Thursday, 2 January 2014

ஜில்லா பேனருக்கு தடை!

By: ram On: 23:09
  • Share The Gag



  • ஜில்லா பட பேனர்களை வைக்க பொலிசார் தடைவிதித்ததால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.


    தலைவா படத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மூலம் தடை உத்தரவுகள் பலப்படுத்தப்பட்டதால், மீண்டும் அதே நிலை தனது படங்களுக்கு வரக்கூடாது என்று உஷாராக செயல்பட்டு வருகிறார் விஜய்.அதனால் ஜில்லா படத்தில் எந்தவொரு பஞ்ச் டயலாக்கும் இல்லாமல், கதைக்கு தேவையான வசனங்களை மட்டுமே பேசி நடித்துள்ளார்.


    அப்படி பேசி நடித்துள்ள டயலாக்கும் யாரையாவது மறைமுகமாக தாக்குவது போல் தெரிந்தால், அந்த வசனத்தையும் மாற்றி பேசி நடித்திருக்கிறார்.


    பொங்கலுக்கு படம் திரைக்கு வருவது உறுதியாகி விட்டதால், ஜில்லா படத்தின் பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டு வருகின்றன.


    இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னை நகரத்திலுள்ள சில ஏரியாக்களில் ஜில்லா விஜய்யின் ராட்சத கட்அவுட் மற்றும் பேனர்களை வைக்க அவரது ரசிகர்கள் மன்றத்தினர் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த காவல்துறையினர் தடை விதித்து விட்டார்களாம்.


    அதனால் பேனர்களை எடுத்துக்கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்களாம் விஜய் ரசிகர்கள்.

    ரஜினிக்குப் பதிலாக அஜித்?

    By: ram On: 22:24
  • Share The Gag



  • ரஜினி அடுத்து யார் படத்தில் நடிக்கப் போகிறார் என்பது தான் கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்.


    கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியை இயக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.


    ஆனால் , கே.எஸ். ரவிக்குமாரே, 'ரஜினிக்கு இப்போது படம் இயக்கவில்லை. இது வதந்தி' என்று சொல்லிவிட்டார்.


    ஷங்கர், பி.வாசு, கே.வி. ஆனந்த் என்று பல பெயர்கள் அடிபட்டன.


    அதில் இப்போது கே.வி.ஆனந்த் கழன்று கொண்டார். ரஜினிக்காகத் தயார் செய்த கதையை அஜித்திடம் சொல்லி ஓ.கே வாங்கிவிட்டாராம்.


    ரஜினிக்குப் பதில் அஜித்தான் நடிக்கப் போகிறாராம் .


    கௌதம் மேனன் படம் முடிந்த பிறகு, அஜித் கே.வி.ஆனந்த் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    அதற்குள் கே.வி.ஆனந்த் 'அனேகன்' படத்தை முடித்து விடுவாராம்.

    உன் மொழி தமிழ் மொழியென்று !!!

    By: ram On: 22:00
  • Share The Gag


  • தடுக்கி விழுந்தால் மட்டும்
     அ...ஆ...
    சிரிக்கும்போது மட்டும்
     இ..ஈ..

    சூடு பட்டால் மட்டும்
     உ...ஊ..

    அதட்டும்போது மட்டும்
     எ..ஏ...

    ஐயத்தின்போதுமட்டும்
     ஐ...

    ஆச்சரியத்தின் போது மட்டும்
     ஒ...ஓ...

    வக்கணையின்
     போது மட்டும்
     ஒள...

    விக்கலின்போது மட்டும்
     ஃ


     என்று தமிழ் பேசி மற்ற
     நேரம் வேற்று மொழி பேசும் தமிழரிடம்
     மறக்காமல் சொல்வோம்
     உன் மொழி தமிழ் மொழியென்று !!!

    நயன்தாராவுக்கு விருது நிச்சயம்!

    By: ram On: 21:49
  • Share The Gag



  • வித்யாபாலனுக்கு பெரிய இமேஜை உருவாக்கிக்கொடுத்த 'கஹானி' படத்தின் தமிழ்-தெலுங்கு ரீமேக்கான 'அனாமிகா'வில் நயன்தாரா நடித்திருக்கிறார்.


