Monday, 21 July 2014

செக்ஸ் சக்தியை அதிகரிக்கும் பேரிச்சம் பழம், வான்கோழி கறி!

By: ram On: 23:55
  • Share The Gag

  •         படுக்கை அறையில் சரியா செயல்பட முடியலையே, என்ன சாப்பிட்டாலும் சரியா வரலையே, என்று தவிக்கும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்கு உள்ள ஆண்மை குறைபாட்டினை சரி செய்வதற்காக நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர் அவற்றை படியுங்களேன்.

    இன்றைக்கு ஆண்மை குறைபாட்டிற்கு காரணம் கண்டதையும் சாப்பிடுவதுதான். அதேபோல் இளம் வயதிலேயே போதை, மது பழக்கத்திற்கு ஆளாவதும்தான் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் வாழ்க்கையும் இளம் வயதிலேயே ஆண்மை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த சிக்கல் நீடிக்காமல் இருக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

    நாட்டுக்கோழி முட்டை

    இளமையில் ஏற்படும் ஆண்மைக் குறைவை முறையாக முட்டை உண்பதன் மூலம் போக்கலாம். இரண்டு நாட்டுகோழி முட்டைகளை ஒரு மண்பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் சிறிது சூடுபடுத்திய பின் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சிறிது சூட்டோடு உண்ணவும். காலை உணவுக்குப் பதிலாக இப்படி முட்டை மட்டும் சாப்பிட்டுபின் பால் குடித்து வரலாம். தொடர்ந்து 3மாதம் இதை சாப்பிட்டால் முழுபலன் கிடைக்கும்.

    உப்புக்கண்டம்

    பறவைகளில் மனைப்புறா, வான்கோழி, கௌதாரி, பச்சைப்புறா.. ஆகியவற்றின் இறைச்சி சாப்பிட்டால் ஆண்மை குறைபாட்டிற்கு சிறப்பான பலன்கள்தரும். வெள்ளாட்டுக் கறியும், இறால் உணவும் நல்லது. அதுவும் காயவைத்துப் பதப்படுத்திய (உப்புக்கண்டம்) இறைச்சியையும் உண்ணலாம். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவீர்களானால் 50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்.

    பேரிச்சம் பழங்கள்

    காலை உணவுக்குப்பின் கால்மணிநேரம் கழித்து 10 பேரீச்சம்பழங்கள் சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள். அதேபோல் இரவு உணவுக்குப்பின் 10 பேரீச்சம் பழங்களை உண்டு பசும்பால் குடியுங்கள். தொடர்ந்து 2 மாதம் இவ்வாறு சாப்பிட்டுவந்தால் ஆண்மை சத்தி குறிப்பிடத்தக்க அதிகரிக்கும்.

    இந்தநாட்களில் குளிர்ச்சியான பானங்கள், உணவுகள் சாப்பிடவேண்டாம். அதேபோல் அன்றாடம் உண்ணும் உணவோடு அரைக்கீரையை வாரம் 2 அல்லது 3 முறை தொடர்ந்து சாப்பிட்டால் போதும்..

    செலினியம் உப்பு

    அதேபோல் பழுப்பு பார்லி, அரிசி, முளைவிட்ட கோதுமை, கோதுமை பிரட், கைக்குத்தல் அரிசி, டர்னிப் கீரை, வெள்ளைப்பூண்டு, ஆரஞ்சு சாறு, ஆகிய ஏழு உணவுகளிலும் செலினியம் என்ற அரிய தாது உப்பு போதுமான அளவு இருக்கிறது. இவை வைட்டமின் ‘இ’ யுடன் சேர்ந்து ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாக செலினியம் உப்பும் செயல்படுகிறது. இந்த வைட்டமினும் தாது உப்பும் சேர்ந்து உயிரணுக்களில் உள்ள மெல்லிய தோல்களையும், திசுக்களையும் நோய் எதுவும் தாக்காமல் பாதுகாக்கின்றன.

    செலினியம் உப்பு உடலில் குறைவாக இருந்தால் ஃப்ரீரேடிக்கல் திரவம் அதிகம் வெளியாகி உயிரணுக்களை சேதப்படுத்திவிடும் எனவே இவற்றை தடுக்க செலினியம் அடங்கிய சத்தான உணவுகளை உண்ணவேண்டும்.

