Wednesday, 3 September 2014

பாலியல் உணர்வை அடக்க இதை பண்ணுங்க ..

By: ram On: 23:34
  • Share The Gag
  • பொதுவாக உணர்வு பூர்வமான விஷயங்களை, உதாரணமாக பாலியல் உணர்வு, கோபம், பயம், வெறுப்பு போன்றவர்களை அடக்கினால், அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல விபரித விளைவுகளையும் ஏற்படுத்தி விடும். இதை போன்ற உணர்வுகளை சாந்தப்படுத்த வேண்டும் அல்லது வெளியேற்ற வேண்டும். சாந்தபடுத்துதல் என்றால் நட்போடு அணுகுதல் என்று அர்த்தம். ஆனால் சாந்தபடுத்துதலை விட வெளியேற்றுவதே நல்லது. இதில் ஒரு முறைதான் சிரித்து வெளியேற்றுதல் என்பது.

    பொதுவாக பாலியல் உணர்வுகளை சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாலே அது வேகமாக மேலே கிளம்பி, பிறகு மெல்ல சாந்தமாகி விடும். உதாரமான ஒரு சிறு வயது பையன் மிகவும் துடிப்பாக விளையாட்டுப் பொருட்களை போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறான் அல்லது கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டு இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவர்களை நீங்கள் மூர்க்கமாக அடக்க நினைத்தால் என்ன ஆகும்? அது மேலும் மேலும் கூடிக்கொண்டே தான் போகும் அல்லது அது அடங்கியது போல நடிக்கும்.

    ஆனால் இப்படி விளையாடும் பொழுதும், பேசும்பொழுதும், அவனை சற்று வெறுமனே, எதுவும் கூறாமல் உற்றுப் பார்த்துக் கொண்டே இருங்கள். அவன் சற்று போக்கிரித்தனமாக விளையாடுவான். இல்லை மேலும் அசிங்கமாகப் பேசக்கூடும். அந்த எல்லையை அடைந்தவுடன் அவன் கீழே இறங்கித்தான் வரவேண்டும் இல்லையா?

    ஆகவே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாலுணர்வைக் கண்டிக்காமல், அடக்காமல் அதன் போக்கை மனக்கண்ணுள் சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருங்கள். இப்படித்தான் அதைச் சாந்தபடுத்த முடியும். இப்படிச் சாந்தபடுத்திய பாலுணர்வுச் சக்தி வேறு வகையில் மெல்ல மாறிவிடும் & விளையாட்டு, டி,வி. பார்த்தல் போன்றவைசகளில்.

    அப்படியும் சாந்தபடுத்த முடியவில்லை என்றால் அதன் போக்கிலேயே நீங்களும் சென்று விடுங்கள்! சில காலம் சென்று அது தானே சாந்தநிலைக்கு வந்து விடும். தேவை உங்களுக்கு விழிப்புணர்வு தான். எதிலும் இயந்திரத்தனமாக செயல்படாதீர்கள். குற்ற உணர்வு தேவை இல்லாதது. 

    பெண்களே உங்க தொப்பை குறையணும ..? ஓடி போயு இதை பண்ணுங்க

    By: ram On: 23:08
  • Share The Gag
  • பெண்ணை அழகின் உருவாகவே இந்த உலகம் பார்கிறது. பெண்ணுக்கு தொப்பை என்பது பெரிய பிரச்சனை

    பெண்களுக்கு தன்னுடைய உடம்பை அழகாவும் ,தன்னை ஒல்லியாகவும் வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள்.இன்றைய முக்கிய பிரச்சனையே பெண்களுக்கு தொப்பையே .

    பொதுவாக பிரசவம் ஆனா பெண்களுக்கு வயிறு பெருத்துவிடுவது சகஜம். ஆனால் அவை நாளடைவில் உரிய உடற்பற்சியின் மூலம் அளவிற்கு வர வாய்ப்புள்ளது. ஆனால் சில பெண்கள் இதில் அக்கறை கொள்ளுவதில்லை . பிறகு உடலில் வரும் அனைத்து உபாதைகளுக்கும் இது காரணமாக அமையலாம்.

    அதிலிருந்து தப்பிக்க நாம் உண்ணும் உணவு எளிமையானதாகவும், உடலுக்கு உடற் பயிர்ச்சி தேவையான போதுமானதாகவும் இருத்தல் அவசியம். அதிலும் வீட்டிலிருக்கும் பெண்கள் சற்று எக்ஸ்ட்ரா அக்கறை செலுத்த வேண்டும்.

    *குறிப்பாக நார் சத்து நிறைந்த உணவுகளை சேர்ப்பதே சிறந்தது.

    *தினமும் நடைப் பயிற்சி செய்ய வேண்டும்.

    *அமர்ந்தபடியே அதிக நேரம் வேலை செய்வது கூடாது.

    *முக்கியமாக தொலைக்காட்ச்சியின் முன்பு அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.

    *வயிறைக் குறைக்கும் யோகாசன முறையை முறையோடு பயின்று வருவது மிகவும் பலன் அளிக்கும்.

    * சைவ உணவுகளை அதிகம் எடுப்பது நல்லது,பச்சை காய்கறி, பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

    *எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.

    *வீட்டு வேளைகளில் அதிக ஈடுபாட்டுடன் செய்வது, அதாவது அவைகளை உடற் பயிற்சியின் கண்ணோட்டத்தில் செய்வது நல்ல பலனை தரும்.

    *நொறுக்கு தீனியை அடியோடு நீக்கிவிடலாம்.

    *முக்கியமாக பகல் நேர குட்டி தூக்கம் கூடவே கூடாது.

    *எப்போதும் வெதுவெதுப்பான நீர் அருந்துவது மிகவும் நல்லது.

    இவ்வாறு வயிற்று பகுதியில் சேர்ந்திருக்கும் கொழுப்பையும் சதையையும் குறைப்பதில் அக்கறை எடுத்து உடலழகை திரும்ப பெறுவதொடு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் தொப்பை தொந்தி பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

    தடவத்தான் தைலம்... தேய்க்க அல்ல

    By: ram On: 22:13
  • Share The Gag
  • தலையணைக்கு அருகில் தலைவலித் தைலத்தை வைத்துத் தூங்கும் பழக்கம் இப்போதும்கூட பலருக்கு இருக்கிறது. குழந்தைக்கு ஏதேனும் சளி, மூக்கடைப்பு இருந்தால் உடனே நாம் தேடுவதும் தைலத்தைதான். மூக்கிலும், தலையிலும், நெஞ்சிலும் தேய்த்துவிட, சிறிது நேரத்திலேயே சுவாசம் சீராகிவிடும். தைலத்தை யார் யார் பயன்படுத்தலாம், எவற்றுக்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது போன்ற சந்தேகங்களை சேலம் அரசு மருத்துவமனையின் பொது மருத்துவர் ப.அருளிடம் கேட்டோம்.

