Saturday, 11 October 2014

முன்னணி நடிகையை கோபப்படுத்திய ராம்கேபால் வர்மாவின் படம்?

By: ram On: 23:42
  • Share The Gag
  • சர்ச்சை இயக்குனர் என்றால் சிறு குழந்தையும் சொல்லிவிடும் அது ராம்கோபால் வர்மா என்று, அந்த வகையில் சிறுவர்களின் காம எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக அவர் தற்போது இயக்கி கொண்டிருக்கும் படம் தான் ஸ்ரீதேவி.

    இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் போன்ற பல படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி, தன் பெயரை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று வக்கில் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

    மேலும் ராம்கேபால் வர்மா இதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    ஒரே நாளில் $ 150 சம்பாதிக்க ஒரு அறிய வாய்ப்பு... உங்களுக்கு..!

    By: ram On: 22:51
  • Share The Gag
  • இன்று  ஒரே நாளில் $ 32.91 மதிப்பு கொண்ட ஒரு பங்கை நமக்கு இலவசமாக வழங்க இருக்கும் GLOBAL SHARE  நிறுவனம்


    இவர்கள் இம்மாதம் 20ம் தேதிக்குள் இந்த தளத்தில் இணைபவர்களுக்கு ஒரு பங்கு இலவசாமாக வழங்க போகிறார்கள் அதன் இன்றைய ( October - 11-2014 ) மதிப்பு சுமார் $ 32.91 டாலர்

    01 Dec 2014 லிருந்து இந்த நிறுவனத்தின் ஷேர் பங்குச் சந்தையில் வியாபாரம் ஆக ஆரம்பித்து விடும்.

    தற்போது நமக்கான 1 ஷேரின் மதிப்பு $ 32.91 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதனை அந்த நிறுவனம் வெளியிடும் அன்று அதன் மதிப்பு சுமார் $ 150 டாலர் வரை மதிப்பு நிர்ணயம் ஆக வாய்ப்பு உண்டு

    இந்த வாய்ப்பை தவரவிடதிர்கள்

    இந்த லிங்கை சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்


    பிறகு அதில் கேட்கும் விவரங்களை பூர்த்தி செய்து கொள்ளுங்கள் .பின்பு உங்கள் ஈமெயிளுக்கு ஒரு ஆக்டிவேஷன் மெயில் ஓன்று வரும் அதனை சொடுக்கி CONFORM செய்து கொள்ளுங்கள்



    பிறகு உங்கள் CONTROL PANEL க்கு சென்று GAS WORLD என்ற பட்டனை அழுத்துங்கள்






    தற்போது இடது பக்கம் உள்ள GAS WORLD சென்று க்ளிக் செய்து பிறகு டாப்பில் உள்ள 4 டைட்டிலில் (GAS WORLD,WEB OFFICE,INVITE...)உள்ள GAS WORLD ல் சென்று account activation செய்து கொள்ளுங்கள்.




    activation என்ற பட்டனை சொடுக்கினால் DEACTIVATE என்று  வந்தால் உங்களுக்கான ஒரு ஷேர்$ 32.91 வந்து விடும்

    அந்த ஷேர்ரை பார்க்க





    பிறகு இரண்டாவது டைட்டிலில் உள்ள Web Office ஐ ரெஃப்ரஷ் செய்து பார்த்தால் உங்களுக்கான 1 ஷேர் இருக்கும்.

    அவ்வளவுதான் உங்கள் ஷேரினை பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்

    உணவில் தரமற்ற பொருட்களை கலக்கிறார்கள்? எப்படி கண்டு பிடிப்பது ?

    By: ram On: 22:09
  • Share The Gag
  • கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது. இது தெரியாமல் அதை காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம்.

    தவறான வழியில் காசு சம்பாதிக்க மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது?

    சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.

    பெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்

    ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள் இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஓட்டிக்கொள்ளும். இந்த ஏலக்காயில் மணமிருக்காது.

    மஞ்சள் தூளில்,பருப்பு வகைகளில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறாகள். அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.

    மிளகாய் தூளில் மரப்பொடி , செங்கல் பொடி, Rodamine Culture மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்கள். நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும் வண்ணப் பொடி தண்ணீரில் நிறமுண்டாக்கும். செங்கல் பொடி மிளாய் பொடியை விட சீக்கிரம் கிளாசின் அடியில் போய் செட்டில் ஆகிவிடும். 2 கிராம் மிளாய் பொடியில் 5 ml acetone சேர்த்தால் உடனடி சிவப்பு நிறம் தோன்றினால் Rodamine Culture கலப்படத்தை உறுதி செய்யலாம்.

