லவ் என்ற வார்த்தையை கேட்டா இன்னும் கொஞ்ச நால்ல, கடவுள் கூட கல்லெடுத்து அடிப்பாரு...என்று புதுமுக இயக்குநர் ஒருவர், தற்போதைய காதல் குறித்து ரொம்பவே ஆதங்கப்படுகிறார்.
டான் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் எல்.கணேஷ் தயாரிக்கும் படம் ‘மஞ்சள் குங்குமம்’. சத்யசரவணா என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் நாயகன், நாயகியாக நடிக்க, முன்னணி நடிகர்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
சதீஷ் எம்.எஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செல்வநம்பி இசையமைக்க, எல்.வி.தாஸ் படத்தொகுப்பு செய்கிறார். கபிலன், யுகபாரதி, கானா பாலா மற்றும் ஏகாதசி ஆகியோர் பாடல்கள் எழுத, தினா, ஜாய் மதி, ஜெய் ஆகியோர் நடனம் அமைக்கின்றனர்.
இப்படம் குறித்து இயக்குநர் சத்யசரவணன் கூறுகையில், “லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களும் சரி லவ் பக்கமே தலை வச்சு படுத்ததே இல்லைன்னு சொல்றவங்களும் சரி அவங்கள்ல எத்தன பேரு அவங்களோட பையனோ பொண்ணோ லவ் பண்ணுனா அவங்களோட லவ்வ புரிஞ்சுக்கிட்டு அவங்கள ஒன்னு சேத்து வச்சு சந்தோஸப்பட்றாங்க…
லவ்வுறங்குற வார்த்தையே கேட்டாலே கடவுள் கூட இன்னும் கொஞ்ச நாள்ல கல்லெடுத்து கண்டிப்பா அடிக்க ஆரம்பிச்சிருவான்…ஏனா அந்தளவுக்கு ஒரு காலத்துல இதயபூர்வமா நேசிக்கபட்ட சுவாசிக்கபட்ட லவ் இன்னைக்கி லவ்வுங்குற பேர்ல நாம அடிக்கிற கூத்தாலா தெருவுல ஓட்ற சாக்கடைய விட கேவலமா மாறிடுச்சுன்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வோரு விதமா வசபாடிக்கிட்டு இருக்கையில…
அன்பை மட்டுமே ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு புழிதிகாட்டின் அடையாளமாய் அழுக்கு முகங்களோடு முகங்களாக கைகளுக்கு எட்டாதா கற்பனைகளுடன் திரியும் இருவருடைய அன்பின் உச்சத்தை…இன்று சமூகத்தை மிகக் கொடூரமான முறையில் சீரழித்துக் கொண்டிருக்கும் இன்னொரு முக்கியமான பிரச்சனையுடன் கலந்து அழகிய கிராம வாசணையுடன் சொல்ல வருகிறது “மஞ்சள் குங்குமம்”
மதுரை மாவட்டத்தை சுற்றி எங்க கிராமத்துக்கே உரித்தான செம்மண் சார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. முழு படப்பிடிப்பையும் மொத்தம் 58 நாட்களில் முடித்துள்ளோம்.” என்றார்.
தற்போது இப்படத்தின் டப்பிங் வேலைகள் முடிவடைந்து, படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
0 comments:
Post a Comment