    'மூட்டு வலி, இடுப்பு வலி, சுளுக்கு, தசைப்பிடிப்பு போன்ற பிரச்னைகளுக்குப் பயன்படுத்தும் தைலம், வலி நிவாரணித் தைலம். இதில் எரிச்சல் அதிகமாக இருக்கும் என்பதால், குழந்தைகளுக்குத் தடவக் கூடாது. மிளகாய்ப் பழம் போல் மூக்கு சிவந்து, தைலம் தடவிய இடத்தில் எரிச்சலும் கொப்பளங்களும் ஏற்படலாம். தைலத்தைப் பயன்படுத்தும்போது 'கான்டாக்ட் டெர்மெடிட்ஸ்’ (contact dermatitis) என்னும் தோல் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படலாம். ஒரே இடத்தில் நீண்ட நாட்களாக தைலம் தடவும்போது தோலின் நிறமே கருத்துப்போகவும் வாய்ப்புகள் அதிகம்.''

    ''தைலங்களில் சேர்க்கப்படும் மூலப் பொருட்கள் என்ன?''

    மீதைல் சாலிசிலேட் (Methyl salicylate), மென்தால் (Menthol), கற்பூரம் (Camphor) போன்றவை சேர்க்கப்படுகின்றன. இவை, எதிர்ப்பு மருந்தாகச் செயல்பட்டு, குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் வலியைக் குறைத்து நிவாரணம் தருகின்றன!

    சாலிசிலேட், மென்தால், கற்பூரம் இவற்றுடன் மர எண்ணெய், லவங்கம், மிளகாய் (capsaicin), ஓமம் கலந்து செய்யப்படும் தைலம்... சளி, இருமல், மூக்கடைப்பு, தலைவலிக்கு நல்ல நிவாரணம் தரும். அமிர்தாஞ்சன், விக்ஸ் போன்ற தைலங்கள் இந்த வகையைச் சேர்ந்தவைதான். வலி நிவாரணி தைலங்களிலேயே அதிக வீரியம்மிக்க 'டைகுலோபினாக் அமிலம்’ உள்ள தைலங்கள் மூட்டுவலி, கால்வலி, தசைப்பிடிப்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்றாலும், இந்தத் தைலத்தை மிகக் குறைந்த அளவே பயன்படுத்தவேண்டும். தலைவலிக்குப் பயன்படுத்தவே கூடாது.''

    ''எந்தத் தைலம் பெஸ்ட்?''

    ''தைலங்கள் வலியைக் குறைக்குமே தவிர, நிரந்தரத் தீர்வைத் தராது. பொதுவாக நீலகிரி தைலம்தான் பெஸ்ட். பக்க விளைவே இருக்காது.''

    ''தைலம் வீட்டிலேயே தயாரிக்க முடியுமா?''

    ''சித்த மருத்துவத்தில் கற்பூராதி வீட்டில் தயாரிக்கப்பட்டு வந்த தைலம்தான். சித்த மருந்துக் கடைகளிலும் கிடைக்கிறது. 500 கிராம் தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் 5 நிமிடம் காய்ச்ச வேண்டும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி, இதனுடன் 50 கிராம் கற்பூராதி சேர்த்து, நன்கு கலக்கவேண்டும். 50 கிராம் சாம்பிராணி கட்டியைச் சேர்த்துக் கலக்கவேண்டும். இந்தத் தைலத்துக்கு ஆவியாகும் தன்மை அதிகம் இருப்பதால், இறுக்கமாக மூடி போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

    இதைத் தலைவலி, சளி, இருமல், மூட்டு வலி போன்ற அனைத்துக்கும் உடலின் மேல்பகுதியில் பூசி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.''

    எச்சரிக்கை டிப்ஸ்

    12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு தைலம் தடவுவதைத் தவிர்க்க வேண்டும்.
    ஒரு முறை அலர்ஜி ஏற்பட்டால், அந்தத் தைலத்தை மறுமுறை உபயோகிக்கக் கூடாது!
    கண்களில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். புண், வெடிப்பு, தோல் நோய், அலர்ஜி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
    எப்போதும் தைலத்தைச் சூடுபறக்கத் தேய்க்கவே கூடாது. லேசாகத் தடவினாலே போதும்.

    கொத்து கொத்தாக நன்மை தரும் கொத்தமல்லி!

    By: ram On: 20:46
  • Share The Gag
  • கொத்தமல்லி மருத்துவ குணம் வாய்ந்த ஒரு மூலிகை தாவரம் என்று கூறலாம்.

    இதை நம் வீட்டிலேயே சுலபமாக வளர்க்கலாம். இது சுமார் 50cm வரை வளரக்கூடியது.

    சாம்பார்,ரசம் இவற்றில் தழையாகவே பயன்படுத்தப்படும் வாசனை மிகுந்த ஒரு கீரை வகைச்செடியாகும். இதன் இலை, தண்டு மற்றும் வேர் மருத்தவ குணம் கொண்டவை. இதில் மிளகு,புளி,உப்பு இட்டு துவையலாக உண்ணலாம்.

    கொத்தமல்லி கீரை இரத்த உற்பத்திக்கும் , இரத்த சுத்திக்கும் மிக சிறந்த இயற்கை மருந்தாகும். இது ஒரு வாசனை பொருளாக சமையலில் சேர்க்ப்படுகிறது.

    கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, பி, பி1 சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது மாலைக்கண் நோய்,சிறுநீரகக் கோளாறு முதலியவற்றை போக்கும் வல்லமை உடையது.
    சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் இருப்பதால் மூளையை பலப்படுத்தும். பித்தம் , வாந்தி இரத்த அழுத்த நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தும்.

