எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் கொடுக்கப்பட்ட ‘விஜய் டிவி விருதுகள்’ மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது.
ஆள் பார்த்து கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
மாஸ் ஹீரோக்களுக்கும், விஜய் டிவியின் அங்கமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்த, வாங்கி ரிலீஸ் செய்த படங்கள், அதில் நடித்த ஹீரோ, ஹீரோயின்களுக்கும் மட்டுமே அவார்டுகள் கொடுக்கப்பட்டதாக புகார்கள் சொல்லப்பட்டன.
மேலும் டைரக்டர் ராம் விஜய் டிவி விருது விழாவில் தனது ‘தங்க மீன்கள்’ படத்தை சரியாக அங்கீகரிக்கவில்லை என்று ஆதங்கப்பட்டார்.
இந்நிலையில் டைரக்டர் சீமான் திரைப்படங்களுக்கு எந்த லட்சணத்தில் விருதுகள் கொடுக்கப்படுகிறது என்பதை சமீபத்தில் ஒரு விழாவில் கிழிகிழியென்று கிழித்தார்.
இதெல்லாம் ஒரு கொடுமை. இந்தக் கொடுமையை ஒழிக்க வேண்டும் என்றும் ஆவேசப்பட்டார்.
விழாவில் அவர் பேசியதாவது :
”இங்க எல்லாத் திரைப்படங்களும் அங்கீகரிக்கப்படுவதில்லை. ‘மதராசப்பட்டிணம்’, ‘அங்காடித்தெரு’, ‘ஹரிதாஸ்’ போன்ற படங்களெல்லாம் புறக்கணிக்கப்படுது. சம்பந்தமில்லாத ஒரு படம் விருதை வாங்கிட்டு வருது. இதையெல்லாம் நாம் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கோம்.
இன்னும் வேடிக்கையா சொல்லணும்னா ‘சிறந்த இயக்குநர்’ என்ற விருதை ஒருவர் பெறுவார். ஆனால் அவர் இயக்கிய படம் சிறந்த படமா இருக்காது.
‘சிறந்த படம்’ என்றை விருதை ஒரு படம் பெறும். ஆனா அந்த இயக்குநர் சிறந்த இயக்குநர் விருதைப் பெற மாட்டார். இது எவ்ளோ வேடிக்கையா இருக்குன்னு நாம சிந்திச்சுப் பார்க்கணும்.
அதுல ஒரு அரசியல் இருக்குதுன்னு நமக்குப் புரியுது.
சிறந்த இயக்குநர் இயக்கிய படம் தான் சிறந்த படமாக இருக்கணும். சிறந்த படம்னு தேர்வு செய்யப்பட்ட படத்தோட இயக்குநர் தான் சிறந்த இயக்குநரா இருக்கணும். அதுதான் உண்மை, அதுதான் யதார்த்தம், அதுதான் நியாயமானது.
வேணும்னா ஒண்ணு செய்யலாம். ரெண்டு, மூணு இயக்குநர்களுக்கு சிறந்த இயக்குநர் விருதை கொடுக்கலாம். ரெண்டு, மூணு படங்களுக்கு சிறந்த படம் விருதை கொடுக்கலாம்.
ஆனா இங்க விருது அப்படி கொடுக்கப்படுவதில்லை.
சிறந்த படம் விருதை ஒரு படத்துக்கு குடுப்பாங்க. சிறந்த இயக்குநர் விருதை வேறொரு படத்தோட டைரக்டருக்கு குடுப்பாங்க…
அப்போ சிறந்த இயக்குநர் இயக்கிய படம் சுமாரான படமா..? அப்போ சுமாரான படத்தை இயக்கிய இயக்குநர் சிறந்த இயக்குநரா..?
இதெல்லாம் ஒரு கொடுமை. இது எல்லாத்தையும் ஒழிக்கணும். அதற்கு ஒரு புரட்சி தேவைப்படுகிறது” இவ்வாறு சீமான் பேசினார்.
0 comments:
Post a Comment