Friday, 26 September 2014

Tagged Under: , ,

மெட்ராஸ் - படத்தில் கார்த்தியை குறை சொல்லலாமா..? திரைவிமர்சனம்!

By: ram On: 18:28
  • Share The Gag
  • நேட்டிவிட்டி என்பது கிராமத்துக்கு மட்டுமல்ல மிகப்பெரிய நகரங்களுக்கும் உண்டு, சென்னையில் குறிப்பாக வடசென்னையை அதன் மக்களை இவ்வளவு ஆழமாக காண்பித்ததற்கு இயக்குனர் ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ஒரு சிறு பிரச்சினை, உப்புபெறாத பிரச்சினைகள் கூட மிகப்பெரிய போர்களங்களை தோற்றுவித்துவிடும் அப்படி ஒரு பிரச்சினைதான் இப்படத்திலும். நீண்டகாலமாக ஒரே கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு சுவரில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் கட்சி விளம்பரத்தை வரைய எடுக்கும் முயற்சியும் அதனால் விழும் பலிகளும்தான் கதை.

    கார்த்தி அச்சு அசல் வடசென்னை ஆளாகவே மாறி இருக்கிறார். வடசென்னை பேச்சு வழக்கு, பாடி லாங்வேஜ் என கலக்கி இருக்கிறார். இவர் பரவாயில்லை தமிழ்நாட்டுக்கே சம்பந்தம் இல்லாத இடத்தில் இருந்து இறக்குமதியான ஹீரோயின் கேத்ரின் தெரேசாவின் முக பாவங்கள் வசன உச்சரிப்பு என பக்கா சென்னை பெண்ணாகவே மாறி இருக்கிறார். கார்த்தி கேத்ரின் இருவருக்குமான இயல்பான காதல் செம க்யூட்டாக இருக்கிறது. கார்த்தின் அம்மா, பாட்டி கதாபாத்திரம் மற்றும் கார்த்தியின் நண்பன் கதாபாத்திரமான அன்பு, அன்புவின் மனைவி மேரி என எல்லா கதாபாத்திரங்களுமே துளியும் சினிமாத்தனம் இல்லாத ரியல் கேரக்டர்களாகவே வலம் வருவது படத்துக்கு மிகப்பெரிய பலம்.

    முதல் பாதி முழுவதும் வேகமாகவும் கலகலப்பாகவும் செல்லும் படம் இரண்டாம் பாதியில் ஆங்காங்கே சற்றே தொய்வடைகிறது. க்ளைமாக்ஸ் வித்தியாசமான மற்றும் சிறந்த‌ கிளைமாக்ஸ்தான் ஆனால் ஏனோ இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாமோ என்று தோன்ற வைக்கிறது.

    படத்தின் இரண்டாவது மிகப்பெரிய பலம் கேமிரா வடசென்னையின் உணர்வை அப்படியே நம் கண்களுக்குள் கொண்டுவருகிறது. இரண்டாவது பாதியில் பல இடங்களில் எடிட்டிங்கே கதை சொல்கிறது. அவ்வளவு சிறப்பாக இருக்கிறது பிரவீனின் எடிட்டிங். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மிரட்டுகிறது. 'காகித கப்பல்' பாடல் சூப்பர்.

    0 comments:

    Post a Comment