Tuesday, 30 September 2014

உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு என்ன நோய் என்று தெரிந்துகொள்ளலாம்!

By: ram On: 22:39
  • Share The Gag
  •  கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?
    சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
    டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

    கண் இமைகளில் வலி.. என்ன வியாதி?
    அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
    டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி?
    அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
    டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..

    கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி?
    நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
    டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

    தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி?
    இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.
    டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

    முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி?
    உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
    டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

    தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி?
    கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
    டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

    பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி?
    சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
    டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

    பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி?
    நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
    டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

    பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி?
    தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.
    டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

    சிவந்த உள்ளங்கை என்ன வியாதி?
    கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
    டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

    வெளுத்த நகங்கள் என்ன வியாதி?
    இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
    ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.
    டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

    விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி?
    ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.
    டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

    நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி?
    சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
    டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

    வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி?
    பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
    டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

    சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி?
    வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
    டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

    வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி?
    உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
    டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.

    நகைச்சுவை நடிகரை வெயிலில் போட்டு வறுத்தெடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்

    By: ram On: 22:20
  • Share The Gag
  • பெண் இயக்குனர்கள் என்றால் என்ன மாதிரி படம் எடுப்பார்கள்? அதற்கெல்லாம் இங்கே ஒரு ரெகுலர் டெப்ம்ளெட் இருக்கிறது. ‘பெட்டைக் கோழி எட்டி கொத்தாது’ என்றொரு பழமொழியை நினைவு படுத்துவதை போல, தனக்கு எது சுலபமோ அது போன்ற கதைகளாக தேர்ந்தெடுத்து அதற்குள்ளேயே படம் எடுத்துவிடுவார்கள். தேவதாசி கதைகள், அல்லது பாவப்பட்ட ஏதோவொரு காதல் ஜோடியின் கதை, அல்லது எந்த விதத்திலும் சேர்த்தி இல்லாத கதைகள் என்று போவார்களே ஒழிய ஆணுக்கு பெண் இளைப்பில்லை என்று சொல்வதை போல படம் எடுக்கவே மாட்டார்கள். தமிழ்சினிமாவில் கடந்த கால வரலாறு இதுதான். பானுமதி போன்ற பழங்காலத்தவர்களை விட்டுவிடுங்கள். நாம் சொல்ல வருவது அண்மைக்கால அவஸ்தைகள் பற்றி!

    ஆனால் இவர்களில் சற்று வேறு மாதிரியான பெண்மணியாக இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இவரது முதல் படமான ‘ஆரோகணம்’ என்ற தலைப்பே நாலு மாசம் உட்கார வச்சு ட்யூஷன் எடுத்தாலும் புரியாத ரகம். எப்படியோ? அந்த படத்தையும் வெற்றிகரமாக எடுத்து வெற்றிகரமாக கலெக்ஷன் காட்டினார். இதற்கு காரணம் அவரது துணிச்சலும், நம்பிக்கையும், குறும்படங்களை இயக்கிய முன் அனுபவமும்தான்!

    தற்போது ‘நெருங்கி வா முத்தமிடாதே’ என்ற படத்தை இயக்கி வருகிறார் லட்சுமி. படத்தின் தயாரிப்பாளர் அனுப், மெடிமிக்ஸ் சோப் கம்பெனி அதிபர். போதாதா? பணத்தை கரைத்தாலும் பரவாயில்லை. தொழிலில் சுத்தம் வேண்டும் என்று கூறிவிட்டாராம். அன் லிமிடெட் பட்ஜெட் என்ற அபரிமித சுதந்திரத்தோடு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் அவர். படத்தில் தம்பி ராமய்யாவுக்கும் முக்கிய ரோல்.

    ஆறு நாள் கொடுங்க சார் போதும். நீங்க ஸ்பாட்டுக்கு வந்துருங்க. உங்களுக்கு சவுரியப்படும்போது ஷாட்டுக்கு வந்தா போதும் என்றெல்லாம் ஏராளமான சலுகை காட்டிதான் அழைத்துப் போனாராம் லட்சுமி. போனால்… ஷுட்டிங் ஸ்பாட்? கொழுத்த வெயில் ரோடு. அதுவும் கொந்தளிக்கும் மே மாசம். லாரியில் டிரைவருக்கு அருகில் அமர்ந்து பயணிப்பதை போல காட்சிகள் எடுக்கப்பப்பட, அடுப்புல போட்ட முட்டை மாதிரி ஆகிவிட்டார் தம்பிராம‘ஐயோ’

    பொதுவா இந்த மாதிரி கான்சப்ட் படங்களை ஆண்கள்தான் எடுப்பாங்க. ஆனால் ஆண்களுக்கு நிகரா இந்த படத்தை எடுத்திருக்கிறாங்க லட்சுமி மேடம் என்று பாராட்டு தெரிவித்தார் தம்பிராமய்யா. படத்தின் கதை? ஏதோவொரு முக்கியமான தேசிய குற்றத்தை கையில் எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

    இந்த படத்தின் ரிலீசிற்கப்புறம், தமிழ்சினிமாவின் முதல் பெண் ஆக்ஷன் டைரக்டர் என்று அவர் கொண்டாடப்பட்டாலும் ஆச்சர்யமில்லை!

