Wednesday, 24 September 2014

உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 மற்றும் பாபநாசம் ரிலீஸ் தேதிகள்

By: ram On: 22:36
  • Share The Gag
  • ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி ஆகியோர் நடிக்கும் படம், 'உத்தமவில்லன்'. இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி தயாரிக்கிறார்.

    சரித்திர காலத்து கதையைப் பின்னணியாகக் கொண்டு திரைப்படமாக உருவாகிவருகிறது 'உத்தமவில்லன்'. இப்படத்தை நவம்பர் 7ல் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.நவம்பர் 7 கமல் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஶ்ரீகாளீஸ்வரி பிலிம்ஸ் நிறுவனம் 'உத்தமவில்லன்' படத்தை கேரளாவில் ரிலீஸ் செய்கிறது.

    இதற்கடுத்து, ஜனவரி 2015ல் 'விஸ்வரூபம் 2' ரிலீஸ் ஆக இருக்கிறதாம். 'பாபநாசம்' ஏப்ரல்2015ல் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    அடுத்தடுத்து மூன்று படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதால், கமல் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

    சொல்பவன் யார் என்றுதான் உலகம் பார்க்கிறது - கண்ணதாசன்

    By: ram On: 22:12
  • Share The Gag
  • கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு
    கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.
    -
    அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல்
    எழுந்தது.வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம்
    பிடித்தது.

    கைதட்டல்கள் முடிந்ததும்,கண்ணதாசன் சொன்னார்,”இன்று நான்
    வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர்
    நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்

    .அது மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க
    சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.

    என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை.
    அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.

    ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய,சொல்லும் பொருளைப்
    பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது.”

    விஜய் சேதுபதி வேண்டாம்! நலன்குமாரசாமி முடிவு?

    By: ram On: 21:49
  • Share The Gag
  • ‘யாரு நடிச்சா என்ன? என் கதை ஜெயிக்கும்’ என்று ஒரு படைப்பாளி நம்புவதில் தவறேயில்லை. ஆனால் தனக்கு முகம் கொடுத்த நடிகரை விட்டு விட்டு இன்னொருவர் பின்னால் போவதுதான் எந்த வகையில் சேர்த்தி என்று நினைக்க வைக்கிறது இந்த சம்பவம்.

    ‘சூதுகவ்வும்’ படத்தின் வெற்றிக்கு முன்பே ‘பீட்சா’ என்ற படத்தின் வெற்றியை ருசித்துவிட்டார் விஜய் சேதுபதி. ஆனால் வேடிக்கை…. இந்த சூது கவ்வும், பீட்சாவுக்கு முன்பே பேசப்பட்ட படம். விஜய் சேதுபதியின் தன ரேகையும் புகழ் ரேகையும் அழுத்தமாக இருந்ததன் விளைவு ரெண்டு படங்களுமே தாறுமாறான ஹிட். இன்றைய தேதிக்கு விஜய் சேதுபதி முன்னணி நடிகர்களில் முதல் பத்தில் ஒருவர். நல்லது. நாம் சொல்லப்போவது… இவ்வளவு பெரிய நடிகரை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அறிமுகமான நாளில் இருந்தே தோல்வியை மட்டுமே தந்த ஒரு ஹீரோவை வைத்து ‘நானும் ஜெயிப்பேன்ல?’ நலன்குமாரசாமி களமிறங்கியிருக்கிறாரே அது பற்றிதான்.

    சி.வி.குமார் தயாரிக்கும் இந்த படத்தில் முதலில் விஜய்சேதுபதிதான் நடிப்பதாக இருந்தது. திடீரென அவர் வேண்டாம் என்று நினைத்த நலன், ‘கவுதம் கார்த்தியை வைத்து எடுக்கிறேன்’ என்றாராம் சி.வி.குமாரிடம். இருந்தாலும் சிவி.குமாரின் அடுத்த தயாரிப்பில் விஜய் சேதுபதி இருக்கிறார் என்கிறது நம்பத் தகுந்த தகவல்கள்.

    சூது விலகி பழைய நட்பு மலர்ந்தால் சரி!

    காங்கேயம் காளையும்... சிந்து சமவெளிக்காளையும்!

    By: ram On: 21:07
  • Share The Gag
  • காங்கேயம் காளைகளை பற்றி நம்மில் சிலருக்கு தெரியும் , சிலருக்கு தெரியாது . தமிழ் நாட்டின் அடையாளமாக திகழ்கிறது காங்கேயம் காளைகள். உலகில் வேறெங்கும் இது போன்ற திமில் உள்ள காளைகளை பார்க்க முடியாது. உலகின் தொன்மை விளையாட்டான ஏறு தழுவதல் என்று சொல்லக் கூடிய ஜல்லிக் கட்டு போட்டியில் இந்த அரிய வகையான காளைகளை  தமிழ்நாட்டில் நாம் பார்த்திருக்கலாம். அண்மையில் சங்கம் நான்கு நிகழ்ச்சியில் காங்கேயம் காளைகள் பற்றி கார்த்திகேயா சிவசேனாதிபதி கூறுகையில் , இந்த அரிய வகை காளைகள் தற்போது அழிந்து வரும் உயிரினமாக கருதப்படுகிறது. இங்கிருக்கும் பண்ணையார்கள் அதை பராமரிக்க விரும்பாமல் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து விடுகின்றனர் . அதனால் இக்காளைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது என்று சுட்டிக் காட்டினார். கார்த்திகேயன் ஈரோட்டில் காங்கேயம் காளைகள் வளர்க்கும் பண்ணையை பராமரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது

    மேலும் வரலாற்று ரீதியான தகவல் அவர் நமக்கு தருகையில்..
    இதே வகையான காளைகள் தான் சிந்து சமவெளியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வளர்க்கப் பட்டது . சிந்துவெளியில் நமக்கு கிடைத்த காளை முத்திரையில் இப்போது தமிழகத்தில் இருக்கும் காளையை போன்றே திமில் மற்றும் உருவ அமைப்பை ஒத்த காளையை பார்க்க முடிகிறது . இத்தகைய திமில் அமைப்பு வேறு எந்த காளைக்கும் உலகில் கிடையாது . தமிழர்கள் சிந்து வெளியில் வாழ்ந்ததற்கு இதை விட பெரிய சான்று வேறு கிடையாது . ஆனால் இந்தக் காளை எப்படி தமிழக நிலப்பரப்பிற்கு வந்தது? ஒரு வேளை அங்கிருந்து தமிழர்கள் கால் நடையாகவே காளைகளை ஓட்டி வந்திருக்கலாம். அல்லது தமிழர்கள் சிந்து வெளி வரை இப்படியான காளைகளை கொண்டு சென்று வளர்த்து இருக்கலாம் . இது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

    எப்படியோ தமிழர்களின் தொன்மையை இன்றளவும் இந்த அரிய வகை காங்கேயம் காளைகள் பறை சாற்றுகின்றன . இக்காளைகளை அழிய விடாமல் பராமரிப்பது தமிழர்களின் கடமையும் ஆகும்.

    பாடகி சின்மயியை கோபப்படுத்திய அஜித், விஜய் ரசிகர்கள்!

    By: ram On: 19:44
  • Share The Gag


  • சமீப காலகமாக இந்த சமுக வலைத்தளங்களில் ரசிகர்களின் மோதல் உச்சகட்டத்தை தொட்டுள்ளது. பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக கூட சொல்ல முடியவில்லை.

    ஒரு படத்தின் டீசர் குறித்து பிரபலங்கள் கருத்து தெரிவித்தால், அந்த படத்தின் நடிகருக்கு எதிரான ரசிகர்கள் அந்த பிரபலத்தை வாய்க்கு வந்தது எல்லாம் திட்டி விடுகின்றனர்.

    அப்படி சமீபத்தில் கத்தி டீசர் குறித்து சினிமயி கருத்து கூறியவுடன், அஜித் ரசிகர்கள் அவரை திட்ட, பின் இது விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையே பெரிய வார்த்தை போராகிவிட்டது. இதில் சொல்ல முடியாத பல சென்ஸார் வார்த்தகளும் அடங்கும்.

    இதை பொறுமையாக பார்த்த சின்மயி கோபம் தாங்க முடியாமல் மிகவும் மனம் நொந்து ஒரு கட்டுரையை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதில் ‘இனி எந்த நடிகர் படத்திற்கும் நல்ல விதமாக கருத்தை கூற கூடாது, நல்ல கலாச்சாரம், நல்ல பேன்ஸ்’ என்று டுவிட் செய்துள்ளார்.

