Monday, 8 September 2014

ஒரே வார்த்தையில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களை குஷிப்படுத்திய சோனாக்‌ஷி!

By: ram On: 22:38
  • Share The Gag
  • லிங்கா படத்தில் சூப்பர் ஸ்டாருடன் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார் சோனாக்‌ஷி சின்ஹா. தற்போது இதன் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய சோனாக்‌ஷியிடம் ரசிகர் ஒருவர் சூப்பர் ஸ்டாரை பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்று கேட்டார்.

    அதற்கு அவர் ’ஒரு வார்த்தையில் அவரது புகழை அடக்கமுடியாது இருந்தாலும் சொல்கிறேன் எளிமை, முன் உதாரணம், பணிவு இறுதியாக சூப்பர் ஸ்டார்’ என டுவிட் செய்துள்ளார்.

    விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு

    By: ram On: 21:38
  • Share The Gag
  • இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

    வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

    அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

    * சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.

    * வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

    * இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.

    * கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

    * பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது

    நானும் அஜித் ரசிகர் தான்! சொல்கிறார் ஜிப்ரான்

    By: ram On: 20:23
  • Share The Gag
  • தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலர் அஜித் ரசிகர்கள் என்று அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் இந்த லிஸ்டில் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் இணைந்துள்ளார்.

    வாகைசூடவா, அமரகாவியம் போன்ற படங்களில் தரமான பாடல்களை கொடுத்தவர் ஜிப்ரான். இவர் தற்போது கமல் நடித்து கொண்டிருக்கும் 3 படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

    நேற்று இவரின் பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். இதில் ரசிகர் ஒருவர் அஜித் படத்திற்கு எப்போது இசையமைப்பீர்கள் என்று கேட்ட போது ‘ நான் அவரின் ரசிகன், அதனால் அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்று பதில் அளித்துள்ளார்.

    மேலும் விஜய் படத்திற்கு இசையமைக்கவும் ‘ஐம் வெயிட்டிங்’ என்று தெரிவித்துள்ளார்.

    குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?

    By: ram On: 19:47
  • Share The Gag
  • தம்
    குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் உண்டு.
    உயரமானவர்களுக்கு சமூக சூழ்நிலைகளில் கூடுதல் முக்கியத்துவம் உண்டு.
    நான்கு பேர் மத்தியில் உயரமான ஒருவர் நிற்கும் போது இயல்பிலேயே உயரமானவர்
    மனதில் உயர்ந்த மனப்பான்மையும் குட்டையானவர் மனதில் தாழ்வு மனப்பான்மையும்
    ஏற்படுகிறது. மேலும் உயரமானவர்கள் தலைமைப் பண்பை எளிதில் வளர்த்துக்கொள்ள
    அவர்களின் உயரமே காரணமாக அமையும் சூழ்நிலைகளும் உண்டு.

    உயரம்
    பாரம்பரியத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. கூர்ந்து நோக்கினால் தந்தையைப்
    போன்ற உயரத்தை ஆண் பிள்ளைகளும் தாயை போன்ற உயரத்தை பெண் பிள்ளைகளும்
    அடைகிறார்கள். தந்தை உயரமாக இருக்கும் சமயத்தில் மகன்கள் அதைவிட சற்று
    உயரமாகவும் தாய் குட்டையாக இருந்தால் மகள் அதைப் போன்றே குட்டையாகவும் வளர
    வாய்ப்புண்டு. மரபணுக்களால் ஒருவரின் உயரம் தீர்மானிக்கப்பட்டாலும் நம்
    முயற்சிகளின் மூலமும் குழந்தைகளின் உயரத்தை அதிகப்படுத்தலாம்.

    உயரத்தை
    அதிகப்படுத்துவதில் சத்தான உணவு வகைகள் முக்கிய பங்காற்றுகின்றன.
    சரிவிகிதத்தில் தயாரிக்கப்படும் பானங்கள், மீன் எண்ணை, வைட்டமின் ஏ
    மற்றும் டி கொண்ட மாத்திரைகள், புரோட்டின் நிறைந்த எல்லா உணவுப் பொருட்கள்
    ஆகியவை உயரத்தை அதிகப்படுத்த வல்லவை. புரோட்டின் நிறைந்த உணவுப் பொருட்களை
    அதிகமாக உட்கொண்டதன் மூலம் ஜப்பானியர்களின் சராசரி உயரம் தற்போது
    அதிகரித்துள்ளது.

