Tuesday, 16 September 2014

சர்க்கரை நோயை குணப்படுத்தும் ‘வில்வம் ’Sugar curing 'Vilwa'

By: ram On: 23:01
  • Share The Gag
  • இலைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை நாம் சாப்பிடதொடங்கும் வரை சுவாசித்துக்கொண்டிருக்கின்றன. அதனால் தான் காற்றுப்புகாத பையில்  போட்டு கட்டினால் அவை அழுகிவிடுகின்றன. எனவே அவற்றை உயிருள்ள உணவுகள் என்கிறோம். அந்த உயிர்சத்து தான் நோய் தீர்க்கும் மருந்தாக  பயன்படுகிறது. அனைத்து பாகங்களும் பயன்தரும் பல தாவரங்கள் உள்ளன. அதில் இலை, பூ, காய், பழம், வேர், பிசின், பட்டை அனைத்தும் மருந்தாக  பலன்தரும் மணமுடைய இலைகளை பெற்ற முட்கள் உள்ள பெரிய மரம் வில்வம்.

    இந்திய சீதோஷ்ண நிலையில் வாழும் இம்மரம் தற்போது அரிதாகவே காணப்படுகின்றன. இது சாம்பல் நிறத்தில் பூ பூக்கும். இலை காரத்தன்மை  கொண்டவை. வேர் கசப்பானது. இதன் தாவரவியல் பெயர் கிமீரீறீமீ Aegle marmelos roxb..   இதன் வேர், இலை, பழம் என அனைத்தும் மருந்தாக  பயன்படுகிறது. இந்த தாவரம் சில நோய்களை முற்றிலும் நீக்குவதோடு, நோய் வராமலும் தடுக்கிறது என்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த மாவட்ட 

    வில்வ மரத்தின் பாகங்கள் காய்ச்சல், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்கு சிறந்தது. சிறந்த காலரா தடுப்பு மருந்தாகவும் இது  செயல்படுகிறது. வில்வ மரத்தின் காயை உலர்த்தி பொடி செய்து குழந்தைகளுக்கு சிறிதளவு கொடுத்து வர கழிச்சல், மூலநோய் நிற்கும். இலையை  இடித்து பிழிந்த சாற்றில் பசுவின் பால் விட்டு கொடுத்தால் சோகை, வீக்கம் போகும்.

    வில்வமரத்தின் பிசின் உடலுக்கு உரமேற்றும் வீரியம். ஆண்மை அளிக்கும். வில்வ வேர் பட்டையை பச்சையாக 10 கிராம் எடுத்து ஒரு கிராம்  சீரகத்துடன் அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து கலக்கி வடிகட்டி காலையில் மட்டும் குடித்து வந்தால் தாது பலப்படும். இதன் மூன்று இலைகளை  சுத்தம் செய்து தினமும் மென்று தின்று வந்தால் உட் செல்களிலுள்ள அனைத்து நோய்களும் அகலும். நல்ல ஜீரணம் உண்டாகும். நாம் உண்ணும்  உணவு பொருட்களிலுள்ள சத்துக்கள் அனைத்தும் ரத்தத்தில் கலந்து வலுப்பெற செய்கிறது.

    வேர், பட்டை, இலை ஆகியவற்றில் எதையாவது ஒன்றை சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கல்யாணமுருங்கை சாறு அதே அளவு  எடுத்து கலந்து காலையில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இதுபோல் இதன் காய் தூளை சிறிது வெல்லத்துடன் சேர்த்து உண்டால்  ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்பு, செரிமான குறைவால் ஏற்படும் அஜீரண வயிற்று வலி நீங்கும்.

    வில்வ பழத்தின் சதையை உலர்த்தி காய வைத்து பொடி செய்து அதில் ஒரு கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டால்  சீதபேதி, பசியின்மை குணமாகும். 2, 3 பச்சை இலைகளை தினந்தோறும் காலையில் தின்று வர நீரிழிவு, ஆஸ்துமா நோய்கள் கட்டுப்படுகிறது,  கோழைகட்டாது. வேர்ப்பட்டையை கசாயம் செய்து குடித்து வர காய்ச்சல் தணிகிறது. பழத்தை ஓடு நீக்கி பிழிந்து சர்க்கரை பாகில் காய்ச்சி சர்பத்  செய்து குடித்து வர உடலில் வெப்பம் தணியும்.  இதனால் அதிக வேர்வை ஏற்படுவது குறைகிறது. மலச்சிக்கல் வராது.

