Friday, 29 August 2014

பட்டுப் புடவையும் பராமரிப்பு முறையும்!

By: ram On: 11:09
  • Share The Gag

  • பெண்கள் பட்டுப் புடவை எடுப்பதற்குள் கடை ஒரு வழி ஆகிவிடும் என்று பரவலாக கிண்டலடிப்பது உண்டு. பட்டுப் புடவை விலை அதிகம் கொடுப்பதால், அதை அவ்வளவு சிரத்தையுடம் எடுப்பார்கள். அது மட்டும் அல்ல, அதனை பராமரிப்பதற்கும் நிறைய வேலை இருக்கிறது.

    அதாவது,

    பீரோவில் திறந்த நிலையில் பட்டுப்புடவைகளை வைக்கக் கூடாது துணிப் பையில் போட்டு அதனை கவரில் வைத்து வைக்கலாம்.

    நிறைய ஜரிகை உள்ள பட்டுப் புடவைகளை அடிக்கடி அதீத சூட்டில் அயர்ன் செய்யக்கூடாது. அப்படி செய்தால் ஜரிகைகள் சூடு தாங்காமல் கறுத்துப் போகும். எனவே, பட்டுப் புடவைகள் மீது வேறு ஏதேனும் துணிப் போட்டு அதன் மீது ஐயர்ன் செய்யலாம்.

    அதுபோல பட்டுப் புடவைகளை ஸ்டீல் பீரோவை விட மர பீரோவில் வைத்தால் என்றும் புதியதுபோல பல வருடங்கள் இருக்கும்.

    விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுப் புடவையைத் தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேஷங்களுக்குச் சென்று வந்தவுடன் பட்டுப் புடவையைக் களைந்து உடனே மடித்து வைக்கக் கூடாது. நிழலில் காற்றாட சில மணி நேரங்கள் உலரவிட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.

    பருத்தித் துணியால் ஆன பைகளில் பட்டுப் புடவைகளைப் போட்டு பராமரித்தால் ஜரிகை கறுக்காமல் இருக்கும்.

    எக்காரணம் கொண்டும் பட்டுப் புடவையைச் சூரிய ஒளியில் வைக்கக் கூடாது. சோப்போ, சோப் பவுடரோ உபயோகித்துத் துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீர் விட்டு அலசினாலே போதுமானது.

    பட்டுப் புடவையை மாதத்திற்கு ஒருமுறை, மடித்து வைத்ததற்கு எதிர்ப்புறமாக மடித்து வைக்க வேண்டும். இல்லை என்றால், மடித்த இடங்களில் இருக்கும் ஜரிகைகள் அவ்விடத்தில் தளர்ந்து போய்விடும்.

    பட்டுப் புடவையில் ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய்க் கறை இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியைத் தடவி பத்து நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர்விட்டு அலச வேண்டும். சாதாரண கறைகள் ஏதேனும் இருப்பின் அந்த இடத்தில் மட்டும் சிறிது எலுமிச்சைச் சாறுவிட்டு கறையை நீக்கிவிட்டு உலர்த்தவும்.

    பட்டுப் புடவைகளை அடித்து பிரஸ் போட்டு துவைக்கக்கூடாது. முதலில் அலசும்போது உப்பு போட்ட குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் சாயம் கெட்டிப்பட்டு பட்டுப்புடவை நீண்டநாள் உழைக்கும்.

    பட்டுப் புடவைகளை வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக் கூடாது. ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலரவிட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.

    பட்டுப் புடவைகளைத் துவைக்கும்போது பொடித்த பூந்திக் கொட்டைகளை உபயோகிக்கலாம். காரமான சோப் கூடவே கூடாது.

    பட்டுப் புடவைகளை அயர்ன் செய்யும்போது ஜரிகையைத் திருப்பி அதன்மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன்  செய்யக்கூடாது.

    பட்டுப் புடவைகளை தண்ணீரில் நனைப்பதைவிட ட்ரைவாஷ் செய்வதே நல்லது.

    பட்டுப் புடவையைக் கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டைப் பையில் வைக்காமல் துணிப்பையில் வைக்க வேண்டும்.

    பாசிப் பருப்பை ஊறவைத்து நீர் விட்டு அரைத்து பட்டுப்புடவையின் கறை உள்ள இடத்தில் தேய்த்து அலசினால் கறை நீங்கி விடும்.