    காபித் தூளில் சிக்கரி கலக்கிறார்கள். குளிர்ந்த நீரில் கலந்து குலுக்கினால் காபித்தூள் மிதக்கும் சிக்கரி கீழே படிந்து விடும்.

    கொத்துமல்லி தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத்தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும்

    கிராம்பில் அதன் எண்னெயை எடுத்து விட்டிருப்பார்கள். எண்ணை நீக்கப்பட்ட கிராம்பு சுருங்கி இருக்கும்

    சீரகத்தில் புல்விதை நிலக்கரிதூள் கொண்டு வண்ணம் ஊட்டப் பட்டிருக்கும். கைகளில் வைத்து தேய்த்தால் விரல்களில் கருமை படியும்.

    நெய்யில் மசித்த உருளக்கிழங்கு, வனஸ்பதி சேர்த்திருப்பார்கள். 10-மி.லி.ஹைட்றோ குளோரிக் அமிலத்துடன் 10-மி.லி உருக்கிய நெய் கலந்து அதோடு ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம் நன்றாக குலுக்கவும் வனஸ்பதி கலந்திருந்தால் பத்து நிமிடங்களுக்கு பின் சிவப்பு நிறமாக மாறும்.

    வெல்லத்தில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறார்கள்.அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.

    ரவையில் இரும்புத் தூள் கலக்கிறார்கள் காந்தத்தை அருகே காட்டினால் இரும்புத்தூள் ஒட்டிக்கொள்ளும்.

    பாக்குத்தூளில் மரத்தூள் மற்றும் கலர் பொடி சேர்க்கிறார்கள் நீரில் கரைத்தால் தண்ணீரில் வண்ணம் கரையும்.

    பாலில்,நெய்யில் மசித்த உருளக்கிழங்கு அல்லது பிற மாவுகள் கலக்கிறார்கள். கலப்பட பாலில் ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் சேர்த்தால் மர வண்ண டிஞ்சர் நீல வண்ணம் ஆகும். பாலில் யூரியா கலப்படம் செய்திருந்தால் 5 ml பாலில்இரண்டு துளி bromothymol blue சொலுசன் கலந்து பத்து நிமிடம் கழித்து நீலநிறமானால் யூரியாகலந்திருப்பதை உறுதி செய்யலாம் பாலில் தண்ணீர் சேர்த்திருந்தால் ஒரு துளி பாலை வழ வழப்பான செங்குத்து தளத்தில் வழிய விட்டால் தூய பால் வெள்ளை கோட்டிட்டது போல் வழியும் கலப்பட பால் எந்த அடையாளமும் ஏற்படுத்தாது உடனடி வழிந்து விடும். டிடெர்ஜென்ட் பவுடர் எண்னெய் எல்லாம் சேர்த்து பால் போன்ற செயற்கை பாலையும் உருவாக்கி விடுகிறார்கள்.

    தேயிலைத்தூளில் பயன்படுத்திய பின் உலத்திய தூள் செயற்கை வண்னமூட்டிய தூள் கலக்கிறார்கள். ஈர, வெள்ளை பில்டர் தாளில் தேயிலைத் தூளை பரப்பினால் மஞ்சள், சிவப்பு, பிங்க் புள்ளிகள் உண்டானால் அதில் கலர் சேர்த்திருக்கிறார்கள். இரும்புத்தூள் சேர்த்திருந்தால் காந்தம் மூலம் கண்டுபிடிக்கலாம்.

    சமையல் எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலக்கிறார்கள். எண்ணெயுடன் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சேர்த்து சிறிது சிறிதாக ஃபெர்ரிக் க்ளோரைடு கலவையில் கலந்தால் எண்ணெயில் ஆர்ஜிமோன் கலப்படமிருந்தால் அரக்கு வண்ண படிவு உண்டாகும்.

    குங்குமப்பூவில் நிறம் மற்றும் மணம் ஏற்றப்பட்ட உலர்ந்த சோள நார்கள் கலக்கிறார்கள்.தூய குங்குமப்பூ எளிதில் முறியாது கடினமாக இருக்கும். கலப்பட நார் எளிதில் முறிந்து விடும்.

    ஜவ்வரிசியில் மணல் மற்றும் டால்கம் பவுடர் சேர்கிறார்கள். வாயிலிட்டு மென்றால் கல் நற நறவென்றிருக்கும். தண்ணீரில் வேக வைக்கும் போது தூய ஜவ்வரிசி பருத்து பெரிதாகும்.