    வில்வ மரத்தின் பட்டை மற்றும் பிசின் பல்வேறு நோய்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது. மிகச்சிறந்த மூலிகை மரமான  வில்வம் தற்போது சாதாரண இடங்களில் காண்பது அரிதாகிவிட்டது. இது தானாக வளர்வது அரிது. விதைகளை நடவு செய்து தான் வளர்க்க  வேண்டும். பண்டைய காலத்தில் தோட்டங்களில் வளர்க்கப்பட்டு வந்த இந்த மரம் தற்போது சிவன் கோயில்கள் மற்றும் சில மூலிகை பண்ணைகளில்  மட்டுமே உள்ளன. இதன் மருத்துவ குணம் குறித்த விழிப்புணர்வு குறைவால் இம்மரம் கைவிடப்பட்டாலும், ஆன்மிக காரணங்களுக்காக  பாதுகாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நோய்களை எளிதாக குணப்படுத்தும் வில்வ மரத்தை அழிவு பட்டியலில் இருந்து மீட்டு அனைத்து இடங்களிலும்  வளரச்செய்ய வேண்டும்.

    இரண்டு வேளைக்கு மேல் மூலிகைசாறு வேண்டாம்

    வில்வம், அருகம்புல், துளசி, அரசு, கல்யாண முருங்கை, வாழைத்தண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கற்பூரவல்லி, புதினா, வல்லாரை, தூதுவளை,  மஞ்சள்கரிசலாங்கண்ணி கீரை, செம்பருத்தி, முருங்கை இலை, மணத்தக்காளி, வெந்தயக்கீரை இவற்றில் ஏதாவது ஒரு இலையில் ஒரு கைப்பிடி  அளவு எடுத்து கழுவி மிக்ஸியில் போட்டு 1 டம்பளர் (250 மில்லி) தண்ணீர் விட்டு சட்டினி போல் அரைத்து அதை சுத்தமான வெள்ளை துணியில்  ஊற்றி பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். தேவையான அளவு வெல்லம் அல்லது தேன் சேர்த்து குடிக்கலாம். சில இலைகள் சில நோய்களை  முற்றிலும் குணப்படுத்தும். காலை, மாலை என இரண்டு வேளைக்கு மேல் மூலிகை சாறு குடிக்க கூடாது. நோயற்ற ஆரோக்கியமான வாழ்வு நம்  கையில் தான் உள்ளது.

    மூலிகை சூப்

    வில்வ இலை அல்லது மற்ற மூலிகை இலைகளை சாறு எடுத்து பச்சையாக சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் கீரையுடன் சேர்த்து சமைத்து  சாப்பிடலாம் அல்லது மூலிகை சூப் தயாரித்தும் சாப்பிடலாம். இந்த சாறு ஒருவருக்கு ஒரு நேரத்திற்கு போதுமானது.


    உளவியல் நிபுணர் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் சிதம்பர நடராஜன்.

    என்னோட 2 நாள் வருமானம் தான் கத்தி படம்; சுபாஷ்கரன் அதிரடி.!

    By: ram On: 22:14
  • Share The Gag
  • கத்தி படத்தின் பல எதிர்ப்புகளை தாண்டி தற்போது படம் ஒரு நல்ல சூழ்நிலையில் இருக்கிறது. இதனை பத்திரிக்கையாளர்களிடம் அறிவிக்க இன்று சென்னை தாஜ் கிளப்பில் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தார்கள் லைகா குழுமத்தினர். இந்த சந்திப்பு ஆரம்பித்ததும் லைகா நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த ஒரு வீடியோ 45 நிமிடத்திற்கு ஓடியது. அந்த வீடியோவில் லைகாவிற்கும் ராஜபக்‌ஷேவுக்கும் இருக்கும் சம்பந்தங்கள் குறித்த சந்தேகத்திற்கும் விடையளித்திருந்தனர்.

    அதன்பிறகு பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார் சுபாஷகரன் அல்லிராஜா. பத்திரிக்கையாளர் கேள்வி முடிந்தவுடன் பத்திரிக்கையாளர்களை பார்த்து அல்லிராஜா ஒரு கேள்வியை கேட்டார் அதாவது “ராஜபக்‌ஷே யாரு அவர் ஏன் தமிழ் சினிமாவுல வந்து படம் எடுக்கணும், அப்படி அவர் படம் எடுக்கணும்னு நினைத்திருந்தா அவர் இந்திக்கு தான் போயிருப்பார் எதற்கு தமிழுக்கு வரப்போகிறார், அப்படி அவரோட பணம் வச்சுத்தான் நான் படம் எடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை, என்னுடைய இரண்டு நாள் வருமானம் தான் கத்தி திரைப்படத்தின் பட்ஜெட், அப்படி இருக்கையில் கத்தி படத்தில் ராஜபக்‌ஷேவிற்கு என்ன வேலையிருக்கப் போகிறது என்று கேள்வி கேட்டார்”… இதற்கு மேலும் பல அமைப்புகள் கொடியை தூக்கிக் கொண்டு வந்தால் அவங்கள என்ன சொல்றது…

    ரசாயனப் பால்! – சும்மா கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க. அதிர்ச்சியாகிடாதீங்க.