    நீரழிவு நோயாளிகளுக்கான ஒருஉணவு முறை அளவுகளுடன்

    By: ram On: 18:50
  • Share The Gag
  • நீரழிவு நோயானது நமது உடலால் குளுக்கோஸின் அளவைக் கட்டுப் படுத்தமுடியாமால் போவதால் ஏற்படுகிறது. நாம் சரியான நடைமுறைகள் மூலம் குளுக்கோஸின் அளவு அதிகம் ஆகாமல் வைத்துக் கொண்டால் இதனால் ஏற்படும் பாதிப்புக்களை முழுவதுமாக தடுத்து ஆயுசு முழுக்க சுகதேகியாக இருந்து
    விடலாம்.

    வெறுமனே மாத்திரைகள் மூலம் மட்டும் நாம் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்திவிட முடியாது , மாத்திரைகளை விட உணவுக் கட்டுப்பாடே
    முக்கியமானதாகும். நமது நாட்டுக்குப் பொருத்தமான ஒரு உணவு முறையை தருகின்றேன் . இந்த முறையில் உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொண்டால் நீங்களும் சஊகமாக இருக்கலாம்.

    காலை உணவு

    பால் 1/2 கப் ( சீனி சேர்க்காது தேநீர் அல்லது கோப்பியுடன்)
    தானிய வகை (50g) பின் வருபவற்றில் எதாவது ஒன்று
    தோசை அல்லது இட்லி 2
    இடியப்பம் 3
    பிட்டு 2
    பாண் 1/4
    உப்பு மா 1

    பின் காலை

    கதலி வாழைப்பழம் 1

    மதிய உணவு

    சோறு ஒன்றரைக் கப்
    அசைவம் - மீன் 2 துண்டு அல்லது இறைச்சி 1/2 கப் அல்லது முட்டை 1
    பருப்பு 1/2கப்
    தயிர் 1/2 கப் என்பவற்றுடன் ,

    மரக்கறி - விரும்பிய அளவில் உண்ணக்கூடியவை
    கோவா ,சிறு கீரை, தக்காளி, வாழைப் பூ, காய்ப் பப்பாசி, பாகற்காய்,
    வெண்டைக்காய் .

    1/2 கப் மட்டும் உண்ணக் கூடிய மரக்கறி
    அகத்தி,முருங்கக்காய் , முருங்கை இலை, கரட், வெங்காயம்.

    தேநீர் வேளைபால் 1/2 கப்( சீனி சேர்க்காமல்)
    2 சீனி சேர்க்காத பிஸ்கட்(கிறீம் கிறேக்கர்)


    இரவு உணவு

    தானிய வகை -- இடியப்பம், பிட்டு , பாண், உப்பு மா ( மதிய உணவில் கூறிய அளவுகளில்)

    கறி வகை -- மதிய உணவைப் போல

    படுக்கை நேரம் -- பால் 1/2 கப் சீனி சேர்க்காமல்


    வாழைப் பழத்திற்கு பதிலாக உண்ணக் கூடிய பழ வகை

    ஜம்பு 20 , விளம் பழம் 1
    கொய்யா 1 ,புளித்தோடை 1
    பப்பசிப்பழம் 1 துண்டு


    விரும்பிய அளவில் உண்ணக் கூடியவை

    தெளிந்த மரக்கறி சூப்,தக்காளி, எலுமிச்சை,மரக்கறி சலட்,தக்காளி, கோவா, சீனி சேர்க்காத தேநீர் அல்லது coffee, அச்சாறு.

    முற்று முழுதாக தவிர்க்க வேண்டியவை

    சீனி ,சர்க்கரை, ஜாம், பணக்கட்டி, பழரசம்

    ஐ டீசரை கண்டு பிரம்மித்து கருத்து கூறிய அமீர் கான்!

    By: ram On: 18:19
  • Share The Gag
  • ஐ படத்தின் டீசர் சுமார் 55 லட்சம் ஹிட்ஸை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இப்படத்தை குறித்து பல பிரபலங்கள் தங்கள் கருத்துகளை கூறிவந்தனர்.

    சமீபத்தில் ராஜமவுளி ‘ஷங்கர் சார் அவர்களை யாராலும் தொட முடியாது’ என்று கூறியிருந்தார். அதேபோல் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் ஐ படம் குறித்து தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

    இதில் ‘ ஐ டீசர் பார்க்க மிகவும் பிரம்மிப்பாக உள்ளது, விக்ரம் மற்றும் ஷங்கரின் கடுமையான உழைப்பு டீசரிலேயே தெரிகிறது’ என்று கூறியுள்ளார்.

    ஆண்கள் வெறுக்கும் பெண்களின் சில செயல்கள்

    By: ram On: 17:59
  • Share The Gag
  • பெண்கள் செய்யும் சில செயல்கள் ஆண்களுக்கு பிடிக்காது. உதாரணமாக, பெண்களுக்கு மேக்-கப் போடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் ஆண்களுக்கு அது சுத்தமாக பிடிக்காது. பெண்களுக்குப் பிடித்து ஆண்களுக்கு பிடிக்காத சில செயல்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

    * பெண்கள் வெளியே கிளம்ப வேண்டுமெனில் குறைந்தது 1 மணிநேரம் எடுத்துக் கொள்வார்கள். இதனால் நீண்ட நேரம் காத்திருப்பதால், ஆண்கள் வெறுப்படைந்துவிடுவார்கள்.

    * பெண்களின் செயல்களில் முக்கியமான ஒன்று மேக்-கப் போடுவது. பெண்களுக்கு எங்கு செல்லும் போதும், நன்கு அழகாக பொலிவோடு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஆண்கள் இயற்கை அழகையே விரும்புபவர்கள். சொல்லப்போனால் மேக்-கப் போடும் பெண்களை விட, மேக்-கப் போடாத பெண்களாலேயே ஆண்களை எளிதில் கவர முடியும்.

    * பெண்களுக்கு எவ்வளவு தான் வீட்டில் துணிகள் இருந்தாலும், புது ஆடைகள் வாங்குவதில் உள்ள நாட்டம் குறையாது. அதிலும் ஒருமுறை மனதில் வாங்க வேண்டும் என்று நினைத்துவிட்டால், என்ன வாங்க வேண்டும் என்று யோசிக்கவே 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்த நேரம் மட்டும் ஆண்கள் பெண்கள் கைகளில் மாட்டிக் கொண்டால், பொறுமையையே ஆடையாக அணிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், சண்டைகள் வந்து வீடே இரண்டாகிவிடும்.

    * இயற்கையாகவே பெண்களுக்கு சுய அன்பானது அதிகம் இருக்கும். மேலும் எந்த நேரமும் நன்கு அழகாகவே காணப்பட வேண்டும் என்று அழகு மீது அதிக கவனம் கொள்வார்கள். அதனால் தான் அவர்கள் மேக்-கப் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர்.

    ஆனால் அவ்வாறு மேக்-கப் நமது துணைக்கு பிடிக்கிறதா என்று பார்த்து செய்வது நல்லது. ஏனெனில் அவர் தான் எப்போதும் உங்களுடன் இருப்பவர்கள். ஆகவே அதை மறக்காமல் நடப்பது நல்லது.

    மேற்கூறிய விஷயங்களை பெண்கள் தவிர்த்தால் நிச்சயம் அனைத்து ஆண்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

    ஆஸ்காரை மிஞ்சி விட்டது ஐ இசை வெளியீடு! அர்னால்ட் புகழாரம்! வஞ்சப்புகழ்ச்சியா இருக்குமோ..?

    By: ram On: 17:36
  • Share The Gag
  • தமிழ் சினிமாவின் பெருமை தற்போது உலக அளவில் அனைவரும் அறிந்து வருகின்றனர். அதற்கு சமீபத்தில் நடந்து முடிந்த ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவே சாட்சி.

    இவ்விழாவிற்கு வந்து சென்ற ஹாலிவுட் நடிகர் அர்னால்ட், தயாரிப்பாளர் ரவிச்சந்திரனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதில்’ நான் இதுவரை எத்தனையோ ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருது விழாவிற்கு சென்றுள்ளேன்.

    ஆனால் அவர்கள் எல்லாம் நிகழ்ச்சியை எப்படி நடத்த வேண்டும் என்று உங்களிடம் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

    வயிற்றை சுத்தமாக்கும் உணவுகள்..! அவசியம் உண்ண வேண்டியது...!

    By: ram On: 17:17
  • Share The Gag
  • அஜீரணப் பிரச்சினை என்பது இன்று அதிகமான பேரை அவதிக்குள்ளாக்குகிறது. உண்ணும் உணவு ஒழுங்காக செரிக்காவிட்டால் உடல்நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும். வயிற்று வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு சிரமத்தைத் தரும்.

    எனவே வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்போது தான் செரிமான மண்டலத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும். பச்சைக் காய்கறிகள் வயிற்றைச் சுத்தமாக்கும். கீரைகள், செலரி, புராக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும்.

