Tuesday, 5 August 2014

மலசிக்கல் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்களேன்..?

By: ram On: 23:39
  • Share The Gag

  • மலச்சிக்கல் தீர எளிய வழிகள் !

    1-வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து தலை முழுகுதல்.இது உடலில் உள் சூட்டை
    தணிக்கும்.மேலும் கண் பார்வை தெளிவாகும்.மூலாதார சூட்டையும் தணிக்கும்.

    2 -தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை வகையை சேர்க்கவும்.மேலும் தண்ணீர் நிறைய குடியுங்கள்.

    3 -தினமும் பச்சை காய்கறிகள்,பழங்கள் ஏதாவது ஒன்றை உணவாக சேர்த்து வரவும். இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளது.

    4 -இரவு உணவாக பாஸ்ட் புட் மற்றும் புரோட்டா போன்றவைகளை தவிர்த்து ஆவியில் வேகும் உணவான இட்லி,புட்டு,இடிஆப்பம் போன்றவைகளை உண்ணவும்.

    இதனுடன் வாழைப்பழம் ஒன்றிரண்டு சாப்பிடலாம்.

    மேற்கண்ட முறைகளை கடை பிடித்து வந்தால் மிக எளிதாக மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.உடலின் உள் சூடும் தணியும்.

    சித்த மருந்துகளில் மலச்சிக்கலுக்கு மருந்து :

    1- கடுக்காய் - விதை நீக்கி சதைப்பகுதி மட்டும்.

    2 -நெல்லிக்காய் -விதை நீக்கி சதைப்பகுதி மட்டும்.

    3 -தான்றிக்காய் - விதை நீக்கி சதைப்பகுதி மட்டும்.

    இவைகள் மூன்றையும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து ஒன்று சேர்த்துக்கொள்ளவும்.

    இதுவே "திரிபலா சூரணம்"எனப்படும்.இதனை இரவில் படுக்கும் போது அரை டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடிக்கவும்.

    இதனால் காலையில் மலம் இலகுவாக வெளியேறும்.வாத,பித்த,கப நாடிகள்  சமநிலைப்படும்.உடலில் நோயெதிர்ப்பு சக்தி பெருகும்,இரத்தம் விருத்தியாகும்.

    துணியை சுலபமாக துவைத்து சலவை செய்ய எளிய வழிகள்..!

    By: ram On: 22:46
  • Share The Gag

  • வாஷிங் மெஷின் (சலவை இயந்திரம்)

     சலவை செய்ய சிறந்த வழிகளில் ஒன்றாக விளங்குகிறது வாஷிங் மெஷின். இது உங்கள் நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல் தேவையற்ற டென்ஷன் மற்றும் மன உளைச்சலை நீக்கும். சந்தையில் பல வகையான வாஷிங் மெஷின் உள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், டாப் லோட், ஃப்ரண்ட் லோட், ஆட்டோமாட்டிக் (தானியங்கி), செமி ஆட்டோமாட்டிக் (பகுதித் தானியங்கி), சிங்கிள் டப் மற்றும் ட்வின் டப்.

    லேபிலை படியுங்கள்

    ஆடையை பராமரிக்க அதனுடன் சேர்ந்து வரும் பராமரிப்பு லேபிலை படிக்க தவற விடாதீர்கள். பொக்கிஷமான உங்கள் ஆடைகளை பற்றிய முக்கிய தகவல்களை அது வைத்திருக்கும். உங்கள் ஆடை நல்ல தரத்துடன் நீண்ட நாட்களுக்கு நீடிக்க வேண்டுமானால், அதில் துவைப்பதற்கு கொடுத்திருக்கும் அறிவுரையை கண்டிப்பாக பின்பற்றுங்கள். இல்லையென்றால் தவறான தண்ணீர் வெப்ப நிலை அல்லது தவறான சோப்பு தூளால் உங்கள் ஆடைகள் பாழாகி விடும்.