    By: ram On: 21:34
  • Share The Gag
  •                  கிராமத்தில் கூட்டறவு பால் வழங்கும் சங்கம்னு இருக்கும். அந்தந்த பகுதியில கறந்த பால எடுத்துகிட்டு வந்து ஒரு இடத்தில் அளந்து ஊற்றுவார்கள். இன்னாருடையது இவ்வளவு லிட்டர் என குறிப்பெடுத்துக்கொண்வார்கள்.அதை கேன்களில் ஏற்றி ஒன்றாக ஒரு இடத்தில் சேர்ப்பார்கள். பிறகு நாற்பது லிட்டர் கேன்களில் ஊற்றி வைப்பார்கள். அதில் ஐந்து லிட்டர் பால் எடுத்துவிட்டு, மனச்சாட்சி இருந்தால் மூன்று லிட்டர் பால் எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக தண்ணீரை ஊற்றுவார்கள். ஐநூறு கிராம், அல்லது முன்னூறு கிராம் சர்க்கரையை போட்டு கலக்கிவிட்டால் போதும். லேக்டா மீட்டரில் கண்டுபிடிக்க முடியாது.

    அப்புறம் அந்த பால் கேன்களை எல்லாம் லாரியில் ஏற்றிச் செல்வார்கள். அதிலுள்ள கிளீனர், டிரைவர் சாமார்த்தியத்திற்கு ஏற்ப கை வைத்துவிட்டு பதிலுக்கு கொஞ்சம் தண்ணீர்.இப்படியாக அந்த பகுதியில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்திற்கு போய் சேரும்.

    அங்க பெரிய தொட்டியில கேன் கேனா எடுத்து கவிழ்ப்பார்கள். கொழுப்பை பிரித்தெடுத்து பதப்படுத்தப்பட்ட பாலா மாற்றுவதற்காக நீண்ட சில்வர் குழாய்களில் ஓடியபடியே இருக்கும். அப்படி நூறு கேன்களை எடுத்து கவிழ்த்தால் நான்காயிரம் லிட்டர் பால்…கூடவே அனாமுத்தா ஒரு ஐந்து கேன்கள் தண்ணீர் எடுத்து ஊற்றுவார்கள். பால் அப்படி இப்படியுமாக கீழே சிந்தி சேதாரமாகுமில்ல. அதை ஈடுகட்டவாம். லட்சக்கணக்கான லிட்டர் பால் என்றால் எவ்வளவு தண்ணீர்….?

    இப்படி குளிரூட்டி, கொழுப்பு நீக்கிய பால் பெரிய பெரிய லாரிகளில் ஏற்றி சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு அனுப்புகிறார்கள்.அப்படி வரும்போது வழியில் பக்குவமாக சீல் உடைத்து ஆயிரம் இரண்டாயிரம்னு எடுத்துவிடுவார்கள். அங்கேயும் தண்ணீர் கலப்படம்.

    ஒரு வழியாக அந்த வாகனம் நகரங்களில் உள்ள பால் பண்யைகளுக்கு வரும். அங்கு பதப்படுத்தி தரப்படுத்தும் வேலை. அங்கேயும் ஏராளமான பால் கீழே சிந்திகிக்கிடக்கும். ஆக இங்கேயும் ஈடுகட்டுவதற்கென்று தண்ணீர் கலப்பு.? அதோடு நின்றுவிடவில்லை. இன்னும் இருக்கிறது. மனதை தைரியப்படுத்திக்கொள்ளுங்கள்.

    பிறகு அங்கிருந்து அந்தந்த பகுதிகளில் உள்ள பால் வினியோக நிலையத்திற்கு லாரிகளில் கொண்டு வந்து அங்குள்ள டேங்கரில் நிரப்பிவிட்டுச் செல்வார்கள். அங்கே சில்லரையில் விற்பதற்காக இருக்கும் ஆட்கள், அவர்களின் பங்கிற்கு இரண்டு குடமோ, மூன்று குடமோ தண்ணீர் கலந்துவிடுவார்கள். அவர்களின் செலவுக்கு வேண்டுமில்லையா..அதற்காக கலப்பார்கள். நம்ப ஆட்கள் அட்டை வாங்கி வைத்துக்கொண்டு, ‘ஆவின் பால்தான் பெஸ்ட்’ என்று குளிரிலும் மழையிலும் வரிசையில் நின்று வாங்குவார்களேஇ அந்த பாலின் கதை இதுதான். இப்படித்தான்..

    கிராமத்தில் உள்ளவார்கள் பாலில் கொஞ்சம் தண்ணீர் கலந்து காய்ச்சி சாப்பிடுவார்கள். நகரத்தில் உள்ள நாம் தண்ணீரில் கொஞ்சம் பால் கலந்து காய்ச்சி சாப்பிடுகிறோம். அதுவும் ரசாயணக் கலவையோடு….!

    விக்ரமை ஏமாற்றிய அர்னால்ட்!

    By: ram On: 21:17
  • Share The Gag
  • தமிழகம் முழுவதும் நேற்று ஐ பீவராக தான் இருந்தது. ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சென்னையை மிகவும் ரசித்ததாக கூட தன் பேஸ்புக் தளத்தில் கூறியுள்ளார்.