    முடவாட்டுக்கால் என்ற காய கல்ப மூலிகை..!

    By: ram On: 22:03
  • Share The Gag

  • இந்த முடவாட்டுக்கால் மூலிகையை குறுக்கில் கால் இஞ்சு அளவிற்கு சிறு துண்டு வெட்டி தோலை சீவி நசுக்கி சிதைத்து தக்காளி சேர்க்காமல் , மிளகு ,சீரகம் மற்றும் ஆட்டுக்கால் சூப்பிற்கு சேர்க்கும் பொருட்களை சேர்த்து சூப்பாக வைத்துக் குடிக்க முழங்கால் வலி , கீழ் முதுகு வலி, கை மூட்டு வலி,கழுத்து வலிகள் இவைகள் தீரும். தினமும் இந்த சூப்பை பருகி வர உடலில் உள்ள எல்லா தொல்லைகளும் படிப்படியாகத் தீரும்.

    இது ஒரு காளான் வகையைச் சேர்ந்தது .எனவே இதற்கு இலைகள் கிடையாது . இது கொல்லி மலையிலும் , கஞ்ச மலையிலும் , சதுரகிரி மலையில் சில இடங்களிலும் கிடைக்கிறது . இதை மேற்குறிப்பிட்ட காலாங்கி நாதர் கொல்லி மலை ரகசியம் மரணம் மாற்றும் மூலிகைகள் நூலில் குறிப்பிட்ட முறையில் பூரச்செந்தூரம் செய்து 48 நாட்கள் சாப்பிட தேகம் மரணத்தால் அழியாது காயம் சித்தியாகும்

    சிவாஜி படத்தில் அசோக் செல்வன்

    By: ram On: 21:07
  • Share The Gag
  • நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் 1971ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற படம் ‘சவாலே சமாளி’.

    தற்போது இந்தப் படத்தின் தலைப்பை இயக்குநர் சத்யசிவா இயக்கும் புதிய படத்திற்கு வைத்துள்ளனர். இவர் ஏற்கெனவே கிருஷ்ணா நடிப்பில் ’கழுகு’ படத்தை இயக்கியவர். ஈழப் பிரச்னையை மையமாக வைத்து சத்யசிவா இயக்கிய 'சிவப்பு' படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

    சத்யசிவா இயக்க உள்ள  புதிய படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிந்து மாதவி ஒப்பந்தமாகியுள்ளார்.

    இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். ஜூன் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. ஒரு பாடல் காட்சிக்காக ஸ்விட்சர்லாந்து செல்லவிருக்கிறார்கள்

    மக்களை பிரமிப்பில் ஆழ்த்திய தலைகீழ் வானவில்

    By: ram On: 20:54
  • Share The Gag
  • வான் பகுதியில் மனதை மயக்கும் வானவில் ஏற்படுவது உண்டு. இந்த வானவில் வழக்கமாக வளைந்து காணப்படும். இதில் காணப்படும் பல வண்ண நிறங்கள் நீல வானத்திற்கு அழகு சேர்க்கும்.
    ஆனால் பிரிட்டன் வெலஸ் ஷயர் வான்பகுதியில் ஏற்பட்ட வானவில் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. இந்த வானவில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது.

    மேகக் கூட்டப்பகுதியில் காணப்படும் சிறு பனிவடிவங்களின் தாக்கத்தால் இந்த தலைகீழ் அதிசய வானவில் ஏற்பட்டு உள்ளது.
    மேகத்தில் இருந்து மழைத்துளிகள் பூமியை நோக்கி வரும் போது வழக்கமாக வானவில் ஏற்படும். ஆனால் மழை ஏதும் இல்லாமல் சூரியன் “பளிச்” என சிரித்துக் கொண்டு இருக்கும் தருணத்தில் இந்த விசேடமான தலைகீழ் வானவில் தோன்றி மக்களை பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளது.

    இந்த தலைகீழ் வானவில் சில நிமிடங்களில் மறைந்து விட்டது. இதனை பார்த்தவர்கள் தங்கள் கைத்தொலைபேசி கமெராக்களில் படம் பிடித்தனர்.
    மேகத்தில் பனி துகள்கள் வலது பகுதியில் அணிவகுத்து இருந்ததால் இதுபோன்ற வானவில் தோன்றி உள்ளது என ஆய்வு மைய நிபுணர்கன் தெரிவித்தனர்.

    காஜல் அகர்வால் நிர்வாணமாக நடித்த காட்சிக்கு எதிர்ப்பு!

    By: ram On: 20:05
  • Share The Gag
  • தென்னிந்திய சினிமாவில் அனைத்து முன்னணி நடிகருடன் ஜோடி சேர்ந்துவிட்டார் காஜல் அகர்வால். ஹிந்தியிலும் அஜய் தேவ்கன் மற்றும் அக்‌ஷய் குமார் போன்ற பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார்.