    நல்ல மிளகில் உலர்த்தப்பட்ட பப்பாளி விதைகள், கருப்பு கற்கள் சேர்க்கிறார்கள். முட்டை வடிவ கரும்பச்சை பப்பாளி விதைகள் சுவையற்றவை.

    தேங்காய் எண்ணெயில் பிற எண்ணெய்கள் கலக்கிறார்கள். தேங்காய் எண்ணெயை ஃபிரிட்ஜில் வைத்தால் உறையும் ஆனால் கலந்த .பிற எண்ணெய் உறையாது தனித்து இருக்கும்.

    கம்புவில் பூஞ்சைகள் கலக்கிறார்கள். உப்பு நீரில் பூஞ்சைகள் மிதக்கும்.

    இலவங்கப்பட்டையுடன் (தால்சினி) தரங்குறைந்த கருவாய் பட்டை (கேசியா) வில் வண்ணம் சேர்த்து கலக்கிறார்கள். சேர்க்கப்பட்ட வண்ணம் நீரில் கரையும்.

    சாதாரண உப்பில் வெள்ளைக் கல் தூள், சுண்ணாம்பு கலக்கிறார்கள் உப்பை தண்ணீரில் கரைத்தால் சுண்ணாம்பு கலப்படம் இருந்தால் தண்ணீர் வெள்ளை நிறமாகும்.தூய உப்பு நிறமற்று இருக்கும்.

    தேனில் சர்க்கரை பாகு கலப்படம் செய்கிறார்கள்.தூய தேனில் நனைத்த பஞ்சுத்திரியை தீயில் காட்டினால் எரியும் கலப்பட தேனில் எரியாது வெடி ஒலி உண்டாகும்.

    கடலை எண்ணெயில் பருத்திக்கொட்டை எண்ணெய் கலக்கிறார்கள் .2.5 மி.லி ஹால்பென் கரைசல் சேர்த்து லேசாக மூடி பொருத்தி கொதிநீரில் 30 நிமிடம் சூடு படுத்தினா கலப்படமிருந்தால் ரோஸ் நிறமுண்டாகும்.

    ஐஸ் கிரீமில் வாஷிங் பவுடர் கலக்கிறார்கள். சில துளி எலுமிச்சை சாறு அதில் விட்டால் குமிழ்கள் ஏற்பட்டால் இதை உறுதி செய்யலாம்.

    முட்டை யில் டீ டிக்காசன் மூலம் சாயம் ஏற்றி நாட்டு கோழி முட்டியாக விற்கிறார்கள்.

    விழிப்புணர்வு மூலம் மட்டும் தான் இந்த தீமையை வேருடன் ஒழிக்க முடியும்.

    'கத்திரி'க்கு காத்திருக்கும் 'கத்தி'

    By: ram On: 20:53
  • Share The Gag
  •  சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்ட நேரம் ஒதுக்குமாறு 'கத்தி' படக்குழு விண்ணப்பித்து இருக்கிறார்கள். இன்னும் இரண்டு நாட்களில் சென்சார் முடிந்தவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, சதீஷ், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'கத்தி'. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

    இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் வெளியாகி வந்தன. விளம்பரப்படுத்தும் பணிகள் எதுவுமே தொடங்காமல் இருப்பதால், படம் தீபாவளிக்கு வெளியாகிறதா என்று கேள்விகள் நிலவின.

    இது குறித்து 'கத்தி' படக்குழு தரப்பில் விசாரித்தபோது, "படத்தின் பணிகள் முடிந்து, சென்சார் அதிகாரிகள் விண்ணபித்து விட்டோம். சென்சார் அதிகாரிகள் இன்னும் இரண்டு நாட்கள் நேரம் ஒதுக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் சென்சார் முடிந்தவிடும் என்று பார்க்கிறோம். சென்சார் முடிந்தவுடன் தான் பேட்டியளிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது படக்குழு.

    சென்சார் முடிந்தவுடன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் விளம்பரப்படுத்தும் பணிகள் துவங்கும். ஏ.ஆர்.முருகதாஸ், அனிருத் உள்ளிட்ட அனைவருமே படம் வெளியாகும் முன்பு பேட்டிகள் என படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் ஈடுபடுவார்கள். இம்முறையும் விஜய் படம் குறித்து பேட்டியளிக்க மாட்டார்" என்றார்கள்.

    இசை வெளியீட்டு விழா எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு, 'கத்தி' புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் 'கத்திரி'க்கு பிறகு விரைவில் விடை தெரிந்துவிடும் என்கிறார்கள் தமிழ் திரையுலகில்.

