Monday, 13 October 2014

விஜய், அஜித்திற்கு போட்டியாக நயன்தாரா!

By: ram On: 23:08
  • Share The Gag
  • தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோஸ் என்றால் அஜித்-விஜய் தான். இவர்கள் படங்கள் என்றாலே ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.

    ரசிகர்களும் அதை தான் விரும்புகிறார்கள். ஆனால், இவர்களுடன் நடிக்கும் கதாநாயகிகள் பெரும்பாலும் இவர்களை சுற்றி நடனமாடுவதற்கே பயன்படுகிறார்கள்.

    அந்த வகையில் நயன்தாரா கொஞ்சம் வித்தியாசம், இவர் ஹாலிவுட்டில் வெளிவந்த சார்லிஸ் ஏஞ்சல்ஸ் படத்தை போல் ஒரு ஆக்‌ஷன் படத்தில் நடிக்க எதிர்பார்த்து கொண்டிருக்கிறாராம்.

    இந்த மாதிரி கதைகளோடு எந்த இயக்குனர்கள் வருகிறார்களோ அவருக்கு என் கால்ஷிட் என்று தெரிவித்துள்ளார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    சகலரும் அறிந்திருக்க வேண்டியமருத்துவக் குறிப்புகள்

    By: ram On: 22:51
  • Share The Gag
  • 1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

    2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

    3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

    4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

    5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

    6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

    7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

    8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

    9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
    பெண்களுக்காக…

    10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

    11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

    12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

    13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

    மணிரத்னத்தின் திடீர் முடிவு! ஆச்சரியத்தில் திரையுலகம்

    By: ram On: 22:28
  • Share The Gag
  • மணிரத்னம் படங்கள் என்றாலே கிளாஸியாக அனைவரும் கவரும் வகையில் இருக்கும். ஆனால், அவர் இயக்கி கடைசியாக ஹிட் ஆன படம் என்றால் கொஞ்சம் யோசிக்க தான் வேண்டும்.

    இவர் பெரிதும் நம்பியிருந்த கடல் படமும் கை விட்டது. இந்நிலையில் இனி பெரிய பட்ஜெட் படங்கள் எடுப்பதில்லை, சுமார் ரூ 5 கோடியில் ஒரு படத்தை எடுத்து முடிக்க முடிவெடுத்துள்ளாராம்.

    மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் சில பகுதிகளில் யாருக்கும் தெரியாமல் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்து வருகின்றனர்.

    மணிரத்னத்தின் இந்த திடீர் மாற்றம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்காதீங்க.

    By: ram On: 20:43
  • Share The Gag
  • பேஸ்புக் என்பது மிகப்பெரிய மீடியாவாக மாறிவிட்டது. பேஸ்புக்கில் பகிரும் சில செய்திகள் காட்டுத்தீப்போல பரவிவிடும். அதுவும் அந்த செய்திகள் உண்மையா இல்லை வெறும் வதந்தியா என்றெல்லாம் யோசிப்பதற்கு நேரமில்லாமல் நாமும் பகிர்ந்துவிடுகிறோம்.

    இதில் நாம் பார்க்கப் போவது "டூத்பேஸ்ட் கலரும், தவறான விளக்கமும்"

    பொதுவாக நாம் வாங்கும் டூத்பேஸ்ட்களில் சதுர வடிவ நிறங்களில் குறியீடு இருக்கும். பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும்.

    இவற்றுக்கு கொடுக்கப்படும் தவறான விளக்கம்:

    பச்சை - இயற்கை
    நீளம் - இயற்கை + மருத்துவ குணம்
    சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை
    கருப்பு - சுத்தமான ரசாயன கலவை

    உண்மை என்ன?

    இவ்வாறான நிறங்கள் உண்மையில் Packaging Process-காக பயன்படுகிறது. இந்த குறியீட்டுக்கு "Eye Mark அல்லது Eye Spot" என்று பெயர். இவைகள் டூத்பேஸ்ட் ட்யூபை உருவாக்கும் நவீன பேக்கேஜிங் இயந்திரங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

    இவைகள் "ட்யூபில் எங்கு வெட்ட வேண்டும், எங்கு மடக்க வேண்டும் என்பதனையும், ட்யூபிற்கு எந்த கலரை கொடுக்க வேண்டும் என்பதனையும்" மெசின்கள் தெரிவிக்கும்.

    இந்த கலர் குறியீடுகளை டூத்பேஸ்ட் மட்டுமின்றி, பல்வேறு க்ரீம் பாக்கெட்களிலும் நீங்கள் பார்க்கலாம்.

    தயவு செய்து யாரும் "உங்க டூத்பேஸ்ட்ல கலர் இருக்கா?" என்று கேட்டுடாதீங்க....

    கத்தி ரன்னிங் டைம் வெளிவந்தது!

