Tuesday, 14 October 2014

தேயிலைகளில் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகள்: எச்சரிக்கும் கிரீன்பீஸ் இந்தியா!

By: ram On: 19:39
  • Share The Gag
  • இந்தியாவின் முன்னணி பிராண்ட் தேயிலைகளில் அதிகமான பூச்சிக்கொல்லி மருந்து நச்சுகள் இருப்பதாக சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக இயங்கும் அரசு சாரா நிறுவனமான  ‘கிரீன்பீஸ் இந்தியா’ எச்சரித்துள்ள நிலையில், இந்திய தேயிலை வாரியம் இது தொடர்பான ஆய்வறிக்கையை ஏற்க மறுத்துள்ளது.

    இது தொடர்பாக கிரீன்பீஸ் இந்தியா ( Greenpeace India ) அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், உலக சுகாதார நிறுவனம் (  World Health Organization – WHO)  அனுமதித்துள்ள அளவைக் காட்டிலும் அபாயகரமான அளவில், இந்தியாவில் விற்கப்படும் முன்னணி பிராண்ட் தேயிலைகளில் பூச்சிக்கொல்லி மருந்து உள்ளதாக கூறியுள்ளது. மேலும் தேயிலை செடிகளில் அடிக்க அனுமதிக்கப்படாத பூச்சிக்கொல்லி மருந்துகளும் இதில் காணப்படுவதாகவும் அது தெரிவித்துள்ளது.

    கடந்த 2013 ஜுன் மாதம் முதல் 2014 மே மாதம் வரை இந்திய சந்தையில் அதிகமான விற்கப்படும் 49 பிராண்டுகளின் தேயிலை மாதிரிகளும், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் இந்தியாவின் 11 முன்னணி நிறுவனங்களின் ( இந்த நிறுவனங்கள் ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேடு மற்றும் ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் தங்கள் தயாரிப்பு தேயிலைகளை ஏற்றுமதி செய்கின்றன) தேயிலை மாதிரிகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

    இந்நிலையில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட Hindustan Unilever, Tata Global Beverages, Wagh Bakri, Goodricke Tea, Twinings, Golden Tips, Kho-Cha and Girnar  உள்ளிட்ட பல்வேறு பிரபலமான நிறுவனங்களின் தேயிலை மாதிரிகளில் மிக அதிக அபாயகரமான மற்றும் மிதமான அளவுகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சு காணப்பட்டது.

    இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தேயிலை மாதிரிகளில் ஒருகுறிப்பிட்ட பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சு மட்டும் அல்லாது பலதரப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சுகள் காணப்பட்டுள்ளன. மேலும் கடந்த 1989 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் பயிர்களுக்கு அடிக்க தடை செய்யப்பட்ட  DDT  என்ற பூச்சிக்கொல்லி மருந்து, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரிகளில் 67 சதவீத மாதிரிகளில் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது என கிரீன்பீஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

    இது தவிர மனிதர்கள் மற்றும் பறவைகளுக்கு தீங்கு விளைவிப்பதாக அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட ‘Monocrotophos’ என்ற பூச்சிக்கொல்லி மருந்துகளும் இத்தேயிலை மாதிரிகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

    பீகாரில் கடந்த ஆண்டு, பள்ளியில் மதிய உணவு உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை அந்த அறிக்கையில் நினைவூட்டியுள்ள கிரீன்பீஸ் இந்தியா, அந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவில் மேற்கூறிய ‘Monocrotophos’ பூச்சிமருந்து கலந்ததாலேயே அவர்கள் உயிரிழந்ததாகவும், இதனைத் தொடர்ந்து வளரும் நாடுகள் இந்த ‘Monocrotophos’  பூச்சிமருந்தை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ( Food and Agriculture Organization of the United Nations) வேண்டுகோள் விடுத்திருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது.