    உணவோடு உடற்பயிற்சிகளும் சேர்ந்தால் விரைந்து
    உயரத்தை அதிகரிக்கலாம். ஓடுதல், கயிறு தாண்டுதல், உட்கார்ந்து எழுதல்,
    உயரத்தில் உள்ள கம்பிகளை பிடித்து தொங்குதல், கதவில் கால்களை முன்னோக்கி
    மடக்கி கொண்டு தொங்குதல் போன்ற பயிற்சிகளை குழந்தைகளுக்கு கற்பித்தால்
    விரைவில் உயரமாக வளர்ந்து விடுவார்கள். ஆனால் அளவுக்கு அதிகமான
    உடற்பயிற்சி குழந்தைகள் உயரமாக வளர காரணமாக அமைந்தாலும் பிற்காலத்தில்
    ஏதேனும் பின் விளைவினை ஏற்படுத்திவிடும். எனவே அளவான உடற்பயிற்சி அளிப்பது
    நல்லது.

    குழந்தைகள் உயரம் குறைவாக இருப்பது போல் தோண்றினால்
    மருத்துவமனைகளுக்கு செல்லும் போது மருத்துவரிடம் கூறி வயதுக்கேற்ற சராசரி
    உயரம் தம் குழந்தைகளுக்கு உள்ளதா என்று சோதித்துக் கொள்ளலாம். சராசரி
    உயரத்திற்கு குறைவாக இருந்தால் உடனடியாக உணவு அளித்தலையும்,
    உடற்பயிற்சியையும் ஆரம்பிக்கலாம்.

    குட்டையாக இருப்பவர்கள் குறுகிய
    மனதையும், உயரமாக இருப்பவர்கள் உயர்ந்த, பரந்த மனப்பான்மையையும் உயர்ந்த
    இலட்சியங்களையும் கொண்டிருப்பதாக உளவியல் கருத்து. எனவே உயரமானவர்களாகவும்
    உயர்ந்த மனப்பான்மையும் கொண்டவர்களாக உங்கள் குழந்தைகளை உருவாக்குங்கள். 

    அஜித், ஆர்யாவுடன் இணைந்த சூர்யா!

    By: ram On: 18:58
  • Share The Gag
  • தமிழ் சினிமா நடிகர்கள் திரையுலகம் தாண்டி தங்கள் ஓய்வு நேரங்களில் வித்தியாசமாக ஏதேனும் செய்வார்கள். அந்த வகையில் அஜித், ஆர்யா போன்றோர் தற்போது சைக்கிளிங் போவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத் கூட இந்த லிஸ்டில் இணைந்தார். தற்போது வேறு ஒரு ‘மாஸ்’ ஹீரோவும் சைக்கிளிங் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

    அவர் வேறு யாரும் இல்லை நம்ம சிங்கம் சூர்யா தான், படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் அடிக்கடி ஜாலி ரைடு சென்று வருகிறார்.

    மருக்களை மறைய செய்யும் கை வைத்தியங்கள்...Warts to disappear

    By: ram On: 18:03
  • Share The Gag
  • * ஆளி விதையை அரைத்து, அதனுடன் ஆளி விதை எண்ணெய் மற்றும் சுத்தமான தேன் சிறிதளவு சேர்த்து கலக்கவும். இந்த பத்தை மருவின் மீது தடவி, அதன் மேல் பான்டேஜ் ஒட்டவும். இந்த பத்தை தினமும் புதிதாக தயாரித்து உபயோகிப்பது நல்லது. இதை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

    பூண்டு பல் ஒன்றை நசுக்கி, பாதிக்கப்பட்ட பாகத்தின் மேல் தடவுவது மற்றுமொரு மிகச்சிறந்த வைத்தியமாகும். அவ்வாறு தடவி, அதன் மேல் பான்டேஜ் ஒன்றை ஒட்டி விடுங்கள்.

    * அன்னாசிப்பழத்தை அவ்வப்போது வெட்டி, பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவி வருவது மருக்களை குணமாக்குவதற்கான சக்தி வாய்ந்த மருத்துவ முறையாகும்.

    * அத்திப்பழத் தண்டுகளில் இருந்து சாறு எடுத்து, அதனை ஒரு நாளில் பலமுறை, பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவி வருவது மருக்களைப் போக்குவதற்கான சிறந்த மருத்துவ முறைகளுள் ஒன்றாகும்.

    * கற்பூர எண்ணெய், மருக்களை போக்குவதில் தன் ஆற்றலை பலமுறை நிரூபித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதியின் மீது கற்பூர எண்ணெயை ஒரு நாளில் பலமுறை தடவி வர வேண்டும்.

    செப்டம்பர் 27ல் இந்திய திரைப்படவிழா!

    By: ram On: 08:10
  • Share The Gag
  • 14ம் வருட இந்திய திரைப்பட விழா வருகிற செப்டம்பர் 27ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.