    By: ram On: 20:22
  • Share The Gag
  • கத்தி படம் இந்த தீபாவளிக்கு ரசிகர்களை கவர வரவிருக்கிறது. இப்படம் சமீபத்தில் தான் சென்ஸார் சென்று யு சான்றிதழ் பெற்றது.

    தற்போது இப்படத்தின் ரன்னிங் டைம் வெளிவந்தது. இப்படம் துப்பாக்கி படத்தை போலவே 2 மணி 46 நிமிடங்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    மேலும் துப்பாக்கி படத்தின் ஹிட் செண்டிமெண்ட் காரணமாகவே இப்படமும் அதே ரன்னிங் டைமில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    நமக்கு தெரியாத சில உலக கொடூரர்களை தெரிந்துக் கொள்வோம் !!

    By: ram On: 19:55
  • Share The Gag
  • அந்திரேய் சிக்காட்டிலோ (Andrei Chikatilo)

    ரஷ்ய எல்லையோர நாடான உக்ரைனில் 1936 -ம் ஆண்டு பிறந்த சிக்காட்டிலோஇளமையில் தாழ்வு மனப்பான்மை கொண்ட சவலைப் பிள்ளை. அந்தத் தாழ்வுமனப்பான்மையே அவனை வேறு திசைக்குத் திருப்பியது. பதின்ம வயதில் தனக்குஆண்மை இல்லையோ என்ற சந்தேகத்தில் 9 வயதான சிறுமியைப் பாலியல் சித்ரவதைசெய்தான். பிறகு திருமணம், குழந்தைகள் என நார்மல் வாழ்க்கையை முயற்சித்தாலும்அவனது வக்கிர மனம் அடங்கவில்லை. 78 -ல் ஒரு சிறுமியைக் கடத்தி, பாலியல்பலாத்காரம் செய்து, கத்தியால் குத்திக் கொன்றான். அந்தக் கொலையும் அது தந்ததிருப்தியும் அவனுக்குள் வெறியாக ஊறின. விளைவு, அந்த ஆண்டு மட்டும் இவனால்கொல்லப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை ஏழு. பிறகு, கொன்று ரத்தம் பார்த்தால் மட்டுமேசெக்ஸில் ‘திருப்தி’ அடையும் எடாகுட நிலையை எட்டினான்.

    இளம் பெண்களையும் சிறுவர்களையும் ஏமாற்றிக் கடத்தும் கலையில் தேர்ந்து,அவர்களைச் சித்ரவதை செய்து கொலை செய்வதில் இன்பம் கூடிக் கொண்டே போனதாம் இவனுக்கு. ஒரேவருடத்தில் சிறுவர்கள் உட்பட 15 பேர் மர்மமாக கொல்லப்பட்டனர். போலிஸ் குழம்பியது. சைக்கோவோ,ஹோமோவா, சீரியல் கில்லரா என வகை பிரிக்க முடியாமல் தடுமாறியது. 1990 ல் இவன் சிக்கியபோது அவன்செய்த கொலைகள் உலகத்தையே நடுங்கச் செய்தது. மொத்தம் 53 கொலைகள் செய்திருப்பதைஒப்புக்கொண்டான். ‘நான் ஒரு அப்பாவி, என்னை விட்டுவிடுங்கள் என்னும் இவனுடைய கருணை மனுநிராகரிக்கப்பட்டது. 1992 பிப்ரவரி 14-ம் நாள் துப்பாக்கியால் பின் மண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

    போல் பாட் (Pol Pot)

    கம்போடியாவில் பிறந்து கம்யூனிசம் பயின்ற போல் பாட்டுக்கு இளம் வயதிலேயேஅரசியலில் ஆர்வம். ‘கம்பூசியன் கம்யூனிச இயக்கம்’ என்ற பெயரில் கம்போடியாவின்ஆட்சியைப் பிடித்த இவன் சித்ரவதை, சித்தாந்த அடிப்படையிலானது!

    ‘விவசாயிகளைத் தவிர, மற்ற அனைவரும் சோம்பேறிகள், வாழத் தகுதியற்றவர்கள்’என்று தீர்ப்பு எழுதினான். அரசுப் பணியாளர்கள், ஆலை முதலாளிகள், படித்தவர்கள்,வியாபாரிகள் என அனைவரும் கேள்வி இல்லாமல் போட்டுத்தள்ளப்பட்டனர்.மருத்துவமனைகள் மூடப்பட்டதால் ஆண்டிபயாடிக் மருந்துகூட இல்லாமல் 15 லட்சம்மக்கள் செத்து மடிந்தார்கள்.

