Monday, 11 August 2014

சிவகார்த்தி பற்றி நான் சொன்னதை போடாதீங்க ! -பின்னாலேயே போன் செய்த தனுஷ்

By: ram On: 23:21
  • Share The Gag

  • ‘பற்றியெறியுது ஊரு, பச்சத் தண்ணி இருக்குதா பாரு… ’ என்று பற்றி எரிகிற தீயை அணைக்கிற வேலைகளில் இறங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஒவ்வொரு முறையும் இவருக்கும் தனுஷுக்கும் பிரச்சனை என்று என்று செய்திகள் வரும்போதெல்லாம், அப்படியெல்லாம் எதுவும் இல்ல. எப்பவும் அவர் எனக்கு மரியாதைக்குரியவர்தான் என்று சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார். சில நேரங்களில் ட்விட்டரில் வந்து கூட பதில் சொல்கிறார். அப்படியிருந்தும், ரெண்டு பேருக்கும் நடுவில் டயரை கொளுத்திப் போட்டு பந்த் எபெஃக்ட் காட்டாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது.

    சிவாவை பார்த்தாலும் அதே கேள்விதான். தனுஷை பார்த்தாலும் அதே கேள்விதான். நீங்க ரெண்டு பேரும் முன்ன மாதிரி நெருக்கமா இருக்கறதில்லையாமே? இந்த கேள்விக்கு கேஷுவலாக பதிலளித்தாலும், ஏதும் வில்லங்கம் வந்துடக் கூடாதே என்று அடி மனசு படபடப்போடுதான் பேசவே ஆரம்பிக்கிறார்கள் இருவரும். இதற்கிடையில்தான் அந்த முக்கியமான சம்பவம் நடந்தேறியிருக்கிறது.

    கடந்த வாரம் தனுஷை பேட்டியெடுத்தார் ஒரு நிருபர். வழக்கம் போல இந்த கேள்வியும் ஒட்டிக் கொண்டது. ‘உங்களுக்கும் சிவ கார்த்திகேயனுக்கும்…?’ என்று கேள்வியை ஆரம்பிக்கும் போதே, ‘அதானே கேட்க வர்றீங்க. தெளிவாவே சொல்லிடுறேன்’ என்று ஒரு சில கருத்துக்களை கூறினாராம். நிருபர் பேட்டியை முடித்துவிட்டு ஆபிஸ் வருவதற்குள் தனுஷிடமிருந்து போன். ‘சார்… நான் சிவா பற்றி சொன்னேன்ல? அந்த பதிலை போட வேண்டாம். பேசாமல் அந்த கேள்வியையும் தவிர்த்துருங்களேன்’ என்று கேட்டுக் கொள்ள, நிருபர் தரப்பு ‘யெஸ்…’.

    ஆமாம்… என்னதான் நடக்குது நட்புக்குள்ளே?

    நயன்தாரா..! நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட ஒதுங்கிடு.. என்று கூறிய இயக்குநர்கள்...!

    By: ram On: 22:49
  • Share The Gag

  • தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நடித்த பிறகுதான் நயன்தாராவிற்குள் ஒரு மிகப்பெரிய நடிகை இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. அதுவரை அவரை பிகினி நடிகை பட்டியலில்

    வைத்திருந்த இயக்குனர்கள் அதையடுத்து அவரை இன்னும் பெரிய ரேஞ்சுக்கு கொண்டு செல்ல நினைத்தனர். ஆனால், அந்த நேரம்பார்த்து நான் பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகப்போகிறேன் என்று புதிய படங்களை தவிர்த்ததால் சில முக்கியமான படங்களை அப்போது இழந்தார் நயன்தாரா.

     அதையடுத்து, பிரபுதேவாவுடனான திருமண விவகாரம் கைகூடாதால் மீண்டும் நடிக்க வந்த நயன்தாராவை, வித்யாபாலன் நடித்த கஹானி இந்தி படத்தின் ரீமேக்கான அனாமிகாவில் நடிக்க வைத்தார் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா. அதே படம் தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் வெளியானது. ஆனால், இந்தியில் ஹிட்டடித்த அப்படம் தமிழ், தெலுங்கில் சுத்தமாக ஓடவில்லை.

