Wednesday, 30 July 2014

பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்..?

By: ram On: 21:54
  • Share The Gag

  • 1] பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும்.
    .
    2] பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்க
    கொள்ளவே விரும்பும்.. எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.
    .
    3] பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.
    .
    4] ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக் கொள்ளவே முயற்சி செய்யும்.
    .
    5] விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக
    இருக்கும்.
    .
    6]பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள்.
    .
    7] பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்.
    .
    8] நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக
    கொடூரமானதாக இருக்கும்.
    .
    9] பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக்கொள்ள முயற்சிக்கும்.
    .
    10] பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலைசெய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலைசெய்யும்
    அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு.
    .
    11] பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்.
    .
    12] பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.
    .
    13] பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு.
    நல்ல பேய் கனவோடு நிம்மதியா தூங்குங்க..

    மனஅமைதி தரும் யோனி முத்திரை! முயற்சித்து பாருங்கள்..!

    By: ram On: 21:19
  • Share The Gag

  • நண்பர்களே இதைப் போல் பயிற்சி செய்யும் முன் தங்களின் குருவை ஏற்றுக் கொண்டு அதன் பிறகு செய்யுங்கள்.

    மனஅமைதி தரும் யோனி முத்திரை!

    தினமும் குறைந்தது 15 நிமிடமாவது பயிற்சியில் ஈடுபடவேண்டும். இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் ஆழ்ந்த உறக்கம், மன அமைதி, சுகமான இல்லறம் என தவறாமல் அமையும். யாவரும் பயிற்சி செய்யலாம். இந்த முத்திரையை இரண்டு விதமாகச் செய்யலாம்.

    1. இரண்டு கைகளையும் கோபுரம் போல் குவித்து அதைத் தலை கீழாகக் கொணர்ந்து தொப்புளுக்கு நேராக வைத்துக் கொள்ளவேண்டும்.எல்லா விரல்களும் அதன்அதன் விரலோடு ஒன்றி இருக்கும்படி செய்யவும்.

    2. கட்டைவிரலைக் கட்டை விரலோடு சேர்த்தும், ஆள்காட்டி விரலை ஆள்காட்டி விரலுடன் சேர்த்தும் மற்ற மூன்று விரல்களை ஒன்றுடன் ஒன்று பிணைத்துக் கொண்டு தொப்புளுக்கு நேராக தலைகீழாகப் பிடிக்க வேண்டும். இவ்வாறு இந்த முத்திரையை 20 நிமிடம் செய்ய வேண்டும்.

    பெண்களுக்கு உதவும் எண்கள்...! அனைவரும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்..!

    By: ram On: 21:02
  • Share The Gag


  • பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது. எனவே பெண்களை பாதுகாக்வும் அவர்களுக்கு குரல் கொடுக்கவும் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகிறது அவற்றின் சில உதவி எண்கள்...

    பெண்கள் அவசர உதவி எண் : 1091, 044-23452365.

    பெண் குழந்தைகள் உதவி எண் : 1098.

    வயதான பெண்கள் உதவி எண் : 1235.

    வன்கொடுமை,
    பாலியல் துன்புறுத்தல் :
    044-28551155, 044-2504568.

    ஆதரவற்ற பெண்களுக்காக :
    044-26530504, 044-2650599.

    வாடகை தாய் பற்றி தெரிந்துகொள்ள :
    044-26184392, 91713 13424.

    பெண் ரயில் பயணிகளுக்கு :
    044-2533999, 99625 00500.

    ரேக்கிங் பிரச்னைகளுக்கு :
    95000 99100 (எஸ்எம்எஸ் எண்)

    கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி…

    By: ram On: 18:16
  • Share The Gag
  •        கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும்.

    கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.

    வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும். இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.

    இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும். இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.

    இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது. கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும். தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.

    மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும். சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

    குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.

    இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.

    அஜித்-ஷங்கர் கூட்டணி உறுதியானது!