    ‘எதிரிகளை அழிக்கிறேன்’ என்ற பெயரில் இவன் ஆரம்பித்த S-21 என்னும் சித்ரவதைக்கூடத்தில் சுமார் 20,000 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் கிளைகள் வேறு!மக்களின் வாயில் மனித மலத்தைத் திணிப்பது, எலக்ட்ரானிக் ஷாக் கொடுப்பது, தலையில் ஆணி அடிப்பது,கோழிகளைப் போல வரிசையாக மக்களின் கழுத்தை அறுத்துத் தண்ணீரில் போடுவது… என்பதெல்லாம் இவனதுசித்ரவதைக் கூடத்தின் சில சாம்பிள்கள். அதிலிருந்து தப்பிய வான் நாத் என்பவர் சமீபத்தில் தான் தப்பிய திகில்கதையை உலகுக்கு வெளியிட்டார். மனித பிணங்களையும், புழு பூச்சிகளையும் தின்று அவர் உயிர் தப்பிய கதைபயங்கரத்திலும் பயங்கரம். 1998-ல் மர்மமாக செத்துப் போனான் இந்த போல் பாட்! அடுக்கடுக்கான மண்டைஓடுகள் இவன் வெறிக்கு சாட்சி!

    மாக்ஸ்மில்லன் ராபெஸ்பியர் (Maximilien Robespierre)

    ‘தீவிரவாதம் இல்லாத அரசியல் ஆண்மை இல்லாதது. அரசியல் வாழ்க்கையில் படுகொலைசெய்வது தவிர்க்க முடியாதது’ என பேஜார் ஸ்டேட்மென்ட் விட்ட இவன், பிரெஞ்சு நாட்டில்நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்த இயக்கம்தான் பின்னர் புகழ்பெற்ற ஜகோபியன் கிளப்ஆனது. 1790 -ல் ஜகோபியன் கிளப்பின் தலைவரான மாக்ஸ்மில்லன், தனது அரசியல் எதிரிகள்மட்டுமில்லாமல், தன்னை எதிர்த்தவர்கள், விமர்சித்தவர்கள் என அத்தனை போரையும்கில்லட்டின் இயந்திரத்தில் வைத்து தலையைத் துண்டித்தான். இப்படி 10 மாதங்களில்கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே குறைந்தபட்சம் 40,000 என்கிறது வரலாறு. 1794 -ல் கைது செய்யப்பட்டவனை எவ்வித விசாரணையும் இன்றி கில்லட்டின் அடியில்குனியவைத்து தலையை எகிறச் செய்தார்கள்!

    ஜோசப் கோணி:

    இடி அமீன் கோரத்தாண்டவமாடிய உகாண்டாவில் இருந்து வந்தவன். ‘கடவுளின் பேரால் நாட்டுக்கு நல்லாட்சி கொடுக்கப் போகிறேன்!” என்றுஉகாண்டாவையே ரணகளம் ஆக்கியவன். இவன் ஆரம்பித்த ‘கடவுளின்தற்காப்புப் படை’க்கு முதல் சிப்பாய் குழந்தைகள்தான்.

    வாழிடங்களுக்குச் சென்று நாய்களைப் பிடிப்பது மாதிரி குழந்தைகளை வலைவீசிப் பிடிப்பான்.பிடிபடும் குழந்தைகளுக்கு துப்பாக்கிச் சுடக் கற்றுக்கொடுப்பான். பின்னர், அந்தக் குழந்தைகள்மூலமாகவே அவர்களது பெற்றோர்களைச் சுட்டுக் கொல்வான். இப்போது பல நாடுகளும்கோணியை ‘மனித குலத்தின் எதிரி’ என்று அறிவித்து உகாண்டா காடுகளில் தேடி வருகிறது.

    யான், ஜீவா, மெட்ராஸ் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!

    By: ram On: 19:17
  • Share The Gag
  • இந்த மாதம் திரைக்கு வந்த சில படங்களை தவிர மற்ற அனைத்து படங்களும் ரசிகர்களை திருப்திபடுத்தியது. குறிப்பாக மெட்ராஸ், ஜீவா, அரண்மனை போன்ற படங்கள் இன்றும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்புகிறது.

    அந்த வகையில் படம் வெளியாகி இதுநாள் வரை சென்னை மாநகராட்சியின் வசூல் நிலவரங்கள் இதோ. மெட்ராஸ் ரூ 2.82 கோடி, யான் - ரூ 1.30 கோடி, அரண்மனை- ரூ 3 கோடி, ஜீவா- ரூ 86 லட்சம்.

    மேலும் தீபாவளியை முன்னிட்டு கத்தி, பூஜை படங்கள் வரவிருப்பதால் ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கிறது

    ஓட்ஸ் உண்மையிலேயே எடையை குறைக்க வழிவகுக்குமா..?

    By: ram On: 18:54
  • Share The Gag
  • ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது.

    அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும்.

    ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. அவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

     உடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது.


    அதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர். ஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன.

     ஓட்ஸ் உணவின் மூலம் உடல் எடை குறைகிறது என்று இங்குள்ள நிறைய விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த ஒரு உணவு மட்டும் போதும் என்று கூற முடியாது. உடல் எடையை குறைக்கும் பத்தியத்தில் ஓட்ஸ் என்பது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது .

