Friday, 13 September 2013

செவ்வாய் மிஷன் விண்கலத்தில் முக்கிய சோதனை முடிந்தது!

By: ram On: 22:38
  • Share The Gag



  • இந்தியாவில் பெரும் ஊக்கத்துடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட செவ்வாய் மிஷன், சிவப்பு கிரகம் செல்லும் விண்கலம் பெங்களூர் செயற்கைக்கோள் மையத்தில் ஒரு 15 நாள் முக்கிய சோதனை முடிவடைந்துள்ளது. isro அக்டோபர் 21-ம் தேதிக்குப் பிறகு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது 1,350 கிலோ எடை கொண்ட விண்கலத்தின், அனைத்து ஐந்து தள்ளுசுமைகளை கொண்டு தெர்மோ-வெற்றிட சோதனை செவ்வாய் கிழமை இரவு முடுவடைந்துள்ளது. சோதனையில் ஆர்பிட்களில் எதிர்பார்க்கப்பட்டதை தாண்டி வெப்பநிலைகளில் ஒரு உருவகப்படுத்தப்பட்ட விண்வெளி சுற்றுச்சூழலில் விண்கலத்தின் செயல்திறன் சரிபார்க்கப்பட்டது. 

    'சோதனையில் பழுதின்றி சென்றுவிட்டோம். தள்ளுசுமைகளிலோ அல்லது விண்கலத்திலோ எந்த பிரச்சினையும் இல்லை,' isro அதிகாரபூர்வமாக அவுட் லுக்கில் கூறியுள்ளது. அடுத்த கட்டத்தில், விண்கலத்தில் ஒரு ஒலி சம்பந்தப்பட்ட மற்றும் ஒரு உருவகப்படுத்தப்பட்ட வெளியீட்டு சுற்றுச்சூழலில் மீண்டும் தனது பதிலை மதிப்பிடுவதற்காக அதிர்வு சோதனையை நடத்தப்பட உள்ளது. 'இது நன்றாக முடிவடைந்ததும், விண்கலத்தில் செப்டம்பர் மாத நடுப்பகுதியில் ஸ்ரீஹரிக்கோட்டா-விற்கு அனுப்பப்படும்,' என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

    மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40 சிறப்பம்சங்கள்!

    By: ram On: 22:36
  • Share The Gag



  • மைக்கிரோமேக்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து பல புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. அண்மையில் தான் நிறுவனம் கேன்வாஸ் ஈகோ ஏ113 ஸ்மார்ட்போனை வெளியிட்டது. அதன் பிறகு மைக்கிரோமேக்ஸ் ஃபன் ஏ63 ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை தனது இணையதளத்தில் வெளியிட்டது. அதை தொடர்ந்து இப்பொழுது இந்நிறுவனம் மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40 என்ற புதிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40யின் விலை ரூ.5000க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40 சிறப்பம்சங்கள்: 

    4.5inch ஸ்கிரீன் 
    480*854 பிக்சல்ஸ் 
    1GHZ பிராசஸர்
     512MP ராம் 
    512MP இன்டர்னல் ஸ்டோரேஜ் 
    ஆன்டிராய்ட் ஓஎஸ்
     2 மெகாபிக்சல் கேமரா 
    0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
     wi-fi, 
    1500mAh பேட்டரி

    பிளாக்பெர்ரி 9720 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!

    By: ram On: 22:31
  • Share The Gag

  • பிளாக்பெர்ரி நிறுவனம் இந்தியாவில் புதிய பிளாக்பெர்ரி 9720 ஸ்மார்ட்போன் 15,990 விலைக்கு அறிமுகப்படுகிறது. இந்த புதிய பிளாக்பெர்ரி 9720 ஸ்மார்ட்போன் பிளாக்பெர்ரியின் பழைய பிபி7 இயக்க முறையில் இயங்கும்.

    பிளாக்பெர்ரி 9720 ஸ்மார்ட்போன் அம்சங்கள்:

    2.8-அங்குல டச்-செயல்படுத்தப்பட்ட காட்சி, 
    குவெர்டி விசைப்பலகை, 
    7 மணி நேரம் பேச்சு, 
    512எம்பி உள்ளக சேமிப்பு 
    5 மெகாபிக்சல் கேமரா. 
    480*360 திரை தீர்மானம் கொண்டுள்ளது.


    மற்ற அம்சங்கள் பின்வருமாறு:

    பிளாக்பெர்ரி 7 இயங்குதளம்: புதிய பிளாக்பெர்ரி 9720 ஸ்மார்ட்போன், பிளாக்பெர்ரி 7 ஓஎஸ் வெர்சன்களில் 7.1 வருகிறது.
    பிபிஎம்: இந்த புதிய பிளாக்பெர்ரி 9720 ஸ்மார்ட்போன் பிபிஎம் முக்கியமாக கொண்டுள்ளது. 
    இது எஃப்எம் ரேடியோ கொண்டுள்ளது.

    பலதரப்பட்ட விருப்பத்தை பயனர்களுக்கு அனுமதிக்கிறது அதாவது, ஒரு செய்தியை டைப் செய்தாலும் அல்லது படம் எடுத்தாலும் பின்னர் பேஸ்புக், பிபிஎம் மற்றும் ட்விட்டர் போன்ற இணையதளத்தில் ஒரே நேரத்தில் பயனர்கள் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. பிளாக்பெர்ரி 9720 ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 14-ம் தேதியில் இருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Archos 50 Oxygen ஸ்மார்ட்போன்!

    By: ram On: 22:28
  • Share The Gag

  •  


    ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் காலடி பதித்துள்ள Archos நிறுவனம் இந்த மாதம் ஸ்மார்ட்போன்களின் வரிசையில் புதிய சேர்க்கைகளை ஏராளமாக கொண்டு ஒரு புத்தம் புதிய Archos 50 Oxygen ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


    Archos 50 Oxygen 1080p முழு HD IPS காட்சி கொண்டுள்ளது. 1.5GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad-Core MediaTek Processor மூலம் இயக்கப்படுகிறது. 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான முன் கமெரா, வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஆகியவை இணைந்த 13 மெகாபிக்சல்களை உடைய பின்புற கமெரா போன்றனவும் காணப்படுகின்றது.



    1GB ரேம் இயங்கும். கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 16GB சேமிப்பு நினைவகமாக கொண்டுள்ளது. மைக்ரோ USB சார்ஜ்க்கான ஒரே போர்ட்டுகள் இருக்கின்றன, மற்றும் data sync, மற்றும் ஒரு 3.5mm ஆடியோ Jack உள்ளன. ப்ளூடூத் 4.0 இருக்கும். 11n Wi-Fi கொண்டுள்ளது.


    'ஏமாறாதே....ஏமாற்றாதே'(நீதிக்கதைகள்)

    By: ram On: 21:58
  • Share The Gag


  • ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது.அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி...அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுதுபோக்காக இருந்தது.

    ஒரு நாள் ..கொக்கு ஒன்றை...அந்த நரி பார்த்தது.. அதை தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.

    கொக்கும் ...நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

    கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்கு உண்ணக் கொடுத்தது.கொக்கால் ..தன் அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை...ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே ...கொக்கு தன் அலகை அதில் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.

    கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது...அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

    நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது

    நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..

    அதைக் கண்ட கொக்கு ..'நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் ...என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்...என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.
    தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

    நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.

    அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

    பிறர் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது..அவர்களுக்கு உதவியும் செய்ய ஆரம்பித்தது.

    ஓட்ஸ் பழ கூழ்!

    By: ram On: 20:08
  • Share The Gag







  • ஓட்ஸ் பழ கூழ்


    தேவையான பொருட்கள்:

    வாழைப்பழம் - 4
    ஆப்பிள் - 3
    கோதுமை ரவை - 1/2 கப்
    ஓட்ஸ் - 2 கப்
    பால் - 1 1/2 லிட்டர்
    வெண்ணெய் - தேவையான அளவு
    தண்ணீர் - 1 கப்
    பட்டை தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    தேன் - தேவையான அளவு

    செய்முறை:

    • வாழைப்பழம், ஆப்பிளை துண்டகளாக வெட்டிக் கொள்ளவும்.

    • முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருக வைக்க வேண்டும்.

    • பின்னர் அதில் கோதுமை ரவையை சேர்த்து, பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

    • அடுத்து அதில் ஓட்ஸ் போட்டு 3 நிமிடம் வறுக்க வேண்டும்.

    • பின் அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

    • பிறகு தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

    • இறுதியில் விசிலானது போனதும், அதனை திறந்து அதில் தேன், பட்டை தூள் சேர்த்து கிளறி, குளிர வைத்து, பின் அதில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் சேர்த்து பிரட்டி பரிமாறினால், சூப்பரான ஓட்ஸ் பழ கூழ் ரெடி!!!