    அதேபோல கேரட், வெங் காயம், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைட்ரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை. புளிப்புச் சுவையுள்ள சிட்ரஸ் பழங்கள், செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு ஏற்றது.

    எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை செரிமான மண்டலத்துக்கு ஏற்ற உணவுகள். அதே போல் தினசரி இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். தானிய உணவுகள், கோதுமை ரொட்டி போன்றவை எளிதில் ஜீரணமாகும்.

    தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும். அதே போல, தினசரி உண்ணும் உணவுகள் எளிதில் செரிப்பதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். பால், பழரசங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூலம் செரிமான மண்டல கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    சத்தான உணவு சாப்பிடுவதன் மூலம் உடம்பில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். தொப்பை ஏற்படாது. வயிறு தட்டையாக இருக்கும். வாயில் வைக்கும் உணவில் நாம் கவனமாக இருந்தால், வயிற்றில் பிரச்சினை ஏற்படாது!

    ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!

    By: ram On: 12:38
  • Share The Gag


  • வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:

    o பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

    o சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு.

    o அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச்செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

    o சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

    o ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

    o ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.

    o ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

    o கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

    o நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

    o வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

    o கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

    o நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

    o நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

    மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்

    லிங்குசாமியை கலாய்க்கும் இணையவாசிகளை பின்னிபெடலெடுத்த - வெங்கட்பிரபு..!

    By: ram On: 12:24
  • Share The Gag
  •  அஞ்சான் திரைப்படம் வெளியாகி, அது தொடர்பான பேச்சுகள் அடங்கிய நிலையில், அப்படத்தின் இயக்குநர் லிங்குசாமி அளித்த பழையை பேட்டியை முன்வைத்து, சமூக வலைதளங்களில் கலாய்ப்பு பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    தொடர்ச்சியாக, நையாண்டித்தனத்துடன் இயக்குநர் லிங்குசாமி மீதான கலாய்ப்புத் தாக்குதல்கள் மிகுந்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறார், இயக்குநர் வெங்கட்பிரபு.

    இணையத்தில் இயக்குநர் லிங்குசாமிக்கு எதிரான கேலித் தாக்குதல்களை கடுமையாக சாடி, வெங்கட்பிரபு வெளியிட்டுள்ள பதிவு:

    "நீங்கள் நினைப்பது போல, சினிமா இயக்குவது என்பது சாதாரண விஷயமில்லை. எது சிறந்ததோ அதைச் செய்கிறோம். ஆனால், சில நேரங்களில் அது எடுபடுகிறது, பல நேரங்களில் அது எடுபடாமல் போகிறது.

    லிங்குசாமி சார் ஒரு சிறந்த இயக்குநர். 'ஜி' படத்தில் அவரோடு பணியாற்றி இருக்கிறேன். எந்த ஓர் இயக்குநரும் கடவுள் அல்ல. ஒவ்வொரு படைப்பின் போதும், கடவுளே சில தப்புகளைச் செய்கிறார். தீர்ப்பு சொல்வதற்கு நாம் யார்?

    நீங்கள் சொல்வதெல்லாம் (லிங்குசாமியை கலாய்க்கும் இணையவாசிகள்) சிரிப்பாக இருக்கிறது. ஆனால், எதிலுமே அர்த்தமில்லை. உங்களைப் பொறுத்தவரை ஒரு படம் வெற்றியா இல்லையா என்பது மட்டும்தான்.

    நீங்கள் நல்ல ரசிகர்களாக இருந்திருந்திருந்தால், 'தங்கமீன்கள்' ஒரு மகத்தான வெற்றிப் படமாகி இருக்குமே?

    உங்களால் கிண்டல் மட்டுமே செய்ய முடியும். நாங்கள் உங்களைக் கலாய்க்க ஆரம்பித்தால்?

    உங்களுக்காகத்தான் படம் இயக்குகிறோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஒரு நல்ல படத்தை ஏன் வெற்றி அடைய வைக்கவில்லை?" என்று கொந்தளித்து கேள்வி எழுப்பியிருக்கிறார் வெங்கட்பிரபு.

    அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!

    By: ram On: 11:48
  • Share The Gag
  • கோடைக் காலத்தில் பலருக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருப்பது ஐஸ்கிரீம். யாரும் கண்டுபிடிக்காமல் இருநூறு ஆண்டுகளுக்கு முன், தானாக உபயோகத்துக்கு வந்ததால் அது ஒரு வரப்பிரசாதம்தான்.

    அது மட்டுமல்ல; சர்க்கரை வியாதியோ அல்லது ஆஸ்த்மாவோ இருப்பவர்கள் கூட வருடம் ஒருமுறை துளியூண்டாவது கோவில் பிரசாதம்போல் சுவைத்துப் பார்க்கத் தவறுவதில்லை, ஐஸ்கிரீம்!ஆனால், இந்த வரப்பிரசாதம் வந்து சேர்ந்ததுவோ இனிமையான ஒரு நிகழ்ச்சியல்ல...

    அமெரிக்க ஜனாதிபதியாக 1809 முதல் 1817 வரை பணியாற்றிய ஜேம்ஸ் மேடிசன் பெரிய விருந்து நிகழ்ச்சி ஒன்றை ற்பாடு செய்திருந்தார். எல்லா நாட்டிலும் ஆட்சியாளர்கள் அளிக்கும் விருந்தின் படாடோபத்துக்குக் கேட்கவேண்டுமா, என்ன?
    வெள்ளை மாளிகையில் விருந்து ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஜனாதிபதியின் மனைவி டாலி மேடிசன் மேற்பார்வையில் எல்லாமே கனகச்சிதம்...

    ஆனால் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட வேண்டியிபருந்தது. இதன் விளைவாக விருந்திற்காகச் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் அப்படியே தேங்கிவிட்டன.டாலிமேடிசன் மேற்பார்வையாயினும், விருந்துக்கான சமையற் பொறுப்பில் பணியாற்றியவர் ஸெட்டீ ஜான்ஸன் எனும் நீக்ரோ பெண்.

    தேங்கிவிட்ட உணவுப் பொருட்கள் வீணாகிவிடக்கூடாது என்று ஏங்கிவிட்ட ஸெட்டீ ஜான்ஸன், தயாரிக்கப்பட்டடிருந்த தின்பண்டங்கள் கெட்டுப் போகாமலிருப்பதற்காக ஒரு ஐஸ்பெட்டியில் வைத்த மூடிவிட்டாள்.
    அந்தப் பண்டம் நன்றாக மென்மையாகச் சலிக்கப்பட்ட மாவும் இனிப்பும் கலந்து, வர்ணமும் சுவைப் பொருட்களுமாகப் பிசைந்து தயாரிக்கப்பட்ட மிருதுவான கட்டிப் பொருள்.

    ஒரு சில நாட்களுக்குப் பின் மீண்டும் வெள்ளை மாளிகையில் விருந்து நடைபெற ஏற்பாடாயிற்று.

    விருந்து துவங்கும்போதுதான் சமையலறைப் பணிப்பெண் ஜான்ஸனுக்குக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட தின்பண்டங்கள் நினைவுக்கு வந்தது. வெளியே எடுத்துப் பார்த்தால் அது பனிக்கட்டிபோல் நன்றாக இறுகி விட்டிருந்தது. அவற்றை விருந்தினர்க்குப் பரிமாறத் தயங்கினாள். ஆயினும் அதன் சுவை நன்றாக இருக்கவே எடுத்து வழங்கி விட்டாள். விருந்துக்கு வந்தோர் அந்தப் பண்டத்தைப் பார்த்துத் தயங்கினார். ஒருவர் மட்டும் அதை வாயில் வைத்தவுடன் குளிர் தாங்காமல் கத்திவிட்டார். “விஷம் விஷம்’ என்று அலறினார்.

    கூட்டத்தில் குழப்பம் உண்டாகிவிட்டது. யாரும் எந்தப் பொருளையும் உட்கொள்ளவில்லை. பணிப்பெண் ஸெட்டீயைச் சிறையிலிட்டனர். ஜனாதிபதியின் மனைவிக்கு அதிர்ச்சி. உணவுப் பொருளில் விஷம் கலந்திருக்காது என்பதில் உறுதியாக இருந்த அவர், அதில் துளியூண்டு மட்டும் எடுத்துத் தின்று பார்த்தார். இதற்குள் பனிக்கட்டிபோல் இறுகியிருந்த அந்தத் தித்திப்பான சுவைமிக்க மாவுப் பொருள் சற்று குழைவாக ஆகி, வாயில் வைக்கின்ற அளவுக்குக் குளிர்விட்டுப் போயிருந்தது.

