Thursday, 28 August 2014

பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை எப்படி அறிவது...?

By: ram On: 21:24
  • Share The Gag

  • ஒரு குழந்தையைப் பெற்று அதைப் பேணி பாதுகாத்து வளர்ப்பதில் இறைவனுக்கு இணையாக தாயை இயற்கை படைத்துள்ளது.

    குழந்தையின் அனைத்து செயல்களையும் உன்னிப்பாக கவனித்து அதன் தேவையை பூர்த்தி செய்யும் குணம் இயற்கையாகவே தாய்க்கு உண்டு.சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றி இக்கால பெற்றோர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.ஏனென்றால் கூட்டுக்குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத்தோங்கும் காலமல்லவா இது. வீட்டில் மாமியார், பாட்டி அனைவரும் இருந்தால் குழந்தையின் அசைவை வைத்து என்ன பாதிப்பு என்பதை கண்டறிவார்கள். ஆனால் இன்று குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதை புத்தகம் முலமாகவும் சி.டி. மூலமாகவும் பார்த்துப் படித்து தெரிந்து கொள்ளும் நிலை. ஆனால் நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு எந்த நோயின் பாதிப்பு இருந்தால் எத்தகைய குறிகுணங்கள் வெளிப்படும் என்பதை கண்டறிந்து கூறுவார்கள். அதைப்பற்றி அறிந்து கொள்வோம்.
    காய்ச்சல்

    குழந்தை தன் உடலை அடிக்கடி முறுக்கிக் கொள்ளும். வீறிட்டு அழும். திடீரென்று தன் தாயை சேர்த்து அணைத்துக்கொள்ளும். இலேசாக இருமிக்கொண்டே இருக்கும். பால் குடிக்காது. உடலின் நிறம் மாறுபட்டு காணப்படும். உமிழ்நீர் சூடாக இருக்கும். அடிக்கடி கொட்டாவி விடும்.

    உடலில் அக்கி உண்டானால்
    குழந்தையின் நாவில் நீர் வறட்சி காணப்படும். அடிக்கடி அழும். காய்ச்சல் இருக்கும். உதடுகள் வறண்டு காணப்படும்.

    வயிற்றுப் பொருமல்குழந்தைக்கு மூட்டுகளில் வலி இருக்கும் அது சொல்லத் தெரியாமல் கால்களை அசைத்து அழும். கண்களை அகலமாக விரித்து நிலையாக ஒரே இடத்தைப் பார்க்கும். உடல் மிகவும் வாட்டமாக இருக்கும். பால் குடிக்காது. மலம் வெளியேறாது.

    காமாலைகுழந்தைக்கு முகம், கண்கள், நகம் முதலியவை மஞ்சள் நிறமாக தோன்றும். பசியில்லாமல் இருக்கும். பால் குடிக்காது. சிறுநீர் மஞ்சளாக வெளியேறும். மலம் சாம்பல் நிறமாக இருக்கும்.
    விக்கல்மூச்சுக்காற்றில் வெப்பம் அதிகமாகக் காணப்படும். குழந்தை அடிக்கடி முனகிக்கொண்டே இருக்கும். திடீரென்று ஏப்பம் விடும்.

    நாக்கில் பாதிப்புஉமிழ்நீர் அதிகம் சுரக்கும். கன்னங்கள் வீக்கமாக இருக்கும். நாக்கு தடித்து வெள்ளையாக காணப்படும். சில சமயங்களில் புள்ளி புள்ளியாக புண்கள் காணப்படும். வாயை மூடமுடியாமல் குழந்தை தவிக்கும்.

    மூலம்மூலமூளை நீண்டிருக்கும். குழந்தைக்கு மலச்சிக்கல் இருக்கும். மலத்துடன் இரத்தம் வெளிப்படும்.

    தொண்டைப் பிடிப்புஇலேசான சுரம் இருக்கும். குழந்தைகள் எச்சில் விழுங்க முடியாமல் வலி இருக்கும். எதையும் விருப்பமுடன் சாப்பிடாது.

    காது பாதிப்புகையினால் காதுகளைத் தொடும். காதுகளை அழுத்தித் தேய்க்கும். தூக்கமிருக்காது. பால் குடிக்காது.