    பட்டுப் புடவையில் துருக்கறைபட்டால் ஆக்சாலிக் ஆசிட் கிரிஸ்டல்ஸ் வாங்கி துருபிடித்த இடத்தில் தேய்த்து வெயிலில் வைத்தால் துருக்கறை மாயமாய் மறைந்துவிடும்.

    பட்டுப் புடவைகளுக்கு இரசக் கற்பூர உருண்டைகளைப் பயன்படுத்தக் கூடாது. தரமான ஷாம்பு போட்டு, கைகளால் துவைத்து சிறிது கஞ்சி போட்டு நிழலில் காய வைத்துப்பின் இஸ்திரி செய்தால் புதியதுபோல் பளபளக்கும்.

    ஆறு கிராம்புகளை பழைய துணியில் சிறு மூட்டைபோல் கட்டி, ஜரிகை உள்புறமாக இருக்குமாறு மடித்து வைக்கப்பட்ட பட்டுப் புடவைகளுக்கு இடையில் வைத்தால் பட்டு பழுதடையாமல், பூச்சி அரிப்பு ஏற்படாமல் புடவையைப் பாதுகாக்கலாம்.

    முதல் தரம் பட்டுப் புடவையை அலசும்போது பக்கெட் தண்ணீரில் கொஞ்சம் கல் உப்பு போட்டு அதில் ஒரு ஐந்து நிமிஷம் பட்டுப் புடவையை முக்கி வைத்து அலசுங்கள். பட்டுப்புடவையின் எக்ஸ்ட்ரா சாயம் எல்லாம் நீங்கிவிடும்.

    நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் ஆறு விஷயங்கள்!

    By: ram On: 11:09
  • Share The Gag

  • நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் ஆறு விஷயங்கள்!


    1. சாலையில் எச்சில் துப்புதல் :


    இதில் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. அது சூவிங் கம் முதல் குட்கா வரை. இவற்றை கணக்கெடுத்தால் நான்கு ஜென்மம் எடுக்கும்.

    2. சிக்னலை மீறுவது, தவறான பாதையில் ஓட்டுவது :

    இது இந்தியாவை பொறுத்தவரை மிக சர்வ சாதாரணமான விடயம் ஆகிவிட்டது. இவற்றை தடுக்க கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். தேவையில்லாமல் ஒலி எழுப்புவதுமே தவறான ஒன்று. போக்குவரத்து நெரிசல் தான் இங்கே மோசமான ஒன்று.

    3. குப்பைகளை கொட்டுவது :

    நம்மவர்களுக்கு அழகான இடத்தை பார்த்தாலே குப்பை கொட்ட தோன்றுகிறது. இதற்க்கு படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடே இல்லை. இதனாலே பல கலைகளையும் நிலைகளையும் இழந்து நிற்கிறோம்.

    4. வரிசையை முந்தியடித்தல் :


    இந்த இடத்தில வீரத்தை சிலர் தப்பாக புரிந்துவிட்டனர் போலும். எதற்கு எடுத்தாலும் அவசரம், பொறுமை என்பது எள்ளளவும் இங்கே இல்லை. நிற்கிற ஒருவனும் முன்னும் பின்னுமாய் தள்ளிக்கொண்டு தான் நிற்கிறான்.

    5. விட்டுகொடுக்காத பழக்கம் :

    அனைத்திற்கும் விட்டுகொடுக்க சொல்லவில்லை, சில காரணங்களுக்கு மட்டும் கூட இங்கே இறங்க மறுக்கின்றனர். ஒரு பொது மின்தூக்கியில் ஒரே முறையில் முன்னூறு பேர் ஏற நினைத்தால் அது எங்கனம். அவசர ஊர்தி கூட சாலைகளில் வழிக்காக பிச்சை எடுக்கின்றன.

    6. நடுத்தர நிலையை ஏற்றுகொள்வது :


    நடுத்தர நிலையில் இருந்து முன்னேற நினைப்பது சரியான விஷயம் தான், ஆனால் அதற்காக இங்கே எவ்வளவு பொய் புரளிகள், பித்தலாட்டங்கள், லஞ்சம், ஊழல்.. இங்கே சகிப்புத்தன்மை தண்ணீரில் கரையும் உப்பு தான். இங்கே உண்மை தொண்டனாய் இருக்க யாருக்கும் ஆசை இல்லை, தலைவன் பதவிக்கே முந்தியடிகின்றனர்.