    தற்போது இவரது நடிப்பில் தெலுங்கில் வெளிவரவிருக்கும் படம் ‘கோவிந்துடு அந்தரிவாடேலே’. இப்படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    தனிக்கை குழுவிற்கு சென்றுள்ள இப்படத்தில், காஜல் நடித்துள்ள படுகவர்ச்சி காட்சிகளை நீக்கினால்தான் சான்றிதழ் தரப்படும் என்று அதிகாரிகள் கண்டிப்புடன் கூறினர். அதற்கு இயக்குனர் சம்மதம் தெரிவித்தார். குறிப்பிட்ட காட்சிகளை தணிக்கை அதிகாரிகள் வெட்டி தள்ளினர். பின்னர் வெட்டப்பட்ட காட்சிகள் விவரம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

    இதில் காஜல் :முதுகு காட்டிக்கொண்டு நிர்வாணமாக காஜல் நிற்பதுபோன்ற காட்சி, அவரது ஜாக்கெட் பட்டனை ராம் சரண் அவிழ்ப்பதுபோன்ற காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    மூலிகைகளும், தீரும் நோய்களும்...!

    By: ram On: 19:42
  • Share The Gag


  • நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே!

    அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்

    ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்

    ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு

    தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு

    நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்

    நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்

    முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்

    வல்லாரை : ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை, மலச்சிக்கல்

    அஸ்வகந்தி : கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்

    வில்வம் : பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்

    நெல்லிக்காய் : பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்

    நாவல் கொட்டை : சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்

    சுக்கு : வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்

    திப்பிலி : சளி, காசம், பீனிசம், வாயு

    அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்

    சித்தரத்தை : இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு

    ஜாதிக்காய் : விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்

    வெந்தயம் : பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்

    வசம்பு : வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்

    ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்

    செம்பரத்தம்பூ : தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்

    ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்

    முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)

    திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்

    திரி கடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்

    வசம்பு : வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்

    கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்

    கண்டங்கத்திரி : சளி, இருமல், ஆஸ்துமா, ஈசிலோபீலியா, பீனிசம்

    கருந்துளசி : இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்

    கறிவேப்பிலை : பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்

    காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்

    கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்

    ஐ படத்தை கண்டு நடுங்கும் மலையாள சினிமா!

    By: ram On: 19:04
  • Share The Gag
  • இந்த வருட தீபாவளிக்கு அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த ஐ படம் ரிலிஸாக இருக்கிறது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் வெளிவரும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    மேலும் மலையாளத்தில் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் அங்கு ஐ படத்திற்கு செம்ம டிமாண்ட். இப்படத்திற்காக பல மலையாள படங்கள் பின் வாங்கவுள்ளது.

    அதிலும் மம்மூட்டி நடித்த வர்ஷம் என்ற படமே தள்ளி போவதாக கூறப்படுகிறது. மம்மூட்டி மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சர்க்கரையைக் கட்டுப்படுத்தும், இளமைப் பொலிவுடன் வாழ உதவும் கறிவேப்பிலை...

    By: ram On: 18:01
  • Share The Gag
  • கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும். இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது. தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கும்.

    மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது. கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும். பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும்.

    கறிவேப்பிலைச் சாறு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது. கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.

    இறுதி வரை கலந்து கொள்ளாத முன்னணி நடிகர்கள்?

    By: ram On: 17:49
  • Share The Gag
  • சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர். இதில் தற்போது வரை விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்தி, இயக்குனர் பாலா,விமல் போன்றோர் கலந்து கொண்டனர்.

    ஆனால் அனைவரும் எதிர்பார்த்த கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் ரஜினி, கமல், விஜய், அஜித்,சிம்பு, தனுஷ் போன்றோர் இறுதி வரை கலந்துகொள்ள வில்லை.

    இதில் ரஜினி, அஜித், விஜய் படப்பிடிப்பிற்காக வெளியூரில் உள்ளனர். கமல் இன்று சென்னையில் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

    மொழி தெரியவில்லை என்றாலும் அஜித் ரசிகர் தான்?