    ஆனால், இந்தப் படத்தின் முக்கிய சாரம்சமாக இருந்த கர்ப்பிணி கதாபாத்திரத்தை நார்மலாக மாற்றியிருக்கிறாராம் இயக்குநர் சேகர்முல்லா.


    புதிதாக திருமணமான ஒரு பெண், காணாமல் போன தனது கணவரைத் தேடி வருவது போன்று படமாக்கியுள்ளாராம்.


    ஆனால்,'கஹானி' படத்தில் கர்ப்பிணி என்பதுதான்  கதையின் அடிநாதமாக விளங்கியது.


    'கஹானி' இந்தியா முழுக்க ஓடி விட்டதால், திரும்பவும் அதையே செய்கிறபோது ரசிகர்களுக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.


    அதனால்தான் இந்த பதிப்பில் நிறைய திருத்தங்களை செய்திருக்கிறேன் . 'அனாமிகா'வில் நடித்ததற்காக நிச்சயம் நயன்தாராவுக்கு விருது கிடைக்கும் என்கிறார் சேகர் முல்லா.

    104-க்கு அழைத்தால் இலவச மருத்துவ ஆலோசனை: தமிழகத்தில் புதிய திட்டம் துவக்கம்!

    By: ram On: 21:27
  • Share The Gag



  • '104' என்ற எண்ணுக்கு போன் செய்து இலவச மருத்துவ ஆலோசனைகளைப் பெறும் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.


    இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:


    பொதுமக்கள் இனிமேல் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், தாய், சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், முதல்வரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள், குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை '104' என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.


    இதற்காக ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 24 மணிநேர தொலைபேசி '104' மருத்துவ சேவையை முதல்வர் ஜெயலலிதா கொடநாடு முகாமிலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.


    மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் முக்கியமான திட்டங்களை முன்னின்று நிறைவேற்றுவதிலும், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பற்றிய விவரங்களைக் கணினி மூலம் தினந்தோறும் பதிவு செய்வதற்காக கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஏற்படும் காலவிரயத்தை குறைக்கும் வகையிலும், அவர்கள் பணி மேம்பாடு அடையும் வகையிலும் அவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று கடந்த 2.11.2012 அன்று சட்டமன்றப் பேரவையில் முதல்வர் அறிவித்தார்.


    அதன்படி, கிராம சுகாதார செவிலியர்களுக்கு ரூ.19 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் 9,397 விலையில்லா மடிக்கணினிகள் வழங்குவதன் அடையாளமாக 7 கிராம சுகாதார செவிலியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா மடிக்கணினிகளை வழங்கினார்.

    சீழ்க் கட்டிகள் - வெயில் கால நோய் பற்றிய தகவல்கள்...??

    By: ram On: 21:15
  • Share The Gag


  • சீழ்கட்டிகள் என்பது ஆபத்தான நோயல்ல என்ற போதும் வேதனை அளிக்கின்றவையாக இருக்கின்றன. சருமத்தில் உள்ள முடி வேர்களில் கிருமித் தொற்று ஏற்படுவதால் இவை உண்டாகின்றன. சொறிவது உராய்வது போன்றவற்றால் சழுமத்தில் ஏற்படக் கூடிய நுண்ணிய காயங்களுடாக கிருமிகள் சருமத்தைத் தாண்டி உள்ளே ஊடுருப் பெருகுவதால் கட்டிகள் ஏற்படுகின்றன


     பொதுவாக முகம், கழுத்து, அக்குள், முதுகு, தொடை போன்ற இடங்களிலேயே இவை அதிகம் தோன்றுவதுண்டு. இருந்தாலும் வேறு முடி உள்ள வேறு இடங்களிலும் தோன்றலாம். காது, மூக்கு போன்ற நொய்த இடங்களில் தோன்றும் கட்டிகள் கடுமையான வேதனையைக் கொடுக்கும்.


    எவ்வாறு இருக்கும்?