    7. மனிதனை மனிதன் மதிப்பது இல்லை:

    நம் மக்களை நாமே மதிக்காத போது எப்படி முன்னேற முடியும். முன்னுக்கு வருபவனை அழிக்க மட்டுமே நினைப்பது.

    8. ஜாதி வெறி- மத வெறி - இன வெறி:



    நம் நாட்டின் சாபக்கேடு என்றே இதனை சொல்லலாம்

    கர்ப்பம் தரிப்பதற்கு முன்!

    By: ram On: 11:08
  • Share The Gag
  • ‘உலகிலேயே மிக உயர்ந்த, உன்னதமான பதவி தாய்மை. அன்புதான் அதற்கான சம்பளம்...’ பெருமைக்குரிய இந்தப் பதவிக்கு எல்லாப் பெண்களும் தகுதியுடையவர்களே... அதற்கு முன் தேவை கொஞ்சம் ஆலோசனைகள்... கொஞ்சம் முன்னெச்சரிக்கைகள்...
    இவை இரண்டும் இருந்தால், தாய்மைப் பதவிக்காக எந்தப் பெண்ணும் தவிக்க வேண்டியிருக்காது. குழந்தை வேண்டும் என விரும்புகிற பெண்கள், திருமணத்துக்கு முன்பிலிருந்தே கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார் குழந்தையின்மை சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர் மனு லட்சுமி.

    திருமணத்துக்கு முன்...


    குழந்தைப்பேறு என்பது திருமணத்துக்குப் பிறகு திட்டமிட வேண்டிய விஷயமில்லை. திருமணத்துக்கு முன்பிலிருந்தே, அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாக வேண்டும். அதாவது, திருமண வயதில் இருக்கும் பெண்கள், திருமணத்துக்கு முன்பே மகப்பேறு மருத்துவரை சந்திக்கலாம். குறிப்பாக முறையற்ற மாதவிலக்கு சுழற்சி உள்ளவர்கள், தைராய்டு, நீரிழிவு உள்ளவர்கள் மருத்துவரை சந்தித்து, இந்தப் பிரச்னைகளை சரியாக்கும் அல்லது கட்டுப்படுத்தும் சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மகப்பேறு மருத்துவர்களிடம் எடுத்துக் கொள்கிற ‘ப்ரீமேரி டல் கவுன்சலிங்’கில், தாம்பத்ய உறவு குறித்த அவர்களது பயம், பிரசவ பயம் போன்றவற்றுக்கும் பதில் கிடைக்கும்.

    திருமணத்துக்குப் பிறகு...


    திருமணமான உடனேயே குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கிற பெண்களும், ஒருமுறை மகப்பேறு மருத்துவரை சந்தித்து, ரத்தப் பரிசோதனை, கர்ப்பப்பை சோதனை, அதில் ஏதேனும் தொற்று இருக்கிறதா என்பதற்கான சோதனைகளை செய்வது நலம். இதில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ரூபெல்லா தடுப்பூசி. ஏற்கனவே இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்களுக்குப் பிரச்னையில்லை. ஒருவேளை போடாவிட்டால், கர்ப்பம் தரித்த பிறகு ரூபெல்லா பாதித்தால், தாய்க்குப் பிரச்னை இல்லை. கர்ப்பத்தில் இருக்கிற குழந்தைக்குப் பெரிய பாதிப்பு உண்டாகும். இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்டு, 1 மாதத்துக்கு கர்ப்பம் தரிக்கக் கூடாது.

    முதல் குழந்தையைத் தள்ளிப் போடலாமா?


    இது தம்பதியின் வயதைப் பொறுத்தது. குழந்தை பெற்றுக்கொள்ள மிகச் சரியான வயது 20 முதல் 30 வரை. கர்ப்பத்தை தாங்கும் சக்தி, சிக்கல்கள் இல்லாத கர்ப்பமெல்லாம் அந்த வயதில்தான் சாத்தியம். 20 வயதில் திருமணம் செய்கிறவர்கள், மருத்துவரை அணுகி சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டுக்கான சராசரி சோதனைகளை செய்து, எல்லாம் நார்மல் எனத் தெரிந்தால் குழந்தைப்பேறைத் தள்ளிப் போடலாம்.

