Saturday, 18 October 2014

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள் !

By: ram On: 23:48
  • Share The Gag
  • 1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.

    2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.

    3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.

    5. இது தவிர ப்ப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம்.

    6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.

    7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.

    8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.

    9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.

    மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒரு வழிமுறைகளே…உடம்பைக் குறைக்க இன்னும் நிறைய வழிமுறைகள் உள்ளன.

    ரஜினி, கமலால் ஷங்கருக்கு வந்த தலைவலி!

    By: ram On: 23:34
  • Share The Gag
  • தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவரிடத்திலும் நட்பாக இருப்பவர் இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கிய ஐ படம் நவம்பர் மாத இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐ படம் ரிலிஸ் ஆன சில நாட்களிலேயே ரஜினியின் லிங்கா, கமலின் விஸ்வரூபம் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது.

    இதனால் ஐ படத்தின் வசூல் மிகவும் பாதிக்கும் என அனைவரும் கூற, ஷங்கர் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறாராம்.

    சர்க்கரை நோயை 3 விதமாக கட்டுப்படுத்தலாம்....கூடுதல் தகவல்..!

    By: ram On: 23:00
  • Share The Gag
  • சர்க்கரை நோயை 3 விதமாக கட்டுப்படுத்தலாம்

    1) உணவுக்கட்டுப்பாடு:
    * உணவில் சர்க்கரை சத்து அதிகமுள்ள உணவுகளை குறைத்திட வேண்டும்.
      உதாரணம் கேரெட்,பீட்ரூட்,உருளை கிழங்கு,வாழைப்பழம்,மாம்பழம்,இனிப்பு     பண்டங்கள்,அரிசியினால் செய்யும் உணவு வகைகளான சாதம்,இட்லி,தோசை,
    இடியாப்பம் ஆகியவற்றை அதிகமாக சாப்பிடக்கூடாது.
    * இரவில் கோதுமை, ராகி ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
    * கொய்யா,நாவல் பழம்,பேரிக்காய்,வெள்ளரி,நெல்லிக்காய் ஆகியவை சாப்பிடலாம்.
    * ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதை தவிர்த்து 4 அல்லது 5 முறை ஒரு நாளில் குறைவான அளவில் உண்பது நல்லது.

    2) மருத்துவ முறைகள்:

    * ஆவாரை,கொன்றைவேர்,நாவல் கொட்டை,கடலழிஞ்சில்,கோரை கிழங்கு,கோஷ்டம்,மருதம்ப்பட்டை ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து 4 டம்ளர் நீர் சேர்த்து 1 டம்ளர் ஆக வற்றும் வரை காய்ச்சி, தினமும் இரு வேலை குடிக்க,நீரிழிவு நோய் குறையும்
    *தேற்றான் விதை,கடுக்கை தோல்,ஆவாரை விதை,விளாம் பிசின் ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து முதல் நாள் இரவு மோரில் ஊற போட்டு, மறு நாள் காலை அறைத்து பசு மோரில் கலந்து சாப்பிடலாம்.
    * நெல்லிக்காய் சாறு,தேன், எலுமிச்சை சாறு ஆகியவற்றை தலா 15 மி.லி எடுத்து மூன்றையும் கலந்து காலை மற்றும் சாப்பிட்டு வர இந்நோய் குறையும்.
    * அருகம்புல்லை நிழலில் உலர்த்தி காலையும் மாலையும் வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.
    * இலவமரப்பட்டை-10 கிராம்,கருஞ்சீரகம்-5 கிராம் எடுத்து பொடியாகி,1 ஸ்பூன் மோரில், உணவுக்கு முன் மூன்று வேளை சாப்பிடலாம்.

    3) உடற்பயிற்சி:
    * தினமும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை நடை பயிற்சி செய்து வரவும்.
    * இளம் வயதினராயின் ஓட்டப் பயிற்சி, யோகா செய்து வரலாம்.
    * பகலுரக்கதை தவிர்க்க வேண்டும்.