    ஒன்று பட்டால் வாழ்வு..........குட்டிக்கதை

    By: ram On: 20:04
  • Share The Gag


  • ஒரு நாள் நம் உடல் உறுப்புகளிடையே சண்டை வந்தது...எல்லா உறுப்புகளும் 'வயிறை'விரோதியாக்கின.

    அப்போது கைகள் சொன்னது 'நாங்கள் இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறோம்...ஆனால் உணவை சுவையாக வயிறு தான் விழுங்கிறது'என்றன..

    உடனே கால்கள்..'நாங்கள் மட்டும் என்ன...இந்த உடம்பை சுமந்து தினமும் எவ்வளவு தூரம் நடக்கிறோம்...ஆனால் வயிறோ ஒரு வேலையும் செய்யாது உண்ணுகிறது'என்றன..

    தலை குறுக்கிட்டது...'நான்தான் பார்க்கிறேன்,கேட்கிறேன்,முகர்கிறேன்,சிந்திக்கிறேன்..ஆனால் எந்த வேலையும் செய்யாத வயிறு உணவை உண்டு மகிழ்கிறது 'என்றது.

    வாயோ...நான் உணவை மென்று வயிறு அனுபவிக்கவே அனுப்புகிறேன் என்றது.

    இப்படி எல்லா உறுப்புகளும் வயிறை குறை சொல்லின.பின் அனைத்து உறுப்புகளும் ..வயிற்றுக்கு இனி எந்த உதவியும் செய்யக்கூடாது என தீர்மானித்தன.

    அதனால்...வயிறுக்கு உணவு கிடைக்கவில்லை..உடல் மெலிந்தது..கை..கால்..தலை என அனைத்து உறுப்புகளும் வலுவிழந்தன.

    அப்போதுதான் அவற்றிற்கு ..தனிப்பட்ட முறையில் தங்களால் எதையும் செய்யமுடியாது.தங்களுக்கு ஆற்றல் அனுப்புவது வயிறே...என்று புரிந்தது.

    வயிற்றிடம் அவை மன்னிப்பு கேட்க ..வயிறும் வழக்கம்போல செயல்படத் தொடங்கியது.

    நம் உடலில் எல்லா உறுப்புகளும் ஒன்று பட்டு செயல்பட்டாலே ..உடல் சுறுசுறுப்பாய் இயங்கும்.

    ஆகவே எந்த காரியத்தை செய்வதாயினும் நமக்குள் ஒற்றுமை அவசியம். 
     
     

    சிக்கனமே செல்வம்!

    By: ram On: 19:35
  • Share The Gag


  • சிக்கனம் என்பது, எல்லா தரப்பினருக்குமே நன்மை தரும். வீட்டுக்குள், "இதிலென்ன பெரிதாக செலவாகி விடப் போகிறது...' என்று நாம் நினைக்கும், விஷயங்கள் தான், சிறுகச் சிறுக செலவைக் கூட்டும். "சிறுதுளி பெரு வெள்ளம்' என்பது, சேமிப்புக்கு மட்டுமல்ல, செலவு வைக்கும் விஷயங்களுக்கும் பொருந்தும்.

    வீட்டுக்குள் சிக்கனமாக இருப்பதற்கான சில, "டிப்ஸ்' இதோ:


     

    * குண்டு பல்புகளுக்குப் பதிலாக, "சி.எப்.எல்., விளக்குகளைப் பயன்படுத்துங்கள். வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது, விளக்குகள் 
    மற்றும் மின் உபகரணங்களை அணைக்க மறக்காதீர்கள்.
     


    * "சார்ஜர்களை' அணைத்து விடுங்கள். அவை, "சார்ஜ்' செய்யா விட்டாலும், மின்சாரத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும்.
     

    * பாத்ரூம் ஷவரில், குறைவாகத் தண்ணீர் விழுமாறு அமைத்துக் கொள்ளுங்கள். அது, தண்ணீர் சிக்கனத்துக்கு உதவும். சோப்பு போடும்போது, ஷவரில் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க வேண்டாம்.
     

    * பாத்ரூமில் முகம், கை துடைக்க, "டிஷ்யூ' பேப்பரை பயன்படுத்துவதற்கு பதில், துண்டை பயன்படுத்தலாம்.
     

    * "இங்க் காட்ரிஜ், சிடிக்கள், டிவிடிக்கள்' போன்ற கணினி பயன்பாட்டு பொருட்களில் பெரும்பாலானவை, மறு பயன்பாட்டுக்கு உரியவையாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை ஞாபகத்தில் வையுங்கள். கம்ப்யூட்டர் இணைப்பு ஒயர்கள், "ஸ்பீக்கர்'கள் போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.
     

    * துணி அல்லது பாத்திரம் அதிகமாக இருக்கும்போது மட்டும், "வாஷிங் மெஷின்' அல்லது, "டிஷ் வாஷரை' பயன்படுத்துங்கள். ஆனால், கொள்ளளவில் பாதி இருக்கும் நிலையில், அவற்றை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், "ஹாப்- லோடு' அல்லது, "எகானமி செட்டிங்'கை அமைத்துக் கொள்ளுங்கள்.
     

    * 'ஏசி'யின்,'ஏர் பில்டரை' மாதம் ஒருமுறையாவது சுத்தம் செய்யுங்கள் அல்லது மாற்றி விடுங்கள்.
     

    * புதிதாக மின் உபகரணங்கள் வாங்கும்போது, மின்சக்தியை சேமிக்கும் திறன் பெற்றவை என்பதற்கான, "எனர்ஜி ஸ்டார் லேபிளை' பார்த்து வாங்குங்கள்.
     

    * மின் சக்தியை அதிகமாக, "சாப்பிடும்' பழைய உபகரணங்களுக்கு விடை கொடுத்து, புதியவற்றை வாங்குங்கள்.
     

    * தண்ணீரைச் சுட வைக்க, "சோலார் வாட்டர் ஹீட்டரை' பயன்படுத்தலாம்.
     

    * குழாய்களில் தண்ணீர் கசிந்து கொண்டிருந்தால், உடனே, சரி செய்யுங்கள்.

    காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச் வெளியானது!

    By: ram On: 19:26
  • Share The Gag


  • சென்ற வாரம், பெர்லின் நகரில், சாம்சங் நிறுவனம், தன் முதல் காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச்சினை அறிமுகம் செய்துள்ளது. சோனி நிறுவனத்தை அடுத்து, இத்தகைய கடிகாரத்தை அறிமுகப்படுத்திய இரண்டாவது நிறுவனமாக, சாம்சங் பெயர் பெற்றுள்ளது. உடலில் சாதனத்தை அணிந்து கொண்டு, அதன் வழியே கம்ப்யூட்டிங் பணிகளை மேற்கொள்ளலாம் என்ற எண்ணப் பாங்கு, டிஜிட்டல் உலகில் வலம் வருபவர்களிடையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. மக்கள் பலரும் இத்தகைய சாதனங்களை எதிர்பார்ப்பதால், இதுநல்ல விற்பனையை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும். மேலும், வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பம் இதற்கு முழுமையாகக் கை கொடுக்கிறது.


    சாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச், இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் போனுடன் இணைந்தே செயல்படும். இணையாக்கப்பட்ட ஸ்மார்ட் போனுடன், புளுடூத் வழி தொடர்பு கொண்டு இது இயங்கும்.
    இந்த கடிகாரத்தில் வைத்து இயக்கவென, எந்த செல்லுலர் தொடர்பும் இருக்காது. இணையாக்கப்பட்ட போன், இரண்டு மீட்டர் தொலைவிற்குள்ளாக இருக்கவேண்டும். தற்போதைக்கு, இந்த ஸ்மார்ட் வாட்ச், சாம்சங் நோட் 3 சாதனத்துடன் இணைவிக்கப்பட்டே இயங்கும். பழைய சாம்சங் போன் அல்லது, மற்ற நிறுவனங்களுடன் இது இயங்காது என்றே தெரிகிறது.




    ஸ்மார்ட் வாட்ச் முன்புறம், சதுர வடிவில் 1.6 அங்குல அகலத்தில் AMOLED டச் ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு பட்டன் மூலையில் தரப்பட்டுள்ளது. இதனை அழுத்தினால், ஹோம் ஸ்கிரீன் கிடைக்கிறது. இதனை ஸ்வைப் செய்து, பல அப்ளிகேஷன்களைப் பெறலாம். இதன் தொடக்க தோற்றம் ஒரு கடிகாரத்தினுடையதாகத்தான் இருக்கும். பயன்படுத்துபவர், இதனை ஸ்வைப் செய்து, பல பயனுள்ள அப்ளிகேஷன்களைப் பெறலாம்.