    30 வயதுக்கு மேல் திருமணம் செய்பவர்களுக்கு இது பொருந்தாது.

    எத்தனை நாள் காத்திருக்கலாம்?


    இதற்கும் அதே விதிதான். இள வயதில் திருமணம் செய்தவர்கள் என்றால் ஒரு வருடம் வரை காத்திருக்கலாம். அதிலும் அந்தப் பெண்ணுக்கு மாதவிலக்குச் சுழற்சி முறையாக இருக்க வேண்டும். 30 வயதுக்கு மேல் திருமணம் செய்தவர்கள் என்றால் 6 மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டாம்.

    என்னென்ன சோதனைகள்?


    ஏற்கனவே ஏதேனும் உடல்நலக் கோளாறு இருக்கிறதா, இன்ஃபெக்ஷன் இருக்கிறதா, மாதவிலக்குச் சுழற்சி முறையாக இருக்கிறதா, கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா, ஏதேனும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறதா என்பதற்கான பொதுப் பரிசோதனை. சினைப்பை மற்றும் கர்ப்பப்பையில் ஏதேனும் கட்டிகளோ, நீர்க்கட்டிகளோ இருக்கின்றனவா என்பதற்கான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்.

    நீரிழிவு மற்றும் தைராய்டுக்கான ரத்தப் பரிசோதனை.  கருக்குழாய்களில் பிரச்னை இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள ஹெச்.எஸ்.ஜி. (ஹிஸ்ட்ரோசால்பினோகிராம்).

    கருக்குழாய்களில் ஒன்றிலோ, இரண்டிலுமோ அடைப்புகள் இருப்பதைத் தெரிந்து கொள்ளும் சோதனை.

    கருத்தரிக்காததற்கான பிரச்னைகள்...


    மேலே சொன்ன சோதனைகளில் எதில் பிரச்னைகள் இருந்தாலும் கர்ப்பம் தரிப்பதில் தாமதமும், பிரச்னைகளும் ஏற்படலாம். தவிர, கர்ப்பப்பையில் ஃபைப்ராய்டு கட்டிகள் இருந்தாலோ, சதை வளர்ச்சி இருந்தாலோ, கர்ப்பப்பை வடிவம் மாறியிருந்தாலோ, கணவருக்குப் பிரச்னைகள் இருந்தாலோ கருத்தரிப்பது தாமதமாகும். இவற்றையெல்லாம் தாண்டி, காரணத்தை விளக்க முடியாத மலட்டுத்தன்மை என ஒரு பிரிவும் உண்டு.

    என்ன சிகிச்சைகள்?

    ஐ.யு.ஐ.

    சாதாரணமாக 15 மில்லியனாக இருக்க வேண்டிய கணவரின் உயிரணுக்களின் எண்ணிக்கை, 8 முதல் 10 மில்லியனாக இருந்தாலோ, காரணத்தை விளக்க முடியாத மலட்டுத்தன்மையாக இருந்தாலோ, சினைப்பையில் ரத்தக்கட்டிகள் இருந்தாலோ, இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படும். பெண்ணின் கருமுட்டையுடன், ஆணின் உயிரணுவை செயற்கையாக இணையச் செய்து, கருத்தரிக்கச் செய்கிற இந்த டெக்னிக்கிற்கு மருத்துவமனையில் தங்கவோ, ஓய்வோ தேவையில்லை. இதில் 10 முதல் 15 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு.

    ஐ.வி.எஃப்.

    ஐ.யு.ஐ. சிகிச்சையை 4 முதல் 5 முறைகள் முயற்சி செய்து பலனில்லாமல் போனால், அடுத்து ஐ.வி.எஃப். சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள். 2 கருக்குழாய்களிலுமே அடைப்புள்ளவர்களுக்குப் பெரும்பாலும் இதுதான் பரிந்துரைக்கப்படும். கருமுட்டை உருவாக ஊசிகள் போடப்பட்டு, 8 முதல் 10 முட்டைகள் வந்ததும், அதிலிருந்து சிறந்தவற்றைத் தேர்வு செய்து, வெளியே வைத்து,  உயிரணுக்களுடன் சந்திக்கச் செய்து, கருவானதும் எடுத்து, கர்ப்பப்பையினுள் வைத்து வளர்க்கப்படும். இதில் 30 முதல் 40 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு. ஒரு முறை சிகிச்சைக்கே ஒன்றரை லட்சம் செலவாகும்.