    இதை அதிகம் உண்பதால் மந்தம் தோன்றும் எனவே அளவோடு உண்டு பலன் பெறுவது நல்லது.
    சீரகத்தை கொத்தமல்லி சாற்றில் ஊறவைத்து பிறகு அதை உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை மற்றும் மாலை சாப்பிட்டு வர உடலில் உள்ள கொழுப்பு குறையும் மற்றும் இரத்த அழுத்தம் சீராகும்.
    கொத்தமல்லி சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து உலர்த்தி பொட்டியாக்கி தினமும் ஒரு கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனைகள் குணமாகும்.
    கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு ,எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும்.

    இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும்.
    இரவில் நன்றாக தூக்கம் வர கொத்தமல்லியை சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை தரும்.
    உடல் சூட்டைக் குறைக்க கொத்தமல்லியை ஒரு கைபிடி எடுத்து நன்கு கழுவி மென்று தின்றால் உடல் சூடு குறையும் மற்றும் பசியை தூண்டி விடும்.

    கொத்தமல்லியில் சூப் மற்றும் கொத்தமல்லி சாதம் செய்து மாலை நேரங்களில் சிற்றுண்டி உணவாக சாப்பிடலாம்.

    இந்த வருடத்தில் வீரம், வேலையில்லா பட்டதாரியே வெற்றி! சொல்கிறார் கேயார்

    By: ram On: 19:53
  • Share The Gag
  • தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் கேயார். இவர் சின்ன படம், பெரிய படம் என்று தான் பார்ப்பதில்லை, எந்த படமாக இருந்தாலும் அதன் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றுவிடுவார்.

    அதேபோல் தற்போது மகாபலிபுரம் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். எப்போதும் பெரிய நடிகர்களை மேடையிலேயே திட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார்.

    ஆனால் அவரே இன்று சில நடிகர்களின் படங்களை வெற்றி படங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதில் ’இந்த வருடம் வெளியான படங்களிலேயே ‘வீரம்’, ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய 2 படங்கள்தான் வணிக ரீதியில் வெற்றி பெற்றது என்று சொல்லலாம். சமீபத்தில் வெளியான ‘சதுரங்க வேட்டை’ படம் நல்ல படத்துக்கான அங்கீகாரம் இருந்தாலும் பெரிய அளவில் வசூலை பெறவில்லை என்பது வருத்தம்தான்.’ என்று தெரிவித்துள்ளார்.

    நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா?

    By: ram On: 18:14
  • Share The Gag
  • 1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே

    WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF
    · தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

    · எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

    · கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

    · புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.

    · சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

    · பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

    · நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

    · தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

    · ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

    · அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

    · காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

    · சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

    · உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

    · எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

    · எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல, ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

    · அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

    · உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை

    எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

    · எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

    · வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

    · எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

    · உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

    · நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

    · இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

    · இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள் .

    'கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன்' - கதையுடன் விளக்கம்!

    By: ram On: 18:14
  • Share The Gag
  • தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற பழமொழி இது. இப் பழமொழியின் தாக்கம் பெண்களிடையே மிகுதி என்றால் அது மிகையாகாது. இந்தப் பழமொழியின் தவறான பொருள் விளக்கத்தால் நேர்ந்த விளைவுதான் இது. இந்தத் தவறுக்குக் காரணம் ஒரே ஒரு எழுத்துப் பிழைதான். அந்தப் பிழை என்ன என்று அறிந்து கொள்ளும் முன்னர் இப்பழமொழிக்கு தற்போது கூறப்படும் பொருள் என்ன என்று காண்போம்.

    'கல்நெஞ்சன் (முரடன்) ஆக இருந்தாலும் அவன் உன் கணவனே; புல்நெஞ்சன் (கெட்டவன்) ஆக இருந்தாலும் அவன் உன் புருசனே'


    ஆண்-பெண் இணைந்து வாழ்க்கை நடத்தும் இல்லறத்தில் மணமான ஒரு பெண் தனது கணவனை எந்தெந்த வகைகளில் எல்லாம் அனுசரித்துப் போக வேண்டும் என்று அப்பெண்ணுக்கு அறிவுரை கூறுவதாக இந்தப் பழமொழியின் பொருள் உள்ளது. இதனால் இல்லறத்தில் இருந்து ஆணும் பெண்ணும் பிரிந்து செல்லாமல் ஒன்றாக வாழும் ஒரு நன்மை உண்டெனினும் தீமைகளே அதிகமாக விளைகின்றன. இல்லறத்தில் ஆணின் கையே எப்போதும் ஓங்கி இருக்கவும் பெண்ணின் கை எப்போதும் தாழ்ந்து இருக்கவுமாக ஒரு தவறான சமுதாய வழிநடத்தலுக்கு இக்கருத்து வழிவகுத்து விட்டது. இதனால் பாதிப்படைந்த குடும்பங்கள் மிகப் பல. இவ்வளவு கீழான பொருளில் ஒரு பழமொழி ஏன் நடைமுறையில் இருக்க வேண்டும்?. இது தவறான வழிநடத்தலுக்கு வழிவகுக்கும் என்று அறிந்தும் இதை இப்பொருளில் உலவ விட்டது யாருடைய குற்றம்?. விடைதெரியாத கேள்விகள் இவை.

    ஒரு காட்டை எரித்துச் சாம்பலாக்குவதற்கு ஒரு சின்னத் தீப்பொறி போதுமானதைப் போல ஒரே ஒரு எழுத்துப் பிழை போதுமே ஒரு சமுதாயத்தையே மாற்றி அமைப்பதற்கு. அவ்வாறே இந்தப் பழமொழியில் ஒரே ஒரு எழுத்து தவறாக எழுதப்பட்டதன் விளைவு இதில் உள்ள சொற்களுக்குத் தவறான பொருட்களைக் கொள்ளச் செய்து பழமொழியின் நோக்கத்தையே சிதைத்து விட்டது. உண்மையில் இந்தப் பழமொழியினைக் கூறியவர் ஒரு சித்தராகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் சித்தர்கள் மட்டுமே எந்தப் பொருளையும் நேரடியாகக் கூறாமல் மறைமுகமாக உணர்த்துவர். நாம் ஒரு பொருளைக் குறிக்க ஒரு சொல்லைப் பயன்படுத்தினால் அவர்கள் அதே சொல்லை வேறு பொருளைக் குறிக்க பயன்படுத்துவர். இந்தப் பொருள் வேறுபாடுகளைக் காணும் முன்னர் ஒரு சிறுகதையினைப் பார்ப்போம்.