    இவர் ஹோட்டல் வந்தவுடன் நடிகர் சூர்யா நேரில் சென்று பார்த்து அவருடன் போட்டோ எடுத்து கொண்டார். ஐ ஆடியோ விழாவில் நடனமாடுவதற்காக விக்ரம் பல மணி நேரம் மேக்கப் போட்டு வந்து, மேடையில் அசத்தினார்.
    அதற்குள் அர்னால்ட் சென்று விட்டதால், அவருடன் விக்ரம் ஒரு போட்டோ கூட எடுத்துகொள்ள முடியவில்லை . இதனால் விக்ரம் மிகவும் மன வேதனை அடைந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


    ஐ படத்தில் நான் தான் நடிக்க வேண்டியது! 4 வருடங்களுக்கு முன்பே கூறிய ரஜினி

    By: ram On: 20:45
  • Share The Gag
  • ஐ படத்தில் விக்ரமின் நடிப்பை பாராட்டாதவர்கள் யாரும் இல்லை. டீசர் பார்த்த ரஜினியே கண்கலங்கி பாராட்டியுள்ளார். இப்படத்தில் விக்ரம் வடசென்னை வாலிபராகவும், மிஸ்டர்.மெட்ராஸ் ஆகவேண்டும் என முயற்சி செய்வாராம்.

    பின் ஒரு கட்டத்தில் அவர் முன்னணி மாடலாக வருவது போல் கதையம்சம் உள்ளது. ஆனால் இதை எந்திரன் படத்தின் ஒரு பேட்டியில் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

    இதில் ‘ஷங்கர் என்னிடம் முதலில் கூறிய கதை ஒரு மாடலின் வாழ்க்கையை பற்றியது தான், பின்பு நான் தான் என்ன சார் நானெல்லாம் மாடலாக நடித்தால் சரி வருமா? என்று அதை ஒதுக்கிவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

    இதை வைத்து பார்க்கும் போது ஷங்கர் இக்கதையை சுமார் 5 வருடத்திற்கு முன்பே ரெடி செய்துவிட்டார் என்று தெரிகிறது.

    முள்ளாநங்கை மூலிகையால் என்ன செய்ய முடியும்...?

    By: ram On: 19:59
  • Share The Gag
  •  நாம் பயன்படுத்தும் பெரும்பாலான இயந்திரங்களுக்கு, ஆயுட்காலம் குறைவு தான். ஏனென்றால், இயந்திரங்களின் அசையக் கூடிய பாகங்கள், விரைவில் தேய்ந்து விடுகின்றன. ஆனால், பிறந்தது முதல் கடைசி காலம் வரை அசையக் கூடிய நமது மூட்டுகளுக்கு, இயற்கை கூடுதலான ஆயுளை கொடுத்திருக்கிறது. ஆனாலும், நாம் மூட்டுகளை சரியாக பராமரிக்காததால், பல்வேறு வகையான மூட்டுவாத நோய்களுக்கு ஆளாகிறோம்.

    நமக்கு தேவையான உடல் எடையை விட, 10 சதவீதத்திற்கு மேல், உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்தவுடனேயே, முழங்கால் மூட்டுகள் மற்றும் கணுக்கால் இணைப்புகள், பலவீனமடைகின்றன. குனிந்து கொண்டோ, ஒரே இடத்தில் நிலைகுத்தி பார்த்தவாறோ பணிபுரிவதால், கழுத்து முள்ளெலும்புகளும், சர்க்கரை நோய் மற்றும் தவறான நிலையில் தூங்குவதால் தோள்பட்டை இணைப்புகளும், அமர்ந்தே பணிபுரிவதால், முதுகு முள்ளெலும்புகளும், நீண்டநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால், இடுப்பு முள்ளெலும்புகளும், தொடை எலும்பு இணைப்புகளும், பலவீனமடைகின்றன.

    இதைத் தவிர, கணினியில் பணிபுரிபவர்களும், எழுத்து வேலை செய்பவர்களும், விரல்களின் மூட்டு இணைப்பு பலவீனத்திற்கு ஆளாகின்றனர். எலும்புகள், எலும்புகளைச் சூழ்ந்துள்ள சவ்வுகள், எலும்புகளை பிடித்துள்ள தசைநார்கள் மற்றும் தசை ஆகியவற்றிற்கு போதுமான ரத்தம் செல்லாவிட்டால், மூட்டுகளில் வலி உண்டாகிறது. அசைக்கும் பொழுது வலி ஏற்படுதல், அசைக்காமல் இருந்தால் மூட்டுகள் இறுகுதல், நோயின் ஆரம்ப நிலையில், மூட்டுகளை அசைக்கும்பொழுது, "களுக் முளுக்' என, பிறருக்கு கேட்கும் படியாக சத்தம் உண்டாதல், நாட்பட்ட நிலையில் மூட்டுகளில் வீக்கம் மற்றும் கடுமையான வலி உண்டாதல் ஆகியன, மூட்டு பலவீனத்தைக் காட்டும் அறிகுறிகள்.