    By: ram On: 17:25
  • Share The Gag

  • தமிழ் திரையுலகின் பிரம்மாண்டம் என்றால் அது ஷங்கர் தான், இவரிடம் பணிபுரிவதற்கு கோலிவுட் முதல் பாலிவுட் ஹீரோக்கள் வரை தவம் இருக்கிறார்கள்.

    அதேபோல் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் அஜித், இவர்கள் இருவரும் இணைந்தால் எப்படியிருக்கும்? ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த கூட்டணி விரைவில் அமையப்போகிறது.

    இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தான் தயாரிக்கயிருக்கிறாராம், இந்த ஒப்பந்தத்தில் அஜித்-ஷங்கர் இருவருமே கையெழுத்திட்டதாக நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படுறீங்களா? இந்த ஜூஸ்களை குடிங்க...

    By: ram On: 16:57
  • Share The Gag
  •          காலநிலை மாற்றத்தினால், இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படக்கூடும். அதுமட்டுமின்றி இவைகள் அளவுக்கு அதிகமாகும் போது, காய்ச்சல் வர ஆரம்பிக்கும். ஆகவே அப்படி அவஸ்தைப்படும் போது, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டால், நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பதைத் தடுக்கலாம்.

    ஒருவேளை அப்படி சிகிச்சை எடுக்காமல், லேசாக கரகரவென்று தான் உள்ளது என்று சாதாரணமாக நினைத்தால், பின் தொண்டையானது அளவுக்கு அதிகமாக புண்ணாகிவிடும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை, இருமல், தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டைப் புண்ணை சரிசெய்யும் ஒருசில அருமையான ஜூஸ்களைக் கொடுத்துள்ளோம். இந்த ஜூஸ்கள் அனைத்தும் நிச்சயம் தொண்டைப் புண்ணை குணமாக்கும் தன்மை கொண்டவை. மேலும் நிபுணர்கள் கூட இந்த ஜூஸ்களை குடிக்குமாறு பரிந்துரைத்துள்ளனர்.

    எனவே இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் காய்ச்சல் வருவதற்குள், அவைகளை சரிசெய்ய கீழ்க்கூறிய ஜூஸ்களை முயற்சி செய்து பாருங்கள். அதிலும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால், மூன்றே நாட்களில் தொண்டைப் புண்ணில் இருந்து விடுபடலாம்.

    குறிப்பு: இந்த ஜூஸ்களை குடிக்கும் போது, அதில் குளிர்ச்சியான தண்ணீரோ, பாலோ அல்லது ஐஸ் கட்டிகளையோ சேர்க்கக் கூடாது.

    எலுமிச்சை ஜூஸ்


     எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிவதோடு, புண்ணும் குணமாகும்.

    இஞ்சி ஜூஸ்


     இஞ்சியில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை இருப்பதால், இது எந்த வகையான கிருமியானாலும் எளிதில் அழித்துவிடும். எனவே தொண்டை கரகரவென இருக்கும் போதே, சிறிது இஞ்சி ஜூஸ் குடித்துவிடுங்கள்.

    கேரட் ஜூஸ்

     கேரட்டில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது தொண்டையில் எவ்வித தொற்றுகள் இருந்தாலும் குணப்படுத்திவிடும். அதலும் இதனை தினமும் ஒரு கப் குடித்து வந்தால், தொண்டைப் புண்ணின் தொல்லையில் இருந்து குணமாகலாம்.

    பூண்டு ஜூஸ்

     இஞ்சியைப் போன்றே பூண்டிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே தொண்டைப் புண் இருக்கும் போது 4 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பூண்டு ஜூஸ் குடித்தால், உடனே குணமாகிவிடும்.

    குருதிநெல்லி ஜூஸ் (Cranberry Juice)

    தொண்டைப் புண்ணை சரிசெய்யும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் குருதிநெல்லி. ஆகவே தொண்டைப் புண் இருக்கும் போது குருதிநெல்லியை ஜூஸ் போட்டு குடியுங்கள்.