    By: ram On: 13:33
  • Share The Gag

  • தான் பேசுவதை கணவர் அப்படியே கேட்டால் பெண்கள் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள்.
    * ஏதாவது பொருள் வாங்கிக்கேட்டால் குறைந்த பட்சம் பார்க்கலாம்ன்னாவது சொன்னா மகிழ்வார்களாம்.
    * சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம். ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்குமாம்.
    மறுநாள் செலவுக்கு கணவர் பணம் கேட்கும்போது முதல்நாள் கொடுத்த பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு கொடுத்தால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகுமாம். கணக்கு கேட்கும் போது கணவர் அடக்க ஒடுக்கமாக பதில் சொல்வது மனைவிக்கு அதிகம் பிடிக்குமாம்.
    * கணவர் அலுவலகம் முடிந்து திரும்பும்போது சிரித்து வரவேற்க பெண்கள் ரெடிதானாம். ஆனால் பதிலுக்கு கணவரும் பிரஷ்ஷாக சிரித்து ஜோக் அடிக்கணுமாம்.
    * ஆண்கள் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விதவிதமாய் தங்களை அலங்கரித்து சூப்பராக டிரஸ் பண்ணிக்கிறாங்களாம். அதை மனைவியைவிட மற்ற பெண்கள்தான் அதிகம் ரசிக்கிறார்களாம். அதனால் வீட்டில் இருக்கும்போதும் அப்படி எல்லாம் டிரஸ் செய்து மனைவி ரசிக்கும்படி நடந்துகொண்டால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு போயிடுவாங்களாம்.
    * மனைவி தான் கட்டியிருக்கும் புதுப்புடவை நன்றாக இருக்கிறதா என்றுகேட்டால், `உனக்கு எதைக்கட்டினாலும் நல்லாத்தானே இருக்கிறது’ என்று ஐஸ் வைத்தால் பெண்களுக்கு அதிகம் பிடிக்காதாம்.
    `நேற்று கட்டிய அந்த புடவையை விட இந்த புடவைதான் ரொம்ப எடுப்பா இருக்குது. அப்படியே தூக்கி உன்னை…’ இப்படி ஏதாவது சூடாக சொல்லி வைக்க வேண்டுமாம்.
    * அவருக்கு ஒரு பேண்ட் எடுக்கணும், துணி எடுக்கணும்னாகூட இவங்களையும் சேர்த்து கூட்டிட்டு போகணுமாம்.
    * கணவரோடு புடவைகடைக்குச் சென்று சும்மாவாவது அவரை காத்திருக்க வைத்துவிட்டு எட்டு மணிநேரம் கழித்து வெளியே வந்து, `எந்த புடவையும் எனக்கு பிடிக்கலைங்கன்னு’ சொல்லிட்டு, முகத்தை அப்பாவித்தனமாய் வைத்துக்கொண்டு `பக்கத்து கடைக்கு போகலாமாங்க?’ என்று கேட்கும்போது கணவர் மறுக்காமல் சரி என்று சொன்னால் மகிழ்ச்சியில் மனைவியின் உச்சி குளிர்ந்து போகுமாம்.
    * கடையில் ஆயிரக்கணக்கான புடவைகள் இருந்தாலும் அதை எல்லாம் பார்க்காமல், அருகில் நிற்கும் பெண் செலக்ட் செய்து வைத்திருக்கும் புடவையை பார்த்துவிட்டு, `நான் நான்கு நாளா இந்த மாதிரி புடவையைத்தான் தேடிட்டு இருக்கேன்.
    நீங்க இதை எடுத்துட்டீங்களான்னு’ அந்தப் பெண்ணைப் பார்த்து ஏக்கமாக கேட்பாங்களாம். அருகில் நிற்கும் கணவருக்கு அந்த நேரம் கொஞ்சங்கூட கோபமே வரக்கூடாதாம்.
    * வாரத்திற்கு ஒருமுறையாவது புத்திசாலித்தனமாய் வீட்டு வேலையை கணவரின் தலையில் கட்டுவார்களாம். குறைந்த பட்சம், `ஏங்க மழை வர்றது மாதிரி இருக்குது காயப்போட்ட துணியை எடுத்திட்டு வாங்க..’ என்றால், ஆமாமா மழை சீக்கிரம் வந்துடும்னு சொல்லிவிட்டு ஓடிப்போய் துணிகளை பொறுக்கிட்டு வந்தால் மனைவியின் மகிழ்ச்சி இமயமலை உயரத்திற்கு ஏறிடுமாம்.
    மாறாக, `இன்றைக்கு 110 டிகிரி வெயில் அடிக்குது… மழையாவது மண்ணாங்கட்டியாவது’ என்று உண்மையை சொன்னால் பிடிக்கவே பிடிக்காதாம்.
    * சமையல் எப்படி இருந்தாலும் `நல்லாயிருக்குன்னு’ சொன்னால் மகிழ்வார்களாம். நன்றாக சமைக்கத் தெரிந்தால்கூட சும்மா ஒரு பேச்சுக்கு `என் அம்மா என்னை சமையல் அறை பக்கம் எட்டிப்பார்க்கவே விடவில்லை’ என்று தோழிகளிடம் பந்தாவாக சொல்லி மகிழ்வார்களாம்.
    அதற்கும் கணவர் தலையாட்டணுமாம்.
    * கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு நகரத்து மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி. * கிராமத்து பையனை பிடிக்குமாம். ஆனால் கிராமத்தில் அவனோடு நிரந்தரமாய் வசிக்க பிடிக்காதாம்.

    பிரபல தொலைக்காட்சியை எதிர்த்த சூர்யா ரசிகர்கள்!

    By: ram On: 13:20
  • Share The Gag
  • அஜித்-விஜய் என போட்டிகள் இல்லாமல் தனி ட்ராக்கில் வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் அஞ்சான்.

    இப்படம் எதிர்பார்த்தது போல் வெற்றியடையாததால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். இப்படம் வெளிவந்து 50 நாள் கூட ஆகாத நிலையில் விஜயதசமியை முன்னிட்டு முன்னணி தொலைக்காட்சி ஒன்று இப்படத்தை ஒளிப்பரப்ப இருக்கிறது.