    பானையில் தலை சிக்கிக் கொண்ட 2 வயதுக் குழந்தை....இறுதியில் ...?

    By: ram On: 20:22
  • Share The Gag
  • கேரளாவில் பானையில் தலை சிக்கிக் கொண்டதால் 2 வயதுக் குழந்தை 3 மணி நேரம் தவியாய்த் தவித்தது.

    திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பு. இவரது மனைவி மோனிசா. இத்தம்பதியரின் ஒரே மகள் அனன்யா (2 வயது), சில வாரங்களுக்கு முன்னர் தன் பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

    பெற்றோர் இருவரும் வெளியே சென்றிருந்த அவ்வேளையில், சுட்டிக் குழந்தையான அனன்யா

    ஒரு பானையை எடுத்து விளையாடியபோது அது எதிர்பாராதவிதமாகக் குழந்தையின் தலையில் சிக்கிக் கொண்டது.

    இதனால் பயந்துபோன அந்த குழந்தை வீறிட்டு அழத் தொடங்கியது. குழந்தையின் சத்தம் கேட்டு ஓடி வந்தபாட்டியும் அண்டை வீட்டுக்காரர்களும், பலவிதமாக முயற்சித் தும் பானையை அகற்ற முடியவில்லை.

    அருகிலுள்ள மருத்துவ மனைக்குச் சென்றும் பலன் இல்லை. இறுதியில் அப்பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறை நடத்தும் ஒருவர் பானையை அறுத்து எடுத்தார். இதன் பிறகே குழந்தை சிரிக்கத் தொடங்கியது.

    வெண்நிலா வீடு மிகவும் சோகம் மூழ்கிய வீடாக உள்ளது - திரைவிமர்சனம்!

    By: ram On: 19:37
  • Share The Gag
  • ஒரு நடுத்தர குடும்பத்தில் தேவைக்கு அதிகமாக ஆசைப்படும் போது என்ன ஆகிறது என்பதை சொல்ல வருகிறது இந்த வெண்நிலா வீடு. இப்படத்தில் சின்னத்திரை புகழ் செந்தில், விஜயலட்சுமி போன்றோன் நடிக்க வெற்றி மகாலிங்கம் இயக்கியுள்ளார்.

    படத்தில் கதையாக பார்த்தோமேயானால் தன் கணவர் ‘மிர்ச்சி’ செந்திலின் முதலாளி வீட்டு கல்யாணத்திற்கு செல்வதற்காக பக்கத்து வீட்டு தோழியிடம் தங்க நகைகளை இரவல் வாங்கி அணிந்து செல்கிறார் விஜயலட்சுமி. திருமணம் முடிந்து திரும்புகையில் அந்த நகைகள் களவாடப்படுகின்றன. இதனால்... கிட்டத்தட்ட 25 லட்ச ரூபாய் மதிப்புடைய அந்த நகைகளை திட்டமிட்டு களவாடிவிட்டார்கள் என்ற பழி செந்தில், விஜயலட்சுமி மீது விழுகிறது. இந்த இக்கட்டான சூழலுக்குப் பிறகு நடக்கும் பரபர சம்பவங்கள்தான் ‘வெண்நிலா வீடு

    நடிகர், நடிகைகளின் பங்களிப்பு பார்க்கும் போது செந்தில் தன் இயல்பான நடிப்பால் கவர்ந்திருக்கிறார். ‘‘இருக்கிற நிலத்தை இப்படி கூறுபோட்டு வித்தா யார் சோறு போடுவா?’’ என்று உணர்ச்சிவசப்படும் போதும், கந்துவட்டி காரரை பழிவாங்கும் இடத்திலும் செந்திலின் நடிப்புக்கு ஒரு சபாஷ் போடலாம்! பொறுப்புள்ள மனைவியாக, ஆசைகளை மனதில் அடக்கிக் கொண்டு வாழும் ஒரு கிராமத்து அப்பாவி பெண்ணாக வரும் விஜயலட்சுமி நிச்சயம் பெண்களின் மனதில் இடம் பிடிப்பார்.

    கந்துவட்டிக்காரராக ‘வழக்கு எண் 18/9’ முத்துராமன் மிரட்டியிருக்கிறார். கதைக்கேற்ற சரியான வில்லன்! ப்ளாக் பாண்டி சில இடங்களில் சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் படத்தின் தேவைக்கேற்ப பங்களித்திருக்கிறார்கள்.