    ஒரு ஊரில் ஒரு கொக்கு இருந்தது. அது ஒரு குறிப்பிட்ட பாறாங்கல்லின் மேல் அமர்ந்து இளைப்பாறிய பின் மலம் கழித்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இவ்வாறு நாள்தோறும் தன்னை அசிங்கப் படுத்துவதைப் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த கல் ஒருநாள் பொறுமை இழந்து கொக்கிடம் கேட்டது 'ஏன் நாள்தோறும் என்மேல் வந்து அமர்ந்து என்னை அசிங்கப் படுத்துகிறாய்?. நான் உனக்கென்ன கெடுதல் செய்தேன்?. சிவனே என்று நான் ஒரு ஓரமாகத்தானே இருக்கிறேன். நீ வேண்டும் என்றே என்னைத் தேடிவந்து என் மேல் அமர்ந்து இளைப்பாறுவதுடன் அசிங்கம் வேறு செய்துவிட்டுப் போகிறாயே? இது ஏன்? உனக்கு இவ்வாறு நடந்து கொள்வதில் குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா?'. அதற்கு கொக்கு இறுமாப்புடன் பதில் சொன்னது 'நீ இயக்கம் இல்லாமல் ஒரே இடத்தில் கிடக்கிறாய். உன்னால் ஒரு பயனும் இல்லை. நான் அங்கிங்கென தன்னிச்சையாய் பறந்து திரிபவன். உன்னை விட உயர்ந்தவன் என்பதால் இதை நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்' அதைக் கேட்ட கல் கடகட என்று சிரித்தது.

    பின்னர் சொன்னது 'அட முட்டாள் கொக்கே! நான் இயக்கமே இல்லாமல் கிடந்தாலும் இறைவனது திருமேனி ஆகும் தகுதி பெற்றவன். எப்போதுமே பறந்து கொண்டிருந்தாலும் உனக்கு அந்தத் தகுதி இல்லை. நீ எத்துணை முறை என்னை மாசுபடுத்தினாலும் மழைநீரால் கழுவப்பட்டு மீண்டும் பொலிவுடன் நிற்பவன் நான். அகத்திலும் புறத்திலும் எப்போதும் அழுக்குகளைச் சுமந்துகொண்டு திரிபவன் நீ. எனவே நான்தான் சிவம் ஆகிய இறைவன். நீ அந்த சிவத்திற்குக் கட்டுண்ட ஆன்மா என்பதை மறவாதே. நீ இயங்கிக் கொண்டிருக்கும் வரையில் தான் ஆன்மா. உன் இயக்கம் நின்று விட்டால் என்னைப் போல சிவம் ஆகி விடுவாய். இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் என்னை ஏளனம் செய்யமாட்டாய்' கல் சொன்ன பதிலைக் கேட்டு மெய் உணர்வு பெற்ற கொக்கு கல்லை வணங்கி விட்டு சென்றது.

    இந்தக் கதை உணர்த்தும் கருத்து என்ன?. இயங்காமல் இருந்தாலும் கல்தான் இறைவன் ஆகிய தலைவன்; இயங்கிக் கொண்டே இருந்தாலும் பறவை ஒரு ஆன்மாவே ஆகும். ஆன்மா அடிக்கடி சிவத்தில் தங்கி இளைப்பாறிவிட்டுச் செல்வதுடன் என்றும் சிவத்திற்கு கட்டுப்பட்டது என்னும் உயரிய ஆன்மீகக் கருத்தை உணர்த்துவதற்காக உருவாக்கப் பட்டதுதான் இந்தப் பழமொழி. இனி சரியான பழமொழி இது தான்.


    'கல் ஆனாலும் கணவன்; புள் ஆனாலும் புருசன்.'
    (கணவன் = இறைவன்; தலைவன்; புள் = பறவை; புருசன் = ஆன்மா)

    அஜித், கௌதம் மேனன் குறித்து த்ரிஷா உருக்கம்!

    By: ram On: 17:53
  • Share The Gag
  • த்ரிஷா நடித்த கன்னட படம் ஹிட் ஆனதால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். இந்நிலையில் தற்போது தல55 படத்திலும் நடித்து வருகிறார்.

    இதுநாள் வரை இப்படத்தின் அஜித்-அனுஷ்கா போஸ்டர் மட்டும் வெளிவந்த நிலையில் சில நாட்களுக்கு முன் த்ரிஷா போஸ்டர்ஸ் வெளிவந்தது.

    இதில் த்ரிஷா மிக அழகாக இருப்பதாக அனைவரும் கூற, தன் டுவிட்டர் பக்கத்தில் ‘இவை அனைத்திற்கும் கௌதம் மேனனும், அஜித்தும் தான் காரணம். அவர்களால் தான் இப்படத்தில் நான் நடிக்கிறேன், மேலும் என்னை அழகாக காட்டிய ஒளிப்பதிவாளர் டானுக்கும் நன்றி’ என்று டுவிட் செய்துள்ளார்.

    கவலை தரும் காலங்கடந்த திருமணங்கள்

    By: ram On: 16:57
  • Share The Gag
  • திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதற்கு கணவன்- மனைவி ஆகிய இருவரும் ஒத்துப் போக வேண்டும். அதற்குரிய பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் இளந்தம்பதியினர் ஓரளவு ஒத்துப்போகிறார்கள். காலங்கடந்து திருமணம் செய்துகொள்கிறவர்கள், கருத்து ஒத்த தம்பதிகளாக வாழ்வதற்கான வாய்ப்பு குறைந்து வருகிறது.

    அதற்கு காரணம், இருவருக்கும் வயது முதிர்ச்சியும்- பிடிவாத முயற்சியும் அதிகரிப்பதுதான். அதனால் ஒருவர் கருத்தை இன்னொருவர் ஏற்க மறுக்கிறார்கள். முற்காலத்தில் பெண்களை சீக்கிரமாக திருமணம் செய்துகொடுக்கும் வழக்கம் இருந்தது.

    அப்போதுதான் பெண்கள், புகுந்த வீட்டில் சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து வாழ்வார்கள் என்று சொல்லப்பட்டது. இந்த காலத்தில் ஆண், பெண் இருவரும் படித்து வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள். அது நல்ல விஷயம் தான்.

