்களிடமிருந்தெல்லாம் வேறுபட்டு மாறுபட்டு நிற்பார் என்று பெரிதும் நம்பப்படுகிறார் குறளரசன். ஏனென்றால் அவரது அப்பா டி.ஆர் போட்ட பாடல்கள் அப்படி. இன்றும் எங்காவது டி.ராஜேந்தரின் பழைய பாடல்களை கேட்டால், வண்டி ஒரு நிமிஷம் நின்று அனுபவித்து விட்டு போகிற அளவுக்கு இருக்கிறது அவரது காலத்தை கடந்த ஹிட்டுகள். இத்தனைக்கும் இசைஞானி இளையராஜா காலத்திலேயே பாடல்களுக்காக கோல்டன் டிஸ்க் விருதுகள் வாங்கியவர் அவர்.

    காலப்போக்கில் அவரும் டண்டணக்கரா ஆகிப் போனார் என்பது வேறு விஷயம். ஆனால் அதிலும் ஒரு தாளம் இருந்தது. சுதி இருந்தது. எல்லாவற்றும் மேல் ஒரு ருசி இருந்தது. அவரது வாரிசான சிம்பு நடிக்க வந்தாரே ஒழிய இசையமைப்பாளர் ஆகவில்லை. அவர் நினைத்திருந்தால் இன்று முன்னணியிலிருக்கும் அத்தனை இசையமைப்பாளர்களையும் ‘வர்றீங்களா விளையாட்டுக்கு?’ என்று சவால் விட்டிருக்க முடியும். ஆனால் அவர் ரூட் மாறி போய்விட்டார். இன்று குறள்….?

    பாண்டிராஜ் இயக்கி வரும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் இசையமைப்பாளரே குறள்தான். தமிழ் திரையுலகமே ரொம்பவும் ஆவலோடு எதிர்பார்த்து வருவது இந்த படத்தையும் அதைவிட இந்த படத்தில் இசையமைத்திருக்கும் குறளையும்! ஆனால் குறள் என்ன செய்கிறாராம்? படத்தில் ஐந்து பாடல்களை திட்டமிட்டிருக்கிறாராம் பாண்டிராஜ். ‘அதுல ரெண்டு வந்தாச்சு… மிச்சம் மூணு எங்கேப்பா…?’ என்றால், ‘அந்த மூணுதான்ணே இது’ என்று பதில் சொல்லக்கூட ஆளைக் காணோமாம்! அண்ணனுக்கு போட்டியா தம்பி வருவார்னு பார்த்தால், மற்றவங்களுக்கு இம்சை கொடுக்கிற விஷயத்தில்தான் அது நடக்கும் போலிருக்கு என்கிறார்கள் இ.ந.ஆ யூனிட்டில். படமே முடிஞ்சுருச்சு. பாடல்களுக்காக காத்திருக்க ஆரம்பித்திருக்கிறாராம் பாண்டிராஜ்.

    என்ட்ரி டிக்கெட் போடும்போதே எக்சைட் கேட் திறக்கற டயத்தையும் கேட்டு தெரிஞ்சுக்க வேணாமா சார்…?

    கோவில்கள் ஏன் மலைகளில் அதிகம் அமைதுள்ளன?

    By: ram On: 18:39
  • Share The Gag

  •  மலையில் ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது.

    இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது.

    தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக்கோயில், கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது.

    இதனால் தான் திருப்பதி, பழநி, திருச்செந்தூர், குற்றாலத்தில் மக்கள் கூட்டம் மொய்க்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

    இது எப்படி என்றால், இங்கே அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச்செலவு மிச்சம்.

    13 ஆம் எண்,8 ஆம் எண் கெட்ட சகுனமா?

    By: ram On: 18:25
  • Share The Gag

  • மூடநம்பிக்கைகள் பலவிதம் உண்டு; அதில் ஒன்று இவ்வகை எண் மூடநம்பிக்கை, தன்னம்பிக்கை இல்லாத இடத்தில் மூடநம்பிக்கை நிறைந்து இருக்கும்.

    சிலர் தன்பெயரில் கூட ஓர் எழுத்தைக் கூட்டியோ அல்லது குறைத்தோ மாற்றியமைப்பதுண்டு.

    கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று அவர்கள் நம்புவது உண்மையானால், இந்த 13ஆம் எண்ணைப் படைத்தவரும் கடவுள் தானே?.

    இன்னும் சில பேருக்கு எட்டாம் எண்ணும் பிடிக்காது;

    ஏன் வாகனப் பதிவில் பெருவாரியாக இது பின்பற்ற படுகிறது. கூட்டினால் 9 வருகின்ற எண்ணை வாங்க தனிக்கட்டணம்.

    எந்த எண்ணாக இருந்தாலும் சரியாக ஓட்டவில்லை என்றால் விபத்து தானே நடக்கும், உயிரிழப்பு வரும்.

    விஞ்ஞான மனப்பான்மையை மக்கள் மத்தியில் வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது (51A).

    நாட்டு மக்களுக்கு உணவைவிட உண்மையில் முக்கிய மாகத் தேவைப்படுவது பகுத்தறிவே. அது சரியாக இருந்தால்தான் மற்றவைகளும் சரியாக இருக்கும்.

    ஸ்ருதிஹாசனின் கவர்ச்சிக்கு கமல் சொன்ன அறிவுரை

    By: ram On: 17:22
  • Share The Gag

  • தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து முன்னணியில் இருந்து வருபவர் ஸ்ருதிஹாசன்.

    இவர் தன்னுடைய உடலை எப்படி ஸ்லிம்மாகவும், கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் என்பதை பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

    அவர் கூறியதாவது, உடல்நலத்திற்கு தீங்கு இளைக்காததும், உடம்பை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள உதவி செய்வதும் சைவ உணவு வகைகள் மட்டுமே என்று தனது தந்தை கமல்ஹாசன் தனக்கு சிறுவயது முதல் அறிவுறுத்தி வந்துள்ளதாக கூறினார்.

    மேலும் அவருடைய அறிவுரையை முடிந்தவரை தான் கடைபிடித்து வருவதால்தான் தன்னால் ஸ்லிம் உடம்பை கவர்ச்சியாக மெயிண்டன் செய்ய முடிகிறது என்று அவர் கூறியுள்ளார்.

    கமல் படத்தில் சித்தார்த் நடிக்கிறார்..!

    By: ram On: 17:08
  • Share The Gag

  • கன்னடத்தில் உருவான லூசியா திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய ஹிட் அடித்தது.

    இப்படத்தை சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழில் ரீமேக் செய்யவுள்ளது. ஏற்கெனவே இப்படத்திற்கு சித்தார்த் நாயகனாகவும், தீபா சன்னிதி நாயகியாகவும் நடிக்கிறார் என்று நாம் அறிவித்திருந்தோம்.

    தற்போது இந்தப் படத்திற்கு ‘எனக்குள் ஒருவன்’என்று பெயர் வைத்துள்ளனர். ஏற்கெனவே இந்த பெயரில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த ஒரு படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கத்தி கதையை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவு! அதிர்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ்!

    By: ram On: 16:48
  • Share The Gag

  • தீபாவளிக்கு பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரவுள்ள திரைப்படம் கத்தி.

    விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் இத்திரைப்படம் ஏற்கனவே தயாரிப்பாளர் ராஜபக்சே உறவினர் என்ற சர்ச்சை உள்ளது.

    இந்நிலையில் இப்படத்தின் கதையை என்னிடமிருந்து திருடிவிட்டார் என்று ஏ.ஆர். முருகதாசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மீஞ்சூர் கோபி மனு தாக்கல் செய்துள்ளார்.

    தனது ஊரில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று தன் நிறுவனத்தைத் துவங்க அப்பாவி மக்களிடம் இருந்து நிலத்தை அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்தியது. இதை வைத்து 'மூத்த குடி' என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதினேன்.

    இந்தக் கதையை கேட்டுவிட்டு பாராட்டிய ஏ.ஆர்.முருகதாஸ், சில திருத்தங்களைச் சொல்லி, கதையை இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டாகவும் மாற்றச் சொன்னார். அதன்பின் என்னை இயக்குநராக வைத்து இந்தப் படத்தை தயாரிக்கவும் ஏ.ஆர்.முருகதாஸ் சம்மதித்தார்.

