Tuesday, 21 October 2014

பல கோடி லாட்டரி பரிசு மோசடி கும்பல்…

By: ram On: 23:32
  • Share The Gag
  • பல லட்சம், பல கோடி லாட்டரி விழுந்திருப்பதாக பலருக்கும் மெயில்  அனுப்பி மோசடி செய்த பலே கும்பல் இறுதியாக ரிசர்வ் பாங்க் கவர்னருக்கே இங்கிலாந்திலிருந்து ஐந்து கோடி விழுந்திருப்பதாக மெயில் அனுப்பி உள்ளதாம்.?.

    சமீப காலமாக இணைய தளங்களை மோசடி கும்பல் பயன்படுத்தி வருகிறது. அதில் திடீர் என்று உங்களுக்கு பல கோடி லாட்டரி பரிசு விழுந்திருக்கிறது.  இ.மெயில் ஐ.டி. பெயர், வங்கி கணக்கு எண் தெரிவியுங்கள் என்று வரும். சிலர் பரிசு பணம் பெற டெபாசிட்டும் கேட்பார்கள்.

    இதை நம்பி நீங்கள் விவரம் தெரிவித்தால் அவ்வளவுதான் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை நூதன முறையில் மாற்றி அபேஸ் செய்து விடுவார்கள். இதுபற்றி ரிசர்வ் வங்கி எற்கனவே எச்சரிக்கை விடுத்து உஷார்படுத்தி உள்ளது.

    தற்போது ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் பெயரில் போலி கடிதம் இ.மெயில்களில் உலா வருகிறது. உங்கள் கணக்குக்கு இங்கிலாந்தில் இருந்து ரூ.5 கோடி பணம் வந்துள்ளது. நீண்ட காலமாக அது பயன்படுத்தப்படாமல் உள்ளது. தற்போது அந்த பணத்தை பயன்படுத்த உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம். எனவே உங்கள் பெயர், விலாசம், இ.மெயில் ஐ.டி., வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் பெயரில் போலியாக இந்த கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. கடிதத்தில் அவரது போட்டோவும் இடம் பெற்றுள்ளது.

    இணையதள மோசடி கும்பல் இந்த போலி கடிதங்களை அனுப்பி வருகிறது. எனவே போலி கடிதங்களை நம்பாமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    நடிகர் விவேக்கின் விவகாரமான கேள்விக்கு பதில் அளித்த கமல்!

    By: ram On: 23:23
  • Share The Gag
  • கமல்ஹாசன் தற்போது பிரபல வார இதழ் ஒன்றிற்கு பதில் அளித்து வருகிறார். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதழில் இடம்பெறும் கேள்விகளை பிரபலங்கள் மட்டுமே கேட்கும் படி அமைத்துள்ளனர்.

    நடிகர் விவேக் இதில் ‘சமூக வலைத்தளங்களில் படம் நன்றாக இல்லை என்று மெசேஜ் அனுப்புகிறார்கள். இதனால் படத்திற்கு வரவேண்டியவர்களையும் தடுத்து விடுகிறார்கள். சமூக வலைத்தளங்களின் கமென்ட்களில் நேர்மை இருப்பதாக தெரியவில்லை. எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் சிவகார்த்திகேயன் இறந்துவிட்டதாக வதந்திகள் பரப்புகிறார்கள். இது சரியா, இதற்கு அரசாங்கம் சென்சார் கொண்டு வருமா?’ என்று கேட்டுள்ளார்.

    இதற்கு பதில் அளித்த உலக நாயகன் ‘இன்டர்நெட் வருவதற்கு முன்பே நானும், அண்ணன் ஜேசுதாஸும் ஒரே நாளில் இறந்துபோன வதந்தி எங்கள் காதுக்கே எட்டியது. சிரித்தபடி, பரஸ்பரம் இரங்கல் தெரிவித்துக் கொண்டு 35 வருடங்கள் ஆகிவிட்டன.