    அதனால் திருமண வயதை தாண்டிய பின்னும் திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தள்ளித் தள்ளிப் போட்டுவிட்டு திருமணம் செய்து கொள்ள முன்வரும்போது, அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் வாழ்க்கை அமைவதில்லை.

    காலங்கடந்து திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினர், மீதமுள்ள காலத்தை வளமாக அமைத்துக் கொள்ள அவசரம் காட்டுகிறார்கள். இருவரும் தங்களுடைய வருமானம் முழுவதும் எதிர்கால சேமிப்பாக மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

    அப்போது பெற்றோருக்கும், உறவுகளுக்கும் செய்யும் கடமைகளைக் கூட பெரிய பாரமாக நினைத்து விடுகிறார்கள். கணவர் தன் பெற்றோரை பராமரிப்பது மனைவிக்கு வெட்டிச் செலவாகத் தெரியும். மனைவி தன் பெற்றோரை பராமரிப்பது, கணவருக்கு வெட்டிச் செலவாகத் தெரியும். அதுவே பிரச்சனை உருவாக காரணமாகிவிடுகிறது.

    காலங்கடந்து திருமணம் செய்துகொள்கிறவர்கள், திருமணத்திற்கு முன்பு வெகுகாலம் சுதந்திரமாக வாழ்ந்து பழகிவிட்ட காரணத்தால் திடீரென்று ஒருவர் வாழ்க்கைக்குள் வந்து, தன்னை கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்வதில்லை.

    அதனால் தம்பதியினரில் ஒருவர் எடுக்கும் முடிவை மற்றவர் எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை. காலங்கடந்து திருமணம் செய்துகொள்ளும் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க முன் வருவதில்லை. தனித்துப் போகவும் முற்படுவதில்லை.

    தங்களை மற்றவர் வழிநடத்தவும் அனுமதிப்பதில்லை. இப்படிப்பட்ட மனநிலையில் அன்பு என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வாழ்க்கையில் அதிரடியான போராட்டங்களை ஆரம்பித்துவிடுவார்கள். வெகுகாலம் திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் எதிர்பாலினர் பலரிடம் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

    அந்தப் பழக்கம் மிகவும் சகஜமாகி கொண்டு வரும் நிலையில் இதன் பிரதிபலிப்பு குடும்ப வாழ்க்கையில் விழும்பொழுது பல சிக்கல்கள் தோன்றுகின்றன. இது ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கைக்கு உலைவைத்துவிடும். அத்தகைய குடும்பங்களில் அடிக்கடி பூகம்பங்கள் வெடிக்கும்.

    அற்பத்தனமான காரணங்களுக்கெல்லாம் சண்டை வரும். ஆனால் அதன் மூலகாரணம் இன்னொன்றாக இருக்கும். காலங்கடந்த திருமணங்களால் குழந்தைப்பேறும் கேள்விக்குறியாகிறது. இது அவர்களுடைய திருமண வாழ்வை சிதைத்து எதிர்காலத்தை பாதித்து விடும்.

    எப்போதும் புதுமணத் தம்பதிகள் என்றால் மனதில் குதூகலமும் ஆனந்தமும் இருக்கும். ஆனால் காலங்கடந்து திருமணம் செய்து கொண்டால் அந்த குதூகலத்தையோ, நாணத்தையோ காண முடியாது. அதற்கு பதிலாக அகங்காரமும், ஆதிக்கமும் தான் மேலோங்கி நிற்கும்.

    இது மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு உதவாது. காலங்கடந்த திருமணங்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மகிழ்ச்சியைத் தராது. வேறுவழியில்லாமல் திருமணம் செய்துக் கொள்ள வேண்டியிருந்தால் பெண், அந்த வாழ்க்கைக்கு தக்கபடி தன்னை பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும்.

    அனுசரித்து செல்லவேண்டும். அது நாள் வரை வாழ்ந்த வாழ்க்கைக்கும் இனி வாழப் போகும் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ளவேண்டும். இது ஆணுக்கும் பொருந்தும். திருமணத்தில் காலதாமதம் ஒரு குறைதான். ஆனால் அந்த குறையே வாழ்க்கையை பழாக்கி விடாத அளவுக்கு வாழவேண்டும்.

    அனைத்து மாணவர்களும் கோரஸாக, ''யெஸ்.. ஸார்!''

    By: ram On: 08:05
  • Share The Gag
  • வகுப்பறைக்குள் நுழைகிறார் நிர்வாகப் பாடங்கள் எடுக்க வந்த ஒரு பேராசிரியர்.

    ''மாணவர்களே, இன்று நாம் செய்முறை விளக்கத்துட‎ன் ஒரு பாடத்தைக் கற்போம்.''

    வாய்ப்புறம் அகலமாய் இருந்த, ஒளி ஊடுருவக் கூடிய ஒரு பெரிய பிளாஸ்டிக் ஜாடியை எடுத்து வரச் செய்தார் பேராசிரியர். ஜாடி ஒரு மேஜையி‎ன் மீது வைக்கப்படுகிறது. ஏழெட்டு பெரிய கற்களை எடுத்து வரச் செய்த பேராசிரியர் அவற்றையும் மேஜையி‎ன் மீது வைக்கிறார். பி‎ன், கற்களை ஒவ்வொ‎‎ன்றாக எடுத்து ஜாடிக்குள் போட ஆரம்பிக்கிறார்.

    ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், ''ஜாடி நிறைந்து விட்டதா?''

    அனைத்து மாணவர்களும் கோரஸாக, ''யெஸ்.. ஸார்!''

    சலனமில்லாமல் ''நல்லது'' எ‎ன்ற பேராசிரியர், பி‎ன் சிறு ஜல்லிக் கற்களைக் கொண்டு வரச் செய்தார். அவற்றை ஒவ்வொ‎ன்றாக எடுத்து ஜாடியினுள் போட ஆரம்பித்தார். பெரிய கற்களி‎ன் இடைவெளிகளில் ஜல்லிக்கற்கள் நுழைந்தன. ஜாடியைக் குலுக்கி விட, ஜல்லிகள் கிடைத்த இடைவெளிகளை ஆக்கிரமிப்பு செய்தன.

    ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார். ''ஜாடி நிறைந்து விட்டதா?''

    வகுப்பறையில் நிசப்தம். ஒரு மாணவர் மட்டும் ''அப்படி நிச்சயமாக சொல்லிவிட முடியாது'' எ‎ன்றார்.