    தடுப்பு முறைகள்:
    * நெல்லிக்காய் சாறு ஒரு மேஜை கரண்டி,பாகற்காய் சாறு 1 மேஜை கரண்டி கலந்து தினமும் காலையில் சாப்பிட, கணையம் தூண்டப்பட்டு, இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி, சர்க்கரை வியாதியை தடுக்கலாம்.
    * நெல்லிக்காய் பொடி, நாவல் பழப்பொடி,பாகற்காய் தூள் தலா ஒரு ஸ்பூன் எடுத்து காலை, மாலை வெந்நீரில் சேர்த்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது.
    * தினமும் நடை பயிற்சி , ஓட்ட பயிற்சி செய்தல்.

    தமிழ் சினிமா மெட்ராஸ் ஸ்பெஷல்!

    By: ram On: 22:44
  • Share The Gag
  • தற்போது வரும் தமிழ் சினிமாவில் எல்லாம், கதை இருக்கோ இல்லையோ, ஆனால் கண்டிப்பாக சென்னை புகழ் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் 'நான் மதுரை காராண்டா...மலைக்கோட்டை காராண்டா' என்று ஹீரோக்கள் டயலாக் அடித்தது போக, சமீப காலமாக ‘அய்யே மூஞ்சிய பாரு பேமலின்னு’ சென்னை தமிழ் தான் நம்ம ஹீரோக்களின் ஆயுதம். அந்த வகையில் சென்னையை மைய்யமாக வைத்து எடுத்த படங்களின் சின்ன தொகுப்பு தான் இந்த பகுதி

    புதுப்பேட்டை

    சென்னை தமிழ் என்றாலே முதலில் நம் நியாபகத்திற்கு வருவது தனுஷ் தான். இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த புதுப்பேட்டை தான், சென்னையின் இருட்டு வாழ்க்கையை தெளிவாக மக்களுக்கு படம் பிடித்து காட்டியது. சென்னை புகழ் லிஸ்டில் ஆல் டைம் பேவரட் என்றால் புதுப்பேட்டை தான்.

    சென்னை-28

    சென்னை என்றாலே வெட்டு, குத்து தான். அதிலும் வட சென்னை என்றால் சொல்லவா வேண்டும். ஆனால் முதன் முதலாக வடசென்னையில் வசிக்கும் ஜாலியான் ப்ரண்ட்ஸ், கிரிக்கேட் என அட்டாகசம் செய்திருப்பார் வெங்கட் பிரபு.

    ஆரண்யகாண்டம்

    வழக்கமான வடசென்னையில் அடு, தடி, வெட்டு குத்து தான். ஆனால் இரண்டும் பெரிய டான்களின் ஈகோ மோதலை மிகவும் துல்லியமாக படம் பிடித்திருப்பார் தியாகராஜா குமாராவேல். இப்படத்தின் மிகப்பெரிய பலமே இசை தான். ஒரு சாதரண பெண் மொத்த கேங்ஸ்டர் கும்பலையும் ஏமாற்றி செல்வது போல் கிளைமேக்ஸ் அமைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் இயக்குனர்.

    பொல்லாதவன்

    புதுப்பேட்டையை தொடர்ந்து சென்னை பையனாக தனுஷ் நடித்த படம் பொல்லாதவன். இப்படத்தில் சென்னையில் நடக்கும் சிறு சிறு பைக் திருட்டை நம் கண்முன் கொண்டு வந்திருப்பார் வெற்றிமாறன். காதல், காமெடி என்று ஜாலியாக செல்லும் 1ஸ்ட் ஆப், மிரட்டல், சண்டை என 2ஆப். திரைக்கதையில் சுவாரசியம் ஏற்றியிருப்பார் இயக்குனர்.



    வடசென்னை வாலிபன் ஒருவன் பணத்திற்காக எது வேண்டுமானாலும் செய்வான், ஆனால் ஒரு கட்டத்தில் நாட்டின் பெரிய பிரச்சனை ஒன்று அவன் தலையில் விழ, அதை தொடர்ந்து என்ன ஆகிறது என்பதை மிக அழகாக, தைரியமாக எடுத்திருப்பார் ஜெனநாதன். இப்படத்தில் ஈ என்ற கதாபாத்திரத்தில் ஜீவா வாழ்ந்திருப்பார்.