    “அட என்ன சுவை!’ என்று மகிழ்ந்து போனார். உடனே, தன் பணிப்பெண்ணைச் சிறையிலிருந்து விடுவித்தார். இதுவரை எவரும் தின்று சுவைத்திராததால் அந்த விருந்தினர்கள் பயந்து போயிருந்திருக்கின்றனர்.அதன் பின் ஓராண்டிற்குள் வேகமாகவே ஐஸ்கிரீம் உலகப்புகழ் பெற்றிவிட்டது.அத்தியாவசியப்பொருளாகக் கோடைகாலம் மட்டுமல்ல; குளிர்காலத்திற்கும் எந்த விருந்திலும் தவிர்க்க முடியாதப் பண்டமாகிவிட்டது.

    அந்த கிசுகிசு உண்மைதான்! கொளுத்திப்போட்ட ஹீரோ

    By: ram On: 10:58
  • Share The Gag
  • கொளுத்திப்போட்டு குளிர் காய்வதில் சிம்புவுக்கு அடுத்த இடத்திலிருப்பவர் ராணாதான் போலிருக்கிறது. யாரிந்த ராணா என்பதற்கெல்லாம் பெரிய கதை திரைக்கதை வசனம் எழுத தேவையில்லை. ஏனென்றால் த்ரிஷாவின் பெயர் ஒலிக்கிற இடத்திலெல்லாம் ராணாவின் பெயரும் ஒலிக்கும். எனக்கும் அவருக்கும் ஜஸ்ட் பிரண்ட்ஷிப்புதான் என்று த்ரிஷா தப்பித்து வந்தாலும், அந்த கிசுகிசுவை ராணா அடிக்கடி சூடுபடுத்திக் கொண்டேயிருக்கிறார்.

    சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு இருவரும் கைகோர்த்தபடியே வந்தது கூட அப்படியொரு சூடான முன்னேற்பாடுதான்.

    சரி விஷயத்திற்கு வருவோம். அண்மையில் நட்சத்திரங்கள் திரண்ட ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேடையேறிய ராணாவிடம், உங்களுக்கு தமிழ் பேச வருமா என்று கேட்டார் தொகுப்பாளர். ம்… நல்லா வருமே என்றார் ராணா. சென்னையில எல்லா இடமும் தெரியுமா என்று கேட்டார் தொகுப்பாளர். ம் நல்லா தெரியுமே என்று கூறிய ராணா, அதற்கப்புறம் அடித்தது வெறும் ஜோக் என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை.

    சென்னையில என்னை எங்கு இறக்கிவிட்டாலும், கரெக்டா த்ரிஷா வீட்டுக்கு போயிருவேன் என்றார் ராணா. நமக்கு தெரிஞ்ச ஒரு விஷயத்தை அவங்களே ஒத்துக்கும்போது ஒரு சந்தோஷம் வருமில்ல…? அது எப்படியிருக்கும் என்பதை ஆடியன்ஸ்சோட கைதட்டலை வச்சுதான் அன்று தீர்மானித்தது பிரஸ்!

    உலகையை ரசிக்க வைத்தவனின் உருக வைக்கும் வரலாறு..!

    By: ram On: 10:29
  • Share The Gag
  • யுத்த வெறி பிடித்த ஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லிசாப்ளின் இயக்கி நடித்த முதல் பேசும் படம் The great dictator. இந்த படத்தை ஹிட்லர் இருட்டில் தனியாளாக அமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருந்தானாம்! 'சார்லி-ஹெட்டி'யின் காதல் கூட உருக்கமானது, உயவர்வானது...! தன் ரத்தம் சதைகளால் பிள்ளைகளுக்கு உருவம் கொடுப்பதால்தானோ என்னவோ அம்மாவிற்கு, தன் கணவனை விட, பிள்ளைகளின் மீது உள்ள பாசம் வலுவானதாக இருக்கிறது.

     ஒரு பொறுப்பில்லாத குடிகார அப்பாவுக்கு இரண்டாவது மகனாக சார்லி சாப்ளின் 1889 ஆம் ஆண்டு பிறந்தார். முழுப்பெயர் 'சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின்'. லண்டன் மதுவிடுதிகளில் பாடும் பெண் ஹென்னா தான் சார்லியின் அம்மா. இசைநிகழ்ச்சிகளில் வரும் பணமே வருமானம். இன்னொரு அப்பாவுக்கு பிறந்தவன் அண்ணன் ஸிட்னி. ஒரு நாள் மேடையில் பாடும்போது தொண்டையில் பிரச்னை; பாட முடியவில்லை! ஒரே கூச்சல்! அவமானம் கண்ணீராகக் கரைய மேடையை விட்டு கீழே இறங்கினாள், ஹென்னா. ஆறு வயது சிறுவன் சார்லி என்ன நினைத்தானோ மேடையேறினான். அது ஒரு மகா கலைஞனின் முதல் கலைப் பயணம் என்று யாருக்கும் தெரிந்திருக்காது! தன் அம்மா சொல்லிக் கொடுத்த பாடலைப் பாடி, தன் பிஞ்சு கால், கைகளை அசைத்து நடனமாடத் துவங்கினான். விசில், கைத்தட்டல் அரங்கமே அதிர்ந்தது! சில்லறைகள் சீறிப் பறந்தன. சில்லறைகளை பொறுக்கினான், சார்லி. பாடச் சொல்லி கூச்சலிட்டது கூட்டம்!

    'சில்லறைகளை பொறுக்கிய பிறகுதான் பாடுவேன்; ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை என்னால் செய்ய முடியாது!' மீண்டும் கொல்லென்று எழுந்த சிரிப்பால் வானம் அதிர்ந்தது! தன் தாய் பாடமுடியாமல் தவித்ததை நடித்துக் காட்ட மீண்டும் காது கிழியும் சிரிப்பொலி... மேடைப்பாடல், துணி தைத்து கொடுப்பது என்று வந்த வருமானம் போதுமானதாக இல்லை! பசிக்கு முன்னால் மூவரும் தோற்றுப்போனார்கள். வேறு வழியில்லாமல் ஹென்னா சார்லியின் அப்பா மேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தாள், தீர்ப்பு இழுத்தது. தன் பிள்ளைகள் இங்காவது வசதியாகப் படிக்கட்டும் என்று மூவரையும் அநாதை விடுதி ஒன்றில் சேர்த்தாள். தனித் தனியாக பிரிக்கப்பட்டார்கள். காலக்கொடுமை! அதனால்தானோ என்னவோ ஹென்னாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.

    சார்லி, ஸிட்னியையும் சார்லியின் அப்பா தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்பா தன் இன்னொரு மனைவி லூஸி வீட்டுக்கு கூட்டிப்போனார். அங்கேயும் பசி சார்லி, சிட்னியையும் வீதிக்குத் துரத்தி சிரித்தது. 'அம்மா, அம்மா' என்று கதறி அழுதான் சார்லி. அங்கே அவனுக்கு அழுகையைத் தவிர ஆறுதல் சொல்ல யாரும் இல்லை! ஒரு நாள் வீட்டு வாசலில் அந்த அதிசயம் நடந்தது! அம்மா ஹென்னா வந்திருந்தாள்!! சார்லி, சிட்னி ஓடிப்போய் ஒட்டிக்கொண்டார்கள்! மீண்டும் மூன்று உயிர்களும் ஓர் உயிரானது.

    சாப்ளின் அப்பாவிடம் இருந்து கொஞ்சம் பணம் வந்தது. பள்ளிப் படிப்பு தடையில்லாமல் தொடர்ந்தது. பள்ளிகளில் நடக்கும் நாடகம், நடனங்களில் தனக்கென்று ஒரு நல்ல பெயரை சார்லி சம்பாதிக்கத் தவறவில்லை! அவன் சார்ந்த நடன, நாடகக்குழு அமெரிக்காவிற்குப் போகும் சந்தர்ப்பம் வந்தது. அங்கு போன சாப்ளின் அமெரிக்க சுதந்திரதேவி சிலை நோக்கி தன்னை மறந்து கத்தினான் 'ஏய்! அமெரிக்காவே பத்திரமாக இரு! இன்னும் கொஞ்ச நாளில் உன்னை முழுவதுமாக கொள்ளையடிக்க இங்கே ஒருவன் வருவான் வந்து கொண்டிருக்கிறான்!' என்று. அடுத்த அய்ந்தாண்டுகளில் அதுதான் நடந்தது. உலகத்தையே கொள்ளையடித்தான், சாப்ளின்.