     மெசேஜ் மற்றும் அழைப்பு குறித்த அறிவிப்பு இதில் கிடைக்கும். வரும் அழைப்புகளுக்கு, மணிக்கட்டில் உள்ள கடிகாரத்தில் உள்ள, பட்டனை அழுத்திப் பேசலாம். அல்லது அணைத்து ஒதுக்கலாம். இந்தக் கடிகாரத்தில் ஒரு ஸ்பீக்கர் மற்றும் மைக் தரப்பட்டுள்ளது. போனுக்கு வந்திருக்கும் அழைப்புகள் மற்றும் டெக்ஸ்ட் மெசேஜ்களை இதில் பார்க்கலாம். ஆனால், ஜிமெயில், ட்விட்டர் போன்றவற்றிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகள், அறிவிப்புகளாகத்தான் காட்டப்படும். இவை குறித்து கூடுதல் தகவல்கள் அறிய, பயனாளர் போனைத்தான் பார்க்க வேண்டியதிருக்கும்.

    இதில் டயலர் வசதி தரப்பட்டுள்ளது. எனவே,இதிலிருந்து அழைப்புகளை ஏற்படுத்தி பேசலாம். போனின் துணையுடன் இதனை ஒரு போனாகவும் பயன்படுத்தலாம். இதில் 1.9 மெகா பிக்ஸெல் திறனுடன் கூடிய கேமரா ஒன்று இயங்குகிறது. இது கடிகாரத்தில் இல்லாமல், தனியே அதனைக் கைகளில் கட்டும் பட்டையில் உள்ளது. இந்த கேமரா, இதனை அணிந்திருப்பவரைப் பார்க்காது. வாய்ஸ் மெமோ ரெகார்டர், மியூசிக் பிளேயர், அழைப்புகளின் பட்டியல், போன் புக் மற்றும் பிற அப்ளிகேஷன்களுக்கான ஐகான்களைத் தரும் பக்கத்திற்கான ஐகான் என திரையில் காட்சி கிடைக்கிறது.



    செப்டம்பர் 25 லிருந்து, இந்த காலக்ஸி ஸ்மார்ட் வாட்ச் 140 நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அக்டோபர் தொடக்கத்தில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும். மொபைல் போன் விற்பனை செய்பவர்கள் மூலம் இது விற்பனை செய்யப் படும்.இதன் விலை 300 டாலர் என்ற அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    புளுடூத் 4 மட்டுமே இயங்கும் என்பதால், புதியதாக வந்துள்ள காலக்ஸி நோட் 3 மட்டுமே, தற்போதைக்கு இதனுடன் இணையாகச் செயல்பட முடியும். இந்த 5.7 அங்குல பேப்ளட் வாங்குவதற்கும் செலவு செய்திட வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வளவு செலவு செய்து இதனைப் பயன்படுத்த வேண்டுமா என்பது இன்றைய கேள்வியாக இருந்தாலும், இது போன்ற ஒன்று வேண்டும் என்பது இன்றைய நிலையில் ஒரு தேவையாகத் தரப்படவில்லை.



    எனவே, புதியதாக அறிமுகப்படுத்தப்படும் இதனை மக்கள் விரும்புவார்கள் என சாம்சங் எதிர்பார்க்கிறது. எப்படி, கம்ப்யூட்டரில் பார்த்துப் பழகிய மின்னஞ்சல்களை, ஸ்மார்ட் போனில் பார்த்துப் பயன்படுத்த நாம் மாறிக் கொண்டோமோ, அதே போல, மொபைல் போனில் மேற்கொள்ளும் செயல்பாடுகளை, இனி ஸ்மார்ட் வாட்சில் பார்க்கும் பழக்கம் வந்து விடும் என சாம்சங் தெரிவித்துள்ளது.

    பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிப்பு!

    By: ram On: 19:15
  • Share The Gag


  • பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக பிரசாரக்குழு தலைவர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இன்று நடந்த பா.ஜ., பார்லிமென்டரி கூட்டத்தில் இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டது.

    மோடிக்கு பிரதம வேட்பாளராக மகுடம்! பா.ஜ., பார்லி., கூட்டத்தில் முடிவு!

    By: ram On: 19:11
  • Share The Gag


  • வரவிருக்கும் தேர்தலில் பா.ஜ., தரப்பில் நரேந்திர மோடி தான் பிரதமர் வேட்பாளர் என பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங் இன்று மா‌லை அறிவித்தார். வரவிருக்கும் பார்லி., தேர்தலில் பா.ஜ., தரப்பில் நரேந்திர மோடி தான் பிரதமர் வேட்பாளர் என ‌தெரிவித்த பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங் மோடி பிரதமர் வேட்பாளராவதற்கு பல தரப்பினரும் ஆதரவு அளித்துள்ளனர் என்றும் கூறினார். வரும் 17ம் தேதி நரேந்திர மோடி பிறந்த நாள் கொண்டாட விருப்பதால் அவருக்கு பிரதமர் வேட்பாளராக மகுடம் சூட்ட பா.ஜ., முடிவு செய்தது. எதிர்ப்பு தெரிவித்து வரும் அத்வானியை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சி தலைவர் ராஜ்நாத்சிங், கட்காரி, பால்பீர் சிங் உள்ளிட்டோர் இறங்கினர். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. அவர் இந்த பங்கேற்கவில்லை.


    மோடி அறிவிப்பின்போது பத்திரிகையாளர் கூட்டத்தில் பா.ஜ., மூத்த தலைவர்கள் சுஷ்மா, முரளிமனோகர் ஜோஷி, ‌வெங்கையா நாயுடு, நிதின்கட்காரி, அருண்ஜெட்லி உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர். இந்த மகுடத்திற்கு அத்வானி ஆசீர்வாதித்துள்ளார் என சுஷ்மா நிருபர்களிடம் கூறினார்.

    இன்று காலையிலும் அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்து சமரசம் செய்யும் முயற்சி தொடர்ந்து நடந்தது. இதற்கிடையில் மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்க அத்வானி சம்மதம் தெரிவித்ததாகவும், கூறப்படுகிறது. மோடிக்கு முழுஆதரவு அளிப்பதாகவும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ்தாக்ரே மோடியை போனில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.மோடிதான் பெஸ்ட் என சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்த சுப்ரமணியசாமி கருத்து தெரிவித்துள்ளார்.


    சுஷ்மா- அத்வானி சந்திப்பு : 


    இன்று காலை பா.ஜ., எதிர்கட்சி தலைவர்சுஷ்மாசுவராஜ் எல்.கே. அத்வானியை சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பின்னர் நிருபர்கள் சூழ்ந்து கொண்டு இன்று முடிவு என்னவாக இருக்கும் என கேட்டபோது , மோடி குறித்து எதுவும் பேச மறுத்து விட்டார். மோடியை பா.ஜ., பிரதம வேட்பாளராக்கிட ராஜ்நாத்சிங் எடுக்கும் முயற்சிக்கு அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு, ஆதரவு தெரிவித்திருந்தனர்.

    இது போல் ஆர். எஸ். எஸ்., தலைவர் மோகன்பகவத், பிரவீண் தொக்காடியா, ராம்விலாஸ்தாஸ் ஆகியோர் மோடியை பிரதம வேட்பாளராக விரைவில் அறிவிக்க வேண்டும் என விரும்பினர். ஆனால் அத்வானி ஆரம்ப கட்டம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இவரைசமாதானப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்தது. மோடியை பிரதமர் வேட்பாளராக்குவதில் ராஜ்நாத்சிங் தொடர்ந்து முயற்சித்து வந்தார். இன்று மாலை 5 .30 மணிக்கு துவங்கிய பா.ஜ., பார்லி., குழு கூட்டத்தில் மோடி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பெரும்பான்மை ஆதரவுடன் மோடி பிரதமர் வேட்பாளரானார். மோடி அத்வானியை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.



    மேள- தாளம் முழங்கிட வரவேற்பு : 



    பார்லி., குழு கூட்டம் நடக்கும் கட்சியின் தலைமை அலுவலக வளாகத்தில் பா.ஜ., மற்றும் ஆர் .எஸ்.எஸ்., தொண்டர்கள் கூட்டம், கூட்டமாக கூடி நின்றனர். மோடி அறிவிப்பு வெளியாவதை முன்னிட்டு என மேள, தாளங்கள் இசைத்தவாறு இருந்தனர். கூட்டத்தில் பங்கேற்க வந்த மோடிக்கு தொண்டர்கள் கர கோஷங்கள் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் வந்ததும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. 



    நாட்டை மீட்டெடுப்பேன்: மோடி : 


    பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி, நன்றி தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: என்னை பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்க பா.ஜ., தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். சாதாரண தொண்டரான எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடினமான சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. வரும் 2014ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறும் என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன். மக்களிடமும், தொண்டர்களிடமும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்த பாடுபடப்போகிறேன். மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அகற்ற கன்னியகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பிரசாரத்தை துவக்குவோம் என்றார்.

    லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் தண்டனை : மத்திய அரசு யோசனை!

    By: ram On: 18:47
  • Share The Gag


  • அண்மையில் லஞ்ச தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்தார்.அதன்படி அந்த சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த சட்ட திருத்தம் கடந்த மாதம் பாராளுமன்ற மேல் சபையில் அறிமுகம் செய்யப்பட்டது.புதிய சட்டத்திருத்தத்தின் படி லஞ்சம் வாங்குபவர்கள் மட்டுமின்றி லஞ்சம் கொடுப்பவர்களையும் தண்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



    sep 13 - zero-rupees
     


    அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது சட்ட விரோதமானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. லஞ்சம் வாங்குபவர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் அதிகபட்சம் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.லஞ்சத்தை அடியோடு வேரறுக்க ஏராளமான சட்ட திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று அன்னா ஹசாரே தலைமையிலான சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினார்கள். இதையடுத்து லஞ்ச தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்தார்.




    அதன்படி அந்த சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த சட்ட திருத்தம் கடந்த மாதம் பாராளுமன்ற மேல் சபையில் அறிமுகம் செய்யப்பட்டது.புதிய சட்டத்திருத்தத்தின் படி லஞ்சம் வாங்குபவர்கள் மட்டுமின்றி லஞ்சம் கொடுப்பவர்களையும் தண்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. லஞ்சம் கொடுக்க முன் வருபவர்கள் தங்கள் சுய நலத்துக்காகவே பணம் கொடுக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கும் ஜெயில் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.



    மேலும் லஞ்சம் கொடுப்பவர்களும், வாங்குபவர்களுக்கான குறைந்த பட்ச தண்டனையை 6 மாதத்தில் இருந்து 3 ஆண்டுகளாக உயர்த்த பரிந்து ரைக்கப்பட்டுள்ளது. அது போல அதிகபட்ச தண்டனை காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகள் வரையிலான ஜெயில் தண்டனையாக மாற்ற திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இந்த சட்டத் திருத்தத்துக்கு பாராளுமன்றமும், மத்திய மந்திரிசபையும் ஒப்புதல் கொடுத்தால், இனி லஞ்சம் கொடுப்பவர்களும் சிக்கி சிறை கம்பியை எண்ண வேண்டியதிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


    Soon, you may land in prison for offering a bribe.

    ****************************************



     Giving a bribe will soon be as much an offence as accepting it under changes planned to the country’s anti-corruption law. The government also proposes to hold corporate leaders accountable for such acts of their employees.

    In an overhaul of the law, the government for the first time proposes to criminalise bribing — in line with the UN convention.- 

    ஆப்பிள் 5சி & ஆப்பிள் 5எஸ் = சின்ன கம்பாரிஸன்!( Apple 5C and Apple 5S )

    By: ram On: 18:40
  • Share The Gag


  • சின்ன வயசுல வாத்தியார் கிட்ட ஏதாவது ஒன்னு சொல்லனும்னா – வேறுபாடு – கோடுபோடுன்னு சொல்லுவாப்பல – அது போல ஆப்பிள் அறிமுகபடுத்திய 5 சி / 5எஸ் பற்றி சின்ன கம்பாரிஸன்
    ஆப்பிள் 5 சி – சீப்புனு நினைச்சா அது தப்பு ஏன்னா ஆரம்ப விலையே 35,000 – ஆனா அமெரிக்கா வாழ் மக்களுக்கு கான்டராக்ட் விலையில் இது 99 டாலருக்கு கிடைக்கும்.

    ஆப்பிள் 5எஸ் – விலை அதிகம்னு நினைச்சா தப்பு – ஆரம்ப விலையே 41,000 தான் – ஆனா அமெரிக்கா வாழ் மக்களுக்கு இரண்டு வருட கான்டரக்டில் 199 டாலருக்கு கிடைக்கும்.


    sep 13 - raviApple-iphone-5c-vs-5S

     


    ஆப்பிள் 5 சி – ஏ6 சிப் – ஓ எஸ் 7 இருக்கு பழைய போனோடு கம்பேர் செய்தால் அதிக வேகம் – ஆனா பிளாஸ்டிக் பாடி
    ஆப்பிள் 5 எஸ் – ஏ7 சிப் – ஓ எஸ் 7 இருக்கு பழைய போனோடு கம்பேர் செய்தால் மிக அதிக வேகம் – சூப்பர் மெட்டாலிக் பாடி, ஃபிங்கர் பிரின்ட் சென்ஸார் மற்றும் இரண்டு எல் ஈடி மாதிரி நிறைய எக்ஸஸ்
    இரண்டு ஃபோனும் ரெட்டினா டிஸ்ப்ளே மற்றும் பெரிய பேட்டரிகள் பத்து மணி நேரத்திற்க்கு மேல் டாக் டைம் அதனால் பாஸ் பாஸ்
    ஓஸ் 7 மிக அற்புதமான ஒரு ஓவர்ஹால் சாஃப்ட்வேர் – சும்மா நச்சுனு இருக்கு – மொத்தமா புது ஃபோன் போல இருக்கும் இந்த சாஃப்ட்வேர் பழைய போன்ல போட்டாலே – டெவலர்ப்புக்கு கொடுத்து நாளாச்சு எனக்கு மிகவும் பிடித்த மாதிரி உள்ளது சில நாட்களில் விரிவாக எழுதுகிறேன் இதன் ரெவ்யுவை – ஒகே யார் யார் எனக்கு ஆப்பிள் 5 எஸ் வாங்கி தரீங்க – லைன்ல வரனும் அடிச்சுக்க கூடாது………..


    Apple 5C and Apple 5S -



    ***************************************



    Apple’s big news today was the unveiling of two new iPhone models, the 5C and5S. What’s the difference between the two? You’re in luck. Here’s a side-by-side breakdown for the 5C and 5S.
    Price, With Contract

    5C: $99 for 16GB, $199 for 32GB with a cellular-service contract. Cases are $29 each.
    5S: $199 for 16GB, $299 for 32GB, $399 for 64GB on contract. Cases are $39 each.


    Price, Unsubsidized


    5C: $549 for 16GB, $649 for 32GB
    5S: $649 for 16GB, $749 for 32GB, $849 for 64GB


    Color and Material 


    5C: Plastic body comes in five bright colors: fluorescent white, green, blue, pink and yellow. The 5C’s body is comprised of a single part with no seams or joints. Apple’s cases for the 5C are made of silicon rubber.

    5S: A metallic body that comes in silver, gold, and space gray. The model is constructed of high grade aluminum with chamfered edges. Apple 5S cases are leather.


    Camera


    5C: 8 megapixel rear iSight camera and a new front-facing FaceTime HD camera.

    5S: The 8 megapixel camera features an f/2.2 aperture and a larger light sensor than the iPhone 5. A new camera app takes multiple photos with every shutter press and chooses the best picture in terms of light levels, sharpness, and stabilization. A two-LED flash adjusts color and intensity, offering what Apple claims are more than 1,000 combinations.


    Technical Specifications 


    5C: Apple-designed A6 processor/graphics chip, 4-inch “retina” display

    5S: 64-bit A7 processor/graphics chip, M7 “motion coprocessor” chip for analyzing accelerometer and other motion data, home-button fingerprint sensor, 4-inch “retina” display


    OS 7 is the best of the best

    மருந்தாகும் உணவுப் பட்டியல் – 1

    By: ram On: 18:17
  • Share The Gag

  • * கேரட்டில் உள்ள ரெடின் ஏ இளமையில் வயோதிகத்தை தடுத்து, சருமத்தின் வெளி படிவத்தை பராமரிக்க உதவுகிறது.

    • முகம் பொழிவுடன் இருப்பதற்கு, உணவுடன் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் சீஸை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் ஸ்விஸ், செட்டர் அல்லது கௌடா போன்ற சீஸ் வகைகளை விரும்பி சாப்பிட்டால், அவை வாயில் பாக்டீரியாவை அழித்து, பல் சொத்தையாவதை தடுக்கும்.

    • சருமத்தில் கொலாஜன் இருந்தால், சருமம் இளமையுடன் காணப்படும். ஆனால் கொலாஜனை நேரடியாக சருமத்தில் சேர்க்க முடியாத காரணத்தால், கொலாஜன் அடங்கிய பழங்கள் மற்றும் பழச்சாறுகளை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    • குருதிநெல்லியை அதிகம் சாப்பிட்டு வந்தால், சிறுநீர் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

    sep 13 - FOOD for HEALTH

     

    • பூண்டு சரும சுருக்கத்தை போக்கி, திசுக்களை புதுப்பிக்க உதவுகிறது. ஆகவே முடிந்த வரையில் இதனை அதிகம் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

    • பற்கள் சொத்தையாகாமல் பாதுகாக்க தயிர் மிகவும் உகந்தது. தயிரில் கால்சியம் அதிகமாக இருப்பதால், பற்களை வெள்ளையாக வைத்திருக்கும்.

