Friday, 8 August 2014

குதிகால் வெடிப்புக்கு தீர்வு..! அருமை.. எளிமை..!

By: ram On: 17:55
  • Share The Gag

  • கால்களில் பெரும்பாலும் வரும் பிரச்சனை குதிகால் வெடிப்பு. அந்த குதிகால் வெடிப்பு வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு அதிகம் வரும். மேலும் இந்த வெடிப்பு அதிகம் நடப்பவர்களுக்கும், எடை அதிகம் உள்ளவர்களுக்கும் வரும். அப்படி வரும் போது நாம் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அதனை சரிசெய்ய முடியும்.

    குதிகால் வெடிப்பைப் போக்க.

    1. படுப்பதற்கு முன் சற்று வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது எலுமிச்சைப்பழச் சாற்றை விட்டு 56 நிமிடங்கள் பாதங்களை அதில் ஊற விட்டு, பின் எண்ணெய்யை பூசி படுக்க வேண்டும்.

    2. வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது கெமிக்கல் அதிகம் இல்லாத ஷாம்புவை ஊற்றி, அதில் பாதங்களை சிறிது நேரம் ஊற வைக்கவும். பின் மெருகேற்ற உதவும் ஒரு வகை மாக்கல்லை வைத்து தேய்த்தால், குதிகாலில் இருக்கும் அழுக்குகள் நீங்கி அழகோடும், மென்மையோடும் காணப்படும். மறக்காமல் எண்ணெய்யை பூச வேண்டும்.

    3. தேனும் பாதங்களை அழகாக்க உதவும் ஒரு வகையான சிறந்த மருந்தாகும். மிதமான சூடு உள்ள தண்ணீரில் சிறிது தேன் மற்றும் எலுமிச்சைப்பழச் சாற்றை விட்டு அதில் 8 10 நிமிடங்கள் பாதங்களை ஊற விடவும். பின் பாதங்களை கழுவி, காய்ந்ததும், சிறிது ஆலிவ் எண்ணெய்யைத் தடவ வேண்டும். இதனால் வெடிப்புகள் குறைந்து அழகாகக் காணப்படும்.

    4. பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து பாதங்களை ஊற வைத்து கழுவினால், பாதங்களில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்கி பாதங்களுக்கு மென்மையையும், அழகையும் தரும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்தால் பாதங்கள் பொலிவோடு காணப்படும்.

    5. வறண்ட சருமம் உள்ளவர்களுக்கே பொதுவாக குதிகால் வெடிப்பு வரும். அவர்கள் தினமும் குளிப்பதற்கு முன் மெருகேற்ற உதவும் ஒரு வகை மாக்கல்லை வைத்து தேய்த்து பின் குளிக்க வேண்டும். குளித்தப் பின்னும், படுப்பதற்கு முன்னும் எண்ணெய்யை பூச வேண்டும்.

    செய்யக்கூடியவை.. செய்யக்கூடாதவை..

    1. சருமம் வறண்டு இருக்கிறது என்று பாதங்களில் ரேஸரை பயன்படுத்தக் கூடாது. இதனால் ஏதாவது நோய் அல்லது ரத்தம் வடிதல் போன்றவை வரக்கூடும்.

    2. எப்போதும் காலனியை அணிந்து இருக்க வேண்டும். தினமும் பாதங்களை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் குதிகால் வெடிப்பு இல்லாமல், பாதங்கள் பொன் போல் மிளிரும்.

    தல கொடுத்த ஷாக் - அஸ்வின் மற்றும் ஜீரோ யூனிட் திகைப்பு..!

    By: ram On: 17:30
  • Share The Gag

  • மங்காத்தா படத்தில் 4 பேரில் ஒருவராக அதுவும் போலீஸ் வேடத்தில் வந்தவர் அஸ்வின்.அதற்கு பிறகு இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

    தற்போது ஜீரோ என்ற படத்தை தான் சினிமா வாழ்வில் முக்கிய படமாக எதிர்பார்த்து நடித்து கொண்டு இருக்கிறார்.

    சரி விஷயம் என்னவென்றால் தல - கௌதம் ஷூட்டிங் நடைபெறும் பக்கத்தில் தான் இவர்களின் ஜீரோ படம் ஷூட்டிங்கும் நடைபெறுகிறது.

    அஸ்வின் தன்னுடைய யூனிட் ஆட்களை கூட்டி கொண்டு தல படப்பிடிப்புக்கு தல மற்றும் கௌதம் மேனனை பார்க்க சென்று உள்ளார்.இதை பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். "வெகுநாள் கழித்து கௌதம் மற்றும் தலயை பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய ஜீரோ படத்தின் ஷூட்டிங் பக்கத்தில் தான் தல படம் ஷூட்டிங்கும் போய் கொண்டு இருந்தது. தல பட யுனிட் ஒரு குடும்பம் போல் பணியாற்றுகின்றனர், அது மட்டுமில்லாமல் படத்தின் ஷூட்டிங் பார்க்கும் போது கண்டிப்பாக இந்த படம் பெரிய வெற்றி அடையும் என்று தோன்றியது.