    அதனால் அதன்பிறகு நயன்தாராவை தென்னிந்தியாவின் வித்யாபாலனாக கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைத்த இயக்குனர்கள் பின்வாங்கி விட்டனர். இருப்பினும், இப்போது தன்னை டைட்டீல் வேடங்களில் நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டிருந்த அந்த இயக்குனர்களுக்கு மீண்டும் அழைப்பு விட்டு வருகிறாராம் நயன்தாரா. தென்னிந்தியாவின் வித்யாபாலனாகி விட வேண்டும் என்ற துடிப்பு முன்பை விட அவரிடத்தில் இப்போது இன்னும் அதிகமாகி உள்ளதாம்.

    லவ் என்ற வார்த்தையை கேட்டா கடவுள் கூட கல்லெடுத்து அடிப்பாரு - இயக்குநரின் ஆதங்கம்..!

    By: ram On: 22:25
  • Share The Gag

  • லவ் என்ற வார்த்தையை கேட்டா இன்னும் கொஞ்ச நால்ல, கடவுள் கூட கல்லெடுத்து அடிப்பாரு...என்று புதுமுக இயக்குநர் ஒருவர், தற்போதைய காதல் குறித்து ரொம்பவே ஆதங்கப்படுகிறார்.

    டான் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் எல்.கணேஷ் தயாரிக்கும் படம் ‘மஞ்சள் குங்குமம்’. சத்யசரவணா என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் நாயகன், நாயகியாக நடிக்க, முன்னணி நடிகர்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    சதீஷ் எம்.எஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செல்வநம்பி இசையமைக்க, எல்.வி.தாஸ் படத்தொகுப்பு செய்கிறார். கபிலன், யுகபாரதி, கானா பாலா மற்றும் ஏகாதசி ஆகியோர் பாடல்கள் எழுத, தினா, ஜாய் மதி, ஜெய் ஆகியோர் நடனம் அமைக்கின்றனர்.

    இப்படம் குறித்து இயக்குநர் சத்யசரவணன் கூறுகையில், “லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களும் சரி லவ் பக்கமே தலை வச்சு படுத்ததே இல்லைன்னு சொல்றவங்களும் சரி அவங்கள்ல எத்தன பேரு அவங்களோட பையனோ பொண்ணோ லவ் பண்ணுனா  அவங்களோட லவ்வ புரிஞ்சுக்கிட்டு அவங்கள ஒன்னு சேத்து வச்சு சந்தோஸப்பட்றாங்க…

    லவ்வுறங்குற வார்த்தையே கேட்டாலே கடவுள் கூட இன்னும் கொஞ்ச நாள்ல கல்லெடுத்து கண்டிப்பா அடிக்க ஆரம்பிச்சிருவான்…ஏனா அந்தளவுக்கு ஒரு காலத்துல இதயபூர்வமா நேசிக்கபட்ட சுவாசிக்கபட்ட லவ் இன்னைக்கி லவ்வுங்குற பேர்ல நாம அடிக்கிற கூத்தாலா தெருவுல ஓட்ற சாக்கடைய விட கேவலமா மாறிடுச்சுன்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வோரு விதமா வசபாடிக்கிட்டு இருக்கையில…

    அன்பை மட்டுமே ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு புழிதிகாட்டின் அடையாளமாய் அழுக்கு முகங்களோடு முகங்களாக கைகளுக்கு எட்டாதா கற்பனைகளுடன் திரியும் இருவருடைய அன்பின் உச்சத்தை…இன்று சமூகத்தை மிகக் கொடூரமான முறையில் சீரழித்துக் கொண்டிருக்கும் இன்னொரு முக்கியமான பிரச்சனையுடன் கலந்து அழகிய கிராம வாசணையுடன் சொல்ல வருகிறது “மஞ்சள் குங்குமம்”

    மதுரை மாவட்டத்தை சுற்றி எங்க கிராமத்துக்கே உரித்தான செம்மண் சார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. முழு படப்பிடிப்பையும் மொத்தம் 58 நாட்களில் முடித்துள்ளோம்.” என்றார்.