    கழுத்தில் பாதிப்புகுடித்த பால் ஜீரணம் ஆகாது. தொண்டையில் சளி கட்டும். பசி எடுக்காது. காய்ச்சல் இருக்கும். குழந்தை சோர்வாக காணப்படும்.

    வாயில் பாதிப்புஅதிக உமிழ்நீர் சுரக்கும். தாய்ப்பால் குடிக்காது. மூச்சு விட திணறும்.

    வயிற்றுவலிகுழந்தை அழுதுகொண்டே இருக்கும். தாய்ப்பால் குடிக்காது. நிற்க வைத்தால் வயிற்றில் கைவைத்து முன்பக்கமாகவே விழும். உடல் குளிர்ந்திருக்கும். முகம் வியர்த்துக் காணப்படும்.

    இத்தகைய அறிகுறிகள் குழந்தைகளுக்கு உண்டானால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்வது நல்லது.

    கார்த்திக்கிடம் இருந்து பல கோடி சொத்துக்கள் பறிக்கப்பட்டது! அதிர்ச்சியில் திரையுலகம்?

    By: ram On: 21:01
  • Share The Gag

  • தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 களில் காதல் நாயகனாக வலம் வந்தவர் கார்த்திக். இவர் சினிமாவில் நடிப்பதை விட்டு நீண்ட இடைவேளைக்கு பிறகு ராவணன் படத்தில் நடித்தார். தற்போது அனேகன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று அவரது சொந்த வீட்டில் இருந்து அவரை வெளியேறும் படி அவர் சொந்தகாரார்கள் சொல்ல, விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.

    கார்த்திக்கை ஏமாற்றி அவரது உறவினர்கள் பல கோடி ரூபாயை அபகரித்து விட்டதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது. பத்திரத்திலும் கார்த்தியின் பெயர் இல்லை. இதே வீட்டில் தான் கார்த்திக் பல வருடங்களாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் தமிழ் திரையுலகத்தினர் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

    நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை...

    By: ram On: 20:43
  • Share The Gag

  • செப்பு நெருஞ்சில் திரிதோடம் போக்கிவிடும்
    வெப்பு முதலனைத்தும் வீட்டுங்காண்-செப்பரிய
    சுக்கிலமே கம்போர்க்குந் தொல்லையனல் மாற்றும்
    மிக்கு மருந்துநீ விள் ------அகத்தியர் குணபாடம்


    எதிர்அடுக்குகளில் முருங்கையிலைப் போன்று சிறுசிறு இலைகள் கொண்ட தரையோடுபடர்ந்து வளரக்கூடிய சிறு கொடி நெருஞ்சில். இதன் மலர்கள் சூரியத்திசையோடுதிரும்பும் தன்மை உடையது. முள்உள்ள காய்களை உடையது. செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. சிறுநீர்,தாதுபலம், காமம் ஆகியவற்றைப் பெருக்கவும், தாது அழுகி, இரத்தக் கசிவைநிறுத்தும் குணம் உடையது. .

    வகைகள் : 1.பெரு நெருஞ்சில் 2. சிறு நெருஞ்சில் 3. செப்பு நெருஞ்சில்

    பெருநெருஞ்சில் :இது ஒன்றரை அடிவரை வளரக்கூடியது. இதன் காய்கள் ஏறக்குறைய மூக்கு கடலையைப்போல இருக்கும். அதன் மேல் ஏழு, எட்டு, முட்கள் நீண்டு இருக்கும். இதன்காயளவு அரை நெல்லிக்காய் அளவில் இருக்கும். மஞ்சள் நிறத்தில் பூக்கள்இருக்கும்.

    சிறு நெருஞ்சில் : இதுதரையோடு படர்ந்து வளரக்கூடியது. இதன் காய்கள் சுண்டைக்காய் அளவில் மூக்குகடலையைப் போல இருக்கும். அதன் மேல் ஏழு எட்டு முட்கள் நீண்டிருக்கும்.மஞ்சள் நிறத்தில் பூக்கள் இருக்கும்.