    வகைப்படுத்துங்கள்

    ஒரு முறை துவைக்கப் போகும் போது அதில் நிறம், துணி வகை மற்றும் பயன்பாட்டு வகை என பல வகையான ஆடைகள் கலந்திருக்கும். உங்கள் சலவையை சுலபமாக்க வேண்டுமானால் உங்கள் ஆடைகளை கண்டிப்பாக வகைப்படுத்த வேண்டும். வெண்ணிற ஆடைகளை பிற நிற ஆடைகளிடம் இருந்து பிரிக்க வேண்டும். முக்கியமாகவும் முதன்மையாகவும் கடைப்பிடிக்க வேண்டிய டிப்ஸ் இது. அதே போல் மென்மையான ஆடைகளை எல்லாம் தனியாக துவைக்க வேண்டும்.

    கறைகள்

    சில நேரங்களில், முக்கியமாக குழந்தைகள் இருக்கும் வீட்டில், கையாளுவதற்கு கடினமாக இருக்கும் கறைகள் உண்டாகும். உங்கள் சலவையை சுலபமாக்க, கரையை நீக்கும் பொருட்களின் பட்டியலை எப்போதும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இந்த பட்டியலில் அடிப்படியான பொருட்களாக வினீகர், பேக்கிங் சோடா அல்லது கறைகளை அகற்ற சந்தையில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் சுத்தப்படுத்துவதற்கு தேவையான பிற பொருட்கள் கருதப்படுகிறது. கறைகளை நீக்க பல வலைத்தளங்கள் பல விதமான டிப்ஸ்களையும் அளித்து வருகிறது.

    டிடர்ஜெண்ட்

    திரவ வடிவில் இருக்கும் டிடர்ஜெண்டை பயன்படுத்துவது உங்கள் ஆடைகளுக்கு நல்லது. இதனால் ஆடைகளில் சோப்பு தூளின் எச்சம் தேங்குவதில்லை. சலவையை சிறந்த முறையில் செய்ய வேண்டுமானால், நீங்கள் எவ்வளவு ஆடைகளை துவைக்க போகிறீர்களோ அதற்கேற்ப அளவில் டிடர்ஜெண்டை பயன்படுத்துங்கள். டிடர்ஜெண்டை அதிகமாக பயன்படுத்தினால் கூடுதல் சுத்தம் கிடைக்கும் என்பதெல்லாம் உண்மையல்ல.

    உலர்த்தி இஸ்திரியிடுதல்

    ஆடைகளை வரிசையாக தொங்கப்போட்டு காய வைப்பதே சலவையில் சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. இது உங்கள் ஆற்றலை திறனை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் ஆடைகளையும் நற்பதமாக வைக்கும். இதை செய்த பின்னரும் உங்கள் ஆடைகள் சுருக்கமாக இருந்தால், அவைகளுக்கு இஸ்திரி போடுங்கள். இந்த கட்டத்தில் நீராவி பயன்படுத்த தேவையில்லை என்பதால், இஸ்திரி போடுவதும் சுலமபாக இருக்கும்.

    ஓட்ஸ் உப்புமா.... ஓட்ஸ் உப்புமா...!

    By: ram On: 21:04
  • Share The Gag

  • தேவையானப் பொருள்கள்:                                                                  

    ஓட்ஸ்- 2 கப்
    சின்ன வெங்காயம்- 10
    இஞ்சி-ஒரு சிறிய துண்டு
    பச்சை மிளகாய்-2
    கொத்துமல்லி இலை-ஒரு கொத்து
    எலுமிச்சை சாறு உப்பு-தேவையான அளவு

    தாளிக்க:

    நல்லெண்ணெய்-2 டீஸ்பூன்
    கடுகு உளுந்து
    கடலைப் பருப்பு
    காய்ந்த மிளகாய்-2
    பெருங்காயம்-சிறிது
    கறிவேப்பிலை

    செய்முறை:

    • வெறும் வாணலியில் ஓட்ஸை வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும்

    •  வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.

    • பிறகு நறுக்கி வைத்துள்ள் வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கி 4 கப்புகள் (ஒன்றுக்கு இரண்டு என) தண்ணீர் ஊற்றி கலக்கி உப்பு சேர்த்து மூடி கொதி வரும் வரை வேக விடவும்.

    • கொதி வந்ததும் திறந்து ஓட்ஸை சிறிது சிறிதாக சேர்த்து கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

    • முழுவதும் சேர்த்த பிறகு நன்றாகக் கிளறி விட்டு மிதமானத் தீயில் மூடி வேக விடவும்.