    மூட்டு பலவீனத்தின் ஆரம்ப நிலையில், முறையான பயிற்சிகளை செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஒற்றடம் செய்து வந்தால் பலன் உண்டாகும். ஒற்றடம் இட, மூலிகை எண்ணெய்களை பயன்படுத்துவதால் தோல், சதை மற்றும் இணைப்பு வரை மருந்துச் சத்துகள் ஊடுருவி, வலி நீங்கி குணமுண்டாகிறது. மூட்டுகளில் தோன்றும் கடுமையான வலி மற்றும் இறுக்கத்தை குறைத்து மூட்டை பாதுகாக்கும் அற்புத மூலிகை முள்ளாநங்கை. பார்லேரியா லுபிலினா என்ற தாவரவியல் பெயர் கொண்ட, அகான்தேசியே குடும்பத்தைச் சார்ந்தது.

    கூரிய முட்களையும் சிவப்புநிற இலைக்காம்புகளையும் உடைய முள்ளாநங்கை செடிகளின் இலைகள், சித்த மருத்துவத்தில் பயன்படுகின்றன. இதன் இலைகளிலுள்ள, அசிட்டைல்பார்லரின், பீட்டாகுளூக்கோபைரோனுசல் மற்றும் போர்னியால் ஆகிய வேதிச்சத்துகள், மூட்டு எடை வீக்கங்களை குறைத்து, வலியை நீக்குகின்றன. அதுமட்டுமின்றி, திசுக்களின் இறுக்கத்தை குறைத்து, மூட்டுகளின் அசைவை எளிதாக்குகின்றன. வெளிநாடுகளில் மசாஜ் நிலையங்களில் போர்னியால் என்ற முள்ளாநங்கை வேதிச்சத்து சேர்க்கப்பட்ட கிரீம் உடம்பில் தேய்க்கப்பட்டு, வலி நீக்கும் மசாஜ் செய்யப்படுகிறது.

    முள்ளாநங்கை இலைகளை நீரில் வேகவைத்து, நீர் வற்றியதும் வெள்ளை துணியில் முடிந்து, ஒற்றடமிட வலி நீங்கும். ருமடாய்டு ஆர்த்தரைட்டிஸ், சர்வாங்கி வாதம் போன்ற வாத நோய்களில் தோன்றும் மூட்டுவலி நீங்க முள்ளாநங்கை இலைகளை இடித்து, சாறெடுத்து, நல்லெண்ணெயிலிட்டு காய்ச்சி, பதத்தில் வடிகட்டி, வலியுள்ள இடங்களில் தடவிவரலாம். முள்ளாநங்கை இலைச்சாறு- 500மிலி, ஓமம்-100 கிராம், தேங்காய் எண்ணெய்-500மிலி சேர்த்து கொதிக்கவைத்து, சாறு வற்றியதும் வடிகட்டி இளஞ்சூட்டில் 20 கிராம் பூங்கற்பூரத்தை போட்டு கரைந்ததும் மூடி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை வலியுள்ள இடங்களில் தடவி வர, பல்வேறுவகையான மூட்டுவலிகள் கட்டுப்படும்.

    வெளிநாட்டு மகனின் தந்தையின் கண்ணீர்…

    By: ram On: 19:11
  • Share The Gag
  •  வெளிநாட்டு மகனின் தந்தையின் கண்ணீர்…
    வாங்கிய கடனுக்காக நகையை வட்டி கடையிலும்,
    பத்திரத்தை வங்கியிலும்,
    என் மகனை வெளிநாட்டிலும் அடகு வைத்தேன்
    கண்டிபாக ஒரு நாள் அவனையும் மீட்டுவிடுவேன்
    ஆனால் அவன் இல்லாத ஊர் திருவிழாவையும்,
    உறவினர் திருமணத்தையும்,
    நண்பனின் மரணத்தையும்,
    செல்போனிலும் பேஸ்புக்கிலும் கேட்டு கேட்டு
    வாழ்கையையும், இளமைகாலத்தையும்,
    தொலைத்த அவனை நான்
    எப்படி மீட்டுதருவேன்?

    வீசாவிற்க்கு பணம் கட்டி,
    காதலுக்கு சமாதி கட்டி,
    சூழ்நிலைக்கு தாலிகட்டி,
    வட்டி கட்ட சென்றவனின்
    மனைவியை தவறாகத்தானே
    பார்கிறது இந்த சமூகம்!
    பையன் பக்கத்தில் இல்லை என்றால்
    பக்கத்து வீட்டுகாரன்கூட பகைக்க பார்க்கிறான்

    என் மகன் வந்தால் சென்ட் வியாபாரியாக,
    தைலம் விற்பவனாக,
    ஃபாரின் சரக்கு தருபவனாகதான் பார்க்கிறார்கள்
    ஆனால் என் கண்களுக்கு மட்டும்
    அவன் வாளருந்த பட்டமாகதான்
    தெரிகிறான்

    உங்கள் குழந்தைகளுக்கு குடிப்பதும்,
    புகைப்பதும் குற்றம் என்று சொல்லி தரும் நீங்கள்
    கடன் வாங்குவதும் குற்றம் என்று சொல்லிக்கொடுங்கள்

    வட்டிக்கு விடுவது பாவம் என்பார்கள்
    அதை மாற்றி எழுதுங்கள்
    வாங்கியவனே பாவம் என்று…

    ஸ்வேதா பாசு விபச்சார வழக்கில் மாட்டிய பிரபல தொழிலதிபர் யார்?

