Sunday, 12 October 2014

கத்தி படத்தின் தியேட்டர் எண்ணிக்கை முழு விவரம்!

By: ram On: 23:20
  • Share The Gag
  • இளைய தளபதியின் மிரட்டல் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் கத்தி. இப்படம் இதுவரை விஜய் கேரியரில் இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக, அதிக திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

    இதில், சென்னை, செங்கல்பட்டு, வடஆற்காடு, தென்ஆற்காடு ஏரியாக்களில் மொத்தம் 200 தியேட்டர்களில் வெளியாகிறது. கோவையில் 80 தியேட்டர்கள், மதுரையில் 55 தியேட்டர்கள், திருநெல்வேலி-கன்னியாகுமரி- 20 தியேட்டர்கள். சேலம்- 60 தியேட்டர்களில் வெளியாகிறது.

    வெளிநாடுகளில் யுஎஸ்ஏ- 80 தியேட்டர்கள், யுகே- 70 தியேட்டர், பிரான்ஸ்- 25 தியேட்டர்கள், மலேசியா- 120 தியேட்டர்கள், வெளி மாநிலத்தில் கேரளா- 200 தியேட்டர்களில் வெளியாகிறதாம். இந்த திரையரங்குகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடும் பழங்கள்

    By: ram On: 22:48
  • Share The Gag
  • உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

    இல்லாவிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

    ஆய்வு ஒன்றிலும், நீரிழிவு நோயாளிகள், தினமும் 45 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொல்கிறது. மேலும் அந்த ஆய்வில் நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் சர்க்கரையுள்ள பொருளைத் தவிர்க்கக்கூடாது என்றும்,

    தினமும் ஒரு குறிப்பிட்ட அளவில் சர்க்கரையை உடலில் சேர்க்க வேண்டும் என்றும், அதிலும் பழங்களில் உள்ள சர்க்கரையை நாள்தோறும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது. அதாவது நம் முன்னோர்கள் சொல்வது போல், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான்.

    எனவே நீரிழிவு நோயாளிகள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளலாம். இப்போது நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில பழங்களைப் பார்ப்போம்.

    கிவி கிவி பழம் :
    நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
    செர்ரி :
    செர்ரி பழங்களில் கிளை சீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும். எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
    கொய்யா :
    கொய்யாப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின் `ஏ’ மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.
    நாவல் பழம் :
    கிராமப்பகுதிகளில் அதிகம் கிடைக்கும் இந்த பழம், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம். ஏனெனில் இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு விரைவில் கட்டுப்படும். அதுமட்டுமின்றி, இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், இன்னும் சிறந்த பலனைக் காண முடியும்.
    பீச் :
    மிகவும் சுவையான பீச் பழத்திலும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. எனவே இந்த பழத்தையும் தைரியமாக நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.
    பெர்ரிப் பழங்கள் :
    நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த ஒரு பயமும் இன்றி பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
    ஆப்பிள் :
    தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் தான். ஏனெனில் ஆப்பிள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இது செரிமான மண்டலம், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
    அன்னாசி :
    அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டிவைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது.
    பேரிக்காய் :
    சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் பேரிக்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால், பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.
    பப்பாளி :
    பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
    அத்திப்பழம் :
    அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் இதனை தினமும் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
    ஆரஞ்சு :
    சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் `சி’ இருப்பதால், இந்த பழத்தை தினந்தோறும் அளவாக சாப்பிட்டு வந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
    தர்பூசணி :
    தர்பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவுக்கு மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு நீர்ச்சத்தானது கிடைத்து, உடல் வறட்சியானது தடுக்கப்படும்.
    கிரேப் ஃபுரூட் :
    ஆரஞ்சுப் பழத்தைப் போன்றே காணப்படும் இந்த பழம் தான் கிரேப் ஃபுரூட். இது நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளும்.
    மாதுளை :
    அழகான சிவப்பு நிறத்தில் உள்ள மணிகளைக் கொண்ட மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக் கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
    பலாப்பழம் :
    பலாப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் அறவே தொடக்கூடாது என்று நினைக் கக்கூடாது. ஏனென்றால், இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் பழங்களுள் ஒன்றாகும்.
    நெல்லிக்காய் :
    கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும். இதில் வைட்டமின் `சி’ மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.
    முலாம்பழம் :
    முலாம் பழத்திலும் தர்பூசணியைப் போன்றே கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. ஆனால் இதில் நல்ல அளவில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், அளவாக சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.
    நட்சத்திரப் பழம் :
    இந்த பழமும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் பழமாகும். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும்.
    வெள்ளை கொய்யா :
    நாவல் பழத்தைப் போல் இது மிகவும் பிரபலமாக இல்லாவிட்டாலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான ஒரு பழம். இதனை நீரிழிவு நோயாளிகள், தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

    மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோய் என்பது பரம்பரை வியாதியா அல்லது பருவத்தில் வரும் வியாதியா என்ற பட்டிமன்றம் நடத்தாமல் வந்த பின்னர் என்னசெய்யவேண்டும் என்று யோசியுங்கள்.
    உணவு கட்டுப்பாட்டை சரியாக கடைபிடித்து வந்தால் எல்லா நோயுமே நம்மை விட்டு அகன்றுவிடும். அதிலும் குறிப்பாக மேற்கண்ட பழ வகைகளை மட்டும் உண்டு வாழ்வை மட்டும் இனிப்பாக்குவோம்.

    சிங்காரவேலன் சுயம்புலிங்கமாக மாறிய கதை!!!

    By: ram On: 22:16
  • Share The Gag
  • காலம் மாற மாற நடிகர்களின் முகத்தோற்றங்களும் அவர்களது ஆரம்ப கால உருவத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை உள் வாங்கிக்கொண்டுதான் இருக்கும்.. மீண்டும் அவர்கள் தங்களது இருபது வருடத்திய உருவத்தை வெளிக்கொணர்வதும் நடைமுறைக்கு அவ்வளவாக ஒத்துவராத ஒன்று.. ஆனால் ரஜினி, கமல் இருவரும் அந்தவகையில் வரும்போதே வரம் வாங்கி வந்தவர்கள்..

    சிவாஜி’ படத்தில் ரஜினியின் உருவத்தை பார்த்த எல்லோருமே அதில் இருபது வருடத்துக்கு முந்தைய பழைய ரஜினியை பார்த்ததாக சிலாகித்தனர். இப்போது கமல் நடித்துவரும் ‘பாபநாசம்’ படத்தில் அவரது உருவத்தோற்றம் 199௦களில் அவர் நடித்த ‘வெற்றிவிழா’, ‘சிங்கார வேலன்’ ஆகிய படங்களில் அவர் இருந்த உருவத்தை அப்படியே பிரதிபலிக்கிற விதமாக இருப்பது பார்த்தாலே தெரிகிறது. இதற்கு காரணம் அவரது மீசை..

    உத்தம வில்லன்’ படத்தில் மீசையில்லாமல் நடித்துக்கொண்டிருந்த கமல், படத்தை முடித்த கையோடு உடனே ‘பாபநாசம்’ படப்பிடிப்பில் நுழைந்து விட்டதால் ஒட்டுமீசை வைத்துக்கொண்டுதான் நடித்து வந்தார். இடையில் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக சிறிது இடைவெளி கொடுக்கப்படவே, ஒரிஜினலாகவே மீசையை இப்போது வளர்த்துவிட்டு அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார். ஆக சிங்காரவேலன் இப்போது சுயம்புலிங்கமாகவே மாறிவிட்டார்.

    ATM–களில் நடக்கும் தவறுகளும் குற்றங்களும்- எச்சரிக்கைகள்!-கட்டாயம் படிங்க!

    By: ram On: 21:25
  • Share The Gag
  • ஏ.டி.எம். – குற்ற‍ங்கள் – அதிர்ச்சிச் செய்திகள் – எச்சரிக்கைத் தகவல்கள்! (கட்டாயம் படிங்க)

    ஏ.டி.எம். எச்சரிக்கைகள்!