    படத்தின் பலம் அனைத்து நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு, குடும்பத்துடன் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதையும், போராடிக்காமல் படம் பார்க்க வைத்த திரைக்கதையும்.

    பலவீனம் ஹீரோ, ஹீரோயினின் கிராமத்து ஃப்ளாஷ்பேக் காட்சிகள். பாடல்களும், பின்னணி இசையும்.

    வெண்நிலா வீடு மிகவும் சோகம் மூழ்கிய வீடாக உள்ளது.

    தனுஷ் மறுத்த கதையில் விஜய் நடிக்கிறாரா?

    By: ram On: 14:36
  • Share The Gag
  • விஜய் தற்போது கத்தி படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். இப்படத்தை அடுத்து சிம்பு தேவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

    இப்படத்திற்கு ‘மாரீசன்’ என்ற தலைப்பு வைத்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சில மாதங்களுக்கு முன் சிம்பு தேவன், தனுஷை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தது.

    அப்படத்திற்கும் ‘மாரீசன்’ என்ற தலைப்பை தான் வைத்தார்.பின் தனுஷுன் கால்ஷிட் பிரச்சனையால் இப்படம் கைவிடப்பட்டது. இதை வைத்து பார்க்கும் போது தனுஷ் மறுத்த கதையில் தான் விஜய் நடிக்கவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புளோரைடு பேஸ்ட்’ குழந்தைகளுக்கு ஆபத்து !

    By: ram On: 13:50
  • Share The Gag
  • தற்ப்போது குழந்தைகளுக்கு விதவிதமான பேஸ்ட்டு வருகிரது. அவைகள் ஆரோகியம் தான சற்று சிந்தியிங்கள். ஒரு வெப் தளத்தில் வெளி வந்த நல்ல தகவல்.

    எல்லோருக்குமே வெண்மையான பற்கள் மீது ஆசைதான். ஆனால், பற்களைச் சரியாகப் பராமரிக்காமல் இருந்தால், அவை மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கும். சிகரெட் பிடிப்பவர்கள், போதை பாக்குகளைப் பயன்படுத்துபவர்கள், வெற்றிலை போடுபவர்கள் போன்றவர்களின் பற்களைப் பார்த்தால் கறைபடிந்து காணப்படும்.

    அதோடு வாய் துர்நாற்றம் வேறு. பற்களை முறைப்படி துலக்காதது, ஒரே பிரஷ்சை வருடக் கணக்கில் பயன்படுத்துவது, கண்ட கண்ட பேஸ்ட்டை உபயோகிப்பது போன்றவையே இதற்குக் காரணமாகும்.

    உங்கள் பற்களும் முத்துப் போல் வெண்மையாக ஜொலிக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்:

    பிரஷ்ஷில் பேஸ்ட் வைக்கும்போது பிரஷ் முழுவதும் வைக்க வேண்டிய அவசியமில்லை. பாதி அளவு வைத்தால் போதுமானது. அந்தந்த நேரத்தில் கிடைக்கும் ஏதாவது ஒரு பேஸ்ட்டைப் பயன்படுத்தாமல், தொடர்ந்து தரமான பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள்.

    பல் துலக்கும் போது, கண்ணாடி முன்னால் நின்று மேல்வரிசைப் பற்களை கீழ்வரிசைப் பற்களுடன் ஒட்டாமல் லேசாகத் திறந்து வைத்துக் கொண்டு (ஒரு விரல் அளவுக்கு) துலக்க வேண்டும்.

    பற்களைச் சேர்த்து வைத்து துலக்கும்போது, பற்களில் உள்ள உணவுத் துகள்கள் மற்றும் படலங்கள் வெளியேறாமல் மீண்டும் பல் ஈறுகளின் அடியிலேயே ஒட்டிக்கொண்டு விடும். பற்களுக்கு இடையே சிறிது இடைவெளி விட்டு துலக்கும்போது உணவுத் துகள்கள், படலங்கள் வாய்க்குள் சென்றுவிடும். பின்னர் வாய் கொப்பளிக்கும்போது அவை வெளியேறி விடும்.

    பற்களைத் துலக்க ஆரம்பிக்கும்பொழுது, முதலில் கடைவாய்ப் பற்களில் இருந்து ஆரம்பிக்கலாம். இப்படிச் செய்வதால், மொத்தப் பற்களையும் வரிசையாக பிரஷ் செய்த திருப்தி கிடைக்கும்.

    மேல்வரிசைப் பற்களை மேலிருந்து கீழாகவும், கீழ்வரிசைப் பற்களை கீழிருந்து மேலாகவும் துலக்க வேண்டும்.