    ஆண்மைக்குறைபாடு சரியான உடன் தினசரி உறவில் ஈடுபடலாம் என்று நினைக்காதீர்கள். உங்கள் வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தினசரி உடலுறவு அல்லது வாரம் 3,4 முறை உடலுறவு என்பது ஆற்றலை அழித்து விடும். எனவே வாரம் ஒருமுறை அல்லது இருமுறை உறவு வைத்துக்கொண்டால் போதும். இதனால் உடலின் தற்காப்புத்திறன் மேம்படுவதோடு வாழ்நாட்களும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

    ஸ்ருதிஹாசன், தமன்னா ஏற்படுத்திய 'முத்தப் பரபரப்பு'!

    By: ram On: 23:35
  • Share The Gag

  • தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தமன்னா இருவரும் நெருங்கிய தோழிகள். இருவரும் சமீபத்தில் நடந்த ஒரு விருது விழா நிகழ்ச்சி ஒன்றின் முடிவில் நடைபெற்ற பார்ட்டியில் ஒருவருக்கொருவர் உதட்டோடு முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்களாம். பார்ட்டியில் பங்கு கொண்ட சிலர் அதைப் புகைப்படம் எடுத்ததாகவும், அது திரையுலகத்தைச் சேர்ந்த பலருக்கும் மொபைல் போன் மூலமாக தீயாய் பரவி வருவதாகவும் சொல்கிறார்கள்.

    திரையில்தான் முத்தக் காட்சியில் நடித்தும், கிளாமராக உடையணிந்தும் ஏராளமான ரசிகர்களை தங்கள் பக்கம் இழுத்து வருபவர்கள் ஸ்ருதிஹாசனும், தமன்னாவும் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு கிளாமராக நடித்து அசத்தி வருகிறார்கள். இவர்களுக்குள்ளும் போட்டி போட்டுக் கொண்டு மற்ற நடிகைகளுக்கும் சவாலாக இருந்து வருகிறார்களாம். இவர்களின் இந்த திடீர் முத்தப் பாசம் அன்று பார்ட்டிக்கு வந்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டதாம். தெலுங்குத் திரையுலகில்தான் இது பற்றிய பேச்சு அதிகமாக இருந்து வருகிறார்கள். அங்குள்ள மீடியாக்கள் இது பற்றிய செய்தியை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

    ஆனால், இது குறித்து ஸ்ருதிஹாசனோ, தமன்னாவோ எந்த மறுப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது 'வதந்தி'யா அல்லது வந்த 'தீயா' என்பது போகப் போகத்தான் தெரியும் என்கிறார்கள்.

    அடிக்கடி ஏப்பம் வந்து மானத்தை வாங்குதா? இத ட்ரை பண்ணுங்க...!

    By: ram On: 22:21
  • Share The Gag
  •             உணவு சாப்பிட்ட பின்னர் அனைவருக்கும் ஏப்பம் வருவது இயற்கை தான். இத்தகைய ஏப்பமானது உணவால் வயிறு நிறைந்துவிட்டாலோ அல்லது பசி ஏற்படும் போதோ வரும். குறிப்பாக உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறும். அதுவே இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால், வாய்வாக மலவாயில் ஊடாக வெளியேறும்.

    ஆனால் சிலருக்கு தொடர்ச்சியாக ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அலுவலகத்தில் இருக்கும் போது இப்படி அடிக்கடி ஏப்பம் வந்தால், அது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, நம்மீது கெட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமின்றி, ஏப்பம் வந்தால் ஒருவித கெட்ட துர்நாற்றமும் வீசும். இப்படி அடிக்கடி ஏப்பம் விட்டால், யாரும் அருகில் கூட வர மாட்டார்கள். ஆகவே பலர் ஏப்பத்தால், சங்கடத்திற்கு உள்ளாவார்கள்.

    மேலும் அடிக்கடி ஏப்பம் வந்தால், நமக்கே எரிச்சல் ஏற்படுவதோடு, உடலும் சோர்ந்து விடும். இருப்பினும் இத்தகைய தொடர் ஏப்பத்திற்கு பல்வேறு இயற்கை நிவாரணிகள் உள்ளன. எனவே ஏப்பம் வரும் போது கீழ் கூறியவற்றை முயற்சித்தால், நிச்சயம் ஏப்பம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

    சரி, அந்த இயற்கை நிவாரணிகள் என்னவென்று பார்ப்போமா!!!