    கதையை மேம்படுத்தும் வேலைகள் மட்டும் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்றது. ஆனால், அதன் பிறகு திடீரென்று அந்த வேலையை நிறுத்திவிட்டு 'என்னால் இப்போது இத்திரைப்படத்தைத் தயாரிக்க முடியாது' என்று சொல்லி ஏ.ஆர்.முருகதாஸ் ஒதுங்கிக் கொண்டார்.

    அதன்பிறகு திடீரென்று நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் 'கத்தி' திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. அது பற்றி நான் சினிமா ஆட்களிடம் விசாரித்தபோது 'கத்தி' திரைப்படத்தின் கதை நான் சொன்ன 'மூத்த குடி' கதைதான் என்று எனக்குத் தெரிய வந்தது.

    எனவே நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு இயக்குநர் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் 'கத்தி' திரைப்படம் வெளியாகும் முன் எனக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என்று மீஞ்சூர் கோபி தன் மனுவில் கூறியுள்ளார்.

    இந்த வழக்கு பற்றி விசாரித்து உண்மை நிலையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அட்வகேட் கமிஷனராக வழக்கறிஞர் சங்கரை நீதிமன்றம் நியமித்துள்ளது. 'மீஞ்சூர் கோபியும், ஏ.ஆர்.முருகதாஸும் தங்களது கதையின் நகலை இவரிடம் கொடுக்க வேண்டும். இரண்டும் ஒரே கதையா என்பதை வழக்கறிஞர் சங்கர் ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம் - க்ரஞ்சஸ் பயிற்சி!

    By: ram On: 13:46
  • Share The Gag
  • தொப்பை குறைய உதவும் க்ரஞ்சஸ் பயிற்சிஇன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.

    அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.

    செய்முறை: 


    முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.

    அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.

    ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும். 

    ஃப்ரன்ட் அண்ட் சைடு லெக் ரைஸ்!

    By: ram On: 13:46
  • Share The Gag

  • ஃப்ரன்ட் அண்ட் சைடு லெக் ரைஸ்



    சுவருக்கு அருகே நேராக நின்று கொள்ளவும். வலது கையை சுவரில் வைத்துக்கொண்ட இடது கையை இடுப்பில் வைக்கவும். இந்த நிலையில் இடது காலை முடிந்த வரை முன்னால் உயர்த்தவும்.

    பின்பு பழைய நிலைக்கு வந்த பின் இடது பக்கம் உயர்த்தவும். இது போல் 15 முறை செய்தவுடன் இடது கையை சுவரிலும் வலது கையை இடுப்பிலும் மாற்றி வைத்து 15 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். சில விநாடிகள் ரிலாக்ஸ் செய்த பின் மேலும் 2 செட்கள் செய்ய வேண்டும்.

    பலன்கள் :

    இடுப்புத் தசைகள் வலுவடையும். கோர் மசில்ஸ் எனப்படும் வயிற்றைச் சுற்றியுள்ள அனைத்துத் தசைகளும் வலுப்பெறும். பெண்களுக்கு, அடி வயிற்றுப் பகுதிகள் வலுவடையும். கால்கள் வலுப்பெறும். 

    சசாங்காசனம்!

    By: ram On: 13:46
  • Share The Gag
  • சசாங்காசனம்

    செய்முறை:

    விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவும்.  பின்னர் நிமிர்ந்து இயல்பான சுவாசத்தில் மெதுவாக உடலை முன் புறமாக குனியவும். உங்கள் தலை படத்தில் உள்ளபடி கால்களுக்கு இடையே இருக்க வேண்டும்.

    கைகள் இரண்டையும் பின்புறமாக கொண்டு சென்று கால் பாதத்தின் பின்புறத்தை தொடவும். இந்த நிலையில் 15 வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.

    பயன்கள்:

    முதுகுத்தண்டுக்கு மேலும் புதிய ரத்தம் கிடைக்க வழி செய்கிறது. நரம்பு மண்டலத்திற்கு ஆக்சிஜன் கிடைக்க வழி செய்கிறது. தைராய்டு, மூலம், ஜலதோஷம், சைனஸ் பிரச்சனை போன்ற நோய்களை குணமாக்குகிறது. தூக்கமின்மை, சர்க்கரை நோய் மற்றும் மனநோய் தீருகிறது.