    விமர்சனத்துக்கு வரம்போ, தணிக்கையோ இருக்கக் கூடாது. தரம் குறையும்போது விமர்சகனே விமர்சனத்தின் மதிப்பெண்ணை கோடிட்டுக் காட்டி விடுவான். இன்டர்நெட் விமர்சகனுக்குத் தடை போடுவது, பெண்ணுக்குத் தாலி கட்டுவது அவர்களின் கற்புக்கு உத்தரவாதமாகாது. அவர்கள்தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

    நம் கலையும், திறமையும் மக்கள் ஆதரவுடன் எல்லா சமகால விமர்சனங்களையும் கடந்து வாழ உழைக்க வேண்டும் என்பதே என் பணிவிலாக் கருத்து’ என்று கூறியுள்ளார்.

    தீபாவளி படங்கள் ஒரு சிறப்பு பார்வை!

    By: ram On: 22:07
  • Share The Gag
  • கத்தி: தமிழ் மக்கள் அனைவரும் கொண்டாடும் விதத்தில் விஜய்-முருகதாஸ் கூட்டணியில் வரும் 2வது படம் தான் கத்தி. இப்படம் இன்று காலை வரை வெளிவருமா என்று ரசிகர்களிடையே பெரிய குழுப்பம் நீடித்தது. தற்போது எந்த பிரச்சனையும் இல்லை, கண்டிப்பாக படம் தீபாவளிக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

    ட்ரைலர் பார்க்கையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ள சிறு கிராமங்களை அவர்கள் லாபத்திற்கு பயன்படுத்துவது போன்றும், அதை இளைய தளபதி எப்படி தடுத்து நிறுத்துகிறார் என்பது போல் தெரிகிறது. படத்தின் பாடல்கள் ஏற்கனெவே பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது. இளைஞர்கள் கனவி கன்னியாக விளங்கும் சமந்தாவும் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது.

    பூஜை: ஹரி-விஷால் கூட்டணி தாமிரபரணி படத்தின் வெற்றிக்கு பிறகு இணைந்திருக்கும் படம் தான் பூஜை. படத்தின் பாடல்கள் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பி, சி செண்டர்களை கவர்ந்துவிட்டது. படமும் கண்டிப்பாக அவர்களுக்கான படம் தான்.

    ஹரியின் ஸ்பீட் பார்முலா திரைக்கதை கண்டிப்பாக இதிலும் ஒர்க் அவுட் ஆகியிருக்கும் என்று நம்பலாம். இதற்கெல்லாம் மேலாக ஸ்ருதிஹாசனின் கவர்ச்சிக்கு இப்படத்தில் பஞ்சம் இருக்காது என்பதால் படத்திற்கு கூடுதல் ப்ளஸ் பாயிண்ட் கிடைத்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1200 திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது.

    இந்த இரண்டு படங்களில் எது ரசிகர்களை கவரும், பாக்ஸ் ஆபிஸில் கல்லாவை நிரப்பும் என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

    மருந்து வாங்கும் போது... எச்சரிக்கை! கவனம் தேவை...!

    By: ram On: 21:50
  • Share The Gag

  • மருந்து வாங்கும் போது... கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம்.

    1. மருத்துவரின் சீட்டு இல்லாமல் வாங்காதீர்கள்!

    தமிழ் சினிமாவின் பிரபல வசனங்களில் ஒன்று, யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும. யார் வெட்டினாலும் கத்தி வெட்டும். மருந்து, டாக்டர் எழுதிக் கொடுத்தாலென்ன... கடைக்காரரே கொடுத்தால் என்ன? என்று நினைப்பவர் அநேகர். அது உண்மையல்ல. குடும்ப மருத்துவருக்குக் கொடுக்கும் பணம் உங்கள் உடல் நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். நீங்கள் சரியான மருத்துவரிடம் 50, 100 ரூபாய் கொடுத்தால் அவர் குறைந்தது 5 மடங்கு பணம் மிச்சப்படுத்தும் வேலையைச் செய்வார்!

    இப்போது பெரும்பாலான மருத்துவர் கள் தங்கள் மருந்துச் சீட்டை தெளிவாக, தனித்தனியாக கொட்டை எழுத்துக்களில் தான் எழுதித் தருகின்றனர். சிலர் கம்ப் யூட்டர் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட மருந்துச் சீட்டை கொடுக்கிறார்கள்.