    இதை கண்ட பல சூர்யா ரசிகர்கள் அந்த தொலைக்காட்சியை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம் எப்படி ?

    By: ram On: 13:10
  • Share The Gag


  • உடல் பருமன் : நமது நாட்டில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள தலையாய பிரச்சனை உடல் பருமன். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அய்யோ உடம்பு வந்துருச்சே குறைக்க முடியவில்லையே இது தான் புலம்பல் ஏன் வந்தது அதை வரும் முன் காக்க என்ன வழி இதையாரும் யோசிப்பதில்லை யோசிக்கும் போது உடல் வெயிட் ஆகிவிடுகிறது. இதில் பாதிக்கப்படுபவார்கள் கிராமப்புரத்தை விட நகரவாசிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். இந்த கொலஸ்டிரால்ல நன்மையும் இருக்கு, தீமையும் இருக்கு கொலஸ்ட்ரால்: கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளிலும் காணப்படுகிறது. இது வைட்டமீன் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது

    இந்த உப்புகள் கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது. உடலானது தேவையான அளவு கொலஸ்டிராலினை உற்பத்தி செய்கிறது. எனவே வேறு கொலஸ்டிரால் உடைய உணவை உண்ணாமல் இருந்தால் நல்லது. ஆனால் உணவில், கொலஸ்டிராலை முழுமையாக தவிர்ப்பதென்பது கடினமானமாகும். ஏனெனில் பல உணவுகள் இதனை தன்னுள் கொண்டுள்ளன. உடலில் அதிகளவு கொலஸ்டிரால் என்பது இதய நோய்கள் போன்ற மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். பல காரணிகள் உயர் அளவு கொலஸ்டிரால் ஏற்பட பங்களிக்கிறது, ஆனால் சில செயல்கள் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.

    * கொலஸ்டிரால் அளவு உங்கள் உடலில் உள்ள எச்டிஎல் கொலஸ்டிரால் அளவு (நல்ல கொலஸ்டிரால்) மற்றும் எல்டிஎல் கொலஸ்டிரால் அளவு (கெட்ட கொலஸ்டிரால்) களை பொறுத்துள்ளது. எல்டிஎல் கொலஸ்டிராலைவிட எச்டிஎல் கொலஸ்டிரால் உடலில் அதிகளவு இருப்பது உடலில் உள்ள சுகாதாரமான கொலஸ்டிரால் அளவை பேண மிக முக்கியமாகும்.

    * உடலில் நல்ல கொலஸ்டிராலலின் அளவை அதிகரிக்க, உங்கள் உணவில் எந்த வகையான கொழுப்புகள் உள்ளன என்பதனை கவணியுங்கள், குறிப்பாக ட்ரான்ஸ் பாட் (அன்சாச்சுரேட்டெட் பாட்) டினை தவிர்ப்பது நல்ல வழியாகும்.

    * இதய இரத்தநாள பயிர்ச்சிகளை ஒழுங்காக செய்வது, உணவில் குறைந்த அளவு கொலஸ்டிராலினை எடுத்துக்கொள்வது மற்றும் புகைக்காமல் இருப்பது போன்றவை உடலில் கெட்ட கொலஸ்டிரால் சேர்வதை அகற்றும் பிறவழிகளாகும்.

    கொலஸ்டிரால் உள்ளவர்கள் எதை சாப்பிடலாம் எதை தவிர்க்கலாம் :

    * வறுத்தல், பொரித்தலுக்கு எண்ணெய் குறைவாகத் தேவைப்படும் "நான்-ஸ்டிக்' பானைப் பயன்படுத்துங்கள். உறையாத எண்ணெய் வகைகளான சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றில் ஏதாவது இரண்டு எண்ணெய்களைச் சேர்த்து அளவோடு சமையலுக்குப் பயன்படுத்துங்கள். மொனொ அன்ஸேச்சுரேடெட் எண்ணெய் மற்றும் பாலி அன்ஸேச்சுரேடெட் எண்ணெய்கள், சமையலில் உபயோகிக்க வேண்டும். அவற்றையும் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும்.

    * கொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. "கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய் போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெயிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.

    * பழைய எண்ணெய்யை சூடுபடுத்தி மீண்டும் பூரி போன்றவை செய்ய பயன்படுத்தக் கூடாது. பழைய எண்ணெய்யை தாளிக்க பயன்படுத்தலாம்.


    * ஒலிவ எண்ணெய் (ஜைத்தூன் எண்ணெய்) யில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ஸ்(antioxidants) உள்ளது. இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது. FDA பரிந்துரைப் படி தினமும் 2 மேஜைக்கரண்டி (23 Gram) ஆலிவ் எண்ணெய் இதயத்துக்கு மிக நல்லதாம்.

    * தேங்காயில் உள்ள fatty Acid உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது, உடல் எடையை குறைக்கிறது என சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. தேங்காய் எண்ணெயில் கொழுப்பு உள்ளது, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் இதை தொடக்கூடாது என்ற கருத்தை இது பொய்யாக்குகிறது. தேங்காய் எண்ணெயில் "medium chain Fatty Acid" அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கும் Capric Acid,மற்றும் 'Lauric Acid' ஆகிய இரு அமிலங்களும் போதிய அளவு உள்ளது. இதனால் தினமும் போதிய அளவு தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையுமாம்.