    By: ram On: 18:43
  • Share The Gag
  • சமீபத்தில் நடிகை ஸ்வேதா பாசு விபச்சார வழக்கு ஒன்றில் கைதானார். இது குறித்து விசாரணையில் ‘எனக்கு பணம் பற்றாக்குறை, குடும்பத்தை காப்பாற்றவே இந்த தொழிலுக்கு வந்தேன் என்று கூறினார்.

    மேலும் காவல்துறை நடத்திய அடுத்த கட்ட விசாரணையில் இவருடன் ஒரு பிரபல தொழிலதிபர் இருந்தார் என தெரியவந்துள்ளது.

    அவர் யார் என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணம்

    By: ram On: 18:01
  • Share The Gag
  • சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது. அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்று தான்.

        108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது

         Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி (AVADI)

        Chrome Leather Factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று

        17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார், பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது

        மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது

        தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது

        சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது

        முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி

        உருது வார்த்தையான Che Bage (Six Gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்

        சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்

        கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்

        சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது

        பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்

        சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது

        நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது (தி.நகர்)

        புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது

        அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்

        17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை

        முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது

        மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது

        பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது

        சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது

        திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது

        பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது

        தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது

        வள்ளி சேரி பாக்கம் என்பதே மருவி பின்னால் வளசரவாக்கம் என மாறியது

    ரசிகர்களை ஆச்சரியத்தின் உச்சத்திற்கு கொண்டு போன விக்ரம்!

    By: ram On: 17:12
  • Share The Gag
  • தமிழ் சினிமா உலக அளவிற்கு முன்னேறிவிட்டது என்பதற்கு ஐ படத்தின் டீசரே ஒரு உதாரணம். அந்த அளவிற்கு ஷங்கரின் மேக்கிங்கும், விக்ரமின் உழைப்பும் டீசர் பார்க்கும் போதே தெரிகிறது.

    நேற்று நடந்த ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எல்லோரும் வந்து விட்டார்கள். விக்ரம் மட்டும் எங்கே என்று அனைவரும் தேடி வந்த நிலையில், திடீரென்று கொடுர மிருகம் போல் வேடமணிந்து வந்தார்.

    இதை கண்ட பலரும் ஆச்சரியத்தில் திகைத்து போய் பார்த்தனர். மேலும் ஐ டீசரை பார்த்த பலரும் ஏதோ வேறு உலகத்திற்கு சென்றது போல் உள்ளது என கருத்து தெரிவித்தனர்.

    படிப்பு பெருங்காய டப்பாவா, அட்சயப் பாத்திரமா?

    By: ram On: 08:13
  • Share The Gag
  •  படித்த படிப்பு வேலையில் எவ்வளவு தூரம் கை கொடுக்கும்? இந்தக் கேள்வியே கூடச் சிலருக்குச் சிரிப்பை வரவழைக்கலாம். “நாங்க படிச்ச படிப்புக்கும் செய்யற வேலைக்கும் சம்பந்தமே கிடையாது!” என்று சொல்பவர்கள் தான் எல்லாக் காலங்களிலும் அதிகம்.

    உங்களோடு வேலை செய்பவர்களின் அடிப்படைக் கல்வித் தகுதிகளை ஆராயுங்கள். அல்லது உங்களோடு டிகிரி முடித்தவர்கள் என்னவெல்லாம் வேலை செய்கிறார்கள் என்று ஆராயுங்கள். உண்மை புரியும்.

    கோர்ஸ்களின் காலம்

    புரொபஷனல் கோர்ஸ் என்று அழைக்கப்பட்டவை அது சார்ந்த வேலைகளுக்கு மட்டும் மக்களைக் கொண்டு சேர்த்த காலம் ஒன்று இருந்தது. இன்று படித்து முடித்து அதே துறை சார்ந்த வேலைக்குப் போகிறவர்கள் மருத்துவர்கள் மட்டும்தான். இஞ்ஜினீயரிங் என்பது 16வது வகுப்பு போல ஆகிவிட்டது. இன்று இஞ்சினீயர்களை எல்லாத் தொழில்களிலும் பார்க்கலாம். மற்ற படிப்புகள் படிப்பவர்களும் அன்றைய மார்க்கெட் நிலவரம் கொண்டே வேலைகளைத் தீர்மானிக்கிறார்கள்.