    கட்டி தோன்றும்போது ஆரம்பத்தில் சற்று வலி இருக்கும், தடவினால் வீக்கம் இருப்பதாக உணர்வீர்கள். உற்று நோக்கினால் அவ்விடம் சற்றுச் சிவந்து தடித்திருப்பதாகத் தென்படும். நாட்கள் செல்ல வீக்கம் அதிகரிக்கும். பின்பு கடினமமாக இருந்த வீக்கம் சற்று மெதுமையாகி தொள தொளவென மாறும். உள்ளே கட்டி கரைந்து சீழ் தோன்றியிருக்கும். சீழ் அதிகரிக்க வலியும் அதிகரிக்கும்.


    கட்டிகளின் அளவுகளில் வித்தியாசங்கள் இருக்கும். கச்சான் கொட்டை அளவு முதல் டெனிஸ் பந்தளளவு அல்லது அதனிலும் பெரிதாகவும் வீங்கலாம். கட்டி பழுக்க ஆரம்பிக்கும்போது அதன் மத்தியில் சற்று மஞ்சள் நிறமாக மாற்றமுறும். இதனை மருத்துவத்தில் Pரளவரடந என்பார்கள்.
    சில அருகருகாக பல கட்டிகள் தோன்றும்போது ஒன்றுடன் மற்றது இணைந்து பெரிதாக மாறக் கூடும்.


    வலி அதிகமாகி வீக்கமும் அதிகரிக்கிறது எனில் நீங்கள் மருத்துவரை நாட நேரிடலாம். ஆனால் சில கட்டிகள் தானாகவே உடைந்து சீழ் வெளியேற வலி தணிந்துவிடும். உடைந்து சீழ் வெளியேறிய பின்னரும் சில நாட்களுக்கு அதிலிருந்து கசிவு ஏற்படக் கூடும். அவ்வாறு கசிவதனால் அவ்விடத்தில் தானாகவே காய்ந்து படிவதுண்டு.


    சீழ்கட்டிகள் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல கிருமியின் தாக்கத்தால் ஏற்படுவதாகும். கிருமித் தொற்றுக் காரணமாக உடலில் அலுப்பு வேதனை ஏற்டலாம். சில நேரங்களில் காய்ச்சலும் தோன்றக் கூடும். சிலருக்கு அது தோன்றுவதற்கு முன்னர் அவ்விடச் சருமத்தில் சற்று அரிப்பு ஏற்படுவதுண்டு.


    நீங்கள் செய்யக் கூடியது எவை?


    சிறிய வேதனை அதிகமற்ற கட்டி எனில் உடடியாக மருத்துவரை நாட வேண்டியதில்லை. அது தானாகவே உடைந்து சீழ் வெளியேறிய பின்னர் குணமாகும்.


    சுத்தமான துணியை சுடுநீரில் நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு நாளில் பலதடவைகள் செய்ய வேண்டும். இது வேதனையைத் தணிக்க உதவும். அத்துடன் கிருமி பெருகுவதையும் குறைக்கும்.


    கைகளால் அழுத்தியோ அல்லது பிளெட் போன்ற கூரிய ஆயதங்களால் வெட்டியோ சீழை நீங்களாக அகற்ற முற்பட வேண்டாம். சீழ் அகலுவதற்குப் பதிலாக கிருமிகள் பரவி நோயை தீவிரப்படுத்தலாம்.


    கட்டி தானாக உடைத்துவிட்டால் தொடர்ந்தும் சுடுநீர் ஒத்தடம் கொடுத்து அழுக்குகள் முழுமையாக வெளியேற உதவுங்கள். சீழ் வடிந்து கொண்டிருந்தால் அந்த இடத்தை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.
    அந்த இடத்தை நீங்கள் தொட்டால் சுத்தமாக நன்கு கை கழுவிய வேண்டும்.


    அதேபோல நோயாளி உபயோகித்த, துணி. டவல், படுக்கை விரிப்புகள் போன்றவற்றை மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. அவர் உபயோகித்த துணிமணிகளை நன்கு கழுவி உலர்ந்த பின்னரே மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. அவற்றை சுடுநீரில் கழுவுவதும் சிறந்தது.

    தமிழ் சினிமா 2013: உள்ளம் கவர்ந்த ஜோடிகள்!!