    * எருமைப் பாலில் கொழுப்பு அதிகம். பசும்பால் நல்லது. கொழுப்புச் சத்து குறைந்த ஸ்டாண்டர்டைஸ்டு பால் இதய நோயாளிகளுக்கு நல்லது. கொழுப்புச் சத்து அறவே நீக்கிய பாலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.

    * அசைவ உணவு வகைகளில் ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, பன்றிக் கறி ஆகிய மூன்றிலும் அதிகம் உள்ளது. * முட்டையின் மஞ்சள் கருவிலும் கொலஸ்டிரால் அதிகம்.ஆனால் முட்டையை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஹார்வார்டு பள்ளி தெரிவிக்கிறது.

    * அசைவ உணவு சாப்பிடுவோர், ஆடு-கோழி போன்றவற்றின் ஈரல், சிறுநீரகம், மூளை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆடு-கோழி ஆகியவற்றின் உறுப்புகளில் கொழுப்புச் சத்து அதிகம்.

    * கொட்டை வகைகள்:


    முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, எள் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்; இதனால் கலோரிச் சத்து அதிகம். எனவே இதய நோயாளிகள் இத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும்.


    * வால் நட்டில் அதிக அளவு பாலி அன் சேச்சுரேட்டட் அமிலக் கொழுப்பு உள்ளது. இது கொலெஸ்ட்ராலை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கிறது. பாதாமும் இதைப் போல் குணமுடையது


    * பாதாம் பருப்பை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் மட்டுமே நாள் ஒன்றுக்குச் சாப்பிடலாம்.


    * ஸேடுரேடெட் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும் * எண்ணெயில் பொரித்துண்ணும் உணவுகளை, பொறிப்பதற்கு பதிலாக வேகவைத்ததோ, சுட்டோ, வதக்கியோ சாப்பிடப் பழக வேண்டும்.

    * கொழுப்பு நீக்கிய பால் (skimmed milk) அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் (low fat milk), வெண்ணெய் மற்றும் தயிரை உபயோகிக்க வேண்டும்.


    * டோனட்ஸ் (Dough nuts), மஃப்பின்ஸ்(muffins) போன்ற pastry பாஸ்ட்ரி வகை துரித உணவு(fast food)களைத் தவிர்க்க வேண்டும்.


    * பழவகைகள், காய்கறிகள், பருப்புகள், தானியங்கள், ரொட்டி, அரிசி மற்றும் பாஸ்டா உணவுகள் உண்ண வேண்டும்.


    * வெண்ணையைத் தவிர்த்து, திரவ நிலையிலான மார்கரின் பயன்படுத்தலாம்.


    * உணவுப் பொருட்களில் உள்ளக் கொழுப்பின் அளவை, அவற்றின் குறிப்பேட்டைப் படித்துத் தெரிந்து கொள்ளவது கூடுதலாக உள்ளக் கொழுப்பு உணவைத் தவிர்க்க உதவும்.


    * இனிப்பு உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். * நார்ச்சத்து காய்கறிகள்: நார்ச்சத்து அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொழுப்பு சேருவது தாமதப்படுத்துகிறது.


    * ஓட்ஸில்(Oatmeal) கரையக்கூடிய நார் சத்து இருக்கிறது .இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்கிறது.கிட்னி பீன்ஸ், ஆப்பிள், பியர்ஸ், பார்லி போன்றவற்றிலும் இத்தகை கரைக்கூடிய நார் சத்து அதிகம் உள்ளது.


    * வாழைப் பழத்தில் அதிக நார் சத்து உள்ளது நல்லது


    -நல்லது நாம் சாப்பிடும் உணவு வகையில் கொலஸ்டிராலின் அளவு :


    * முட்டை (வெண்கரு+மஞ்சட்கரு) -550 (mg /100gm)


    * வெண்ணெய் -250 (mg /100gm)


    * சிப்பி மீன் (Oyster)-200 (mg /100gm)


    * இறால் (Shrimp)-170 (mg /100gm)


    * மாட்டு இறைச்சி -75 (mg /100gm)


    * ஆட்டிறைச்சி (Mutton)-65 (mg /100gm)


    * கோழியிறைச்சி-62 (mg /100gm)


    * பனீர் (cottage cheese)-15 (mg /100gm)


    * ஐஸ் கிரீம்-45 (mg /100gm)


    * நிறைக்கொழுப்புப் பால் (1 குவளை)-34 (mg /100gm)


    * கொழுப்பு நீக்கிய பால் (1 குவளை)-5 (mg /100gm)


    * பிரெட்-1 (mg /100gm)


    * ஸ்போஞ்ச் கேக்-130 (mg /100gm)


    * சாக்லேட் பால்-90 (mg /100gm)


    நாமும் இதைப்பின்பற்றினால் கொலஸ்டிரால் இல்லாத மனிதனாக வாழ முயற்சிக்கலாமே....

    ஹிந்தியில் கைகோர்க்கும் தனுஷ்-அனிருத் கூட்டணி!