    என்னுடைய படத்தின் யுனிட் ஆட்கள் தலயை பார்த்தவுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்து நின்றனர், ஒருத்தருக்கு முகம் முழுவதும் ஒரே சந்தோசம், மற்றவர் தலயின் அனுசரிப்பை பார்த்து வாயை திறந்து பேசவே இல்லை இதெல்லாம் பார்த்த எனக்கு மக்களிடம் “தல”க்கு இருக்கும் அன்பை பார்க்கும் போது வியப்பாக மற்றும் சந்தோஷமகவும் இருந்தது" என்று குறிப்பிட்டு உள்ளார்.

    பைரவி முத்திரை - இதனால் என்ன பயன் வரும்...!

    By: ram On: 09:03
  • Share The Gag

  • பைரவ தந்திரம் என்பது சிவன் தனது துணைவியான பார்வதியை, இடது தொடையில் அமர்த்திக் கொண்டு உபதேசித்த கல்வி முறை.

    பயன்கள் :

    கல்விக்கு பயன் அளிக்கவும், உடல் ஆரோக்கியம் தரவும் இம்முத்திரை பயன்படுகிறது. ஸ்வாதிஷ்டான சக்கரத்தை தூண்ட வல்லது இது. நீரிழிவு நோயால் ஏற்படும் அதிக பசி, தாகம் போன்றவை குறையவும், சிறுகுடல், பெருங்குடல், கணையம், சிறுநீரகம் நன்கு செயல்படவும் இம்முத்திரை பயன்படுகிறது.

    செய்முறை :

    விரிப்பில் அமர்ந்து இடது கையை வலது கையின் மேல் வைப்பது சக்தி அம்சமாகவும். இது பைரவி முத்திரை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த முத்திரையை படத்தில் உள்ளபடி அடிவயிற்று பகுதிக்கு இணையாக கைகளை வைத்து செய்ய வேண்டும். தினமும் 20 நிமிடம் தொடர்ந்து செய்து வரலாம்.

    விஜய் அரசியலுக்கு வந்தால் தான் தமிழகத்திற்கு விடிவுகாலம்! சீமான் அதிரடி!

    By: ram On: 08:21
  • Share The Gag

  • ஒருவர் சினிமாவில் நடித்து நல்ல இடத்திற்கு வந்தவுடன் அடுத்த இலக்கு அரசியல் தான். அந்த வகையில் விஜய் நடித்த எல்லா படங்களும் பாக்ஸ் ஆபிஸில் கலக்க, அவரின் ரசிகர் பட்டாளம் அதிகரித்தது.

    இதனால் இவருக்கு லேசாக அரசியல் ஆசை வர ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றினார். தற்போது இயக்குனர் மற்றும் நான் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்.

    இதில் ‘ஏன் அவரை அரசியலுக்கு வரவேண்டாம் என்று தடுக்கிறீர்கள், என் தம்பி(விஜய்) தமிழ் மண்ணின் மீது அளவுக்கடந்த மதிப்பு வைத்துள்ளார், அதனால் தான் அவர் தமிழர் பிரச்சனைகளில் முதல் ஆளாய் கலந்துக்கொள்கிறார். தம்பி அரசியலில் காலடி எடுத்து வைக்கவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

    தொப்பையை குறைக்கும் நின்றநிலை சைக்கிள் பயிற்சி...!

    By: ram On: 08:04
  • Share The Gag

  • இன்றைய தலைமுறையினரை பெரிதும் அவதிப்பட வைப்பது தொப்பை. இவர்களுக்கு இந்த தொப்பையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் வேலைப்பளுவின் காரணமாக ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை.

    இவர்கள் வீட்டில் இருந்தபடியே இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து 3 மாதங்கள் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

    இந்த பயிற்சி செய்ய விரிப்பில் நேராக நிற்கவும். கைகளை தலையின் பின்புறம் கொண்டு சென்று கைகளை இணைத்து கொள்ளவும். பின்னர் வலது காலை முட்டி வரை மடக்கி மேலே தூக்கவும். இப்போது இடது கை முட்டியால் வலது கால் முட்டியை தொட(படத்தில் உள்ளபடி) வேண்டும்.

    அடுத்து இடது கால் முட்டியை மேலே தூக்கி வலது கை முட்டியால் தொட வேண்டும். இவ்வாறு ஆரம்பத்தில் 20 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சி செய்யும் போது முதுகை வளைக்க கூடாது. பின்னர் நன்கு பழகிய பின்னர் 30 முதல் 40 முறை எண்ணிக்கையின் அளவை அதிகரிக்கலாம்.