    மென்மையான பிரஷ்ஷையே பயன்படுத்த வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்றுவது நல்லது.

    பற்பொடியை விட பேஸ்ட் கொண்டு பல் துலக்குவதே சிறந்தது. ப்ளோரைடு கலந்த பேஸ்ட்கள் குழந்தைகளின் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும்.

    நாக்கில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற, டங்க் கிளீனருக்குப் பதிலாக, பிரஷ்ஷின் குச்சங்களைக் கொண்டே சுத்தம் செய்யலாம். ஏனெனில், டங்க் கிளீனர் நாக்கில் உள்ள சுவை நரம்புகளை புண்ணாக்கி விடும்.

    காலையில் எழுந்த உடனும், இரவு படுக்கப்போகும் முன்பும் என ஒருநாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.

    சிலருடைய பற்களுக்கு இடையே இடைவெளி காணப்படும். இவர்கள் இன்டர்டென்டல் பிரஷ் கொண்டு உணவுத் துகள்கள் மற்றும் படலங்களை அகற்றலாம்.

    சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றைக் குறைவாக சாப்பிட வேண்டும். இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டால் விரைவில் பற்சொத்தை ஏற்படும். அதேபோல் அதிக குளிர்ச்சியான பானங்களை அருந்தக் கூடாது.

    ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு இரண்டு, மூன்று முறை நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும்.

    மவுத்வாஷை தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று, பற்களைச் சுத்தம் செய்து கொள்வது அவசியம்.

    ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்த உதயகுமார்?

    By: ram On: 13:40
  • Share The Gag
  • சூப்பர் ஸ்டார் என்றும் தேவையில்லாத பிரச்சனைகளில் தலையை நீட்ட மாட்டார். ஆனால் அவரை சுற்றி அரசியல் என்ற பிரச்சனை எப்போதும் வலம் வந்து கொண்டே இருக்கும்.

    இந்நிலையில் ரஜினியை கடந்த சில நாட்களாக முன்னணி தேசிய கட்சி ஒன்று தன் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறது. இது குறித்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான சுப.உதயகுமாரன் தன் பேஸ்புக் பக்கத்தில் ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதில் ‘உங்களை அழைக்கும் கட்சி தமிழகத்தில் எத்தனை தலைமுறையானாலும் தலைதூக்காது. செல்லாக்காசான இந்தக் கட்சியில் சேர்ந்து தாங்கள் எங்கேயும் போய்ச்சேர முடியாது. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரையும், அதன் காரணமாக இந்தியா முழுவதும் பெற்றிருக்கும் “சூப்பர் ஸ்டார்” எனும் புகழையும் இழந்து விடுவீர்கள்.’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    நகம் கடிப்பது மனநிலை பாதிப்பு ? எச்சரிக்கை...எச்சரிக்கை..!

    By: ram On: 08:46
  • Share The Gag
  • நம்மூரில் பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இங்கே அதை நாம் சாதாரணமாக பார்க்கிறோம். ஆனால், அதுவும் மனநல பாதிப்புதான் என்று அமெரிக்காவில் மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

    மனநிலை பாதிப்புகளில், நகம் கடிப்பதை சேர்க்க பரிந்துரையும் செய்துள்ளனர். உலகம் முழுவதும் பல லட்சம் பேர் நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப் பின் வெளிப்பாடுதான்.

    காரணமில்லாத அச்சம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் சிலர் இதுபோல செய்கின்றனர். இதை மனநல பாதிப்பில் சேர்க்கலாம் என அமெரிக்க மனநல சங்கத்தை சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எப்போதாவது நகம் கடிப்பவர்கள் கூட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறிவிட முடியாது.

    இந்த பழக்கத்தால் வலி ஏற்படும் அளவுக்கு ஒருவர் நடந்துகொண்டால் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கருதலாம் என்று கலிபோர்னியா பல்கலைக்கழக மனோ தத்துவவியல் வல்லுநர் கரோல் மேத்யூஸ் தெரிவித்தார். நகம் கடிப்பதால் நோய் தொற்று ஏற்பட்டு அடிக்கடி சளி பிடித்தல், சுகவீனம் ஏற்படுகிறது.

    ‘குபீர்’ புதிய முயற்சி - திரைவிமர்சனம்..!