    By: ram On: 12:50
  • Share The Gag
  • தனுஷ்-அனிருத் கூட்டணியில் வரும் பாடல்கள் அனைத்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படம் மாபெரும் வெற்றியடைந்தது அனைவரும் அறிந்ததே.

    தற்போது இப்படம் தெலுங்கு, ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் ரீமேக் ஆகிறது. இதில் பாலிவுட்டில் தனுஷிற்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் அவரே அப்படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.

    இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    நீரிழிவு நோயாளிகளுக்கான காலிபிளவர் சப்பாத்தி!

    By: ram On: 11:49
  • Share The Gag
  • கால்சியம் சத்து அதிகம் கொண்ட காலிபிளவர் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாக உள்ளது.
    மேலும், அதிக எடை போடாமல் இருக்க உதவுகிறது. இதோ அந்த காலிபிளவரில் சப்பாத்தி செய்து சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    சிறிய காலிஃபிளவர் - 1
    கோதுமை மாவு - 2 கப்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பச்சைமிளகாய் - 5
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - ஒரு கப்
    எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்

    செய்முறை

    * காலிபிளவரை நன்றாக கழுவி நறுக்கி கொள்ளவும்.
    * பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும்.
    * துருவிய காலிபிளவர், பச்சைமிளகாய், சீரகம், உப்பு, மஞ்சள்தூள் ஆகியனவற்றைக் கோதுமை மாவுடன் சேர்த்துக் கைகளால் கிளறி சுடுதண்ணீரைச் சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.
    * இதனுடன் நறுக்கிய கொத்தமல்லியையும் சிறிது எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து மீண்டும் பிசைந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
    * பிறகு உருண்டைகளாக்கி சப்பாத்தி வடிவில் வட்டமாக இட்டு சப்பாத்திக்கல்லில் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
    * சுவையான காலிபிளவர் சப்பாத்தி ரெடி.

    பிரபல நடிகரின் மனைவியை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்த வாலிபர்?

    By: ram On: 11:38
  • Share The Gag
  • தென்னிந்திய சினிமாவின் பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி. இவர் தமிழ் சினிமாவில் தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

    சமீப காலமாக இவரது மனைவியை யாரோ மர்ம வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்து அவர்கள் போலிஸாரிடம் புகார் கொடுக்க, விசாரணையில் காவல் துறையினர் ஜாகீர்உசேன்(வயது 27) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் தள்ளினார்கள்.

    சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜாகீர்உசேனும் சினிமா பிரமுகர்தான். நேற்று அவர் மீண்டும், நடிகர் சக்தியின் மனைவியிடம் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

    இதை தொடர்ந்து ஜாகீர்உசேன் மீது, அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார், என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    முக வடிவத்திற்கு ஏற்ற புருவம்

    By: ram On: 01:27
  • Share The Gag

  • புருவம் இலேசாக மேலேற வெளிப்புறம் கொஞ்சமாகவே கீழிறங்க வேண்டும். பார்ப்பதற்கு, தூரத்தில் பறக்கும் பறவை மாதிரி இருக்கும். வெளிப்புறமாக இருக்கும் தேவையற்ற முடியை அகற்றி விடுங்கள். முடியுமிடத்தில் மிகவும் மெலிதாக இருக்கட்டும்.

    * சதுர முகம்: புருவ வளைவு அகன்று இருக்க வேண்டும். புருவ முடிகளின் வரிசையில் உள்பக்கமாக இருப்பவற்றைத்தான் அகற்ற வேண்டும். அதுதான் முகத்தின் சதுரத் தன்மையைத் குறைத்துக் காட்டும்.

    * வட்ட முகம்: புருவம் மிகவும் நீளம் குறைந்ததாய் இருக்க வேண்டும். பருமனாக ஆரம்பித்து, அடுத்தடுத்துக் குறுகிக் கொண்டே இருக்க வேண்டும். வெளிப்புற முடிவில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றி விடுங்கள்.

    * நீளமான முகம்: எவ்வளவுக்கெவ்வளவு நேராக, வளையாமல் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது. புருவத்தின் ஓரத்தில் மட்டும் மிகச்சிறு அளவு வளைந்து விடுங்கள்.

    * புருவம் தீட்டப் பொதுவாக ஐப்ரோ பென்சில்களைப் பயன்படுத்துவதே நல்லது. விரல் நுனியில் மை தொட்டு இழுக்கும் பழக்கத்தைத் தவிர்த்துவிடவும். ஐப்ரோ பென்சிலை எவ்வளவு மெல்லியதாக முடியுமோ அவ்வளவு மெல்லியதாகப் பயன்படுத்தவும்.

    * உட்புறமிருந்து வெளிப்புறமாகத்தான் பென்சிலால் புருவம் தீட்ட வேண்டும். ஒவ்வோர் இழையாக இட, இப் புருவம் பொலிவு பெறும். அழுத்தமான தடித்த கோடுகள் ‘செயற்கை’ என்று காட்டிக் கொடுத்துவிடும்.