    ஐ.எம்.எஸ்.ஐ.


    ஐ.வி.எஃப். சிகிச்சையின் அடுத்தகட்ட முன்னேற்றம் இது. ஆரோக்கியமான உயிரணுக்களைத் தேர்வு செய்து, பெண்ணின் கருமுட்டையை சந்திக்கச் செய்கிற சிகிச்சை இது.

    கர்ப்பம் தரிப்பதற்கு முன்..
    .

    உங்கள் பி.எம்.ஐ. (உயரத்துக்கேற்ற எடை உள்ளதா என்பதற்கான பாடி மாஸ் இன்டக்ஸ்) சரியாக உள்ளதா எனத் தெரிந்து கொள்ளுங்கள். அதிக எடை இருந்தால் உடனடியாகக் குறைக்கும் முயற்சிகளில் இறங்குங்கள். ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

    நீரிழிவு இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில், மாத்திரைகளுக்குப் பதில் இன்சுலினுக்கு மாறலாம். பெரும்பாலான நீரிழிவு மாத்திரைகள், கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ள உகந்தவை அல்ல.

    வலிப்பு நோய் உள்ளவர்களும் கர்ப்பம் தரிப்பதற்கு முன் மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும். மருந்துகளின் அளவும் வீரியமும் குறைவான வேறு மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.

    மாவீரன் சிவாஜியின் பக்தி அடையாளம்!

    By: ram On: 11:07
  • Share The Gag

  • மாவீரன் சத்ரபதி சிவாஜியின் ஆன்மிகப்பற்று, இந்து சமயத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு மற்றும் அவர் கட்டிய கோயில் திருப்பணிகள் எல்லாமே  மிகப்பெரியன. மஹாராஷ்டிரா மாநிலம் கொங்கண் கடற்கரையை ஒட்டிய காட்டுப்பகுதியில் சில கோயில்கள் உள்ளன. அவற்றுள் பகவதி தேவி  கோயில், கணபதிதாரி கோயில் மற்றும் சிவாஜி கட்டிய சிவராஜேஸ்வர் கோயில்கள் மிகவும் புகழ்பெற்றவை. கொங்கண் காட்டுப்பகுதியில் உள்ள  சவந்தவாடி என்ற குன்றிலிருந்து உற்பத்தியாகும் நீர், கர்லா என்ற நதி வழியாக தாமாப்பூர் ஏரிக்கு வந்து சேருகிறது.

    அந்த ஏரிக்கரையின்மேல் அமைந்துள்ள கோயிலில் பகவதி தேவி தரிசனமளிக்கிறார். அக்கோயிலைச் சுற்றி ஓடுகள் வேயப்பட்டு கேரளபாணியில் கட் டப்பட்ட மண்டபங்கள் உள்ளன. அவை இத்தலத்திற்கு புனிதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காகக் கட்டப்பட்டவை. அங்கிருந்து சிறிது தூரம்  சென்றால் மால்வன் என்ற கோட்டைக்கு அருகில் கணபதிதாரி என்ற இடத்தில் ஒரு கிணற்றில் புனித கங்கை நீர் ஊற்றெடுக்கிறது. அதன் அருகில்  வலது பக்கத்தில் ஒரு துளசிமாடம் உள்ளது.

    மாவீரன் சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட பரம்பரை பூசாரிகள், கணபதிதாரி கிணற்றிலிருந்து ஒரு குடம் தண்ணீர் எடுத்துத் தருகிறார்கள்.  அலங்கரிக்கப்பட்ட பாய் மீது அக்குடத்தை வைத்து மலர் மாலை அணிவித்து பக்தர்கள் பூஜை செய்கின்றனர். சம்பந்தப்பட்ட மந்திரங்களை பூசாரி ஓ துகிறார். சந்தன மணம் கமழும் ஊதுவத்தி, ஆரத்தியாக காட்டப்படுகிறது. லட்டு போன்ற இனிப்பு வகைகள் அக்குடத்திற்கு நிவேதனம் செய்யப்பட்டு  பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. ஒரு பெரிய போரில் வெற்றி பெற விரும்பிய மாவீரன் சிவாஜி இங்கு வந்து கங்கா பூஜை செய்து ள்ளார். அவருடைய வேண்டுகோளை ஏற்று கங்கா தேவி அக்கிணற்றுக்குள் வந்ததாகக் கூறப்படுகிறது.