    அடிக்கடி ஏப்பம் விட்டு மானம் போகுதா? இத ட்ரை பண்ணுங்க...

    குளிர்ச்சியான தண்ணீரை குடித்து வந்தால், ஏப்பத்தில் இருந்து விடுபடலாம்.

    சோடா

    அமிலத்தன்மை உள்ள பானங்களான சோடா போன்றவற்றை ஒரு சிப் குடித்தாலும், அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கலாம்.

    புதினா

    அடிக்கடி ஏப்பம் வரும் போது, ஒரு கப் புதினா டீ குடித்தால், ஏப்பப் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.

    ப்ளாக் டீ

    ப்ளாக் டீ கூட ஏப்பத்திற்கு நல்ல நிவாரணியாக விளக்கும். அதற்கு ஒரு கப் வெதுவெதுப்பான ப்ளாக் டீயை குடியுங்கள்.

    சோம்பு

    சோம்புவை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏப்பம் ஏற்படாமல் இருக்கும். இந்த முறையால் உடனே ஏப்பம் நிற்காவிட்டாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஏப்ப பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

    சீமைச்சாமந்தி டீ

     
    டீயிலேயே ஏப்பத்தை கட்டுப்படுத்துவதில் சீமைச்சாமந்தி டீ தான் பெஸ்ட். எனவே அடிக்கடி ஏப்பம் வந்தால், சீமைச்சாமந்தி டீயை குடியுங்கள்.

    செலரி

    செலரியை சிறிது வாயில் போட்டு மென்றால், ஏப்பம் தொல்லையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

    ஏலக்காய் டீ

    ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால், செரிமான பிரச்சனை நீங்கி, அடிக்கடி ஏப்பம் வருவது உடனே நின்றுவிடும்.

    இஞ்சி

    ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்றாலோ அல்லது இஞ்சி டீ குடித்தாலோ, தொடர் ஏப்பம் வராமல் இருக்கும்.

    குளிர்ந்த பால்

    ஒரு கப் குளிர்ந்த பாலை மெதுவாக குடித்து வந்தாலும், ஏப்பம் வருவதை தடுக்கலாம்.

    கிராம்பு

    ஒரு துண்டு கிராம்பை வாயில் போட்டு மென்றால், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, ஏப்ப பிரச்சனையும் குணமாகும்.

    சிட்ரஸ் பழங்கள்

    சிட்ரஸ் பழங்கள் கூட ஏப்ப பிரச்சனைக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். அதிலும் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், அது வயிற்றில் உள்ள காற்று உடனே வெளியேற்றி, அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கும்.

    கோதுமை பிரட்

    ஒரு துண்டு கோதுமை பிரட் சாப்பிட்டால், அது ஏப்ப பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்.

    எலுமிச்சை ஜூஸ்


    எதுவும் முடியவில்லையா, ஒரு கப் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். இதனால் செரிமான பிரச்சனையுடன், ஏப்ப பிரச்சனையும் குணமாகும்.

    தயிர்

    இல்லாவிட்டால், சாப்பிடும் போது ஒரு கப் தயிரை சாப்பிடுங்கள், நல்ல மாற்றம் தெரியும்.

    எந்திரன் 2-ல் சிரஞ்சீவி நடிக்கிறாரா ? என்ன நடக்கப்போவுது..?

    By: ram On: 21:29
  • Share The Gag
  •            பரபரப்புக்காக எதையாவது கிளப்பி விடுவதில் நம்மவர்களை மிஞ்சுவதற்கு ஆட்கள் கிடையாது. ரஜினி மீண்டும் 'லிங்கா' படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு அந்தப் படம் பற்றிய செய்திகளை பரபரப்பாக மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன. அதோடு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க உள்ளார் என்றும் அது 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகம் என்றும் செய்திகள் வெளியாகின. இதற்காக 250 கோடி ரூபாய் பட்ஜெட்டுடன் ஷங்கர் தயாராகி வருகிறார் என்றனர்.