    வணக்கம் சென்னை

    சென்னை என்றாலே அழுக்கு, குடிசை என்று காட்டி வந்தவர்கள் மத்தியில் மிகவும் கலர் புல்லாக காட்டியவர் கிருத்திகா உதயநிதி. சாப்ட்ஃவேர் வேலை, கெட் டு கெதர் லைப் என சென்னையில் ட்ரண்டியான மறுபக்கத்தை ஒரு பெண் இயக்குனராக இவர் எடுத்திருந்ததற்காகவே பாராட்டுகள் குவிந்தன. குறிப்பாக அனிருத்தின் சென்னை சிட்டி கேங்ஸ்டர் பாடல் சென்னையின் ஆந்தமாகவே மாறியது.

    திருமலை

    சென்னை இளைஞனை செம்ம மாஸாக காட்டிய படம் தான் திருமலை. இதற்கு முழுக்காரணமும் இளைய தளபதி விஜய்யை தான் சாரும். இப்படத்தில் சென்னை பாஷை பேசி கலக்கியிருப்பார். இப்படத்திற்கு பிறகு தான் விஜய்யின் திரைப்பயணத்தின் கிராப் உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.

    மெட்ராஸ்

    பெயரிலேயே மெட்ராஸை வைத்து ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தற்போது திரையரங்குகளை கலக்கி கொண்டிருக்கும் படம் தான் மெட்ராஸ். கானா பாட்டு, கலை நிகழ்ச்சி, புட் பால், நடனகுழுவினர் என வட சென்னையை ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்த பீலிங் இந்த படத்தை பார்க்கும் போது. ‘எங்க ஊரு மெட்ராஸ்’ இந்த பாடல் தான் தற்போது சென்னையில் பல இளைஞர்களின் ரிங் டோன்.

    குழந்தைகளின் மறதியை மறக்கடிக்கும் வழிகள்

    By: ram On: 08:17
  • Share The Gag
  • குழந்தைகள் கிரிக்கெட்டில் எந்த மேட்சில் எந்த வீரருடைய ஸ்கோர் கேட்டாலும் சொல்வார்கள். அல்லது சினிமா பற்றிய புள்ளி விவரங்களை துல்லியமாக தருவார்கள். இன்னும் சிலர் ஒரு சில பாடத்தில் சட்டென்று பதில் தருவார்கள். இதிலிருந்து குழந்தைகளுக்கு அந்த பாடத்தில் அல்லது அந்த விளையாட்டில் மட்டுமே நினைவாற்றல் உண்டு என்றும், மற்றதில் நினைவாற்றல் இல்லை என்றும் அர்த்தமாகிவிடாது. இவர்களது பிரச்சனை நினைவாற்றலில் இல்லை, ஆர்வத்தில் தான் என்று புரிந்துகொள்ள வேண்டும். எதில் நினைவாற்றலை வளர்த்தக்கொள்ள வேண்டுமோ, அதில் கண்டிப்பாக ஆர்வம் இருக்க வேண்டும். நனைவாற்றலுக்கு ஆர்வமே அடிப்படை காரணமாகிறது.

    கவனிக்கும் திறன் வேண்டும்:

    உங்கள் குழந்தையிடம் அவர்கள் பாடப் புத்தகத்தில் உள்ள அட்டைப்படத்தை வரைய சொல்லுங்கள், அல்லது அவர்கள் விரும்பி பார்க்கும் டிவி சேனலின் லோகோவையும் வரைய சொல்லுங்கள். அட்டையில் உள்ள படங்களுக்கு என்னென்ன வண்ணம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் குறிக்க சொல்லுங்கள். பிறகு ஒப்பிட்டு பாருங்கள். சிறிது நேரம் கழித்து பார்த்தால் பெரும்பாலான விஷயங்களை தவறாக குறித்திருப்பார்கள். அல்லது குறிக்காமல் விட்டிருப்பார்கள். தினமும் பார்க்கிற புத்தகம்தான் அல்லது தினமும் பார்க்கிற டிவிதான். இருந்தாலும் சரியாக எழுத முடியாததற்கு காணரம் நாம் பார்க்கிறோமே தவிர கவனிப்பதில்லை. நினைவாற்றலின் அடிப்படையே இந்த கவனிக்கும் திறன்தான்.