    ஓட்ஸில் வைட்டமின்கள், நார்ச்சத்து, கனிமச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் இருதய நோயை தடுப்பதற்கும் ஓட்ஸ் பயன்படுகிறது.

    சில விளக்கங்கள் மற்றும் உண்மைகள் மூலம் ஓட்ஸ் பத்தியம் என்பது உடல் எடையை குறைக்க சிறந்த வழி என்று நிரூபிக்கபட்டுள்ளதை கீழே காண்போம்:

    அதிக அளவு நார்ச்சத்து உள்ள தானியங்கள்

    ஓட்ஸில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக அளவிலான இந்த நார்ச்சத்தானது, கொழுப்புச்சத்து மற்றும் ரத்தத்திலுள்ள சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இது போக வயிறு நிறைந்த உணர்வை உண்டாக்கும் ஓட்ஸ். இதன் மூலம் பசி உணர்ச்சி தவிர்க்கப்படுகிறது.

    எடையை குறைக்க வேண்டுமென்றால் பசியை கட்டுப்படுத்தி, சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். அதிக அளவிலான நார்ச்சத்து உணவுகளை உண்பது இதயத்துக்கும் நல்லது.

    அதிக ஆற்றலை தரும் தானியம்

    ஓட்ஸ் அதிக ஆற்றலை அளித்து வேலை செய்யும் திறனை உடலுக்கு அளிக்கிறது. ஓட்ஸ் கஞ்சியை காலையில் எடுத்துக் கொண்டால், அந்த முழு நாளைக்கு தேவையான சக்தியையும் திறனையும் அது அளிக்கிறது. இதனால் பலர் ஓட்ஸை காலை உணவாக உட்கொள்கின்றனர்.

    ஓட்ஸினால் கிடைக்கும் அதிக அளவிலான ஆற்றல், உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப் படுகிறது. மேலும் ஓட்ஸ் உடலின் எடையை குறைத்து உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. இதற்காகவே ஓட்ஸால் செய்யப்பட்ட உணவுகளை காலை உணவாக எடுத்து கொள்வது சிறந்தது.

    அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள்

    ஓட்ஸில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கி, உடலை புனரமைக்க உதவுகிறது. அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்குகிறது.

     இது உடலில் உள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளித் தள்ளுவதால், உடல் எடை குறைவதுடன் உடல் சுத்தமும் ஆகிறது. ஆண்டி ஆக்சிடன்ட்கள் உடல் உறுப்புகளின் இயக்கத்திலும், அவற்றை சரி செய்வதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.

    குறைந்த கலோரி உள்ள தானியம்
    ஓட்ஸானது மற்ற தானியங்களை விட குறைந்த அளவிலான கலோரிகளையே உடையது. இதன் காரணமாகவே உடல் எடை குறைப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகிறது. பொதுவாக குறைந்த கலோரி உணவுகள் அதிக அளவிலான கொழுப்புகளை குறைக்க வல்லது.

     ஓட்ஸ் ஒரு அடர்த்தி குறைந்த உணவு. ஆதலால் இது எடையை குறைக்கும் உணவு முறையில் முதலிடம் பெறுகிறது. ஓட்ஸ் மட்டும் தனித்து உடல் எடையை குறைத்து விடாது. மற்ற ஆரோக்கியமான சரிவிகித உணவுகளோடு சேர்ந்தே ஓட்ஸ் எடையை குறைக்கிறது.

    தயாரிப்பதற்கு சுலபம்

    ஓட்ஸ் என்பது ஒரு ஆரோக்கியமான முழு தானியம். பொதுவாக முழுதானியங்கள் சமைப்பதற்கும், உண்ணுவதற்கும் எளிதானவை. பொதுவாக ஓட்ஸ் கஞ்சியாக தயாரிக்கப்படுகிறது. பால் மற்றும் பழங்களோடு சேர்த்து இது உண்ணப்படுகிறது.

    இந்த காலத்தில் ஓட்ஸை கொண்டு பல துரித உடனடி உணவுகள் தயார் செய்யப்படுகிறது. காலை உணவாக அவைகள் எடுத்து கொள்ளப்படுகின்றன. துரித உணவுகள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் கூட ஓட்ஸ் தனது சத்துகளை இழப்பதில்லை. இந்த அனைத்து உண்மைகள் மூலம் ஓட்ஸ் எடை குறைய சிறந்த உணவு என்பதை அறியலாம்.

    அஜித் குறித்து நடிகை மீனா புகழாரம்!

    By: ram On: 18:12
  • Share The Gag
  • முத்து, வீரா, அவ்வை சண்முகி போன்ற படங்களின் மூலம் தமிழ் மக்களை கவர்ந்தவர் மீனா. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்த மலையாள படமான த்ரிஷியம் மாபெரும் வெற்றி பெற்றது.