    • தக்காளியில் அதிக அளவு வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. அதனால் அதனை உணவில் சேர்த்துக் கொண்டால், சருமம் மென்மையாக இருக்கும்.

    • தினமும் காய்கறிகளை 3-5 முறை சாப்பிட வேண்டும். இதில் தினமும் ஒருவேளை பச்சை காய்கறி மற்றும் கீரை வகைகளை சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பழங்களை சாப்பிட வேண்டும்.. மேலும் ஒவ்வொரு முறையும் 1/2 கப் நறுக்கிய பழங்களை சாப்பிட வேண்டும். இது சருமத்தை பொலிவுடன், இளமையாக வைத்திருக்கும்.

    • தினமும் குறைந்தது இரண்டு முறையாவது பால் அல்லது தயிரை குடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் 8 அவுன்ஸ் பால் அல்லது தயிரை பருக வேண்டும்.

    • வாரத்திற்கு 2 முறை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு, அந்த நீரை பருகி வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் மட்டுமின்றி, கிருமிகளும் அழிந்துவிடும்.

    • நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

    • கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த 
    அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

    • தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

    • நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

    • கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

    • தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

    • வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

    • கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

    இளநரையும் அதைத் தவிர்க்க சில ஈசியான வழிகளும்!

    By: ram On: 18:13
  • Share The Gag

  • பெரும்பாலும் வயதாகிவிட்டதை குறிக்கும் ஒரு இயற்கை செயல் தான் வெள்ளை முடி வருவது. அனைவருக்குமே ஒரு காலத்தில் நமது முடி நரைக்கும் என்பது தெரியும். ஆனால் அத்தகைய முடி 40 அல்லது 50-ல் தான் வெள்ளையாகும் என்று நினைப்போம். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு 20 வயதிலேயே முடியானது நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இவ்வாறு கூந்தல் நரைப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணத்தை சரியாக தெரிந்து கொண்டால், இளமையிலேயே கூந்தல் நரைப்பதை தடுக்கலாம். இப்போது அந்த நரை முடி வருவதை எப்படி தடுப்பது என்று பார்ப்போமா!!!

    அதற்கு முன்னதாக இந்த இளநரை தோன்றுவதற்கான சில காரணங்களை தெரிந்து கொள்வோமா?


    sep 13 - lady ilaanarai

     

    தவறான உணவுப்பழக்கங்கள் 

    அனைத்துத் தாதுப்பொருள்களும் அடங்கிய ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொள்ளாதது கூட, உடல்நலத்துக்குக் கேடு விளைவித்து, அதன் காரணமாக தலைமுடிக்கும் கேடு விளைவிக்கலாம். ஏனெனில் தவறான உணவுப்பழக்கங்கள், உடலில் பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்கள் உண்டாகவும், சருமம், பல் மற்றும் தலைமுடியை மிக மோசமாகப் பாதிக்கும் காரணமாகவும் அமைகிறது.


    வைட்டமின் பி12 குறைபாடு 


    குறிப்பாக வைட்டமின் பி12 சத்துக் குறைபாடானது, இளநரையைத் தோற்றுவிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது. எனவே உணவில், போதுமான அளவு வைட்டமின் பி12 இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.
    தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமை
    தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது. பொதுவாக பெண்களுக்கு தான் தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்பிரச்சனை பெண்கள் மத்தியில் சகஜமாகக் காணப்படுகிறது. எனவே அறிகுறிகளைக் கவனமாக கண்டுபிடித்து, தைராய்டு சோதனைகளைச் செய்து, இதற்கான மருத்துவத்தை உரிய நேரத்தில் மேற்கொண்டால், இளநரை மாறி முடி மீண்டும் கருமையாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    பிட்யூட்டரி சுரப்பிகளில் பிரச்சனை 

    தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல் போவதற்கு, மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு காரணமாக அமையலாம். இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு, பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு மறைமுகமான காரணமாக அமைகிறது.

    சுற்றுச்சூழல் மாசுபாடு 

    சுற்றுப்புறச் சூழல் மாசு அடைதலால் சருமம் பாதிக்கப்படுகிறது என்று நம்மில் பலரும் அறிவோம். ஆனால் அதே சுற்றுச்சூழல் மாசு அடைவதால், நமது தலைமுடியும் பாதிக்கப்படுகிறது என்று நம்மில் பலருக்குத் தெரியாது. ஆகவே சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

    தலைமுடிப் பராமரிப்புப் பொருட்கள் 

    தலைமுடிப் பராமரிப்புப் பொருள்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், தலைமுடி இளமையிலேயே நரைக்கத் தொடங்கலாம். வண்ணச் சாயங்கள், தலைமுடி ப்ளீச்சிங் பொருள்கள், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் ஆகியவற்றில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு தலைமுடிக்குக் கேடு விளைவிக்கும். இப்பொருள்களை அதிகமாகத் தலைமுடிக்குப் பயன்படுத்துதல் கேடு. “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதை நினைவில் கொண்டு, தலைமுடியை அதிகமான வேதிப் பொருள்களுக்கு உட்படுத்தாமல், முடிந்தவரை அதன் இயற்கைத்தன்மை பாதிக்கப்படாமல் பராமரித்து வர வேண்டும்.

    மன அழுத்தம் 

    எப்போதும் வேலை வேலை என்று அலைபவரா? பணிச்சுமையின் காரணமாக மன அழுத்தத்திகு ஆட்படுபவரா? நெடுங்காலமாக மன அழுத்தத்துடன் வாழ்பவரா? அப்படியெனில் அதற்கு விலையாக தலைமுடியின் நலனை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, மன அழுத்தத்திலிருந்து விடுபடும் விதமாக, தேவையான மருத்துவத்தை மேற்கொண்டு, ரிலாக்ஸான வாழ்க்கை முறையை மேற்கொள்ள முயல வேண்டும்.


    டூத் பேஸ்ட் 


    பற்களை வெண்மையாக்கும் பொருள்களில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொழுது, அது இளநரையை உண்டாக்குகிறது. ஹைட்ரஜன் பெராக்ஸைடு அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொழுது, அது உடலில் உள்ள தலைமுடிக்கு நிறத்தை உண்டாகும் நொதிகள் மீது எதிர்மறை விளைவை உண்டாக்குகிறது. எனவே இதுமாதிரியான பொருள்களைப் பயன்படுத்துவதற்கு முன், மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடம், இவற்றால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து ஆலோசனை கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும். தலைமுடி நரைப்பதற்கு இவை காரணமாக அமையுமா என்பது குறித்தும் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.


    பரம்பரை 

    இறுதியாக, இளநரைக்கு பரம்பரையும் ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு நம்மால் தீர்வு ஏதும் சொல்ல முடியாது. பரம்பரையின் காரணமாக இளமையிலேயே தலைமுடி நரைத்தவர்கள் சிலர் நம்மிடையே உள்ளனர்.

    ஆக இப்போதெல்லாம் இளம் வயது உள்ளவர்களுக்கும நரை முடி என்பது பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. இதற்கு கலரிங் பண்ணுவது நமக்கு நல்லது அல்ல. எத்தனையோ கலரிங் வந்தாலும் கூட உண்மையான கருப்பு நிறத்திற்கு இருக்கும் மதிப்பே தனி என்று தான் சொல்ல வேண்டும்..

    * நரை முடியை முற்‌றிலும் ஒழிக்க கறிவேப்‌பிலையை உணவில் சேர்‌த்துக் கொண்டால் போதும்.குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தேங்காய் எண்ணையை நன்கு தலையில் தேய்த்து மஜாஜ் செய்ய வேண்டும். பின்னர் தலையை தேய்த்து குளிக்க வேண்டும்..இவ்விதம் செய்தால் நல்ல அடர்தியான முடியுடன் கரு நிற கூந்தலையும் பெற முடியும்.

    * தலைக்கு குளித்த சில நிமிட நேரத்தில் தலைக்கு எண்ணெய் தடவுதல் கூடாது.. தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது. அதோடு முடு அதிகம் கொட்டவும் செய்கிறது..

    * முளைக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் நரை முடி கருப்பாக மாறும்.

    * முருங்கைகீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொண்டால் முடி உதிர்வது நிற்கும். முடி நீண்டுவளரும். நரை முடி அகலும். முருங்கைகீரையில் இரும்புச் சத்து, (iron)சுண்ணாம்புசத்து (calcium)கணிசமாக உள்ளது.