    By: ram On: 20:55
  • Share The Gag



  • இயக்குநர்கள் எத்தனை செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தாலும், திரையில் தெரியும் நாயகனும் நாயகியும்தான் ஒரு படத்தின் வெற்றிக்கான தூதுவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்கு பிடித்த நாயகன் - நாயகி காம்பினேஷன் ஹிட்டானால் அவர்களை நம் ரசிகர்கள் உள்ளங்கைகளால் தாங்குவார்கள். கமல்- SRIதேவி, ரஜினி - SRIபிரியா, பிரபு - குஷ்பு... என்று இதற்கு பல உதாரணங்கள் உண்டு. அந்த வரிசையில் கடந்த ஆண்டு ஹிட்டான ஜோடிகள்.

    ஆர்யா – நயன்தாரா

    ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் அறிமுகமான இந்த ஜோடி அப்போதே பேசப்பட்டது. மீண்டும் ‘ராஜா ராணி’யில் ஜோடி சேர்ந்த இவர்களை ‘மேட் ஃபார் ஈச் அதர், ஜோடியாக ஜான் – ரெஜினா கதாபாத்திரங்களில் ‘ராஜா – ராணி’ படத்தில் வார்த்தெடுத்தார் இளம் இயக்குநர் அட்லி. படத்தில் ஜெய்யுடனும் நயன்தாரா நடித்திருந்தாலும், ஆர்யா – நயன்தாரா கெமிஸ்ட்ரியே பெரிதும் பேசப்பட்டது. மேலும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்த ஆர்யா – நயன்தாரா திருமணம் என்ற உத்தியை பயன்படுத்தியதும் பரபரப்பைக் கிளப்பியது. ‘ராஜா – ராணி’ 30 கோடி வசூல் செய்தது மட்டுமல்ல, இந்தப் படத்தின் ஆடியோ, காலர் டுயூன் சந்தை. பண்பலையில் பாடல்கள் வரிசையில் முன்னணிஎன எல்லாவற்றிலும் கலக்கியது. ஆர்யாவுடன் இனி இணைந்து நடிக்கமாட்டேன் என்று நயன்தாரா சொல்லும் அளவுக்கு இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றது.

    விஷால் – லட்சுமிமேனன்

    தொடர்ந்து பாக்ஸ் ஆபீசில் தடுமாறிவந்த விஷாலுக்கு, இந்த ஆண்டு கைகொடுத்த படம் ‘பாண்டிய நாடு’. இதில் ஒரு சாமான்ய மதுரை இளைஞனாக நடித்த விஷாலுக்கு ஜோடியாக, ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியையாக கச்சிதமாகப் பொருந்தியிருந்தார் லட்சுமிமேனன். இந்தப் படத்தில் இவர்களது காதல் காட்சிகளுக்காகவே ரசிகர்கள் குவிந்தார்கள்.

    சூர்யா – அனுஷ்கா
    60 கோடிக்கு குறையாத வசூல் குவித்த சிங்கம் 2-ஆம் பாகத்தில், சூர்யாவின் காதலியாக, முதல்பாகத்தில் நடித்த அனுஷ்கா, 2 ஆம் பாகத்தில் கல்யாணத்துக்கு காத்திருக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார். இளமைத்துள்ளலுக்கு ஹன்சிகா இன்னொரு கதாநாயகியாக இதில் சேர்க்கப்பட்டாலும், அனுஷ்கா – சூர்யா இடையேயான காதல் காட்சிகளுக்குதான் இதில் அதிக வரவேற்பு.

    நஸ்ரியா – நிவின்

    அல்போன்ஸ் புத்திரனின் இசை ஆல்பத்தில் நிவினுடன் ஜோடி சேர்ந்து யூடியூப் ரசிகர்களிடம் எக்குத்தப்பாக ஏற்கனவே பிரபலமாகியிருந்தது இந்த ஜோடி. மீண்டும் அதே அல்போன்ஸ் இயக்கத்தில் ‘நேரம்’ படம் வழியாக தமிழுக்கு அறிமுகமான இந்த ஜோடியின் இயல்பான, கவித்துவமான உடல்மொழியால் இவர்களை தங்களுக்கான ‘கனவு ஜோடியாக’ ஏற்றுக்கொண்டார்கள் ரசிகர்கள். வெறும் 2 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தப் படம், கதை சொன்ன விதத்துக்காக மட்டுமல்லாமல், நஸ்ரியா – நிவின் ஜோடிக்காவும் 9 கோடி வசூல் செய்து கலக்கியது.