    கையெழுத்துப் புரியவில்லை என்றால் கேட்டு விடுங்கள்! கோபிக்க மாட்டார்! சிலர் பழைய சீட்டை வைத்தே வருடக் கணக்கில் வாங்குவார்கள். அதுவும் தவறு! அவ்வப்போது மருத்துவரைப் பாருங்கள்!

    2. செல்போனில் மருந்துச் சீட்டு நீண்ட காலத்திற்கு சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மருந்துகளின் பெயர், டோஸ் அளவு போன்றவற்றை Cell Phone™ மெஸேஜ் ஆக எழுதி பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த   Message  வீட்டில் உள்ள அனைத்து செல்ஃபோனி லும் இருக்கட்டும். அவசரத்தில் சிகிச்சை யளிக்க மருத்துவர் கேட்கும்போது இது உயிர் காக்க உதவும்.

    3. பில் இல்லா மருந்து மருந்தல்ல எங்கே வாங்கினாலும், எவ்வளவு வாங்கினாலும் எவ்வளவு அவசர மானாலும், பில் இல்லாமல் மருந்துகளை வாங்காதீர்கள். பில்லில் உங்கள் பெயர், மருத்துவரின் பெயரும் இருக்கட்டும். மருத்துவரின் மருந்துச் சீட்டுடன், பில்லை வைத்து கவனமாக சரிபார்த்து, வாங்குங்கள். சந்தேகம் இருக்கும் பட்சம் மருத்துவரிடமோ அவரது உதவியாளரிடமோ Cross Check செய்து கொள்ளுங்கள்.

    4. உதிரிகள் வேண்டவே வேண்டாம் மருந்தின் பெயர், மருந்துப் பொருட்களின் பெயர், தயாரித்த கம்பெனியின்  பெயர், விற்கும் கம்பெனியின் பெயர் மருந்தின் வீரிய அளவு, மருந்து தயாரித்த தேதி காலாவதி தேதி ஆகியவற்றை முழு அட்டையாக மாத்திரை வாங்கும் போதுதான் கவனித்து வாங்க முடியும். எனவே கூடுமானவரை உதிரியாக மாத்திரை வாங்குவதை தவிர்த்து விடுங் கள். உதிரி மாத்திரைகள், காலாவதி, போலி, சாம்பிள் மாத்திரைகளாகக் கூட இருக்கக் கூடும். எனவே கூடுதல் கவனம் தேவை.

    5. வீரியமில்லாமல் காரியமில்லை மாத்திரை பெயர் பார்த்து வாங்கும் போது அதன் அளவு 2 மிலி, 5 மிலி, 10 மிலி என வீரியத்தின் அளவு பார்த்து வாங்க வேண்டும். இது மிக முக்கியம்.

    6. காலாவதி மாத்திரை காலனிடம் சேர்க்கும் எந்த மருந்தையும் நீங்களாகப் பார்த்து, காலாவதி தேதி சரிபாருங்கள். சில மாத் திரைகளில், 18 மாதங்கள், 24 மாதங்கள். தயாரித்த தேதியிலிருந்து என போட்டிருப் பார்கள். அதையும் சரிபாருங்கள்.

    ஒரே வகையான மருந்து 6 மாதம் ஒரு கம்பெனியும் மற்றொரு கம்பெனி 3 வருடம் கழித்தும் காலாவதி தேதியை குறிப்பிட்டிருக்கும். அது மருந்து தயாரிக் கும் முறை, மருந்தின் உட்பொருட்கள் பொறுத்து மாறக்கூடும். நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.

    சில மருந்துகள் 1 நாள் தாண்டினால் கூட விஷமாக மாற வாய்ப்பு உண்டு. உதாரணம் டெட்ராசைக்ளின் வகை மருந்துகள். சில மருந்துகளில் காலாவதி தேதி நீண்ட நாட்கள் இருந்தாலும், குறிப்பாக குழந்தைகளுக்கு பவுடர் வடிவில் கொடுக்கப்படும் ‘ஆன்டி பயாடிக்Õ வகை மருந்துகள், காய்ச்சி ஆறவைத்த நீரில் கலந்து 5 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என சிறிய எழுத்தில் எழுதியிருப்பார்கள். அதுபோன்ற மருந்து களை 5 நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது.