    ஆரஞ்சு ஜூஸ்
     ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இதனை ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண் மற்றும் வலி குணமாகும்.

    கற்றாழை ஜூஸ்


     கற்றாழை ஒரு சிறப்பான மூலிகைப் பொருள். இந்த கற்றாழையை சாறு எடுத்து, அதில் சிறிது கிராம்பு பொடி சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் விரைவில் குணமாகும்.

    தக்காளி ஜூஸ்

     தினமும் இரண்டு முறை தக்காளி ஜூஸில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

    புதினா ஜூஸ்
     இஞ்சி, பூண்டு போன்றே புதினாவிலும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் உள்ளது. அதற்கு இதனை சாறு எடுத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து குடிக்க வேண்டும்.

    அன்னாசிப் பழ ஜூஸ்

     அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்னும் நொதி உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் இருப்பதால், இது தொண்டையில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு ஆகியவற்றை குணமாக்கும்.

    கிவி ஜூஸ்


     கிவி பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால் கூட தொண்டைப் புண்ணுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இதில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இது வறட்சி இருமலில் இருந்து பாதுகாக்கும்.

    வாழைப்பழ ஜூஸ்


     வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதனை ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண்ணை சரிசெய்யலாம். மேலும் வாழைப்பழத்தை சாப்பிட்டால், சளி மற்றும் இருமலில் இருந்து விலகி இருக்கலாம்.

    தர்பூசணி ஜூஸ்


     தர்பூசணியை வெதுவெதுப்பான நீரில் ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண்ணினால் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

    ஆப்ரிக்காட் ஜூஸ்


     தொண்டைப் புண்ணினால் அவஸ்தைப்படும் போது, ஆப்ரிக்காட் ஜூஸ் போட்டு குடிப்பது நல்லது.

    மிளகு கசாயம்

     மிளகை வாணலியில் போட்டு நன்கு வறுத்து, பின் அதில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட்டு, அந்த நீரை சூடாக குடித்தால், தொண்டையில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, தொண்டைப் புண் உடனே குணமாகும்.

    நகங்களை நீங்களும் கடிக்கிறீர்களா? இதைத் தொடர்ந்து படிக்கவேண்டும்..!

    By: ram On: 16:43
  • Share The Gag
  • அப்படியாயின் இதைத் தொடர்ந்து படிக்கவேண்டிய கட்டாயம் உங்களுக்கு.

    நகங்களை ஏன் தேவையில்லாமல் கடிக்கிறார்கள்? இது பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு இந்நிகழ்வு வந்திருக்கின்றது. சமீபத்தில் கிடைக்கப்பெற்ற ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளின்படி, குழந்தைகள், சிறுவர்கள் மட்டுமன்றி, வயது வந்தவர்களும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள்.

    இதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் வயது வந்தவர்களில் 20வீதமானவர்கள் நகங்களையோ அல்லது பென்சில் போன்ற பொருட்களையோ கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.

    இதில் கொஞ்சமாவது நாம் ஆறுதலடையவேண்டிய விடயம் என்னவெனில், தங்களது செயல்களில் வெற்றியடையும் மனிதர்களே அதிகமாக நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது.

    நகங்களைக் கடிக்கும் 109 பேரினை வைத்து ஆராய்ச்சி செய்ததில், தங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக அவர்கள் இருந்திருக்கின்றார்கள்.

    மேலும் இவர்கள் தங்களுக்குப் பாதகமான சூழ்நிலைகளில் தீவிரமாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையும் அதே நேரம் தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளில் குறைவாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையோ அன்றி நகங்களைக் கடிக்காமலேயே கூட இருக்கும் தன்மையையும் கொண்டிருந்தார்கள்.

    தங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத ஒரு இயலாமை நிலையிலே தங்கள் நகங்கள் மீது கோபங்களைக்காட்டி விடுபவர்களும் உண்டு.