    இவர் சமீபத்தில் ஒரு முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது தொகுப்பாளார் ‘தமிழ் சினிமாவின் அழகான ஹீரோ யார்?’ என்று கேட்டார்.

    அதற்கு மீனா ‘ நடிகர் அஜித் தான் மிகவும் அழகானவர்’ என்று தெரிவித்துள்ளார். இவர், அஜித்துடன் ஆனந்த பூங்காற்றே, வில்லன் போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருமணத்திற்கு முன் செக்ஸ் கூடாது என்பதற்கான 10 பவர்ஃபுல் காரணங்கள்!

    By: ram On: 17:39
  • Share The Gag
  • செக்ஸ் என்பது வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று தான். ஆனால், இந்தக் காலத்து சின்னஞ் சிறுசுகளுக்கு, முக்கியமாக டீன்-ஏஜ்ஜில் உள்ளவர்களுக்கு, செக்ஸ் ஒரு விளையாட்டாகவே ஆகிவிட்டது.

    வாழ்க்கைக்குத் தேவையான செக்ஸ் என்பது முறையாகத் திருமணம் ஆன பின்பு மட்டுமே ஆண்-பெண் இருவர் மனத்திலும் வர வேண்டும். அதை விட்டு, டேட்டிங் என்ற பெயரில் ஆடைகளைக் களைந்து விட்டு செய்யப்படும் ஒரு கொச்சையான மொழியாகவே செக்ஸ் மாறிவிட்டது. அதுமட்டுமல்ல, நம் இந்தியா போன்ற நாடுகளில் அது ஒரு பெரும் கலாச்சார சீர்குலைவிற்கும் காரணமாகி உள்ளது.

    காதல் என்பதைத் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டு, இனக் கவர்ச்சிக்கு அடிமையாகி, வயிற்றில் கருவைச் சுமந்து கொண்டு தவிக்கும் எத்தனையோ இளம் பெண்கள் கடைசியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’யில் தான் வந்து நிற்கின்றனர்.

    திருமணத்திற்கு முன் ஏன் செக்ஸ் கூடாது என்பதற்குக் கூறப்படும் 10 காரணங்களைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

    பொறுமை
    ஆம் ‘ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கணும்’ என்ற பழமொழிக்கேற்ப, நம் வாழ்க்கைத் துணையை முறையாகத் திருமணம் செய்து கொண்ட பின்பே அவளை/அவனை கட்டிலில் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். அதுவரை பொறுத்துத் தான் ஆக வேண்டும். அப்போது தான் இருவருக்குமிடையே அன்பும் அதிகரிக்கும்.

    புரிதல்
    காதலர்களாகிய இருவரும் முதலில் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன்பே எதற்கு ஆடைகளைக் கழற்ற வேண்டும்?

    செக்ஸ் வெறியா?
    உங்கள் காதலர்/காதலி செக்ஸ் வெறி கொண்டவர்களாக இருந்து விட்டால் மிகவும் ஆபத்தாகும். அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஒரே இரவிலா?
    செக்ஸ் என்பது ஒரே இரவில் முடிந்துவிடக் கூடிய விஷயமல்ல. அதற்காக ஒரு சர்ப்ரைஸோடு காத்திருத்தல் அவசியம். அதற்கு, திருமணம் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டும்.

    புனிதம்
    இந்த வார்த்தை மீது உங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதா? அப்படியென்றால், திருமணத்திற்கு முன் செக்ஸ் என்ற விஷயத்தை அடியோடு மறந்து விடுங்கள்.

    எய்ட்ஸ்
    இந்தக் காலத்தில் செக்ஸ் தொடர்பான பல வியாதிகளிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள வேண்டுமென்றால், திருமணத்திற்கு முன் செக்ஸைக் கண்டிப்பாகத் தவிருங்கள்.

    கவர்ச்சி
    நீங்கள் டேட்டிங் தொடர்பு வைத்துள்ள நபருக்கு உங்கள் கவர்ச்சி பிடிக்காமல் போயிருக்கலாம். சந்தோஷமாக குட்-பை சொல்லிவிட்டு வந்து விடுங்கள். செக்ஸ் பிரச்சனையிலிருந்து எளிதில் தப்பித்துக் கொள்ளலாம்.

    பழக்கம்
    எதையாவது பழகி விட்டு, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறீர்களா? அப்படியென்றால், செக்ஸ் விஷயத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள். அப்படியே மாட்டிக் கொண்டாலும், அந்தப் பழக்கம் திருமணத்திற்குப் பின்பே வரட்டும்.

    மாத விலக்கு
    மாத விலக்கு நேரங்களில் நீங்கள் எளிதாக செக்ஸ் விஷயத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

    நோய் பரவும்
    தகாத முறையில் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொண்டால், அது தொடர்பான வியாதிகளை நீங்களும் பரப்புவதற்குக் காரணமாகி விடுவீர்கள். அதாவது, செக்ஸ் வியாதிகள் ஏற்கனவே உங்களுக்கு இருந்தால், அது மற்றவர்களுக்கும் பரவ நேரிடும்.