    ஏ.டி.எம். எனப்படும் Automated Telling Machine இப்பொழுது நகர ங்கள் மட்டுமல்லாது கிராமங்களி லும் புழக்கத்துக்கு வந்து விட்ட ன. அது போலவே ATM–களில் நடக்கு ம் தவறுகளும் குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இவற்றிலிருந்து நுகர்வோர் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள,

    சில வழிமுறைகளை இப்பொழுது பார்ப் போமா?

    ஏ.டி.எம்-ல் நடத்தப்படும் குற்றங்கள்:-

    * கார்டில் உள்ள பின் எண்ணையும் மற்ற தகவல்களையும் தெரிந்து கொள் வது.

    * இ-மெயில்கள் அனுப்பி, கணக்கு வைத்திருப்பவரின் தகவல்களை த் தெரிந்து கொள்வது.

    * ‘ஸ்கிம்மர்’ போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி ஏ.டி.எம்.களில் உள்ள பண த்தை எடுப்பது.

    நாம் கவனித்தில் கொள்ள வேண்டிய வை:-

    * எந்த வங்கியில் இருந்து ஏ.டி.எம். அட் டை வாங்கப்பட்டதோ, அந்த வங்கியின் ஏ.டி.எம்-ஐ கூடிய வரை பயன்படுத்துங் கள்.

    * பின் நம்பர் என்பது Personal Identification Number ஐ குறிக்கும். இந்த எண்ணை கீ-போர்டில் அழுத் தும் போது யாரும் பார்க்காமல் கீ-போர்டு மறைந்து இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

    * ஏ.டி.எம்.க்குள் வங்கிகள் அமைத் திருக்கும் ‘கேமராக்கள்’ மூலம் இந் த தகவல்களை மற்றவர்கள் தெரி ந்து கொள்வார்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இது தவிர வேறு நபர்களாலும் இத் தகைய கேமராக்கள் பொருத்த வாய் ப்பு உள்ளது.

    * பணம் எடுத்தவுடன் நீங்கள் எடுத்த தொகை, உங்கள் கணக்கில் மீதம் உ ள்ள தொகையை வெளியேறும் சீட்டு மூலம் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

    * பணம் எடுத்த பின், திரையில் கூறியுள்ள அறிவுரைகளின் படி, உங்கள் நடவடிக்கைகளை முடித்துக் கொ ள்ளுங்கள்.

    உங்கள் ‘கார்டை’ வெளியே எடுக்க மற க்காதீர்கள் ஏ.டி.எம்.ஐ விட்டு வெளியே வரும் போது உங்கள் பர்ஸ், மொபைல் ஃபோன் போன்றவற்றை மறந்து விட்டு விடாதீர்கள்.

    * உங்கள் ‘கார்டு’ இயந்திரத்திற்குள் வே கமாக உள்ளே இழுக்கப்பட்டால், அது தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு.

    * நடவடிக்கைகள் முடிந்த உடனேயே உங்கள் கார்டை வெளியே எடுத்து விட வேண்டும் (அதிக பட்சம் 30 விநாடிக்களுக்குள்)

    * உங்கள் பின் எண்ணை உங்கள் டயரி மற்றும் வேறு புத்தகங்களில் எழுதி வைக்காதீர்கள். எண்களைத் தவறாக அழுத்தினால், உடனே ” Cancel” என்ற பட்டனை அழுத்தவும்.

    * ஒவ்வொரு ஏ.டி.எம்.மிலும் புகார் செ ய்ய வேண்டிய தொலைபேசி எண் எழு தப்பட்டு இருக்கும். உங்கள் புகாரை உட னே அந்தத் தொலை பேசி எண்ணுக்குத் தெரியப்படுத்தவும்.

    * ஏ.டி.எம். தொடர்பான குறைகளை, நுகர்வோர் தெரிவித்தால் 7நாட்களுக்குள் குறைதீர்க்கப்பட வேண்டும் என்பது ரிஸர்வங்கியி ன் அறிவுரை. இவ்வாறு தீர்க்கப் படாவிட்டால் ஒருநாளைக்கு ரூ. 100 மீதம் இழப்பீடு தரப்பட வேண் டும்.

    * மேலும் ஆர்.பி.ஐ. உத்தரவின்படி, நுகர்வோரின் பெயர், கணக்கு எண், கார்ட் எண், ஏ.டி.எம். முகவரி, வங்கியின் பெயர், புகாரின் விவரம் போன்ற விவரங்கள் அட ங்கிய புகார் படிவங்கள் ஒவ்வொரு ஏ.டி. எம்.லும் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    அஜீத் 56 படம் பற்றிய தகவல்கள் - தயாரிப்பாளர் வேண்டுமாம்...!

    By: ram On: 21:11
  • Share The Gag
  • அஜீத்தின் 55-வது படத்தின் படப்பிடிபு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளவேளையில் அஜீத்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை இயக்குபவர் சிறுத்தை, வீரம் படங்களை இயக்கிய சிவா. மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலும் ரெடி. படத்தின் கதை, திரைக்கதை பக்காவாக தயாராகிவிட்டது.

    அஜீத் படத்தைத் தயாரிக்க வேண்டுமென்றால் குறைந்தது 70 கோடியாவது வேண்டும் என்ற நிலை. காரணம் அவர் சம்பளம் மட்டுமே 50 கோடியைத் தொடுகிறது. வரி செலுத்தியது போக, முழுவதும் வெள்ளையாகத்தான் வேண்டும் என்பது அவர் போடும் முதல் நிபந்தனை.

    தயாரிக்க முன் வந்த பிவிபி சினிமாஸ் ஏற்கெனவே சில சிக்கல்களில் இருப்பதால், வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அஜீத்.

    நல்ல தயாரிப்பாளர் தேடிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் சிவா.

    பிளாஸ்டிக் கவரில் டீ பார்சல் கேன்சர் பாதிப்பு அபாயம்

    By: ram On: 19:34
  • Share The Gag
  • திடப்பொருள்கள் வாங்க பயன்படுத்தப்பட்டு வந்த பிளாஸ்டிக்குகள் அடுத்தகட்டத்திற்கு தாவி தற்போது சூடான திரவப்பொருள்களை வாங்கி வரவும் பரவலாக பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இதனால் உணவுப்பொருள்கள் வேதிவினை யாகி கேன்சர் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    நம் அன்றாட பயன்பாட்டில் பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத பொருளாகி ஊடுருவி கிடக்கிறது. சிறிய கேரி பேக் முதல் சமையல் பாத்திரம், மருத்துவம், சுகாதாரம், மின்துறை என்று அனைத்திலும் இதன் தாக்கம் வீரியமாக இருக்கிறது.

    இருப்பினும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை. மறுசுழற்சி மூலம் தொடர்ந்து அவற்றை பல்வேறு ரூபங்களாக மாற்றி மாற்றி அதன் வீரியத்தன்மை வெகுவாய் குறைக்கப்படுகிறது. இருப்பினும் குறிப்பிட்ட மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ் டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக்கு களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உற்பத்தி, சேமித்து வைத்தல், விற்பனை உள்ளிட்ட அனைத்து கட்டத்திலும் இதற்கு தடை உண்டு. இருப்பினும் அரசு, அதிகாரிகளின் கடும் நடவடிக்கை இன்மையால் தொடர் ந்து இவை சந்தையில் வலம் வந்தபடி உள்ளன.

    எளிமையான பயன்பாடு, விலை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஆரம்பத்தில் பொதுமக்களின் பார்வை யை இந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஈர்க்க துவங்கின. இதனால் துணிப்பை மெல்ல மெல்ல பயன்பாட்டில் இரு ந்து விலக துவங்கியது. கையை வீசி கொண்டு செல்லலாம். பொருட்களை வாங்கி வந்தபின் பிளாஸ்டிக் பையை தூக்கிப் போட்டு விடலாம் என்ற மனோநிலையில் நுகர்வோர் மத்தியில் புதிய கொள்முதல் கலாச்சாரத்தை ஏற்படுத்த துவங்கியது.