    • வேகும் வரையில் இடையிடையே அடிப் பிடிக்காதவாறு அடிக்கடி கிளறிவிடவும்.

    • நன்றாக வெந்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் கொத்துமல்லி தூவி,எலுமிச்சை சாறு விட்டு இறக்கவும்.

    குழந்தைகளுக்கு விக்கல் ஏற்பட்டால்...?? தடுக்கும் வழிமுறைகள்..!

    By: ram On: 19:42
  • Share The Gag

  • விக்கலால் அவதிப்படும் குழந்தையை தட்டிக்கொடுக்கலாம்.

    பசியினால் சில குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கலாம்.

    திடீர் விக்கல்களை நிறுத்த சிறிதளவு தண்ணீர் கொடுக்கலாம்.

    பால் புகட்டும் போது விக்கல் எடுத்தால் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை நிறுத்தி விடவும். இல்லை எனில் அது மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடும்.

    சின்னக்குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்கும் போது விக்கல் எடுக்கும் அப்போது தேனை நாக்கில் தடவி வைக்கலாம்.

    சிறிதளவு எண்ணெயை எடுத்து டிஸ்யூ காகித்த்தில் தடவி அதனை குழந்தைகளின் நெஞ்சில் வைக்கலாம்.

    பள்ளிக்குச் செல்லும் குழந்தையாக இருந்தால் ஒரு காகிதப்பையை எடுத்துக்கொண்டு, மூக்கு, வாய் இரண்டும் உள்ளே இருக்கு மாறு இறுக்கிப் பிடித்துக்கொள்ளச் சொல்லுங்கள். இப்போது மூச்சை உள் இழுத்து, அந்தக் காகிதப்பைக்குள் மூச்சை விடச் சொல்லுங்கள். பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசிக்கச் சொல்லுங்கள். இவ்வாறு 20 முறை செய்தால் படிப்படியாக ரத்தத்தில் கரிய மில வாயுவின் அளவு அதிகரித்து, பிராணவாயுவின் அளவு குறையும். அப்போது விக்கல் நின்று விடும்.

    ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு ஏற்ற டாப்ஸ் டிப்ஸ் !

    By: ram On: 18:19
  • Share The Gag

  • எங்கு பார்த்தாலும் சுடிதார் கடைகளும், ஜீன்ஸ் கடைகளும் என காட்சி அளித்தன. அங்குதான் பெண்களின் கூட்டமும் இருந்தது.தாவணி என்பது ஏதோ முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டும் ஒரு சிலரால் விரும்பி அனியப்படும் ஆடையாக மாறியது.

    பள்ளிச் சீருடை வடிவத்திலாவது தாவணிகளுக்கு உயிர் கொடுத்து வந்த பல பள்ளிகளும் தாவணியின் கழுத்துக்களை சுடிதார் கயிற்றால் இறுக்கிக் கொன்றன. தற்போது தாவணி என்ற ஒரு ஆடையே வெகுவாக மறைந்து முற்றிலுமாக கிழிந்து விட்டது.. சரி தற்போது ஜீன்ஸ் கொடி கட்டிப் பறக்கும் பல இடங்களில் அதற்கு எடுப்பாக போடப்படும் மேல் ஆடை அதாவது டாப்ஸ்கள் தான் இன்று நாம் பேசப்போகும் விஷயம். பல்வேறு வகைகளில் தற்போது டாப்ஸ்கள் கிடைக்கின்றன. முழுவதும் வேலைப்பாடு செய்யப்பட்டது, கை மற்றும் கழுத்துப் பகுதியில் மட்டும் வேலைப்பாடு செய்யப்பட்டது, சமிக்கி, மணிகள் வைத்து தைக்கப்பட்ட டாப்ஸ் என இது நீண்டு கொண்டே செல்லும்.

    பொதுவாக ஒல்லியாக இருக்கும் பெண்கள் தங்களது உடல் அளவிற்கு ஏற்ற சிறிய டாப்ஸ்கள் அல்லது சர்ட்டுகளை தேர்ந்தெடுக்கின்றனர்.
    பெண்களுக்கு என தற்போது பல சட்டைகள் வருகின்றன.