    ஆராய்ச்சியாளர்களின் தகவல்களின்படி பார்க்கும் போது, நகம் கடிப்பவர்களே அதிகமாகப் புகைப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். நகம் கடிக்கும் பெண்கள் மென்மையாக இருக்கிறார்கள். அதே வேளையில் நகம் கடிக்கும் ஆண்களோ முரட்டுத்தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள். நகங்களைக் கடிப்பதால் நகங்களைச்சுற்றி விரல்களில் கண்களுக்குப் புலப்படாத புண்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த நிகழ்வை இல்லாமற் செய்வதற்கு மருத்துவக் காப்புறுதிகள் உதவவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.

    மூக்கின் அழகை மறைக்கும் தழும்பை போக்க டிப்ஸ்!

    By: ram On: 08:06
  • Share The Gag
  • தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும்.

    இத்தகைய தழும்புகள் ஏற்படுவதற்கு காரணம் கனமான கண்ணாடி மற்றும் மூக்கினை அழுத்தும் படியாக நீண்ட நேரம் கண்ணாடி அணிவது தான்.
    இது முகத்தில் ஒருவிதமான அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

    1. தினமும் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவி, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தினமும் 3 முறை செய்து வந்தால், அத்தகைய கருப்பான தழும்புகளை படிப்படியாக மறைவதை காணலாம்.

    2. உருளைக்கிழங்கை தழும்புள்ள இடத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால், கண்ணாடியால் ஏற்படும் தழும்புகளை மறையும்.இவ்வாறு வாரம் 4 நாட்கள் செய்ய வேண்டும்.

    3. எலுமிச்சை சாறும் கருமையான தழும்புகளை போக்க வல்லது. எலுமிச்சை சாற்றினை பஞ்சில் நனைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

    அதன் பின்னர் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருமை நிறம் மறையும்.

    4. கற்றாழை ஜெல்லும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு சிறந்த பொருள். ஏனெனில் அதிலும் கிளின்சிங் தன்மை அதிகம் உள்ளது.

    ஆகவே இதுவும் தழும்புகள் மற்றும் வடுக்களை போக்குவதற்கு வல்லது.

    ஊட்டச் சத்து குறைபாடா? சிறு தானியங்களுக்கு மாறுங்களேன்!

    By: ram On: 07:43
  • Share The Gag
  • 21 - health_FOOD_GRAINS__
    உணவே மருந்து என்று நம்முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவு தான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகிறது.இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கம் தான்.அதிலும் இப்போது பாஸ்ட் ஃபுட் கலாச்சாரமாகி விட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறிவிட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாறவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

    கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கு முன்புவரை தமிழக மக்களின் உணவு பழக்க வழக்கங்கள் வரகு, கேழ்வரகு, கவுளி அரிசி, தினை, சாமை, குதிரைவாலி போன்ற புஞ்சை தானியங்களை சார்ந்து இருந்தது. பசுமைப்புரட்சிக்குப் பின்னர்தான் அனைவரும் நெல்லரிசியை முதன்மையாகக் கொண்டு தங்கள் உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டனர்.
    அதுமட்டுமின்றி நெல்சோறு உண்பவர்கள் சமூகத்தில் மேலானவர்கள், சிறுதானியங்களை உண்போர் கீழானோர் என்ற கருத்து உருவானது. இதனால் சிறுதானியங்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது.


    இதற்கிடையில் நெல் அல்லது கோதுமை என்ற பசுமைப்புரட்சியின் ஒற்றைச் சிந்தனையிலிருந்து விடுபட்டு, வரகு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரை வாலி போன்ற சிறுதானியங்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்படி மாறினால் தான் மண்ணின் வளத்தையும், சூழல் பாதுகாப்பையும் ஏற்படுத்த முடியும்.