    தன் முதல் காதலி ஹெட்டியை சார்லியின் ஏழ்மையைக் காட்டி பிரித்தான், அவளின் அண்ணன். அந்தத் தோல்வியை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவரை வாழ்நாள் முழுக்க சித்திரவதை செய்தது! பிற்பாடு அவர் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்ட எண்ணற்ற திருப்தியற்ற திருமண வாழ்க்கைகளுக்கும் அதுவே காரணமாக அமைந்தது. தன்னை துன்புறுத்தும் ஹெட்டியின் நினைவுகளில் இருந்து தப்பிக்க, பொய்யாக தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு... தீவிர வாசிப்பை மேற்கொண்டார். தனக்கான சிந்தனைகளை செதுக்கிக் கொண்ட கால கட்டம் அது! முதல் படம் newspaper reporter. ஒரு நாள் ஏதாவது நடித்துக்காட்டு என்று நடிக்க வாய்ப்புக் கேட்ட சார்லியை பார்த்துச் சொன்னார் சென்னட் என்னும் தயாரிப்பாளர். அவர் சைசுக்கு உடைகள் இல்லை என்பதால், பெரிய சைஸ் தொள தொள பேண்ட், பொருத்தமே இல்லா சிறிய மேல் சட்டை, ஷு, தொப்பி, கைத்தடி. இப்படித்தான் உருவானது சார்லி சாப்ளினின் உருவ முத்திரை!

    இந்த உருவ முத்திரை பதித்த பொருட்கள் இன்றும் கூட விற்று தீர்ந்து கொண்டிருக்கும் அதிசயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது! அப்படியே மேடையேறி நடித்துக் காட்ட சிரிப்பால் மேடை அதிர்ந்து அடங்கியது! என்னிடம் கதை ஒன்று இருக்கிறது, நானே நடித்து நானே இயக்க விரும்புகிறேன் என்றார் சென்னடிடம் சார்லி. முதலில் ஒத்துக்கொள்ளாத சென்னட், மக்களிடம் அவருக்கிருந்த செல்வாக்கை மனதில் கொண்டு ஒரு நிபந்தனை விதித்தார். "அந்த படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பு செலவு அனைத்தையும் வட்டியும் முதலுமாக நீங்கள் திருப்பித் தரவேண்டும் சம்மதமா?" என்று கேட்டார். அதற்கு சாப்ளின் சொன்னார் "முழுப்பணத்தையும் திருப்பித் தருவேன். அந்தப் படம் தோல்வியடைந்தால், நான் இந்த சினிமாவை விட்டே வெளியேறி விடுகிறேன்" என்று அப்படி இயக்கி வெளிவந்த முதல் வெற்றிப்படம் caught in the rain.

    ஒரு முறை சாப்ளின் படப்பிடிப்பு முடிந்து நியூயார்க் நோக்கிப் போன தகவல் எப்படியோ தெரிய வர... மலர்கொத்துக்கள், பேண்டு வாத்தியங்கள், உயரமான கம்பம், மரங்களில் எல்லாம் மக்கள் வெள்ளம்! பசியும், அவமானங்களும் இதற்கு தானா? நம் வாழ்க்கை மனிதகுலம் பயனுறும் காவியமாக வேண்டாமா? யோசிக்க ஆரம்பித்தார். அமெரிக்காவிற்கு குடியேற வரும் மனிதர்களிடம் அரசு நடத்தும் கெடுபிடிகளை கடுமையாகச் சாடி the immigrant படம் வெளியானது. அமெரிக்க பிணந்தின்னும் கண் சார்லியை கண்காணிக்க உத்தரவு போட்டது, இப்படித்தான்! சார்லி ஏழைகளைப் பற்றியே படம் எடுத்ததால், பணக்காரர்கள் எதிரிகளானர்கள். வேறு வழியில்லாமல் தானே ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டியதாயிற்று!

    இக்கால கட்டத்தில்தான் தன் காதலி ஹெட்டியைப் போலவே இருக்கிறாள் என்று மில்ட்ரெட் ஹாரிஸ் என்பவளை திருமணம் செய்து கொண்டார். ஆண் குழந்தை பிறந்து இறந்தது, அவன் நினைவாக தயாரான படந்தான் the kid. லிட்டா கிரே, பவுலட் கோடர்ட், ஊநா ஓ நீல் போன்றவர்கள் மேல் காதல் வயப்பட்டதும் காயப்பட்டதும் துன்பியல் வரலாறு! அவர்கள் அனைவரும் தோற்றத்தில் ஹெட்டியைப் போலவே இருந்தார்கள் என்பது இன்னொரு அதிசய தகவல்! புகழின் உச்சியில் இருந்த நேரம்.. "என்னை நினைவிருக்கிறதா? நான் தான் ஹெட்டி! நான் ஒரு முட்டாள், அபாக்கியசாலி. நீங்கள் எவ்வளவு உயரமானவர் என்பதை உங்கள் படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். நீங்கள் லண்டன் வருவதாக இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள். கடைசியாக உங்களின் கைகளைப் பிடித்து கதறி அழு வேண்டும். என் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்!" என்ற கடிதம் படித்து தான் பார்த்த எல்லா வேலைகளையும் ரத்து செய்தை விட்டு லண்டனுக்குப் பயணமானர் சாப்ளின்.

    பஞ்சையாய், பராரியாய், பிச்சைக்காரனாய் துரத்தியடித்த அதே லண்டன் தெருக்கள் வெட்கமே இல்லாமல் விழாக்கோலம் பூண்டது சார்லியை வரவேற்க; வெறி பிடித்த மக்கள் வெள்ளம்! இந்த தடவையும் ஹெட்டி ஏமாற்றித் தான் போயிருந்தாள்! அவளின் மரணச்செய்தியைத் தான் கேடக முடிந்தது! அவளின் நினைவாக கொஞ்ச கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்த சார்லி இந்த இடி செய்தி கேட்டு இன்னும் ஒரு முறை செத்துப் போனார்! கடவுளைப் போலவே காதலும் சரியாக புரிபடாமலேயே இந்த பூமியை ஆண்டு கொண்டுதான் இருக்கிறது! ஓவென கதறி அழக்கூட முடியவில்லை. அவ்வளவு மக்கள் வெள்ளம்! நடு இரவில் முகத்தை மப்ளர் கொண்டு மூடி, பசியால் கதறி அழுது சுற்றி அலைந்து திரிந்த வீதிகளுக்கு மீண்டும் ஒருமுறைப் போய் மவுனமாக அழுது விட்டு வந்தான், அந்த மகா கலைஞன்! கூடவே தன் தாயின் மரணமும் சுனாமியாக வந்து தாக்கியது, "இந்த தோற்கும் அன்பு அவளுடையது! அவளது தியாகம், திறமைகள், அவள் பட்ட வேதனைகளுக்கு முன்னால் நானும் என் படங்களும் அவளின் கால் தூசுக்குச் சமம்!" என்று சாப்ளின் நெஞ்சு வெடிக்க கதறி அழதார்!

    சினிமா பேச தொடங்கிய போதும் கூட பேசாத படங்களையே எடுத்தார்! தான் எடுக்கும் பேசாத படம் மக்களைப் பேச வைக்கும் என்ற தன்னம்பிக்கையோடு எடுக்கப்பட்ட படந்தான் city lights. எதிரிகள் சதி செய்ததால் ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் திரையிடப்பட்டு கட்டுக்கடங்கா கூட்டத்தைக் கூட்டி எதிரிகளை பணிய வைத்த படம்! இந்தியாவிலிருந்து வரும் காந்தியைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்தார்! உலகம் இயந்திரமாகி வருவதையும், மனித பண்புகள் நசுக்கப்படுவது பற்றியும் சாடி வந்த modern times வெளி வந்த பிறகு மனித குலத்தை மேம்படுத்த வந்தவனை சரியாகத் தான் அடையாளப்படுத்தியது அல்ப புத்தி அமெரிக்க அரசு "கம்யூனிஸ்ட்!" என்று. அமெரிக்க அரசு லண்டனுக்குப் புறப்பட்ட சார்லியிடம் தெரிவித்து, "உங்கள் சொத்து பறிமுதல் செய்யப்படுகிறது. அமெரிக்காவில் காலடி வைத்தால் கைது செய்யப்படுவீர்கள்!" ஸ்விட்சர்லாந்து குடிபெயர்ந்து அங்கும் இரண்டு படங்களை இயக்கினார். 1972 ஆம் வருடம் கலையுலகம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவப்படுத்தியது! 1977இல் ஒரு கிறிஸ்துமஸ் நாளில்.... எல்லோரையும் கண்ணீர் வர சிரிக்க வைத்த அந்த மகா கலைஞனின் மரணம் முதன்முறையாக அழவைத்தது!

    விஜய்-58 படத்தில் எனது கதாபாத்திரம்? சொல்கிறார் சுதீப்

    By: ram On: 09:25
  • Share The Gag
  • நான் ஈ என்ற ஒரு படத்தின் மூலம் நம் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் சுதீப். இவர் கன்னட திரையுலகில் மிகப்பெரிய ஜாம்பவான்.

    இவர் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இது குறித்து சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

    இதில் ’இப்படத்தில் நான் கதாநாயகன் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும், அதே நேரத்தில் வில்லனும் இல்லை. இப்படத்தில் ஸ்ரீதேவி அவர்களுடன் இணைந்து நடிப்பது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

    பூனையின் பல் நல்லதா, கெட்டதா?