    முழுக் கை மற்றும் பாக்கெட்டுகளுடன் அவை வெகு அசத்தல். மென்மையான நிறங்களில் அதுபோன்ற சட்டைகளை எடுத்து கருப்பு, அடர்ந்த நீலம் போன்ற ஜீன்ஸ் பேன்ட்டுகளுக்கு அணியலாம். அல்லது சட்டையை விடக் கொஞ்சம் நீளம் கூடுதலாக வரும் டாப்ஸ்களும் உள்ளன. அவற்றில் பல்வேறு விதங்களில் பல விலைகளிலும் கிடைக்கின்றன.

    எடுப்பான தோற்றம் கொண்டவர்கள் இதுபோன்ற டாப்ஸ்களை வாங்கும்போது அதற்கேற்ற வலைப்பின்னல் ஷால்களையும் வாங்கி அணிந்து கொள்வதும் ஒரு பேஷன் ஆகி விட்டது. கை நீளம், கைக் குட்டையானது அல்லது கையே இல்லாத டாப்ஸ்களில் உங்கள் தோற்றத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் ஒன்றுக்கு இரண்டு முறை பார்த்து வாங்கி உங்களுக்கேற்ற உடையை தேர்ந்தெடுங்கள்.

    ஆடை உங்களது உடல் அளவுக்கும், உடல் நிறத்திற்கும் ஏற்றதாகவும், பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்காமலும் இருப்பது நலம்.

    உடல் அதிக பருமன் கொண்டவர்கள் நீண்ட டாப்ஸ்களையும், அதற்கு மேல் ஒரு ஷாலையும் அணிவது உங்களை அழகாகக் காட்டும். ஒல்லியான உடல் அமைப்பைக் கொண்டவர்கள் அதிக வேலைப்பாடு கொண்ட டாப்ஸ்களை அதிகம் அணியலாம்.

    ரஜினிகாந்த, அமீர் கான் மோதல்! படக்குழுக்கள் அதிர்ச்சி!

    By: ram On: 16:58
  • Share The Gag

  • ரஜினியும், அமீர் கானும் நல்ல நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர்களுக்குள் தற்போது என்ன பிரச்சனை? என்றால் அவர்கள் தொழில் ரீதியாக தான்.

    ரஜினி நடிக்கும் லிங்கா திரைப்படம் அவரது பிறந்தநாள் அன்று வெளிவருகிறது, இப்படம் வெளியான ஒரே வாரத்தில் அமீர் கான் நடித்த பிகே திரைப்படமும் வரயிருக்கிறது.

    சூப்பர் ஸ்டாருக்கு வட இந்தியாவில் நல்ல மார்க்கெட் இருந்தாலும் அமீர் கானுடன் போட்டி போட முடியாது, இதே நிலைமை தான் தென்னிந்தியாவில் அமீருக்கு.

    தற்போது இதற்கு என்ன வழி என்று இரண்டு தரப்பு படக்குழுவும் யோசித்து வருகிறதாம்.

    குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!

    By: ram On: 08:37
  • Share The Gag

  • மண‌ம் கமழு‌ம் ம‌ல்‌லி, மதுரை ம‌ல்‌லி எ‌ன்றெ‌ல்லா‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் மரு‌த்துவ ம‌ல்‌லியை‌ப் ப‌ற்‌றி உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரியுமா?

    தலை‌‌யி‌ல் சூடுவத‌ற்கு‌ம், மாலை அல‌ங்கார‌ங்களு‌க்கு‌ம் பய‌ன்படு‌ம் ம‌ல்‌லிகை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ங்களை இ‌ப்போது பா‌ர்‌ப்போ‌ம்.

    சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீ‌ரி‌ல் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும்.

    புழுக்களைத்தான் வெளியேற்றும் என்று நினைக்காதீர்கள், சிறுநீரகக் கற்களையே கரைய வைக்கும் குணம் இந்த மென்மையான மல்லிகைப் பூக்களுக்கு உண்டு. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
    மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும்.

    பொதுவாக மாத விலக்கு காலங்களில் பெண்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். இனி கவலை வேண்டாம். சில மல்லிகைப் பூக்களை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அருந்தினாலே போதும் மாத விலக்கு காலங்களில் சோர்வு ‌நீ‌ங்கு‌ம்.