    இளம் வயதில் நரை முடி வராமல் தடுக்க கறிவேப்பிலை பயன்படும் என்பது தெரிந்த விடயம். ஆனால் தெரியாத விடயம் ஒன்று உள்ளது. அதாவது, நரை முடி வந்தவர்களும், உணவிலும், தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரை முடி மறைந்து விடும்.

    ‘மத்தாப்பூ’ ஜாலியான காகித பூ ! – திரை விமர்சனம்

    By: ram On: 17:55
  • Share The Gag


  • சினிமாவில் வாய்ப்புக்கான வாசல் திறக்கும்போது அதில் பயணப்படும் சிலர் வழியில் கிடைக்கும் சின்ன சின்ன ஆசையான ‘காட்டாற்று வெள்ளத்தில்’ அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போகிறவர்கள் பட்டியலில் சிக்கி எப்படியோ மீண்டு ‘மத்தாப்பூ’ ஆக வந்திருப்பவர் இயக்குனர் ‘தினந்தோறும்’ நாகராஜ்.

    இந்த இரண்டாவது இன்னிங்ஸ் இயக்குனர் நாகராஜூக்கு கை கொடுக்குமா….
    ‘மத்தாப்பூ’ படத்தின் பெயரில் ஒரு புன்னகையை வைத்திருக்கிற இயக்குனர் பட கிளைமாக்ஸ்வரை ஹீரோயின் முகத்தில் சிரிப்பையே காட்டாமல் வைத்திருக்கிறார்… அந்த ‘உம்’ முகத்திற்கு ரொம்ப பொருந்துகிறார் காயத்திரி.
    புதுமுகம் ஜெயன்… புதுமுகம் என சொல்ல முடியாதபடி நக்கல் நையாண்டியிலும், அதிரடி ஆக்ஷனிலும், காதல் தோல்வி சோகத்திலும் விதவிதமான வித்தியாச முகபாவனைகளை ரொம்ப அனாயசமாக காட்டி சினிமாவில் தனக்கென ஒரு இடம் இருப்பதை உறுதி படுத்திக் கொள்கிறார்…
    ஹீரோவின் அம்மா ரேணுகா, சித்தி சித்தாரா, சித்தப்பா இளவரசு, ஹீரோயின் அம்மா கீதா என மூத்த கலைஞர்கள் ஜாலியாக வந்து போகிறார்கள்…
    எல்லாம் சரி… ‘மத்தாப்பூ’ கதை என்னப்பா… என்கிறீர்களா…

    sep 13 - mathapoo_ cinema

     


    ஹீரோயின் காயத்திரி அறந்த வாலு டைப்… கல்லூரியில் கலாட்டா பேர்வழி… ஒரு பையனுடன் நட்பு ஏற்படுகிறது… அந்த நட்பை நம்பி ஒரு பிறந்த நாள் பார்ட்டிக்கு போகும்போது அங்கே வேறு விதமான சிக்கலில் மாட்டி போலீஸ் நிலையம் செல்லும் நிலைக்கு ஆளாகிறார்… வீட்டிற்கு வரும் காயத்திரியை ‘ஆம்பள வேணும்னு சொல்லியிருந்தா நாங்களே கல்யாணம் பண்ணி வைச்சிருப்போமேன்னு’ அம்மா கீதா சொல்ல.,..

    அந்த தினத்தில் இருந்து அம்மா என அழைப்பதை தவிர்கிறார் காயத்திரி… ஒரே வீட்டில் இருந்தாலும் அம்மாவும், பொண்ணும் பேசிக் கொள்வதில்லை… அதேநேரம்… ஹீரோயின் காயத்திரி தனது பழைய வால் தனங்களை மூட்டை கட்டி பரணில் தூக்கிப்போட்டு விட்டு சிரிப்பை தொலைத்து விட்டு முகத்தை உர்ரென வைத்துக் கொள்கிறார்…

    ஆண்களை கண்டாலே பிடிக்காமல்போகிறது…

    நம்ம ஹீரோ அநியாயத்துக்கு எங்க தப்புன்னாலும் வந்து தட்டிக்கேட்கிறார்… திருச்சியில் அப்படி ஒரு சம்பவத்தை தட்டிக் கேட்கப்போக போலீஸ் பஞ்சாயத்தாகி சென்னையில் இருக்கும் சித்தி சித்தாரா வீட்டுக்கு வந்து சேருகிறார்…

    வந்த இடத்தில் ஒரு காபி ஷாப்பில் பர்சை தொலைத்துவிட்டு நிற்கும் ஹீரோவைத்தேடி காணாமல் போன பர்சை எடுத்துக் கொண்டு வருகிறார் ஹீரோயின் காயத்திரி…

    முதல் சந்திப்பிலேயே ஹீரோயின் மீது ஹீரோவுக்கு ஒரு ‘இது’ பிறக்கிறது…
    ஆனால்… அதை சொல்வதற்குள் ஹீரோயின் மறைந்து போகிறார்….
    அவர் எங்கே போனார்… யார்… பேரென்ன என்பது தெரியாமல் ஹீரோ குழப்பத்தில் இருக்க… ஒரு நாள் வீட்டு காலில் பெல் அடிக்கிறது. கதவை ஹீரோ திறக்க… வாசலில் அந்த பர்ஸ் கொடுத்த ஹீரோயின்…

    ஹீரோயினை மடக்க பல ஐடியாக்களை போடும் ஹீரோவுக்கு எதுவும் பலன் அளிக்கவில்லை… ஒரு கட்டத்தில் ஹீரோயின் ஏன் எப்போதுமே ‘உர்ர்ர்’ ஆக இருக்கிறார் என்பதை சித்தி சித்தாரா மூலம் ஹீரோ தெரிந்து கொள்கிறார்…
    ஹீரோயினை சிரிக்க வைக்க பல முயற்சிகள் எடுத்தும்… அதிரடி ஆக்ஷனில் சண்டை போட்டும்… நேரடியாக காதலை சொல்லியும் ஹீரோயின் மசிவதாக இல்லை… காதலையும் மறுத்து விடுகிறார்…

    கடைசியில் ஹீரோ ஜெயன்… ஹீரோயின் காயத்திரி சேர்ந்தார்களா… என்பதுதான் கிளைமாக்ஸ்….

    இப்போது வரும் வழக்கமான கதையில் இருந்துகொஞ்சம் வருஷங்கள் பின்னால் போய் பார்த்தால் இந்த கதை புதுசாக தெரியும்… ஹீரோவை தேடி ஹீரோயின் அவர் வீட்டுக்கு வரும்போதே கதையை முடித்திருந்தால் சபாஷ் போட்டிருப்பார்கள்… அதன்பிறகு கதையை இழுழுழுழுழுத்து முடித்திருக்க வேண்டியதில்லை…

    பாடல்களில் 10 வருஷத்து பழைய சாயல்… பின்னணி இசையில் சபேஷ்முரளியின் அதிரடிகள் பல இடங்களில் சபாஷ் முரளி போட வைக்கிறது…

    இப்போது வரும் படங்களை பார்க்கும்போது ‘தினந்தோறும்’ நாகராஜ் சொல்லியிருக்கிற ‘மத்தாப்பூ’ கதையின் பின்பாதியில் கொஞ்சம் கத்திரியை மட்டும் போட்டால் கண்டிப்பாக ரசிக்க வைக்கும்…

    ஸ்ரீசாந்த்-அங்கீத் சவானுக்கு வாழ்நாள் தடை: பி.சி.சி.ஐ. நடவடிக்கை

    By: ram On: 17:46
  • Share The Gag


  • ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும், அமித் சிங்கிற்கு 5 ஆண்டு தடையும், சித்தார்த் திரிவேதிக்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஹர்மீத் சீங் மீதான வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் அந்த வழக்கு கைவிடப்பட்டது என்று பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    SEP 13 - CRIKST Sreesanth_and_Ajit_Chandila

     



    ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் மூவரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அத்துடன் ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம் தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் ரவி சவானி விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார்.


    இந்த அறிக்கையை பரிசீலனை செய்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழு நியமிக்கப்பட்டது. பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர்களான அருண் ஜெட்லி, நிரஞ்சன்ஷா ஆகியோர் கொண்ட இந்த ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 4 வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டது. 


    சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சண்டிலா மற்றும் அமித் சிங் ஆகியோர் உள்ளிட்ட வீரர்கள் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை மற்றும் அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை ஆய்வு செய்த ஒழுங்கு நடவடிக்கை குழு, 4 வீரர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தது.இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும், அமித் சிங்கிற்கு 5 ஆண்டு தடையும், சித்தார்த் திரிவேதிக்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஹர்மீத் சீங் மீதான வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் அந்த வழக்கு கைவிடப்பட்டது.

    BCCI bans Sreesanth, Chavan for life

    ****************************************


     Cracking the whip on corrupt players, the BCCI on Friday slapped life bans on Indian Test pacer S Sreesanth and spinner Ankeet Chavan for being involved in the IPL spot-fixing scam while handing out lesser punishments to some others in the scandal which rocked the Twenty20 league this year.