    எனினும் இதன்பின்னால் உள்ள அபாயங்களை பலரும் உணரவில்லை. இவ்வாறு தூக்கி வீசப்பட்ட பிளா ஸ்டிக்குகள் அவ்வளவு எளிதில் மக்குவதில்லை. மண்ணில் பல ஆண்டுகளாக புதைந்தே கிடந்து மழைநீரை உட்புகாமல் செய்வதுடன், மண்ணின் உதிரித்தன்மையை பாதித்து காற்று ஊடுருவதிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

    இதனால் மண்புழு உள்ளிட்டவைகளும் அழிய துவங்கின. சிதறி கிடக்கும் இந்த பிளாஸ்டிக்கழிவுகளை அழித் தாலும் அது சுற்றுச்சூழலுக்கு கேட்டையே விளைவிக்கிறது. எரிக்கும் போது, அதில் இருந்து வெளிவரும் டையாக்சின் காற்றுமண்டலத்தில் கலந்து விடுகிறது.

    இதை சுவாசிப்பவர்களுக்கு தும்மல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. காற்றில் கலந் திருக்கும் டையாக்சினின் மீது மழை பொழியும் போது அவை அமில மழையாக தரையை தொட்டு பாதிப்பை தொடர்கிறது.

    பொதுவாக மண்ணில் பல் வேறு விதைகள் சிதறி கிடக்கும். மழை நேரங்களில் இவை தழைத்தெழும். மழை காலங்களில் சிறு தாவரங்களான நாயுருவி, துளசி, குப்பை மேனி, தும்பை, திருநீற்றுப்பச்சை என்று பல்வேறு மூலிகைச்செடிகள் கண்ணுக்கெட்டியதூரம் வரை வளர்ந்து சுற்றுச்சூழலுக்கும், மனிதனுக்கும் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தின.

    ஆனால் பிளாஸ்டிக் எரிப்பினால் மண்ணின் மேல் உள்ள மண்புழு மட்டுமல்லாது இதுபோன்ற விதைகளும் கருகுவதால் முன்பு போல மழைக்கு பிந்தைய சிறுதாவரங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

    இவ்வாறு புதைத்தாலும், எரித்தாலும் தன்சுபாவத்தை மாற்றி கொள்ளாமல் சுற்றுச்சூழலுக்கு தொடர்ந்து கேடுவிளைவிக்கும் இந்த பிளாஸ்டிக்குகள் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.

    திடப்பொருள்கள் வாங்க மட்டுமே பயன்படுத்தப் பட்டு வந்த இந்த பிளாஸ்டிக்குகள் தற்போது திரவ பொ ருட்களையும் ஆட்கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் உணவகங்களில் குழம்பு, ரசம் என்று பேக் செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் தற்போது இதை விட அதிகமாக டீ கடைகளில் பயன்படுத்தப்படுகிறது. கட்டட வேலைகள், தினக்கூலிகள் என்று டீயை மொத்தமாக வாங்கி பகிர்ந்து குடிக்கும் அத்தனை இடங்களிலும் இந்த முறை பரவலாகிவிட்டது.

    டீயை பார்சல் கட்டி தருவதற்காகவே பல்வேறு முன்னேற்பாடுகள் கடைகளில் செய்யப்பட்டுள்ளன. இதில் உள்ள பாலிபுரோப்பின் அதிகசூட்டினால் உருகி உணவுப்பொருளுடன் கலக்கும். கேன்சர், கிட்னி பாதிப்பு, வயிற்றுக்கோளாறு உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.

    இருப்பினும் கையை வீசிக்கொண்டு சென்று பொருளை வாங்கி பழகிவிட்ட தற்போதைய நடைமுறை பாதிப்பையும் துரிதப்படுத்தி வருகிறது.

    தூக்குவாளி போன்ற பாத்திர விற்பனையும் குறைந்துவிட்டது. சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் இந்த வில்லனை அரசு, அதிகாரிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் இணைந்து எதிர்கொள்வதன் மூலமே இதனை தடுக்க முடியும்.

    கத்தியை மிஞ்சும் பூஜை!

    By: ram On: 19:14
  • Share The Gag
  • கத்தி மற்றும் பூஜை படத்திற்கு போட்டி சரிசமமாக உள்ளது. தமிழ் நாட்டில் தங்களுக்கு வேண்டும் என்ற அளவிற்கு திரையரங்குகளை பிடித்து விட்டார்கள்.

    மேலும் ஓவர்சிஸில் விஜய் மார்க்கெட் சற்று அதிகம் என்பதால் கத்திக்கே முன்னுரிமை. ஆனால் ஆந்திராவை பொறுத்த வரை விஷாலின் கை கொஞ்சம் உயர்ந்துள்ளது.

    பூஜை படம் ஆந்திராவில் மட்டும் 400 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸ் ஆகவுள்ளது. இதுவரை எந்த தமிழ் படமும் மற்ற மாநிலங்களில் இவ்வளவு திரையரங்குகளில் ரிலிஸ் ஆனது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    உணவு ::: கொஞ்சம் உண்மைகள் + தெளிவுகள் !

    By: ram On: 18:07
  • Share The Gag
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”, உண்மைதான், இவ்வுலகில் நிறைவான வாழ்வு வாழ ஆரோக்கியம் மிக மிக இன்றியமையாதது. ஆரோக்கியமற்ற மனிதரால் விரும்பினாலும் மகிழ்சியாக வாழ முடிவதில்லை. அவர் தானும் துன்புற்று தம்மை நேசிப்பவர்களையும் வருத்தத்தில் ஆழ்த்துகின்றார்.

    இன்றைய நவ‌நாகரீக யுகத்தில் விளைந்த நவீன வாழ்வியல் முறைகளும், விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிகளும் மனித வாழ்வை பல வழிகளில் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்சென்றுள்ளன என்பது உண்மை, எனினும் நோயற்ற வாழ்வை அவை நமக்குத் தந்துள்ளன என நம்மால் நிறைவு கொள்ள முடிவதில்லை காரணம், நாளும் ப‌ல்கிப்பெருகி வரும் எண்ணற்ற நோய்கள், (பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைப்பதைப்போல அல்லவா விஞ்ஞானிகள், நாளும் ஒரு நோயைக் கண்டுபிடித்து புதிது புதிதாய் அவற்றுக்கு பெயர் வைத்துக் கொண்டு வருகின்றனர்) !!?

    இதற்கிடையில் பெரும்பாலானோருக்கு அவர்களின் உணவால்தான் பெரும் வியாதிகள் வருகிற்து. பொதுவாக ஒவ்வொருவரும் பசித்தால் மட்டுமே உண்ணவேண்டும்.*உண்பதற்கு அரைமணி நேரம் முன்பும்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍பின்பும் நீர் அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் மட்டுமே சிறிதளவு அருந்தலாம்.*உண்ணும் பொழுது கண்களை மூடி, இதழ்களை மூடி, இதழ் பிரிக்காமல் மென்று கூழ் போல் அரைத்து பின் விழுங்க வேண்டும்.*தொலைகாட்சி பார்த்தல், புத்தகம் படித்தல், செல்போன் பேசுதல், கால்களை தொங்க விடுதல் ஆகிய கவனச் சிதறல்கள் உண்ணும் நேரத்தில் கூடாது.*முடிந்தவரை வீட்டு உணவு ( நம்மேல் அக்கரை கொண்டவர்கள் சமைத்த உணவை ) உட்கொள்ளவும்.

    அதே சமயம் உணவுகளில் பல வகைகள் உள்ளன. இருந்தாலும் சுலபமாகப் புரிந்துகொள்வதற்காக நாம் சில வகைகளாகப் பிரித்துள்ளோம்.