    மெல்லிய பு‎ன்னகையுடன் ''நல்லது'' எ‎ன்ற பேராசிரியர், பி‎ன் ஒரு வாளி நிறைய ஆற்று மணலைக் கொண்டு வரச் செய்தார். மணலை கொஞ்சம் கொஞ்சமாக அள்ளிப் போடப் போட, கிடைத்த இடைவெளிகளில் மணல் ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்தது. ஜாடியைக் குலுக்கி விட, மேலும் மணலை அள்ளிப் போட முடிந்தது.

    ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார். ''ஜாடி நிறைந்து விட்டதா?''

    இப்பொழுது, வகுப்பறை முழுவதும் கோரஸாக, ''நிச்சயமாக ‏இல்லை!''

    சிரித்த பேராசிரியர் ''நல்லது'' எ‎ன்றவாறே, ஒரு வாளி நிறைய தண்ணீரைக் கொண்டு வரச் செய்தார். தண்ணீரை ஊற்ற ஊற்ற மணலைக் கரைத்துக் கொண்டு தண்ணீர் நிறைந்தது ஜாடியினுள்.

    ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துச் பேச ஆரம்பிக்கிறார் பேராசிரியர். ''ஜாடி நிறைந்து விட்டதா எ‎ன்று ‏இப்போது நான் கேட்கப் போவதில்லை. ‏இதிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் எ‎ன்ன?''

    ஒரு மாணவர் எழுந்தார். ''நமது நேர நிர்வாகம் எ‎ன்பது குறிப்பிட்ட வேலைகளை அதற்குள் செய்கிறோம் எ‎ன்பதல்ல; எவ்வளவு வேலை செய்து கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட கால அளவுக்குள் மேலும் சில சிறிய வேலைகளையும் முடிக்க முடியும்''

    ''இல்லை.. அதுவல்ல பாடம்'' பேராசிரியர் பதிலுரைத்தார்:

    ''பெரிய கற்களை நீங்கள் முதலில் ஜாடிக்குள் போடாவிடில், பி‎ன்னர் எப்போதுமே அவற்றை நீங்கள் போட முடியாது; ஜல்லிகளும் மணற்துகள்களும் அடைத்துக் கொண்டிருக்கும். வாழ்க்கையை ஒரு ஜாடியாக கற்பனை செய்து கொள்ளுங்கள். பெரிய கற்கள் எ‎ன்பவை இ‏ங்கே உங்கள் அ‎ன்பிற்குரியவர்களை, உங்கள் த‎ன்னம்பிக்கையை, உங்கள் கல்வியை, உங்கள் எதிர்காலக் கனவுகளை, குறிக்கோள்களைக் குறிக்கி‎ன்றன. இவற்றை அந்தந்தக் கால நேரங்களில் சரியாக உள்ளிடாவிட்டால் பி‎ன்னர் அவற்றை உள்ளிட முடியாது. விளைவு?''

    ''ஆகவே, ‏இன்று வீட்டுக்குச் செல்லுங்கள். ந‎ன்றாகத் தூங்குங்கள். காலையில் எழுந்து உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள், 'பெரிய கற்கள் என்பவை எ‎ன் வாழ்க்கையில் யாவை' எ‎ன்று''

    கம்ப்யூட்டர் பராமரிப்பு..!தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும்.!

    By: ram On: 08:03
  • Share The Gag
  • நம் சாலைகளில் ஓடும் பெரிய லாரிகளைக் கவனித்தால், அதன் நீளமான பேட்டரி பெட்டிகளில் “”தினமும் என்னைக் கவனி” என்று எழுதப் பட்டிருக்கும். அதில் உள்ள டிஸ்டில்ட் வாட்டர் மாற்றுவது, சேர்ந்திருக்கும் தூசு மற்றும் துருவினை நீக்குவது போன்ற வேலைகளை அன்றாடம் கவனிக்க வேண்டும். அது போல லாரி மட்டுமின்றி, ஆட்டோ மொபைல் வாகனம் ஒவ்வொன்றையும் அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் அது ஓடாத மோட்டார் வாகனமாக மாறிவிடும். அதே போல கம்ப்யூட்டரிலும் சில விஷயங்களைக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். அவற்றைப் பார்க்கலாமா!

    1. தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள் பின் என்னும் போல்டரில் கூட இருக்கக் கூடாது என்பதுதான். இதற்கு சி கிளீனர் போன்ற இலவச புரோகிராம்கள் நமக்கு உதவுகின்றன.

    2. இன்டர்நெட் இணைப்பு பெற்று இணைய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா! உடனே உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். இதனைச் சில நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க்கில் பணியாற்றுபவர் என்றால் தினந்தோறும் கூட அப்டேட் செய்திடலாமே. இதற்கென ஓரிரு நிமிடங்கள் தானே ஆகும்.

    3. கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் (Defrag) செய்வது மிக அவசியம். இதற்கான கால அவகாசம் நீங்கள் புரோகிராம்களை இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால் செய்வதனைப் பொறுத்துள்ளது. இருப்பினும் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்வது நல்லது.

    4. சிகிளீனர் போல கிளீன் மை டிஸ்க் புரோகிராம்கள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். சிலர் வாரத்தில் மூன்று முறை இதனைப் பயன்படுத்துவார்கள். டெம்பரரி பைல்களை நீக்குகையில் ரீசைக்கிள் பின் மற்றும் இன்டர்நெட் டெம்பரரி பைல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனவா என்று பார்க்கவும்.

    5.இன்னொரு வழியும் உள்ளது. Start மெனு சென்று அங்கு கிடைக்கும் ரன் பாக்ஸ் (Start>Run) செல்லுங்கள். %temp% என டைப் செய்து ஓகே கிளிக் செய்திடுங்கள். உடனே தற்காலிக பைல்கள் உள்ள போல்டர்கள் அனைத்தும் கிடைக்கும். வேறு எந்த தயக்கமும் இன்றி அனைத்தும் டெலீட் செய்திடுங்கள். ஒரு சில பைல்கள் அல்லது போல்டர்கள் அழிக்கப்பட முடியவில்லை என்று செய்திகள் வரலாம். எவ்வளவு அழிக்க முடியுமோ அவ்வளவையும் அழித்திடுங்கள்.