    அதன் நினைவாகவே மேற்படி பூஜை. சற்று தூரம் சென்றால், மால்வன்கோட்டைக்கு தெற்குப் பக்கத்தில் மன்னன் சிவாஜி கட்டிய சிவராஜேஸ்வர்  கோயில் உள்ளது. அக்கோயில் முழுவதும் செங்கற்களாலேயே கட்டப்பட்டுள்ளது. சிவாஜி தன் கைகளாலேயே செங்கல் எடுத்து வைத்து, கட்டு மானப்பணிகளைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

    கோயில் கருவறையில் காட்சி தரும் சிவராஜேஸ்வர் சிலையின் முகத்திற்கு உலோகக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. அவர் பெரிய மீசையுடன்  கம்பீரமாக போர்வீரனைப் போல் காணப்படுகிறார். முகம் தவிர மற்ற பாகம் முழுவதும் சிவப்புத்துணியால் மறைக்கப்பட்டுள்ளது. இச்சிலையையொட்டி  சிவாஜி பயன்படுத்திய இருமுனைவாள் (தோதார்) வைக்கப்பட்டுள்ளது. கீழே அமர்ந்த நிலையில் உள்ள சிவராஜேஸ்வர் படமும் வைக்கப்பட்டுள்ளது.  இக்கோயிலை சிவாஜி கோயில் என்றும் அழைக்கின்றனர்.

    மேலும் அப்பகுதியிலுள்ள கோட்டைகள், கிணறுகள், மதகுகள், எதிரிகளிடமிருந்து தப்பிச் செல்லும் சுரங்கவழிப் பாதைகள், திசை காட்டும் உயரமான  கோபுரங்கள், மணிக்கூண்டுகள் மற்றும் சிவராஜேஸ்வர் கோயில் சுவர்கள் என்று எல்லா இடங்களிலும் சிவாஜியின் வலது கை அடையாளம்  பதிக்கப்பட்டு இன்றும் அப்படியே காணப்படுகிறது. ஒரு முகமதிய வியாபாரி தன் சரக்குகளை கப்பலின் ஏற்றிக் கொண்டு கொங்கண் கடற்கரை  நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று இடி மின்னலுடன் பெருமழை பெய்து பெரும் புயலும் வீசியது.

    அதனால் அந்தக் கப்பல் வழிதடுமாறி ஒரு கருப்பு மலையில் மோதிக் கொள்ள இருந்தது. அப்போது அந்த மலையிலிருந்து ஒரு ஒளி தோன்றியது.  அந்த வெளிச்சத்தில் மலைமீது ஒரு மூங்கில் கொட்டகை இருப்பது அந்த வியாபாரியின் கண்களில் பட்டது. பின்னர் இறைவன் அருளால் புயல்  அபாயம் நீங்கியது. அதனால் மகிழ்ந்த வியாபாரி இறைவனுக்கு நன்றி செலுத்த விரும்பி மூங்கிலாலேயே ஒரு சிவபெருமான் உருவத்தைச் செய்து  அந்த மூங்கில் கொட்டகையில் வைத்து வணங்கினார். இன்றும் அந்த மூங்கில் ஆலயம் இந்து-முஸ்லிம் மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக  விளங்கிவருகிறது.

    மும்பை வந்து விட்டால் இக்கோயில்களுக்குச் செல்ல வசதிகள் உள்ளன. காடுகள் நிறைந்த மலைப்பிரதேசமாக இருப்பதால் வழிகாட்டிகளை அழை த்துச் செல்ல வேண்டும். குறிப்பிட்ட காலங்களில் மட்டும்தான் இங்கு செல்ல முடியும்.

    நாலாபுறத்திலும் நெருக்கடி கத்தி…இனி அவ்ளோதான்?

    By: ram On: 10:41
  • Share The Gag

  • ராஜபக்சே, சுபாஷ்கரன் அல்லிராஜா, லைக்கா, காமன்வெல்த் மாநாட்டுக்கு உதவி, எல்லாவற்றையும் தாண்டி இப்போது புதிய சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறது கத்தி. இந்த படத்தின் கதை தொடர்பான விவகாரம் நீதிமன்றத்திலிருப்பதால், எப்போ தீர்ப்பு வந்து? எப்போ படத்தை ரிலீஸ் பண்ணி? எப்போ ரசிகர்கள் கைதட்டி? அட போங்கப்பா!