    காலை எழுந்தவுடன்…வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    By: ram On: 08:43
  • Share The Gag
  • காலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது  விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள்  வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்கிறார்கள். உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது?

    உடலின் பல நோய்கள் நம் வயிற்றுப் பகுதியில்தான் ஆரம்பிக்கின்றன. மலச்சிக்கல், வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் எனச் சாதாரணமாகத் தொடங்கும் பிரச்னைகள்கூட பல மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
    பொதுவாக, முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் மீதமோ, அதன் தாக்கமோ மறுநாள் காலை வரை நம் வயிற்றில் இருக்கும். மேலும் ‘ஹைட்ரோகுளோரிக் அமிலம்’, காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகச் சுரக்கும். இதனுடன், முதல் நாள் சாப்பிட்ட உணவின் மீதம் சேரும்போது அசிடிட்டி பிரச்னை ஏற்படும். முறையான சில ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
     நம் உடல், ஒரு நாள் முழுக்க எப்படி இயங்கப்போகிறது என்பதே நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. இந்த உணவானது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும்தான் இருக்க வேண்டுமே த‌விர, அட்டவணைப்படி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

     தண்ணீர்
    ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். சிலர், வெந்நீர் அருந்துவார்கள். ஆனால், குளிர்ந்த நீர் குடிப்பதுதான் சிறந்தது. ஏனெனில், குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை, வெந்நீரைக் காட்டிலும் அதிகம்.
    தண்ணீரானது, அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இயக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வருவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாகக் குறைக்க முடியும். மேலும், இதனால் உடலின் ஒரு நாளைய வளர்சிதை மாற்றத்தில் 24 சதவிகிதம் அதிகரிக்கிறது. முக்கால் லிட்டர் நீரையும் முழுமையாகக் குடிக்க முடியாதவர்கள் 5 நிமிட இடைவெளியில் நான்கு டம்ளராகப் பிரித்துக் குடிக்கலாம்.

     வெந்தயத் தண்ணீர்
    சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கு நல்ல தடுப்பணை வெந்தயம். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும் அருமருந்தும் இதுதான்.
    வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில்  ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும்.
    வாயில் வெந்தயத்தை அப்படியே போட்டுத் தண்ணீர் குடிப்பது, மோருடன் சேர்த்துக் குடிப்பது கூடவே கூடாது. வெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும்.
    வெந்தயம், மோர் இரண்டுமே குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால், உடனடியாகச் சளி பிடிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. சில சமயங்களில் இந்த காம்பினேஷன் வயிற்றுப் போக்குக்கும் வழிவகுத்துவிடும் என்பதால் கவனம் தேவை.

     அருகம்புல் சாறு
    அல்சருக்கு அருமருந்தே வெறும் வயிற்றில் பருகும் அருகம்புல் சாறுதான். ஆனால், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி, நம் உடலுக்கு உகந்தது அல்ல. அருகம்புல் தாவரத்தின் இலை மற்றும் தண்டுப் பகுதியின் கலவைதான் இது.
    அருகம்புல் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணமுடையது. இந்த இலையின் ஓரங்களில் உள்ள வெள்ளையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால், வயிற்றுப்போக்கைத் தூண்டிவிடும் அபாயம் கொண்டது. எனவே அருகம்புல் செடியை வீட்டிலே அரைத்து சாறு எடுத்து, வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.

     வெள்ளைப்பூசணி  சாறு
    வெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறையும். கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடிப்பதற்கான முழுப் பலனும் கிடைக்கும். ஆனால், இது மிகவும் குளிர்ச்சி என்பதால் 7 மாதத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர்க்கவேண்டியது அவசியம்.

     இஞ்சிச் சாறு
    இஞ்சியின் தோல் பகுதி நச்சுத்தன்மை வாய்ந்தது. இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும். ஆனால், வாய்ப்புண், வயிற்றுப்புண், ஆசனப்புண் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
     நீராகாரம்
    காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவது இன்றும் கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். இதனால், உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்துக் குடிப்பது நல்லது. மோரில் உள்ள லாக்டோபேசில்லஸ் என்னும் பாக்டீரியா, உடலுக்கு நன்மை செய்வதுடன், வயிற்றில் வைட்டமின்கள் உற்பத்திக்கும் உதவுகிறது.

     நெல்லிக்காய்ச் சாறு
    தினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில், ‘ஆன்டிஆக்சிடன்ட்ஸ்’ அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்றுநோய்களுக்கும் மிகவும் சிறந்தது. இதில், சிறிதளவே, அமிலத்தன்மை இருந்தாலும் எலுமிச்சை அளவுக்கு வலிமையான அமிலம் இல்லை. எல்லா வயதினரும், வெறும் வயிற்றில் தாராளமாகக் குடிக்கலாம்.