    முதல் வகை:

    இயற்கையாக, சுவையாக இருக்கும், சமைக்காத உணவுகள், அனைத்துப் பழங்கள், தேங்காய், வெள்ளரிக்காய், கேரட் போன்றவை சமைக்காமல் அதே சமயம் சுவையாக இருக்கும் உணவுகள் இவை அனைத்தும் முதல் வகை உணவுகள். இவற்றில் சுவை 100%இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். பிராண சக்தி 100% இருக்கும். எனவே மேலும் 100 மதிப்பெண்கள். சத்துப்பொருள் 100% இருக்கும். எனவே மீண்டும் 100 மதிப்பெண்கள். ஆக மொத்தம் முதல்வகை உணவுக்கு 300 மதிப்பெண்கள். எந்த உணவைச் சமைக்காமலும், அதே சமயத்தில் சுவையாக பச்சையாகச் சாப்பிட முடியுமோ, அவையனைத்தும் முதல் வகை உணவுகளில் வரும்.

    இரண்டாவது வகை:

    சமைக்காத ஆனால் சுவையில்லாத உணவுகள் இந்த வகையில் சேரும். உதாரணமாக முளை கட்டிய தானியங்கள், சுவையில்லா பழங்களும், காய்கறி வகைகளும். இந்த இரண்டாம் வகை உணவுகளில் பிராணன் 100% இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். சத்துப்பொருள்கள் 100% இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். ஆனால் சுவை இருக்காது. எனவே அதற்கு 0.மதிப்பெண்கள். எனவே இந்த வகை உணவுகளுக்கு மொத்தம் 200 மதிப்பெண்கள். எனவே இவை இரண்டாம் தர உணவுகள் என நாம் பிரிக்கலாம். உதாரணம் முளை கட்டிய தானியங்கள்.

    மூன்றாம் வகை:

    சமைத்த காய்கறிகள், கீரைகள், தானியங்கள் அனைத்தும் இந்த மூன்றாவது வகை உணவுகளாம். ஓர் உணவை சமைப்பதால் (வேக வைப்பதால்) அந்த உணவிலுள்ள சுவை 50% குறைகிறது. எனவே சுவைக்கு 50 மதிப்பெண்கள். மேலும் சத்துப்பொருள் பாதி குறைந்து விடுகிறது. எனவே மீண்டும் 50 மதிப்பெண்கள். பிராணசக்தியும் பாதி குறைந்து விடுகிறது. எனவே மேலும் ஒரு 50 மதிப்பெண்கள். ஆக மொத்தம் இவ்வகை உணவுகளுக்கு 150 மதிப்பெண்கள் தரலாம். உதாரணம், இட்லி, தோசை, பொங்கல், ஊத்தப்பம், சாப்பாடு, சப்பாத்தி ஆகிய நாம் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் அனைத்து சமைத்த உணவுகளும்
    .
    நான்காவது வகை:

    அசைவ உணவுகள் இந்த நான்காவது வகையில் வரும். அசைவ உணவில் சத்துப் பொருள்100% இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். பிராணன் ஒன்றுமே இருக்காது. எனவே 0மதிப்பெண். சுவை இருக்காது. எனவே 0.மதிப்பெண். ஆக மொத்தம் அசைவ உணவுகளுக்கு 100மதிப்பெண்கள். எனவே அசைவ உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது அல்லது குறைப்பது நல்லது. ஆனால் சில நாடுகளில், பாலைவனப் பிரதேசங்களில், வெப்பம் அதிகமுள்ள நாடுகளில், தாவரவகை உணவுகள் கிடைக்காத காரணத்தினால் அசைவ உணவுகள் சாப்பிட வேண்டிய சூழ்நிலை உள்ளது. உடல் ரீதியாக அசைவ உணவைச் சாப்பிடுவதால் உடலுக்கு எந்தத் தீங்கும் கிடையவே கிடையாது. ஆனால் ஆன்மிக ரீதியாக ஓர் உயிரைக் கொல்வது பாபம் என்ற அடிப்படையில் நம் மனத்தில் ஓர் எண்ணம் தோன்றிய பிறகு நாம் சாப்பிட்டால் அந்த எண்ணம் நோயை உண்டாக்கும். எனவே அசைவ உணவைச் சாப்பிடுபவர்கள் இதைச் சாப்பிட்டால் பாபமில்லை என்ற எண்ணத்துடன் மனத்திலே எந்தவொரு குழப்பமும் இல்லாமல் சாப்பிடும் பொழுது சரியாக ஜீரணமாகிறது.

    அதே சமயம் மனத்தில் 50/50 சாப்பிடலாமா? வேண்டாமா? அல்லது சாப்பிட்டால் நல்லதா? கெட்டதா? என்ற எண்ணத்துடன் குழப்பத்துடன் சாப்பிடும் பொழுது அது நோயை உண்டாக்குகிறது. இஃது அசைவத்திற்கு மட்டுமன்று. எந்த ஓர் உணவைச் சாப்பிட்டாலும் உடம்புக்கு ஆரோக்கியமென்ற தெளிவான திடமான நம்பிக்கையுடன் சாப்பிடும்பொழுது அது மருந்தாக வேலை செய்கிறது. அந்த உணவு நமக்கு நோய் ஏற்படுத்துமோ என்ற எண்ணத்துடன் சாப்பிடும்பொழுது அது நோயை உண்டாக்குகிறது. இறுதியாக அசைவ உணவு சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இது நான்காவது வகை உணவு.

    ஐந்தாவது வகை:

    போதைப் பொருள்கள் (லாகிரி வஸ்துகள்) இவை உணவே அல்ல. சில பொருள்களை நாம் உணவுபோல் சாப்பிடுகிறோம். ஆனால் அவை உணவல்ல. போதைப்பொருள்கள். உதாரணமாக டீ, காபி, பீடி, சிகரெட், சாராயம், பீடா, கஞ்சா, அபின், பாக்கு ஆகியவை அனைத்தும் உணவுப் பொருள்களே அல்ல. அவை போதைப் பொருள்கள். உணவுப் பொருளுக்கும், போதைப் பொருளுக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பதென்றால் எந்தவொரு பொருளை மூன்று நேரமும் சாப்பிட்டு நம்மால் உயிரோடு இருக்க முடியுமோ இவையனைத்தும் உணவுப் பொருள்கள். எந்தப் பொருளை மூன்று நேரமும் அது மட்டும் சாப்பிட்டு உயிரோடு இருக்க முடியாதோ, அவை போதைப் பொருள்கள். தேங்காயை மட்டும் சாப்பிட்டு ஒரு மனிதன் உயிரோடு இருக்க முடியும்; அஃது உணவு. சிகரெட் மட்டும் புகைத்துக் கொண்டு ஒரு மனிதன் உயிரோடு இருக்க முடியுமா? அது போதைப் பொருள். அசைவம் சாப்பிட்டு ஒருவர் உயிரோடு இருக்க முடியும். எனவே அசைவம் என்பது ஓர் உணவு. கஞ்சா குடித்துக்கொண்டே ஒருவர் உயிரோடு இருக்க முடியுமா? இருக்க முடியாது. எனவே அது போதைப் பொருள். உணவு என்பது நம் உடலில் வெளியிலிருந்து சத்துப் பொருள்களை உடலுக்கு எடுத்துச் செல்லும் ஒரு பொருள். போதைப் பொருள் என்பது உடலிலேயே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சத்துப் பொருள்களை எடுத்துச் செலவு செய்யும் ஒரு பொருள்.

