Sunday, 27 July 2014

பிறந்த குழந்தையுடன் பயணிக்கும் போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை...?

By: ram On: 22:20
  • Share The Gag

  • குழந்தைகள் எப்போதுமே வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்களுடன் அவ்வப்போது கவனமாகவும், பாதுகாப்புடனும் வெளியே செல்ல வேண்டும். உதாரணமாக, குழந்தை பிறந்ததும், அவர்களுடன் வெளியே செல்ல நினைக்கும் போது, காரில் செல்வது நல்லது. அதற்காக எங்கு சென்றாலும் காரில் செல்ல வேண்டும் என்பது பற்றி பேசவரவில்லை. அவ்வாறு வெளியே நீண்ட தூரம் பயணம் செய்வது நல்லதா கெட்டதா என்பது பற்றியது தான். ஆனால் குழந்தை பிறந்த பின்னர் தாயும், சேயும் 40 நாட்கள் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் தான் பிரசவத்தின் போது ஏற்படும் உள்காயங்கள் அனைத்தும் குணமாகும். மேலும் இந்த நாட்களில் குழந்தைகளை எளிதில் நோய்கள் தாக்கும்.


    * பயணத்தின்போது முடிந்தவரை தாயிடமே குழந்தையை விடுங்கள். அதிக இரைச்சல் குழந்தைக்கு இனம் புரியாத பயத்தை ஏற்படுத்தி, தொடர்ச்சியாக அழவைக்கும். தாயின் அரவணைப்பு குழந்தைக்கு புத்துணர்வு தரும்.

    * வெளியில் வாங்கும் உணவுகளை குழந்தைக்குக் கொடுக்கும் விசப் பருட்சையைக் கைவிடுங்கள் (அவசர நிலைமை தவிர). சுகாதாரமற்ற இந்த காலச் சூழலுக்குப் பொருந்தாது.


    *கொசுக்கடி, விஷக் கடி, எறும்பு முதலியவை கடித்தால் முதலில் உடைகளைக் கழற்றி, காற்றோட்டம் உள்ள இடத்திற்கு குழந்தையை கொண்டு செல்லுங்கள். உடைகளை கட்டாயம் மாற்றுங்கள்.


    *முடிந்தவரை குழந்தை வளர்ப்பில் அனுபவம் உள்ள பெரியவர்கள் உடனிருப்பதே நல்லது.


    *காலநிலைக்கு ஏற்ற உடைகளை குழந்தைக்கு தேர்ந்தெடுங்கள். மற்றவர் பார்வைக்காகவும், உங்கள் வசதி வாய்ப்பையும் உடையில் காட்டுவது நல்ல தாய்க்கு அழகல்ல.


    *ஆபரணங்களை அறவே தவிர்த்து விடுங்கள். ஆபரணங்கள் உங்கள் குழந்தைக்கு எமனாகும்.

    * எந்த சூழ்நிலையிலும் தைரியம் அவசியம். அதற்காக முரட்டுத்தனம் கூடாது.


    * கனமற்ற, மிகத் தேவையான உடைமைகளை மட்டும் கொண்டு செல்லுங்கள். உணவு, உடை என பிரித்து தனித் தனியாக வைத்திக்கொள்ளுங்கள். அவசரநேரங்களில் தேடுவதையும், மொத்த சுமையை தலைகீழாக புரட்டிப்போடுவதையும் தவிர்க்கலாம்.

    * கார் அல்லது பஸ் பயணம் செய்வதாக இருந்தால், குழந்தைகளுக்கான பேபி கார் ஷீட் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது மடியில் வைத்துக் கொண்டு சென்றால், திடீரென்று ப்ரேக் போடும் போது குழந்தை வழுக்கி விழக் கூட வாய்ப்புள்ளது.

    * குழந்தையின் மேல் சூரியனின் கதிர்கள் நேரடியாக படும்படி வைத்துக் கொள்ள வேண்டாம். அது குழந்தையின் சருமம் மற்றும் கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் சூரியக் கதிர்கள் பட்டால், அது குழந்தையின் உடலில் வறட்சியை உண்டாக்கிவிடும். அதற்காக குழந்தையை ஏசி இருக்கும் இடத்திற்கு நேராகவும் வைக்க கூடாது. அது குழந்தைக்கு இருமல் அல்லது சளி போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.

    * குழந்தை பிறந்தவுடன் விமானத்தில் பயணம் செய்வதற்கு, விமான நிறுவனங்களில் ஒருசில குறிப்பீடுகள் உள்ளன. அவை குழந்தை பிறந்து குறைந்தது 2 வாரங்களாவது இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு விமானத்தின் குறிப்பீடுகளும் வேறுபடும். எனவே அதனை தெரிந்து கொள்ள வேண்டும்.

    * குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்தாலோ அல்லது பிறவியிலேயே ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதனை விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்பே, விமான நிறுவனங்களிடம் தெரிவிக்க வேண்டும்.

    * பிறந்த குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்யும் போது, செய்ய வேண்டியவற்றில் முக்கியமானவை காதுகளில் காற்று புகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் விமானத்தில் பயணம் செய்யும் போது குழந்தையின் காதுகளில் அழுத்தமானது அதிகரித்து, காதுகளில் வலியை உண்டாக்கிவிடும். எனவே இவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

    * ரயிலில் பயணம் செய்வதென்றால், அப்போது எந்த ஒரு குறிப்பீடுகளும் இல்லை.

    நிஜத்தில் மீண்டும் அப்பாவாக போகும் அஜீத்..!

    By: ram On: 21:57
  • Share The Gag

  • அஜீத்துக்கு இந்த வருடம் முழுவதும் மிகவும் சந்தோஷமான வருடம். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் என பிஸியாக இருக்கிறார் அஜீத்.

    தற்போது அவரின் குடும்ப வாழ்க்கையிலும் ஒரு சந்தோஷமான விஷயம் நடக்க உள்ளது.

    அதாங்க தல மீண்டும் அப்பாவாக போகிறாராம். இந்த விஷயம் யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    ஏனென்றால் அஜீத் மீடியாவில் இப்படியெல்லாம் செய்திகள் வருவதை விரும்ப மாட்டார்.

    ஆனால் சில முக்கியமான செய்திகளை எப்படி பாதுகாத்தாலும் அது கண்டிப்பாக வெளிவந்துவிடும். அப்படி தான் இந்த செய்தியும் கசிந்துவிட்டது.

    Windows-ல் இருக்கும் Sticky Notes எனும் நினைவூட்டும் மென்பொருள்..!

    By: ram On: 20:52
  • Share The Gag

  • அடிக்கடி நமக்கு ஞாபகப்படுத்த வேண்டிய விஷயங்களை அல்லது சிறு குறிப்புக்களை எழுதி வைத்து அதனை அடிக்கடி பார்த்துக்கொள்ள உதவுகின்றது  Sticky Notes

        இதனை திறந்து கொள்ள Start Menu சென்று Search பகுதியில் Sticky Notes என தட்டச்சு செய்க.

        இனி தோன்றும் Sticky Notes எனும் மென்பொருளை சுட்டுக.

        பிறகு உங்களுக்கு தேவையான குறிப்புக்களை எழுதி வைத்துக் கொள்ளும் வகையில் ஒரு இடைமுகம் தோன்றும்.

        பின் அதில் உங்களுக்கு தேவையான குறிப்புக்களை அல்லது அடிக்கடி ஞாபகத்தில் இருக்க வேண்டிய விடயங்களை பதிந்து வைத்துக்கொள்ளலாம்.

        இதில் நீங்க உருவாக்கும் எழுத்துக்களினது தோற்றத்தினை நீங்கள் விரும்பிய வகையில் அமைத்துக் கொள்ள பின்வரும் Keyboard Shortcut களை பயன்படுத்துங்கள்.

        தடித்த எழுத்துக்களாக தோன்றச் செய்ய (Bold text) =====> Ctrl+B

        சரிந்த எழுத்துக்களாக தோன்றச் செய்ய (Italic text) =====> Ctrl+I

        எழுத்துக்களுக்கு Underlined செய்ய =====> Ctrl+U

        எழுத்துக்களுக்கு குறுக்காக கோடிட (Strikethrough) =====> Ctrl+T

        எழுத்துக்களுக்கு Bullet செய்து கொள்ள =====> Ctrl+Shift+L (குறிப்பிட்ட விசைகளை மீண்டும் அடுதுவதன் மூலம் இலக்கங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம்)

        எழுத்துக்களின் அளவுகளை பெரிதாக்கிக் கொள்ள ====> Ctrl+Shift+>

        எழுத்துக்களின் அளவுகளை சிறிதாக்கிக் கொள்ள =====> Ctrl+Shift+<

        மேலும் அதன் மேல் Right செய்வதன் மூலம் உங்களுக்கு விருப்பமான நிறத்தை அதன் பின்புலத்துக்கு இட்டுக்கொள்ளலாம்.

         உங்கள் கணணியை நீங்கள் Shutdown செய்து விட்டு மீண்டும் துவக்கினாலும் அவைகள் நீக்கப்படாமல் அப்படியே இருக்கும்.