       இளநீர்
    இளநீர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லதுதான் என்றாலும் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் அதன் அதிகப்படியான குளிர்ச்சியூட்டும் தன்மையால், தூங்கி எழுந்தவுடன் சற்று சூடாக இருக்கும் நம் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
    இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கூட அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. மேலும், வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம். எனவே, உணவு இடைவேளையில்தான் இளநீர் அருந்தவேண்டும். அதுவும் வெட்டிய உடன் இளநீரைக் குடித்துவிட வேண்டும், இல்லையெனில் ஃபுட் பாய்ஸன் ஆகிவிடும்.

     எலுமிச்சைச் சாறு
    பல் துலக்கியதும், எலுமிச்சைச் சாறுடன் தேன், வெந்நீர் கலந்து ஒரே மூச்சில் குடிக்கும் டெக்னிக்தான், உடல் எடையைக் குறைக்கும் என்று பலரும் நினைக்கின்றனர்.  இதனால், எடை குறைந்தாலும் வெறும் வயிற்றில் எலுமிச்சைச் சாறு அருந்துவது அவ்வளவு நல்லதல்ல. எலுமிச்சையில் அதிகமாக இருக்கும் சிட்ரிக் அமிலம், நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சேர்ந்து அசிடிட்டியை அதிகரித்துவிடும். ஆனால் தேன் மற்றும் வெந்நீர் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பதால் எடை குறைவதுடன், வயிற்றின் அமிலத் தன்மையும் சமன்செய்யப்படுகிறது. எனவே, எலுமிச்சை சேர்க்காமலேயே எளிதாக எடையைக் குறைக்கலாம்!

     பச்சை முட்டை
    ஒல்லியாக இருப்பவர்கள், ‘ஜிம்’ பாடியாக மாற ஈஸியான வழியைத் தேர்ந்தெடுப்பது, விடிகாலை வெறும் வயிற்றில் பச்சை முட்டைதான். உண்மையில் இது மிகப் பெரிய தவறு. பச்சை முட்டை செரிமானமாகக் குறைந்தது 8 மணி நேரமாவது ஆகும். இதனால், நம் வயிற்றில் உள்ள உள்ளுறு குடலுறிஞ்சிகளால், செலீனியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் போன்ற நுண்சத்துகளை உறிஞ்ச முடிவது இல்லை. இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் முட்டையில் உள்ள புரதமும் (வெள்ளைப்பகுதி) மஞ்சள் கருவும், காலையில் வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சேரும்போது வாயுத்தொல்லை ஏற்பட்டு, நாள் முழுவதும் மந்தமான உணர்வு ஏற்படுத்திவிடும். எனவே, வேகவைத்த முட்டையாக இருந்தாலும் காலை மற்றும் மதிய உணவின்போது மட்டுமே சாப்பிட வேண்டும்.

    இறுதி வரை இடைவிடாமல் சிரிக்க வைக்கும் கப்பல் படம் - சங்கர்

    By: ram On: 07:49
  • Share The Gag
  • இயக்குனர் சங்கர் தற்போது விக்ரம் நடிப்பில் ‘ஐ’ படத்தை இயக்கிவருகிறார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் டப்பிங் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் சங்கர். ஒரு பக்கம் பிரம்மாண்டமாக படம் இயக்கி வந்தாலும் மறுபக்கம் படங்கள் தயாரித்து வெளியிட்டும் வருகிறார்.

    தற்போது சங்கரின் உதவியாளர் கார்த்திக் ‘கப்பல்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை சங்கரின் எஸ் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தை பார்த்த சங்கர், கப்பல் படம் சிரிப்பு கலவரமாக அமைந்துள்ளது என்றும், துவக்கம் முதல் படம் முடியும் வரை பார்ப்பவர்களை சிரிக்க வைக்கும் விதத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.

    கப்பல் படத்தில் வைபவ், சோனம் பஜ்வா, கருணாகரன், விடிவி கணேஷ், அர்ஜூனன், வெங்கட் சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். கூடிய விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.

    அதிர்ச்சியில் பூஜை படக்குழு!

    By: ram On: 07:41
  • Share The Gag
  • பூஜை படம் இந்த தீபாவளிக்கு கத்தி படத்திற்கு போட்டியாக வரவிருக்கிறது. கத்தி படத்திற்கு நேற்று நடந்த சென்ஸாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

    இதை தொடர்ந்து பூஜை படமும் சென்ஸார் சென்றது. எப்போதும் ஹரி படம் என்றாலே குடும்பமாக சென்று பார்க்கலாம் என்று ஒரு கருத்து மக்களிடையே உள்ளது.

    ஆனால், பூஜை படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைக்க, படக்குழு முழுவதும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இதனால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி யு சான்று பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

    ரசாயனப் பால்! – சும்மா கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க...!