    தற்போது இப்படத்தின் டப்பிங் வேலைகள் முடிவடைந்து, படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

    புதிதாக வேலைக்கு விண்ணப்பிக்கப் போகிறீர்களா? அவசியம் படிக்கவும்..!

    By: ram On: 20:50
  • Share The Gag

  • வேலை தேடுபவர்களுக்கு உடனடித் தேவை ஒரு விண்ணப்பம். அதோடு நம்மைப் பற்றிய ஒரு தன் விவரக் குறிப்பு (Bio – Data). இந்தத் தன் விவரக் குறிப்பில் நாம் என்னவெல்லாம் சேர்க்கலாம்? எப்படி அதை வடிவமைக்கலாம்? என்று பலரும் குழம்பிப் போகிறார்கள். இதற்கும் ஓர் ஆங்கில இணைய தளம் உதவுகிறது.

    இந்த இணையதளத்தில் உள்ள “உங்கள் தன் விவரக் குறிப்பை உருவாக்குங்கள்” என்பதைச் சொடுக்கினால் ஒரு புதிய பக்கம் திறக்கிறது. இந்தப் பக்கத்தில் இடது புறம் அடிப்படைத் தகவல்கள் (Basic Information), தகுதிகள் (Qualifications), கல்வி (Education), ஆர்வம் (Interests), உசாத்துணை (References) எனும் தலைப்புகள் உள்ளன. இந்தத் தலைப்புகள் தவிர புதிய தலைப்புகளைத் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்வதற்கான வசதியும் உள்ளது. இந்தத் தலைப்புகளைச் சொடுக்கினால், வலது புறத்தில், ஒவ்வொரு தலைப்பிலும் தன் விவரக் குறிப்புக்குத் தேவையான தகவல்களுக்கான காலிப்பெட்டிகள் கிடைக்கின்றன. இவற்றில்

    நாம் நம்மைப் பற்றிய தகவல்களை உள்ளீடு செய்யலாம். கடைசியாக இந்தத் தன் விவரக் குறிப்புகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளவும் (Preview), நம் கணினியில் சேமித்துக் கொள்ளவும், தரவிறக்கம் செய்து கொள்ளவும் வசதிகள் உள்ளன. இதன் மூலம் நமது தன் விவரக் குறிப்பை அச்சிட்டு நம் விண்ணப்பத்துடன் சேர்த்துக்கொள்ள முடியும் அல்லது மின்னஞ்சல் வழியாக நாம் விண்ணப்பிக்கும் நிறுவனத்திற்கு அனுப்பிவைக்க முடியும்.

    இந்தத் தளத்தில் செயல் அலுவல் (Executive), நளினம் (Elegant), தடிமன் (Bold), இலக்கியம் (Literature), நுட்பம் (Finesse), மிகப் பெரிய (Metro) எனும் தலைப்புகளில் சில மாதிரித் தன் விவரக் குறிப்புகள் (Sample Resume) இடம் பெற்றிருக்கின்றன. இந்தத் தளத்தில் இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமான தன் விவரக் குறிப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

    10 லட்சத்துக்கும் அதிகமான தன் விவரக் குறிப்புகள் தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கின்றன என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

    புதிதாக வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தொழில் முறையிலான அழகிய தோற்றத்தில் தன் விவரக் குறிப்பைத் தயார் செய்ய https://cvmkr.com/ எனும் இணைய முகவரிக்குச் செல்லலாமே…!

    கொழுப்பில் ஒட்டிக் கொள்ளும் வைரங்கள்..!

    By: ram On: 20:16
  • Share The Gag

  • வைரங்கள் அதிக பளபளப்பு கொண்டவை, அதேபோன்று விலையும் அதிகம்.