    இந்நிலையில் தேயிலை உற்பத்தி துறை பூச்சிக்கொல்லி மருந்து பொறியில் சிக்கிக்கொண்டுள்ளதாகவும், அதிலிருந்து விடுபட்டு இயற்கை மற்றும் சுற்றுச் சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையிலான விவசாய முறையை கடைபிடிக்க வேண்டும் என்றும், தேயிலை நிறுவனங்கள் இந்த மாற்றத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள கிரீன்பீஸ், ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள முன்னணி தேயிலை நிறுவனங்களுடன் தங்களது அறிக்கையின் நகலை பகிர்ந்ந்துகொண்டதாகவும், இது தொடர்பாக அவர்களுடன் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

    ‘இந்திய தேயிலை வாரியம்’  மறுப்பு

    இதனிடையே கிரீன்பீஸ் இந்தியாவின் இந்த ஆய்வறிக்கையை ஏற்க,  மத்திய வர்த்தக துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘இந்திய தேயிலை வாரியம்’ மறுத்துள்ளது.

    கிரீன்பீஸ் இந்தியா அமைப்பு மேற்கொண்ட தேயிலை மாதிரி சோதனைகள்,  நுகர்வோர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட இந்திய சட்ட மற்றும் ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டவை என்றும், இந்திய தேயிலைகள் கடுமையான தரங்களுக்கு உட்படுத்தப்பட்டவை என்றும், முற்றிலும் பாதுகாப்பானது என்றும், உலகம் முழுவதும் இந்திய தேயிலை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும், எனவே இந்திய தேயிலைகள் குறித்து தவறான புரிதல் கூடாது என்றும் அது கூறியுள்ளது.

    ரஜினியை பாஜக குறிவைப்பதற்கு இதுதான் காரணமா?

    By: ram On: 18:22
  • Share The Gag
  • ரஜினி சினிமா துறையை விட ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டுவதும், பல கோவில்களுக்கு ரஜினி போய் வருவதும் வழக்கமாக நாம் அறிந்த விஷயம்.

    பாபா கோவில்களை தவிர காஞ்சி சங்கர மடம் கட்டுப்பாட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு ரஜினி போவது வழக்கமாம்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு காமாட்சி அம்மன் கோவிலுக்கு ரஜினி போனாராம். சென்னை திரும்பிய ரஜினிக்கு ஒரு ஆன்மீகப்புள்ளி ஆசி கூறி கடிதம் அனுப்பினாராம். இதனை பார்த்த ரஜினி அவருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

    அதில் "நீங்கள் அருள்வாக்கு கொடுக்கும் அன்று நிச்சயம் அரசியலில் ஈடுபடுவேன். அதற்காக காத்திருக்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தாராம்.

    இந்த விஷயம் வெளியே தெரியவந்ததால் தான், ரஜினியை நெருங்க ஆரம்பித்துள்ளனர் பாஜகவினர்.

    பருந்து மனிதனுக்கு தரும் பாடம் – வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை.

    By: ram On: 18:01
  • Share The Gag
  • ஒரு பருந்துக்கு ஆயட்காலம் எழுபது வருடங்கள். ஆனால் நற்பது வருடத்தில் அதன் அலகுகளும் கால் நகங்களும் இறக்கைகளும் பலமிழந்து விடுகின்றன. அதற்காக அந்தப் பருந்துக் கூட்டம் சோர்வடைந்து போவதில்லை. அவை தனது அலகுகள் பலமிழந்தவுடன் நேராக மலைக்குப் பறந்து செல்லுமாம். அங்கே மலையிலே தனது அலகை மோதி மோதி உடைத்து விடுமாம். சிறிது நாளில் புது அலகுகள் வளர்ந்துவிடும். பின்பு அந்த அலகால் தனது கால் நகங்களையும் இறக்கைகளையும் கொத்தி கொத்திப் பிடுங்கி விடுமாம். அவையும் சிறிது நாளில் புதிதாக வளர்ந்து விடும். அதன் பின்பு அந்த பருந்து முப்பது வருடங்கள் வாழுமாம்

    பருந்து மனிதனுக்கு தரும் பாடம் – வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை. வலிகள் பல நிறைந்ததுதான் வாழ்க்கை.

    வெண்ணிலா வீடு - திரை விமர்சனம் - பொன் நகையால் ஏற்படும் விளைவுதான் இது..!