    6. விண்டோஸ் தரும் ஆட்/ரிமூவ் புரோகிராம் மூலம் புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்தால், அது அந்த புரோகிராம் சார்ந்த பைல்களை முழுமையாக நீக்குவதில்லை. எனவே இதற்கென உள்ள சில புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.http://www.revouninstaller.com/என்ற தளத்தில் இந்த புரோகிராம் ஒன்று கிடைக்கிறது.

    7. நீங்கள் வைத்து அவ்வப்போது அப்டேட் செய்திடும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சில மால்வேர்கள் மற்றும் ஸ்பை வேர்களை நீக்கக் கூடிய திறன் இல்லாமல் இருக்கலாம். எனவே அவற்றை நீக்குவதற்கென உருவாக்கப்பட்ட புரோகிராம்களை தினந்தோறும் இயக்கவும்.

    8. கம்ப்யூட்டரை கிளீன் செய்வதைப் போல அதில் உள்ள டேட்டாவினப் பாதுகாப்பதற்கும் சில நடவடிக்கைகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். எனவே தினந்தோறும் வேலை முடித்தவுடன் நாம் உருவாக்கிய மற்றும் திருத்திய பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
    தினந்தோறும் பேக் அப் செய்தாலும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் ஹார்ட் டிஸ்க் முழுவதையும் ஒரு இமேஜாக உருவாக்கி பேக் அப் டிஸ்க்கில் வைப்பது நல்லது. இந்த இமேஜ் இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இந்த இமேஜ் விண்டோஸ் இயக்கம் முதல் உருவாக்கிய பைல்கள் வரை அனைத்தும் தரும்.

    9. ரிஜிஸ்ட்ரி யை கிளீன் செய்திடுங்கள் என்று சில கட்டுரைகளில் படிக்கலாம். கம்ப்யூட்டர் களுக்குப் புதியவரா நீங்கள்? அப்படியானால் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டாம். என் கம்ப்யூட்டர் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித ரெஜிஸ்ட்ரி கிளீனிங் செய்திடாமல் நன்றாக இயங்கிக் கொண்டு தான் உள்ளது.

    எனக்கு சிலை செதுக்கியது யார்...? விஜய்...!

    By: ram On: 07:18
  • Share The Gag
  • நடிகைக்கு கோவில் கட்டுவது, சிலை அமைப்பு என்பதெல்லாம் தமிழக ரசிகர்களுக்கு சர்வசாதரணமான ஒன்று. அந்த வகையில் நடிகர் விஜயின் ரசிகர்கள் இரண்டு பேர், சிலை ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

    மதுரை பாண்டிய வேளாளர் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார், சிற்ப தொழிலாளி. இவரது மகன்கள் நாகராஜன் (வயது27), சுப்புரு (23). 6–ம் வகுப்பு வரை படித்த சுப்புரு அதன்பிறகு தனது தந்தைக்கு உதவியாக சிற்ப தொழிலில் ஈடுபட்டார்.

    சிறு வயதில் இருந்தே நடிகர் விஜயின் தீவிர ரசிகரான சுப்புரு விஜய் படம் வெளியாகும் தினத்தன்றே அந்த படத்தை பார்த்து விடுவது வழக்கம். விஜய் மீது கொண்ட தீவிர பற்று காரணமாக அவருக்கு சிலை அமைக்க சுப்புரு முடிவு செய்தார்.

    இதை தனது சகோதரர் நாகராஜனிடம் தெரிவிக்க 2 பேரும் சேர்ந்து வேலாயுதம் படத்தில் வரும் விஜய் போன்ற தோற்றமுள்ள ஒரு சிலையை வடிவமைத்தனர். வடிவமைக்கப்பட்ட அந்த சிலையை பேஸ்புக்கில் போட்டனர். அதனை பார்த்து நடிகர் விஜய் மறுநாள் சுப்புருவை செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்து பேசி சிலை நன்றாக உள்ளது என்று பாராட்டினார்.

    சமீகத்தில் மதுரை வந்த நடிகர் விஜயின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரும் சுப்புரு வீட்டுக்கு சென்று விஜய் சிலையை வடிவமைத்த சுப்புரு, நாகராஜனை பாராட்டினார்.

    சிமிண்டால் செய்யப்பட்ட அந்த சிலையில் வர்ணம் பூசப்பட்டு தத்ரூபமாக நடிகர் விஜய் போல காட்சியளிக்கிறது. இந்த சிலையை சென்னைக்கு எடுத்து சென்று நடிகர் விஜயை நேரில் சந்தித்து வழங்கப்போவதாக சுப்புரு தெரிவித்தார்.

    ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்!

    By: ram On: 06:46
  • Share The Gag
  • கடந்த சில வாரங்களுக்கு முன் ஒருநாள், சென்னை, விருகம்பாக்கம், சின்மயா நகரிலிருக்கும் சீனியரான ஒரு டாக்டரின் கிளினிக்கில் நாம் காத்திருந்தோம். அப்போது துவண்டு துவண்டு விழும் ஒரு குழந்தையுடன், இளம்பெற்றோர் அங்கே ஆஜரானார்கள். இருமல், தும்மல், மூச்சிரைப்பு என்று படாதபாடுபட்டுக் கொண்டிருந்தது அந்தப் பிஞ்சு. வெளியில் எட்டிப்பார்த்த டாக்டர், உடனடியாக ஒரு ஊசியைப் போட்டுவிட்டு, ''குழந்தை என் கண்காணிப்பிலேயே கொஞ்ச நேரம் இருக்கணும். அதனால, இங்க இருந்து போயிடாதீங்க...'' என்று சொல்லிவிட்டு, மற்ற நோயாளிகளைப் பார்க்க ஆரம்பித்தார். இடையிடையே குழந்தை எப்படி இருக்கிறது என்றும் எட்டிப் பார்த்துக்கொண்டார்.

    அந்த இளம்பெற்றோர் டாக்டர் முன் அமர்ந்திருக்க, நாமும் அந்த நேரம் உள்ளே இருந்தோம் (ஒரு நோயாளி இருக்கும்போதே, இன்னொருவரையும் உள்ளே அழைத்து உட்கார வைப்பது இவருடைய வழக்கம்).