    பட்டை தீட்டப்படாத வைரம் மிகவும் கடினமானது. இயற்கையான வைரம் உருவாவதற்கு அதிக வெப்பமும், அழுத்தமும் தேவைப்படுகிறது.

    பூமியில் மிகச்சில வைரச்சுரங்கங்களே உள்ளன. உலகில் உள்ள வைரங்களில் 90 சதவீதம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கிடைக்கிறது.

    மற்ற எல்லா ரத்தினங்களை விடவும் வைரத்தின் படிகக் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. கார்பன் அணுக்களின் கட்டமைப்பே அதனை மிகக் கடினமாக மாற்றியுள்ளது. இது எண்முக வடிவம் அல்லது ஆறு சதுர பக்கங்களைக் கொண்டிருக்கும்.

    திரவத்தில் கரையாது, கொழுப்பில் ஒட்டும், வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தாது போன்ற பண்புகள் வைரத்துக்கு உண்டு.

    தூய வைரம் தண்ணீரில் மிதக்கும். மேலும் ஒளி விலகல் மற்றும் ஒளிபுகும் திறன் ஆகிய இரண்டும் வைரத்துக்கு உண்டு. பென்சில், நிலக்கரி மற்றும் வைரம் ஆகிய மூன்றும் கார்பன் அணுக்களால் ஆனவை.

    வைரங்களின் இயற்பியல் மற்றும் வேதியல் பண்புகளால் அது மற்ற ரத்தினங்களில் இருந்து வேறுபடுகிறது.

    பொதுவாக வைரங்கள் மஞ்சள் கலந்த வெண்மை நிறத்திலும், சில சமயங்களில் ஊதா, வெளிர் சிவப்பு, சிவப்பு, பச்சை மற்றும் அடர் சாம்பல் நிறங்களில் கூட கிடைக்கின்றன.

    ஊதா நிற வைரம் அதிக விலை கொண்டது. ஏனெனில் இந்தநிற வைரங்கள் கிடைப்பது மிக அரிதாகவே உள்ளது.

    சூப்பர் ஸ்டாரை வம்புக்கு இழுத்த சமந்தா!

    By: ram On: 19:34
  • Share The Gag

  • சமந்தா சில நாட்களாகவே பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தனது டுவிட்டர் பக்கத்தில் பெண்களை ஏன் இப்படி கேவலமாக சித்தரிக்கிறார்கள் என்று, மகேஷ் பாபுக்கு எதிராக ஒரு கருத்தை தெரிவித்து அவரது ரசிகர்களிடம் செம்ம ரைடு வாங்கினார்.

    பின் விருது விழா ஒன்றில் இருவரும் நேரில் சந்தித்து சமதானம் ஆனார்கள், தற்போது மீண்டும் மகேஷ் பாபுவை டுவிட்டரில் சீண்டி பார்த்துள்ளார்.

    இதில் ‘ஆக்டு படத்தின் ட்ரைலர் அப்படியே கப்பர் சிங் போல் உள்ளது’ என தெரிவிக்க பின் அவரது ரசிகர்கள் அர்ச்சனையால் அந்த டுவிட்டை நீக்கிவிட்டார்.

    இரண்டாம் முறை அம்மாவாக போகிறவர்களுக்கு சொல்ல விரும்புவது... என்ன?

    By: ram On: 18:17
  • Share The Gag

  • முதல் பிரசவத்தில் அந்த அனுபவம் புதிது என்பதால் எப்படியிருக்குமோ என்ற பயம்தான் பிரதானமாக இருக்கும். அடுத்ததில் அந்த பயம் தெளிந்திருக்கும் என்பதால் அவ்வளவு டென்ஷன் இருக்காது.

    முதல் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்திருந்தால் இரண்டாவது பிரசவம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அதேநேரம், முதல் குழந்தை சிசேரியன் என்றால் அடுத்ததும் சிசேரியனாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அது சுகப்பிரசவமாக ஐம்பது சதவிகித வாய்ப்பு உண்டு (பெல்விஸ் சிறியதாக இருந்தால் வேறு வழியேஇல்லை. இரண்டாவது குழந்தை யையும் அறுவைசிகிச்சை செய்துதான் எடுக்க வேண்டும்).