    எனவே போதைப் பொருளைப் பயன்படுத்தும் பொழுது சில குறிப்பட்ட நேரம் மட்டும் உடலில் அதிகமான தெம்பு இருக்கும். பிறகு நாம் வலுவிழந்து காணப்படுவோம். ஏனென்றால் நம் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். சில சத்துப்பொருள்களை இந்தப் போதைப்பொருள் எடுத்துச் செலவு செய்து நம்மை வீரியமாக இருக்கச் செய்கிறது. ஆனால் அது நம் உடம்பிற்கு உணவை ஒரு போதும் கொடுப்பதில்லை. எனவே தயவு செய்து போதைப் பொருள்களைச் சாப்பிடக் கூடவே கூடாது. “நான் பல மருத்துவரிடம் சென்றேன். பல வருடங்களாக சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன். ஆனால் எந்த நோயும் குணமாகவில்லை” என்று மருத்துவத்தையும், மருத்துவர்களையும் குறை சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் போதைப் பொருள்களைப் பற்றி அவர்கள் வெளியே சொல்வதே கிடையாது. எனவே அசைவம் சாப்பிடுவதை விட டீத்தூள், காபித்தூள் சாப்பிடுவது கெடுதல் அதிகம்.

    மேலே கூறப்பட்டுள்ள உணவு வகைகளைப் புரிந்து கொண்டு நீங்கள் எந்தவகை சாப்பிடுகிறீர்கள்? என்று புரிந்து கொள்ளுங்கள். முடிந்தவரை முதல் வகை உணவை நோக்கி உங்கள் பயணம் இருக்கட்டும். சில இயற்கை மருத்துவர்கள் மூன்று நேரமும் இயற்கை உணவு சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள். இஃது எல்லாராலும் கடைப்பிடிக்க முடியாது. நீங்கள் ஒரு மாதம் தொடர்ந்து மூன்று வேளையும் இயற்கை உணவு சாப்பிட்டு வந்தால் ஒரு மாதம் முடிந்தவுடன் இட்லியைப் பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறும். என்ன செய்வீர்கள்? எனவே நம் சிகிச்சையில் ஒரு சிறிய யோசனை உங்களுக்குத் தருகிறோம்.

    காலையில் சமைக்காத உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். நம் உடலுக்குத் தேவையான பிராண சக்தியும், தாது உப்புகளும் இயற்கையான முறையில் காலையில் உணவு மூலமாக நம் உடலுக்குச் சென்று விடும். பகல் உணவு சமைத்த உணவு. ஆசை தீர எது எதுவெல்லாம் பிடித்ததோ அனைத்தையும் சாப்பிடுங்கள். இது நம் மனத்திற்கு ருசிக்காக சாப்பிட்டுக் கொள்ளலாம். இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதற்காக அரிசிக் கஞ்சி, கோதுமைக் கஞ்சி போன்ற கஞ்சி, ஏதாவது ஒரு காய்கறி பொரியலை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த முறையில் சாப்பிடுவதால் இயற்கை உணவு சாப்பிட்டது போலவும் இருக்கும். ஆசை தீர சமைத்த உணவு சாப்பிட்டது போலவும் இருக்கும். கஞ்சி என்ற நோயைக் குணப்படுத்தும் மருந்தைச் சாப்பிட்டது போலவும் இருக்கும். நமக்கு எல்லா வகையிலும் சத்துப்பொருள்கள் உள்ளே சென்று நாம் என்றும் ஆரோக்கியமாக இருக்கவும், சிறந்த வழியையும் கொடுக்கும்.

    காலையில் இராஜா போல சாப்பிட வேண்டும். பகலில் மந்திரி போல சாப்பிட வேண்டும். இரவு பிச்சைக்காரனைப் போல சாப்பிட வேண்டும் என்று பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். இது தான் ஆரோக்கியத்திற்கான சரியான வழி. ஆனால் நாம் காலையில் பிச்சைக்காரனைப் போல இரண்டு தோசை, இரண்டு இட்லி என்று அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு அலுவலகத்துக்கு ஓடுகிறோம். பகலில் மந்திரியைப் போல அளவாக சாப்பிடுகிறோம். இரவு இராஜாவைப் போல அனைத்து உணவுகளையும் மொத்தமாக அள்ளிச் சாப்பிடுகிறோம். நமக்கு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணமே இரவு அதிகமாக சாப்பிடுவதுதான். எனவே காலை நேரங்களில் நம் வயிற்றில் ஜீரணசக்தி அதிகமாக இருக்கும்,

    எனவே காலை உணவை தயவு செய்து திருப்தியாக, நிறை அமைதியாக, ஆசை தீர சாப்பிடுங்கள். பகல் உணவு அளவாக இருக்கட்டும். இரவு முடிந்தவரை அளவைக் குறையுங்கள். ஏனென்றால் இரவில் நமக்கு உழைப்பு குறைவு. சூரியனும் கிடையாது. நம் உடலில் ஜீரணம் ஆக வேண்டுமென்றால் வெப்பம் இருக்க வேண்டும். பகலில் நாம் உழைக்கிறோம், நடக்கிறோம், ஓடுகிறோம், வேலை செய்கிறோம், எனவே உழைப்பு மூலமாக உடலுக்கு உஷ்ணம் கிடைக்கிறது. மேலும் சூரியன் இருக்கும்பொழுது இயல்பாகவே வெப்ப சக்தி நம் உடலுக்குள் புகுகிறது. அதனால் பகலில் அதிகமாக சாப்பிடுங்கள். இரவில் குறைவாக சாப்பிடுங்கள்.

    எவ்வளவு சாப்பிட வேண்டும்?

    பலருக்கு இந்த விஷயத்தில் மிகப்பெரும் சந்தேகம் எப்பொழுதுமே இருக்கும். காலையில் எவ்வளவு சாப்பிட வேண்டும், பகலில் எவ்வளவு சாப்பிட வேண்டும், இரவில் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று இந்த அளவில் குழப்பம் ஏற்படும்பொழுது நாம் ஒரு மருத்துவரிடம் செல்கிறோம். குறிப்பாக டயட்டீசியனிடம் சென்றால் அவர் நமக்கு அறிவுரை கூறுவார். காலையில் நான்கு சப்பாத்தியும், ஒரு கப் தயிரும் சாப்பிடுங்கள். இரவு ஐந்து இட்லி சாப்பிடுங்கள், பகலில் 750 மி.கி. சாதமும் 350 மி.லி. குழம்பும் சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுப்பார். சாப்பிடும்பொழுது மி.கி., மி.லி. பார்த்தா சாப்பிட முடியும்? சாப்பிடும்பொழுது நாம் பக்கத்தில் தராசு வைத்துக் கொள்ள முடியுமா? ஒன்று செய்யுங்கள், இனிமேல் பகலில் சாப்பிடும்பொழுது பக்கத்தில் தராசு வைத்துக் கொள்ளுங்கள். 750 மி.கி. சாப்பாட்டை அளந்து தட்டில் போடுங்கள். இது சாத்தியமாகுமா?

    மருத்துவர்கள் காலையில் 4 சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்களே, நீங்கள் வீட்டில் எல்லா வேலையும் செய்யும் பெண்மணியா? அல்லது எல்லா வேலைக்கும் ஆள் வைத்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டு சும்மா இருக்கும் பெண்மணியா என்று கேட்டார்களா? டயட் எழுதித் தருவதற்கு முன்பாக நீங்கள் கூலி வேலை செய்யும் நபரா? அல்லது கம்ப்யூட்டர் என்ஜினியரா என்று கேட்டார்களா? ஒவ்வொரு மனிதனுக்கும் வேலையின் அளவு, உடல் எடை, மனத்தில் தெம்பு, சுபாவம், கிளைமேட், இயற்கையின் அளவு முறை, நாடு, வயது, இடம், ஊர், ஆகியவற்றைப் பொருத்து உணவின் அளவு மாறும். ஒரு நாள் கட்டடவேலைக்குச் சென்று நாள் முழுவதும் கற்களைத் தூக்கும் ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று யோசியுங்கள். அதே நபர் அடுத்த நாள் தன் நண்பரின் ஏசி காரில் பயணம் செய்யும்பொழுது அவர் எவ்வளவு சாப்பிட வேண்டும்? உலகத்தில் யாருமே இன்று செய்வதைப் போல அடுத்த நாள் வேலை செய்வது கிடையாது. அப்படி இருக்கும்பொழுது ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டுமென்பதை முதலிலேயே எழுதிக் கொடுக்க முடியுமா?