    தென்னைமட்டை தலையில் விழுந்தால் ஆயுள் குறையுமா?

    By: ram On: 12:05
  • Share The Gag

  • தென்னை மரங்கள் உயரமாக இருக்கறதுனால அதுல இருக்குற தென்னை மட்டை, தேங்காய் போன்றவை தென்னை மரம் அடியில் நடக்கும் பொது
    தலையில் விழ நேரிடும்.

    இப்படி தென்னைமட்டை தலையில் விழுறது கேட்ட சகுனம்னு பொதுவான ஒரு கருத்து இருக்கு.

    அது அவர் அவர் விருபத்த பொருத்தது, இருந்தாலும் அறிவியல் உண்மை என்னனா தென்னை மட்டை, தேங்காய் எல்லாம் நம்ம தலையில விழும்போது தலையில் "உள்காயம்,நரம்பு பாதிப்பு,மண்டை பாதிப்பு, மூளை பாதிப்பு" ஏற்படும்.

    இதுனால உடல் கொஞ்சம் கொஞ்சமா நோய்வாய்ப்படும்.

    சிலருக்கு ஒண்ணுமே ஆகாது. அது காயத்த பொருத்து மாறும்.

    எப்படியோ தென்னைமரம் அடியில நடகுறப்ப கொஞ்சம் ஜாகரதையா
    இருங்க நண்பர்களே.

    ரிலிஸ்க்கு முன்பே வசூல் சாதனை செய்த ஐ!

    By: ram On: 11:44
  • Share The Gag

  • ஷங்கர் இயக்கிய எந்திரன் படமே இதுநாள் வரை கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் முதலில் இருக்கிறது. இதை முறியடிக்க அவரே ஐ மூலம் களத்தில் இறங்கியுள்ளார்.

    இப்படம் உலகம் முழுவதும் 15,000 தியேட்டர்களுக்கு மேல் ரிலிஸ் ஆகிறது, இவை ஒரு ஹாலிவுட் படத்தின் ரிலிஸ்க்கு நிகரானது.

    இதை தொடர்ந்து இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ்ஸும் பல கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது. படம் வெளிவருவதற்கு முன்னே போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என்று ஆஸ்கர் பிலிம்ஸ் தரப்பு கூறிவருகிறது.

    பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ் - உஷார்...!!!

    By: ram On: 10:43
  • Share The Gag

  •  இன்றைய பெரும்பாலான கல்லூரி மாணவர்கள், தினசரி வேலைக்கு
    செல்பவர்களுடன் ஒன்றிவிட்டது பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ்.

    பார்க்க அழகாகவும், நிறைய வண்ணங்களில் கிடைப்பதாலும், மக்கள்
    விரும்பி வாங்குகின்றனர்.
    நாகரிக முன்னேற்றம் என உண்ணும் உணவில் கூட நஞ்சை விதைகின்றனர் நம் மக்கள்.

    சூடான உணவினை இதுபோன்ற டிபன்களில் அடைப்பதனால் சுவையின்
    குணமே மாறிவிடுகிறது.

    மைக்ரோவேவ் ஒவனில் உணவுகளை சமைப்பதோ, அடிக்கடி பிளாஸ்டிக் கண்டெய்னர்களின் மூலம் உணவுகளை சூடு செய்வதோ, உணவுகளை உண்பதோபெண்களின் ஈஸ்ட்ரோஜன் சுரப்பில் சிக்கல் எழும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    "ஃபூட் கிரேடு" என்று பிளாஸ்டிக் வகைகள் இருந்தாலும் அதிலும் உணவுக்கேடு உருவாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எனவே ஆரோக்கியமான உணவும், ஆரோக்கியமான சமையல் முறையுமே ஹார்மோன்களை சரியாக சுரக்கச் செய்யும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    மனிதர்களின் ஆரோக்கியத்தில் ஹார்மோன்களுக்கு முக்கிய பங்குண்டு.
    ஹார்மோன்களின் சுரப்பு சமமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அவைகளின் சுரப்பு, குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எண்ணற்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

    சத்தான சரிவிகித உணவு உட்கொண்டால் மட்டுமே ஹார்மோன்களின் சுரப்பை கட்டுக்குள் வைக்கமுடியும். ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் பெண்களுக்கு அவசியமானது.