    முதல் பிரசவத்தில் சிக்கல் இருந்திருப்பின், ‘ப்ரீ ப்ரெக்னென்சி கவுன்சிலிங்’ செய்து கொள்வது நல்லது. அப்படி செய்யும்போது, முன்னெச் சரிக்கையாக தாய் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வழி முறைகள் விளக்கப்படும். பாதுகாப்பான பிரசவத்துக்கு அது உதவும்.

    இரண்டாவது முறை கருத்தரிக்கும் தாய்மார்கள் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம் முதல் குழந்தை. தனக்கு தம்பியோ தங்கையோ பிறக்கப் போகிறது என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், எங்கே தன் தாயின் கவனமும் பாசமும் மொத்த மாய் அந்தக் குழந்தைக்கே போய்விடுமோ என்ற ஏக்கம் முதல் குழந்தையை ஆக்கிரமிக்க தொடங்கும்.

    அந்த சமயத்தில் தாயுடன் தந்தையும் அந்தக் குழந்தையிடம் கூடுதல் பரிவு காட்ட வேண்டும். `நீதாண்டா செல்லம் வீட்டுக்கு மூத்த கன்னுக் குட்டி. வரப்போற பாப்பாவை நீதான் பத்திரமா பாத்துக்கணும்.

    அது உன்னை அண்ணா/ அக்கானு கூப்பிடுமே.. அதுக்கு எல்லாம் சொல்லித்தரப் போறதே இந்த தங்கக்கட்டிதானே’ என்ற ரீதியில் பேசி, மனதளவில் தயார் செய்ய வேண்டும். இன்னும் ஒருபடி மேலே போய், `பாப்பாக்கு என்ன பேர் வைக்கலாம்.. சொல்லு கண்ணு’ என்றெல்லாம் உற்சாகப்படுத்தினால், முதல் குழந்தை ஜோராக உங்களைவிட ஆர்வமாக தனது உடன்பிறப்பை வரவேற்கத் தயாராக இருக்கும்.

    9 மாதங்கள் வரை குறிப்பிடத் தகுந்த உடல் மாற்றங்களோ, பிரச்னைகளோ இல்லாதவரை, வழக்கமான தடுப்பூசி, ஸ்கேனிங் போன்றவை தொடரலாம்.

    பிரசவத்துக்கு முந்தின நாள் வரை அலுவலகத் துக்குச் சென்று வேலை பார்த்த தாய்மார்கள் எத்தனையோ பேர் உண்டு!

    காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள்! அரிய தகவல்கள் இங்கே உள்ளது..!

    By: ram On: 17:13
  • Share The Gag


  • சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ.....

    பித்தவெடிப்பு மறைய

    காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

    தொண்டை வலிக்கு

    பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

    இருமல் தொல்லைக்கு

    தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

    கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

    கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

    இருமல் சளிக்கு

    தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

    கட்டிகள் உடைய

    மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

    பேன் தொல்லை நீங்க

    வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

    மேனி பளபளப்பு பெற

    ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

    தும்மல் வராமல் இருக்க

    தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

    கரும்புள்ளி மறைய

    எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

    தொண்டை கரகரப்பு நீங்க

    அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

    கருத்தரிக்க உதவும்

    அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

    இருமல் சளி குணமாக

    சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

    ஷாருக்கான் செயலால் அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள்..! குற்றம் நடந்தது என்ன...?