    By: ram On: 07:38
  • Share The Gag
  •  ஆசை ஆசையாய் அணிந்து கொள்ளும் பொன் நகை, ஒரு அன்பான குடும்பத் தம்பதியின் புன்னகையைச் சீர்குலையச் செய்கிற கதை ‘வெண்ணிலா வீடு’.

    அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கார்த்தியும் (செந்தில்), தேன்மொழியும் (விஜயலட்சுமி) குழந்தையோடு நடுத்தரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். கார்த்தி ஒரு தனியார் நிறுவனத்தில் நம்பிக்கைக்குரிய மேனேஜராக வேலை பார்க்கிறான். குழந்தை, வீடு ஆகியவற்றுக்கு இடையே இலவச டியூஷன் நடத்தும் இல்லத்தரசி தேன்மொழி. இவர்களின் பக்கத்து வீட்டுக்கு செல்வச் சீமாட்டியாகக் குடிவருகிறாள், இளவரசி (சிருந்தா ஆசாப்). பணக்காரத் திமிர் பிடித்த பெண்ணான இளவரசியைத் தன் அன்பால் வெல்கிறாள் தேன்மொழி. இருவரும் நெருக்கமான தோழிகளாகிறார்கள்.

    கார்த்தி வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளர் மகளுக்கு திருமணம். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கழுத்து நிறைய நகை இருந்தால்தான் வருவேன் என்று பிடிவாதமாக இருக்கிறாள் தேன்மொழி. அதை அறிந்த தோழி இளவரசி தன்னுடைய நகைகளைக் கொடுக்கிறாள். அதை அணிந்துகொண்டு திருமணத்துக்குச் சென்று திரும்பும் வழியில் ஒரு திருட்டுக் கும்பலிடம் நகைகளைப் பறிகொடுக்கிறாள், தேன்மொழி. இந்தச் சம்பவத்துக்கு பிறகு இரண்டு தோழிகளின் நட்பில் எப்படி விரிசல் விழுகிறது. அதனால் ஏற்படும் மனக் கசப்பை சரி செய்ய தேன்மொழியின் கணவன் கார்த்திக் எடுக்கும் முயற்சிகள் என்ன? களவு போன 25 லட்சம் மதிப்பிலான நகை அழகான தம்பதியின் வாழ்க்கையை எப்படிச் சீர்குலைக்கிறது என்கிற கோணங்களில் மீதிக் கதை நகர்கிறது.

    அட்சய திருதியை அன்று நகை வாங்கக் குவியும் மக்களோடும், அவர்களின் மனநிலை குறித்த விவாதத்தோடும் படத்தின் கதை தொடங்கும்போதே, இது தங்கத்தை பற்றிச் சொல்லப்போகிற திரைக்கதை என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. திருட்டுத்தனமாக ஒரு கேமரா நம் வீட்டு ஹால் வழியே நுழைந்து பெட்ரூம் வரைக்கும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை சூசகமாகச் சொல்லி எச்சரிக்கை மணி அடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமகாலிங்கத்தின் விழிப்புணர்வு பாராட்டுக்குரியது.

    அவ்வளவு விசுவாசமான உழைப்பாளி என்று மெச்சிக்கொள்ளும் கார்த்திக்கின் முதலாளி, தனது குடும்ப நிகழ்ச்சிக்கு வந்தபோதுதான் நகை காணாமல் போனது என்பதை அறிந்து வேதனைப்படுவதோடு நிறுத்திக்கொள்கிறார்.அழுத்தமாக ஒரு விஷயத்தை திரைக்கதையில் நகர்த்திக்கொண்டு போகும்போது பாடல்கள் இடைச்செருகல்களாக வேண்டாத இடத்தில் நுழையும். அந்த மாதிரியான செயலுக்காகப் படக் குழுவினர் போராடவில்லை.