    உலகத்தில் எவ்வளவு பெரிய சயன்டிஸ்ட்டாக இருந்தாலும் எவ்வளவு பெரிய மருத்துவராக இருந்தாலும் அடுத்த வேளை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை அவருக்கு அவரே எழுதிக் கொடுக்க முடியாது. இப்படி நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நமக்கே கூற முடியாத நிலையில் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எப்படி கூற முடியும்? தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவை உலகத்தில் வேறு யாராலும் கொடுக்க முடியாது. ஏன்? உங்களுக்கே தெரியாது.

    மருத்துவர்கள் காலையில் 4 சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்களே உங்கள் வீட்டுச் சப்பாத்தி எந்த அளவு இருக்குமென்று கேட்டார்களா? சிலரின் வீட்டுச் சப்பாத்தி கெட்டியாக, பெரியதாக இருக்கும். ஒன்று சாப்பிட்டாலே போதும். சில சப்பாத்தி அப்பளம் போல இருக்கும். பத்து சாப்பிட்டாலும் வயிறு நிறையாது. இப்படி இருக்கையில் எப்படி நான்கு சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்க முடியும்? ஒரு கப் தயிர் சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்களே, உங்கள் வீட்டு கப் எத்தனை பெரிய சைஸ் உள்ளது என்று அவர்களுக்குத் தெரியுமா? சற்று சிந்தியுங்கள், இரவு 5 இட்லி சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்களே, உங்கள் வீட்டு இட்லி எடை அவருக்குத் தெரியுமா? தயவு செய்து மற்றவர்கள் எழுதிக் கொடுக்கும் அளவு முறையில் தயவு செய்து சாப்பிட வேண்டாம். இது நோயைப் பெரிது படுத்துமே தவிர நோயைக் குணப்படுத்தாது.

    சரி எவ்வளவுதான் சாப்பிட வேண்டும் என்ற அளவை எப்படி கண்டுபிடிப்பது. அதற்கு சுலபமாக வழிமுறை இருக்கிறது. பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைத்துச் சுவையை ரசித்து, ருசித்து சாப்பிட்டால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நமக்கு சாப்பிடப் பிடிக்காது. முதல் முறை வாயில் எடுத்து வைக்கும் பொழுது பிடித்த அதே உணவு எப்பொழுது நமக்குப் பிடிக்கவில்லையோ, போதும் என்று அர்த்தம். வழக்கமாக நீங்கள் காலையில் 10 இட்லி சாப்பிடும் நபராக இருந்தால் கவனத்தை இட்லியின் மீதும், இட்லியிலுள்ள சுவையின் மீதும் கவனம் வைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள், நான்கு இட்லி சாப்பிட்ட பிறகு ஐந்தாவது இட்லியைப் பார்த்தால் உங்களுக்குச் சாப்பிடப் பிடிக்காது. எப்பொழுது பிடிக்கவில்லையோ உங்கள் அளவு முடிந்து விட்டது என்று அர்த்தம்.
    கவனத்தை உணவில் வைத்துச் சாப்பிடும் பொழுது நமக்கு அளவு தெரியும். கவனத்தை செல்போனிலோ, ட.வி.யிலோ அல்லது பேச்சிலோ வைத்துச் சாப்பிடும் பொழுது நமக்கு அளவு தெரிவதில்லை. எனவே தயவு செய்து சாப்பிடும் பொழுது கவனத்தை உணவிலும், சுவையிலும் வைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நம்மால் சாப்பிட முடியாது.

    எனவே நம் சிகிச்சையில் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதற்கு மி.கி., கி.கி., தராசு போன்ற அளவு முறைகள் தேவையில்லை. பசி எடுத்தால் சாப்பிட வேண்டும். ருசித்து சாப்பிட வேண்டும். மனத்திற்கு எப்பொழுது போதுமென்று எண்ணம் ஏற்படுகிறதோ அப்பொழுது நிறுத்த வேண்டும். எனவே ஆசை தீர சாப்பிடுங்கள். கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் ஒரு தவறும் கிடையாது. பசி கொஞ்சம் தள்ளிப் போகும். அவ்வளவுதான். குறைவாகச் சாப்பிட்டால் ஒரு தவறும் கிடையாது. நமக்கு சீக்கிரமாகப் பசித்து விடும். எனவே தயவு செய்து சாப்பிடும்பொழுது அளவு பார்க்காதீர்கள். உங்கள் மனத்திற்குப் பிடித்த அளவு ஆசை தீரச் சாப்பிடுங்கள். ஆனால் ஒரேயொரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் பசி எடுக்கும் வரை வேறு எதையும் சாப்பிடக்கூடாது.

    எனக்குக் கண்டிப்பாக சாப்பிடுவதற்கு அளவு வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஒரு வழிமுறையைச் சொல்கிறேன். உங்கள் வீட்டிலுள்ள நாய்க்கு ஒரு கப் சாதம் கொடுங்கள். அது சாப்பிட்டு முடித்த பிறகு மீண்டும் வேண்டுமென்று வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும். மீண்டும் ஒரு கப் சாப்பாடு கொடுங்கள். மீண்டும் கேட்கும். மூன்றாவது கப் சாப்பாடு கொடுத்தால் அதில் பாதியை மட்டும் சாப்பிட்டு விட்டு மீதியை அங்கேயே விட்டுவிட்டு நடக்க ஆரம்பிக்கும். அந்த நாயை “வா வந்து சாப்பிடு, என்னிடம் இன்னும் ஏழு கப் சாப்பாடு உள்ளது” என்று நீங்கள் கொட்டினாலும் அது சாப்பிடாது. ஏனென்றால் ஒரு நாய்க்குத் தெரியும். நாம் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று மனிதர்களுக்குத் தெரிவதில்லை. ஏனென்றால் நாய் பசித்து, ருசித்து சாப்பிடுகிறது. மனிதன் பசிக்காமல், ருசிக்காமல் சாப்பிடுகிறான்.

    எனவே  நம் சிகிச்சை முறையில் பசி எடுத்தால் சாப்பிட வேண்டும். ரசித்து, ருசித்து ஆசை தீர சாப்பிட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். யார் யார் வீட்டில் 80 வயதிற்கு மேல் தாத்தா, பாட்டி ஆரோக்கியமாக இருக்கிறார்களோ அவர்கள் கண்டிப்பாக எந்த உணவையும், எந்தச் சுவையையும் வேண்டாமென்று ஒதுக்கியிருக்க மாட்டார்கள். சுவை, சுவையாக வித விதமாக மனத்திற்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிடுவது மூலமாக நாம் ஆரோக்கியமாக இருக்க முடியுமே தவிர நோய்கள் வராது. எனவே சுவையைப் பற்றியும், உணவைப் பற்றியும் தெரியாத சில மருத்துவர்கள் கூறும் தவறான விதிகளை தயவு செய்து கடைப் பிடிக்க வேண்டாம்.

    பாடல்கள் இல்லாமல் ஷங்கர் இயக்கும் புதிய படம்?

    By: ram On: 17:49
  • Share The Gag
  • இயக்குனர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்று தான் அர்த்தம். அதிலும் இவரது படங்களில் இடம்பெறும் பாடல் காட்சிகளுக்காகவே தனி ரசிகர்கள் உள்ளனர்.

    சமீபத்தில் ஒரு முன்னணி ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த இவர், ‘ஏன் உங்கள் படங்களில் பாடல்களை பிரம்மாண்டமாக படம் பிடிக்கிறீர்கள்’ என்ற கேள்விக்கு ‘என்னிடம் பாடல்களே இல்லாமல் ஒரு கதை உள்ளது.

    கூடிய விரைவில் அப்படத்தை இயக்குவேன்’ என்று கூறியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் -2ம் பாகத்தை இயக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஐ படம் குறித்து ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி!