    இதனிடையே 'எந்திரன் 2'ம் பாகத்தில் அமீர் கான் வில்லனாக நடிக்கப் போகிறார் என்றார்கள். ஆனால், தனக்கு அப்படி எதுவும் எண்ணமில்லை என்று அமீர்கான் மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இப்போது தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி 'எந்திரன் 2'-ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. சிரஞ்சீவி விரைவில் அவருடைய 150 வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார். அதற்காக அவர் பல கதைகளைக் கேட்டு வருகிறார். இதனிடையே ஷங்கர் அவரைச் சந்தித்து 'எந்திரன் 2'ம் பாகத்தின் கதையைக் கூறியதாகவும் அந்த படத்தில் சிரஞ்சீவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் டோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

    'ஐ' படத்தின் இறுதிக் கட்ட வேலைகளில் ஷங்கர் பிஸியாக உள்ளதால், அவரே 'எந்திரன் 2' படத்தைப் பற்றி வாய் திறந்தால் தவிர அந்த படத்தைப் பற்றி பல வதந்திகள் வந்து கொண்டுதானிருக்கும்.

    மூக்குத்தி அணிவது ஏன்..? அற்புத விளக்கம்...படித்துப் பாருங்கள்..!

    By: ram On: 18:54
  • Share The Gag
  •          மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை,காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள்.


    இதற்கு காரணம் இடதுகாலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனைஎல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதேமாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது.


    நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன.இதனைச் செயல்படுத்துவதற ்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படிஇந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாகசெயல் படவைக்கும்.


    இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும். இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்யவைக்கிறோம். அதனால்வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.


    பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வுபோல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ளமூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ளவெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.

    சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!!

    By: ram On: 17:23
  • Share The Gag
  • சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!!

    ஒரு வீட்டின் மிக முக்கியமான பகுதியாக சமையலறை விளங்குகின்றது. வீட்டில் உள்ள விருந்தாளிகள் தங்கும் அறைக்கு நாம் சில நாட்கள் செல்லாமல் இருக்கக்கூடும் அல்லது மிகுந்த குளிர் காலத்தில் வீட்டின் மாடிக்கும் கூட செல்லாமல் இருக்கலாம். ஆனால் யாராலும் சமையலறைக்கு செல்லாமல் இருக்க முடியாது. ஆகையால் தான் வீட்டின் மற்ற பகுதியில் நாம் செலுத்தும் கவனத்தை சமையல் அறையில் சற்றே அதிகமாக செலுத்த வேண்டும். மற்ற அறைகளை போல் இதையும் அழகாக வைக்க வேண்டும்.

    புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சமையலறை சாதனங்களையும் நவீன கட்டமைப்புடன் சமையல் அறையையும் நாம் அலங்கரிப்பது வீட்டிற்கு மேலும் அழகூட்டும். இவைகளை செய்தால் மட்டும் போதாது, அவற்றை எந்த வித பூச்சிகளும் பாழ்படுத்தாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு என்ன செய்வது? பெருமளவில் பணம் செலவு செய்து பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் போது அவை பூச்சிகளுக்கு மட்டுமின்றி நமக்கும் அதே அளவு கேடு விளைவிப்பதாக இருக்கின்றன. அப்படி என்றால் நாம் எப்படி இயற்கை முறையில் இத்தகைய பூச்சுகளை தவிர்க்க முடியும் என்று காண்போம்.

    சோள மாவு

    சோளத்திலிருந்து செய்யப்பட்ட இவை அதிக அளவு உணவு தயாரிப்பில் பயன்படுகின்றது. கிரேவி வகைகள், பஜ்ஜி, போண்டா போன்ற உணவுகளை தயாரிக்க மற்றும் பலவற்றில் இவை பயன்படுகின்றது. ஆனால் இவை எறும்புகளை கொள்ளுவதற்கும் உதவும் என்றும் பலருக்கு தெரியாது. இந்த மாவிற்கு ஒரு இனிப்பு தன்மை உண்டு. சோள மாவு விஷம் கிடையாது. ஆனால் அவைகள் செரிக்க சிறிது காலமாகும். எறும்புகள் இவற்றை உண்டால் அவைகளால் இந்த உணவை செரிக்க முடியாமல் போய்விடும். ஆகையால் சோள மாவு சாப்பிட்ட எறும்பு இறந்து விடும். எறும்பு தனக்கு மட்டுமில்லாமல் தன்னுடன் இருக்கும் சக எறும்புகளுக்கும் இதை கொடுப்பதால் அவையும் உண்டு இறந்துவிடும், சமையல் அறையில் மற்றும் எறும்பு இருக்கும் பகுதியில் இந்த மாவை சிறிதளவு தெளித்து வைத்தால் போதும். உங்கள் நோக்கம் நிறைவேறும்.
         