    நகைச்சுவைக் காட்சிகளுக்குப் பேர்போன செந்திலுக்கு வித்தியாசமான வேடம். நிறைவாகச் செய்திருக்கிறார். விளை நிலத்தை விற்று கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையைக் கடத்துவோம் என்று முடிவெடுக்கும் சொந்த ஊர்க்காரர்களுக்குப் புரியும்படியாக எடுத்துச்சொல்லும் போதும், திருட்டுப்போன நகைக்காகப் பணத்தை திருப்பிக்கொடுப்பதற்காக அந்த நிலத்தை விற்கிற அளவுக்குப் போகும்போதும் செந்தில் அடக்கமாக, அளவாகவே நடித்திருக்கிறார்.

    ‘மாமா மாமா’ என்று கணவன் மேல் அன்பைப் பொழியும் கிராமத்துப் பெண்ணாக விஜயலட்சுமி கவர்கிறார். கிராமத்திலிருந்து நகரத்தில் குடியேறும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை வெளிப்படுத்தியுள்ள விதத்தை நிச்சயம் பாராட்டலாம். கார்த்திக்கைத்தான் தேன்மொழி காதலிக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன் கார்த்திக்கின் நண்பர்கள் அவளுக்குக் காதல் வலை வீசும் சம்பவங்கள் பலவீனமான காமெடி சீன்களாகவே இருக்கின்றன. இவர்களைக் கடந்து மனதில் நிற்கும் கேரக்டரில் அசத்துகிறார் கார்த்திக்கின் குடிகார மாமா.

    சிருந்தா ஆசாப் அப்பாவாக வரும் ‘வழக்கு எண்’ முத்துராமன் வில்லனாக நடித்திருக்கிறார். துடுக்கான வில்லன் என்பதைவிட மகள் மீது பாசத்தைப் பொழியும் சராசரி அப்பாவாக நடித்திருக்கும் விதம் சிறப்பு. ‘ஜானி ஜானி’ பாடல் இளைஞர்களை கவரும். பின்னணி இசைப் பணியையும் கதைக்கும், காட்சிக்கும் சிக்கலில்லாமல் கையாண்டிருக்கிறார், இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம். தேசிய விருது பெற்ற எடிட்டர் சாபு ஜோசப்பின் வேலைகளும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கின்றன.

    வலுவான அம்சங்கள் பல இருந்தும் படத்தை உருவாக்கிய விஷயத்தில் கோட்டை விட்டிருக்கிறார்கள். படத்தின் முதல் பாதி சுவாரஸ்யமற்ற சம்பவங்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. இரண்டாம் பாதியில்தான் வேகம் எடுக்கிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் பதைக்கவைக்கின்றன. ஆனால் சினிமா என்னும் அளவில் நல்ல அனுபவத்தைத் தராத வகையில் காட்சியமைப்பும் எடுக்கப்பட்ட விதமும் கச்சாத்தன்மை கொண்டிருக்கின்றன. காட்சிகளில் சோகம் அளவுக்கதிகமாக இருப்பது பார்வையாளர்களை அவஸ்தைக்குள்ளாக்குகிறது.

    நம்பிக்கை தரும் காட்சிகள் மிகக் குறைவாக உள்ளன. படம் ஒரே தொனியில் நகருகிறது. இத்தகைய குறைகளை மீறிக் கவனிக்க வைக்கிறது அழுத்தமான கதை.

    ஐ படத்தை ஹாலிவுட் நிறுவனம் வெளியிடுகிறதா?

    By: ram On: 07:23
  • Share The Gag
  • ஐ படம் நவம்பர் மாதம் திரைக்கும் வரும் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் பிரம்மாண்டம் குறித்து நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

    தற்போது படத்தின் வட அமெரிக்கா மற்றும் கனடா வெளியீட்டு உரிமையை பிரபல ஹாலிவுட் நிறுவனமான டிஸ்னி வாங்கியுள்ளது என தகவல் பரவி வருகிறது.

    ஆனால், இதை முற்றிலுமாக ஆஸ்கர் நிறுவனம் மறுத்துள்ளது, மேலும் ஐ குறித்த எந்த தகவலையும் நாங்களே அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம் என்று கூறியுள்ளனர்.

    குறை சொல்லாமல் வாழ்வது எப்படி ?கண்டிப்பாக படியுங்கள் உங்களுக்கான மாற்றத்தை நீங்களே முடிவு செய்யுங்கள் !!