    By: ram On: 12:34
  • Share The Gag
  • ஐ படம் வரும் தீபாவளியன்று வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாத நிலையில், ஒரு ருசிகர தகவல் வந்துள்ளது.

    படத்தின் ஹிந்தி பதிப்பின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் வர சம்மதித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    மேலும் படத்தின் ரிலிஸ் தகவல் இன்னும் 2 நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என தயாரிப்புக்குழு அறிவித்துள்ளது.

    இளநரையை போக்க வழிகள்...?

    By: ram On: 12:04
  • Share The Gag
  • இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான். ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் போன்றவை எல்லாம் தொடங்கி, மனதில் மகிழ்ச்சியையே மறக்கச் செய்துவிடும்.


    முதலில் இளநரை என்றால் என்ன என்று தெரிந்துகொண்டு, அது தோன்றுவதற்கான காரணங்களை அறிந்து கொண்டால், அதன்பின் இளநரை வராமல் தடுப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.நரைமுடியை 30 முதல் 40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம்.


    ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது.


    அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கங்களால், முடிக்கு தேவையான சத்துகள் கிடைக்காமல், நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு, வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர்.


    ஆகவே இந்த மாதிரியான பிரச்னைகளை சந்தித்தால், அதற்கு முடியை சரியாக பராமரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். நரைமுடியை கருமையாக்க உதவும் சில பொருட்களை பயன்படுத்தினால் போதும். நிச்சயம் நரை முடி பிரச்னையில் இருந்து விடுபடலாம்.


    • நரை முடியை கருமையாக்க வேண்டுமானால், இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.


    • வாரத்துக்கு ஒரு முறை செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து, அதனை தலையில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளித்தாலும், நரைமுடி மறைய ஆரம்பிக்கும். சுத்தமான தேங்காய் எண்ணையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, அதனை தலைக்கு தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.


    • விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அதில் ஹென்னா பொடியை தூவி கட்டியில்லாதவாறு நன்கு கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு குளித்து வந்தால், நரைமுடி மறையும். அதிலும் இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வருவது நல்லது.


    • தயிர் மற்றும் ஹென்னாவை சரிசமமாக எடுத்து கலந்து கொண்டு, அதனை நரைமுடியின் மீது தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால், நரை முடி மறையும். வெங்காயத்தை சாறு எடுத்து, அதனை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது அதன் இயற்கை நிறத்தைப் பெறும். அதிலும் இதனை நான்கு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்

    நயன்தாராவை தொடர்ந்து மற்றொரு நடிகையையும் அழைத்த நித்தி!

    By: ram On: 11:44
  • Share The Gag
  • சமீபத்தில் நடிகை நயன்தாராவிற்கு, நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து அழைப்பு வந்தது. படப்பிடிப்பு வேலைகளில் நயன் பிசியாக இருப்பதால் இந்த அழைப்பை ஏற்க மறுத்து விட்டார்.

    இதை தொடர்ந்து இவர்களது பார்வை மற்றொரு கதாநாயகி பக்கம் திரும்பியுள்ளது. அவர் வேறு யாரும் இல்லை, வட இந்திய சின்னத்திரை பிரபலமான ஸ்வேதா திவாரி தான்.

    ஆனால், அவர் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டாரா? என்று தற்போது வரை தெரியவில்லை.

    வீட்டில் இருக்கு பாட்டி மருத்துவம்...!!!

    By: ram On: 10:49
  • Share The Gag
  • இருமல் சளி குணமாக: சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

    தொண்டை கரகரப்பு நீங்க: அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

    பித்தவெடிப்பு: காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

    தொண்டை வலிக்கு: பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

    இருமல் : தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

    கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்: கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

    இருமல் சளிக்கு: தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

    கட்டிகள் உடைய: மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

    பேன் தொல்லை நீங்க: வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

    தும்மல் வராமல் இருக்க: தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

    ரஜினி, அஜித் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து வெயிட்டிங்!

    By: ram On: 09:46
  • Share The Gag
  • இந்த தீபாவளிக்கு அஜித் மற்றும் ரஜினி படம் வராதது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். ஆனால் அவர்களை உற்சாகப்படுத்துவது போல் ஒரு செய்தி வந்துள்ளது.

    நீண்ட நாட்களாக பெயர் வைக்காமல் இருந்த அஜித்-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு தீபாவளி அன்று டைட்டில் அறிவிக்கப்படும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    இதை தொடர்ந்து ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் டீசரும் அதே நாளில் ரிலிஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குடல் பிரச்சனைகளைத் தீர்க்கும் மணத்தக்காளி கீரை!

    By: ram On: 09:12
  • Share The Gag
  • அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.

    வயிற்றிலும், வாயிலும் தோன்றும் புண்களை உடனடியாக சிகிச்சை செய்து குணப்படுத்திக் கொள்ளாவிட்டால் பல வீபரீதமான விளைவுகள் ஏற்படக்கூடும். மிக மோசமான நிலையை அடைந்து விட்ட குடற்புண்ணைக்கூட தொடர்ந்து மணத்தக்காளிக் கீரையை சாப்பிட்டு வருவதன் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தி விடலாம். குடற்புண், வாய் புண் அதிகமாக இருந்தால் மணத்தக்காளி கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு போல வைத்து சாப்பிடவேண்டும்.

    தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல குணம் பெறலாம். உடலில் தோன்றும் கரப்பான் வகை பிணிகளுக்கும் மணத்தக்காளி நல்ல விதத்தில்
     பன்படுகிறது. நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது..

    மணத்தக்காளி கீரை குடல் பிரச்சனைகளை சரிபடுத்துவதோடு மட்டுமல்லாமல், அஜீரணம், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள், ஆகியவற்றையும் சரிசெய்கிறது. மணத்தக்காளி கீரையின் சாறு காய்ச்சல், காய்ச்சலால் ஏற்படும் கை கால் வலிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மணத்தக்காளியை அழகுக்காக பயன்படுத்துகின்றனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மணத்தக்காளியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயிலிருந்து குணம் பெறலாம்.

    வடஇந்தியாவில் மஞ்சள் காமாலை, கல்லீரல் தொடர்பான வியாதிகளை குணப்படுத்த மணத்தக்காளியின் பழம் மற்றும் கீரைகளை வேகவைத்து அதன் சாற்றை பருகுகின்றனர். தோலில் ஏற்படும் அலர்ஜி வெயிலுக்கு ஏற்படும் கட்டிகள், தோல் அரிப்பு போன்றவற்றை சரிபடுத்த கீரையை சாறாக பிழிந்து அதன்மேல் தேய்க்க வேண்டும். காபி தயாரிக்கும் போது கீரையின் தண்டு, இலை சேர்த்து காபி தயாரித்து குடிக்கலாம். ஏனெனில் காயங்கள், புற்றுநோய் புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது மணத்தக்காளி கீரை...

    நான் சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் ஒருவர்!

    By: ram On: 08:22
  • Share The Gag
  • சூப்பர் ஸ்டாரிடம் நல்ல பெயர் வாங்குவது கடினமான ஒன்று. அந்த வகையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மிகவும் கொடுத்து வைத்தவர்.

    அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘ நான் கோச்சடையான் படத்தில் நடித்ததிலிருந்தே, சூப்பர் ஸ்டார் குடும்பத்திற்கு நெருக்கமானவள் ஆகி விட்டேன்.

    தற்போது நான் எப்போது சென்னை வந்தாலும் ரஜினி சார் வீட்டிற்கு வராமல் இருக்க மாட்டேன், அந்தளவிற்கு அவர்கள் குடும்பத்தில் ஒருவராக ஆகிவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

    சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை

    By: ram On: 08:09
  • Share The Gag
  • சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை


     காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்.


    எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது.
    மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்,


    முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய்,


    எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.


    எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.


    எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.

    வீரம் படத்தின் சாதனையை முறியடித்த கத்தி!