    By: ram On: 07:47
  • Share The Gag
  • ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஐந்து நண்பர்கள் தாங்கள் தங்கி இருக்கும் அறையில் சனிக்கிழமை இரவு விலையுயர்ந்த மதுபானம் ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு பார்ட்டி கொண்டாடுகிறார்கள். அப்போது ஒவ்வொருவரும் உலக விஷயங்களை பற்றி பேசிக் கொள்கிறார்கள். புரட்சி, சினிமா, முதல் உலகப் போர், குறும்பு, அரசியல், உணவு பழக்கம், பேய், பிசாசு கதைகள் இப்படி பல விஷயங்களை பற்றி சுவையாக உரையாடுகிறார்கள்.

    அதுமட்டுமில்லாமல், அந்த அறைக்குள்ளேயே விளையாட்டு, உடற்பயிற்சி, பாட்டுக்கு ஆட்டம் என கேளிக்கைக் கூத்துக்களையும் அரங்கேற்றுகின்றனர். இப்படியாக அந்த ஒரு நாள் இரவை அவர்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதை முழுப்படமாக எடுத்திருக்கிறார்கள்.

    வணிக ரீதியாக ஒரு வெற்றிப்படத்துக்கு இருக்கிற விதிகளை தகர்த்தெறிந்து படத்தை இயக்கியிருக்கிறார் திலீப். இப்படத்தில் கவர்ச்சி காட்டவோ, கண்ணீர் விடவோ ஒரு கதாநாயகி கூட இல்லை. படத்தின் ஆரம்பத்தில் ஓரிரு காட்சிகளில் தான் பெண்கள் வருகிறார்கள். அதன் பிறகு ஒரு பெண்ணைக் கூட திரையில் பார்க்க முடியவில்லை.

    அதே போல், இந்த படத்தின் முதல் சில காட்சிகளைத் தவிர, முழுப்படமும் ஒரு வீட்டுக்குள்ளே நிகழ்கிறது. அது கொஞ்சம் போரடிக்கிறது. சுவாரஸ்யமான விஷயங்களை பேசிக்கொண்டிருந்தாலும், ஒரே இடத்தில் அமர்ந்து பேசுவதைத்தான் ரசிக்க முடியவில்லை.

    படத்தில் நண்பர்களாக நடித்திருக்கும் திலீப், தமிழ், பிரதாப், வொய்ட் ரவி, பிரபு எல்லோரும் பேசிப்பேசியே நம்மை கடுப்பேத்துகிறார்கள். இவர்களுக்கும் வீடு கொடுத்திருக்கும் புரொபசர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஒரு காட்சியில் மட்டும் வந்தாலும் கலகலப்பாக நடித்து கலக்கியிருக்கிறார்.

    இந்த படத்தின் மூலம் நல்ல கருத்துக்களையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதை கதையோட்டத்தில் சிறப்பாக கொண்டு போயிருக்கிறார். குறிப்பாக, இறுதிக்காட்சியில் அனைவரும் நன்றாக மது அருந்தியிருக்கிறார்கள். அனைவரும் வெளியில் செல்லவேண்டும். அப்போது அவர்களில் ஒருவனின் தம்பி இவர்களது அறைக்கு வருகிறான். அவனை காரை ஓட்ட சொல்கிறார்கள். இந்த இடத்தில் மது அருந்திவிட்டு கார் ஓட்டக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக இந்த காட்சியை வடிவமைத்திருப்பது இயக்குனர் திலீப்பின் சிறப்பு. இது போன்ற சிறு சிறு கருத்துக்களை ஆங்காங்கே சொல்லி படம் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கிறார். முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாம் பாதி கொஞ்சம் போரடிக்கிறது.

    சந்தோஷ் ஸ்ரீராம் ஒளிப்பதிவு பெரிதாக எடுபடவில்லை. விஷால்-ஆதித்யாவின் இசை பரவாயில்லை. ஏதோ குறும்படம் பார்த்த உணர்வை தான் இப்படம் கொடுத்திருக்கிறது. 

    மொத்தத்தில் ‘குபீர்’ புதிய முயற்சி.

    செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபட போதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை !!

    By: ram On: 07:34
  • Share The Gag
  • பெரும்பாலான ஆண்களுக்கும், பெண்களுக்கும் மது அருந்தினால் அதிக ஈடுபாட்டுடன் செக்ஸ் செயல்பாடுகளில் இறங்க முடியும் என்ற தவறான நம்பிக்கை இருக்கிறது. செக்ஸ் என்பது ஆண்&பெண் இருவரின் மன மொத்த மகிழ்ச்சியான அனுபவம். உடல் அளவில் பார்த்தால் டெஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அளவைப் பொருத்தே அமைகிறது.