    By: ram On: 07:13
  • Share The Gag
  • சிலர் எடுத்ததுக்கெல்லாம் எப்போதும் குறை சொல்வார்கள். இதுபோன்ற குணமுடையவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் காண முடியாது. குறை சொல்வதைத் தவிர்ப்பதே ஒரு பாசிட்டிவ்வான சூழலை உருவாக்கும்’ என்று சொல்லி, குறை சொல்லாமல் இருப்பதன் பலாபலன்களை விளக்கி, குறை சொல்லும் குணத்தைத் தவிர்ப்பது எப்படி என்று சொல்கிறார் ‘எ கம்ப்ளைன்ட் ஃப்ரீ வேர்ல்டு’ என்கிற புத்தகத்தை எழுதிய ஆசிரியர் வில் பொவென்.

    ‘வாழ்க்கையை அனுபவித்து வாழ்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்களுக்கு ஒன்று பிடிக்கவில்லை எனில், அதனை மாற்றுங்கள். மாற்ற முடியவில்லை என்றால் பிடிக்காததைப் பிடிக்கிற மாதிரி நீங்கள் மாறிக்கொள்ளுங்கள்.

    அதை விட்டுவிட்டு, பிடிக்காத மற்றும் மாற்றமுடியாத விஷயத்தைப்பற்றி ஒருபோதும் குறை சொல்லாதீர்கள்’ என்ற அடிப்படை உண்மையை மையமாக வைத்து எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம்.

    குறை சொல்லியே வாழ்வதினால் நமக்கு என்ன இழப்பு ஏற்படுகிறது என்கிற கேள்விக்கு அழகான விளக்கத்தைத் தருகிறார் ஆசிரியர். ”குறை சொல்வதால் நெகட்டிவ் எண்ணங்கள் நம்மைச் சுற்றி நீக்கமற நிறைந்துகிடக்கிறது. ஒருமுறை பத்திரிகையாளர்கள் நடுவே, பாசிட்டிவாகச் செயல்படுவதன் அவசியம் குறித்து பேசினாராம் ஆசிரியர்.

    ‘பாசிட்டிவ்வாக நினையுங்கள், பேசுங்கள் என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், நாங்கள் நல்ல செய்தியை வெளியிடும் நாளன்று நடக்கும் விற்பனையைவிட பிரச்னை, குழப்பம், சீர்கேடு என்று செய்தி போடும் நாட்களில்தான் எங்களுக்கு அதிக செய்தித்தாள் விற்கிறது’ என்றாராம் ஒரு நாளிதழின் அதிபர்.

    ஆசிரியர் அவரிடம், ”மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் நெகட்டிவ் எண்ணங்களினாலேயே கெட்ட செய்தி தலைப்பாக வரும் நாளில் செய்தித்தாள்கள் அதிகம் விற்பனையாகிறது’ என்றாராம்.

    மக்கள் மனதில் இருக்கும் பயமே கெட்ட செய்திகளை தெரிந்துகொள்ள தீராத ஆவலைத் தருகிறது என்கிறார் ஆசிரியர். அமெரிக்க தொலைக்காட்சி களில் வரும் 24 மணி நேர செய்தி சேனல்களில் பலவற்றையும் மேற்கோள் காட்டும் ஆசிரியர், அவற்றை செய்தி என்றே சொல்லமுடியாது. கெட்ட செய்தி என்று வேண்டுமென்றால் சொல்லலாம் என்கிறார். அந்த அளவுக்கு கொலை, கொள்ளை, விபத்து எனக் கெட்டவைகளின் தொகுப்பாக அது இருக்கிறது.

    முப்பது நிமிட செய்தித் தொகுப்பில் 29 நிமிடம் கெட்ட செய்திகளும் ஒரேயொரு நிமிடத்துக்கு மட்டும் ஏதோ ஒரு நல்ல செய்தி தப்பித்தவறி வருகிறது. இதைச் செய்தி என்று சொல்வதைவிட கெட்டச் செய்தி என்று சொல்வதுதானே சரி என்று கிண்டலடிக்கிறார் ஆசிரியர்.