    ஜீவா - த்ரிஷா

    ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ஜெசி கதாபாத்திரத்தில் தோன்றிய த்ரிஷாவுக்கு மீண்டும் அதைவிட சிறப்பான பாராட்டு கிடைக்கச் செய்த படம் ‘என்றென்றும் புன்னகை’. இந்தப் படத்தில் இளம் விளம்பர காப்பி ரைட்டர் ப்ரியாவாக – ஜீவாவை மனதில் வரித்துக்கொண்டு அவர் காதலைச் சொல்லமாட்டாரா என்று ஏங்கும் கதாபாத்திரத்தில் காட்டிய இயல்பும் நெருக்கமும் ரசிகர்களுக்கு ஜீவா - த்ரிஷா ஜோடியை மிகவும் பிடிக்க காரணமானது.

    விஜய் – அமலாபால்

    வியாபார ரீதியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கில் இருக்கும் ஹீரோக்களோடு ஜோடி சேர்ந்து வந்த அமலாபால், விஜயுடன் ஜோடி சேர்ந்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தில் விஜய் – அமலா இடையிலான காட்சிகள் ரசனையாக அமைந்து விட்டதும், க்ளைமாக்ஸில் அமலா பால் திடீர் போலீஸ் அதிகாரி அவதாரம் எடுத்ததும் ரசிகர்களை கவர்ந்ததால் இந்த ஜோடி பேசப்பட்டது.

    இந்த ஆண்டில் அஜீத்தின் ஆரம்பம் வெளியான போதிலும், அவர் இப்படத்தில் காதல்காட்சிகளில் அவ்வளவாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ”ஒரு மூச்சு விடும் நேரம்,” ....??

    By: ram On: 20:15
  • Share The Gag



  • புத்தர் தன சீடர்களிடம்,

    ”ஒரு மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு?”என்று

    கேட்டார்.

    ஒரு சீடர் எழுபது என்றார்,இன்னொருவர்

     அறுபது என்றார்.

    மற்றொருவர் ஐம்பது என்றார்.

    அனைத்துமே தவறு என்று புத்தர் சொல்ல,

    சரியான விடையை அவரே சொல்லும்படி

     அனைத்து சீடர்களும் வேண்டினர்.

    புத்தர் புன் முறுவலுடன் சொன்னார்,

    ”ஒரு மூச்சு விடும் நேரம்,”என்றார்.

    சீடர்கள் வியப்படைந்தனர்.

    ”மூச்சு விடும் நேரம் என்பது கணப் பொழுதுதானே?”

    என்றனர்.”

    உண்மை.மூச்சு விடும் நேரம் கணப்பொழுதுதான்.

    ஆனால் வாழ்வு என்பது மூச்சு

     விடுவதில்தான் உள்ளது.

    ஆகவே ஒவ்வொரு கணமாக வாழ வேண்டும்.

    அந்தக் கணத்தில் முழுமையாக

     வாழ வேண்டும்.”என்றார் புத்தர்.

    ஆம்,நண்பர்களே.,

    பெரும்பாலானவர்கள் கடந்த கால மகிழ்ச்சியிலே மூழ்கியிருக்கிறார்கள்.

    பலர் எதிர் காலத்தைப் பற்றிய பயத்திலும்,கவலையிலும் வாழ்கிறார்கள்.

    நிகழ காலம் மட்டுமே நம் ஆளுகைக்குட்பட்டது.

    அதை முழுமையாக வாழ வேண்டும்.

    'ஆகோ' கதையைக் கேட்டு வியந்த அனிருத்!

    By: ram On: 20:05
  • Share The Gag



  • இயக்குநர் ஷ்யாம் சொன்ன கதையைக் கேட்டு 'ஆகோ' படத்திற்கு இசையமைக்கிறேன் என்று அனிருத் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

    நாயகனாக நடிக்க பல வாய்ப்புகள் வந்தாலும், அவற்றை எல்லாம் தட்டிக் கழித்தே வருகிறார் அனிருத். தற்போதைக்கு திரையுலகில் இசை மூலமாக மட்டுமே தனது பங்களிப்பு என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார் அனிருத்.