    டிவி நிகழ்ச்சிக்கு வருகிறாரா சூப்பர் ஸ்டார்!

    By: ram On: 19:55
  • Share The Gag

  • சூப்பர் ஸ்டார் என்றாலே அது என்றும் ரஜினி தான். இவர் திரையில் தோன்றினாலே அது சரவெடியாகத் தான் இருக்கும். ஆனால் இவர் வருடத்திற்கு ஒரு படம் நடிப்பதே ஆச்சரியம்.

    இந்நிலையில் தெலுங்கில் பிரபல தொலைக்காட்சி ஒன்று, ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடத்திய கோடீஸ்வரன் நிகழ்ச்சி போல் தெலுங்கில் நாகர்ஜுனை வைத்து நடத்தவுள்ளது.

    இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளது, அவர் கலந்துக்கொள்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா! ! சொன்னா நம்புங்க..

    By: ram On: 19:10
  • Share The Gag
  • இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா! ! சொன்னா நம்புங்க..

    1) துப்பட்டாவின் நோக்கம் அறிந்துப் போடற பொண்ணுங்க


    2) சரக்க மோந்துப் பார்த்தாலே மயக்கம் போடற பசங்க


    3) கை முறுக்கு சுடத் தெரிந்தப் பாட்டிங்க


    4) எவ்ளோ பெரிய சிக்கு கோலத்தையும் அசால்ட்டா போடற அம்மாக்கள்


    5)அப்பா ஏதாவது கேட்டா நின்று பொறும பதில் சொல்ற பிள்ளைங்க


    6) ஒரே ஒரு மொபைல் ,ஒரே ஒரு சிம்கார்ட் ,  ஒரே ஒரு காதல் இருக்கிற பொண்ணுங்க ,பசங்க


    7) மல்லிகைப் பூவையும் கண்ணாடி வளையலையும் நேசிக்கும் பெண்கள்


    8) பொண்ணுங்க கிட்ட பேச கூச்சப் படற பசங்க. முறைப் பையன பார்த்தா வெட்கப்படறபொண்ணுங்க.


    9) மதிய உணவை ஒன்றாக அமர்ந்துச் சாப்பிடும் குடும்பங்கள்


    10)சொந்த மண்ணையும் மொழியையும் மறக்காத மனிதர்கள் என!!


    இவங்கலாம் 100 ல 2% தான் இருக்காங்க..

    புரோக்கர் ஆன சிவகார்த்திகேயன்! என்ன சிவா...?

    By: ram On: 15:24
  • Share The Gag

  • தமிழ் திரையுலகின் வளார்ந்து வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். கடந்த வருடம் இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவரின் திரைப்பயணத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

    தற்போது மீண்டும் இதே கூட்டணி ரஜினி முருகன் என்ற படத்தில் இணைய இருக்கிறது, இதில் சிவா ரியல் எஸ்டேட் புரோக்கராக நடிக்கிறார் என்று நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    மேலும் டாணா படத்தை முடிக்கும் முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Sunday Special - உருண்டை குழம்பு....சமைத்துப்பார்...!

    By: ram On: 15:02
  • Share The Gag

  • Sunday Special - உருண்டை குழம்பு....


    தேவையான பொருட்கள் :

    கடலைபருப்பு - 1/2 கப்

    துவரம்பருப்பு - 1/2 கப்

    சோம்பு - 1/2 டீஸ்பூன்

    சின்னவெங்காயம் - 7(அ) பெரியவெங்காயம் - 1

    பட்டைமிளகாய் - 4

    மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்


    குழம்புக்கு தேவையானவை :


    புளி - எலுமிச்சையளவு

    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

    மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

    மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்

    தக்காளி - 1

    சின்னவெங்காயம் - 8

    உப்பு தேவையான அளவு

    சோம்பு தூள் - 1 டீஸ்பூன்

    கடுகு - 1 டீஸ்பூன்

    எண்ணெய் - 1 மேசைகரண்டி

    கொத்தமல்லி - சிறிதளவு


    செய்முறை :


    கடலை பருப்பு, துவரம்பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை சுத்தமாக வடிகட்டி உப்பு, பட்டை மிளகாய், சோம்பு சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி அரைத்த பருப்புடன் சேர்க்கவும் இதனுடன் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள் 1/4 டீஸ்பூன் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
    புளியை கரைத்து வடிகட்டி மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து வைக்கவும்.

    பின் ஒரு கடாயில் எண்ணெயிட்டு கடுகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து தாளித்து குழம்பு கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து பின் ஒரு பருப்பு உருண்டையை எடுத்து கொதிக்கும் குழம்பில் போட்டு சிறிது கொதி வந்தவுடன் உருண்டையை ஒரு கரண்டியால் எடுத்து பார்க்கவும்.