    இதனாலேயே நான் முழுவதுமாக டிவி செய்தி பார்ப்பதை நிறுத்திவிட்டேன் என்று சொல்லும் ஆசிரியர், அப்புறம் எப்படி நாட்டுநடப்பைத் தெரிந்துகொள்வது என்று கேட்காதீர்கள். கெட்ட செய்திகளைச் சொல்ல நிறையபேர் உங்களைத் தேடிவருவார்கள் என்கிறார்.

    ”மூளை என்பது ஒரு தோட்டம் போன்றது. அதைச் செப்பனிட்டு நல்ல பல வாசமலர்களை அதில் பயிர் செய்து சந்தோஷமாக வாழவும் செய்யலாம். கரடுமுரடாக முட்செடிகளை வளர்த்துவிட்டு வருத்தத்துடனும் வாழலாம். எது உங்கள் சாய்ஸ்?” என்று கேட்கிறார்.

    நாள் முழுக்க கெட்டதைப் பார்த்துக்கொண்டும், கெட்டதைக் கேட்டுக்கொண்டும் இருந்தால் எங்கே உங்கள் மூளையும் மனதும் நல்லதை நினைக்கும்? என்றும் கேட்கிறார்.

    ”நம் மனதிலும் மூளையிலும் பயிரிடப்படும் கெட்ட எண்ணங்கள் எப்படி உருவாகிறது என்று தெரியுமா? குறை சொல்வதனாலேயேதான். எண்ணம் போல் வாழ்வு என்கிறீர்கள். எப்போதும் குறையைச் சொல்லிக்கொண்டும் நினைத்துக்கொண்டும் இருந்தால் உங்கள் வாழ்வில் எங்கே நிறைவு வரும்?” என்று கேட்கிறார் ஆசிரியர்.

    பெரும்பாலான குறைகள் நம்மை நாம் உயர்வாக எண்ணிக்கொண்டும் நம் மனதினில் தோன்றும் மாயக்குறைகளைச் சொல்வதற்காகவுமே சொல்லப்படுகிறது என்று சொல்லும் ஆசிரியர், இதற்கான பல உதாரணங்களைச் சொல்லியுள்ளார்.

    ”குறை சொல்லுதல் என்பது நம்முடைய ஃபோகஸை பிரச்னையின் மீது நிறுத்திவைக்கிறதே தவிர, அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய வைப்பதில்லை. குறைசொல்லும் பழக்கம் உடல்நலத்தையும் பாதிக்கும். உங்கள் வாய்க்குள் செல்லும் உணவு உங்கள் உடலின் தன்மையைத் தீர்மானிக்கிறது. உங்கள் வாயிலிருந்து வரும் குறை சொல்லும் வார்த்தைகள் உங்களைச் சுற்றியிருக்கும் சூழலை நிர்ணயிக்கிறது” என்கிறார்.

    நாம் ஏன் குறை சொல்கிறோம் என்பதற்கு பின்வருவனவற்றையே காரணமாகச் சொல்கிறார் ஆசிரியர். ”மற்றவர்கள் கவனம் நம் மீது திரும்ப, நம்மிடம் இருக்கும் பொறுப்பை கைகழுவிவிட, பொறாமை கொள்பவர்களின் காலை வாரிவிட, பவர்ஃபுல்லாக மாற, நம்முடைய திறமையற்ற செயல்களுக்கு சப்பைக்கட்டுக் கட்ட என்பது போன்ற சூழல்களிலேயே நாம் குறைசொல்ல ஆரம்பிக்கிறோம்” என்கிறார் ஆசிரியர்.

    நாம் அனைவருமே ஒரு விஷயம் இல்லாவிட்டால் மற்றொன்றில் குறை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். அதனால் இந்தப் புத்தகத்தை ஒருமுறை வாசித்து, குறைசொல்வதால் வரும் நெகட்டிவ் எண்ணங்களை மாற்றி பாசிட்டிவ்வான வாழ்க்கைப் பாதைக்கு செல்ல முயலலாம்.