    By: ram On: 07:30
  • Share The Gag
  • கிராமத்தில் கூட்டறவு பால் வழங்கும் சங்கம்னு இருக்கும். அந்தந்த பகுதியில கறந்த பால எடுத்துகிட்டு வந்து ஒரு இடத்தில் அளந்து ஊற்றுவார்கள். இன்னாருடையது இவ்வளவு லிட்டர் என குறிப்பெடுத்துக்கொண்வார்கள்.அதை கேன்களில் ஏற்றி ஒன்றாக ஒரு இடத்தில் சேர்ப்பார்கள். பிறகு நாற்பது லிட்டர் கேன்களில் ஊற்றி வைப்பார்கள். அதில் ஐந்து லிட்டர் பால் எடுத்துவிட்டு, மனச்சாட்சி இருந்தால் மூன்று லிட்டர் பால் எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக தண்ணீரை ஊற்றுவார்கள். ஐநூறு கிராம், அல்லது முன்னூறு கிராம் சர்க்கரையை போட்டு கலக்கிவிட்டால் போதும். லேக்டா மீட்டரில் கண்டுபிடிக்க முடியாது.

    அப்புறம் அந்த பால் கேன்களை எல்லாம் லாரியில் ஏற்றிச் செல்வார்கள். அதிலுள்ள கிளீனர், டிரைவர் சாமார்த்தியத்திற்கு ஏற்ப கை வைத்துவிட்டு பதிலுக்கு கொஞ்சம் தண்ணீர்.இப்படியாக அந்த பகுதியில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்திற்கு போய் சேரும்.

    அங்க பெரிய தொட்டியில கேன் கேனா எடுத்து கவிழ்ப்பார்கள். கொழுப்பை பிரித்தெடுத்து பதப்படுத்தப்பட்ட பாலா மாற்றுவதற்காக நீண்ட சில்வர் குழாய்களில் ஓடியபடியே இருக்கும். அப்படி நூறு கேன்களை எடுத்து கவிழ்த்தால் நான்காயிரம் லிட்டர் பால்…கூடவே அனாமுத்தா ஒரு ஐந்து கேன்கள் தண்ணீர் எடுத்து ஊற்றுவார்கள். பால் அப்படி இப்படியுமாக கீழே சிந்தி சேதாரமாகுமில்ல. அதை ஈடுகட்டவாம். லட்சக்கணக்கான லிட்டர் பால் என்றால் எவ்வளவு தண்ணீர்….?

    இப்படி குளிரூட்டி, கொழுப்பு நீக்கிய பால் பெரிய பெரிய லாரிகளில் ஏற்றி சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு அனுப்புகிறார்கள்.அப்படி வரும்போது வழியில் பக்குவமாக சீல் உடைத்து ஆயிரம் இரண்டாயிரம்னு எடுத்துவிடுவார்கள். அங்கேயும் தண்ணீர் கலப்படம்.

    ஒரு வழியாக அந்த வாகனம் நகரங்களில் உள்ள பால் பண்யைகளுக்கு வரும். அங்கு பதப்படுத்தி தரப்படுத்தும் வேலை. அங்கேயும் ஏராளமான பால் கீழே சிந்திகிக்கிடக்கும். ஆக இங்கேயும் ஈடுகட்டுவதற்கென்று தண்ணீர் கலப்பு.? அதோடு நின்றுவிடவில்லை. இன்னும் இருக்கிறது. மனதை தைரியப்படுத்திக்கொள்ளுங்கள்.

    பிறகு அங்கிருந்து அந்தந்த பகுதிகளில் உள்ள பால் வினியோக நிலையத்திற்கு லாரிகளில் கொண்டு வந்து அங்குள்ள டேங்கரில் நிரப்பிவிட்டுச் செல்வார்கள். அங்கே சில்லரையில் விற்பதற்காக இருக்கும் ஆட்கள், அவர்களின் பங்கிற்கு இரண்டு குடமோ, மூன்று குடமோ தண்ணீர் கலந்துவிடுவார்கள். அவர்களின் செலவுக்கு வேண்டுமில்லையா..அதற்காக கலப்பார்கள். நம்ப ஆட்கள் அட்டை வாங்கி வைத்துக்கொண்டு, ‘ஆவின் பால்தான் பெஸ்ட்’ என்று குளிரிலும் மழையிலும் வரிசையில் நின்று வாங்குவார்களேஇ அந்த பாலின் கதை இதுதான். இப்படித்தான்..

    கிராமத்தில் உள்ளவார்கள் பாலில் கொஞ்சம் தண்ணீர் கலந்து காய்ச்சி சாப்பிடுவார்கள். நகரத்தில் உள்ள நாம் தண்ணீரில் கொஞ்சம் பால் கலந்து காய்ச்சி சாப்பிடுகிறோம். அதுவும் ரசாயணக் கலவையோடு….!