    By: ram On: 01:42
  • Share The Gag
  • கடந்த பொங்கல் அன்று அஜித் நடிப்பில் வெளிவந்த வீரம் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. இப்படம் கோயமுத்தூரில் மட்டும் 75 திரையரங்குகளில் வெளிவந்தது.

    இதுநாள் வரை இப்படத்தின் சாதனையை எந்த படமும் முறியடிக்காமல் இருந்தது. இந்நிலையில் விஜய் நடித்த கத்தி திரைப்படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வரவுள்ளது.

    இப்படம் கோயமுத்தூர் மாவட்டத்தில் மட்டும் 90 திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவுள்ளது. இதன் மூலம் வீரம் படத்தின் சாதனையை கத்தி முறியடித்துள்ளது.

    வலி நிவாரண மாத்திரைகள் எச்சரிக்கை !!

    By: ram On: 01:33
  • Share The Gag
  • உடல்வலி மற்றும் தலைவலிக்காக பெண்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக அளவில் வலிநிவாரணி மாத்திரைகள் உட்கொள்பவர்கள் விரைவில் கேட்கும் திறனை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.


    ப்ரூபின், பாரசிட்டமால் போன்ற மாத்திரைகள் பெண்கள் அதிகம் உபயோகிக்கும் மாத்திரைகள். இந்த மாத்திரைகள் உபயோகிப்பதனால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக 1995 முதல் 2009 ஆம் ஆண்டுவரை 14 ஆண்டுகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


     இதில் 31 வயது முதல் 48 வயது வரை 62000 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் வலி நிவாரண மாத்திரை சாப்பிட்ட 13 சதவிகிதம் பெண்களின் காது கேட்கும் திறன் குறைந்துள்ளது தெரியவந்தது.அவற்றில் ஒரு ரக மாத்திரையை வாரத்துக்கு 2 தடவை உபயோகித்தால் 24 சதவிகிதம் செவிட்டு தன்மையும், மற்றொரு ரக மாத்திரையை வாரத்துக்கு 6 தடவை பயன்படுத்தினால் 21 சதவிகிதம் செவிட்டு தன்மையும் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


    ஆனால் ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடும் பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதில்லை என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்களுக்கு செவிட்டுத்தன்மை ஏற்படுவதாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    ‘நீ நான் நிழல்’ மொத்தத்தில் நிஜம். - திரைவிமர்சனம்..!

    By: ram On: 00:08
  • Share The Gag
  • மலேசியாவில் தொடர்ந்து 5 கொலைகள் நடக்கிறது. இந்த கொலைகளுக்கான காரணத்தை அறிய முயற்சி செய்து வருகிறார் அந்நாட்டு போலீஸ் அதிகாரியான அன்வர் (சரத்குமார்). அதன்படி அவர் அந்த 5 பேர் பற்றிய தகவல்களை சேகரிக்க ஆரம்பிக்கிறார். இவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும் பேஸ்புக்கில் இவர்களுக்கு பொதுவான நண்பராக ஆஷா பிளாக் என்னும் பெண் இருப்பதாக தகவல்களை அறிகிறார். அவள் தான் இந்தக் கொலைக்கு காரணமாக இருக்க கூடும் என்று சந்தேகப்பட்டு அவரை தேடி வருகிறார்.

    இந்நிலையில் கோயம்புத்தூரில் எம்.எஸ்.பாஸ்கர் நடத்திவரும் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் தன் நண்பர்களுடன் மியூசிக் பேண்டு நடத்தி வருகிறார் ரோஹித் (அர்ஜூன் லால்). இவருக்கு பேஸ்புக்கில் ஆஷா பிளாக் என்னும் பெயரில் இருந்து பிரண்ட்ஸ் அழைப்பு வருகிறது. ரோஹித்தும் அழைப்பை ஏற்று அவளுடன் இண்டர்நெட்டில் சாட் மூலம் பேச ஆரம்பிக்கிறார்.

    சாட் மூலம் பேச ஆரம்பிக்கும் ரோஹித், நாளடைவில் அவளுடைய பேச்சுக்கு அடிமையாகிறார். நாள் முழுவதும் ஆஷாவிடம் பேசுவதால் தன் நண்பர்கள் மற்றும் மியூசிக்கில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. நண்பர்களும் யார் என்று தெரியாத ஒரு பெண்ணிடம் இப்படி பேசாதே என்று அறிவுரை கூறுகிறார்கள்.

    ரோஹித்தும் அவளுடைய முகத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அதற்காக ஆஷாவிடம் போட்டோவை அனுப்பும்படி கேட்கிறான். ஆனால் ஆஷா போட்டோ அனுப்ப முடியாது வேண்டுமென்றால் வீடியோகால் மூலம் பேசலாம் என்று கூறுகிறார். இதை ஏற்கும் ரோஹித் வீடியோகாலுக்காக காத்திருந்து ஆஷாவை பார்க்கிறான். ஆஷாவை பார்த்தவுடன் அவளுடைய அழகில் மயங்குகிறான். அதன்பிறகு இருவரும் வீடியோகால் மூலம் அடிக்கடி பேச ஆரம்பிக்கிறார்கள்.

    ரோஹித், ஆஷாவின் பேச்சுக்கு அடிமையாகிறான். ஆஷா மீது காதல் வயப்படுகிறான். ஆஷாவை நேரில் சந்திக்க ஆசைப்பட்டு அவளிடம் நான் மலேசியாவிற்கு வருகிறேன் என்று கேட்கிறான். முதலில் மறுக்கும் ஆஷா பிறகு ரோஹித்தின் கட்டாயத்தால் சந்திக்க சம்மதிக்கிறார்.

    இறுதியில் மலேசியாவிற்கு சென்ற ரோஹித், ஆஷாவை சந்தித்தாரா? போலீஸ் அதிகாரியான அன்வர் தேடிவரும் ஆஷாவை கண்டுபிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

    படத்தில் சரத்குமார், போலீஸ் அதிகாரியான அன்வர் கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறார். துப்பறியும் காட்சிகளிலும், தன் குழந்தை மீது அக்கறை காட்ட முயற்சிப்பதும் அருமை. ஆனால் இவர் பாணியில் ஒரு சண்டைக்காட்சி கூட இல்லை என்பதுதான் வருத்தம்.

    ரோஹித்தாக நடித்திருக்கும் அர்ஜூன் லால், புதுமுகம் என்று தெரியாதளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். ஆஷாவை காதல் செய்யும் காட்சிகளும், அவளுக்காக ஏங்குவது உள்ள காட்சிகளில் நடிப்பில் அருமை. ஆஷா பிளாக் என்னும் கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் இஷிதா, அழகில் ரசிகர்களை கவர்கிறார். நடிக்க வாய்ப்புகள் குறைவு என்றாலும் கொடுத்த வேலையை திறம்பட செய்திருக்கிறார்.

    மலேசியாவை அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் நஸீர். ஜெசின் ஜார்ஜ் இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. இவரின் இசையில் இரண்டு பாடல்களை ரசிக்கலாம். பின்னணி இசையையும் சிறப்பாக செய்திருக்கிறார்.

    இன்றைய இளைஞர்கள் சமூக வலை தளங்களை எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதையும் பெற்றோர்கள் தன் பிள்ளைகளிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கதை எழுதி இயக்கிய ஜான் ராபின்சன்னை பாராட்டலாம். இன்றைய வாழ்க்கையில் பேஸ்புக் என்பது மிகவும் தவிர்க்க முடியாத தகவல் பரிமாற்ற சாதனமாகிவிட்டது. இந்த பேஸ்புக் பல நல்ல விஷயங்களுக்கு பயன்படுவது போலவே, மோசமான விஷயங்களுக்கும் பயன்படுகிறது என்பதை திரைக்கதையாக அமைத்து ரசிக்கும்படி இயக்கியிருக்கிறார்.

    மொத்தத்தில் ‘நீ நான் நிழல்’ நிஜம்.