    பல்வேறுபட்ட உலக சினிமாக்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவில்  படைப்புகளை அனுப்பி வைக்க செப்டம்பர் 2ம் தேதி முதல் துவங்கப்பட்டு கடைசி தேதியாக செப்டம்பர் 14 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசை ஆல்பம், அனிமேஷன் படங்கள் என படைப்புகளை அனுப்புவதற்கான  விண்ணப்பங்களை http://miniboxoffice.com/indiancinefilmfestival/ என்ற இணையத்தளத்தில் பெறலாம்.

    விழா குறித்த கூடுதல் தகவல்கள் மேற்கண்ட இணையதளத்தில் விரிவாக உள்ளன.

    தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறிக்கை..!

    By: ram On: 06:41
  • Share The Gag


  • தேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன

    இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.

    தேள் கடித்தால் ஆயுள் முழுவதும் இதயத்தில் அடைப்பு, இதயம் செயலிழப்பால் இறப்பு நேரிடும் வாய்ப்பை தடுக்கிறது. இதை இங்கிலாந்தை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அது மேலும் கூறியதாவது: இதயத்தின் ரத்த தமனிகளில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா என்ற பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை உள்ளவர்களின் இதய ரத்த தமனிகளில் ரத்த செல்கள் புதிதாக வளரும். தமனியில் ரத்த ஓட்டத்தை அவை தடுக்கும். அதனால், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.

    உயிருக்கு ஆபத்தான இந்த பிரச்னையை சரி செய்ய, இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பிரச்னையே வாழ்நாளில் ஏற்படாமல் இருக்க தேள் உதவுகிறது. தேள் கொட்டும்போது அதன் கொடுக்கில் இருந்து விஷம் வெளியாகிறது. அந்த விஷத்தில் மார்கடாக்சின் என்ற பொருள் இருக்கிறது. அது இதயத் தமனியில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா உருவாவதை தடுக்கிறது. அதன்மூலம், புதிய செல்கள் உருவாவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு, செயலிழப்பு தவிர்க்கப்படும்.
    இதயத் தமனிகளில் புதிய செல்கள் உருவாவதை மார்கடாக்சினில் உள்ள கேவி 1.3 என்ற பொட்டாசியம் தடுத்து விடும். இது தொடர்பான ஆராய்ச்சியில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்க பார்க் என்ற தேளின் விஷத்தில் மார்கடாக்சின் அதிகம் உள்ளது. தேள் கொட்டுவதால் மனித உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதிலும் துடிக்கச் செய்யும் வலி, வீக்கம் ஆகியவற்றுக்கு உடனடி சிகிச்சை தேவை.
    ஒரு முறை தேள் கொட்டு வாங்கியவர்கள் ஆயுள் முழுக்க இதய பைபாஸ் பிரச்னையில் இருந்து தப்ப முடியும் என்கிறது ஆராய்ச்சி முடிவு. இது பற்றி பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் இயக்குனர், ஆராய்ச்சி பேராசிரியர் பீட்டர் வீஸ்பெர்க் கூறுகையில், தேளின் விஷத்தில் உள்ள மார்கடாக்சினை முறையாக பயன்படுத்தினால், ஆபத் தான இதய நோய்க்கு மருத்துவ பயனை பெறலாம் என்பது உறுதி என்றார்.

    தேள் கடிக்கு முதலுதவி

    கொடிய வகை தேள்கள் கடித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே தேள் கடிக்கான முதலுதவி சிகிச்சை முறைகளை அனைவரும் அறிந்துகொள்வது நல்லது.

    தேள் கடித்தவுடன் அதன் கடிவாய்க்கு சுமார் 15 செ.மீ. மேல் பகுதியில் கயிறு அல்லது துணியால் இறுக்கி கட்டவேண்டும். இதன் மூலம் தேளின் விஷம் உடலில் பரவுவதை தடுக்க முடியும்.

    இதன் பின்னர் தேள் கடித்த இடத்தில் சுமார் அரை மணி
    நேரம் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அந்த துணியால் கடிவாய் பகுதியில் கட்டும் போடலாம். இதன் மூலம் தேள் கடித்த வலி ஓரளவு குறையும்.

    கடித்த இடத்தில் தேளின் கொடுக்கு பதிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். தேள் கடித்த பகுதியை உதறவோ, மேல் நோக்கி தூக்கவோ கூடாது. கீழ்நோக்கி தொங்கபோடலாம்.

    முதலுதவி செய்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு
    கொண்டு சென்று முறையான மருத்துவச் சிகிச்சை பெறுவது அவசியம்.
    தேள் விஷம் - சிறந்த வலி நிவாரணி
    தேளின் விஷம் மிகக் கொடியதாக இருக்கலாம். ஆனால் அதை சிறந்த வலி நிவாரணியாக பயன்படுத்தலாம் என கூறுகிறார் இஸ்ரேல் ஆய்வாளர் மைக்கேல் குர்விட்ஸ்.

    இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக தாவர அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் குர்விட்ஸ் கூறுகையில், தேளின் விஷத்திலிருந்து சிறந்த வலி நிவாரணியை உருவாக்கக் கூடிய
    சாத்தியங்கள் உள்ளன. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்.
    எந்தவித பக்க விளைவையும் தேளின் விஷத்திலிருந்து உருவாக்கப்படும் வலி நிவாரணி ஏற்படுத்தாது. தேளின் விஷத்தில் உள்ள பெப்டைட் டாக்சின்கள், நமது நரம்பு மண்டலம் மற்றும் சதைப் பகுதிகளில் ஊடுறுவி வலியை முற்றிலுமாக அகற்ற உதவும்.

    பாலூட்டிகளின் உடல்களில் ஒன்பது வகையான சோடியம் வழிகள் (sodium channels ) காணப்படுகிறது. இவற்றில் சிலதான், வலியை உருவாக்கி அதை மூளைக்கு தெரிவிக்கிறது.

    இந்த சோடியம் சேனல்களில் பெப்டைட் டாக்சின்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை ஆய்ந்து வருகிறோம். இதை சரி செய்து விட்டால் நிச்சயம் இந்த வலி நிவாரணியை வெற்றிகரமாக உருவாக்க முடியும்.மேலும் வலி உருவாகும் இடத்தையும் துல்லியமாக கண்டறிந்து அந்த இடத்தில் மட்டும் மருந்து வேலை பார்க்கும் வகையில் செய்ய முடியும். இதன் மூலம் பல்வேறு பக்க விளைவுகளை நாம் தவிர்க்க முடியும் என்றார் குர்விட்ஸ். இஸ்ரேலில் உள்ள மஞ்சள் நிற தேளில்தான் தற்போது குர்விட்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. உலகிலேயே மிகவும் அபாயகரமான நச்சைக் கொண்டது இந்த தேள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேளின் விஷத்தில் 300க்கும் மேற்பட்ட பெப்டைடுகள் உள்ளனவாம்.

    பழையசோறு... பச்சை மிளகாய்... சர்க்கரைநோயை அதிகப்படுத்துமா

    By: ram On: 01:33
  • Share The Gag
  • மதுரை: 'பழைய சோறு...தொட்டுக் கொள்ள வெங்காயம், பச்சைமிளகாய் மட்டும் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் அதிகரிக்கலாம்,' என்கின்றனர், மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள்.அரசு மருத்துவமனையில் தினமும் பத்தாயிரம் புறநோயாளிகள், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வருகின்றனர். ஆயிரம் நோயாளிகள் வந்து செல்லும் ஒரே துறை, சர்க்கரை நோய்ப் பிரிவு. தினமும் 200 நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி போடப்படுகிறது. புதுநோயாளிகள் 60 பேர் தினமும் கண்டுபிடிக்கப்படுகின்றனர்.

    இதுகுறித்து, சர்க்கரை நோய் நிபுணர்கள் கூறியதாவது:குழந்தைகளைத் தாக்கும் 'டைப் 1' வகை சர்க்கரையானது உலகம் முழுவதும் ஒரே அளவாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் 1000 குழந்தைகளுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், மற்றவர்களைத் தாக்கும் 'டைப் 2' சர்க்கரை நோய் பொதுவாக உள்ளது.ஐந்தாண்டுகளாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் பாதிக்கப்படுகின்றனர். சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின், ரத்தத்தில் சர்க்கரை அளவு 200, 250 என்ற நிலையில் தான் இருந்தது. தற்போது 40 வயதினர் கூட, அதிகபட்சமாக 500, 600 அளவுடன் வருவது அதிர்ச்சியாக உள்ளது. நோயாளிகளின் உணவுப் பழக்கங்களை ஆய்வுசெய்தபோது, சர்க்கரை அதிகரிப்பதற்கான காரணம் புரிந்தது.கிராமங்களில் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    கடுமையான உடல்உழைப்புள்ளவர்கள், விவசாயிகளாக உள்ளனர். தண்ணீர் ஊற்றிய பழைய சோறு, தொட்டுக்கொள்ள வெங்காயம், பச்சைமிளகாய் மட்டுமே சாப்பிடுகின்றனர். பருப்பு, பயறு வகைகள், முட்டைகளை சாப்பிடுவதில்லை. இவர்களைப் பொறுத்தவரை புரதம் என்றால், என்றோ ஒருநாள் சாப்பிடும் அசைவத்தை மட்டும் நினைக்கின்றனர். இந்த உழைப்புக்கு தினமும் பயறு, பருப்புகளை உணவில் சேர்த்தால் தான் உடலில் புரதம் சேரும்.இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. சாதம் மட்டும் சாப்பிடாமல் கோதுமை, பயறு, பருப்பு, முட்டை மற்றும் சரிவிகித உணவை சாப்பிட வேண்டும், என்றனர்.