    By: ram On: 08:32
  • Share The Gag
  • சட்டசபையில், அரசின் சாதனைகளைப் பாராட்டி உறுப்பினர்கள்
    வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா
    பேசியபோது சொன்ன கதை:-
    -
    பூனையின் பல் நல்லதா, கெட்டதா?

    தமிழக அரசின் திட்டங்கள் எல்லாம் நல்லதா. கெட்டதா என்பது
    காண்பவரின் தன்மையைப் பொறுத்தது. ஒரு முறை ‘‘உலகம்
    நல்லதா? கெட்டதா?’’ என்ற கேள்வியை தன் குருவிடம்
    கேட்டான் ஒரு சிஷ்யன். உடனே, ‘‘பூனையின் பல் நல்லதா?
    கெட்டதா?’’ என்று திருப்பிக் கேட்டார் குரு.

    சிஷ்யன் குழம்பினார். கேள்விக்குப் பதில், கேள்வி தான் என்பது
    ஞானிகள் கையாளும் முறை.

    சிஷ்யன் சிந்திக்க ஆரம்பித்தான். பின்னர் குரு விளக்கினார்.
    பூனைக் குட்டியிடம் போய், தாய்ப் பூனையின் பல் நல்லதா?
    கெட்டதா? என்று கேட்டால், தாய் பூனையின் பல், கருணையின்
    இருப்பிடம் என்று சொல்லும்.

    எலியிடம் கேட்டால் என்ன சொல்லும்?

    ஏனென்றால், பூனைக் குட்டி தனது தாயை முற்றிலும்
    நம்பியிருக்கிறது. பல சமயங்களில், தாய் பூனை, தன் குட்டியை
    பல்லால் கவ்விக் கொண்டு போய் பாதுகாப்பான இடத்தில்
    வைக்கிறது. அதற்குத் தேவையான உணவினை அளிக்கிறது.
    எனவே, பூனைக்குட்டிக்குப் பூனையின் பல், கருணையின்
    இருப்பிடமாக விளங்குகிறது.

    அதே பூனையின் பல்லைப்பற்றி ஒரு எலியிடம் கேட்டால் அது
    என்ன சொல்லும் தெரியுமா? கடவுள், பூனைக்கு குத்தூசியைப்
    போன்ற பற்களைப் படைத்திருக்கிறாரே? என்ன கொடுமை?
    என்று கவலையோடு சொல்லும். அதுபோல, உலகம் நல்லதா,
    கெட்டதா என்பதும் உலகத்தைக் காண்பவரின் தன்மையைப்
    பொறுத்தது என்று கூறினார் குரு. சிஷ்யன் சிந்திக்கத்
    தொடங்கினான்.

    இது பகவான் ராமகிருஷ்ணர் சொல்லிய விளக்கம்.

    விஜய்,விக்ரம் குறித்து மனம் திறந்த டி.இமான்!

    By: ram On: 07:56
  • Share The Gag
  • மைனா படத்திற்கு பிறகு டி.இமானின் திரைப்பயணம் உச்சத்தில் உள்ளது. அதன் பிறகு அவர் இசையமைத்த அனைத்து திரைப்படமும் ஹிட் தான். அந்த வகையில் இந்த வருடம் இளைய தளபதியின் ஜில்லா படத்திற்கு இசையமைத்திருந்தார்.

    இப்படத்தில் விஜய் பாடிய ’கண்டாங்கி’ பாடலை வேறு ஒருவரும் பாடியிருந்தாராம், இதில் யார் பாடியதை வைப்பது என்ற மிகுந்த வாக்குவாதத்திற்கு பிறகே தளபதியில் குரல் சிடியில் பதிவானதாம்.

    அதேபோல் தற்போது விக்ரம் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தின் இசையமைப்பாளரும் இவர் தான். இதில் விக்ரம் பாடுவாரா? என்று கேட்டதற்கு அதையும் பாடல் சிடியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.

    உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்..உங்களுக்கு!

    By: ram On: 07:39
  • Share The Gag

  • பெரும்பாலான பெண்கள் சற்று குண்டாக இருக்கிறார்கள் அல்லது ரொம்ப ஒல்லியாக இருக்கிறார்கள். கல்யாணம் நெருங்கும்போது ஒல்லியாக இருப்பவர்கள், கொஞ்சமாவது சதை போட்டால் தேவலை என்று கருத, குண்டாக இருக்கும் பெண்களோ அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறார்கள். எப்படியாவது தங்கள் உடல் எடையை குறைத்தே ஆகவேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.

    அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறை பட்டினி. தொடர்ந்து பட்டினி கிடக்கும்போது சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு விடுகிறது. அந்த சுருக்கத்தைப் போக்க பின்பு, அழகு சிகிச்சையும் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள்.

    உடல் எடையைக் குறைக்க பட்டினி கிடப்பதைவிட சிறந்தது தேவையான உடற்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும். இவைகளை தொடர்ந்து இளம்பெண்கள் கடைபிடித்தால் உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். சருமத்தில் சுருக்கம் ஏற்படாது. கவர்ச்சியான அழகையும் தக்கவைத்துக் கொள்ளலாம்.

    உடல் எடையை அதிரடியாகக் குறைத்தால் உடலில் இருக்கும் கொழுப்பு கரைந்து முகம், கழுத்து, கைவிரல் பகுதிகளில் சுருக்கம் தோன்றும். முகம், கழுத்துப் பகுதியில் உள்ள சுருக்கங்களைப் போக்க வாரத்திற்கு ஒரு முறை "டைட்னிங் பேஷியல்" செய்ய வேண்டும். டைட்னிங் பேக்குகளும், டைட்னிங் மாஸ்க்குகளும் சரும சுருக்கங்களைப் போக்க உதவுகின்றன.

    சருமத்தின் அழகைப் பாதுகாக்க கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு போன்ற உணவுகள் தேவை. முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், கீரை வகைகள், முளைவிட்ட பயறு வகைகள் போன்றவை சருமத்திற்கு இளமையையும், மினுமினுப்பையும் தரும். அதோடு தினமும் பத்து டம்ளர் தண்­ணீரும் குடித்தால் சருமம் வறண்டு சுருக்கம் தோன்றுவது தவிர்க்கப்படும். கன்னங்கள் உள் அமுங்கி காணப்பட்டால் தினமும் பத்து நிமிடங்கள் வாய் நிறைய தண்­ணீரை வைத்து கொப்பளிக்கும் பயிற்சியை மேற்கொண்டால் போதும்.

    உடல் எடையைக் குறைக்க பட்டினி கிடந்தால், முடி உதிர்வது அதிகரிக்கும். புரோட்டீன் கலந்த உணவுகளை உண்ணுவதோடு ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்தால், சருமத்திற்கு வயதான தோற்றம் ஏற்பட்டுவிடும். அதனால் பெண்கள் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

    சரும அழகை மேம்படுத்தும் டைட்னிங் மாஸ்க்கை பெண்கள் வீட்டிலே தயாரிக்கலாம்.

    முட்டையின் வெள்ளைக் கரு, முல்தானிமிட்டி, தேன் மூன்றையும் கலந்தாலே போதும். வறண்ட சருமமாக இருந்தால் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளலாம். இதை பயன்படுத்தினாலே போதும்.

    பெண்களே! போடுங்க "தலையணை மந்திரம்"!

    By: ram On: 07:32
  • Share The Gag


  • நம் சமூக அமைப்பில் சாதாரணமாகச் சொல்லப்படும் பொதுவான ஒரு கிண்டலான வார்த்தை''தலையணை மந்திரம்''!!
    இது கணவன் மனைவி இருவரும் தங்களின் தனிமையான நேரத்தில் ரொம்ப ஸ்பெஷலாக அன்னியோனியமாக பேசிக்கொள்வதை குறிக்கிறது! ஆனால் இதன் அர்த்தம் வேறு விதமாக நம்மால் எடுத்து கொள்ளபடுகிறது.

    எனக்கு தெரிந்தவரை மாமியார் தனது மருமகளை திட்டுவதற்கு கையாளும் ஒரு வசைச் சொல் என்றே தெரிகிறது.