    பொதுவாகவே நம் ஊரில் ஒரு வழக்கு போட்டால், குற்றவாளி குழிக்கு போன பின்னால்தான் பிடிவாரண்ட்டே வரும். அந்தளவுக்கு வேகம்! ‘கத்தியின் கதை என்னுடையது. நான் முருகதாசிடம் இந்த கதையை இரண்டரை மணி நேரம் சொன்னேன். கதையை கேட்டவர் நன்றாக இருப்பதாக கூறி அவரது கம்பெனியிலேயே என்னை படம் இயக்க சொன்னார். கதையை இன்னும் மெருகேற்றி வரும்படி கூறியிருந்தார். அதற்காகவே ஒன்றரை வருடம் செலவிட்டேன். இப்போது அவர் எடுத்து வரும் ‘கத்தி’ படத்தின் கதை என்னுடையது என்று அறிகிறேன். எனவே என்னை முருகதாசிடம் அறிமுகப்படுத்தி வைத்து கதை சொல்ல வைத்த ஜெகனையும் முருகதாசையும் கைது செய்து விசாரிக்க வேண்டும். எனக்கான நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்’ என்று மீஞ்சூர் கோபி என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இவருக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதாடி வருகிறார்.

    நீதிமன்றம் இருவரது கதையின் முழு ஸ்கிரிப்டையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது. மீஞ்சூர் கோபி தன் ஸ்கிரிப்டை ஒப்படைத்துவிட்டார். ஆனால் முருகதாஸ் தரப்பிலிருந்து இன்னும் ஸ்கிரிப்ட் வரவில்லையாம். ஸ்கிரிப்ட் கோர்ட்டுக்கு போனால் கதை லீக் ஆகிவிடும் என்று அஞ்சுகிறாராம் அவர்.

    நமது சந்தேகமெல்லாம் இதுதான். ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு போனால், தீர்ப்பு எத்தனை வருடம் கழித்து வரும் என்பது நம்மை படைத்த கடவுளுக்கு கூட தெரியாது. பல வழக்குகளின் கதி அப்படிதான். அந்த லிஸ்ட்டில் கத்தியும் சேர்ந்தால் என்னாவது? சிந்துபாத் லைலாவை தேடிப்போன கதைதான் போலிருக்கிறது.

    கத்தியை சுற்றி பின்னப்படும் வலைகள் சிலந்தி வலையாக இருந்தால் சரக்கென அறுத்தெறிந்துவிடுவார்கள். ஒவ்வொன்றும் இரும்பு வலையாக இருக்கிறதே… என்ன செய்யப் போகிறார்களோ?

    இரவில் மரத்தடியில் படுக்க கூடாது - ஏன் தெரியுமா??

    By: ram On: 10:19
  • Share The Gag

  • மனிதன் உயிர் வாழ பிராண வாயு தேவை. அவ்வாறே மரங்களும், செடி, கொடிகளும் உயிர் வாழ பிராண வாயு தேவை.

    மனிதன் எப்போதும் பிராண வாயுவை உள் வாங்கி, அசுத்த காற்றை வெளிவிடுகிறான். மரங்களோ இரு விதமாக மூச்சு விடுகிறது. பகலில் அசுத்த காற்றை உள் வாங்கி, பிராண வாயுவை வெளிவிடுகிறது. இரவில் பிராண வாயுவை உள் வாங்கி, அசுத்த காற்றை வெளிவிடுகிறது.

    எனவே, இரவில் மனிதன் மரத்தின் கீழே படுத்தால், அவனுக்கு போதுமான அளவு பிராண வாயு கிடைக்காது. மூச்சு திணறல் ஏற்படும். இக்காரணத்தினாலேயே நம் முன்னோர்கள் இரவில் மரத்தடியில் படுக்க கூடாது என்று கூறினார்கள்.

    இதனை ஒரு சிலர் மறுத்து பேசினர். அவர்களுடைய உடல் நாலத்திற்க்கும் கேடு வரக் கூடாது என்பதற்காக, இரவில் மரத்தடியில் படுத்தால் பேய் அமுக்கும் என்று பயமுறுத்தி வைத்தனர்.