    உருண்டை கரையாமல் வந்தால் மேலும் கொதிக்க கொதிக்க உருண்டைகளை போட்டு வேகவைத்து இறக்கவும்.

     (உருண்டைகள் கரைந்தால் இட்லி தட்டில் வைத்து லேசாக வேகவைத்து பின் குழம்பை நன்றாக சுண்டிய பின் உருண்டைகளை அதில் போட்டு இறக்கலாம்)

    கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    விஐபி மூலம் நடிகர் ரகுவரனை கவுரவிக்கிறேன்: தனுஷ்

    By: ram On: 10:30
  • Share The Gag

  •  மறைந்த நடிகர் ரகுவரனை கவுரவப்படுத்தும் விதமாகவே வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நாயகனுக்கு ரகுவரன் எனப் பெயர் வைத்ததாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

    தனுஷ் நடித்து சமீபத்தில் வெளிவந்திருக்கும் வேலையில்லா பட்டதாரி திரைப்படம் வசூல் ரீதியில் ஹிட்டாகி இருக்கிறது.

    "ரகுவரனை நீ வில்லனா தானே பாத்திருக்க, ஹீரோவா பார்த்ததில்லையே" போன்ற படத்தின் வசனங்கள் பல உண்மையான வேலையில்லா பட்டதாரிகள் மத்தியில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. பலர் அதை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், "படத்தில் ரகுவரன் என நாயகனுக்கு பெயர் வைத்திருப்பது, நடிகர் ரகுவரனை கவுரவப்படுத்தும் விதமாகவே. அவருடன் நடித்ததை பெரிய அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்" என நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன் தனுஷின் தந்தையாக யாரடி நீ மோகினி திரைப்படத்தில் ரகுவரன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே ரகுவரனின் கடைசி படம் என்பதும் நினைவுகூரத்தக்கது.

    டேட்டா கேபிள் வேண்டாம் – ஆன்ட்ராய்ட் ட்ரிக்ஸ்!

    By: ram On: 09:01
  • Share The Gag

  • டேட்டா கேபிள் வேண்டாம் – ஆன்ட்ராய்ட் ட்ரிக்ஸ்!

    டேட்டா கேபிள் இல்லாமலேயே நீங்கள் வைத்திருக்கும் ஆன்ட்ராய்ட் மொபைல் போனிலிருந்து தகவல்களை(Data) கணினி, டேப்ளட் பிசி, மற்றும் மற்றவகை மொபைல்போன்களுக்கு தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும்.

    Soft Data Cable

    USB Cable எனப்படும் தகவல்பரிமாற்ற கம்பி இல்லாமேலே உங்கள் ஆன்ட்ராய்ட் மொலைலிருந்து கணினி,மொபைல், டேப்ளட் பிசி (Computer, tablet, android smartphone) போன்ற மற்ற சாதனங்களுக்கு WiFi மூலம் தகவல்களை பரிமாறிகொள்ள ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் (Android apps) ஒன்று உதவுகிறது.

    இந்த அப்ளிகேசனை(software data cable) நீங்கள் இந்த முகவரியிலிருந்து பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.

    Download Link – தரவிறக்கச்சுட்டி

    Install Soft Data Cable ( http://goo.gl/0jbJaz )

    மேற்கண்ட இணைப்பின் வழிச்சென்று உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்போனில் இந்த பயன்பாட்டு மென்பொருளை நிறுவிடுங்கள்.

    அடுத்து அந்த பயன்பாட்டு மென்பொருளை இயக்கி WiFi மூலம் உங்கள் கணினி, டேப்ளட் பிசி, மொபைல் போன்ற சாதனங்களுடன் உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலையும் எளிதாக இணைத்துவிடலாம்.

    இதன் மூலம் எந்த ஒரு கம்பி இணைப்பு இல்லாமலேயே, கணினிக்கும், மொபைலுக்கும் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு, அதன் மூலம் வேண்டிய தகவல்பரிமாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.

    இந்த அப்ளிகேஷனின் பயன்கள்: (ஆங்கிலத்தில்)

    BENEFITS WITH SOFTWARE DATA CABLE
    The fewer cables to carry the better
    The computer doesn’t need to have drivers it does need installed
    Send photos, music, videos, apps etc. to other phones, tablets or TV anytime, anywhere
    Auto-sync photos and other important files to computer or cloud storage (on a daily, weekly basis to backup data)
    Extend mobile storage space without any cost