    'தலையணை மந்திரம் போட்டு என் மகனை மயக்கிட்டா', 'அப்படி என்ன தலையணை மந்திரம் போட்டாளோ, இப்படி மயங்கி கிடக்கிறான்' இதை சொல்லாத மாமியார்கள் குறைவு.....!!
    ஆனால் மிக உன்னிப்பாக கவனித்தால் இதன் பொருள் அந்தரங்கம் என்றே வருகிறது. இது எவ்வளவு மோசமான உதாரணம் என்று பலருக்கும் புரிவதில்லை....
    ஆண்கள் எல்லோரும் அந்த உறவிற்கு மயங்கிவிடுவார்கள் என்றும் அதற்காக பெற்றவளையும் உதாசீனம் படுத்தி விடுவான் என்பதாகத்தானே பொருள்...?!
    அதுவும் பெற்ற தாயே தனது மகனை அவ்வாறு சொல்வது எந்த விதத்தில் ஏற்புடையது!?
    மருமகளை திட்டுவதற்காக கூறப்படும் இந்த வார்த்தை அந்த ஆண்மகனை இழிவுக்குள்ளாக்கும் என்பதை ஏன் யாரும் புரிந்து கொள்வதில்லை ?? 'வீட்டுக்காரனை கைக்குள்ள போட்டுகிட்டா','முந்தானையில் முடிஞ்சிகிட்டா' என்பது போன்றவைகள் பெண்ணை குறை சொல்லணும் என்று பேசபட்டாலும் மறைமுகமாக அங்கே கேலிப் பொருளாக்கப்படுவது பரிதாபத்துக்குரிய ஆண்மை...!!


    ஆண்களே ?!
    என்னவோ ஆண்கள் என்றாலே எப்போதும் பெண் சுகத்திற்கு அலைபவர்கள் போலவும், அதைத் தவிர அவர்களின் மூளை வேறு எதையும் சிந்திக்காது என்கிற ரீதியில் ஒரு சில பெண்கள் ஆண்களை நடத்துவது மிகவும் வருந்த தகுந்த ஒன்று.......
    ஒவ்வொரு ஆணிற்கும் திருமணம் ஆன புதிதில் சில நாட்கள் மனைவி தேவதையாக தெரியலாம். அந்த தேவதை வரம் கொடுக்காமல்,வரம் கேட்டாலும் கொடுப்பார்கள்....!! இது ஆரம்ப சில மாதங்கள் மட்டுமே..... அடுத்து தொடரும் நாட்களில் மனைவிடம் தன் அம்மாவை தேடுவார்கள்/எதிர்பார்ப்பார்கள் என்பது உண்மையில் இங்கே எத்தனை பெண்களுக்கு புரியும் ?!!
    அம்மாவின் அன்பும் அரவணைப்பையும் மட்டுமே பெரிதாக என்னும் ஆண்கள் பலர், அதையே மனைவி சிறிதும் குறைவின்றி தரும் போது, அந்த ஆண்மகன் சற்று தடுமாறி போவான். அந்த அன்பில் திளைத்து மூழ்கி முத்தெடுப்பவர்கள் பாக்கியசாலிகள்! மாறாக எந்த ஆண் மகனும் வெறும் உடல் சுகத்தை மட்டும் பெரிது படுத்தமாட்டான். இது புரியாத அறிவிலிகள் தலையணை மந்திரம் என்று எதையாவது சொல்லி அன்பான தம்பதிகளுக்கிடையே பிரிவினையை, விரிசலை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
    அதனால் கணவன், மனைவி இருவருக்குள் மனப்பொருத்தம் ஏற்பட வழி இல்லாமல் கெடுக்கக்கூடிய காரணங்கள் பெரும்பாலும் பெண்ணின் பக்கத்தில் இருந்தே தொடங்குகிறது.....அதை பெண்கள் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். திருமணம் முடிந்த பெண்ணிற்கு நல்லது சொல்கிறோம்/செய்கிறோம் என்று வருகிற நலம்விரும்பிகளை(?) முதலில் வெளியே நிறுத்துங்கள்.

    மனைவிகளே !

    பிறர் கூறும் கணவனை கைக்குள்ள போட்டுக்கோ, முந்தானையில் முடிஞ்சுக்கோ என்பது போன்ற தவறான பேச்சுக்களை முதலில் காதுகொடுத்து கேட்காதீர்கள் ஒருவேளை சொன்னது உங்கள் தாயாக இருந்தாலுமே...!! தாய் நமக்கு நல்லதுக்கு தானே சொல்வாங்க என்று அப்படியே கேட்டு வைக்காதிர்கள்... அவர்கள் அப்படி சொல்வதின் பின்னணியில் சில கசப்பான அனுபவங்கள்- குறிப்பா தன் மாமியார் வீட்டில் அவர்கள் பெற்ற அனுபவங்கள் அவர்களை இப்படி பேச வைக்கலாம். 'நாம தான் உசாரா இல்லாம போய்ட்டோம் நம் மகளாவது நல்லா இருக்கட்டும்' என்று ஒரு நல்ல எண்ணத்தில் சொல்லலாம். ஆனால் நீங்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும். அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை வேறு. கணவன் மனைவி இருவருமே படித்து வேலைக்கு செல்லக்கூடிய இன்றைய தம்பதிகளின் நிலை வேறு.
    இருவருமே பொருளாதார ரீதியிலான ஒரு தேடலில் தீவிரமாக போய் கொண்டிருக்கும் போது... இந்த மாதிரி தலையணை மந்திரம், கணவனை தன் வழிக்கு கொண்டு வரணும் என்று ஈடுபடக்கூடிய இத்தகைய செயல் ஒரு நயவஞ்சக எண்ணம் போல் சென்று, மனதில் எப்போதும் ஒரு இறுக்கமான நெருக்கடியை கொடுத்துவிட கூடிய ஆபத்து இருக்கிறது. அதை முற்றியும் தவிர்த்து அந்தரங்கமான நேரத்தில் இனிமையான நினைவுகளை பரஸ்பரம் பரிமாறி ஒரு தெளிந்த நீரோடை போன்று மனதை வைத்துக்கொண்டு உறவில் ஈடுபடும் போது அங்கே தாம்பத்தியம் மிக அழகாக அற்புதமாக நிறைவு பெறும். மறுநாள் காலை இருவருமே உற்சாகமாக, புது புத்துணர்ச்சியுடன் துயில் எழுவார்கள்...அப்புறம் என்ன, அன்றைய பகல் பொழுது முழுவதுமே அதே புத்துணர்ச்சி தொடரும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ...?!!

    ஒரு சர்வே :

    "நகரத்தில் வாழும் 44 சதவீத திருமணமான ஆண்கள் தங்களுக்கு செக்ஸ் மீது இருக்கும் ஆர்வம் குறைந்து கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களிலும் 29 சதவீதம் பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள் !!"
    சர்வே வேற இப்படி சொல்லுது...!! நிலைமை இப்படி இருக்க, தலையணை மந்திரம் அப்படி இப்படின்னு எதையாவது முயற்சி செய்து(?) இருந்ததும் போச்சு... அப்படின்ற நிலைக்கு கொண்டு வந்திடாதிங்க...!!
    சரி இருக்கட்டும்... தவறாமல் மனைவியுடன் உறவு வைத்து கொள்பவர்கள், என்ன சொல்றாங்க...அதையும் பாப்போம்.....
    "எங்கள் வேலைகளிலேயே நாங்கள் மிகவும் சோர்ந்து போகிறோம். வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக் கொள்ளாவிட்டால் மனைவி, அவள் மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுகிறாள். அப்படி ஒரு எண்ணம் மனைவிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்து கொள்கிறோம்"
    இது ஏதோ சுவாரசியத்துக்காக எழுதப்பட்டதில்லை... சர்வேயில் சொல்லப்பட்ட தகவல்கள். இன்றைக்கு பல வீடுகளில் இருக்ககூடிய நிதர்சனம்!!

    ''தலையணை மந்திரம்'' இனி இப்படி போடுங்க...!!
    o மனதில் சுமப்பதால் நீங்களும் ஒரு தாய்தான். உங்கள் அன்பான அரவணைப்பில் அவரை குழந்தையாய் மாற்றுங்கள்...! அப்புறம் எங்கிருந்து வரும் பிரச்சனை ??!! அதனால் பாசத்தை காட்டும் விதத்தில் ஒரு தாயாய் !!
    o அவரது குறைகளை மட்டுமே பெரிசு படுத்தி வாதாடாமல் நிறைகளை சொல்லி ஊக்கபடுத்துங்கள் ஒரு சகோதரியாய் !!
    o கணவர் சோர்ந்து போகும் நேரம் தோளில் தாங்குங்கள் ஒரு தோழியாய் !!
    o குடும்பம்/தொழில்/வேலை இவற்றில் பிரச்சனை ஏற்பட்டால் உங்களுக்கு தெரிந்த நல் ஆலோசனைகளை சொல்லுங்கள் ஒரு மந்திரியாய் !!
    o எல்லாவற்றிற்கும் பிறகு தனியறையில் நடந்துகொள்ளுங்கள்...முழுமை அடைந்த மனைவியாய் !!
    கணவன் தன்னை புரிந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட நீங்கள் முதலில் அவரை புரிந்துகொள்ளுங்கள். கணவனின் ஆசைகள், தேவைகள், உரிமைகள் என்னவென்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வது தான் புரிதல். குடும்பத்தில் யார் பேச்சை யார் கேட்கணும் என்று எடை போட்டு பார்த்து கொண்டிராமல் இருவரும் ஒருவர் பேச்சை ஒருவர் மதித்து செல்வது நல்லது. உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

    அனைத்தையும் விட ஒருவரை ஒருவர் உண்மையாக நேசியுங்கள், பாசாங்கு இருக்ககூடாது...!!
    பிறரின் தேவையற்ற ஆலோசனைகளை கேட்டு அதன் படி நடந்து மனவிரிசலை ஏற்படுத்தி கொள்வதை விட இங்கே குறிப்பிட்ட இந்த மந்திரங்களை பின் பற்றுங்கள்... கணவன் உங்களையே சுற்றி வருவார்...! அன்பால் சாதிக்க முடியாததை வேறு எதை கொண்டு சாதித்தாலும் அவை எல்லாம் வெறும் கானல்!!