    7. நீண்ட நாட்களுக்கு...

     நீண்ட நாட்களுக்கு சாப்பிட வேண்டிய, தினசரி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் குறைந்தது 1 வாரத்துக்கான அளவாவது வீட்டில் இருக்கட்டும். இரவு ஒரே மாத்திரை இருந்து அதுவும் கீழே தவறி விழுந்துவிட்டால், தேவையில்லாத, பயம், பதட்டம், கவலை, அலைச்சல் டென்ஷன் இதை தவிர்க்க கைவசம் சற்று மாத்திரைகள், பர்ஸ், அல்லது ஹேண்ட் பேகில் இருக்கட்டும்.

    8. குறைந்த செலவில் நிறைய மருந்துகள் சில மொத்த மருந்து வியாபாரிகளின் சில்லறை விலைக் கடைகளிலோ, சேவை நிறுவனங்கள் நடத்தும் கடைகளிளோ, 10 முதல் 20% வரை எம்.ஆர்.பி. விலையில் இருந்து தள்ளுபடி விலையில் மருந்து கிடைக்கும். ஒரு மாதத்திற்குத் தேவை யான மருந்துகளை இதுபோன்ற கடை களில் வாங்கினாலே கணிசமான பணம் மிச்சமாகும். சில கடைகளில் போனில் ஆர்டர் கொடுத்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு. பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை மிச்சப்படுத்துங்கள்.

    9. அதே மருந்து... வேறு கம்பெனி சில மருந்து கம்பெனியின் தயாரிப் புகள் இல்லாதபோது நீங்களாகவே வேறு கம்பெனி மருந்துகளை மருத்துவரின் அனுமதியில்லாமல் வாங்காதீர்கள். போலி கம்பெனியா, தடைசெய்யப்பட்ட மருந்துகள் கலந்துள்ளனவா என்பதை உங்கள் மருத்துவர் அறிவார். குறிப்பாக வலிப்பு/ சர்க்கரை வியாதி/ ரத்தக் கொதிப்பு மாத்திரை வாங்கும்போது, வீரியம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ, தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

    அதுபோலவே மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை நீங்களாகவே குறைத்துக் கொள்ளவோ அதிகரித்துக் கொள்ளவோ வேண்டாம்.

    என் நண்பர் ஒருவர் ‘விருந்துக்குப் போய்விட்டு வந்தால் சர்க்கரை மாத்திரை இரண்டாகப் போட்டுக் கொள்வேன்’ என்பார். தலைக்கு மேல் கத்தி தொங்கு வது போன்றது இது. எப்போதும் ஆபத்து நேரலாம்.

    10. மருந்துகள் பாதுகாக்க குழந்தைகள் கைக்கு எட்டாமல் வைக்கவும். பல மாத்திரைகள் கலர் கலராக ஜெம்ஸ் மிட்டாய் போல இருப்பதால் குழந்தைகள் வாயில் போட்டுக் கொள்ளும் ஆபத்து அதிகம்.

    சில மருந்து மாத்திரைகள் குறிப்பாக நெஞ்சுவலி மாத்திரைகள் போன்றவை கைக்கு எட்டும் வகையிலும், தேவைப்பட்டால் ஒவ்வொரு அறையிலும் இருப்பது நலம்.

    சில மருந்துகளை குளிர் சாதனப் பெட்டியில் தான் (இன்சுலின் போன்றவை) வைக்க வேண்டும். ஆனால் ஓபஸ் பெட்டியில் (ப்ரீஜரில்) வைக்கக் கூடாது.

    பொதுவாக எல்லா மருந்துகளையும் வெயில், சூடுபடாத, ஈரம் இல்லாத உலர்ந்த இடத்தில் வைப்பது அவசியம். அடுப்பு அருகே, ப்ரிட்ஜின் மேல், சூடான பாத்திரம், ஹீட்டர் அருகே அல்லது வெயில்படும் இடங்களில் மருந்துகளை வைத்தால் மருந்து கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. சிலவகை தடுப்பு மருந்துகளில், மருந்தின் வீரியம் கெட்டுப் போனதை அந்த லேபிள் கலர் மாறு வதைப் பொறுத்து கண்டுபிடிக்க இயலும்.