    'யானையும்...குறும்பும்..'.........குட்டிக்கதை

    By: ram On: 17:36
  • Share The Gag


  • ஒரு ஊரில் யானை ஒன்று இருந்தது.அது தினந்தோறும்...அந்த ஊர் கடைத்தெரு வழியாக ஆற்றில் குளிக்கச் செல்லும்.

    குளித்து முடித்து திரும்புகையில் கடைத்தெருவில் உள்ள கடைக்காரர்கள் யானைக்கு தின்பதற்கு ஏதேனும் தருவார்கள்.தன் துதிக்கையில் வாங்கி அது உண்ணும்.

    அந்தக் கடைத்தெருவில் இருந்த ஒரு தையல்கடையின் தையல்காரர் தினமும் யானைக்கு வாழைப்பழம் தருவார்.

    ஒரு நாள் அதனிடம் குறும்பு செய்ய எண்ணிய அவர் அது பழத்திற்கு வந்த போது ..அதன் துதிக்கையில் பழம் தராமல் ஊசியால் குத்தினார்.

    யானை...கோபத்துடன் சென்று விட்டது.

    அடுத்த நாள் குளிக்க சென்ற யானை..குளித்து முடித்ததும் தும்பிக்கையில் சேற்று நீரை நிரப்பிக் கொண்டு வந்து ...தையல் கடையில் நின்று கொண்டிருந்த தையல்காரர் மீது பீச்சியடித்தது.

    தையல்காரர்..தைப்பதற்கு வாங்கி வைத்திருந்த புதுத் துணிகளும் சேறாயின..

    தன் குறும்புச் செயல் இவ்வளவு பெரிய தண்டனையை அளித்ததுக் கண்டு தையல்காரர் மனம் வருந்தினார்.

    குறும்பு செய்யும் பழக்கம் பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் உண்டு...

    ஆனால் அக்குறும்பு பிறருக்கு மன வருத்தத்தையோ,காயத்தையோ ஏற்படுத்தக்கூடாது.

    என்னால் கமல் வளர்ந்தானா, அவனால் நான் வளர்ந்தேனா - பாலச்சந்தர் பரபரப்பு பேட்டி!

    By: ram On: 17:30
  • Share The Gag


  • 38 வருடத்தி்ற்கு முன்பு வெளிவந்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் தற்போது டிஜிட்டல் முறைப்படி நவீன தொழில்நுட்பத்துடன் வெளியிடப்போகிறார்கள் ராஜ் டி.வி. குடும்பத்தினர். அதுகுறித்து இயக்குனர் கே.பாலச்சந்தர் பேசியதாவது:

    இது அற்புதமான விழா. சீன் சீனா நினைத்துப் பார்க்கும்போது இந்த படத்திற்கு ‘நினைத்தாலே இனிக்கும் ’ என்று எப்படி பெயர்வைத்தேன் என்று எனக்கே தெரியவில்லை. எழுத்தாளர் சுஜாதாவிடம் ஒரு பாயின்ட் சொல்லி ஒரு இசைக்குழுவினர் பற்றிய கதை என்று முடிவுசெய்து, டிஸ்கஸ் செய்தோம். 32 நாட்கள் சிங்கப்பூரில் ஷுட் செய்தோம். அவ்வளவு கஷ்டப்பட்டோம். ஆனால் படம் பார்த்தபோது  பட்ட கஷ்டம் மறைந்துபோயிற்று. 38 வருடம் கழித்து இந்தபடம் இப்போது மீண்டும் வெளியிடப்போகிறார்கள் என்றபோது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    நான் கமலிடம் அவனுக்கும் எனக்குமான உறவுபற்றி ஒன்றே ஒன்று மட்டும் தெரிந்துகொள்‌ள விரும்புகிறேன். ‘அவனால் நான் வளர்ந்தேனா அல்லது என்னால் அவன் வளர்ந்தானா’ என்பதுதான்.  முதலில் என்னால் கமல் வளர்ந்தான். அடுத்த 20 ஆண்டுகளில் அவனால் நான் வளர்ந்தேன். அவனின் ஆர்வம், என் படங்களில் போட்டி போட்டு நடிக்கிற விதம் தமிழகத்திற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே அதிசயமானவர் கமல். சினிமாவில் என்னென்ன வரப்போகுது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் கமல் அப்பவே எனக்கு நிறைய டெக்னாலஜி பற்றி சொல்லுவான். எனக்கு படிக்க நேரம் கிடையாது. ஆனால் கமலுக்கு படிக்கிறதே நேரமா இருந்துச்சு அப்போ. இந்த நேரத்தில் நான் ரஜினியை ரொம்ப மிஸ் பண்றேன்.

    மரோசரித்ரா என்று டென்ஷனான ஒரு படம் எடுத்தேன். அப்போது எனக்கு புல்லா ரிலாக்ஸ் தேவைப்பட்டது. அடுத்து சீரியசா படம் பண்ண நான் தாங்குவேனா என்று தெரியவில்லை. அதனால் கமலிடம் நார்மலா ஒரு படம் பண்ணனும் என்று சொல்லி டிஸ்கஸ் செய்து படம் எடுத்தேன். அதில் கமல் நடித்தார். படம் முடிந்தபின் முதல் காப்பியின் முதல் பாதியை நானும் கமலும் பார்த்தோம். பிறகு சைலன்டாக வெளியில் வந்துவிட்டோம். படத்தைப்பற்றி எதுவும் பேசவில்லை.லிப்டில் வந்தபோது கமலுக்கு அவர் நண்பரிடமிருந்து போன் வந்தது. அவர் படம் எப்படி வந்திருக்கு என்று கேட்டதற்கு, படத்தில் ஜெயப்பிரதா எப்படி தலையை ஆட்டுவாரோ அப்படி கமல் தலையை ஆட்டினான். அதை நான் பார்த்தேன். அப்போது கமலுக்கு அந்த படம் பிடித்ததா இல்‌லையா என்று தெரியவில்லை. அப்போ கமலுக்கு கதை பத்தவில்லை. அவன் அடுத்தடுத்த கட்டத்துக்கு போயிட்டான். இப்போது அந்த படம் ரிலீசாறத பார்க்கிறப்போ நான்தாண்டா ஜெயித்திருக்கிறேன்’ என்றார்.

    உடல் நாற்றம்... தவிர்க்க வழிகள்

    By: ram On: 08:12
  • Share The Gag

  • உடல் நாற்றம்... தவிர்க்க வழிகள்

    நம் உடலில் சுரக்கும் வியர்வையில் புரதம் உண்டு. அத்துடன் பாக்டீரியா சேரும்போது அந்தப் புரதங்கள் உடைக்கப்பட்டு Propionic என்ற அமிலமாக மாறுகிறது. உடல் நாற்றத்துக்கு அதுதான் காரணம். அதீதமான வியர்வை மற்றும் அதன் காரணமாக உண்டாகும் நாற்றத்துக்கு Acid bromidrosis மற்றும் osmidrosis என்று பெயர்.

    பெண்களுக்கு 14 - 16 வயதிலும், ஆண்களுக்கு 15 - 17 வயதிலும் இந்த வியர்வை நாற்றப் பிரச்சனை தீவிரமாக இருக்கும். நமது உடலில் கிட்டத்தட்ட 30 - 40 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. ‘எக்ரைன்’ (eccrine) என்கிற வியர்வைச் சுரப்பிகள் நம் உடலில் எல்லா இடங்களிலும் சருமத்தின் அடியில் இருக்கும்.

    வெளிப்புறத் தட்பவெப்பநிலை அதிகரிக்கும் போது, அதிலிருந்து உடலைக் காப்பாற்றிக் குளிர்ச்சியாக்கும் பொருட்டு இந்த சுரப்பிகள் தூண்டப்படுவதால்தான் வியர்வை வெளியே வருகிறது. அதனால்தான் நமக்கு முகத்திலோ, கைகளிலோ வியர்க்கும்போது, அது அதிக வாசனையை ஏற்படுத்துவதில்லை.

    அப்போக்ரைன் (apocrine) என்கிற சுரப்பிகள் அக்குள், காதுகளின் பின்புறம், அந்தரங்க உறுப்புகளில் அதிகம் காணப்படும். இவை வியர்வையை வெளிப்படுத்தும்போது, அத்துடன் எண்ணெய் பசையான திரவமும் சேர்ந்து வெளியேறுவதால், அந்த இடத்தில் எல்லாம் வியர்க்கும் போது வாசனை அதிகமாக இருக்கிறது.