    சமீபத்தில் இந்திய மருத்துவக்கழகம் நடத்திய ஆய்வில், தமிழகத்தில் 42 லட்சம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நோய் அறிகுறிகளுடன் 30 லட்சம் பேர் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. உணவுப்பழக்க வழக்கம் மாறிவிட்டதால் சத்தான உணவு என்பது கேள்விக்குறியாகி விட்டது.


    நெல், கோதுமை, வாழை, கரும்பு ஆகியவற்றை காட்டிலும் சிறுதானிய பயிர்களே பல் உயிர் பெருக்கத்திற்கு காரணமாக உள்ளன. வரகு, சாமை, கம்பு, பனிவரகு, கேழ்வரகு, தினை ஆகியவற்றை தேடி உண்ண துவங்க வேண்டும்.,
    கம்பு, சோளம்: கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.


    உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.
    சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது.
    உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.


    வரகு, ராகி: வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
    தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் இதனை அழைக்கின்றனர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.


    இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.
    சம்பா அரிசி: நாம் அன்றாடம் உணவிற்கு பயன்படுத்தும் அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, சம்பா அரிசி என பலவகை உள்ளது.


    புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும்.
    இதனால் உடல் பருமனாகும். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம்.


    சம்பா வகையில் சீரகச்சம்பா அரிசி ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும்.


    ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா,கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவ குணம் நிறைந்தவை.


    கோதுமை, பார்லி: அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ்,இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன.இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.
    எண்ணைய், நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும்.குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது.


    நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.

    மூலிகை மருத்துவத்தில் நீரிழிவுக்கு தீர்வு!

    By: ram On: 00:53
  • Share The Gag
  • கள்ளிமுடையான்

    கள்ளிமுடையானின் மெல்லிய தண்டை நீரில் சுத்தம் செய்து, 3 அங்குலத் தண்டுகள் இரண்டை தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு  வர உடல் மெலிவதுடன் நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது.

    இன்சுலின் செடி

    இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுப் பாருங்கள்... பலன் அறியலாம். இந்த  இலையைத்  தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஐரோப்பிய, அமெரிக்க  விஞ்ஞானிகள். ஆரம்ப நிலை  சர்க்கரையாளர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ்  எனும் இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என  அவர்களின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். இச்செடி  கேரளாவில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது.

    சர்க்கரைக்கொல்லி


    கசப்புச் சுவையுடையது. பெயருக்கேற்ப இலையை சாப்பிட்ட பின் சர்க்கரையை வாயிலிட்டால் இனிப்புச்சுவை தெரிவதில்லை.  இலையை உலர  வைத்து பொடியாக்கி தினமும் அருந்தலாம். இது கொடிவகை தாவரம்.

    சிறியாநங்கை

    கசப்புச் சுவையுடையது. இதன் இலையையும் சாப்பிடுகிறார்கள். சிறு செடி வகையை சார்ந்தது.

    ஸ்டீவியா என்னும் சீனித்துளசி


    தென்அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இனிப்புச்சுவையுடைய இதன் இலைகள் சர்க்கரைக்கு மாற்று. இலையை உலர வைத்து  பொடியாக்கி,  டப்பாக்களில் அடைத்து வைத்து சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இது பூஜ்யம் கலோரி (ஞீமீக்ஷீஷீ  சிணீறீஷீக்ஷீவீமீ) மதிப்புடையது.   அதனால், இனிப்புக்குப் பதிலாக தாராளமாக உபயோகிக்கலாம். அதிக சூரிய ஒளியை விரும்பும்  இத்தாவரம், தமிழகத்தில் நன்கு வளர்கிறது.   இவற்றோடு காலையில் வெந்தயப் பொடி சாப்பிடுதல், பாகற்காய் சாறு அருந்துதல்,  வெள்ளரி விதைகளை சாப்பிடுதல், சீந்தில் சர்க்கரை பொடி என  நிறைய தாவரங்கள் சார்ந்த எளிய வழிமுறைகள் நீரிழிவைக் கட் டுக்குள் வைக்க உதவுகின்றன.