    அப்போது குழந்தை நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்க... ''குழந்தையை ரொம்ப சீரியஸான கண்டிஷன்ல கொண்டு வந்திருக்கீங்க. பொதுவா இப்படிப்பட்ட கண்டிஷன்ல வந்தா... எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகச் சொல்லிடுவேன். ஆனா, அந்த நிலையிலயும் குழந்தை இல்ல. அதனால கடவுள் மேல பாரத்தைப் போட்டுத்தான் சிகிச்சையை ஆரம்பிச்சேன். குழந்தை பொழைச்சுடுச்சி. முதல்லயே சொன்னா பயந்துடுவீங்கனுதான் சொல்லல.

    ஒருவாரமா நீங்க ஒரு டாக்டர்கிட்ட குழந்தையைக் காட்டியிருக்கீங்க. அந்த டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்து போலியானது. நீங்க கொண்டு வந்த இந்த சிரப்ல பாருங்க... ஏதோ ஒரு தெரு பேரைப் போட்டு, வளசரவாக்கம்னு எழுதியிருக்கு. இப்படி ஒரு மருந்து கம்பெனியே இல்ல. ஒருவேளை அந்தத் தெருவுல போய் விசாரிச்சீங்கனா... 'இது ஆபீஸ்... கம்பெனி காட்டாங்குளத்தூர்ல இருக்கு'னு பொய் சொல்லுவாங்க. ஆனா, விவரம் புரியாம இந்த மருந்தையே நீங்க கொடுத்திருக்கீங்க. அதேபோல, தேவையில்லாத ஆன்டிபயாடிக் மருந்தையும் கொடுத்திருக்கீங்க. இதையெல்லாம குழந்தைக்கு கொடுக்கவே கூடாது. அந்த டாக்டர் தெரிஞ்சுதான் எழுதினாரா... இல்லையாங்கிறது கடவுளுக்கே வெளிச்சம்'' என்று பெற்றோரிடம் சொன்ன டாக்டர், 'இனி யாச்சும் கவனமா இருங்க. குழந்தைக்கு ஏதாச்சும்னா.. எந்த நேரம் வேணும்னாலும் போன் பண்ணுங்க...' என்று சொல்லி அக்கறையோடு சொல்லி அனுப்பினார்.

    நம் பக்கம் திரும்பியவர், 'ம்... இப்படி மருந்து, மாத்திரைகள் விஷயத்துல ஏகப்பட்ட வில்லங்கம் நடக்குது. மக்களோட உயிரோட விளையாடறாங்க. சில டாக்டர்களும் இதுக்கு உடந்தையாயிட்டாங்க. அதேபோல, மக்களும் தாங்களாவே இஷ்டம்போல மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடறாங்க. என்ன பண்றது?' என்றபடியே... நமக்கான சிகிச்சையை முடித்து அனுப்பினார்.

    நமக்கு வந்த காய்ச்சல் குணமானது... ஆனால், டாக்டர் சொன்ன அந்த விஷயம், மூளைக்குள் போய் உட்கார்ந்துகொண்டு குடைய ஆரம்பித்துவிட்டது.

    ''சார், அமாக்ஸ்லின் (Amoxicillin) மாத்திரை பத்து கொடுங்க...''

    ''எனக்கு பெனிசிலின் (Penicillin) மாத்திரை ஒரு இருபது கொடுங்க...''

    - டாக்டர் பரிந்துரைத்த மருந்து சீட்டுடன், மருந்துக்கடைகளில் நாம் நின்று கொண்டிருக்கும்போது, பரபரவென்று வந்து நிற்கும் சிலர், இப்படி மாத்திரைகளின் பெயர்களைச் சொல்லிச் சொல்லி கேட்க... சட்டென்று கடைக்காரர் எடுத்துக் கொடுக்க... நம்மில் பலர் ஆச்சர்யமாக பார்த்திருப்போம் அவர்களை! 'அட, மாத்திரை பேரெல்லாம் என்ன அழகா தெரிஞ்சு வெச்சிருக்காங்க' என்று அவர்களைப் பற்றி பெருமிதமாக நினைத்தது நினைவுக்கு வந்தது.

    சிலர், 'எனக்கு பத்து நாளா வயித்த வலிக்குதுங்க. போன தடவை கொடுத்தீங்களே... அதே மாத்திரை பத்து கொடுங்க' என்று கேட்க...

    'புரூஃபென் மாத்திரைதானே... இதோ தர்றேன்' என்றபடி கடைக்காரர் எடுத்துக் கொடுக்க...

    'அட, இது தெரியாம நாம டாக்டர்கிட்ட இல்ல அடிக்கடி போறோம். நேரடியா இங்கயே வந்துட்டா... டாக்டர் செலவு மிச்சமாச்சே' என்று யோசித்ததும்... நினைவிலாடியது.

    ஆனால், இப்படி டாக்டரின் பரிந்துரை இல்லாமலும், ஏற்கெனவே ஒரு தடவை பரிந்துரைத்த மருந்து என்பதற்காகவும் இஷ்டம்போல மாத்திரைகளை வாங்கிச் சென்று பயன்படுத்துவது மிகமிக ஆபத்தானது என்கிற உண்மை, நன்றாகவே உறைத்தது! சொல்லப் போனால், டாக்டரின் பரிந்துரையோடு சாப்பிடும் மருந்து, மாத்திரைகளே... 'சைடு எஃபெக்ட்' என்ற பெயரில் வயிற்றுவலி, தலைவலி, அலர்ஜி என்று பலவித உபாதைகளைக் கொண்டுவந்து சேர்த் துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், டாக்டர் சொல்லாமலே மருந்துகளைச் சாப்பிடுவதும்... எதற்கெடுத்தாலும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைப்பதும் பெருங்கொடுமைதானே!

    நோய்கள் தீர்வதற்காகத்தான் மருந்து சாப்பிடுகிறோம். ஆனால், மருந்து சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு, தனியாக சிகிச்சை எடுக்க வேண்டிய சூழலில்தான் இன்று வாழ்கிறோம். இதில் சுயமருத்துவம், அதிகமான ஆன்டிபயாடிக் மற்றும் வலிநிவாரணி எடுத்துக்கொள்வது, மாதவிடாய் காலம், கர்ப்பம் தவிர்க்க என பெண்கள் சார்ந்திருக்கும் மாத்திரைகள், குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதில் பெற்றோர் செய்யும் தவறுகள்... என இந்த மருந்து வகைகளால் ஏற்படும் பிரச்னைகள் ஏராளம்... தாராளம்!