    * பிரஷ் செய்யத் தொடங்கும்போது முதலில் வெளிப்புறமிருந்து உட்புறமாகப் பிரஷ் செய்ய வேண்டும். அப்போதுதான் புருவத்துக்கிடையில் படிந்திருக்கும் பவுடர் போன்றவை நீங்கும்.

    * பிறகு பிரஷை ஒரு டிஷ்யூ பேப்பரால் சுத்தம் செய்த பிறகு கீழிருந்து மேலாக தொடர்ந்து உள்ளிருந்து தொடங்கி வெளிப்புறமாக அதாவது புருவத்தின் போக்கில் பிரஷ் செய்தால் மிக நன்றாக அமைந்துவிடும்.

    இனி உங்கள் புருவத்தினை அழகா வச்சிக்க முயற்சி பண்ணி பாருங்க, உங்கள் முகமும் அழகா இருக்கும்.

    பெண் குழந்தை பெற்ற அஜீத் ஹீரோயின்

    By: ram On: 01:17
  • Share The Gag
  • தமிழில் ‘பிரியம்', ‘லவ் டுடே', ‘கங்கா கௌரி',  அஜீத் ஜோடியாக ‘ரெட்டை ஜடை வயசு' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை மந்த்ரா. இவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

    இவர் கடைசியாக தமிழில் ‘ஒன்பதுல குரு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ‘வாலு' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ராசி என்ற பெயரில் நடித்து வரும் மந்த்ரா, ஸ்ரீனிவாஸ் தெலுங்கு உதவி இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

    இருவரும் ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கேம்ஷோ ஒன்றினை தொகுத்து வழங்கினார் மந்த்ரா. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மந்த்ராவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து மந்த்ரா கூறும்போது, எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. என் கணவரும் அதைத்தான் விரும்பினார். குழந்தையை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் இனி ஒரு வருடத்துக்கு பிறகே நடிப்பேன் என்றார்.

    மொபைல் போன் மூலம் முட்டை அவிக்கலாம்: தெரிந்து கொள்ளுங்கள்

    By: ram On: 01:04
  • Share The Gag
  • முட்டையை அவிக்கும் அளவிற்கு மொபைல் போனில் கதிர் வீச்சு வீரியமாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
    மொபைல் மூலம் முட்டைகளை அவித்துக் காட்டி இரண்டு ரஷ்ய பத்திரிகையாளர்கள் சாதனை புரிந்துள்ளனர். இன்றைய நவீன காலத்தில் மொபைல் போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஆனால் அதே நேரத்தில் அவை எந்த அளவு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் நாம் மறந்து விடுவதற்கில்லை. மொபைல் போன்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு எந்த அளவுக்கு வீரியமானவை என்பதை இரண்டு ரஷ்ய பத்திரிகையாளர்கள் சோதனை மூலம் செய்து காட்டியுள்ளனர். மொபைல் போன்களிலிருந்து வெளி வரும் கதிர்வீச்சு, முட்டைகளையே வேக வைக்க கூடியது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.

    இதற்காக அவர்கள் ஒரு சிறிய மைக்ரோவேவ் கருவியை உருவாக்கி உள்ளனர். ஒரு மொபைல் போனிலிருந்து மற்றொரு மொபைல் போனை அழைத்து அவற்றை பேசக்கூடிய நிலையில் வைத்தனர். அதே நேரத்தில் அவற்றுடன் ஒரு டேப் ரிகார்டரை இணைத்து இரு போன்களுக்கு இடையே உரையாடல் நடப்பதாக காண்பித்து இரு போன்களும் தொடர்ந்து பேசும் நிலையில் இருக்கச் செய்தனர். 15 நிமிடத்தில் போன்களுடன் இணைக்கப்பட்டிருந்த மைக்ரோவேவ் கருவியில் வைக்கப்பட்டிருந்த முட்டை சூடேற ஆரம்பித்தது. 40வது நிமிடத்தில் முட்டையின் வெப்பம் கடுமையாகியது. 65வது நிமிடத்தில் முட்டை முழுவதுமாக வெந்து காணப்பட்டது.

    இந்த அளவுக்கு நீண்ட நேரம் எவரும் பேச வாய்ப்பு இல்லை என்றாலும் அவ்வாறு பேசினால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதையே இந்த சோதனை விளக்குகிறது. காதின் அருகில் இருக்கும் மூளைப் பகுதியை இந்த கதிர் வீச்சு எந்த அளவு பாதிக்கும் என்பதையும் இதன் மூலம் உணரலாம். 2 நிமிடம் தொடர்ந்து மொபைல் போனில் பேசினாலே அதிலிருந்து வரும் கதிர்வீச்சு, மூளையைப் பாதுகாக்கும் பகுதியில் ஊடுருவி விடும் என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

    எனவே மொபைல் போனை நீண்ட நேரம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பிரியமானவர்களிடம் தொடர்ந்து பேசும் மொபைல் பிரியர்கள் சற்று யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். முடிந்தவரை சாதாரண போன்களை பயன்படுத்த வேண்டும் மொபைல் போனைத் தவிர்க்க முடியாதவர்கள், இயர் போனைப் பயன்படுத்துவது சற்று பாதுகாப்பானதாக இருக்கும் என்பதே இவர்களது அறிவுரை.