    பூண்டு

    பூண்டின் வாசனையும் அதை உண்டால் நமக்கு கிடைக்கும் சுகாதார பலன்களும் வியப்பூட்டுபவை. இவை எறும்புகளையும் கரப்பான்களையும் இந்த அறைக்குள் வரவிடாமல் தடுக்கும் என்ற விஷயம் நமக்கு தெரியாது. புதிதாக வாங்கிய பூண்டு பற்களை சமையல் அறையை சுற்றிலும் வைத்தால் போதும். இந்த வாசனை தாங்காமல் அவை தங்களுடைய உயிரை காக்க ஓடி விடும். பூண்டு பற்கள் கொஞ்சம் காயும் நிலையில் இருந்தால் வேறு புதிய பற்கள் மாற்றுவது நல்லது. இவை பூச்சிகளை மிரண்டு ஓட வைக்கும். பூண்டை அறைத்து அதில் தண்ணீர், தாது எண்ணைய் மற்றும் சோப் ஆகிய கலவையை தெளிக்கவும் செய்யலாம். இந்த வகை பாதுகாப்பு முறை மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். இந்த பூண்டு ஸ்பிரே உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருக்கவும், சமையலறை தோட்டத்தின் செடிகளை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

    லகிரி தைலம்

    யூகலிப்டஸ் மரத்திலிருந்த எடுக்கப்படும் எண்ணையானது மிகுந்த நறுமணம் கொண்ட வாசனை பொருளாகும். இவை பூச்சிகளை கட்டுபடுத்துவதில் சிறந்த பலனளிக்கின்றன. இந்த எண்ணையை சிறிது தண்ணீரில் கலக்கி ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி அதை அடுப்பறைக்குள் வரும் கரப்பான்கள், சிலந்திகள் மற்றும் சிறிய பூச்சிகள் மீது தெளித்தால் அவை உடனே இறந்து விடும்.

    போரிக் அமிலம்

    பூச்சிகளை கொல்லும் மற்றொரு வழி போரிக் அமிலமாகும். இதை மாவுடன் சேர்த்து உள்ளே வரும் பூச்சிகள் மேல் தெளித்தால் உடனடியாக அவை இறந்து விடும். இந்த அமிலத்தை அருகில் உள்ள மருந்து கடைகளில் வாங்க முடியும். இது இல்லை என்றால் போரக்ஸ் டிடர்ஜென்ட்டை பயன்படுத்தலாம். இதை நாம் சர்கரை மற்றும் தண்ணீரில் கூட கலந்து பயன்படுத்துவது மிகுந்த பலனளிக்கும். இவை பொதுவாக மக்கள் பயன்படுத்தும் மருந்தாக அமைகின்றது.

    ஆய்வுக் கட்டுரை... காதலும் உங்கள் ராசியும்(12 ராசிகளுக்கும்)....

    By: ram On: 08:18
  • Share The Gag
  • மேஷம்

    இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

    ரிஷபம்


    ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்..

    மிதுனம்


    மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.


    கடகம்

    இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது

    சிம்மம்

    சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்

    கன்னி


    கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை

    கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும்,மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

    துலாம்

    எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

    விருட்சிகம்

    விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

    தனுசு


    இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார்.தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்

    மகரம்

    இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது

    கும்பம்

    கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

    மீனம்


    மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர்.

    கர்ப்பிணிகள் பருப்பு, கொட்டைகளை சாப்பிடலாமா- கூடாதா?