    அதனால் நீங்கள் படித்த படிப்பை வேலையில் காட்ட முடிந்தால் பாக்கியவான். அப்போது கூட வேலையின் தேவை அறிந்து நாம் கல்வி கற்கவில்லை என்பது வேலை செய்யும் போது தான் தெரியும். “இதெல்லாம் படிக்கற காலத்துல புரியலை. இப்பத் தான் விளங்குது” என்பதை அடிக்கடி சொல்லக் காரணம் இதுதான்.

    வெட்டு குத்து

    உண்மை இப்படி இருக்கையில், நாம் படித்த படிப்பைக் காலம் முழுதும் நம் அகந்தையில் தூக்கிச் செல்கிறோம். அந்த அறிவு காலத்தை மிஞ்சியது எனத் தப்புக்கணக்கு போடுகிறோம். வேலைத் தகுதிகளுக்கும் புதிய பொறுப்புகளுக்கும் இது பல சமயங்களில் உதவாது என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறோம்.

    பட்டங்களைப் பெரும் பெருமையாகக் கொண்டாடும் நம் சமூகத்தில் கல்வியின் தரம் பற்றிய நேர்மையான விமர்சனம், படித்த படிப்பின் சாதக பாதகங்கள் பற்றிப் பேசுவதில் சிரமங்கள் உள்ளன.

    முன்பெல்லாம் கல்யாணப் பத்திரிகையில் மணமக்களின் பாஸான, பாஸாகிக்கொண்டிருக்கிற அனைத்துப் பட்டங்களையும் போடுவார்கள். என் உறவினர் ஒருவர் கடிதத்தில் உள்ளே குறிப்பிடுகையில் கூடத் தன் சொந்தச் சகோதரர்களின் பெயர்களுடன் “Dr”, “Er” என்ற அடைமொழி சேர்த்துத் தான் எழுதுவார். வாங்கிய பட்டத்தைக் குறிப்பிடாவிட்டால் இங்கு வெட்டு, குத்தே நடக்கும்.

    எம்.ஈ படிச்சதாலே வேலை இல்லை

    இன்றைய இளைஞர்கள் தேவலாம். படிப்பு பற்றி அவ்வளவு பகட்டு இல்லை. கல்பனா வெட்ஸ் தேவ் என்று ஒரு திருமண அழைப்பு வந்தது. “என்ன படிப்பு, என்ன வேலை ஒரு தகவலும் இல்லை!” என்று அங்கலாய்த்தார் உடனிருந்த பெரியவர்.

    “நிறையப் படித்தால் நல்ல வேலை. அதிகம் படித்தால் அதிகச் சம்பளம். நல்ல மதிப்பெண்கள் நல்ல அறிவின் அறிகுறி.” போன்ற பிழையான கருத்துகள் கல்விச்சாலைகளில் வளர்த்து விடப்படுகின்றன. நிதர்சனம் வேலைக்குச் சேரும் காலத்தில் தான் தெரிகிறது.

    முதுகலைப் பொறியியல் முடித்து வேலை கிடைக்காத இளைஞர் என்னிடம் ஆலோசனைக்கு வந்தார். “எம்.ஈ படிச்சும் ஒரு கம்பனியில கூட வேலை கிடைக்கலை பாருங்க டாக்டர்” என்று வருத்தப்பட்டார் உடன் வந்த தகப்பனார். “எம்.ஈ படிச்சும் இல்லை... எம்.ஈ படிச்சதாலே தான் எந்த கம்பனியிலயும் வேலை கிடைக்கலை!” என்று விளக்கினேன்.

    கவுரவம் தின்ற வேலை

    இளங்கலை மட்டும் தான் தேவை என்றால் முதுகலையை நிராகரிப்பது இயல்பு என்று விளக்கினேன். “பி.ஈ ன்னு நினைச்சு அதுக்கேத்த வேலைக்குப் பரிசீலிக்க்க் கூடாதா?” என்று கேட்டார். “சேரும் போது பரவாயில்லை என்று சேருவோம்.

    பிறகு ‘யு.ஜிக்கும் பி.ஜிக்கும் எப்படி ஒரே சம்பளம்?’ என்று கேட்போம்... தவறு நடக்கையில் ‘இதுல இவர் எம்.ஈ வேற!’ என்று திட்டினால் சுருக்கென இருக்கும். ஒத்துப்போகும் பிரச்சினைகள் அதிகம் வரலாம். அதனால்தான் அதிகத் தகுதியும் தகுதிக்குறைவு போலத் தான்.

    வாங்கும் செருப்பு காலுக்குச் சின்னதாகவும் இருக்கக் கூடாது. அதே போலப் பெரிதாகவும் இருக்கக் கூடாது அல்லவா?

    அந்த இளைஞர் ஏன் ஆராய்ச்சி, ஆசிரியர் தொழில் என யோசிக்கவில்லை? தகப்பனாரே பதில்சொன்னார். “இதுவே நான் சொன்னதால் தத்தித் தத்தி பாஸ் பண்ணியிருக்கான். சப்ஜெக்ட் நாலெட்ஜ் இல்ல சார். அதான் கம்பனி சைட்ல ஏதாவது ட்ரை பண்றோம்!”