    அடுத்த அரண்மனை கோப்பெருந்தேவி? விநியோகஸ்தர்கள் விரைவு…!

    By: ram On: 00:43
  • Share The Gag
  • அண்மையில் வந்த ‘அரண்மனை’தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ரிசர்வ் பேங்க்! வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் மட்டும் கூட்டம் கூடுவதும் திங்கட் கிழமையிலிருந்து அது தலைகுப்புற சரிவதும்தான் ஒரு ரிலீஸ் படத்தின் தலையெழுத்து. ஆனால் அரண்மனை அப்படியில்லை என்கிறது விநியோகஸ்தர் வட்டாரம். ஒரு உதாரணத்திற்கு சொல்லப்படும் தகவல் இது. சென்னை கமலா திரையரங்கத்தில் அடுத்த வாரம் வெளிவரப்போகும் மெட்ராஸ், ஜீவா திரைப்படங்களுக்கு தியேட்டர் கேட்கப்பட்டதாம். சொல்லப்பட்ட பதில் என்ன தெரியுமா? செவ்வாய் கிழமையும் ஃபுல்லா போவுது அரண்மனை. போகிற போக்கை பார்த்தா தீபாவளி வரைக்கும் அதுவே ஃபுல்லா போகும் போல தெரியுது. அதனால் உங்க படத்திற்கு ஒரு ஷோ ரெண்டு ஷோதான் தர முடியும். அதுவும் மினி கமலாவில் என்றார்களாம்.

    கிட்டதட்ட தமிழகம் முழுக்க இதுதான் நிலைமை! காஞ்சனா, யாமிருக்க பயமே படங்களின் வெற்றியை தாண்டி அரண்மனை கல்லா கட்டும் போலிருக்கிறது. இந்த நேரத்தில் இதே டைப் படங்களை வாரிக்கொடுத்து வாங்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். லாரன்சின் முனி பார்ட் 3 படம் முடிவதற்கு இன்னும் பல வாரங்கள் இருக்கிறது. இருந்தாலும் இப்பவே என்ன ரேட் சொல்றீங்க என்று கிளம்பி வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

    அப்படியே இதே டைப்பில் ஏகப்பட்ட செலவில் எடுக்கப்பட்ட கோப்பெருந்தேவி படத்தையும் வாங்க ஆளாய் பறக்கிறார்களாம். அரண்மனை வாங்கிய அதே விநியோகஸ்தர்கள் படத்தை மொத்தமாக கொடுத்துருங்க என்று ஒருபுறம் மொய்த்து எடுக்க, சமீபத்தில் ஒரு படத்தை வெளியிட்ட பசையுள்ள டாக்டர் ஒருவரும் போட்டியில் இறங்கியிருக்கிறாராம். கடந்த பல மாதங்களுக்கு முன் பெரும் பொருட்செலவில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்ட கோப்பெருந்தேவி, அதற்கப்புறம் கிராபிக்ஸ் பணிகளுக்காக இன்னும் இன்னும் என்று தள்ளிப் போடப்பட்டு முழு திருப்தியோடு தயாராகிவிட்டதாம்.

    சுமார் 14 முன்னணி காமெடியன்கள் இதில் பர்பாமென்ஸ் பண்ணியிருக்கிறார்கள் என்பதைவிட, ஆந்திராவின் அனுஷ்காவை விட அழகான அரேபிய குதிரையாக காட்சியளிக்கும் புதுமுகம் ஆராத்யா இதில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் என்பதுதான் இன்னொரு காரணமாம்.

    அகில உலக ஆவியெல்லாம் சேர்ந்துதான் இப்படி ரசிகர்களின் மைண்டை மாற்றி திகில் படங்களை ஓட வைக்குதோ?

    வயிற்று வலிக்கு விளக்கெண்ணெய் தடவலாமா?

    By: ram On: 00:02
  • Share The Gag
  • அல்சர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு என்ன?

    உணவு கட்டுப்பாடு, இயற்கை முறையில் உற்பத்தி செய்த உணவு பொருட்களை உட்கொள்வது மற்றும் சிறந்த உணவு பழக்க வழக்கம் முதலியவற்றை கையாண்டால் அல்சர் ஏற்பட வாய்ப்பில்லை. அல்சர் வந்த பிறகு உணவு கட்டுப்பாடு, நேரத்திற்கு உணவு அருந்துதல் மற்றும் மருந்து ஆகியவற்றை கடைபிடித்தால் அல்சர் பிரச்னைக்கு தீர்வு காணலாம். மேலும் அல்சரை உருவாக்குகிற ஹெச் பைலரி கிருமிகளை பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்து அதற்கேற்றாற் போல் மருந்து எடுத்து கொண்டால் அல்சரை குணப்படுத்தலாம்.

    மாதவிடாய் தொந்தரவின் போது வயிறு வலிப்பது ஏன்?

    ஒரு சிலருக்கு ஹார்மோனல் பிரச்னை இருந்தாலோ, கர்ப்பப்பை பிரச்னை இருந்தாலோ அல்லது அதிகமான ரத்த போக்கு இருந்தாலோ அல்லது கிருமி தொற்று ஏற்பட்டு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உடனே மகப்பேறு மருத்துவரை அணுகி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து, ரத்த பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது.

    உணவு செரிமானத்திற்கு பாக்டீரியாக்கள் துணை புரிகிறதா?

    கண்டிப்பாக. மனித உடலில் உணவை செரிமானம் அடைய செய்யக்கூடிய நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் இல்லையென்றால் உணவு செரிமானம் ஆகாது. சில சமயங்களில் வேறு பிரச்னைகளுக்கு மருந்து உண்ணும் போது அந்த மருந்தானது உணவை செரிக்கச் செய்யும் நல்ல பாக்டீரியாவையும் அழித்து விடுகிறது. அதனால் இப்படிப்பட்ட மருந்துகளை உட்கொள்ளும் போது நல்ல பாக்டீரியாவை உருவாக்கும் மருந்தையும் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

    விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற என்னால் கடந்த 4 மாதங்களாக சாப்பிட முடியவில்லை. சாப்பிட்டால் வயிறு வலிக்கிறது. விஷத்தின் வீரியம் எவ்வளவு காலம் நீடிக்கும்?

    நீங்கள் சாப்பிட்ட விஷம் எத்தகையது. அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குடலில் புண் ஏதேனும் இருக்கிறதா? என்று கண்டறிய வேண்டும். உடனே மருத்துவரை அணுகி எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    குடல் இறக்கத்தால் அவதிப்படுகிறேன். லேப்ராஸ்கோபி முறையில் அறுவை சிகிச்சை செய்யலாமா?

    லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். அறுவை சிகிச்சை மருத்துவரிடம் எந்த விதமான அறுவை சிகிச்சை செய்யலாம் என்று ஆலோசிப்பது நல்லது.

    பிரசவத்திற்கு பின் வரும் தொப்பையை குறைக்க என்ன செய்வது?

    பிரசவம் ஆன பின்பு உடனே பெல்ட் அணிவது நல்லது. அது தவிர அடி வயிற்று உடற்பயிற்சி, கொழுப்பில்லாத உணவை உட்கொள்ளுதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். சொல்லப் போனால் அன்றாட வீட்டு வேலைகளை இயந்திரத்தின் துணை இல்லாமல் தாமாகவே செய்தால் தொப்பை ஏற்படாது.

    வயிற்று வலிக்கு விளக்கெண்ணெய் தடவுவது பலன் அளிக்குமா?

    பலனளிக்காது. வயிறு எதனால் வலிக்கிறது என்று கண்டறிய வேண்டும். அதாவது வயிற்று வலியின் காரணத்தை கண்டறிய வேண்டும். பின்பு அதற்கேற்றாற் போல் சிகிச்சை அளிக்க வேண்டும்.