    By: ram On: 08:02
  • Share The Gag
  •           மனிதர்களில் சிலருக்கு ஏற்படும் நட் அலர்ஜி என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நிலக்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பல்வேறு கொட்டைகள் மற்றும் பருப்புகளை சாப்பிட்டால் ஏற்படும் ஒவ்வாமை குறித்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள், கர்ப்ப காலத்தில் பெண்கள் அனைத்துவகையான கொட்டைகளையும், பருப்புகளையும் சாப்பிட்டால் அவர்களின் குழந்தைகளுக்கு இதுபோன்ற ஒவ்வாமை எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
    மனிதர்களில் சிலருக்கு இந்தமாதிரியான கொட்டைகளையும் பருப்புகளையும் சாப்பிடும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது.

     சிலருக்கு அது தோலில் தடிப்பு, அரிப்பு போன்ற சிறு சிறு உபாதைகளை ஏற்படுத்தினாலும் சிலருக்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய தொண்டை அடைப்பு வரை செல்லக்கூடியதாக இருக்கிறது. ஒரு முறை இந்த ஒவ்வாமை வந்துவிட்டால், இது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் தொடர் பிரச்சனையாக நீடிக்கிறது. இப்படியான கொட்டைகள், பருப்புகள் ஒவ்வாமையால் அவதிப்படுபவர்கள் இந்தமாதிரியான கொட்டைகளையும், பருப்புகளையும் வாழ்நாள் முழுவதும் சாப்பிடாமல் தவிர்ப்பது மட்டுமே அவர்கள் இந்த ஒவ்வாமை உபாதைகளில் இருந்து விடுபட இருக்கும் ஒரே வழி.
    இந்த பின்னணியில் இந்தமாதிரியான ஒவ்வாமை ஒரு சிலருக்கு மட்டும் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்தும், அதை ஆரம்பகட்டத்திலேயே தடுக்க முடியுமா என்பது குறித்தும் மருத்துவ உலகில் நீண்டநாட்களாகவே தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
     
    சுமார் எட்டாயிரம் குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களிடம் ஆய்வு செய்யப்பட்ட மருத்துவர்களின் முடிவுகள், ஜமா குழந்தைநல மருத்து இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. அவர்களின் ஆய்வின் முடிவுகளின்படி, கர்பகாலத்தில் தாய்மார்கள் எல்லாவிதமான கொட்டைகள் மற்றும் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம், கருவிலேயே அந்த குழந்தைகளுக்கு இந்த பருப்புக்கள் மற்றும் கொட்டைகள் பழகிவிடுவதால், அவர்கள் பிறந்து பெரியவர்களாகும்போது அவர்களுக்கு இந்த பருப்புகள் மற்றும் கொட்டைகளினால் ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்க முடியும் என்று தெரியவந்திருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
     
    அதேசமயம், இந்த ஆய்வின் முடிவுகள் முடிந்த முடிவல்ல என்று ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். காரணம், இது தொடர்பாக ஐக்கிய ராஜ்ஜியம் உட்பட வேறு நாடுகளில் செய்யப்பட்ட வேறுபல ஆய்வுகள், கர்பகால உணவுக்கும் குழந்தைகளின் எதிர்கால ஒவ்வாமைக்கும் எந்தவிதமான நேரடி தொடர்பும் இல்லை என்பதை காட்டியிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
     
    இப்போதைக்கு இப்படியான மாறுபட்ட ஆய்வின் முடிவுகள் தெரிய வந்திருப்பதால், கர்பகால பெண்கள் கொட்டைகள் மற்றும் பருப்புகள் சாப்பிடுவதாலேயே அவர்களின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இது தொடர்பான ஒவ்வாமை ஏற்படாது என்று உறுதியாக கூறமுடியாது என்றும் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.

    இந்த இருவேறுபட்ட ஆய்வின் முடிவுகளுமே அந்தந்த இனக்குழுக்களுக்கு சரியாக இருந்தாலும், உலகம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய பொதுவானதொரு அளவுகோளை இந்த விஷயத்தில் எட்டுவது கடினம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல் நிபுணர் கவுசல்யாநாதன்.

    குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!

    By: ram On: 01:05
  • Share The Gag
  • 1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

    3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

    5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

    6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

    7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

    8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

    9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

    10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

    11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.