    செப்பு நெருஞ்சில் : இது தரையோடு படர்வதோடு தரையில் ஒட்டிக் கொண்டிருப்பதுபோல இருக்கும். இதில் முட்கள் இருக்காது. சிவப்பு நிறப்பூக்கள் பூக்கும்

    கத்தி தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்குகிறதா?

    By: ram On: 19:53
  • Share The Gag

  • கத்தி படத்தை தீபாவளி அன்று காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்திற்கு ஏற்கனவே எதிர்ப்புகள் இருக்கும் போது, தற்போது மீண்டும் ஒரு தலைவலி வந்துள்ளது.

    இந்த தீபாவளிக்கு கத்தி படத்தை போல் பூஜை படமும் வெளிவரும் என பூஜை போட்ட அன்றே விஷால் கூறிவிட்டார். ஆனால் விஷால் என்பதால் விஜய்யும் இந்த போட்டியை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

    தற்போது ஷங்கரின் ஐ படமும் வருகிறது என்றவுடன் விஜய் தரப்பிற்கு கொஞ்சம் சுதாரிக்க தொடங்கியுள்ளது. ஏனெனில் ஐ படம் தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் நிறைய தியேட்டர்களில் எடுப்பதால் கத்தி படத்தில் தியேட்டர் எண்ணிக்கை குறையும் என்று தெரிகிறது.

    உங்கள் காதலி உங்களை கழற்றி விடப் பார்க்கிறாரா – கண்டுபிடிக்க இதோ எளிய வழி !!

    By: ram On: 17:26
  • Share The Gag

  • இவ்வுலகில் காதலிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் அப்படி காதலிப்பவர்களின் அனைத்து காதலும் வெற்றி பெறுவதில்லை. காதலில் வெற்றி பெற்று கடைசி வரை வாழ்க்கையிலும் ஒன்றாக வாழ்பவர்கள் வெகு சிலரே. காதலில் வெற்றி பெற்று சிலர் திருமண வாழ்க்கையில் தோற்பதுண்டு. ஆனால் பல பேர் காதலிலேயே தோற்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் உள்ளது. அதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது இனக்கவர்ச்சி. அதே போல் புரிதல், அலுப்புத் தட்டல் என பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

    காதல் முறிவதற்கு ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் சரிசமமான பங்கை வகிக்கின்றனர். உங்கள் காதலியுடனான உறவில் ஏதேனும் உரசல் ஏற்படுகிறதா அல்லது உங்கள் காதலி உங்களை கலட்டி விட போகிறாரா என்று தெரியாமல், உங்கள் தலையை சொரிந்து கொண்டு இருக்கிறீர்களா..? அப்படியானால் அதனை சோதனை செய்ய வேண்டிய நேரம் இது. கீழ்க்கூறிய அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்பதை கவனிக்கத் தொடங்குங்கள்.

    உங்களுக்கு மத்தியில் நடக்கும் உரையாடலில் சுவாரஸ்யம் குறைகிறதா?

    இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது, உங்கள் காதலி அன்யோநியமாக இல்லாமல் ஒரு இடைவெளியுடன் நடந்து கொள்கிறாரா? முன்பு போல் செல்ல சண்டை போடாமல், உங்களை கிண்டல் செய்யாமல் விலகியே இருக்கிறாரா? நீங்கள் கூறுவதில் குறை கண்டுபிடிப்பவராக இருந்தவர், இப்போது மௌன சாமியாராக மாறியுள்ளாரா? உங்கள் இருவரின் உரையாடலும் சம்பந்தமில்லாமல் எங்கோ செல்கிறதா? அல்லது தொலைபேசியில் நீங்கள் அழைக்க மறந்து விட்டாலும் கூட, உங்கள் மீது கோபம் கொள்வதில்லையா? பொதுவாக முக பாவனைகளும், கண்களுமே, உங்கள் காதலி உங்கள் மீது வைத்திருக்கும் நாட்டத்தை வெளிக்காட்டிவிடும். நீங்கள் உடன் இருக்கும் போது, அவளுக்கு எப்போதுமே சலிப்பு தட்டுகிறது என்றால், அவள் உங்களுக்கானவள் அல்ல.