    இந்தப் பலகீன விருப்பத்தையும் அறிவையும் வைத்துக்கொண்டு பின் ஏன் எம்.ஈ?

    “எங்க குடும்பத்துல எல்லாரும் மினிமம் பி.ஜி பண்ணியிருக்காங்க. அப்புறம் இவன் மட்டும் எப்படி யு.ஜியோட நிறுத்தறது?” என்றார். குடும்பக் கவுரவம் அந்தப் பையன் வேலை வாய்ப்பைத் தின்று போட்டு விட்டது.

    பல பட்டங்கள்

    அதே போலச் சிலர் நிறைய டிகிரிகள் படித்துக் கொண்டே இருப்பார்கள். அஞ்சல் வழியில் எனக்குத் தெரிந்து ஒருவர் நான்கு எம்.ஏ பட்டம் வாங்கியிருக்கிறார். அத்தனையையும் பெயர் பலகையில் சேர்த்துக் கொண்டே இருப்பார். “மாமா மாமா ( MA MA MA MA) “ என்று தெருப்பசங்க அனைவரும் கிண்டலடிப்பார்கள். “ஒரு பைசாக்குப் பிரயோசனமில்லை” என்று அங்கலாய்ப்பார் மனைவி.

    கல்வி சம்பாத்தியத்திற்கு மட்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்றாலும் அவரின் பட்டங்கள் அறிவின் தேடலை விட அகந்தையின் வெளிப்பாடுகளாகத் தான் என்னால் பார்க்க முடிந்தது.

    பரவலாகவா, ஆழமாகவா?

    பலர் நிறையப் படிப்பது எங்காவது பயன்படும் என்று ஸ்திரமாக நம்புகிறார்கள். என் அறிவுரை இதுதான்: நிறையப் பாடங்களைப் பரவலாக மேம்போக்காகப் படிப்பதை விட ஒரு விஷயத்தை ஆழமாகத் தொடர்ந்து படியுங்கள். பட்டத்தைவிடப் பாட அறிவும், செய்திறனும், அதனைச் சந்தைப்படுத்தும் முறைகளும் முக்கியம்.

    எது படித்திருந்தாலும் அத்துறையில் வந்த புது விஷயங்களைத் தொடர்ந்து படித்துப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். அதுதான் நிஜமான அறிவு. பெயருக்குப் பின் வரும் பட்டங்கள் அல்ல.

    பெருங்காய டப்பாவா?

    நீங்கள் செய்யும் வேலை தான் உங்கள் அறிவையும் திறனையும் வெளிப்படுத்தும். நீங்கள் என்றோ வாங்கிய பட்டங்கள் முன்பு பயன்பட்டது போல வருங்காலத்தில் பயன்படாது.

    முன்பெல்லாம் ஒரு முறை படித்து விட்டு ஒரு முறை வேலைக்கு சேர்ந்தால் அது காலம் முழுதும் கை கொடுக்கும். இன்று படிப்பு, வேலை, தொழில் அனைத்தும் வாழ்க்கை முழுதும் தொடர்ந்து கற்க வேண்டிய வித்தையாக மாறி வருகிறது என்பதுதான் உண்மை!

    உங்கள் படிப்பு காலி பெருங்காய டப்பாவா அல்லது அட்சயப் பாத்திரமா என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!!

    ஐ - விழாவில் ரஜினி பேச்சு....!

    By: ram On: 07:38
  • Share The Gag
  • ஹாலிவுட் அளவிற்கு தரத்தில் இந்திய திரைஉலகை ஷங்காரால் கொண்டு செல்ல முடியும் என ஐ பட இசை வெளியிட்டு விழாவில் ரஜினி பேசினார்.

    ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், விக்ரமின் மாறுபட்ட மற்றும் மிரட்டும் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஐ. விக்ரம் ஜோடியாக மதராசப்பட்டினம் ஹீரோயின் எமி ஜாக்சன் நடித்துள்ளார். இவர்கள் தவிர்த்து மறைந்த நடிகர் சிவாஜின் மூத்த மகன் ராம்குமார், மலையாள நடிகர் சுரேஷ் கோபி

    இந்த விழாவில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பேசியதாவது, படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பார்க்கும் போது, படத்தின் வெள்ளி விழாவை பார்ப்பது போல உள்ளது. 'ஐ' படம் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் கூட ஷங்கர் பிரமாண்டமாக எடுப்பார். ஹாலிவுட் அளவிற்கு தரத்தில் இந்திய திரைஉலகை ஷங்காரால் கொண்டு செல்ல முடியும். இந்த படம் பிரமாண்டமாக வெற்றி பெற வாழ்த்துகள். இவ்வாறு ரஜினி பேசினார்.
    உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வந்த இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. தீபாவளிக்கு படம் ரிலீஸாக இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் முதல் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் விக்ரமின் தோற்றத்தை பார்த்து அனைவரும் மிரட்டும் போய் உள்ளனர். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பங்கேற்றார். ஐ படத்தின் ஆடியோ விழாவுக்காக தனி விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. -