    அதிக சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ இல்லாத வெதுவெதுப்பான தண்ணீரில், தினம் இரு வேளைகள் கட்டாயம் குளிக்க வேண்டும். நிறமும் மணமும் சேர்க்கப்பட்ட ‘பாத் சால்ட்’ கிடைக்கிறது. ஒரு பக்கெட் தண்ணீரில் 1 டீஸ்பூன் பாத் சால்ட் கலந்து குளிக்கலாம். அது முடியாதவர்கள், கொஞ்சம் வேப்பிலையைக் கசக்கிச் சேர்த்து, தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம்.

    டீ ட்ரீ அல்லது லேவண்டர் - இந்த இரண்டில் ஏதேனும் ஒரு அரோமா ஆயிலில் சில துளிகளை பஞ்சில் நனைத்து, வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகளில் தேய்த்துக் கொள்ளலாம். தினம் இருமுறை டியோடரன்ட் உபயோகிக்கலாம். குளித்து முடித்ததும், உடலைத் துடைத்து விட்டு, வியர்க்க ஆரம்பிக்கும் முன்பே இதை உபயோகிக்க வேண்டும்.

    கேஸ் இல்லாத டியோடரன்ட் நல்லது. அதை உபயோகிக்கும் போது எரிச்சலோ, குத்தலோ இருந்தால் உபயோகிக்க வேண்டாம். வியர்வையையே நிறுத்தக்கூடிய ஆன்ட்டி பெர்ஸ்பிரன்ட் என்ற பொருளும் மார்க்கெட்டில் கிடைக்கிறது. அலுமினியம் சால்ட் கலந்திருப்பதால் அதை தினசரி உபயோகிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

    முக்கியமான விசேஷம், உடையில் வியர்வைத் தடம் தெரிய வேண்டாம் என நினைக்கிற போது மட்டும் ஆன்ட்டி பெர்ஸ்பிரன்ட் உபயோகிக்கலாம். அதிக வியர்வை இருந்தால் ஆன்ட்டி பாக்டீரியல் சோப் உபயோகிக்கலாம். குளித்து முடித்ததும், ஈரத்தை நன்கு துடைத்துவிட்டு, ஆன்ட்டி பாக்டீரியல் டஸ்ட்டிங் பவுடர் உபயோகிக்கலாம்.

    உடைகளை வைக்கும் பீரோ மற்றும் அலமாரிகளையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். ஒருமுறை உபயோகித்த உடையை, பிறகு துவைத்துக் கொள்ளலாம் என மற்ற துணிகளோடு சேர்த்து வைக்கக் கூடாது. அதிலுள்ள கிருமிகளும் நாற்றமும் மற்ற உடைகளுக்கும் பரவும். உணவுப்பழக்கம்கூட ஒருவரின் உடல் நாற்றத்துக்குக் காரணமாகலாம்.

    பூண்டு, சில வகை அசைவ உணவுகள், அதிக மசாலா சேர்த்த உணவுகள் உதாரணம். காலங்காலமாக உடலில் தேங்கிய அந்த நாற்றத்தைப் போக்க, க்ளோரோஃபில் நிறைந்த பச்சைக் காய்கறிகள், கீரைகள் சாப்பிட வேண்டும். வெட்டிவேரை குளிக்கும் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தாலும் உடல் மணக்கும்.

    பட்டைத்தூள் 2 டீஸ்பூன், அரை மூடி எலுமிச்சைப் பழம் இரண்டையும் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், நாற்றமும் உடல் வலியும் பறந்து போகும். குளியலுக்கென்றே பாத் ஜெல், பாத் ஃபோம், சோப் கிரிஸ்டல்ஸ் என நிறைய கிடைக்கின்றன.

    நிதானமான குளியலுக்கு இவற்றையெல்லாம் பயன்படுத்தினால் நாற்றமும் மறையும். அழகும் மேம்படும். வினிகர் அல்லது எலுமிச்சைச் சாற்றில் நனைத்த பஞ்சினை அக்குள் பகுதியில் தடவி விட்டு, சிறிது நேரம் கழித்துக் குளித்தால், வியர்வை நாற்றம் கட்டுப்படும். உடைகள் மட்டுமின்றி, உள்ளாடைகளும் காட்டனாக இருக்க வேண்டியது அவசியம்.

    தவளையும் ..கொக்குகளும்.........குட்டிக்கதை

    By: ram On: 08:08
  • Share The Gag


  • மீன்கள் நிறைந்த குளமொன்றில் அவற்றுடன் ஒரு தவளையும் வாழ்ந்து வந்தது...

    மீன்களை கொத்தி உணவாக்கிக் கொள்ள பல கொக்குகள் அந்தக் குளத்தைத் தேடி வருவதுண்டு...அவற்றில் இரு கொக்குகள் தவளைக்கு நண்பனாயின.அவை வந்தவுடன் தவளையை நலம் விசாரித்தப் பின்னரே தங்களுக்கு இரையான மீனைத் தேட ஆரம்பிக்கும்.

    கோடைகாலம் வந்தது.குளம் வற்றியது...மீதமிருந்த மீன்களும் மடிந்தன...தவளை மட்டும் செய்வதறியாது திகைத்தது.

    அப்போது அதன் நண்பர்களான கொக்குகள் .. தவளையைத் வேறு தண்ணீர் உள்ள இடத்தில் விடுவதாகக் கூறின.

    ஆனால் தவளை என்னால் உங்களுடன் சேர்ந்து பறக்க முடியாதே என்று கூறியது.

    அப்போது ஒரு கொக்கு ..ஒரு பெரிய குச்சியைக் கொண்டு வந்து ..அதன் நடுவில் தவளையைக் கவ்விக் கொள்ளச் சொன்னது.

    குச்சியின் இரு முனையையும் இரு கொக்குகளும் பிடித்துக்கொண்டு பறப்பதாகவும்...ஆனால் எக்காரணம் கொண்டும் தவளை தன் வாயைத் திறக்கக் கூடாது என்றன...

    தவளையும் ஒப்புக் கொண்டது.

    அப்படி அவை பறக்கும் போது தெருவில் நின்றிருந்த சில சிறுவர்கள் ..'தவளை பறக்குது'..'தவளை பறக்குது' என கத்தினர்.

    அச்சத்தத்தைக் கேட்ட தவளை கொக்குகள் சொன்னதை மறந்து 'அங்கு என்ன சத்தம்' என்று கேட்க வாயைத் திறந்தது.கீழே விழுந்து படு காயமடைந்தது.

    தன்னைவிட அறிவில் சிறந்தவர்கள் கூறும் அறிவுரையைக் கேட்டு நடக்க வேண்டும்...இல்லாவிட்டால் அந்த தவளையைப் போல துன்பமே வந்து சேரும்...

    மரமும் ..கிளியும்.........குட்டிக்கதை

    By: ram On: 07:51
  • Share The Gag


  • பல பறவைகள் ஒரு மரத்தில் கூடு கட்டி..அதில் பழுக்கும் பழங்களை உண்டு மகிழ்ந்து வந்தன.

    ஒரு சமயம்..மழையில்லாமல்,மரம் வாட ஆரம்பித்தது..அதன் இலைகள் உதிர்ந்தன..பூக்கவில்லை..பழுக்கவில்லை அம்மரங்கள்.

    அம்மரத்தை நம்பி..அது காய்க்கும் பழங்களை நம்பி வாழ்ந்த பறவைகள் வேறு இடம் தேடி ஓட ஆரம்பித்தன.

    ஒரு கிளி மட்டும் ..அந்த மரத்தை விட்டுப் போகாமல்...மரத்தினடமே இருந்தது...பட்டினியால் வாடியது..தினமும் கடவுளை வேண்டியது.

    ஒரு நாள் கடவுள் அந்த கிளி முன் தோன்றி.. 'தினமும் என்னை வேண்டுகிறாயே...உனக்கு என்ன வேண்டும் என்றார்.

    'இறைவா..இந்த மரம் மீண்டும் பூத்து ..காய்க்க வேண்டும் என்றது கிளி..

    'இந்த மரத்தைப் பற்றி யோசிக்காது...மற்றப் பறவைகள் போல் நீயும் ஓடியிருக்கலாமே என்றார் கடவுள்.

    அதற்குக் கிளி..'இந்த மரம் பழுத்து இது நாள் வரை எங்களை காத்தது...இன்று இது தண்ணீர் இன்றி துன்பப்படுகிறது...இச்சமயத்தில் நம்மைக் காத்ததை மறந்து..இதை விட்டு ஓடுதல் சுயநலமில்லையா..பாவமில்லையா' என்றது கிளி.

    கிளியின் சுயநலமற்றத் தன்மையைப் போற்றிய இறைவன் ..அம்மரம் மீண்டும் தழைக்க ..மழையை பொழிய வைத்து அருளினார்.

    ஒருவர் செய்த நன்றியை மறக்காது..அவர்கள் துன்புறும்போது அவர்களுடன் சேர்ந்தே ஆறுதலாய் இருக்கவேண்டும்.