    உங்களை விமர்சிக்க காரணமே தேவையில்லை

    உங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்த போதெல்லாம், உங்கள் முகத்தை பார்த்து விமர்சனம் செய்தவளாக இருந்திருக்கலாம் உங்கள் காதலி. ஆனால் இப்போது நீங்கள் என்ன செய்தாலும், அவள் வேதனை அடைகிறாளா? அல்லது நீங்கள் என்ன செய்தாலும் அதனை குறை சொல்கிறாளா? சிறு வாக்குவாதம் உறவை வலுப்படுத்தினாலும், காரணமே இல்லாத வாக்குவாதங்கள் மற்றும் அதிகப்படியான விமர்சனங்கள், உங்கள் இருவருக்கும் உள்ள உறவை பாதிக்கும்.

    உங்களுக்கு வேண்டியவரை அவள் சந்திக்க விரும்புவதில்லை

    நீங்கள் விரும்பிய பெண்ணை காதலியாக அடைய, நீங்கள் பட்டபாட்டை உங்கள நண்பர்களும் அனுபவித்திருப்பார்கள். அப்படிப்பட்ட நண்பர்களை, அவள் திடீரென தவிர்த்தால் ஏதோ பிரச்சனை என்று அர்த்தமாகும். உங்கள் ஒட்டு மொத்த நண்பர்கள் கூட்டத்தையும், அவளுக்கு திடீரென பிடிக்காமல் போனாலோ அல்லது நீங்கள் கெட்ட சகவாசத்துடன் இருக்கிறீர்கள் என்பதை போல் கூறினாலோ, உங்கள் உறவில் விரிசல் விழுகிறது என்று அர்த்தமாகும். அப்படிப்பட்ட அவளின் விமர்சனங்கள் உங்களை அவமானப்படுத்துவதாக இருந்தால், உங்கள் மீது அவள் வைத்திருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது என்றும் சொல்லலாம். அதன் விளைவு பிரிவு மட்டுமே.

    உங்கள் காதலினால் உண்டான தீப்பொறி இப்போது இருப்பதில்லை

    காதல் என்பது உடல் கவர்ச்சி மட்டுமல்லாமல், மூளை வரை சென்று ஒருவித தீப்பொறியை ஏற்படுத்தி, உங்கள் உறவை நீடிக்க செய்யும். நீங்கள் செய்யும் குறும்புகள், நீங்கள் சில வார்த்தைகளை உச்சரிக்கும் விதங்கள் மற்றும் நீங்கள் அவளை புகழ்ச்சியாக பேசியவைகள் ஆகிய செயல்கள் அனைத்தும் அவளை உருகச் செய்யும். ஆனால் திடீரென இந்த செயல்கள் எல்லாம் அவளை ஈர்க்கவில்லை என்றால், உங்கள் உறவுக்கு மத்தியில் பிளவு ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

    உடலளவில் உங்களின் நெருக்கத்தை அவள் விரும்புவதில்லை

    படுக்கை அறையில் இருக்கும் நெருக்கம் மட்டுமல்லாது, இறுக்கி அணைப்பது, முத்தங்கள் கொடுப்பது மற்றும் அரவணைப்பாக இருப்பது போன்றவைகளும் கூட அன்பின் வெளிப்பாடே. இவைகளில் நீங்கள் ஈடுபடும் போது, திடீரென அவள் ஒரு சந்நியாசி போல் ஒதுங்கினால், இந்த உறவு அவளுக்கு கசக்கிறது என்று அர்த்தமாகும். இதற்கு முன் உடல்ரீதியாக உங்களுக்குள் இருந்த கெமிஸ்ட்ரி, இப்போது குறைந்துவிட்டால் அது பிரச்சனைகளின் அறிகுறியாகும்.

    இருவரின் வருங்காலத்தை பற்றிய எந்த பேச்சும் இருப்பதில்லை

    இதற்கு முன்பெல்லாம் வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறையை எப்படி இருவரும் சேர்ந்து களிக்க வேண்டும் என்பதை பற்றி முன்கூட்டியே பேச தொடங்கிவிடுவாள். அதே போல் உங்களை திருமணம் செய்வதை பற்றியும், குழந்தைகளை பற்றியும் பேசுவாள். இப்போது வருங்காலத்தை பற்றிய எந்த பேச்சும் நடைபெறவில்லை என்றால், உங்கள் உறவின் மீது அவளுக்கு இருக்கும் ஈடுபாடு போய்விட்டது என்று அர்த்தமாகும்.