    எதிலும் ஒழுங்கு அவசியம்:

    குழந்தைகள் பல நேரங்களில் கணக்கு புத்தகம் எங்க கிடக்குன்னு தெரியலையே என்று நாள் முழுவதும் புலம்பி கொண்டு தேடிக்கொண்டும் இருப்பார்கள். இருபது அல்லது முப்பது புத்தகங்கள் உள்ள ஒரு சின்ன அறையிலே நம்மால் நமக்கு தேவையான புத்தகத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லையே, இலட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ள நூலக்த்திற்கு அழைத்து சென்று, அங்கே பணியாற்றுப்பவர்கள் மட்டும் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? என்பதை அவர்களைவிட்டே கண்டறிய சொல்லுங்கள்.

    காரணத்தினை ஆராய்ந்தால், வீட்டில் புத்தகங்கள் கிடைக்காததற்கு காரணம் புத்தகங்கள் இரைந்து கிடப்பதே, நூலகத்தில் கிடைப்பதற்கு காரணம் அடுக்கி இருப்பதே. குழந்தைகள் என்றில்லை, நாமே கூட பல நேரங்களில் எங்க கிடக்குன்னு தெரியலையே என்று புலம்பிக் கொண்டே நமக்கு தேவையானவற்றை தேடி இருக்கிறோம். இதனால் எதிலும் ஒழுங்கை கடைபிடிக்க பழக வேண்டும்.

    மறதியை விரட்டும் வழி:

    குழந்தைகளின் மறதியை போக்கும்பெற்றோர்கள் சில வழிகளை மேற்கொள்ளலாம். அதாவது, கு£ந்தைகளுடன் வெளியில் எங்காவது சென்று வந்த பின் அங்கே பார்த்தவற்றை கேள்வி கேளுங்கள். உதாரணத்திற்கு நூலகத்தில் அவர்கள் பார்த்த புத்தக அலமாரியின் வரிசையை அல்லது தெருவில் உள்ள கடைகளின் வரிசையை எழுத சொல்லுங்கள், அல்லது இன்று வகுப்பில் ஆசிரியர் முதலில் சொன்ன வார்த்ததை எது என்று கேளுங்கள். இதனால் அனைத்தையும் ஆர்வத்துடன் உன்னிப்பாக கவனிக்க தோன்றும்.

    உங்கள் உள்ளே ஓர் ஒழுங்கு ஏற்பட வேண்டுமென்றாலும் நீங்கள் செய்யும் வெளிச் செயல்களிலும் ஓர் ஒழுங்கு நிச்சயம் வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி, அவர்கள் செய்யும் எல்லா செயல்களையும் ஒழுங்கோடு செய்யச் சொல்லுங்கள்.

    பள்ளியிலிருந்து வந்ததும் ஷுவை நிதானமாக கழற்றி ஒழுங்காக அதற்குரிய ஸ்டாண்டில் வைக்க வேண்டும். சாக்சை கழற்றி துவைப்பதற்கென்று உள்ள பக்கெட்டில் போட வேண்டும். இப்படி ஒவ்வொறு செயலையும், ஓர் ஒழுங்கோடு செய்தால், உள்ளேயும் அதாவது மனதின் செயல்பாடுகளிலும் ஒழுங்கு ஏற்படத் துவங்கும். இவற்றை எல்லாம் தவறாமல் பின்பற்றினால் குழந்தைகளின் மறதியையும் மறக்கடிக்கலாம்.