    இவை அனைத்திற்கும் மேலாக, மணம் கமழும் மல்லிகையை ஒன்றிரண்டு தினமும் உட்கொண்டால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்பது கூடுதல் தகவல்.

    குழந்தை பெற்ற தாய்மார்கள் கவனிக்க வேண்டியவை..!

    By: ram On: 07:42
  • Share The Gag

  • நீங்கள் குழந்தை பெற்றுக் கொண்ட தாயாக இருந்தால், தாய்மார்கள் செய்யக் கூடிய மிகப்பெரிய தவறுகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அவை என்னவென்று பார்க்கலாம்..

    • குழந்தை பிறந்த உடன், தங்களுடைய சாதாரண வாழ்க்கைக்கு மிகவும் வேகமாக திரும்பி விட வேண்டும் என்று நினைப்பவர்கள் பல பேர். புதிதாக குழந்தை பெற்றவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தங்களுடைய காலில் நிற்கவும் மற்றும் பணிகளை செய்யவும் விரும்புவது தான் இந்த தவறுக்கு காரணமாகும். எனவே, நீங்கள் புதிதாக குழந்தை பெற்றவராக இருந்தால், உங்களுடைய உடலுக்குத் தேவையான ஓய்வை அளிக்க வேண்டும்.

    • குழந்தை தூங்கும் போது, குழந்தையின் நகத்தை வெட்டுவது எளிது. எனவே விழித்திருக்கும் போது குழந்தையின் நகத்தை வெட்டாமல் தூங்கும் போது வெட்டுவதே சிறந்தது.

    • குழந்தையை பராமரிப்பது மகிவும் கடினமாக விஷயம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு தாயைத் தவிர குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்பவர்கள் யாருமில்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். குழந்தையின் மீது அன்பு செலுத்தி, அவர்களை கவனித்துக் கொள்ளும் நீங்கள் மிகவும் நல்ல 'அம்மா' தான். உங்களுடைய கணவரைப் போலவே, குழந்தைக்கும் உங்களுடைய நம்பிக்கை மிகவும் தேவைப்படும்.

    • குழந்தை பிறந்தவுடன் புதிய அன்னையாக தோற்றம் கொண்டிருக்கும் நீங்கள், உங்கள் கணவரும் அந்த குழந்தைக்கு அப்பா என்பதையும், அவருக்கும் அன்பும், அரவணைப்பும் தரத் தெரியும் என்பதையும் மறக்கக்கூடாது. பெரும்பாலான தாய்மார்கள் செய்யும் பரவலான தவறாக இது உள்ளது. எப்பொழுதெல்லாம் முடிகிறதோ, அப்பொழுதெல்லாம் அவருடைய அரவணைப்பையும், பராமரிப்பையும் குழந்தையின் பேரில் நீங்கள் திருப்பி விடலாம்.

    • புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்களுடைய குழந்தையை மற்றவர்களிடம் கொடுத்தும் அமைதிப்படுத்த வேண்டும். குழந்தையை வாரத்திற்கு ஒரு முறை மற்றவர்களிடமும் கொடுத்து ஆற்றுப்படுத்துங்கள், அதன் மூலம் அவன் ஒரே ஆளிடம் இருந்து பழக மாட்டான். ஒரே ஒரு மனிதருடன் மட்டுமே உங்களுடைய குழந்தை அமைதியாக இருந்து பழகி விட்டால், அவர் இல்லாத போது மற்றவர்களிடம் குழந்தையை அமைதியாக இருக்க வைப்பது பெரும்பாடாகி விடும்.

    • தாய்ப்பால் கொடுக்கும் போது, சிற்சில பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். நிறைய தாய்மார்கள் இந்த விஷயத்தில் உதவி கேட்க வெட்கப்படுவார்கள். தாய்ப்பால் என்பது இயற்கையாகவே வர வேண்டும் என்றும், இதில் தவறு நிகழ்ந்து விட்டால் வருத்தப்படுவதும் அவர்களுடைய தவறாக இருக்கும். ஆரம்பத்தில், எல்லா தாய்மார்களுக்கும் எளிதாக தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை. இந்த விஷயத்தில் உங்களுக்கு நிறைய உதவிகள் தேவைப்படும் என்பதால், உதவி கேட்க பயப்பட வேண்டாம்.