    தன்னை அழகாக காட்டிக் கொள்வதில் சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை

    உங்களுடன் ஒரு சிறிய விழாவிற்கு செல்ல வேண்டுமானாலும் கூட, அழகான ஆடைகள் அணிந்து அழகாக காட்சி அளிப்பாள். அப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு அதிக நேரத்தை செலவழித்து, ஆடைகள் மற்றும் அணிகலன்களுக்கு அதிக பணத்தை செலவழித்திருப்பாள். அதிலும் அது ஒரு படம் பார்க்க சென்றாலும் கூட இருக்கும். ஆனால் இப்போது திடீரென இதிலெல்லாம் நாட்டம் இல்லாமல், உங்களுடன் வெளியே வரும் போது, இப்போது தான் கோமாவில் இருந்து கண் விழித்த ஒரு நோயாளியை போல் வந்தால், உங்களுக்கே புரிந்துவிடும். இது ஒரு வகையில் உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்திவிடும்….!

    ஆஸ்கர் ரவிசந்திரனுக்காக இணைந்த ரஜினி, கமல்!

    By: ram On: 16:38
  • Share The Gag

  • ரஜினி, கமல் இருவரும் தான் தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாத தூண். இவர்கள் படம் வருகிறது என்றால் தமிழகம் மட்டுமில்லாமல், இந்தய திரையுலகமே கவனிக்க ஆரம்பிக்கும்.

    இவர்கள் இனி ஒரே படத்தில் சேர்ந்து நடிப்பது கடினம். ஆனால் ஒரே மேடையில் இவர்களை பல முறை நாம் பார்க்கலாம், அந்த அளவிற்கு நல்ல நட்புடன் இருந்து வருகிறார்கள்.

    தற்போது ஆஸ்கர் ரவிசந்திரன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஐ திரைப்படத்தில் இசை வரயிருக்கிறது. இதில் உலக சூப்பர் ஸ்டார்களான அர்னால்ட், ஜாக்கிஜான் கலந்துகொள்கிறார்கள்.

    இந்நிலையில் அவர்களுக்கே அழைப்பு வரும் போது நம் சூப்பர் ஸ்டார், உலக நாயகனுக்கும் அழைப்பு இல்லாமல் இருக்குமா? அவர்களையும் ரவிசந்திரன் அழைக்க அவர்களும் இந்த பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது.

    அனுமன் தேடிய “சஞ்சீவினி” மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

    By: ram On: 08:10
  • Share The Gag

  • இமயமலையில் உயிர் வாழ்வதற்கு மிகவும் சிரமப் படும் ஒரு பகுதியில் உயிர்களைப் பாதுகாக்க உதவும் ரோடியோலா என்ற ஓர் அதிசய மூலிகையை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். உயிர் காக்க உதவும் இந்த மூலிகையானது,  ராமாயண காலத்தில், அனுமனால் தேடப்பட்ட சஞ்சீவினி மூலிகையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

    காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்த மூலிகை சோலோ என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலிகையின் அரிய குணங்கள் குறித்து இன்னும் தெளிவாகக் கண்டறியப் படவில்லை என்றாலும், லடாக் பகுதிவாசிகள் இதன் இலைகளை உணவுப் பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

    லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இந்த மூலிகையின் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வரும் நிலையில், இதனை ‘சஞ்சீவினி’ மூலிகை என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

    விஞ்ஞானிகள் இது பற்றிக் கூறுகையில், இந்த மூலிகை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. கதிரியக்கத்தின் விளைவுகளில் இருந்தும் உயிர்களைப் பாதுகாக்கிறது. மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணியாகவும், உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்தும் தன்மையும் இந்த மூலிகைக்கு இருப்பது தெரியவந்துள்ளது என்று கூறுகின்றனர்.

    இந்தப் பகுதியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நமது ராணுவ வீரர்களுக்கு இந்த மூலிகை உதவியாக இருக்கும், மேலும், ரோடியோலா மூலிகை குறித்து ஏற்கெனவே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.