    By: ram On: 16:48
  • Share The Gag

  • சில நாட்களாக எந்த பிரச்சனையிலும் ஈடுபடாமல் இருந்த ஷாருக்கான், மறுபடியும் ஒரு சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். மேற்கு வங்காளத்தில் போலிஸ் துறை சார்ந்த விழாவில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்காள மாநிலத்தின் விளம்பர தூதராக இருக்கும் இந்தி நடிகர் ஷாருக் கான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    இதில் திடீரென்று ஷாருக்கான் மேடையிலேயே ஒரு பெண் போலிஸை தூக்கி நடனமாட தொடங்கினார். இதை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இதை பல பேர் எதிர்த்தாலும், ஒரு சிலர் இந்த பிரச்சனையை பெரிது படுத்தக் கூடாது என்றும் கூறி வருகின்றனர்.

    கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்!

    By: ram On: 08:24
  • Share The Gag
  •  'இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போதுதான் பிரச்னை.

    நம் உடல் செல்கள் உற்பத்தி செய்வதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவசியம். மொத்தக் கொழுப்பும் எல்டிஎல் கொலஸ்ட்ரால், எச்.டி.எல். கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட்ஸ் என்று பிரிக்கப்படுகிறது. நகர்ப்புற இந்தியர்கள் மத்தியில் நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். 35 மி.கி என்ற மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகிறது' .
    .
    கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்

     அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.

    1. கொலஸ்ட்ரால் அளவை அறிந்துகொள்ளுதல்

     கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு உள்ளது என்பது தெரிந்தால்தான், அதை எவ்வளவு கட்டுப்படுத்த வேண்டும் என்பதைத் திட்டமிட முடியும். எனவே, குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை முதலில் பரிசோதிக்க வேண்டும். உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதைத் தடுத்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கச் செய்ய, பரிசோதனை முடிவுகள் உதவும்.

    2. நல்ல கொழுப்பைத் தேர்ந்தெடுத்தல்

     நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அது நேரடியாக நம் உடலில் கொழுப்பு சேருவதில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். நார்ச் சத்துள்ள உணவு, கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். சாச்சுரேட்டட் ஃபேட் (நிறைவுற்ற கொழுப்பு) மற்றும் டிரான்ஸ் ஃபேட் (மாறுதல் அடையும் கொழுப்பு) இவை உடலில் கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும். தினசரி உணவில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக சாச்சுரேட்டட் ஃபேட் மற்றும் டிரான்ஸ் ஃபேட் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மோனோசாச்சுரேட்டட் ஃபேட், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். இது ஆலிவ், கடலை எண்ணெயில் அதிகம் உள்ளது. பாதாம், வால்நட்டில் உள்ள கொழுப்பும் ஆரோக்கியத்தைத் தரும்.

    3. டிரான்ஸ் ஃபேட் தவிர்த்தல்


     இது கெட்ட கொழுப்பு. நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மிக அதிக அளவில் இருக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிப்பதோடு, நல்ல கொழுப்பு அளவையும் குறைக்கிறது. எனவே, உணவுப் பொருட்களை வாங்கும்போது, அதில் 'டிரான்ஸ் ஃபேட்’ என்று இருந்தால் அதைத் தவிர்த்துவிடுங்கள்.

    4. கொலஸ்ட்ராலின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்


     வயதானவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 300 மி.கி. அளவு கொழுப்பு தேவை. இதய நோயாளிகளுக்கு 200 மி.கி. போதுமானது. முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மூளை போன்ற விலங்குகளின் இறைச்சி, பால் பொருட்களில் இருந்து அதிக அளவில் கொழுப்பு கிடைப்பதால், கொழுப்பு அதிகம் சேர்ந்த உணவுப் பொருட்களைக் குறைத்துக்கொள்வது நல்லது.