    'ஆகோ' என்ற படத்தை இயக்க இருக்கிறார் ஷ்யாம். ரெபெல் ஸ்டூடியோஸ் சார்பில் தீபன் பூபதி, ரதீஸ் வேலு ஆகியோர் தயாரித்து வருகின்றனர். இப்படத்தின் FIRST LOOK வெளியாகி இருக்கிறது. அனிருத்தை முன்னிலைப்படுத்தி படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. இதனால் அனிருத் நாயகனாக நடிக்க இருக்கிறாரா என்ற கேள்வி நிலவியது.


    ஆனால், அனிருத் இப்படத்தின் கதையைக் கேட்டு இசையமைக்க மட்டுமே ஒப்புக் கொண்டிருக்கிறார். அனிருத்திற்கு இருக்கும் ரசிகர்களை மனதில் வைத்து, 'ஆகோ' படத்தின் FIRST LOOK போஸ்டரை அனிருத்தை பிரதானப்படுத்தி வடிவமைத்திருக்கிறார்கள்.


    'ஆகோ' என்றால் ஆர்வ கோளாறு . மூன்று ஆர்வ கோளாறு இளைஞர்களின் ஆர்வத்தால் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களின் சாராம்சமே 'ஆர்வ கோளாறு' படத்தின் கதை என்றார் இயக்குநர் ஷ்யாம்.

    நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி!!!

    By: ram On: 19:46
  • Share The Gag



  • டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது.

    சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் வெற்றி பெற்று, தமது அரசின் பெரும்பான்மையை நிரூபித்தார், ஆம் ஆத்மியின் தலைவரும், முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால்.

    மொத்தம் உள்ள 70 உறுப்பினர்களில், ஆம் ஆத்மி அரசுக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 36 வாக்குகள் கிடைத்தது. ஆம் ஆத்மி கட்சியின் 28 உறுப்பினர்களும், காங்கிரஸின் 8 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். பாஜகவின் 31 உறுப்பினர்கள், ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

    டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் மனீஷ் சிசோதியா நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

    ஆம் ஆத்மி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்துக்கு காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்தது. பாஜக எதிர்த்து வாக்களித்தது. முடிவில், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது.

    வாக்கெடுப்புக்கு முன் நடந்த விவாதத்தின்போது, மக்களுக்காக ஆம் ஆத்மி நல்லாட்சி செய்தால், ஆட்சி காலம் முழுவதும் ஆதரவு நீடிக்கும் என காங்கிரஸ் உறுதி அளித்தது.

    அதேவேளையில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சியமைப்பதைக் கடுமையாக விமர்சித்த பாஜக, ஊழல் கட்சி என விமர்சித்துவிட்டு, அதன் ஆதரவுடன் அரசு அமைப்பதன் கட்டாயம் என்ன? என்று கேள்வி எழுப்பியது.

    இறுதியாக பேசிய முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், நாட்டில் ஊழல் அரசியலை துடைப்பதற்கான முதல் படியை டெல்லி மக்கள் எடுத்து வைத்துள்ளனர் என்றார்.

    முந்தைய காங்கிரஸ், பாஜக நகராட்சி நிர்வாகத்திலோ, எங்களது அரசிலோ ஊழல் புரிந்தவர்கள், ஊழலில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிபட கூறினார்.

    முன்னதாக, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா 31 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும் வென்றன. காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையில் இல்லாத நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைத்தது.

    ராம் லீலா மைதானத்தில் 28ம் தேதி நடந்த பதவியேற்பு விழாவில், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    மொத்தம் 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில் பெரும்பான்மைக்கு 36 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 28 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஆம் ஆத்மிக்கு 8 உறுப்பினர்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் ஆதரவு தருவதாக ஏற்கெனவே உறுதி அளித்திருந்தது.

    நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாளை (வெள்ளிக்கிழமை) சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறும். சபாநாயகர் தேர்தலில் ஆம் ஆத்மியின் மணீந்தர் சிங் போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சபாநாயகர் பதவிக்கு ஜெகதீஷ் முகி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

    முன்னதாக, டெல்லி சட்டசபையின் முதல்கூட்டம் நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. இதில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் உள்பட அனைத்து உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டனர்.