    இது ஆண்&பெண் இருவருக்கும் ஏறக்குறைய ஒரே வயதில் சுரக்கிறது. போதைப் பொருள்கள் உடலின் ஹார்மோன்களை வேகமாகச் சுரக்க செய்யும் தன்மை கொண்டவை. இயற்கைக்கு மாறாக நரம்புகளை துண்டிவிடுவதால் போதை மருந்து உள்கொண்ட விளையாட்டு வீரர்களை கூட போட்டிக்கு அனுமதிப்பதில்லை.

    அதேபோல் செக்ஸ் நடவடிக்கைகளில் போதைப்பொருள்கள் சிலநேரங்களில் உணர்ச்சியைத் தூண்டினாலும் தொடர்ந்து பயன்படுத்தும் போது உடல் தன் நிலையை மறந்து விடத் தொடங்குகிறது. போதைப் பொருள்கள் உணர்ச்சியை தூண்டுவது போல் தெரிந்தாலும் மன நிறைவை ஏற்படுத்தாது. மேலும் உச்சக்கட்டத்தை பெறவும் உதவாது. சில சமயங்களில் உச்சகட்ட நிலை ஏற்படுவதையே தடுத்து விடும் ஆற்றல் படைத்தவை.

    சிகரெட் பிடிக்கும் ஆண்களுக்கு அதிக வேகத்தில் செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபட முடிவதில்லை. அதேபோல் சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு உறவின் போது உறுப்பில் வழுவழுப்பு தன்மையை ஏற்படுத்தும் திரவத்தின் அளவு குறைந்து வறட்சி தன்னை ஏற்படுகிறது. இதற்கு சிகரெட்டில் உள்ள நிகோடின் தான் காரணம். மன உளைச்சலைக் குறைக்கும் மருந்துகளுக்கு கூட இந்த தன்மை உள்ளது. இப்படிப் பட்ட மருந்துகளை உள்கொள்ளும் போது செக்ஸ் உணர்வு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.

    போதைப்பொருள்களைப் போலவே மதுவும் உடலின் நரம்புகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதால் முதலில் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல நரம்பு மண்டலத்தையே பாதிக்கச் செய்துவிடும். குறிப்பாக அதிக அளவில் மது உள்கொள்ளும் போது அவர்களை மயக்கம் அடையச் செய்து உன்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல் மாற்றிவிடுகிறது. செக்ஸில் உச்சக்கட்டத்தை உண்டாக்கும் நரம்பு மண்டலத்தை மது நேரடியாகவே தாக்குகிறது. உனவே மது அருந்தியவர்கள் செக்ஸில் ஆர்வமாக ஈடுபட முடியும் என்பது உண்மை. ஆனால் செக்ஸ் செயல்பாடு முடிந்தபிறகு போதிய மகிழச்சி இருக்காது.

    செக்ஸ் செயல்பாடுகளில் ஆண்&பெண் இருவரும் தங்கள் விருப்பங்களை தெளிவான முறையில் பரஸ்பரம் தெரிவித்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் மது அருந்திய ஆண் அவனது ஆசையை மட்டும் தீர்த்துக்கொள்ள முயற்சிப்பானே தவிர தன்னுடைய இணையின் ஆசைகளை தெரிந்துகொள்ளும் மனநிலையில் இருக்கமாட்டான். அதனால் குடிகார ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு முழுமையான செக்ஸ் இன்பம் கிடைப்பதில்லை. குடி போதையில் மிகச்சிறப்பான முறையில் செக்ஸ் அனுபவித்ததாக ஆண்கள் நினைத்துக் கொள்ளலாமே தவிர உண்மையில் எதுவும் இருக்காது. அதனால் செக்ஸ் நிறைவை பெறவிடாமல் தடுக்கக்கூடிய காரணிகளில் ஒன்றான போதைப் போதை பொருள்களைத் தவிர்ப்பது செக்ஸிக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கு பயன் அளிக்கக்கூடியதாகும்.

    செக்ஸ் இன்பத்துக்காக போதை பொருள்பயன்படுத்துவதில் இன்னொரு மாபெரும் அபாயம் இருக்கிறது. அதாவது மது அல்லது போதைப் பொருள்களை உபயோகித்து அதன்பிறகு மட்டுமே தொடர்ந்து செக்ஸில் ஈடுபடுபவர்களால் குறிபிட்ட நாள்களுக்கு பிறகு போதைப் பொருள்கள் இல்லாமல் செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடவே முடியாமல் போய்விடும். இது உடல்நிலையை மிகவும் ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்று விடும்.