    5. நார்ச் சத்து தினமும் தேவை

     உணவில் குறைந்தது ஐந்து முதல் 10 கிராம் அளவுக்கு நார்ச் சத்து தேவை. முட்டைக்கோஸ், சுரைக்காய், முள்ளங்கி, பீன்ஸ் போன்ற நார்ச் சத்து நிறைந்த காய்கறிகளை, தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். இது கொலஸ்ட்ராலின் அதிகரிப்பை ஐந்து சதவிகிதம் வரைக்கும் குறைக்கும். அன்றாடம், போதுமான நார்ச் சத்துள்ள உணவை எடுக்காதவர்கள், இனியாவது உணவில் காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    6. குறைந்த அளவு அசைவ உணவு


    'ரெட் மீட்’ எனப்படும் மாட்டு இறைச்சி போன்றவற்றில் கொழுப்பு அளவு அதிகமாக இருக்கிறது. முடிந்தவரை இறைச்சி உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. இறைச்சிக்குப் பதில் அதிக அளவில் மீன் உணவை சேர்த்துக்கொள்ளலாம். இதய நோயாளிகள் மட்டுமல்ல, மற்றவர்களும் உணவில் முட்டை சேர்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

    7. மீன் உணவு

     எண்ணெய்த்தன்மை கொண்ட மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் இருப்பதால், இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை மீன் உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட் அளவையும் குறைக்க உதவும்.

    8. முழு தானியங்கள்

     தினசரி உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதில் அதிக அளவில் வைட்டமின் மற்றும் மினரல் உள்ளது. சிவப்பு அரிசி, முழு தானிய பிரட் மற்றும் ஃபிளாக்சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகளை எடுத்துக்கொள்வது, கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆளி விதையில் அதிகமாக இருக்கிறது

    9. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள்

     உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறோமா என்பதைப் பார்க்க வேண்டும். பி.எம்.ஐ. அதிகமாக இருந்தால் உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும். இரண்டு கிலோ எடை குறைத்தாலும்கூட, இது உடலில் கொழுப்பு அளவைக் குறைப்பதில் பேருதவியாக இருக்கும். சீக்கிரமாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கக் கூடாது. வாரத்துக்கு அரை கிலோ என்ற அளவில் நிதானமாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.

    10. தொடர் உடற்பயிற்சி

     தினசரி குறைந்தது 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் தேவையற்ற கொழுப்பு எரிக்கப்பட்டு, உடல் ஃபிட்-ஆகும். கொழுப்பால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும். இதய நோய் வருவதற்கான வாய்ப்பையும் பெருமளவு குறைக்கும்.

    11. மது மற்றும் சிகரெட் தவிர்த்தல்


     அதிக அளவில் சிகரெட் புகைப்பது நம் உடலில் உள்ள எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு அளவைக் குறைத்துவிடும். இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இதேபோல ஆல்கஹால் அருந்தும்போதும் அதிக அளவில் கொழுப்பு உற்பத்தியாகிறது. எனவே, அதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

    12. மாத்திரை

     ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு 'ஸ்டேடின்’ என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. இது கொழுப்பைக் குறைக்க உதவும். மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இதை எடுத்துக்கொள்ளலாம்.

    இந்த நடிகைகளுக்கு இதே பொழப்பா போச்சு...!

    By: ram On: 07:54
  • Share The Gag

  • பொதுவாக தெருநாய்களை தத்தெடுத்து வளர்ப்பது த்ரிஷாவுக்கு மிகவும் பிடித்த ஒன்று. இப்போது அந்த வரிசையில் சமந்தாவும் சேர்ந்திருக்கிறார்.

    சமீபத்தில் படப்பிடிப்புக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது தெருவில் ஒரு கருப்பு நிற நாய் தவித்துக் கொண்டிருப்பதை கண்டார். அதன் மீது இரக்கப்பட்டு தானே காரை விட்டு இறங்கிச் சென்று அதனை தன் வீட்டுக்கு தூக்கிச் சென்றார். அதற்கு நூரி என்று பெயரிட்டு வளர்க்க ஆரம்பித்து விட்டார்.

    "எங்கள் வீட்டுக்கு இப்போது ஒரு புதிய விருந்தினர் வந்திருக்கிறார் அவர் பெயர் நூரி. அவர் வந்ததில் இருந்து சந்தோஷமாக இருக்கிறேன். அவரும் சந்தோஷமாக இருக்கிறார். நாய்களை வாங்காதீர்கள். தத்தெடுங்கள்" என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் சமந்தா.